Pages

வெள்ளி, அக்டோபர் 18, 2013

தமிழ்தேசிய போராளிகள் + டெசோ கம்பெனி' நடத்தும் நாடகம்: தமிழர்கள் வலியுறுத்த வேண்டியது என்ன?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக + காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும் நிலை வருமானால், 'இலங்கையில் நடைபெரும் காமன்வெல்த் கூட்டத்தில்' இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்காமல் தவிர்க்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

தியாகு உண்ணாவிரதம் - டெசோ ஆதரவு

"வெற்றி அல்லது வீரச்சாவு" என்ற உறுதியுடன் "இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது, ஒரு வேளை நடந்தால் அதில் இந்தியா கலந்து கொள்ள கூடாது" என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த தியாகு தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

"திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் உட்பட பலர் தியாகுவை சந்தித்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ள தியாகுவும் பழ இரசம் அருந்தி தனது உண்ணாநிலை போராட்டத்தினை முடித்துக்கொண்டார்" என்று செய்திகள் கூறுகின்றன.
இது குறித்து சுப. வீரபாண்டியன் எழுதிய கட்டுரையில் "தியாகு உயிரை இரண்டாம் முறையாக கருணாநிதி  காப்பாற்றினார்" என்று உருக்கமாக நாடகக் காட்சிகளை விவரித்துள்ளார். (இங்கே காண்க: தியாகு உயிரை இரண்டாம் முறையாகக் காப்பாற்றிய கருணாநிதி- சுபவீ)

இந்திய அரசின் தொடர் துரோகம்

இலங்கை மீதான 2012 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமை ஆணைய தீர்மானம் வந்தபோது - அதில் இலங்கையை கட்டாயப்படுத்தும் பகுதிகளை நீக்கிவிட்டு இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது.

அதே போன்று 2013 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமை ஆணைய தீர்மானத்தையும் நீர்த்துப் போகச் செய்து இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரித்தது.
அதேபோல, காமன்வெல்த் கூட்டம் இலங்கையில் நடக்க எல்லா உதவிகளையும் செய்து, வெளியுறவு துறை சார்பில் பெரும்படையையே பங்கேற்கவும் செய்துவிட்டு - பிரதமர் மன்மோகன் சிங் மட்டும் பங்கேற்காமல் தவிர்க்கக் கூடும். இதையே இங்குள்ள தமிழ்தேசிய போராளிகளும் டெசோ கம்பெனியும் மாபெரும் வெற்றி என பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது.

தமிழர்களின் கோரிக்கை: பன்னாட்டு விசாரணை - ஐநாவில் இந்திய தீர்மானம்! 

தமிழ்நாட்டு தமிழர்களின் கோரிக்கை, உலகத் தமிழர்களின் கோரிக்கை என்பது - "இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த போர்க்குற்றம் - இனப்படுகொலைக் குறித்து விசாரிக்க பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைக்கும் தீர்மானத்தை 2014 மார்ச் மாதம் நடைபெரும் ஐநா மனித உரிமைக் கூட்டத்தில், இந்தியாவே கொண்டுவர வேண்டும்" என்பதுதான்.

எனவே, காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளாமல் தவிர்த்தாலே அது மாபெரும் சாதனை என்பதுபோல "தமிழ்தேசிய போராளிகள், டெசோ கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் நாடகத்தில்" மயங்க வேண்டாம்.

புதன், அக்டோபர் 16, 2013

இறை நம்பிக்கையை இழிவுபடுத்தலாமா? மனுஷ்யபுத்திரனின் மதவெறிக் கொடூரம்!

மனுஷ்யபுத்திரன் என்கிற சாதிவெறியர் நடத்தும் பத்திரிகை உயிர்மை. அந்த பத்திரிகையின் 'உயிரோசை' இணைய பக்கத்தில் மிக மோசமான மதவெறிபிடித்த வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

"ஆணுறுப்பின் நூதன அமைப்பு - உயிர்மை புரட்சி!"

உயிர்மை - 'உயிரோசை' இணைய தளத்தில் "நீண்ட ஆணுறுப்பின் நூதன அமைப்பு மற்றும் கற்பின் வரலாறு" (இங்கே காண்க) என்கிற ஒரு ஆபாசக் கட்டுரை வெளியாகியுள்ளது. 'கள்ளக்காதலால் துணைவியின் பெண்குறிக்குள் சென்ற அந்நிய ஆணின் விந்துவை வெளியேற்றும் வகையில் மனித ஆணுறுப்பானது வடிவமைக்கப்பட்டுள்ளது' என்கிற மிகப்பெரிய கண்டுபிடிப்பு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், முன்தோல் நீக்கிய உறுப்பு, அதாவது சுன்னத் செய்யப்பட்ட ஆணுறுப்பு 'நீண்ட நேரம் அதிக விசையூக்கத்துடன்' உடலுறவில் ஈடுபட ஏற்றதாகவும், 'திறனுறுதி மிக்கது' என்றும் கூறப்பட்டுள்ளது.

- இப்படியாக சுன்னத் செய்யப்பட்ட ஆணுறுப்பு மேலானது என்று பேசப்படும் தகவலில் எந்த குற்றமும் காண முடியாது. அதற்கு ஆதாரங்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், அல்லது அப்படி ஒரு நம்பிக்கையை யாரேனும் கொண்டிருந்தால் அதில் தவறேதும் இல்லை.

(உண்மையில் அறிவியல் ரீதியில் பார்த்தோமானால், சுன்னத் செய்யப்பட்ட ஆணுறுப்பானது ஓரளவுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்றினைத் தடுக்கும் என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எய்ட்ஸ் கட்டுப்பாட்டிற்கு சுன்னத் செய்வதும் ஒரு தீர்வாக ஐநா எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு முன்வைக்கிறது: Male circumcision programmes as part of HIV prevention)

எனவே, ஆணுறுப்பின் வடிவமைப்பு கள்ளக்காதலை சமாளிப்பதற்கா? அல்லது முன்தோல் நீக்கிய ஆணுறுப்பு மேலானதா? - என்றெல்லாம் மனுஷ்யபுத்திரனின் உயிர்மை எழுப்பும் அதி முக்கியமான விவாதத்தில் நாம் குறை காணவில்லை.

மனுஷ்ய புத்திரனின் மதவெறி

இந்தக் கட்டுரையில் ஒரு இடத்தில் மிக விஷமமான கருத்தை உயிர்மை கூறியுள்ளது.

"சுன்னத்தைக் கொண்டாடுகிறேன் என்று ராமசேனையினர் விசனிக்க வேண்டாம். முன்தோலை விடுங்கள், உங்களுக்குத்தான் வால் உள்ளதே!" என்கிறது உயிர்மை!

ராமசேனை என்பது ராமனின் படை என்பதாகும். ராமாயணத்தில் உள்ள இந்த படையில் அனுமனின் படை எனப்படும் குரங்கு படையினர் மிகுதியாக இருந்ததால் அது வானர சேனை என்றும் கூறப்பட்டது. (ராமசேனை என்கிற பெயரில் கர்நாடக மாநிலத்தில் சிலர் காதலர் தின எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினர்).

மனுஷ்யபுத்திரனின் உயிர்மைக் கட்டுரையானது, ஆண்குறி, சுன்னத் என்றெல்லாம் எழுதிவிட்டு - ராமசேனையினரை 'உங்களுக்குத்தான் வால் உள்ளதே' என்று கூறுவதன் மூலம் - ராமசேனையினர் ஆண்குறிக்கு பதிலாக வாலைப் பயன்படுத்தலாம் என்று இந்தக் கட்டுரைக் கூறுகிறது.
தாய்லாந்து பாங்காக் அரண்மனையில் உள்ள இராமசேனை ஓவியம்
இந்துக்களின் வழிபாட்டு தெய்வமாக உள்ள அனுமன், அதாவது ராமாயணத்தில் வரும் ராமசேனையின் தலைவன், ஒரு குரங்குதான். இப்படி இந்துக்களின் நம்பிக்கையாக உள்ள அனுமனையும் இந்துக்கள் வழிபடும் குரங்கையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்தி மனுஷ்யபுத்திரனின் உயிர்மை எழுதுவது நியாயம்தானா?

இந்துக்களின் இறைநம்பிக்கையுடன் தொடர்புடைய ஒரு இதிகாச சம்பவத்தைக் குறிப்பிட்டு, 'உங்களுக்கு ஆணுறுப்புக்கு பதில் வால் இருக்கிறது' என்று கூறுவது மதநம்பிக்கையை இழிவுபடுத்துவது ஆகாதா? 

சில சாதியினர் மீது, சில மதத்தினர் மீது மனுஷ்யபுத்திரனுக்கும் உயிர்மை கும்பலுக்கும் அடக்கமுடியாத காழ்ப்புணர்ச்சி இருக்கலாம். ஆனால், அதனை இப்படி கேவலமான முறையில் வெளிப்படுத்தக் கூடாது.

மனுஷ்யபுத்திரனின் மதவெறியைக் கண்டிக்கிறேன்!
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள இராமசேனை சிலை
(குறிப்பு: மனுஷ்யபுத்திரன் சாதிவெறியர் என்று நாம் குறிப்பிடக் காரணம் இவரது மதப்பற்றாலோ சாதிப்பற்றாலோ அல்ல. மாறாக பிற்படுத்தப்பட்ட சாதிகளை வெறிபிடித்து எதிர்க்கும் சாதிவெறியர் இவர் என்பதால்! மனுஷ்யபுத்திரனை எந்த மதமும் தன்னுடன் சேர்க்கவே இல்லை. இந்துக்களை வெறிபிடித்து எதிர்க்கும் மதவெறியர் இவர் என்பதால் இவரை மதவெறியர் என்கிறோம்!)

மேலே உள்ள மனுஷ்யபுத்திரன் ஓவியம் அவரது முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.