Pages

செவ்வாய், ஜூலை 09, 2013

போராட்டம் நடத்தும் உரிமை: முஸ்லிம்களுக்கு உண்டு, வன்னியர்களுக்கு இல்லை - தமிழ்நாட்டின் இன்றைய நிதர்சனம்!

செய்தி 1: முஸ்லிம்கள் தமது கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது. முஸ்லிம்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். உயர்நீதிமன்றமும் போராட்டத்துக்கு தடைவிதித்தது. தடையை மீறி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். போராட்டத்தால் சென்னை நகரின் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். (Tamil Nadu Muslim Mun­netra Kazhagam rally halts traffic)

செய்தி 2: வன்னியர்கள் தமது கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. பின்னர் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. வன்னியர்கள் தடையை மீறி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். போராட்டத்தால் விழுப்புரம் நகரில் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. போராட்டம் நடத்திய வன்னியர்கள் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டனர், அவர்கள் மீது வழக்குமேல் வழக்கு பாய்ச்சப்பட்டது. 

நீதி: போராட்டம் நடத்துவதற்கான அடிப்படை மனித உரிமைக் கூட சாதி, மதத்தை பொருத்துதான் கிடைக்கும். அதிலும் குறிப்பாக, வன்னியர்கள் என்றால் - எந்த உரிமையும் இல்லாத அடிமை சாதியினர் என்பது தமிழ்நாட்டின் இன்றைய நிதர்சனமாகிவிட்டது.

போராட்டம் நடத்துவதற்கான உரிமையும் அரசியல் கட்சிகளும்

ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை உரிமையாக பேச்சுரிமை, கருத்துரிமை, கூட்டம் நடத்தும் உரிமை என்பன உண்டு. தனியாகவோ, கூட்டாகவோ அமைதி வழியில் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையும் உண்டு. அந்த அடிப்படையில்தான் தனிமனிதர்கள் அரசியல் அமைப்புகளில் பங்கேற்கும் உரிமையும் அமைகிறது.

பன்னாட்டு மனித உரிமை பிரகடனம் பிரிவு 21 இல் கூறப்பட்டுள்ள 'அரசாங்கத்தில் குடிமக்கள் பங்கேற்கும் உரிமை' (Everyone has the right to take part in the government of his country) அரசியல் கட்சிகள் மூலமாகவே நடக்கிறது. அவ்வாறே, பிரிவு 20 இல் 'அமைப்பாகத் திரளும் உரிமை'  (Everyone has the right to freedom of peaceful assembly and association) என தனிமனிதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையின் வெளிப்பாடாக அரசியல் கட்சிகள் உள்ளன.
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபையில் 2004 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 'ஜனநாயகத்தின் அடிப்படையான அம்சங்கள் (‘essential elements’ of democracy) என்கிற பட்டியலில் "பலக்கட்சி அரசியல் அமைப்பு" முதன்மையானது எனக் குறிப்பிட்டுள்ளது (A pluralistic system of political parties and organisations). பன்னாட்டு மனித உரிமை உடன்படிக்கை (ICCPR) பிரிவு 22 இன் கீழ் அரசியல் கட்சிக்கான உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. (Everyone shall have the right to freedom of association with others).

அரசியல் கட்சிகள் வழியாக மக்கள் போராட்டம் நடத்தும் போது, அதனை கட்டுப்படுத்த அரசுக்கு உரிமை உண்டு. ஆனால், அடிப்படை மனித உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் என்பவை, அதற்கான கட்டாயமான தேவை இருக்கும் நிலையில் மட்டுமே விதிக்கப்பட வேண்டும். மேலும், அத்தகைய கட்டுப்பாடுகளும் எந்த அளவுக்கு தேவையோ அந்த அளவுக்கு மட்டுமே விதிக்கப்பட வேண்டும் என்று பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது ("necessity" and "proportionality").

ஆனால், அத்தகைய மனித உரிமையை முஸ்லிம்கள் விடயத்தில் ஓரளவுக்கு பின்பற்றிய தமிழக அரசு, வன்னியர்கள் விடயத்தில் மட்டும் மனித உரிமையை அப்பட்டமாக மீறியுள்ளது.

முஸ்லிகள் போராட்டம்

சிறுபான்மையின முஸ்லிம் மக்களுக்கான இடஒக்கீட்டை உயர்த்த வேண்டும், சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், திருமணப் பதிவு சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கோட்டை நோக்கிச் செல்லும் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. காவல்துறை அனுமதிக்காததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
"சிறுபான்மையின மக்களின் ஜனநாயக உரிமைகளை குழி தோண்டிப் புதைப்பதை சகித்துக்கொள்ள முடியாது. கோரிக்கைகளை அரசிடம் முன்வைக்க பேரணி என்பது ஒரு வழிமுறையாகும். இதை தடுக்க முனைந்தது அரசியல் பழிவாங்கல் ஆகும். எனவே திட்டமிட்டபடி சென்னை எழும்பூர் ராஜரத்தின ஸ்டேடியத்திலிருந்து பேரணி புறப்படும். காவல்துறையின் இடையூறுகள், அவர்கள் வாகன உரிமையாளர்களுக்கு தரும் நெடுக்கடி ஆகியவற்றையும் மீறி அலை, அலையாய் புறப்பட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தமுமுக அறிவித்தது.

திட்டமிட்டபடி 6.7.2013 அன்று சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்த முற்பட்ட தமுமுகவினர் 3400 பேர் மாலை 3 மணி அளவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர்.

வன்னியர்கள் போராட்டம்

மரக்காணம் வன்னியர் படுகொலை குறித்த விசாரணையை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மற்ற வேண்டும். நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 30.4.2013 அன்று அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளித்தனர். பின்னர் 29.4.2013 அன்று இரவு பத்து மணிக்கு மேல், அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறினர்.
எனினும், திட்டமிட்டபடி பாமக நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் தலைமையில் தடையை மீறி ஆர்பாட்டம் நடத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் முன்பாகவே அனைவரும் கைது செய்யப்பட்டனர். நீண்ட அலைகழிப்புக்கு பின்னர் அனைவரும் திருச்சி சிறையில், 15 நாள் காவலில் அடைக்கப்பட்டனர்.  

மருத்திவர் இராமதாசு அவர்களை வெளியில் விடக்கூடாது, தொடர்ந்து சிறையில் அடைக்க வேண்டும். சுதந்திரமாக நடமாடும் அவரது அடிப்படை மனித உரிமையை முடக்க வேண்டும் என மேலும் மேலும் வழக்குகளை திணித்தது தமிழ்நாடு அரசு.

மரக்காணம் வன்னியர் படுகொலைக்கு நீதி வேண்டும், மருத்துவர் இராமதாசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர், அமைதி வழியில் ஆர்ப்பாட்டங்களை தமிழ்நாடெங்கும் நடத்தினர். இவ்வாறு அமைதி வழியில் போராட்டம் நடத்திய சுமார் 7000 பேர் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் அடைக்கப்பட்டனர். 

மதம் மாறாதது வன்னியர்களின் குற்றமா?

முஸ்லீம் சமூகத்தினர் அவர்களது கோரிக்கையை முன்வைத்து போராடுவது அவர்களது உரிமை. அதற்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் செயல் தேவையில்லாதது. எனினும், அரசின் தடை, நீதிமன்ற தடை என எல்லாவற்றையும் மீறி போராடிய நிலையில் அவர்களை கைது செய்து, அன்று மாலையே விடுதலை செய்த வகையில் தமிழ்நாடு அரசு ஓரளவுக்கு நியாயமாகவே நடந்துள்ளது. அதாவது தடுத்தது தேவையில்லாத செயல் என்றாலும் கைது செய்து உடனே விடுதலை செய்த வகையில் அரசாங்கம் எல்லை மீறவில்லை.

ஆனால், மரக்காணம் வன்னியர் படுகொலைக்கு நீதிகேட்ட போராட்டத்தில், தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் பதினைந்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டதுடன், தலைவர்கள் மீது தொடர்ச்சியாக வழக்குகள் திணிக்கப்பட்டு அவர்கள் பிணையில் வருவது தடுக்கப்பட்டது. அடிப்படை மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன

முஸ்லிம்களுக்கு ஒரு நியாயம், வன்னியர்களுக்கு வேறொரு நியாயம் என ஒரே நாட்டின் குடிமக்கள் இருவேறு விதமாக நடத்தப்பட்டுள்ளனர். 'ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு' என்கிற அநீதியை இழைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

'மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி' என நடக்கும் தமிழ்நாட்டில் வன்னியர்கள் இனி இரண்டாம்தர குடிமக்களாகத்தான் வாழ வேண்டுமா?

வன்னியர்களுக்கு மட்டும் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவது ஏன்? அவர்கள் வன்னியர்களாக பிறந்தது குற்றமா? பெரும்பாலானவர்கள் இந்துக்களாக இருப்பது குற்றமா? வன்னியர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறாதது குற்றமா?

மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்கட்டும்!
குறிப்பு: ஒரு ஒப்பீட்டுக்காக மட்டுமே முஸ்லிம்களின் போராட்டம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்கட்டுரை அவர்களுக்கு எதிரானதோ, விமர்சிப்பதோ அல்ல.

4 கருத்துகள்:

monica சொன்னது…

அருள் . உங்களுக்கு சார்வாகனன் அருமையாக பதிலளித்துள்ளார்.என்னுடையக் கேள்விகளுக்கு தயவு கூர்ந்துபதில் கூறுங்கள். தற்பொழுது தமிழகத்தின் தலை போகிற பிரச்சினை கலப்புத் திருமணமா ? ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்குக் குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்களே ,அதற்கு பா.ம.க. என்ன செய்தது? அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு சிவப்புக் கம்பளம் விரித்து ,தமிழ் மொழிக்கு சமாதி கட்டப்போகிறார்களே ,அதற்கு பா.ம.க. என்ன செய்தது? தமிழ்நாடு அரசுப்பணியாளர்த் தேர்வாணயத் தேர்வுத்தாள்களை மிகவும் கடினமாக்கி கிராமப்புற மாணவர்களுக்கு வஞ்சனை செய்து கொண்டிருக்கிறார்களே, அதற்கு பா. ம. க. என்ன செய்தது? தமிழகம் முழுவதும் மருத்துவர் அய்யா அவர்கள் இந்த தலைபோகிற முக்கியப் பிரச்சினைகளுக்காக அனைத்து சூத்திர சாதியினரையும் ,தலித் மக்களையும் ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டம் நடத்தியிருந்தால் ,தமிழர்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட்டிருக்கும். ஆனால் அவர் ஊர், ஊராக சென்று தமிழர்களிடையே பிரிவினையை வளர்த்துக் கொண்டிருந்த்தார்.மிகவும் வேதனையாக உள்ளது .ஆட்டுக்குட்டிகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டால் ஓநாய்க்குத் தான் கொண்டாட்டம். இங்கு இந்துத்துவ பார்ப்பன கும்பல் தான் ஓநாய்.

Namy சொன்னது…

இங்கு உரிமை என்பது வாக்கு வங்கியை கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது . ப ம க , ஆ தி க உடன் கூட்டணி என்று கூறி இருந்தால் இங்கு காட்சிகள் வேறாக இருந்திருக்கும் ....... மோனிகா ஏன் மற்ற சாதி கட்சிகளை விட்டுவிட்டார்?... அறிவாளிகள் என்று கூறிக்கொ(ல்)பவர்கள் தங்கள் கூறுவதை சுற்றிவளைத்து சொன்னால் தங்கள் வேடம் தெரிந்துவிடாது என்று கருதுகிறார்கள் போலும்.

Namy சொன்னது…

நீங்கள் வன்னியர்களை மட்டுமே கூறுகிறீர்கள் .......... அனால் நமது நாட்டில் பெரும்பான்மை சமூகத்திற்கு உரிமை என்பது மறுக்கப்படும் விஷயமாக இருக்கிறது ....... காரணம் ஓட்டு வங்கி ..... குஜராத்தில் சபர்மதி ரயில் எரிப்பு நடந்து நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபொது வராத நடுநிலைவாதிகள் இதன் காரணமாக நடந்த கலவரத்திற்கு கூப்பாடுபோட்டார்கள்........ நாகராஜ் தூக்கு போட்டுக்கொண்டபோது வராத புரட்சியாளர்கள் ( புடுங்கிகள்) இப்போது இழவு வீட்டில் உட்கார்ந்து புரட்சி செய்கிறார்கள் .

Unknown சொன்னது…

முஸ்லிம்களின் போராட்டத்தை கொச்சை படுத்தி எதோ சிறுபான்மை எல்லா உரிமைகள் கிடைத்து வாழ்ந்து கொண்டிருப்பதை போல எழுதி இருக்கிறீர்கள்.டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்ட உடன் முதல் கண்டனத்தை வெளியிட்டது தமுமுக உள்ளிட்ட முஸ்லிம் அமைப்பினர் என்பதை மறந்து விட வேண்டாம்.நீங்கள் தாரளாமாக முஸ்லிமாக மதம் மாறுங்கள் ..அப்போதுதான் தெரியும் உண்மையான அடக்குமுறை என்ன என்று.....