Pages

செல்பேசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்பேசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 25, 2015

கனிமொழி அவர்களே வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.. உங்களை எம்.பி. ஆக்கியதே பா.ம.க தான்!

அ.தி.மு.க.வை விட பா.ம.க.வை எதிர்ப்பது தான் தி.மு.க.வின் முதன்மைப் பணியாக மாறியிருக்கிறது.  அந்த வகையில் அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி மிகப்பெரிய உண்மையை கண்டுபிடித்ததாக கருதிக் கொண்டு புளித்துப் போன விஷயத்தை பேசியிருக்கிறார்.
'பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி இராமதாஸ் அவர்களை மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் ஆக்கியது தி.மு.க. தானாம்'. அய்யோ பாவம். பா.ம.க.வுக்கு எதிராக முன்வைக்க எந்தக் குற்றச்சாற்றுமே இல்லாததால் மீண்டும்...மீண்டும் இதையே பேசிக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க.வினர்.

2011 ஆம் ஆண்டில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என பா.ம.க. பொதுக்குழுவில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுமே இந்த குற்றச்சாற்றை கலைஞர் முன்வைத்தார். அதற்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அப்போதே புள்ளி விவரங்களுடன் பதிலடி கொடுத்தார். ஆனால், பாவம்... அந்த நேரத்தில் அக்கா கனிமொழி 2ஜி ஊழல் வழக்கிலும், கலைஞர் தொலைக்காட்சிக்கு ஊழல் பணத்தை கொண்டு வந்த வழக்கிலும் சிக்கி தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் இந்த விவரம் அவருக்கு தெரியாமல் போயிருந்திருக்கலாம்.
அதன்பிறகு கடந்த மே மாதம் திமுக பொருளாளரும், கனிமொழியின் சகோதருமான மு.க.ஸ்டாலினுக்கு  மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதினார். அதற்கு பதில் எழுத துப்பில்லாத ஸ்டாலின், தனது துதிபாடிகளில் ஒருவரான தாமரைச்செல்வன் என்ற அடிமை மூலம் பதில் அளித்தார். அதில் இதே குற்றச்சாற்றை அவர் முன்வைத்திருந்தார். அதை மறுத்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ், தாம் எம்.பி. ஆனது எப்படி? என்பது குறித்து ஸ்டாலினுக்கு மீண்டும் கடிதம் எழுதினார். இது பத்திரிகைகளிலும் வெளிவந்தது. அதை படிக்க முடியாத அளவுக்கு அந்த நேரத்தில் கனிமொழி எங்கிருந்தார் என்பது தெரியவில்லை.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பது தி.மு.க. கொடுத்த சலுகை அல்ல. 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் திமுக, பா.ம.க., காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. 1999 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - பா.ம.க. கூட்டணியில் இருந்த பா.ஜ.க. வெளியேறி அதற்கு பதிலாக காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் இணைந்தன. அதனால் ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு 1999 தேர்தலில் வழங்கப்பட்ட இடங்களை விட ஒரு இடத்தை குறைத்து வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 1999 தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்ட மதிமுகவுக்கு 4 இடங்கள் வழங்கப்பட்டன. 1999 தேர்தலில் 8 இடங்களில் போட்டியிட்ட  பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால்,  6 தொகுதிகள் மட்டுமே இருந்ததால், அத்துடன் ஒரு மாநிலங்களவை  இடம் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

அதன்படி தான் அடுத்து வந்த மாநிலங்களவைத் தேர்தலில் மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது. அப்போது கூட முழுக்க முழுக்க தி.மு.க. ஆதரவில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெற்றி பெறவில்லை. அந்த நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 20 சட்டமன்ற உறுப்பினர்கள்  இருந்தனர். கூடுதலாக தேவைப்பட்ட 14 உறுப்பினர்களின் ஆதரவை மட்டும் தான் தி.மு.க. வழங்கியது.

ஆனால், அதன்பிறகு  2007, 2008, 2010 ஆகிய தேர்தல்களில் பா.ம.க.வின் 18 உறுப்பினர்கள் ஆதரவுடன் தான் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். ஒருமுறை பா.ம.க.வுக்கு தி.மு.க. ஆதரவு கொடுத்ததற்காக 3 முறை திமுகவுக்கு பா.ம.க. ஆதரவு கொடுத்திருக்கிறது. 

இன்னும் கேட்டால் 2007 ஆம் ஆண்டில் கனிமொழி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதே பா.ம.க.வின் 18 உறுப்பினர்களின் ஆதரவுடன் தான். அக்கா கனிமொழி இதை மறந்து விட்டது ஏன்? எனத் தெரியவில்லை.
அதற்குப் பிறகு 2013 ஆம் ஆண்டு தேர்தலில் கனிமொழியை மீண்டும் எம்.பியாக்குவதற்காக பா.ம.க. உறுப்பினர்களின் ஆதரவை கேட்பதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் இல்லத்திற்கு வெளியே மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் பல மணி நேரம் காத்துக்கிடந்த வரலாறு கனிமொழிக்கு தெரியாது போலிருக்கிறது.

அதேபோல், 2004 ஆம் ஆண்டில் பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப்படி தான் மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டது. அதை தி.மு.க. வாங்கித் தரவில்லை. ஆனால், 2006 ஆம் ஆண்டில் பெரும்பான்மை இல்லாத தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி அமைக்க நிபந்தனையின்றி ஆதரவளிப்பதாக ஆளுனரிடம் முதன்முதலில் கடிதம் கொடுத்தது பா.ம.க. தான். 

அவ்வகையில் கலைஞரை முதல்வராகவும், ஸ்டாலினை துணை முதல்வராகவும் ஆக்கியது பா.ம.க. தான். அவ்வளவு ஏன்... 2020 ஆம் ஆண்டில் கனிமொழியின் பதவிக்காலம் முடிவடையும் போது மீண்டும் எம்.பியாக்குவதற்காக பா.ம.க.வின் ஆதரவைத் தேடி வரவேண்டிய நிலை ஏற்படலாம்.  எனவே.... அக்கா கனிமொழி கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது!

வெள்ளி, அக்டோபர் 12, 2012

செல்பேசிக் கோபுரம்: கண்டுகொள்ளப்படாத புதிய விதிமுறைகள்!

செல்பேசிக் கதிர்வீச்சால் ஏற்படும் கேடுகள் குறித்து எனது முந்தைய பதிவுகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது:

1. எச்சரிக்கை: செல்பேசி கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி? செல்பேசி நிறுவனங்கள் மறைக்கும் உண்மைகள்.

2. செல்பேசி மாசுபாடு என்றால் என்ன?


3. செல்பேசிக் கோபுரங்கள்: மாபெரும் ஆபத்து! கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்


4. சுற்றுச்சூழலும் செல்பேசிக் கோபுரமும்:அழிவின் விளிம்பில் தேனீக்கள், சிட்டுக்குருவிகள்!


செல்பேசிக் கதிர்வீச்சினைக் கட்டுப்படுத்தும் விதிகள் 

இந்தியாவின் செல்பேசி செவை நிறுவனங்கள் அனைத்தும் செல்பேசிக் கோபுரங்களை அமைக்கும் போது, அவை "இந்திய அரசும் ICNIRP பன்னாட்டு அமைப்பும் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக" கூறுகின்றன. இந்த வாதம் தந்திரமானது, மக்களை ஏமாற்றக்கூடியது.
செல்போன் கோபுரங்களால் ஏற்படக்கூடிய கதிர்வீச்சை கட்டுப்படுத்துவதற்கான பன்னாட்டு விதிமுறை மிகப்பழமையானது (International Commission on Non-Ionizing Radiation Protection - ICNIRP guidelines). 1998 ஆம் ஆண்டி உருவாக்கப்பட்ட்து. இந்த விதிமுறை கதிர்வீச்சால் ஏற்படக்கூடிய வெப்பத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால், வெப்ப விளைவை விட உயிரியல் விளைவுகள் நான்கு அல்லது ஐந்து மடங்கு தீவிரமானவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அதாவது, எது மிகப்பெரிய பாதிப்போ, அதை இந்த ICNIRP கட்டுப்பாடு கணக்கில் கொள்ளவில்லை.

காலத்துக்கு பொருந்தாத விதிமுறைகள்

மிகப்பழமையான ICNIRP விதிமுறைக் கூட இந்தியாவில் உண்மையாகக் கடைபிடிக்கப்படவில்லை. ICNIRP விதிமுறைப்படி GSM900 வகை செல்பேசிக் கோபுரத்தின் கதிர்வீச்சு சதுர மீட்டருக்கு 4500 மில்லிவாட் (Milliwatt/m2) அளவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உச்சவரம்பு என்பது ஒரு குறிப்பிட இடத்தின் ஒட்டுமொத்த அளவாகும். அதாவது, ஒரு பகுதியில் எததனை செல்பேசிக் கோபுரங்கள் இருந்தாலும் அவற்றின் ஒட்டுமொத்த கதிர்வீச்சு அளவு சதுர மீட்டருக்கு 4500 மில்லிவாட் அளவுக்கு மேல் போகக்கூடாது.

ஆனால், இந்தியாவில் இதனை ஒரு நிறுவனத்தின் ஒரு செல்பேசிக் கோபுரத்தின் உச்ச அளவாக நிருணயித்துள்ளனர். ஒரு பகுதியில் பத்து செல்பேசிக் கோபுரங்கள் இருந்தால் ஒவ்வொன்றுக்கும் 4500 மில்லிவாட் கதிர்வீச்சு அனுமதி உண்டு.  அவற்றின் ஒட்டுமொத்த கதிர்வீச்சு அளவு சதுர மீட்டருக்கு 45000 மில்லிவாட் அளவுக்கு போகக்கூடும். இது ICNIRP பன்னாட்டு அளவைவிட பலமடங்கு அதிகமாகும்.

இப்படி ஒரு காலத்துக்கு பொருந்தாத விதிமுறைகளை வைத்துக்கொண்டுதான், "இந்திய அரசும் ICNIRP பன்னாட்டு அமைப்பும் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக" கூறுகின்றன நிறுவனங்கள்.

ஆனால், உலகின் மற்ற நாடுகள் தமது குடிமக்களை காப்பாற்றுவதில் வெகுதூரம் சென்றுவிட்டன. ICNIRP பன்னாட்டு அமைப்பின் உச்சவரம்பை விட 100 மடங்கு முதல் 1000 மடங்கு வரை குறைத்துவிட்டன.

எடுத்துக்காட்டாக, இந்தியாவில் சதுர மீட்டருக்கு 4500 மில்லிவாட் என்ற அளவு பின்பற்றப்படும் போது, சீனாவில் இது 400 மில்லிவாட், இத்தாலி, போலந்து, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் 100 மில்லிவாட் என மிக மிக குறைக்கப்பட்டு விட்டது. சுவிட்சர்லாந்து நாட்டில் குடியிருப்பு, பள்ளி, மருத்துவமனை, விளையாட்டுத்திடல் பகுதிகளில் இந்த அளவும் வெறும் 42 மில்லிவாட்டிற்கு மிகக் கூடாது என்கிற கடுமையான விதிமுறை உள்ளது.

ஆக, இந்தியாவில் பல ஆயிரம் மடங்கு அதிக கதிர்வீச்சினை வெளியிடும் செல்பேசி நிறுவனங்கள் தாங்கள் 'நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக' கூறுகின்றன.

அரசாங்கம் செய்வது என்ன?

மக்கள் நலனைக் காப்பாற்றுவதில் இந்திய அரசாங்கம் மிக மெத்தனமாக இருந்து வருகிறது. அதில் தமிழ்நாடு அரசு இன்னும் அலட்சியமாக இருக்கிறது என்று கூறலாம்.
மக்களின் உடல்நலத்தைக் காப்பாற்றும் வகையில், செல்பேசிக் கோபுரங்களை அமைப்பதற்கான இடங்கள் குறித்து முறையான விதிமுறைகள் இந்தியாவில் இல்லை. இக்கோபுரங்களை அமைப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

புது தில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு அருகில் செல்பேசிக் கோபுரங்களை அமைக்கக் கூடாது என்கிற விதிமுறை உள்ளது. இதற்கு நேர்மாறாக தமிழ்நாட்டில் செல்பேசிக் கோபுரம் அமைக்க அனுமதியே தேவையில்லை என்கிற நிலை உள்ளது.

புதிய விதிமுறைகள்

இந்திய அரசாங்கம் செல்பேசிக் கோபுரங்களை முறைப்படுத்துவது குறித்து 2010 ஆம் ஆண்டில் இரண்டு குழுக்களை அமைத்தது. ஒரு நிபுணர் குழு 'வனவிலங்குகள், பறவைகள், தேனீக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்' குறித்தும், அமைச்சரகங்களுக்கு இடையேயான மற்றொருக் குழு 'மின்காந்தப்புலனால் ஏற்படும் கதிர்வீச்சு' குறித்தும் ஆராய்ந்து பரிந்துரைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டன.

இந்த குழுக்களின் அடிப்படையில் இரண்டு புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை உத்தரவு

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை 2012 ஆகஸ்ட் 9 ஆம் நாள் வெளியிட்டுள்ள உத்தரவில் பின்வரும் விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
  • மின்காந்தக் கதிர்வீச்சு குறித்து மாநில அரசுகளும் உள்ளாட்சிகளும் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் கண்காணிக்க வேண்டும். சிக்கலுக்குரிய செல்பேசிக் கோபுரங்கள் இடம் மாற்றப்பட வேண்டும்.
  • தெளிவான எச்சரிக்கைப் படங்களை செல்பேசிக் கோபுரங்களைச் சுற்றிலும் அமைக்க வேண்டும்.
  • சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு அருகே செல்பேசிக் கோபுரங்களை அமைக்கும் முன்பு அதுகுறித்து தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட வேண்டும். வனத்துறையிடம் ஆலோசிக்க வேண்டும்.
  • செல்பேசிக் கோபுரங்கள் குறித்தும் மின்காந்த ஆபத்துகள் குறித்தும் மாநில சுற்றுச்சூழல் துறை விளம்பரங்களையும் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் நடத்த வேண்டும்.
  • ஏற்கனவே செல்பேசிக் கோபுரம் உள்ள இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் இனி புதிய செல்பேசிக் கோபுரங்கள் அனுமதிக்கப்படக் கூடாது.
  • ஒரு ஊர், நகரம், மாவட்டம் என அனைத்து நிலைகளிலும் உள்ள செல்பேசிக் கோபுரங்கள் குறித்த தகவலகள் மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். செல்பேசிக் கோபுரங்கள் அனைத்தைக் குறித்தும் அவை வெளியிடும் மின்காந்தக் கதிர்வீச்சுக் குறித்தும் தகவல் பகிரங்கமாக்கப்பட வேண்டும்.
  • இந்தியாவுக்கு என புதிய கதிர்வீச்சு உச்ச வரம்பை மத்திய தொலைத்தொடர்புத் துறை உருவாக்க வேண்டும். அத்தகைய உச்சவரம்பு நிருணயிக்கப்படும் வரை வருமுன் காப்பது என்கிற முன்னெச்சரிக்கை கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும்.
- என நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. (இங்கே காண்க)

இந்திய தொலைத் தொடர்புத்துறைஉத்தரவு

இந்திய தொலைத் தொடர்புத்துறை 2012 செப்டம்பர் 1 முதல் செயலுக்கு வரவுள்ளதாகக் கூறி வெளியிட்டுள்ள உத்தரவில்:
  • செல்பேசிக் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அளவை பத்தில் ஒரு பங்காகக் குறைக்க வேண்டும். அதாவது ஒரு சதுர மீட்டரில் 4500 மில்லிவாட் என்கிற பழைய உச்ச வரம்பு அளவு இனி 450 மில்லிவாட்டாக குறைக்கப் பட வேண்டும்.
  • நகரங்களின் முக்கிய பகுதிகளில் கதிர்வீச்சின் அளவைக் கண்காணித்து அதனை மக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.
  • தேசிய அளவில் செல்பேசிக் கோபுரங்களின் புள்ளிவிவர கட்டமைப்பு உருவாக்கப்பட்டு இணையத்தின் மூலம் தகவல் வெளியிடப்படும்.
  • தேசிய ஆளவிலான தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஏற்படுத்தப்படும்.
  • அதிகக் கதிர்வீச்சு இல்லாத புதிய தொழிநுட்பங்கள் இனி பயன்படுத்தப்பட வேண்டும்.
  • செல்பேசி விற்கும் இடங்களில் மின்காந்தக் கதிர்வீச்சு குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அளிக்கப்பட வேண்டும்.
- என்பன உள்ளிட்ட புதிய விதிமுறைகளை 1.9.2012 முதல் செயல்படுத்தி உத்தரவிட்டுள்ளது இந்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை.  (இங்கே காண்க)

இனி என்ன?

அரசின் இப்போதைய விதிமுறைகள் போதுமானவை அல்ல என்றபோதிலும் புதிய விதிமுறைகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.ஆனால், அவை தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை
அரசின் விதிமுறைகளில் உள்ள மிகப் பெரிய குறைபாடு - செல்பேசிக் கோபுரங்களில் வெளியாகும் கதிர்வீச்சு மாசினை செல்பேசி சேவை நிறுவனங்களே கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதுதான். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்ற பொதுவான அமைப்புகளால் கண்காணிக்கப்படும் நிலை வரவேண்டும்.

மத்திய அரசின் உத்தரவு ஒருபுறம் இருந்தாலும், செல்பேசிக் கோபுரங்கள் அமைப்பது நகராட்சிகள், உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் வருவதால் - இதுகுறித்து தமிழ்நாடு அளவில், மக்களின் உடல் நலத்தைக் காக்கும் நோக்கிலான முற்போக்கான விதிமுறைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

மிக முதன்மையாக பள்ளிகளுக்கு அருகில் சுமார் 100 மீட்டர் வரை செல்பேசிக் கோபுரங்கள் இல்லை என்கிற விதியை செயல்படுத்த மாநில அரசாங்கம் முன்வர வேண்டும். அதற்காக மக்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

புதிய விதிமுறைகள் சட்டப்படி செப்டம்பர் 2012 முதல் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட போதிலும் இதுவரை இதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வியப்பையும் வேதனையையும் தருகிறது. நம்நாட்டில் பொதுநலனுக்கு தரப்படும் மதிப்பு அவ்வளவுதான்!

பன்னாட்டு நிறுவனங்களின் இலாபவெறிக்கு முன்பு பொதுநலன் என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா என்ன?

புதன், செப்டம்பர் 05, 2012

சுற்றுச்சூழலும் செல்பேசிக் கோபுரமும்:அழிவின் விளிம்பில் தேனீக்கள், சிட்டுக்குருவிகள்!

செல்பேசிக் கோபுரங்களால் மனித உடல் நலனுக்கு ஏற்படும் கேடுகள் முந்தைய பதிவில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன (இங்கே காண்க). செல்பேசிக் கோபுரங்களால் சுற்றுச்சூழலும் உயிரினங்களும் கூட கடுமையாக பாதிக்கப்பட்வது குறித்து இனி பார்க்கலாம்.

செல்பேசிக் கோபுரக் கதிர்வீச்சால் மனிதனைவிட பறவைகள், விலங்குகள் அதிகமாக பாதிப்படைகின்றன. 

பறவைகளுக்கு ஏற்படும் கடும் பாதிப்புகள்

கோடை வெய்யில் தாக்கத்தை மனிதர்கள் வெறுக்கின்றனர். சூரிய வெப்பத்தை மனிதஉடல் உணர்வதால்தான் இந்த வெறுப்பு. ஒருவேளை, சூரிய வெப்பத்தை உணரும் தன்மை இல்லாமல் போயிருந்தால் நாம் கோடை வெய்யிலுக்கு பயப்பட மாட்டோம். அதேபோன்றுதான், செல்பேசிக் கோபுரத்தின் மின்காந்தக் கதிர்வீச்சை நாம் நேரடியாக உணர்வது இல்லை. அதனால், நமக்கு வெளிப்படையான துன்பமும் இல்லை.
ஆனால், பறவைகள் இதிலிருந்து மாறுபட்டவை. அவை, செல்பேசிக் கோபுரத்தின் மின்காந்த அலைகளை நேரடியாக உணர்கின்றன. அதனால்தான், மரங்கள், கோவில்கள், கட்டடங்கள் என எல்லா உயரமான இடத்திலும் உட்காரும் பறவைகள் ஒன்று கூட செல்பேசிக் கோபுரத்தின் மீது உட்காருவது இல்லை.

செல்பேசிக் கோபுரத்தின் மின்காந்த அலைகளைக் கண்டு பறவைகள் அஞ்சி ஓடுகின்றன. அதனால்தான், செல்பேசிக் கோபுரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வானில் ஒரு பறவையைக் கூட பார்க்க முடிவதில்லை.

சிட்டுக்குருவிகளின் அழிவு: 

நகர்ப்புறங்களில் காணப்பட்ட சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை எதனால் குறைந்து போனது என்பது குறித்து உலகின் பலபகுதிகளிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அத்தகைய ஆய்வுகள் எல்லாமும் செல்பேசிக் கோபுரங்களைத் தான் முதன்மையாகக் குற்றம் சாட்டுகின்றன. 1994 ஆம் ஆண்டிற்கு பின்னர் இப்போது வரை லண்டன் மாநகரின் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையில் 75 விழுக்காடு குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறே ஐரோப்பியக் கண்டத்தின் பல பகுதிகளிலும் சிட்டுக்குருவிகள் பெருமளவு குறைந்து போயுள்ளது. இதற்கெல்லாம் செல்பேசிக் கோபுரங்களே காரணம்.
இந்தியாவில் போபால், நாக்பூர், குவாலியர், இந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதை சுட்டிக்காட்டுகின்றன.

செல்பேசிக் கோபுரங்களின் மின்காந்த நுண்ணலைகளில் சிக்காமல் நகர்ப்புற சிட்டுக்குருவிகள் வாழ வேண்டியுள்ளது. மறுபுறம் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் போது, செல்போன் கோபுரக் கதிர்வீச்சால் பெருமளவு முட்டைகள் சேதமடைந்து விடுகின்றன. இந்த புதிய சூழலை எதிர்கொள்ள முடியாமல் சிட்டுக்குருவிகள் அழிகின்றன என்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

இதே போன்ற நிலைதான் மற்ற பறவைகளுக்கும். அதிலும் குறிப்பாக வவ்வால்களின் நிலைமை மிகமோசம். அவை கண்ணால் பார்த்து பறப்பது இல்லை. இயற்கையான மின்காந்த அலையை வைத்துதான் பறக்கின்றன. இப்போது செல்பேசிக் கோபுரத்தின் செயற்கை மின்காந்த அலைகள் வவ்வால்களின் இயக்கத்தை முற்றாக சீரழித்து விட்டன.

தேனீக்களின் அழிவு: 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தேனீக்கள் எண்ணிக்கையில் 2010 ஆம் ஆண்டில் திடீரென 30 விழிக்காடு தேனீக்கள் காணாமல் போனதைக் கண்டறிந்தார்கள். அமெரிக்காவின் சில பகுதிகளில் 80 விழுக்காடு தேனீக்கள் மாயமாகின. 'காலனி கொலாப்ஸ் டிசார்டர்' (CCD) என இதற்கு பெயரிட்டுள்ளனர். இந்த புதிய சிக்கலுக்கு செல்பேசிக் கோபுரங்கள்தான் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனீக்கள் தமது தேன்கூட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுவரை பறந்து சென்று பூக்களில் தேனைச் சேகரித்து கூட்டிற்கு திரும்புகின்றன. இந்த போக்குவரத்து முறைக்கு அவை முழுக்க முழுக்க பூமியின் மின்காந்த அலைகளைத்தான் நம்பியுள்ளன. அதாவது இயற்கையான மின்காந்த அலையை உணர்வதன் மூலமே அவை கூட்டிற்கு திரும்பும் வழியைக் கண்டறிகின்றன.

தேனீக்களின் இந்த இயற்கை வழிகாட்டி முறைக்கு செல்பேசிக் கோபுரங்கள் வேட்டு வைத்து விட்டன. இதனால், கூட்டை விட்டு தேனெடுக்க சென்ற தேனீக்கள் திரும்புவதற்கு வழிதெரியாமல் கூட்டமாக தற்கொலை செய்துகொண்டன. இந்த நிலையைதான் 'காலனி கொலாப்ஸ் டிசார்டர்' என்று அழைக்கின்றனர்.

தேனீக்களின் அழிவு சாதாரணமானது அல்ல. புகழ்பெற்ற விஞ்சானி ஐன்ஸ்டின், "தேனிக்கள் முற்றிலுமாக அழிந்து போனால், அதிலிருந்து ஐந்து ஆண்டுகளில் மனித இனமும் அழிந்து போகும்" என்று குறிப்பிட்டார். ஏனெனில், உலகின் சுமார் இரண்டு லட்சம் பூக்கும் வகைத் தாவரங்களில் உற்பத்தி அயல் மகரந்தசேர்க்கை மூலமாகவே நடக்கிறது. மனித உணவின் பெரும்பகுதி அயல் மகரந்தசேர்க்கை மூலமாகவே கிடைக்கிறது. இந்த அயல் மகரந்தசேர்க்கை பணியில் பெரும்பகுதியை தேனீக்கள்தான் செய்கின்றனர்.
செல்போன் கோபுரங்களால், தேனீக்களும் இதர பூச்சிகளும் அழியும்போது தாவரங்கள் அழியும். இதிலிருந்து மனிதன் மட்டும் தப்பிவிட முடியாது.

- மொத்தத்தில் மனிதனுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், இதர உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என மிக மோசமான விளைவுகளை செல்பேசிக் கோபுரங்கள் ஏற்படுத்துகின்றன.
தொடர்புடைய சுட்டிகள்:

1. செல்பேசிக் கோபுரங்கள்: மாபெரும் ஆபத்து! கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்

2. எச்சரிக்கை: செல்பேசி கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி? செல்பேசி நிறுவனங்கள் மறைக்கும் உண்மைகள்.

3. செல்பேசி மாசுபாடு என்றால் என்ன?

திங்கள், செப்டம்பர் 03, 2012

செல்பேசிக் கோபுரங்கள்: மாபெரும் ஆபத்து! கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்


செல்பேசிக் கோபுரங்களால் குழந்தைகள், பொதுமக்களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. கண்களால் பார்க்காமலும் காதால் கேட்காமலும் மனிதனின் புலன்களால் உணரப்படாமலேயே மின்காந்தக் கதிர்வீச்சால் மக்கள் தாக்கப்படுகின்றனர்.

செல்பேசிக் கோபுரத்தின் பாதிப்புகள்

செல்பேசி மின்நச்சுப்புகையை 1. செல்பேசியிலிருந்து வெளிவரும் மின்காந்தக் கதிர்வீச்சு, 2. செல்பேசிக் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்தக் கதிர்வீச்சு என இரண்டாக பிரித்துப் பார்க்கலாம். ஒப்பீட்டளவில், செல்பேசிக் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்தக் கதிர்வீச்சு மிக மோசமானதாகும்.
செல்பேசி மின்காந்தக் கதிர்வீச்சு

செல்பேசியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு என்பது செல்பேசி இயக்கநிலையில் இருக்கும்போதும், காதுக்கு அருகில் வைக்கும்போதும், உடலோடு ஒட்டிய நிலையில் இருக்கும் போதும் அதிலிருந்து கதிர்வீச்சு தாக்கும். செல்பேசியை உரிய எச்சரிக்கையுடன் பயன்படுத்தினால் இந்தக் கதிர்வீச்சைத் தடுக்கலாம்.

செல்பேசிக் கோபுர மின்காந்தக் கதிர்வீச்சு

ஆனால், செல்பேசிக் கோபுரத்தின் கதிர்வீச்சு இருபத்துநான்கு மணிநேரமும் அதன் அருகே வசிப்போரைத் தாக்கிக்கொண்டே இருக்கும். இதிலிருந்து சுற்றுப்புறத்தில் வாழ்வோர் தப்ப முடியாது. செல்பேசிக் கோபுரத்திலிருந்து 50 மீட்டர் வரை இருப்பவர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் 300 மீட்டர் தூரம் வரை தாக்கம் கூட பாதிப்பு இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்றபடி, இரண்டுவகை கதிர்வீச்சும் ஒரே மின்காந்தக் கதிர்வீச்சுதான் (Electromagnetic Radiation).
இந்தியா முழுவதும் சுமார் ஐந்து லட்சத்துக்கும் கூடுதலான செல்பேசிக் கோபுரங்கள் உள்ளன. இதன்மூலம் சுமார் 90 கோடிக்கும் அதிகமான செல்பேசிகளுக்கு செவை அளிக்கப்படுகிறது. உண்மையில், செல்பேசிக் கோபுரங்கள் ஒரு மிகப்பெரிய மின்நச்சுப்புகை சிக்கலாக மாறிவிட்டன. நகரப்பகுதிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

செல்பேசிக் கோபுரத்தின் கதிர்வீச்சினை வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சு (Thermal radiation), வெப்பம் சாராக் கதிர்வீச்சு (Non-thermal radiation) என்று இருவகையாகப் பிரிக்கின்றனர். வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சு என்பது சமைப்பதற்கு பயன்படுத்தும் மைக்ரோ ஓவனில் ஏற்பதும் வெப்பத்திற்கு ஈடானதாகும். செல்பேசியை காதுக்கு அருகே வைத்து நீண்ட நேரம் பேசினால் தலை சூடாவது இந்த வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சினால்தான்.

வெப்பம் சாராக் கதிர்வீச்சு இதைவிட மிக மோசமானதாகும். இது மனித உடலின் மின்காந்தப் புலத்தைப் பாதிக்கிறது. இது உயிரியல் ரீதியிலான (biological) பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் இதுவரை வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சுக்கு மட்டுமே ஓரளவுக் கட்டுப்பாடுகள் உள்ளன. வெப்பம் சாராக் கதிர்வீச்சுக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை.

செல்பேசிக் கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்

செல்பேசி மின்காந்தக் கதிர்வீச்சால் கடுமையான உடல்நலக் கோளாறுகள் நேருகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான பன்னாட்டு முகமை (IARC) 'மனிதனுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள' கதிர்வீச்சாக செல்பேசிக் கதிர்வீச்சினை வகைப்படுத்தியுள்ளது. மூளைப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை செல்பேசிக் கதிர்வீச்சு ஏற்படுத்துவதாக அந்த அமைப்பு கூறுகிறது.

புற்றுநோய், ஆண்மைக் குறைவு, மூளையின் பாதுகாப்புத் தடுப்பில் பாதிப்பு, மரபணு பாதிப்பு, இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்தோருக்கு பாதிப்பு, உயிரணுப் பாதிப்பு, காதுக் கோளாறுகள், பார்வைக் குறைவு, எலும்புகள் வலுவிழத்தல், நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு, தூக்கம் குறைதல், குழந்தைகள் பாதிப்பு, கருவுற்ற தாய்மார்களுக்குப் பாதிப்பு, தூக்கமின்மை என ஏராளமான பாதிப்புகளை செல்பேசிக் கதிர்வீச்சு ஏற்படுத்துகிறது.
மும்பையில் மூளைப் புற்றுநோய்க்கு காரணமான செல்பேசிக் கோபுரம்
புற்றுநோய்: மும்பையின் கார்மிகேல் சாலையில் உள்ள விஜய் அப்பார்ட்மென்ட்ஸ் எனும் கட்டிடத்தின் ஏழாவது தளத்தில் ஏராளமான செல்பேசிக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதற்கு நேர் எதிரிலேயே உஷாகிரண் கட்டடம் எனும் பலமாடி அடுக்குக் குடியிடுப்பு இருந்தது. உஷாகிரண் குடியிருப்பின் 6 முதல் 10 வரையிலான தளங்கள்  விஜய் அப்பார்ட்மென்ட்டின் செல்பேசிக் கோபுரத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் நேரடித் தாக்கத்துக்கு ஆளாகின. மூன்றே ஆண்டுகளில் உஷாகிரண் கட்டடத்தின் 6, 7, 8 மற்றும் 10 ஆவது மாடியில் வசித்தோரில் 6 பேர் புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று கண்டறியப்படாமல் ஏராளமான புற்றுநோயாளிகளை செல்பேசிக் கோபுரங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செல்பேசிக் கதிர்வீச்சு ஆண்மைக் குறைவை உண்டாக்கும்
ஆண்மைக் குறைவு: செல்பேசிக் கதிர்வீச்சால் அதிக அளவில் ஆண்மைக் குறைவு ஏற்படுகின்றது. எந்த அளவுக்கு அதிகமான நேரம் செல்பேசிகளை ஆண்கள் பயன்படுத்துகின்றனரோ அந்த அளவுக்கு ஆண்மைக் குறைவின் தாக்கம் அதிகரிக்கும். ஆண்களின் விந்தணுவின் தரம் குறைதல், உயிரணு எண்ணிக்கை குறைதல் எனப்பல பாதிப்புகள் செல்பேசிக் கதிர்வீச்சால் ஏற்படுகின்றது.

மூளையின் பாதுகாப்புச் தடுப்பில் பாதிப்பு: மனித மூளையில் இரத்த ஓட்டத்திற்கும் மூளையின் திசுக்களுக்கும் இடையே மெல்லிய தடுப்புச் சுவர் அமைந்துள்ளது. இரத்த மூளைத் தடுப்பு (Blood Brain Barrier) எனப்படும் இந்த அமைப்பு இரத்தத்தில் உள்ள சத்துக்களில் தேவையானவற்றை மட்டுமே மூளைக்குள் அனுமதிக்கின்றன. மிகமுக்கியமான இந்த பாதுகாப்புச் சுவர் செல்பேசிக் கதிர்வீச்சால் பாதிப்படைகிறது. தேவையில்லாத நுண்ணூட்டங்கள் உள்ளே செல்லும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பலவிதமான மூளைப் பாதிப்புகள் தாக்குகின்றன.
செல்பேசிக் கதிர்வீச்சு மூளையைப் பாதிக்கும் 
மரபணு பாதிப்பு: செல்பேசி நுண்ணலைகளால் மனித மரபணு பாதிப்படைகிறது. டி.என்.ஏ சேதமடைதல், தன்னைத்தானே சீரமைத்துக்கொள்ளும் ஆற்றலைக் குறைத்தல் போன்ற பல விளைவுகள் நேருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றன. மனித உயிரணுக்களில் ஏற்படும் சேதம் காலப்போக்கில் புற்றுநோயாகவும் மாற்றமடைகிறது.

இருதய அறுவை சிகிச்சை செய்தோருக்கு பாதிப்பு: விமானங்களின் தகவல் தொடர்பை செல்பேசி பாதிக்கிறது என்பதால் விமானப் பயணங்களின் போது செல்பேசியை அணைத்து வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போன்றுதான் மருத்துவமனைகளில் உள்ள பலவிதமான மின்னணுக் கருவிகளின் செயல்பாட்டை செல்பேசி பாதிக்கிறது. இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற சிக்கலான மருத்துவ இடங்களில் செல்பேசி அணைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இருதைய அறுவை சிகிச்சையின் போது 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டோருக்கு செல்பேசிகள் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். செல்பேசியை இயக்கும் போது அளிக்கப்படும் மின்னணுக் கட்டளைகள் பேஸ் மேக்கர் கருவியின் செயல்பாட்டில் தலையிட்டு தவறான கட்டளைகளைக் கொடுத்து பேஸ் மேக்கர் கருவியை தாறுமாறாக இயக்கச் செய்யும் வாய்ப்பு உள்ளதாக அறிவியளாளர்கள் எச்சரிக்கின்றனர்.

காதுக் கோளாறுகள்: செல்பேசிகளால் காது கேட்கும் திறன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, 'ரிங்சியெட்டி' எனப்படும் ஒன்றுமில்லாமல் இறைச்சல் சத்தம் காதுக்குள் கேட்கும் துன்பத்தால் பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காதின் கேட்கும் திறன் என்பது காதுக்குள் இருக்கும் 16000 இழை உயிரணுக்களின் நலத்தைப் பொருத்ததாகும். இந்த இழை உயிரணுக்கள் செல்பேசிக் கதிர்வீச்சால் சேதமடைகின்றன. இவை மீண்டும் வளருவது நின்றால் கேட்கும் திறன் குறைய ஆரம்பித்துவிடும். தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் செல்பேசியில் பேசுபவர்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் கேட்கும் திறனைக் கணிசமாக இழந்து போவார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
கண்கள் பாதிப்பு: தொடர்ச்சியாக செல்பேசியில் பேசுவது கண்களைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியாதாகும். செல்பேசியை தலைக்கு அருகிலேயே வைத்துப் பேசும்போது அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் தலை சூடாகிறது. எனினும் தலைப்பகுதியில் அதிக இரத்த ஓட்டம் ஏற்பட்டு இந்த வெப்பம் மற்ற பகுதிகளால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இதனால் தலை, காது பகுதிகள் சூட்டிலிருந்து ஓரளவுக்கு தப்புகின்றன. ஆனால், இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடு கண்ணில் இல்லை.

மனித விழியில் சரளமான இரத்த ஓட்டம் இல்லாததால், செல்போன் கதிர்வீச்சால் கண்ணில் ஏற்படும் வெப்பம் கண்ணை சூடாக்குகிறது. வெப்பத்தின் அளவு மிக அதிகமாகும் போது விழித்திரைப் பாதிப்படைகிறது. பார்வைக் குறைபாடுகள் நேருகின்றன.

எலும்பு பாதிப்பு: மனித எலும்பு தேய்வதற்கு செல்பேசிகள் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இடுப்பில் செல்பேசியை அணிந்து செல்வோரை மருத்துவ ஆய்வாளர்கள் ஆராய்ந்து பார்த்ததில், அவ்வாறு அணியாதவர்களை விட அதிகமாக இடுப்பு எலும்புப் பகுதி தேய்ந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். எனவே, மனித உடலில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொலைவில் செல்பேசிகளை வைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

தூக்கமின்மை: செல்பேசிகளால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு தூக்கமின்மை. குறிப்பாக நான்காம் கட்ட தூக்கம் எனப்படும், மனித உடலும் மூளையும் தன்னைதானே சீரமைத்துக் கொள்ளும் தூக்கத்தை செல்பேசிகள் கெடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
செல்பேசிக் கதிர்வீச்சு தூக்கத்தைக் கெடுக்கும் 
தூங்குவதற்கு முன்பு செல்பேசியில் பேசுவதால் தூக்கம் கெடுகிறது. தலைவலி, மன அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் தூங்குவதற்கு முன்பு செல்பேசியில் பேசுவதும், செல்பேசியை தலைக்கு அருகில் வைத்துத் தூங்குவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், படிப்பில் கவனமின்மை, ஆளுமையில் மாற்றம் எனப்பலக் கேடுகள் நேருகின்றன.
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் செல்பேசிக் கதிர்வீச்சு
குழந்தைகள் பாதிப்பு: செல்பேசியாலும், செல்போன் கோபுரங்களாலும் சிறுவர்களும் குழந்தைகளும் அதிகமாக பாதிப்படைகின்றனர். குழந்தைகளின் சிறிய தலை, சிறிய அளவில் மூளை, மழுமையாக வளர்ச்சியடையாத எலும்புகள், மென்மையான தோல், மெல்லிய செவி என எல்லாமும் அதிக அளவுக்கு மின்காந்த கதிர்வீச்சால் பாதிப்படைகின்றன.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் - கதிர்வீச்சின் பாதிப்புகள் அவர்களை எளிதில் தாக்குகின்றன. செல்பேசிக் கருவிகளை வைத்து விளையாடும் குழந்தைகள் ஞாபக சக்திக் குறைவு, கவனக் குறைவு, கற்கும் திறன் குறைவு உள்ளிட்ட பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளாவது உறுதி செய்யப்பட்டுள்ளாது.

எனவேதான், பெரும்பாலான மேற்குலக நாடுகள் 16 வயதுக்கு கீழுள்ளவர்கள் செல்பேசியை பயன்படுத்த பயன்படுத்த வேண்டாம் என வெளிப்படையாக அறிவுறுத்துகின்றன.

பெண்கள் பாதிப்பு: கருவுற்ற தாய்மார்கள் செல்பேசியைப் பயன்படுத்துவதும், செல்பேசிக் கோபுரங்களுக்கு அருகில் வசிப்பதும் மிக ஆபத்தானதாகும். கருவுற்ற தாய்மார்கள் செல்பேசி பேசுவதால் கருச்சிதைவு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறே, பிறந்த குழந்தைகளிடம் நடத்தை மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இப்படியாக - மனிதர்களுக்கு எண்ணற்ற பாதிப்புகளை செல்பேசி மின்காந்தக் கதிர்வீச்சு ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், கருவுற்ற தாய்மார்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். 
செல்பேசிக் கோபுரம் =24 மணி நேரக் கதிர்வீச்சு
செல்பேசிகள் சில மணி நேரப் பயன்பாட்டால் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றால், செல்பேசிக் கோபுரங்கள் அதைவிட பலமடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. செல்பேசிக் கோபுரத்திலிருந்து ஒவ்வொரு நாலும் இருபத்தி நான்கு மணி நேரமும் மிக அதிக அளவான கதிர்வீச்சு வீசிக்கொண்டே இருக்கிறது. இதனால் செல்பேசிக் கோபுரங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எல்லா நேரமும் கதிவீச்சால் தாக்கப்படுகின்றனர்.

தொடர்புடைய சுட்டிகள்:

எச்சரிக்கை: செல்பேசி கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி? செல்பேசி நிறுவனங்கள் மறைக்கும் உண்மைகள்.

செல்பேசி மாசுபாடு என்றால் என்ன?

சனி, செப்டம்பர் 01, 2012

செல்பேசி மாசுபாடு என்றால் என்ன?

தமிழ்நாட்டு மக்கள் எல்லோருமே செல்பேசியைப் பயன்படுத்துகிறார்கள் என்கிற நிலை வந்துவிட்டது. ஆனால், செல்பேசி உடல்நலத்தைப் பாதிக்கும் என்பது எத்தனைப்பேருக்குத் தெரியும்?

செல்பேசிகளால் ஏற்படும் மின்காந்தக் கதிர்வீச்சால் மனிதர்களின் உடல்நலமும் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடுகளில் மின்காந்தக் கதிர்வீச்சு முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில்,கண்களால் பார்க்காமலும் காதால் கேட்காமலும் மனிதனின் புலன்களால் உணரப்படாமலேயே மின்காந்தக் கதிர்வீச்சால் மக்கள் தாக்கப்படுகின்றனர்.

செல்பேசி மாசுபாடு என்றால் என்ன?

மின்அலை மற்றும் காந்தஅலை இரண்டும் ஒன்றாக பாய்வதை மின்காந்த கதிர்வீச்சு (electromagnetic radiation - EMR) என்கின்றனர். இதனை மின்காந்தப்புல கதிர்வீச்சு (electromagnetic radiation field - EMF) என்றும் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் மாசுபாட்டினை மின்நச்சுப்புகை (electrosmog) என்று பொதுவாகக் கூறுகின்றனர்.
electromagnetic radiation - EMR
கதிர் வீச்சானது ஆற்றல் மிக்கது. அலை வடிவத்தில் பரவக்கூடியது. ஓளி, நுண்ணலைகள், ரேடியோ அலைகள் போன்றவை மின்காந்த அலைகள் எனப்படுகின்றன. இத்தகைய அலைகள் ஒரு ஊடகத்தினூடாக அல்லது ஒரு வெளியினூடாக கடந்து செல்வது கதிர்வீச்சு (radiation) எனப்படுகிறது.

அலைக்கற்றை 

மின்காந்த கதிர்வீச்சு இயற்கையிலேயே இருப்பதாகும். எடுத்துக்காட்டாக நாம் கண்ணால் காணக்கூடிய சூரிய ஒளி ஒரு மின்காந்த கதிர்வீச்சுதான். இதுபோலக் கண்ணால் காணமுடியாத மின்காந்த கதிர்வீச்சு அலைகள் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துதான் "மின்காந்த அலைக்கற்றை" (Electromagnetic spectrum) என்கின்றனர். பெரிதளவில் பேசப்பட்ட அலைக்கற்றை (spectrum) ஒதுக்கீடு இந்த மின்காந்த அலைக்கற்றையைத்தான் குறிக்கிறது.

ஒரு குளத்தின் நடுவில் கல்லை எறிந்தால் அலை எழுவது போன்றுதான் மின்காந்த அலையும் பரவுகிறது. ஒரு வினாடியில் எத்தனை அலைவுத்துடிப்பு நேருகிறதோ அதற்கேற்ப மின்காந்த அலையின் சக்தி மதிப்பிடப்படுகிறது. ஒரு வினாடியில் ஒரு துடிப்பு என்பது ஒரு ஹெர்ட்ஸ் (Hertz) ஆகும். கம்பிவழியே வரும் மின்சாரத்தின் அளவு 60 ஹெர்ட்ஸ். அதாவது வினாடியின் 60 இல் ஒருபங்கு நேரத்தில் ஒரு அலைவு (oscillation) இருக்கும். இது 9000 ஹெர்ட்சைத் தாண்டினால் மின்காந்தஅலை கம்பி இல்லாமலேயே பயணிக்கும்.
Electromagnetic spectrum
இவ்வாறு 1 ஹெர்ட்சில் ஆரம்பித்து பலகோடி ஹெர்ட்ஸ் வரையிலான அலைவரிசைகளைத் தான் மொத்தமாக  மின்காந்த அலைக்கற்றை என்கின்றனர் (இதில் சூரிய ஒளியின் அலைவு 477,000,000,000,000 ஹெர்ட்ஸ் ஆகும்). சுருக்கமாக சொல்வதானால், சூரிய ஒளியைக் கண்ணால் காண்கிறோம், அவ்வாறு காண முடியாத மின்காந்த அலைகள் பல உள்ளன. அவற்றை பயன்படுத்திதான் வானொலி, தொலைக்காட்சி, செல்பேசி அனைத்தும் இயக்கப்படுகின்றன.

மின்நச்சுப்புகை 

செயற்கையான மின்காந்தப்புலத்தால் ஏற்படும் மாசுபாட்டினை மின்நச்சுப்புகை (electrosmog) என்று பொதுவாக அழைக்கின்றனர். இதில் ஒன்றுதான் செல்பேசி மாசுபாடு ஆகும்.
மின்நச்சுப்புகை (electrosmog) 
இன்றைய உலகில் மனிதவாழ்க்கை மின்காந்தப்புல மாசுபாட்டிற்கு நடுவில் நடக்கிறது. ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் மின்நச்சுப்புகை சூழ்ந்திருக்கிறது. குறிப்பாக நகர்ப்புரங்கள் மின்நச்சுப்புகை எனும் கடலில் மூழ்கியுள்ளன. கைபேசிக் கருவிகள், செல்பேசிக் கோபுரங்கள், கம்பியில்லாத கணினி இணையத் தொழிநுட்பம் ஆகியவற்றால் மின்காந்தக் கதிர்வீச்சு - மின்நச்சுப்புகை முதன்மையாகத் தாக்குகிறது.

அதேநேரத்தில் இயற்கையான மின்காந்தப் புலம் என்பது மனிதர்களுக்கு புதிதானதல்ல. மனித உடல் அதனை இயற்கையாகவே பயன்படுத்தி வருகிறது. மனித உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் இயற்கையான மின்காந்தப் புலம் இருக்கிறது. உடல்தன்னைத் தானே சீரமைக்கவும் மூளை உடலின் பாகங்களுடன் தொடர்புகொள்ளவும் மின்காந்தப் புலம்தான் பயன்படுகிறது. இவ்வாராக மனித உடலுக்குள் இயற்கையாகவே இருக்கும் மின்காந்தப்புலம் இப்போது செயற்கை மின்நச்சுப்புகையால் பாதிக்கப்படுகிறது.
அதாவது, மனித உடலுக்குள் இருக்கும் மின்காந்தப் புலத்தின் அலைவரிசை வேறு. இப்போது செயற்கையாக செல்பேசிகளால் உருவாக்கப்படும் மின்நச்சுப்புகையின் அலைவரிசை வேறு. செல்பேசி அல்லது செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் இந்த மின்நச்சுப்புகை தன்னிச்சையாக மனித உடலுக்கு ஊடுருவக்கூடியது. இதனால் மனித உடலின் இயல்பான மின்காந்தப்புலம் பாதிப்படைகிறது. பலவிதமான உடல்நல, மனநல பாதிப்புகள் நேருகின்றன.

குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், செல்பேசி கோபுரங்களுக்கு அருகே வசிப்போர், நோயாளிகள், அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் ஆகியோரை மின்நச்சுப்புகை அதிகம் பதிக்கிறது. மறுபுறம் விலங்குகள், பறவைகள், தேனீக்கள், தாவரங்கள் எல்லாமும் மின்நச்சுப்புகையால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

இந்தப் பேராபத்து உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.

தொடர்புடைய சுட்டி:

எச்சரிக்கை: செல்பேசி கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி? செல்பேசி நிறுவனங்கள் மறைக்கும் உண்மைகள்.

செல்பேசிக் கோபுரங்கள்: மாபெரும் ஆபத்து! கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்

வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

எச்சரிக்கை: செல்பேசி கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி? செல்பேசி நிறுவனங்கள் மறைக்கும் உண்மைகள்.

எல்லோரும் செல்பேசியைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை நுகர்வோருக்கு சொல்லாமல் செல்பேசி நிறுவனங்கள் மறைத்து வருகின்றன.

எடுத்துக்காட்டாக,
  • எந்த ஒரு செல்பேசிக் கருவியையும் காதுக்கு மிக அருகில் வைத்து பேசக்கூடாது. 
  • ஒரு நாளில் ஒட்டுமொத்தமாக 18 முதல் 24 நிமிடங்களுக்கு மேல் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது. 
  • குழந்தைகள் செல்பேசியைப் பயன்படுத்தவே கூடாது. 
இதுபோன்ற பல சாதாரண பழக்கங்கள் கடுமையான உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

செல்பேசியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள நச்சு என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

செல்பேசியைக் காதுக்கு அருகில் வைத்து பேசக்கூடாது என்று செல்பேசி நிறுவனங்களே நுண்ணிய எழுத்துகளில் எச்சரிக்கை செய்கின்றன. 
பிளாக்பெர்ரி நிறுவனத்தின் எச்சரிக்கை.

செல்பேசியிலிருந்து வெளியாகும் நுண்ணலைக் கதிர்வீச்சால் (Microwave Radiation) செல்பேசி பயன்படுத்துவோரின் உடல்நலம் பாதிப்படைகிறது என்பது அறிவியல் ரீதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கமோ, செல்பேசி நிறுவனங்களோ இந்த ஆபத்தைக் கட்டுப்படுத்த போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

செல்பேசிக் கதிர்வீச்சினைக் கட்டுப்படுத்த ICNIRP எனப்படும் அமைப்பின் காலாவதியான பரிந்துரைகளே இப்போதும் பின்பற்றப்படுகின்றன. இந்த அமைப்பு ஒரு பொதுஅமைப்பு அல்ல. ஜெர்மனி நாட்டிலுள்ள ஒரு தனியார் கூட்டமைப்பு இதுவாகும். தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் இந்த அமைப்பின் பரிந்துரைகள் நம்பகமானவை அல்ல. எனவே, செல்பேசியைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் காப்பாற்ற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். 

உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ள சில எளிய வழிகள்

பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் செல்பேசிக் கதிர்வீச்சினால் உடல்நலம் பாதிப்படையாமல் தற்காத்துக்குகொள்ள முடியும்:

1. செல்பேசியை நேரடியாகக் காதில்வைத்து பேசாதீர். செல்பேசிக் கதிர்வீச்சு காதையும் தலையையும் தாக்குவது ஆபத்தானதாகும். எனவே காதில் பொருத்தக்கூடிய தலையணி ஒலிவாங்கிக் கருவிகளை (Headset) பயன்படுத்துங்கள்.

- செல்பேசிக் கருவியை விட திறக்கற்றை எனப்படும் புளூடூத் (Bluetooth) கருவிகள் குறைவான கதிர்வீச்சு கொண்டவை என்பதால், குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்ட புளூடூத் பயன்படுத்தலாம். ஆனால், அதனை காதில் அணிந்திருக்கும் போது நிரந்தரமாக இயங்கு (ON) நிலையில் வைக்கக் கூடாது. பேசும்போது மட்டும் புளூடூத்தை இயக்கி மற்ற நேரத்தில் அணைத்துவிட (OFF) வேண்டும்.

- தலையணி ஒலிவாங்கிக் கருவி (Headset), புளூடூத் ஆகியன இல்லாத நேரத்தில் ஒலிபெருக்கியை (Speaker) பயன்படுத்த வேண்டும்.

எக்காரணம் கொண்டும் செல்பேசியைக் காதுக்கு அருகில் வைத்து பேசக்கூடாது.

2. செல்பேசிக் கருவியை கூடுமானவரை உடலில் இருந்து சற்று தொலைவில் இருக்குமாறு வைக்க வேண்டும். தலையணி ஒலிவாங்கி, புளூடூத் போன்றவற்றை பயன்படுத்தும் போதுகூட செல்பேசியை சற்று தொலைவில் இருக்குமாறு வைக்க வேண்டும். ஏனெனில், செல்பேசிக்கும் உடலுக்கும் இடையே சில அங்குல இடைவெளியை ஏற்படுத்தினால் கூட அதனால் பல நூறுமடங்கு கதிர்வீச்சு குறைந்துவிடும்.

- தவிர்க்க முடியாத நிலையில் செல்பேசிக் கருவி உடலோடு ஒட்டிய நிலையில் இருக்குமானால், விசைப்பலகை (keyboard) உள்ள முன்பக்கம் உடலை நோக்கி இருக்குமாறு வைக்க வேண்டும். செல்பேசிக் கருவியின் பின்பக்கத்தில் இருக்கும் அலைவாங்கி (antenna) உடல் பக்கம் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. முடிந்த வரை செல்பேசியில் பேசுவதைக் குறைக்க வேண்டும். குறைவான நேரமே பேச வேண்டும். பேசுவதைக் குறைத்து குறுஞ்செய்தியைப் பயன்படுத்தலாம்.

4. செல்பேசியின் சமிக்ஞை (signal) குறைவாகக் இருக்கும் இடங்களில் செல்பேசியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். சமிக்ஞை குறையும்போது செல்பேசியில் அதிகக் கதிர்வீச்சு வெளியாகிறது.

5. குழந்தைகள் ஒருபோதும் செல்பேசியில் பேசாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவசரக் காலங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் குழந்தைகள் செல்பேசியில் பேசக் கூடாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

- 16 வயதுக்கு கீழானவர்கள் தவிர்க்க முடியாமல் செல்பேசியைப் பயன்படுத்த நேர்ந்தால் அவர்கள் குறுஞ்செய்தி அனுப்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும். குழந்தைகள், சிறுவர்களை செல்பேசிக் கதிர்வீச்சு அதிகமாகப் பாதிப்பதால் இக்கட்டுப்பாடுகள் அவசியம்.

6. தூங்கும் போது தலைக்கு அருகிலோ, தலையணைக்கு கீழோ செல்பேசியை ஒருபோதும் வைக்காதீர். அவ்வாறே, தூங்குவதற்கு முன்பு கைபேசியில் பேசாதீர். இவற்றால் தூக்கம் கெடும்.

7. கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் உறைகள், ஒட்டிகள், அல்லது பாதுகாப்பு கவசங்கள் கொண்டு செல்பேசிக் கருவியை மறைக்காதீர். இவற்றால் கதிர்வீச்சு அதிகமாகும்.

8. வீடு அல்லது அலுவலகத்தில் முடிந்தவரை சாதாரண கம்பிவழி தொலைபேசியைப் பயன்படுத்துங்கள்.

9. கருவுற்ற பெண்கள் செல்பேசியைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்கு அருகில் செல்பேசியை வைக்கக் கூடாது. பச்சிளம் குழந்தைகளிடம் செல்பேசியை விளையாடக் கொடுக்கக் கூடாது.

10. செல்பேசியை பயன்படுத்திக் கொண்டே ஒருபோதும் வாகனம் ஓட்டக் கூடாது. இது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு இணையான கொடுஞ்செயலாகும்.
தொடர்புடைய சுட்டி: