Pages

செவ்வாய், ஏப்ரல் 30, 2013

மருத்துவர் இராமதாசு அய்யா விழுப்புரத்தில் கைது!

"விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அப்பாவி வன்னியர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு வன்னியர்கள் மீதே 1500 வன்னியர்கள் மீது வன்கொடுமை வழக்கு போடப்பட்டுள்ளது. ஆனால், வன்னியர்கள் தாக்கப்பட்டது குறித்தும் வாகனங்கள் உடைக்கப்பட்டது குறித்தும் ஒரே ஒரு வழக்குக் கூட போடப்படவில்லை.

இதனைக் கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு மருத்துவர் அய்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்ட போது, அதற்குப் பதிலாக மதியம் இரண்டு மணிக்கு தொடர்வண்டி நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என திங்கள் கிழமை மதியம் காவல்துறையினர் அனுமதிக் கடிதம் வழங்கினர். பின்னர் இரவு அனுமதி மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற மருத்துவர் அய்யா அவர்களும் அவருடன் நான்காயிரம் பேரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்."


தொடர்புடைய சுட்டி:

மரக்காணம்: காவல்துறையின் கட்டுக்கதையை நம்ப வேண்டாம் - தமிழக அரசே, நீதி விசாரணை நடத்து!

காவல்துறையின் கட்டுக்கதையை நம்ப வேண்டாம்: நீதி விசாரணை நடத்துக! - மருத்துவர் இராமதாசு அறிக்கை: "மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க வந்த பா.ம.க. தொண்டர்கள் மீது மரக்காணம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு நடத்திய கொலைவெறித் தாக்குதல் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கவனஈர்ப்புதீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன்மீது விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் அவர்கள் மரக்காணம் பகுதியில் நடந்தது என்ன? என்பதை அறியாமல் நடந்த வன்முறைகளுக்கு எல்லாம் வன்னிய சமுதாயத்தினர் தான் காரணம் என்பதைப் போல குற்றஞ்சாற்றியிருக்கிறார்.

மரக்காணத்தில் நடந்தது என்ன? வன்முறையை தூண்டி, அரங்கேற்றியவர்கள் யார்? என்பதை எல்லாம் விசாரித்து உண்மை என்ன என்பதைக் கண்டறிந்து, அதை சட்டப்பேரவை மூலமாக மாநில மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய முதலமைச்சர் அவர்கள், காவல்துறையினர் அளித்த கட்டுக்கதை களின் தொகுப்பான அறிக்கையை அப்படியே வாசித்திருப்பது மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

மரக்காணம் வன்முறைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் முதல் காரணம் என்றால், அவர்களுக்கு துணை போன விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் தான் அடுத்த காரணம் என்று ஆரம்பத்திலிருந்தே நான் கூறி வருகிறேன். மாநாட்டிற்கு வரும் வன்னியர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று மரக்காணத்தில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், மற்ற கட்சிகளைச் சேர்ந்த தலித் நிர்வாகிகளும் சதித் திட்டம் தீட்டியிருந்தனர். 

இதை அறிந்த அப்பகுதி பா.ம.க.வினர், தாக்குதலைத் தடுக்க பாதுகாப்பை வலுப்படுத்தும்படி காவல்துறை உயரதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்திருந்தால் சிறு வன்முறை கூட ஏற்படாமல் தடுத்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறி விட்ட காவல்துறையினர் வெறும் 2 காவலர்களை மட்டுமே பாதுகாப்புக்கு நிறுத்தியது தான் வன்முறைக்கு வழி ஏற்படுத்தியது.

மரக்காணத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது, அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி, மாநாட்டிற்கு வந்த வாகனங்களை தொடர்ந்து செல்ல அனுமதித்து இருந்தால் நிலைமை சீரடைந்திருக்கும். ஆனால் காவல் துறை கண்காணிப்பாளரோ தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டு,  மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை திருப்பி அனுப்பினார்.

அது தான் வன்னியர்களின் வாகனங்கள் அதிக அளவில் தாக்கப்படுவதற்கும், அரசு பேரூந்துகள் விடுதலை சிறுத்தைகளால் தீயிட்டு எரிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. கும்பகோணம் விவேக், அரியலூர் செல்வராஜ் ஆகிய இரு வன்னியர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் செல்வராஜ் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்த போதும், அவர்களின் மரணத்தை கொலை என்று பதிவு செய்யாமல், விபத்து என காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் கூறியவாறு, மரக்காணத்தில் 200&க்கும் மேற்பட்ட தலித்துகள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர் - சாலையில் கற்களையும், கட்டைகளையும் போட்டு பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர். மரக்காணம் கலவரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எண்ணற்ற குற்றங்களை செய்திருக்கும்போதிலும்,  முதலமைச்சர் அவர்களே ஒப்புக்கொண்டுள்ள இந்த குற்றத்திற்காகக் கூட அவர்கள் மீது வழக்குத் தொடரப்படவில்லை; ஆனால், எந்தத் தவறும் செய்யாத வன்னியர்கள் மீது 1500 க்கும் அதிகமான வழக்குகள் தொடரப் பட்டுள்ளன.

இதற்கெல்லாம் மரக்காணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பணியாற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த காவல் துறை அதிகாரிகள் துணை போயிருக்கினறனர். இவ்வாறு தொடக்கம் முதலே விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு சாதகமாகவும், கடமை தவறியும் செயல்பட்ட காவல்துறையினர் தான் தங்களது தவறுகளை மறைப்பதற்காக முழுக்க முழுக்க வன்னிய மக்கள் மீது பழிசுமத்தி அறிக்கை தயாரித்துக் கொடுத்துள்ளனர்.  காவல்துறை அளித்த அறிக்கையை முதலமைச்சர் அவர்களும் அப்படியே படித்திருக்கிறார்.  மரக்காணம் வன்முறைக்கு காவல்துறையினரும் ஒரு முக்கிய காரணம் என்று நான் குற்றம் சாட்டி வரும் நிலையில், அவர்கள் தரப்பு வாதத்தையே பொது நியாயமாக முன்வைக்க முதலமைச்சர் முயல்வது சரியல்ல.
மரக்காணம் பகுதியில் நடந்தது என்ன என்பதை நடுநிலையான காவல்துறை உயரதிகாரிகளைக் கொண்டோ அல்லது வேறு ஆதாரங்களின் மூலமாகவோ முதலமைச்சர் அவர்கள் விசாரித்திருந்தால் உண்மை வெளிவந்திருக்கும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியதன் மூலம் வன்னிய மக்கள் மீது அவரையும் அறியாமலேயே பெரும் பழியை சுமத்தியிருக்கிறார். இப்போதும் காலம் கடந்து விடவில்லை. நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போன்று மரக்காணம் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கும், கலவரத்தின் பின்னணி குறித்து பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணைக்கும் ஆணையிட்டால், அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வர முடியும். 

மரக்காணம் கலவரத்தில் உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைக்க வேண்டும் என்ற அக்கறை முதலமைச்சர் அவர்களுக்கு இருந்தால், உடனடியாக இதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

வன்னியர்களை வெட்டலாம், படுகொலை செய்யலாம் - அது குற்றமே இல்லை! தலித் மீது சிறு துரும்பு பட்டாலும் அது மகா பாவம்: மனுவின் மறுபதிப்பாகும் தலித் ஆதரவு!!

மரக்காணத்தில் இரண்டு வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கடுமையாக தாக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர்களில் பலர் வழக்கே பதிவு செய்யாமல் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

திட்டமிட்டு ஒரு கொடூர தாக்குதலை அரங்கேற்றியக் கூட்டம் இப்போது வன்னியர்களை குற்றவாளிகள் என்கிறது. இது என்ன புது மனுதர்மமா?
சிறுவன் விவேக் படுகொலை
வன்னியர்களை வெட்டலாம், படுகொலை செய்யலாம் - அது குற்றமே இல்லை! ஆனால் தலித் மீது சிறு துரும்பு பட்டாலும் அது மகா பாவம் என்கிறது அரசியல் மற்றும் பத்திரிகை சாதிவெறிக் கூட்டம். மனுவின் மறுபதிப்பாகிறது தலித் ஆதரவு சாதிவெறி!

தலித் ஆதரவு சாதிவெறி கொடூரம் இதோ:

மரக்காணம் அகரம் காலனியில் தலை, வலது கை, முகத்தில் வெட்டப்பட்ட வன்னியர் லட்சுமணன்.
கையில் வெட்டுபட்ட விழுப்புரம் மாவட்ட வன்னியர்
தலையில் வெட்டப்பட்ட வன்னியர் கணேசன்
அகரம் காலனியில் வன்னியர்களைத் தாக்கிவிட்டு ஓடும் வன்முறைக் கூட்டம்
 அகரம் காலனியில் வன்னியர்களை தாக்க வரும் வன்முறைக் கூட்டம்
வன்னியர்களை தாக்க வரும் வன்முறைக் கூட்டம்
வன்னியர்களை தாக்க வரும் வன்முறைக் கூட்டம்

நாதியற்று போனார்களா வன்னியர்கள்?

மரக்காணம் பகுதியில் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் சிலர் இரத்தபாசத்தால் சதிகாரர்களுடன் கூட்டு சேர்ந்த வன்னியர்களைத் தாக்கியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் எனும் இளைஞரை மரக்காணம் அருகே கழிக்குப்பம் எனும் இடத்தில் கடத்திச்சென்று கொலை செய்தனர். அதுமட்டுமல்லாமல், அவரது கைபேசியில் செல்வராஜ் குடும்பத்தினரை அழைத்து "நாங்கள்தான் கொலைசெய்தோம். இனி இப்படித்தான் செய்வோம். முடிந்தால் பிணத்தை வாங்கிச்செல்லுங்கள்" என்று மிரட்டியுள்ளனர். இப்போதும் அந்த கைபேசி குற்றவாளிகள் வசம்தான் இருக்கிறது. (இதுகுறித்து கொலைசெய்யப்பட்ட செல்வராஜின் தம்பி மரக்காணம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை)

இந்நிலையில், வன்னியர்களிடம் ஓட்டுப்பொறுக்க வரும் தமிழ்நாட்டின் அத்தனை அரசியல் கட்சிகளும், மனசாட்சியை அடகுவைத்துவிட்டு வன்னியர்கள் மீதே குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றன.

'வன்னியன் ஓட்டு மட்டும் இனிக்கும், வன்னியன் உரிமைக் கேட்டால் கசக்கும்' என்கிற அரசியல் கட்சிகள் உள்ள தமிழ் நாட்டில் - 'ஐநூறு ரூபாய் நோட்டுக்கும் அரை பாட்டில் சாராயத்துக்கும்' ஓட்டுப்போடும் கூட்டமாக வன்னியப் பேரினம் இருப்பதுதான் இந்த கொடூர நிலைக்கு காரணம்.

இனியும் பொறுப்பது ஏமாளித்தனம்: ஓரணியில் திரளவும் ஓட்டுக்கட்சிகளை விரட்டவும் இதுவே தக்க தருணம்.

மறக்க மாட்டோம். மன்னிக்க மாட்டோம். மரக்காணத்தில் வன்னியர்களைக் கொலைசெய்துவிட்டு, பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீதே பழிசுமத்தும் கேடுகெட்ட அரசியல் கட்சிகளுக்கு வன்னிய மக்கள் பாடம் புகட்டும் காலம் வெகுவிரைவில் வரும்.

"மரக்காணம் கலவர குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம்" -மருத்துவர் இராமதாசு அறிக்கை


"மாமல்லபுரத்தில் கடந்த 25 -ஆம் தேதி நடைபெற்ற சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்க வந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மீது கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள மரக்காணத்தில் திட்டமிட்டு மிகக்கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. 

இத்தாக்குதலில் கும்பகோணம் விவேக், அரியலூர் செல்வராஜ் என்ற இரு அப்பாவி வன்னிய இளைஞர்கள் வெட்டியும், அடித்தும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இருவரையும் படுகொலை செய்தது விடுதலை சிறுத்தைகள் கும்பல் தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும்படி கோரியும் இதுவரை  எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

மரக்காணம் கலவரம் தொடர்பாக ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. சாதிவெறி வன்முறை கும்பல் திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் ஒரு சிலர் மட்டுமே காயமடைந்ததாக கருதப்பட்டது. ஆனால், நூற்றுக்கணக்கான அப்பாவி வன்னியர்களை வன்முறைக் கும்பல் அடித்தும், வெட்டியும் காயப்படுத்தியிருப்பதாகவும், உயிருக்கு பயந்து தப்பிச் சென்ற அவர்கள் தங்களது சொந்த ஊர்களில் தனியார் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்றுள்ளனர் என்று தகவல் கிடைத்திருக்கிறது. 
மரக்காணம் கலவரம் உள்ளூர் அளவில் திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் வகுத்துக் கொடுத்த வன்முறைத் திட்டத்தின் அடிப்படையில் தான் அப்பாவிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்தெல்லாம் முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் திட்டமிட்டு மற்ற சமுதாயத்தினரை தாக்குதல், பின்னர் தங்களது வீடுகளை தாங்களே தாக்கிக்கொண்டு இழப்பீடு பெறுதல் போன்ற செயல்களை அனுமதிப்பதும், இவர்களை திருப்தி படுத்துவதற்காக மற்ற சமுதாயங்களைச் சேர்ந்த அப்பாவிகள் மீது பொய்வழக்குப் போட்டு கைது செய்வதும் தொடர்ந்தால் தமிழகத்தில் சமூக நல்லிணக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.
எனவே, மரக்காணம் கலவரத்தில் அப்பாவிகள் இருவரை படுகொலை செய்ததுடன் நூற்றுக்கணக்கானோரை காயப்படுத்தியும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியும் வன்முறை வெறியாட்டம் நடத்திய கும்பல் மீதும், அதற்கு சதித் திட்டம் வகுத்துத் தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும்; இக்கலவரத்தின் பின்னணி மற்றும் இதற்கு ஆதரவாக இருந்தவர்களை அடையாளம் காண்பதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 30 -ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரத்தில் எனது தலைமையில் மிகப்பெரிய அளவில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் மே 1-ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் வட்டத்தலைநகரங்களிலும், புதுவையிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும். இதில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்."
 

சனி, ஏப்ரல் 27, 2013

மரக்காணத்தில் யாரை யார் அடித்தது? முற்போக்கு வேடதாரிகளின் கவனத்திற்கு!

மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழாவுக்கு வந்த இளைஞர்களில் இரண்டு பேர் மரக்காணம் அருகே கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டின் முற்போக்கு வேடதாரிகளும் பத்திரிகைகளும் பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீதே குற்றத்தைச் சுமத்தும் இழி செயலில் ஈடுபட்டுள்ளனர். (இதுகுறித்து மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் அறிக்கை)

அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கான உரிமை எல்லோருக்கும் உண்டு. அந்த வகையில் வன்னியர்களின் இளைஞர் பெருவிழா நடத்தப்பட்டது. ஆனால்,தமிழக அரசின் மூலமாகவும் நீதிமன்ற வழக்குகள் மூலமாகவும்  மாநாட்டைத் தடுக்க ஒரு கூட்டம் முயற்சித்தது. அத்தனைத் தடைகளையும் உடைத்து மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது.
மாபெரும் மாநாடு 
இந்த மாநாட்டிற்கு எப்படியாவது குந்தகம் விளைவிக்க வேண்டும் என்று துடித்த ஒரு கூட்டம் அதற்காக திட்டமிட்டு மரக்காணத்தில் கலவரத்தை அரங்கேற்றியது மட்டுமல்லாமல், இரட்டைப் படுகொலைகளையும் செய்து, இப்போது வன்னியர்கள் மீதே குற்றச்சாட்டை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றனர்.

யாரை யார் தாக்கியது?

கீழே உள்ள காணொலியில் வெளியூர்களில் இருந்த மாமல்லபுரம் நோக்கி செல்லும் வன்னியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தெளிவாக பதிவாகியுள்ளது.

அப்பாவி வன்னியர்கள் மீது தாக்குதல்


இந்தக்கலவரத்தில் அரியலூரைச் சேர்ந்த செல்வராஜ், குடந்தையை சேர்ந்த விவேக் ஆகிய இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 1512 வன்னியர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழக அரசு.

மரக்காணத்தில் கலவரம் ஏன் நடந்தது?

மரக்காணத்தில் வன்னியர்களுக்கு எதிரான கலவரத்தை திட்டமிட்டு நடத்தி படுகொலையும் செய்தக் கூட்டம் இப்போது கலவரத்துக்கு வன்னியர்கள்தான் காரணம் என்று கற்பனையான கட்டுக்கதைகளைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளில் இருந்தும் எல்லா சாலைகளிலும் வன்னியர்கள் மாமல்லபுரம் நோக்கி வந்தனர். வன்னியர்களுக்கு கலவரம் செய்வது நோக்கமாக இருந்திருந்தால் எல்லா பகுதியிலும் கலவரம் நடந்திருக்க வேண்டும். ஆனால், மரக்காணம் தவிர வேறு எங்குமே அது போல நடக்கவில்லை.

ஒரே ஒரு இடத்தில் மட்டுமே நடந்த இக்கலவரத்துக்கு இரண்டு விதமான கட்டுக்கதைகளை பத்திரிகைகள் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றன. (அதாவது பத்திரிகைகளில் ஊடுருவி இருக்கும் வன்னியர் எதிர்ப்புக்கூட்டம் காழ்ப்புணர்ச்சியுடன் பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீது சேற்றைப் பூச முயற்சிக்கிறது)

"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்களுக்கு" என்பது போல, வன்னிய எதிரிகளின் பச்சைப் பொய் எட்டு மணி நேரம் கூட நீடிக்கவில்லை. பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால், அவசரத்தில் ஆளுக்கொரு பொய்யை மாற்றிச் சொல்லி அம்பலப்பட்டு நிற்கிறது சதிகாரர்கள் கூட்டம். அதனைக் கீழே காண்க:

கட்டுக்கதை 1: மாநாட்டுக்கு சென்ற வாகனம் இருசக்கர ஊர்தி மீது மோதியதே காரணம்.

மாமல்லபுரம் வன்னியர் மாநாட்டுக்கு சென்ற பேருந்து ஒன்று, இரண்டு வாலிபர்கள் சென்ற இருசக்கர ஊர்தி மீது மோதியதாம். இதனால் கலவரம் மூண்டதாம். இந்த செய்தி டெக்கன் க்ரோனிகல் மற்றும் தினத்தந்தி ஆகிய நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.

"two youths identified as Ramesh and Hariharan were going on a two-wheeler towards Marakanam when a bus carrying PMK volunteers and bound for Mamal­lapuram reportedly dash­ed against the vehicle in­j­u­ring them. As news ab­out the incident spr­e­ad, a group of people blo­cked the East Coast Road resu­lting in vehicles piling up on the arterial road"   - Police fire in air on ECR Deccan Chronicle Saturday, Apr 27, 2013

கட்டுக்கதை 2: வன்னியர்கள் குடித்துவிட்டு பீர்பாட்டிலை அடித்ததே கலவரத்துக்கு காரணம்.

"பாமகவினர், வேன் மீது அமர்ந்து பீர் குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பீர் பாட்டிலை நின்று கொண்டிருந்தவர்கள் மீது வீசியுள்ளனர். இதனால் பொதுமக்கள் திரண்டு சாலைக்கு வந்தனர்." என்று தி இந்து மற்றும் தினகரன் நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 "the violence erupted around Thursday noon when a small group of Vanniyar Sangam members were drinking near the social forest on the side of ECR. When they were questioned, a larger group assembled immediately and entered the Kattayantheru area of the Marakkanam Colony through the forest armed with sticks and petrol bombs" - Dalits lose certificates, valuables in violence unleashed by drunken mob, The Hindu, April 27, 2013

- இப்படி ஒரே கலவரத்துக்கு இரண்டு விதமான கட்டுக்கதைகளை கட்டமைத்துள்ளனர்.

இதிலும் தி இந்து ஒருபடி மேலே போய், 'மாட்டுக்கொட்டகையைக் கூட விடவில்லை' என்று எழுதியுள்ளது. (பசுமாட்டின் மீது தி இந்துவுக்கு உள்ள பாசம் புரிந்துகொள்ளக் கூடியதுதான்). இதனை நிரூபிக்க 'எரிந்த கொட்டகைக்குள் ஒரு எரியாத மாட்டை படுக்க வைத்து' புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தைக் கீழே காண்க.

எரிந்த கொட்டகைக்குள் ஒரு எரியாத மாடு

தேவர் ஜெயந்தியிலும் தர்மபுரியிலும் படித்த பாடம்.

தேவர் குருபூஜைக்கு சென்று வந்த அப்பாவிகளை வழிமறித்து கொலைசெய்து, ருசிகண்ட கூட்டம் இப்போது அதனை மரக்காணத்திலும் அரங்கேற்றியுள்ளது.

தர்மபுரியில் சிறிய கொட்டகைகளைப் பிரித்துப் போட்டு உள்ளே வைத்திருந்த ஏராளமான நகை பணத்தைக் காணவில்லை என்கிற கட்டுக்கதையைக் கட்டமைத்து அரசாங்கத்திடம் பணம் பறித்தது போல - இப்போது மரக்காணத்திலும் நகையைக் காணவில்லை என்று நாடகம் ஆடுகின்றனர். (அரசாங்கத்திடம் பணம் பறிக்க இப்படி ஒரு வெட்கம்கெட்ட பிழைப்பு)

"வன்னியனை அடித்துவிட்டு வன்கொடுமை வழக்கா?

வன்னியனை  கொலைசெய்துவிட்டு வன்னியனுக்கே தண்டனையா?

இதுதான் நீதியா? இதுதான் தர்மமா?"

வெள்ளி, ஏப்ரல் 26, 2013

"மரக்காணம் துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம்: கொலையாளிகளை கைது செய்ய வேண்டும்"  

"மரக்காணம் துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம்: கொலையாளிகளை கைது செய்ய வேண்டும்" - மருத்துவர் இராமதாசு அறிக்கை

"மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்ற வந்தவர்கள் மீது கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள மரக்காணம் என்ற இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கும்பல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. இத் தாக்குதலில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இதுதவிர, காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியர்களின் வலிமையை பறைசாற்றும் வகையில் அமையும் என்பதால், இந்த விழாவை நடத்த விடக் கூடாது என்பதற்காக பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. வன்முறையை நடத்துவதையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கும்பலின் தலைவரும் இந்த மாநாட்டிற்கு வரும் வன்னிய மக்கள் மீது தாக்குதல் நடத்தும்படி கடந்த ஒரு வாரமாக அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் மூலமாக தூண்டி வந்தார். இந்த பின்னணியில் தான் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் மரக்காணம் பகுதியில் வன்னியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

மாமல்லபுரம் விழாவில் பங்கேற்பதற்காக வந்த மத்திய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மரக்காணம் அருகே சாலையோர நிழலில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அந்தப்பகுதியில் தாழ்த்தப் பட்ட மக்கள் அதிகம் வாழ்கிறார்கள் என்பதோ அல்லது கடந்த 2002-ஆம் ஆண்டில் அந்த பகுதியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையில் வன்னியர் இருவர் படுகொலை செய்யப்பட்டனர் என்ற உண்மையோ வெளியூரிலிருந்து வந்த அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர், அவர்களை வம்புக்கு இழுத்து தாக்கியுள்ளனர்.

அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த இன்னொரு கும்பலும் உருட்டுக்கட்டை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொடூரமான தாக்குதலை நடத்தியதுடன், அந்த வழியே வந்து கொண்டிருந்த வன்னியர்களின் வாகனங்களையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். அதேபோல் டி.என் 33- ஜே 9966 என்ற பதிவு எண் கொண்ட இரு சக்கர ஊர்தியில் வந்த சிலர் புதுப்பட்டு அய்யனார் கோவில் அருகே மாநாட்டுக்கு வந்தவர்களின் வாகனங்களை மறித்து, மரக்காணம் அருகே தாக்குதல் நடத்தப்போவதாக கூறியுள்ளனர்.

அந்த கும்பலை சேர்ந்தவர்களில் இன்னொரு பிரிவினர் அரசுப் பேரூந்துகள் உள்ளிட்ட 6 வாகனங்களை, பத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளையும் தீயிட்டு கொளுத்தி விட்டு, அந்தப் பழியை மாநாட்டிற்கு வந்த அப்பாவிகள் மீது போட்டுள்ளனர். அவ்வழியே வந்தவர்கள் அனைவரும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு மரக்காணம் பகுதியை பற்றியோ, அங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளைப் பற்றியோ எதுவுமே தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தால் அவர்கள் அங்கு நின்றிருக்கவும் மாட்டார்கள்; வன்முறை கும்பலின் தாக்குதலுக்கும் ஆளாகியிருக்க மாட்டார்கள். 

ஆனால், திட்டமிட்டு தாக்குதலை நடத்திய கும்பல் பழியை அப்பாவிகள் மீது போட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலைமறியலிலும் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலைமை கட்டுப்படுத்தாமல், வெளியூரிலிருந்து மாநாட்டிற்காக வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் வீரமணி, ஞானவேலு, சீனு, ஏகாம்பரம் ஆகிய 4 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, வன்முறை கும்பலின் கொலைவெறித் தாக்குதலில் கூனிமேடு என்ற இடத்தில் காயமடைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் என்ற இளைஞரும், கழிக்குப்பம் என்ற இடத்தில் காயமுற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற இளைஞரும் உயிரிழந்துவிட்டனர். ஆனால், இவர்கள் விபத்தில் இறந்ததாகக் கூறி வழக்கை முடித்து, வன்முறையாளர்களைக் காப்பாற்ற காவல்துறை முயல்கிறது.

இந்த வன்முறைகள் அனைத்தும் விடுதலைச் சிறுத்தைகள் கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருகிறது. அந்த கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமஜெயம் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தான் இதற்கான சதித்திட்டம் கடந்த சில நாட்களாக தீட்டப்பட்டிருக்கிறது. கடந்த 2002-ஆம் ஆண்டிலும் இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சதித் திட்டம் தீட்டப்பட்டு , அதன் அடிப்படையில் மாமல்லபுரம் விழாவுக்கு வந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மகிழுந்து ஒன்று கொளுத்தப்பட்டு, அதிலிருந்த இருவர் கொல்லப்பட்டனர்.

இப்போதும் அங்கு தயாரிக்கப்பட்ட பெட்ரோல் குண்டுகளைக் கொண்டு தான் வாகனங்களும், குடிசைகளும் எரிக்கப்பட்டிருக்கின்றன. வன்முறை கும்பல் சதித் திட்டம் தீட்டுவதை அறிந்த அப்பகுதி பா.ம.க. நிர்வாகிகள் இதுபற்றி காவல்துறை உயரதிகாரிகளிடம் கூறி போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி கோரியுள்ளனர்.

அதனடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால் மரக்காணம் பகுதியில் சிறு சலசலப்பு கூட ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம். ஆனால், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டிருக்கிறார். பதற்றமான அந்தப் பகுதியில் வெறும் இரண்டு காவலர்களை மட்டுமே பாதுகாப்புக்கு நிறுத்தியிருக்கிறார். 10 பேருக்கும் குறைவான கும்பல் சாலை மறியலில் ஈடுபட்டபோது கூட , காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு, அவர்களை அப்புறப்படுத்தி காவல்துறை பாதுகாப்புடன் மாநாட்டு வாகனங்களை தொடர்ந்து செல்ல அனுமதித்திருந்தால், பெரிய அளவில் வன்முறையோ அல்லது துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலையோ ஏற்பட்டிருக்காது. 

ஆனால், அவ்வாறு செய்யாமல் காவிரி பாசன மாவட்டங்களில் இருந்து வந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பியதும், நிலைமையை சரியாக கையாளாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் கடுமையாக கண்டிக்கத் தக்கது.

சுருக்கமாக சொல்லவேண்டுமானால், மரக்காணம் கலவரத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கும்பல் ஒரு காரணம் என்றால், அதுபற்றி தெரிந்திருந்தும் அதை தடுக்காமலும், நிலைமையை சரியாக கையாளாமலும் துணை போன விழுப்புரம் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் தான் இன்னொரு காரணம் . இந்த வன்முறைகள் குறித்தும், இதை காவல்துறை கையாண்ட விதம் குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநாட்டிற்கு வந்த அப்பாவிகள் இருவரை அடித்துக் கொன்றதுடன், பொதுச்சொத்துக்களுக்கும், குடிசை வீடுகளுக்கும் தீ வைத்து, அப்பழியை பா.ம.க.வினர் மீது போட்ட விடுதலை சிறுத்தைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக, எந்த தவறும் செய்யாத பா.ம.க.வினர் 1050 பேர் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."

சனி, ஏப்ரல் 13, 2013

அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!

"பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கடந்த 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதேபோன்று அரசியல் சட்டத்தின் 161- வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மூவரின் தூக்கு தண்டனையை தமிழக ஆளுனர் ரத்து செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றுவதன் மூலம் 3 தமிழர்களையும் காப்பாற்ற முடியும்" என மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் கோரியுள்ளார்கள்.

இதே கோரிக்கையை தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எழுப்பியுள்ளன. இந்த சிக்கலின் பின்னணியை விளக்கும் வகையில் எனது பதிவு ஒன்றிணை (03.9.2011) கீழே அளித்துள்ளேன். 

அவசரம்: 3 பேரின் தூக்கு தண்டனையை எதிர்ப்போர் கவனத்திற்கு!

ராசீவ் காந்தி கொலைக்குற்ற வழக்கில் தூக்குதண்டனையை எதிர்நோக்கியுள்ள மூன்று பேர் காப்பற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டில் ஒரு எழுச்சியாக உருவெடுத்துள்ளது. இதற்காக அரசியல் ரீதியான வேறுபாடுகள் கைவிடப்பட்டு,  வழக்கத்திலில்லாத வகையில் எல்லோரும் ஒருகுரலாக ஒலிக்கும் சூழலும் ஓரளவுக்கு கனிந்துள்ளது.

இந்த நம்பிக்கையளிக்கும் சூழலில் - இரண்டு வகையான முன் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1. சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடி தூக்கு தண்டனையை ரத்து செய்வது,
2. அரசியல் ரீதியான முயற்சிகள் மூலமாக தண்டனையைக் குறைப்பது,

இந்த இரண்டு முயற்சிகளில் எது வெற்றி பெற்றாலும் - மூன்று உயிர்கள் காப்பாற்றப்படும். இந்த இரண்டு வழிகளில் எளிதான, உடனடி பலன் கிடைக்கும் வழி என்பது "அரசியல் ரீதியான" தீர்வாகவே இருக்கும். அதிலும், அரசியல் ரீதியான தீர்வு என்பது - நீண்டகால நோக்கில் தமிழ் நாட்டிலிருந்து மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கவும் வழிவகுக்கக்கூடும்.
அரசியல் ரீதியிலான ஒரு தீர்வினை முன்வைத்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டியது ஒரு அவசியத் தேவை எனக் கருதலாம். அது ஏன் என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்:

1. "தன்னால் முடியாது" என்கிற நிலைபாட்டிலிருந்து முதல்வர் மாறவேண்டும்.

கடந்த 29.8,2011 அன்று சட்டமன்றத்தில் ஓர் அறிக்கையை முதலமைச்சர் வாசித்தார். அதில் "5.3.1991 நாளிட்ட கடிதத்தில் மத்திய உள்துறை அமைச்சரகம் - மரண தண்டனை குறித்த நிகழ்வுகளில் அதன் தொடர்பான கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1) - இன்படி கட்டளையிடுகிறது" என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்லாமல், "மூன்று நபர்களின் கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்தவித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சரின் அந்த அறிக்கையை இங்கே காண்கhttp://www.tn.gov.in/seithi_veliyeedu/pr29Aug11/pr290811_110.pdf

இதற்கு மறுநாள் 30.8.2011 அன்றே, "மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது" என்கிற தீர்மானத்தை தமிழக முதல்வர் தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார். மேலும் "இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது. இது இந்திய அரசினை தார்மீக சிக்கலில் ஆழ்த்தக்கூடியது. தூக்குதண்டனையைத் தடுக்க வேண்டும் என்கிற தமிழர்களின் போராட்டத்திற்கு இந்த தீர்மானம் வலு சேர்க்கக் கூடியது. அதே நேரத்தில் இந்த தீர்மானம் சட்டப்படியாக கட்டுப்படுத்தக் கூடியது அல்ல என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு அடிப்படையான விடயத்தை கவனிக்கத் தவறக்கூடாது. அது, தமிழக முதல்வர் குடியரசு தலைவரைக் கேட்டுக்கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றினாலும் கூட, தனக்கு அதிகாரம் இல்லை என்கிற நிலைபாட்டினை அவர் மாற்றிக்கொள்ளவில்லை என்பதுதான். தமிழக முதல்வருக்கு அதிகாரம் இல்லை என்கிற கருத்து மிகத் தவறான வாதம் ஆகும். இது மாற்றப்பட்டாக வேண்டும்.

2. தமிழக முதல்வருக்கு அதிகாரம் உண்டு. எப்படி?

தூக்கு தண்டனை கைதியின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தால், அதன்பிறகு "இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1) - இன்படி மத்திய அரசு கட்டளையிடுகிறது" என்கிறார் முதல்வர்.

மத்திய உள்துறை அமைச்சரகம் தனது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு அனுப்பிய ஒரு உத்தரவைத்தான் முதலமைச்சர் குறிப்பிடுகிறார். அரசியலமைப்பின் 257 (1) என்பது "மத்திய அரசின் நிருவாக வரம்பில் மாநில அரசு தலையிடக்கூடாது" என்கிற பிரிவாகும். இதற்கும், அரசியலமைப்பின் 161 ஆம் பிரிவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஏனெனில், 161 ஆம் பிரிவு மாநில அரசின் தனிப்பட்ட இறையாண்மை அதிகாரம் ஆகும். இதற்கும் மத்திய அரசின் நிருவாகத்திற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லை.

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரதாப் சிங் கைரோனை கொலைசெய்த குற்றத்திற்காக தூக்குதண்டனை அளிக்கப்பட்ட கைதி தயா சிங். இவரது கருணை மனுவை ஆளுநரும் நிராகரித்து, குடியரசுத் தலைவரும் நிராகரித்த பின்னர் அவர் இரண்டாம் முறையாக ஆளுநரிடம் கருணை மனு கொடுத்தார். அந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் அரியானா அரசு மத்திய அரசியம் விளக்கம் கேட்டது. கருணை மனு மீது முடிவெடுக்க இரண்டு ஆண்டுகள் தாமதம் ஆனதால் - தயா சிங்கின் கடிதத்தை வழக்காக எடுத்துக்கொண்டது உச்ச நீதி மன்றம்.

உச்சநீதி மன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் 5.3.1991 நாளிட்ட கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சரகம் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பியது. அக்கடிதத்தில்தான் "குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை" என்கிற கருத்தை திணித்தது மத்திய உள்துறை அமைச்சகம். அந்தக் கடிதத்தைதான் சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டி "எந்தவித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை" என்று கூறினார் தமிழக முதலமைச்சர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் - எந்த தயா சிங் வழக்கிற்காக இக்கடிதத்தை மத்திய அரசு எழுதியதோ, அதே வழக்கில் அக்கடிதத்தை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பஞ்சாப் முன்னாள் முதல்வர் கொலைக் குற்றவாளியின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தும் 24.4.1991 அன்று உத்தரவிட்டது. ஆக, மத்திய அரசின் கடிதம் செத்துப்பிறந்த குழந்தையைப் போன்றதே ஆகும். அதற்கு அதிகாரம் எதுவும் இல்லை.

அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: Daya Singh v Union of India, 1991 (3) SCC 61

மன்னிப்பு - ஒரு வானளாவிய அதிகாரம்!

இந்தியாவில் நீதிமன்றங்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் மட்டும்தான் உண்டு. அந்த தண்டனையை நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது. தண்டனையை நிறைவேற்றுவது அல்லது அதனை மன்னிப்பது அரசாங்கத்தின் அதிகாரம் ஆகும். இந்த மன்னிப்புக்கும் நீதிமன்ற தண்டனைக்கும் எந்த தொடர்பும் இல்லை.

குற்றம் எதுவானாலும் விசாரணை தொடங்கும் முன்பு, விசாரணை நடக்கும் போது, தண்டனை அளிக்கப்பட்ட பின்பு என எப்போது வேண்டுமானாலும் அரசாங்கம் எந்த ஒரு குற்றவாளியையும் மன்னிக்கலாம். இது ஒரு உச்சபட்சமான அதிகாரம் ஆகும்.
இந்திய அரசியல் அமைப்பின் 72 ஆம் பிரிவில் குடியரசுத் தலைவருக்கும், 161 ஆம் பிரிவின்படி மாநில ஆளுநருக்கும் இந்த மன்னிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மன்னிக்கும் அதிகாரம் ஒரு வானளாவிய அதிகாரம் என்பதைக் குறிக்கும்வகையில், உச்சநீதிமன்றம்: இங்கிலாந்து நாட்டில் மன்னருக்கும், அமெரிக்காவில் அதிபருக்கும் உள்ள மன்னிக்கும் அதிகாரம் இந்தியாவில் ஆளுநருக்கும் குடியரசு தலைவருக்கும் உண்டு என்கிறது.

"The view of the language of Articles 72 and 161,..the President and the Governors of the States in India had the same powers of pardon both in nature and effect, as is enjoyed by King in Great Britain and the President in the United States. Therefore, in India also the pardoning power can be exercised before, during, or after trial."

Nanavati v. State of Maharashtra AIR 1961 S.C. 112

அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: Nanavati v. State of Maharashtra AIR 1961 S.C. 112

ஆளுநரை விட குடியரசுத் தலைவர் மேலானவர் அல்ல.

மன்னிக்கும் அதிகாரத்தின் படி, ஆளுநரை விட குடியரசுத் தலைவர் மேலானவர் அல்ல. உயர்நீதி மன்றத்தில் நிராகரிக்கப்படும் வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுவது போல - ஆளுநர் கருணை மனுவை நிராகரித்தால் அதன் பிறகு குடியரசுத் தலைவரிடம் மேல்முறையீடு செய்யப்படுவதாக கருணை மனுவை பலரும் நினைக்கின்றனர். உணமை அதுவல்ல.

ஆளுநரிடம் முறையிடுவதும், குடியரசுத் தலைவரிடம் முறையிடுவதும் - இரண்டும் இரண்டு தனித்தனி கருணை கோரிக்கைகளாகும். இருவரில் யாராவது ஒருவர் மன்னிப்பு வழங்கினால் போதும். இந்த இருவரது அதிகாரங்களும் தனித்தனி சமமான அதிகாரங்கள் ஆகும். இந்த மன்னிப்பு விடயத்தில் மட்டும் ஒருவரைவிட மற்றொருவர் மேலானவர் அல்ல.

அதாவது, ஆளுநரின் மன்னிக்கும் அதிகாரத்தைவிட குடியரசுத் தலைவரது மன்னிக்கும் அதிகாரம் மேலானது அல்ல. எனவே, "குடியரசுத் தலைவரே நிராகரித்து விட்டார், ஆளுநர் என்ன செய்ய முடியும்?" என்கிற பேச்சுக்கே இடமில்லை. இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது:

The Governor vis a vis his Cabinet is no higher than the President save and narrow area which does not include Article 161. 

Maru Ram v Union of India (1981) SCC 1073

அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: Maru Ram v Union of India (1981) SCC 1073

ஆளுநர் மாநில அரசின் பேச்சைக் கேட்க வேண்டும்.

மாநில அரசாங்கம் கருணை மனுவை பரிந்துரை செய்தாலும் கூட, மாநில ஆளுநர் அதனை நிராகரித்தால் என்ன செய்வது? என்கிற கேள்வி எழலாம் (மாநில ஆளுநர் மத்திய அரசின் முகவர்தானே). இதற்கும் கூட உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

அரசியலமைப்பின் 161 ஆம் பிரிவில் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்பது உண்மையில் மாநில அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமே ஆகும். கருணை மனு விடயத்தில் மாநில அமைச்சரவை என்ன சொல்கிறதோ, அதனை மாநில ஆளுநர் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டும். மாநில அமைச்சரவை மன்னிப்பு வழங்கச் சொன்னால், ஆளுநர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மன்னிப்பு வழங்கிதான் ஆகவேண்டும் என்கிறது உச்சநீதி மன்றம்:

The constitutional conclusion is that the Governor is but a shorthand expression for the State Government and the President is an abbreviation for the Central Government…the Governor is The formal head and sole repository of the executive power but is incapable of acting except on, and according to, the advice of his council of ministers. The upshot is that the State Government, whether the Governor likes it or not, can advise and act under Art. 161, the Governor being bound by that advice.

Maru Ram v Union of India (1981) SCC 1073

அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: Maru Ram v Union of India (1981) SCC 1073

மாநில அரசின் மன்னிக்கும் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது.

மன்னிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு எனும்போது, அதில் மத்திய அரசு தலையிடலாமா? என்றால், மத்திய அரசால் தலையிட முடியாது என்பதே முடிவாகும்.

இந்தியாவில் அரசாங்கத்தின் அதிகாரம் என்பது மூன்று வழிகளில் பெறப்படுகிறது. 1. அரசியல் அமைப்பு, 2. சட்டங்கள், 3. நிருவாக உத்தரவுகள். இவற்றில் உத்தரவுகளைவிட சட்டம் மேலானது, சட்டத்தைவிட அரசியலமைப்பு மேலானது.

மன்னிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு அரசியல் அமைப்பு அளித்துள்ளது. ஆனால், ஒரு சாதாரண நிருவாக உத்தரவால் "மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கட்டளையிடுகிறது" என்கிறார் முதலமைச்சர். இது ஏற்புடையது அல்ல. அரசியல் அமைப்பு மாநில அரசுக்கு அளித்துள்ள முழுமையான, கட்டற்ற, விதிகளால் தடுக்க முடியாத அதிகாரத்தில் தலையிடும் உரிமை மத்திய அரசுக்கு கிடையாது.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகளில், மன்னிக்கும் அதிகாரம் என்பது ஓர் இறையாண்மை அதிகாரம் எனவும், அது முழுமையான, மாற்ற முடியாத அதிகாரம் எனவும் குறிப்பிடுகிறது. குற்றவாளிகளை மன்னிக்கும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு சாதாரண உத்தரவால் மட்டுமல்ல, நாடாளுமன்ற சட்டங்களால் கூட மாற்ற முடியாது.

அதாவது, தூக்குதண்டனைக் கைதிகளை மன்னிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்கிற ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றினால் கூட - அந்த சட்டம் தமிழ்நாடு அரசைக் கட்டுப்படுத்தாது.

“sovereign power to grant pardon has been recognised in our Constitution in Articles 72 & 161”

State (Govt. of NCT Delhi) v Premraj (2003(7) SCC 121

The power under Articles 72 and 161 of the Constitution is absolute and cannot be lettered by any statutory provision... This power cannot be altered, modified or interfered with in any manner whatsoever by any statutory provisions or Prison Rules. 

State of Punjab v Joginder Singh, 1990 (2) SCC 661

அந்த தீர்ப்புகளை இங்கே காணலாம்: 1.`State (Govt. of NCT Delhi) v Premraj (2003(7) SCC 121   2. State of Punjab v Joginder Singh, 1990 (2) SCC 661

ஏற்கனவே கருணை மனுவை நிராகரித்த பின்னர் மீண்டும் எப்படி மன்னிப்பது?

கடந்த 19.4.2000 அன்று கலைஞரது அமைச்சரவைதான் கருணை மனுவை நிராகரித்தது. ஆனால், ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ ஒரே ஒருமுறைதான் கருணை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்கிற விதி எதுவும் இல்லை. மாறாக ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ மீண்டும் மீண்டும் கருணை மனுக்களை ப்ரிசீலிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது:

The rejection of one clemency petition does not exhaust the power of the President or the Governor.

`G. Krishta Goud and J Bhoomaiah v State of Andhra Pradesh (1976(1) SCC 157

அந்த தீர்ப்பை இங்கே காணலாம்: `G. Krishta Goud and J Bhoomaiah v State of Andhra Pradesh (1976(1) SCC 157

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தின் கோவிந்தசாமி என்பவரது கருணை மனுவை முதல் முறை நிராகரித்த குடியரசுத் தலைவர் இரண்டாம் முறையாக மன்னித்த வரலாறு ஏற்கனவே உள்ளது. கருணை மனு விடயத்தில் குடியரசுத் தலைவரது அதிகாரமும் ஆளுநரின் அதிகாரமும் ஒன்றுதான் எனும்போது - மாநில ஆளுநர் இரண்டாம் முறையாக கருணை மனுவைப் பரிசீலிப்பது சாத்தியமே.

என்ன செய்யவேண்டும்?

தூக்கு தண்டனையிலிருந்து தற்காலிகமாக காப்பாற்றப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் இரண்டாவது முறையாக ஆளுநரிடம் கருணை மனு அளித்து - அதன் மீது மாநில அமைச்சரவை தூக்குதண்டனையைக் குறைத்து பரிந்துரைக்க வேண்டும்.
அந்த பரிந்துரையை ஆளுநர் ஏற்று தூக்குதண்டனையைக் குறைத்துதான் ஆக வேண்டும் என்பது விதி.

அதுமட்டுமல்ல - தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைப்பது மட்டுமல்ல, இருபதாண்டு சிறைவாசத்தைக் கடந்துள்ள அவர்களை மன்னித்து விடுதலை செய்வதுகூட மாநில அரசால் முடிகிற எளிய செயல்தான்.

எனவே, அரசியல் அமைப்பின் 161 ஆம் பிரிவின் கீழ் மாநில முதலமைச்சர் மன்னிக்க முன்வரவேண்டும் என ஆர்வமுடைய எல்லோரும் வலியுறுத்த வேண்டும். இதுவே அவசரப் பணியாகும்.

முக்கிய இணைப்புகள்.

1. மருத்துவர் இராமதாசு அவர்கள் முதலமைச்சருக்கு எழுதிய கடிதம் -இங்கே காண்க. (தமிழ்)

2. PUCL அமைப்பு முதல்வருக்கு எழுதியக் கடிதம்- இங்கே காண்க: Commutation Petition to CM of Tamil Nadu by PUCL (ஆங்கிலம்)

3. மரண தண்டனை - மறு ஆய்வு தேவை எனும் PUCL ஆவணம்-இங்கே காண்க: Clemency petition - Perarivalan, Santhan, Murugan by PUCL - Tamil (தமிழ்)

4. பேரறிவாளன் கருணை மனு நூல் இங்கே காண்க: An Appeal from the Death Row (RAJIV MURDER CASE - THE TRUTH SPEAKS) (ஆங்கிலம்)

5. Lethal Lottery - The Death Penalty in India: A study of Supreme Court judgments in death penalty cases 1950-2006 (ஆங்கிலம்)

வெள்ளி, ஏப்ரல் 12, 2013

அவசரம்: 3  தமிழர்களை காக்க அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் 


மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் அறிக்கை:

"தில்லியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவிந்தர் பால் சிங் புல்லார் என்பவர் தமது கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தும் தீர்ப்பளித்திருக்கிறது.

தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி தாம் தாக்கல் செய்த கருணை மனுவை 8 ஆண்டுகள் கழித்து தள்ளுபடி செய்தது தவறு என்றும், 8 ஆண்டுகளுக்கும் மேலாக தூக்குக்கயிற்றின் நிழலில் சிறையில் கடும் வேதனையையும், மன உளைச்சலையும் அனுபவித்த தமக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் கூறித் தான் புல்லார் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால், கருணை மனு மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதை கருத்தில் கொள்ளாமலேயே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 

இத்தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தவறு என்றும், கருணை மனு மீது முடிவெடுப்பதில் செய்யப்பட்ட கால தாமதத்தை நீதிபதிகள் கருத்தில் கொண்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ். சோதி உள்ளிட்ட சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புல்லாரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதால், அதே காரணத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும் ஆபத்துள்ளது. பாலாறு குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேர், தருமபுரி பேரூந்து எரிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மூவர் ஆகியோர் தொடர்புடைய வழக்கிலும் இந்தத் தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த நிலையில் மூன்று தமிழர்களின் உயிரை காப்பாற்றுவது தமிழக அரசின் கைகளில் தான் உள்ளது.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கடந்த 2011-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதேபோன்று அரசியல் சட்டத்தின் 161- வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மூவரின் தூக்கு தண்டனையை தமிழக ஆளுனர் ரத்து செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றுவதன் மூலம் 3 தமிழர்களையும் காப்பாற்ற முடியும். 

அரசியல் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மூவரின் தூக்கு தண்டனையை தமிழக ஆளுனர் ரத்து செய்யும் பட்சத்தில் அதில் யாரும் தலையிட முடியாது. எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக அமைச்சரவையை கூட்டி , தீர்மானத்தை நிறைவேற்றி பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று தமிழர்களின் உயிரையும் காப்பாற்ற வேண்டும்.

அதுமட்டுமின்றி, உலகில் சுமார் 125 நாடுகளில் தூக்கு தண்டனை ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், அந்த நாடுகளை பின்பற்றி இந்தியாவிலும் தூக்கு தண்டனையை ஒழிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்."
தொடர்புடைய சுட்டிகள்:

வியாழன், ஏப்ரல் 11, 2013

தமிழனாக ஒன்றுபடு என்பது பித்தலாட்டம்: தமிழன் என்பவன் யார்? தமிழ்தேசியம் என்றால் என்ன?

ஜூனியர் விகடன் 10.4.2013 இதழில் வெளியான ஒரு கேள்வி-பதில்:

கேள்வி: "எனக்கு தெலுங்கு தெரியாது. தமிழ் பேசி தமிழில் எழுதி தமிழனாகவே வாழ்கிறேன். தமிழ் உணர்வால் உந்தப்பட்டு தமிழ் தேசிய இயக்கங்களுக்குள் வந்தேன். ஆனால் சில நேரங்களில் தமிழ் தேசியம் பேசுபவர்களின் பேச்சால் நான் தெலுங்கனோ என்ற உணர்வு எழுகிறது. என் அடையாளத்தைத் தேட வேண்டுமோ என்று நினைக்கிறேன்' - இப்படிக் கேட்கும் எனது நண்பனுக்கு பதில் என்ன?

ஜூ.வி. பதில்: பச்சைத்தமிழராக இருந்துகொண்டு இனத்துரோகம் செய்வதைவிட, தெலுங்கராய் இருந்து தமிழ்ப் பாசத்துடன் இருப்பது மேலானது. இனம், மொழி, மத, சாதி அபிமானத்தைவிட மனிதாபிமானம்தான் முக்கியமானது. (இப்படி பதில் அளித்துள்ளது ஜூ.வி)

இந்த கேள்வி பதிலுக்கு பின்னால் "தமிழன் என்பவன் யார்?" என்கிற விடை தெரியாத கேள்வி ஒளிந்திருக்கிறது. இதற்கு ஜூவி பதில் அளிக்கவில்லை. தமிழ் அறிஞர்களும் இன்னமும் தெளிவான பதிலை அளிக்கவில்லை.

அதைவிட முக்கியமாக - தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவருக்கு எதற்காக தமிழ் மொழிமேல் பாசம் இருக்க வேண்டும்? தெலுங்கு மொழிமேல் பாசம் இருந்தால் அது போதுமானது இல்லையா? 

மாற்று மொழி பேசும் தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழ் நாட்டின் மேல் பாசம் இருக்க வேண்டுமா? அல்லது தமிழ் மொழிமேல் பாசம் இருக்க வேண்டுமா? - இவையெல்லாம் விடை தெரியாத கேள்விகள்.

ஒரு நாட்டின் மக்கள் என்போர் யார்?

நாடு என்பது அதன் எல்லைகளால் மட்டும் அமைவது இல்லை. அந்த நாட்டின் குடிமக்கள் யார் என்பதும் முக்கியமானதாகும். எந்த ஒரு நாட்டிலும் 'இவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள்' என்று பொத்தம் பொதுவாக அடையாளம் காண்பது இல்லை. மக்களை பல்வேறு தொகுப்புகளாகத்தான் அடையாளம் காண்கின்றனர்.

நாட்டு மக்களை தொகுப்புகளாகப் பிரிப்பதிலும் இரண்டு விதமான அடையாளப் படுத்துதல் உண்டு. மக்களை அவ்வளவு எளிதாக பிரிக்க முடியாத நாடுகள், தமது நாட்டின் அடையாளத்தை முதன்மைப் படுத்துகின்றன. மற்ற நாடுகள் நாடு மற்றும் மக்கள் பிரிவுகள் இரண்டையுமே முன்னிலைப் படுத்துகின்றன.

எடுத்துக்காட்டாக அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மக்கள் தெளிவான பிரிவுகளில் இருப்பது இல்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரை - ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடியேறியோர் முதன்மையாகவும் ஆப்பிரிக்கா மற்றும் தென்அமெரிக்க பகுதிகளில் இருந்து குடியேறியவர்கள் அடுத்த நிலையிலும் இருக்கும் நிலையில் - பொதுவாக அமெரிக்க மக்கள் "எல்லீஸ் தீவின் பிள்ளைகள்" (படகில் வந்த முன்னோர்கள் நுழைந்த தீவு) என்று பொதுமைப்படுத்தப்படுகின்றனர். அதாவது, சுமார் ஆறு இனங்களாக மக்கள் பிரிவுகள் இருப்பதை ஏற்றாலும், அமெரிக்கன் என்பதே அங்கு பிரதானம்.
அதே போன்று ஸ்பெயின் காலனியாகவும் பின்னர் ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டு ஊடுருவல்களாலும் தனது அடையாளத்தை இழந்த நாடு பிலிப்பைன்ஸ். அங்கு வந்த வெளிநாட்டினர் திருமண உறவினையும் ஏற்படுத்திக் கொண்டதால் - தனிப்பட்ட இனம் என்று இல்லாமல், பல இனங்களின் கலப்பாகவே மக்கள் இருக்கின்றனர்.

எனவே, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் நாடே பிரதானம். இனப்பிரிவுகள் அடுத்ததுதான் (இது ஒரு தோராயமான கருத்துதான்).

ஆனால், மற்ற நாடுகள் அப்படி அல்ல. அவை தனது மக்கள் எந்த பிரிவுகளை சேர்ந்தவர்கள் என்பதை தெளிவாக வரையறை செய்துள்ளன. எடுத்துக்காட்டாக, மலேசியாவில் மலாய் மக்கள், சீனர்கள், இந்திய வம்சாவழியினர் என்கிற பிரிவு எப்போதும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு - இரண்டும் கெட்டான் நாடு.

இப்படியாக - மக்கள் பிரிவா? நாட்டின் அடையாளமா? என்பதில் ஒரு தெளிவில்லாத இரண்டும் கெட்டானாக காட்சியளிக்கிறது தமிழ்நாடு.

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலம் என்ற போதிலும் - 'நாடும் அதன் மக்களும்' என்கிற வகையில் தமிழ் நாட்டை வரையறுக்க முடியும். இதில் நாட்டின் எல்லை ஒரு சிக்கலாக இல்லை. ஆனால், நாட்டு மக்கள் யார் என்பதில் ஒருபோதும் தெளிவு இல்லை. இதனால்தான் தெலுங்கு பேசும் ஒருவர் தன்னை தெலுங்கனா? தமிழனா? என்று கேட்கும் நிலை ஏற்படுகிறது.
  • ஒன்று பிலிப்பினோக்களைப் போன்று 'எல்லோரும் ஒன்று கலந்த' தமிழர்கள் என்று நம்மை நாமே அடையாளம் காண வேண்டும். அதாவது 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி உள்ள 7,21,38,958 பேரும் தமிழர்கள். 
  • அல்லது, அமெரிக்காவைப் போன்று உட்பிரிவுகளை ஓரத்தில் வைத்துவிட்டு 7,21,38,958  பேரையும் தமிழ்நாட்டு மக்கள் என்று ஒரே கூட்டமாக கணக்கில் கொள்ள வேண்டும்.
  • மூன்றாவதாக, மலேசியாவில் உள்ளது போன்று - நாங்கள் எல்லோரும் தமிழ் நாட்டு மக்கள், ஆனாலும் - எங்களுக்குள் இத்தனைப் பிரிவுகள் உள்ளன என்பதை வெளிப்படையாக பேச வேண்டும்.
ஏதாவது ஒன்றை செய்து - குழப்பத்தை போக்க தமிழ் தேசியர்கள் முன்வர வேண்டும்.

தமிழனாக ஒன்றுபடு என்பது பித்தலாட்டம்.

"தமிழன்" என்பதற்கோ அல்லது "தமிழ் நாட்டு மக்கள்" என்பதற்கோ  ஒரு தெளிவான வரையறை இல்லாமல் - நாம் எல்லோரும் தமிழனாக ஒன்றுபட வேண்டும் என்பதும், நாம் தமிழர் நலனுக்காக பாடுபட வேண்டும் என்று பேசுவதும் பித்தலாட்டமானதாகும்.

"தேசப்பற்று என்பது அயோக்கியர்களின் கடைசி புகலிடம்"  (Patriotism is the last refuge of scoundrels) என்றார் சாமுவேல் ஜான்சன். தமிழ்தேசியம் என்பதும் அப்படித்தான் ஆகிவிடுமோ?!

வியாழன், ஏப்ரல் 04, 2013

சாதனை முக்கியமல்ல: சாதிதான் முக்கியம் - தமிழ் பத்திரிகைகளால் மறைக்கப்பட்ட மாபெரும் சாதனை

தமிழ் நாட்டில் எந்த ஒரு அரசியல் தலைவரும் 'அவர் எத்தகைய போராட்டங்களை செய்கிறார்? அவர் முன்வைக்கும் கொள்கை என்ன? அவரது தியாகம், உழைப்பு என்ன?' என்கிற வரலாற்றின் அடிப்படையிலோ அல்லது 'அவரால் கிடைத்த நல்ல மாற்றங்களைக் கொண்டோ' அளவிடப்படுவது இல்லை. 

அதிலும் குறிப்பாக - தமிழ்நாட்டு ஊடகங்கள் அத்தகைய பின்னணியையோ சாதனையையோ கருத்தில் கொண்டு செய்திகளை வெளியிடுவது இல்லை. அவர் எந்த அளவுக்கு மக்கள் ஆதரவை பெற்றவர் என்பதைக் கூட கணக்கில் கொள்வது இல்லை.

தமிழ் ஊடகங்களில் கிடைக்கும் வெளிச்சமும், பொதுவானவர்கள் என்று தமக்குத் தாமே சான்று அளித்துக் கொள்கிற 'அருவிகளின்' பாராட்டும் ஒருவருக்கு கிடைக்க வேண்டும் என்றால் - அதற்கு சாதிதான் அடிப்படை.

ஒருவர் பிறந்த சாதியின் அடிப்படையில்தான் இங்கு பொது விளம்பரமும் பொதுவானவர்களின் பாராட்டும் கிடைக்கிறது. குறிப்பிட்ட சில சாதியில் பிறந்தவர்களின் சின்னச்சின்ன நிகழ்ச்சிகளுக்கு கூட அளவுக்கதிகமான விளம்பரம் கிடைக்கும். மற்ற சில சாதிகளில் பிறந்தவர்களின் மாபெரும் சாதனைகள் இருட்டுடடிக்கப்படும். அதற்கான ஒரு உதாரணம் இதோ:

மது ஒழிப்பு: மருத்துவர் இராமதாசு அவர்களின் மாபெரும் சாதனை!

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்டுள்ள 'வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவை' அமைப்பின் சார்பில் அதன் தலைவர் க. பாலு தொடர்ந்த பொதுநல வழக்கில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை பிரப்பித்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.

சாலை விபத்திலும் சாராய விற்பனையிலும் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டில், மிகப் பெரும்பான்மையான சாலை விபத்துகளுக்கு மதுபானமே காரணமாக உள்ளது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் நடைபெறும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றிருப்பதற்கு நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் தான் காரணம் என்பதால், அவற்றை மூடும்படி ஆணையிடக் கோரி 'வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவை' சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது. மதுக்கடைகளை அகற்றுவதற்கு கூடுதல் கால அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதிகள்,  மார்ச் 31 ஆம் தேதிக்குள் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக்கடைகளும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 க்கும் அதிகமான மதுக்கடைகளும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. 

தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன?

உலகிலேயே மதுவைத் திணிக்கும் ஒரே அரசாங்கம் தமிழ்நாடு அரசுதான். 2003 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு மதுவால் கிடைத்த வருமானம் 2,800 கோடி ரூபாய். இப்போது இது 21,000 கோடியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் வருவாயில் மதுபான வருவாய் மட்டும் 30% ஆகும்.

உலகிலேயே அதிக சாலை விபத்து நடக்கும் நாடு இந்தியா. இந்தியாவில் அதிக விபத்து நிகழும் மாநிலம் தமிழ்நாடு. 60% சாலை விபத்திற்கு குடிப்பழக்கம் காரணம். தமிழ்நாட்டில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 66,300 பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் மட்டும் விபத்தில் இறந்துள்ளனர். இதில் குடிக்காதோரும் அடக்கம்.
இந்தியாவிலேயே, விதவைகள் மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. மக்கள் தொகையில் 9% பேர் விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவர்கள். இதற்கும் குடியே முதன்மைக் காரணம். தமிழ்நாட்டில் தந்தையின் குடியால் 5 லட்சம் குழந்தைகள் அனாதைகளாகக் கைவிடப்பட்டுள்ளனர்.

உலகிலேயே அதிக தற்கொலை நடக்கும் நாடு இந்தியா, இந்தியாவில் இரண்டாவது இடம் தமிழ்நாட்டிற்கு. தற்கொலைக்கும் குடிப்பழக்கம் முதன்மைக் காரணமாகும்.

இவ்வாறு தீமைகளின் தாயாக இருக்கும் மதுபானக் கேட்டினை எதிர்த்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார் மருத்துவர் அய்யா.

உலக சுகாதார நிறுவனத்தின் கொள்கையை செயலாக்கும் மருத்துவர் அய்யா

2010 ஆம் ஆண்டு மே மாததில் "தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தி" (Global strategy to reduce harmful use of alcohol) எனும் தீர்மானத்தை உலக நலவாழ்வு அமைப்பு நிறைவேற்றியது. வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்மானத்தின் மூலமாக மதுபானத் தீமையைக் குறைப்பது என்ற அதிகாரப்பூர்வமான நிலைபாட்டை உலகநாடுகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.

இத்தீர்மானத்தின் படி "குடித்துவிட்டு வாகனம் ஒட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும்"  (drink-driving policies and countermeasures) மற்றும் "மதுபானம் கிடைக்கும் இடங்களைக் குறைக்க வேண்டும்"  (availability of alcohol)  என்பது முதன்மையான நோக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாபெரும் நோக்கங்களுமே தமிழ்நாட்டில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் இப்போது சாத்தியமாகியுள்ளது.

ஊடகங்களின் இருட்டடிப்பு

ஆளுக்கு ஏற்ப செய்தி வெளியிடுவதில் தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்கள் முன்னிலையில் உள்ளன. சாதாரண விடயங்கள் குன்றின் மேல் ஏற்றப்பட்ட விளக்காகும் போது மாபெரும் சாதனைகள் குடத்திலிட்ட விளக்காக மறைக்கப்படுகின்றன. மதுபானத்திற்கு எதிரான சிலரது சாதாரண போராட்டங்கள் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாகும் போது - மருத்துவர் அய்யா அவர்களின் "நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடும் சாதனை" ஊடகங்களில் உரிய இடத்தைப் பிடிக்கவில்லை. குறிப்பாக இதனை இவர்தான் செய்தார் என்பதை இருட்டடிப்பு செய்கின்றனர்.
ஆனாலும், இந்த உத்தரவால் தமிழ் நாட்டின் சாலைகளில் ஒவ்வொரு நாளும் பல உயிரிழப்புகள் தடுக்கப்படும். அவ்வாறு உயிர்தப்பும் அப்பாவிகள் தமிழக குடிமக்களாக இருக்கப்போகிறார்கள். மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் எந்த மக்களுக்காக அயராது நாள்தோரும் உழைக்கிறாரோ, அந்த மக்களின் நலன் காப்பாற்றப்படுகிறது என்பதே அவர் எதிர்பார்த்த உண்மை பலன். அந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடுவோம். முழுமையான மது ஒழிப்பை அடைய உறுதி ஏற்போம்.

புதன், ஏப்ரல் 03, 2013

விஜய் டிவி நீயா நானா விரும்புவது இதைத்தானா? கௌரவக் கொலை வேண்டாம் - காதல் கொலை வேண்டுமா?

சாதியின் பெயரால் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் கொலை செய்யப்படுவதை கண்டிக்கும் விதமாக ஒரு 'நீயா? நானா?' நிகழ்ச்சி விஜய் டிவியில் நடத்தப்பட்டது. இதற்காக 'கௌரவம்' என்கிற திரைப்படத்தை இரண்டு முறை திருமணம் செய்துகொண்ட பிரகாஷ் ராஜ் எடுத்துள்ளாராம்.

நல்ல விடயம்தான். கௌரவக் கொலைகளை நாம் ஆதரிக்கவில்லை. அதனை ஊக்கப்படுத்தவும் இல்லை. இத்தகையக் கொடூரங்களை நாம் எதிர்க்கிறோம். 

அதே நேரத்தில் காதல் திருமணம் செய்பவர்களைக் கௌரவக் கொலைசெய்வது போலவே - அப்பாவிப் பெண்களிடம் காதலை திணிப்பது, கட்டாயப்படுத்துவது, பள்ளி, கல்லூரி செல்லும் இளம் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவது, மிரட்டுவது, சடையைப் பிடித்து இழுப்பது, தட்டிக்கேட்பவர்களை தாக்குவது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைக் காட்டி மிரட்டுவது என பலவிதமான அராஜகங்களை சில அமைப்பினர் திட்டமிட்டு அரங்கேற்றிக் கொண்டுள்ளனர். 

இதற்காகவும் விஜய் டிவி நிகழ்ச்சி நடத்த வேண்டும். பிரகாஷ் ராஜ் படம் எடுக்க வேண்டும். அதற்கான ஒரு சம்பவம் கீழே:


"இளம்பெண் கிண்டலை தட்டிக் கேட்ட தந்தையை கொன்றோர் மீது நடவடிக்கை" - மருத்துவர் இராமதாசு அறிக்கை

"காஞ்சிபுரம் மாவட்டம்  செங்கல்பட்டை  அடுத்த  பாலூர் வெங்கடாபுரம் பகுதியில் இளம்பெண்ணை பாலியல் சீண்டல் செய்த இளைஞர்களை  தட்டிக்கேட்ட  தந்தை கொடூரமான முறையில் அடித்து கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

திருப்பதி  திருமலை கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும்  ராமன் குருக்கள் என்பவர் தமது மனைவியின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி திதி கொடுப்பதற்காக செங்கல்பட்டை அடுத்த பாலூர் வெங்கடாபுரத்தில் உள்ள தமது மூத்த மகளின் வீட்டிற்கு வந்திருக்கிறார். திதி கொடுத்து முடிந்த பின்னர் தமது திருமணமாகாத இளைய மகள் பத்மஸ்ரீ மற்றும் 5 வயது பேத்தி அட்சயஸ்ரீ ஆகியோருடன் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தபோது வெங்கடாபுரம் காலனியை சேர்ந்த சில இளைஞர்கள் பத்மஸ்ரீ மற்றும் அட்சயஸ்ரீயை கிண்டல் செய்ததுடன், பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளனர். இதை ராமன் குருக்கள் தட்டிக் கேட்ட போது, ''இது எங்கள் பகுதி இங்கு வந்தால் இப்படித்தான் செய்வோம். நீ உன் வேலையை பார்த்துக்கொண்டு போ'' என்று கூறியுள்ளனர்.
அப்பாவி பெண்ணிடமும், சிறுமியிடமும்  இப்படி முறை தவறி நடந்து கொள்வது சரியா? என ராமன் குருக்கள் கேட்டபோது அவரை அந்த கும்பல் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளது. அதுமட்டுமின்றி  பத்மஸ்ரீயும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருக்கிறார். இதில் படுகாயமடைந்த இருவரும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பயனின்றி ராமன் குருக்கள் உயிரிழந்தார். பத்மஸ்ரீயின் தலையில் ஏற்பட்ட காயங்களுக்காக 16 தையல் போடப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

சாலையில் சென்ற அப்பாவி பெண்களை பாலியல் சீண்டல் செய்ததும், அதை தட்டிகேட்ட தந்தையை அடித்து கொலை செய்திருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கது. காலனிகள் வழியாக செல்லும் பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருவதையும் , அதை தட்டிக் கேட்பவர்கள்  தாக்கப்படுவதையும்  பலமுறை நான் சுட்டிக்காட்டியிருப்பதுடன், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்  என்றும் வலியுறுத்தியுள்ளேன். ஆனால் இதுதொடர்பாக அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

"நள்ளிரவு 12 மணிக்கு எந்த அச்சமும் இல்லாமல் பெண்கள் சுதந்திரமாக வெளியில்  நடமாடும் நிலை என்றைக்கு ஏற்படுகிறதோ அன்றைக்குத் தான் இந்தியா உண்மையான  சுதந்திரம் அடைந்ததாக கருதுவேன்" என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார். ஆனால் பகலிலேயே பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத அவல நிலை இருப்பதை பார்க்கும்போது இந்தியா இன்னும் உண்மையான விடுதலை அடையவில்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 

இத்தகைய  சமூக சீர்கேடுகள் தொடர்வதை பார்க்கும்போது  நமது  மாநிலம் எங்கே செல்கிறது என்ற கவலையும், அச்சமும் தான் ஏற்படுகிறது. ஒரு சமுதாயத்தினரால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்படுவதும், அதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதும் தொடர்ந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

எனவே, பாலூர் வெங்கடாபுரத்தில் இளம்பெண்ணை பாலியல் சீண்டல் செய்து தாக்கியதுடன், அதை தட்டிக் கேட்ட தந்தையை கொடூரமான முறையில் அடித்துக் கொன்ற கும்பலை உடனடியாக கைது செய்து நீதிபதி வர்மா குழு பரிந்துரையின்  அடிப்படையில்  இயற்றப்பட்ட சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இளம்பெண்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் எதிராக இத்தகைய குற்றங்கள் நடப்பதை தடுக்க  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - என்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.