Pages

பசுமைத் தாயகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பசுமைத் தாயகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 12, 2017

மு.க. ஸ்டாலின் அண்டப்புளுகு: ஐ.நா மனித உரிமை கவுன்சிலை வைத்து ஈழ வியாபாரம்!

ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் நடக்கவே நடக்காத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் - ஒரு மிகப்பெரிய மோசடி நாடகத்தை திமுகவினர் நடத்துகின்றனர்.
இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை" - ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் துணை ஆணையாளருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடக்காத கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லையாம்!

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்தில் 'தான் கலந்துகொள்ள இயலவில்லை' என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் 'காமெடி' கடிதம் எழுதியுள்ளார்.
ஐநா மனித உரிமைப் பேரவையின் 35 ஆம் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இல்லை.

கூடவே மேலும் ஒரு கருத்தையும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்: "இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் இந்த முக்கியமான 35வது அமர்வில், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்" என்று மு.க. ஸ்டாலின் தனது 'அண்டப்புளுகு' அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சி நிரலிலேயே இல்லாத கற்பனை கூட்டத்தால் எப்படி நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பது மு.க. ஸ்டாலினுக்கே வெளிச்சம்!

உண்மையில் நடப்பது என்ன?

ஈழத்தமிழர் சிக்கலோ இலங்கை விவகாரமோ இப்போதைய 35 ஆவது கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவே இல்லை. அடுத்து ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தில் தான் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படவுள்ளது. அதுவரை பேரவையின் பிரதானக் கூட்டத்தில் ஈழச்சிக்கல் பேசப்பட வாய்ப்பு இல்லை.

ஐநா மனித உரிமைப் பேரவையில் அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகள் NGO துணைக் கூட்டங்களை நடத்த அனுமதி உண்டு. இது போன்ற பலக்கூட்டங்களை ஐநா மனித உரிமைகள் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு நடத்தியுள்ளது. இவ்வாறான கூட்டங்கள் அனைத்தும் அரசு சாரா அமைப்புகளின் முழுக்கட்டுப்பாட்டில் அவர்களே நடத்தும் கூட்டங்கள் ஆகும். இக்கூட்டங்களுக்கு யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஸ்டாலின் அழைக்கப்பட்ட Tamil Uzagam NGO துணை நிகழ்ச்சி விவரம்.

அது போல Tamil Uzhagam எனும் ஒரு NGO அமைப்பின் சார்பில் ஜூன் மாதம் 19 ஆம் தேதி "இலங்கையில் மனித உரிமை" எனும் கூட்டத்துக்கு கூட்ட அரங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்துக்கு இதே Tamil Uzhagam NGO அமைப்பினால் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டுள்ளார். இதற்கும் ஐநா மனித உரிமை பேரவைக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை.

மருத்துவர் அன்புமணியும் மு.க. ஸ்டாலினும்

கடந்த மார்ச் மாதம் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்கள், ஐநா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆம் கூட்டத்தில், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் முன்பாக, பேரவையின் தலைவர் அழைப்பின் பேரில் இலங்கை மீதான நேரடி விவாதத்தில் பங்கேற்று பேசினார். இது போன்ற ஐநா மனித உரிமைப் பேரவையின் நேரடி விவாதத்திற்கு மு.க. ஸ்டாலின் அழைக்கப்படவில்லை. மாறாக, ஒரு அரசு சாராத NGO அமைப்பின் பிரத்தியோக கூட்டத்திற்கு தான் மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டார்.
NGO அமைப்பின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட மு.க. ஸ்டாலின், அதில் கலந்துகொள்ள இயலவில்லை என்றால், அந்த Tamil Uzhagam NGO அமைப்புக்குத் தான் பதில் சொல்ல வேண்டும். அதை விடுத்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறுவதன் மூலம் - ஐநா அவைக் கூட்டத்திற்கே அவர் அழைக்கப்பட்டத்தைப் பொன்று, ஒரு போலியான மோசடி தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவரே இப்படி போலியான கட்டுக்கதைகளை வெளியிடுவது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும்.

தொடர்புடைய சுட்டிகள்:

1. ஐநாவில் மு.க. ஸ்டாலின்: திமுகவின் அண்டப்புளுகும் உண்மையும்!

2. மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?

வெள்ளி, ஏப்ரல் 28, 2017

மதிமுகவின் பொய்ப்பிரச்சரம்: வைகோ கோரிக்கையை ஐநா மன்றம் ஏற்றதா?

'வைகோ வேண்டுகோளை ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ஐநா மன்றம் சுற்று வைத்துள்ளது' என்றும், 'ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக வைக்கப்பட்டது' என்றும் மதிமுக பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

மதிமுக பொய்ப்பிரச்சாரம்

"தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - என்கிற வைகோ வேண்டுகோளை ஐநா மன்றம் சுற்று அறிக்கையாக முன் வைத்துள்ளது" - என்று மதிமுக கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு 'வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக' வைக்கபட்டதாகவும், அதன் படி வைகோ அவர்களின் கோரிக்கை ஐநா மனித உரிமைகள் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஆய்வுக்காக சுற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மதிமுகவின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

உண்மை என்ன?

ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எவ்வாறு கற்பனைக் கதைகளை கட்டிவிடுகின்றன என்பதற்கு மதிமுகவின் இந்த அறிக்கையை எடுத்துக்காட்டாக கூறலாம்.

ஐநா அவையின் விதிகளின் படி, மதிமுக தலைவர் வைகோவின் கடிதத்தை சுற்றுக்கு விடவோ, ஆய்வுக்கு உட்படுத்தவோ இடம் ஏதும் இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவும் இல்லை.

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் உறுப்பு நாடுகள், உறுப்பினர் அல்லாத நாடுகள், ஐநா அமைப்புகள், அங்கீகரிக்கப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த பங்கேற்பின் வழியாக மூன்று வழிகளில் கருத்துக்களை முன்வைக்கலாம். 1. எழுத்துபூர்வமான அறிக்கைகள் சமர்ப்பிப்பது (NGO Written Statement). 2. மனித உரிமைகள் கூட்டத்தில் நேரடியாக பேசுவது (NGO Oral Statement). 3. துணைக்கூட்டங்கள் (NGO Side-Event) நடத்துவது - ஆகியனவே பங்கேற்கும் வழிகள் ஆகும்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு, ஐநா அவையின் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்பாக 2005 ஆம் ஆண்டுமுதல் செயலாற்றி வருகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஈழத்தமிழர் நீதிக்கான குரலை ஐநா மனித உரிமைகள் பேரவையில் எழுப்பி வருகிறது.

மதிமுக குறிப்பிட்டுள்ள அதே 34 ஆம் கூட்டத்தில் - பசுமைத் தாயகம் சார்பில் இரண்டு எழுத்துபூர்வமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆறு முறை மனித உரிமைகள் கூட்டத்தில் நேரடியாக பேசப்பட்டது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமாரும் பேசினர்.  இரண்டு துணைக்கூட்டங்கள் பசுமைத் தாயகம் சார்பில் நடத்தப்பட்டன.

வைகோவின் கோரிக்கை விவகாரம் என்ன?

மதிமுக ஐநாவின் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல. எனவே, அவர்கள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் கோரிக்கைகளை எழுப்பும் வாய்ப்பு இல்லை. அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் எழுத்துபூர்வமான அறிக்கைகளை வைக்கலாம் என்கிற வகையில் பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் 2 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதனை ஐநா மனித உரிமைகள் பேரவை சுற்றுக்கு விட்டது. இதுபோன்று, 34 ஆம் கூட்டத்தொடரில் மொத்தம் 259 அறிக்கைகள் சுற்றுக்கு விடப்பட்டன.
பசுமைத் தாயகம் அறிக்கை, பசுமைத் தாயகம் பெயரில் HRC/34/NGO/141 by the Pasumai Thaayagam
பசுமைத் தாயகம் அறிக்கை, பசுமைத் தாயகம் பெயரில் HRC/34/NGO/143 by the Pasumai Thaayagam

ஐநா மனித உரிமைகள் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் 10 தலைப்புகளாக பிரிக்கப்படும். அதில் எந்த ஒரு தலைப்பின் கீழும் அறிக்கைகள் சமர்ப்பிக்கலாம். பசுமைத் தாயகம் அமைப்பின் அறிக்கைகள் முறையே நிகழ்ச்சி நிரல் 2 மற்றும் 4 ஆவது தலைப்பின் கீழ் சுற்றுக்கு விடப்பட்டன. (எண்: HRC/34/NGO/141 by the Pasumai Thaayagam) மற்றும் HRC/34/NGO/143 by the Pasumai Thaayagam)

இதே போன்று - வைகோ அவர்களின் கடிதமும், ஆப்பிரிக்கா மற்றும் பிரான்சில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது (எண்: HRC/34/NGO/240 by the Association Bharathi Centre Culturel Franco-Tamoul, Association Burkinabé pour la Survie de l'Enfance,). பசுமைத் தாயகம் அறிக்கை சுற்றுக்கு விடபட்டது போலவே, இந்த அறிக்கையும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது.
வைகோ கடிதம் - ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் அமைப்புகளின் பெயரில்  HRC/34/NGO/240 by the Association Bharathi Centre Culturel Franco-Tamoul, Association Burkinabé pour la Survie de l'Enfance

அதாவது, வைகோ அவர்களின் கடித்ததை ஐநா மன்றம் சுற்றுக்கு விடவில்லை. மாறாக, ஆப்பிரிக்கா மற்றும் பிரான்சில் உள்ள அரசுசாரா அமைப்புகளின் அறிக்கைதான் சுற்றுக்கு விடப்பட்டது. அந்த அறிக்கைக்குள் வைகோ அவர்களின் கடிதம்  அறிக்கையாக குறிப்பிடப்பட்டுள்ளது. 34 ஆம் கூட்டத்தொடரின் 259 அறிக்கைகளில் இதுவும் ஒன்று.

அதுமட்டுமல்லாமல் - //ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு 'வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக'//  வைக்கப்படவில்லை. 259 அறிக்கைகளை தலைப்பு வாரியாக பிரிக்கும் வகையில், ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் அமைப்புகளின் அறிக்கை 2 ஆவது தலைப்பின் கீழ் உள்ளது.

பசுமைத் தாயகத்தின் பணி

2009 ஆம் ஆண்டு முதல் ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டங்களில் அறிக்கை, நேரடி பேச்சு, துணைக்கூட்டம் என எல்லா வழிகளிலும் பசுமைத் தாயகம் பங்கேற்று வருகிறது. இதுவரை 40-க்கும் மேற்பட்ட அறிக்கைகள், 50-க்கும் மேற்பட்ட நேரடியாக உரைகள், 10 துணைக் கூட்டங்களை நேரடியாக நடத்தியுள்ளது பசுமைத் தாயகம்.

ஆனால், ஒரு முறை வேறு அமைப்புகள் மூலம் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு, அதனை ஐநா ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்தது போல மதிமுக அறிக்கை விடுவது வியப்பளிக்கிறது!.

அதிலும் 'வைகோ வேண்டுகோளை ஐநா பொதுச்செயலரின் ஒப்புதலோடு ஐநா மன்றம் சுற்று வைத்துள்ளது என்றும், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 34 ஆவது கூட்டத்தில் 'வைகோ விடுத்த வேண்டுகோள் இரண்டாவது நிகழ்ச்சி நிரலாக' வைக்கப்பட்டது என்றும் கூறுவது அப்பட்டமான பொய்ப்பிரச்சாரம் தவிர வேறு எதுவும் இல்லை.

(குறிப்பு: வைகோவின் கோரிக்கையை ஆப்பிரிக்கா மற்றும் பிரான்ஸ் அமைப்புகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கையாக சமர்ப்பித்ததை வரவேற்கிறோம். ஆனால், அது குறித்த மிகையான கட்டுக்கதைகள் நியாயமற்றவை).

சனி, மார்ச் 04, 2017

ஐநாவில் இலங்கையை தண்டிக்க இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP அறிக்கை

ஜெனிவா நகரில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்காக அந்நாட்டு அரசின் நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் தாக்கல் செய்துள்ளார். இதனடிப்படையில் இலங்கை மீதான விவாதம் மார்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்கான இலங்கையின் செயல்பாடுகள் மனநிறைவு தரவில்லை  என்றும் ஆணையர் அவரது அறிக்கையில் கூறியுள்ளார். ‘‘இலங்கையின் ஒப்புதலுடன் 2015-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை, கவலைக்கொள்ளும் அளவுக்கு மிகவும் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது. ஐநா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை அதிபர், பிரதமர், அமைச்சர்கள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவது கண்டிக்கத்தக்கது. இனியும் தாமதிக்காமல் தீர்மானத்தை செயல்படுத்த  திட்டம் வகுக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கையில் அமைப்பு ரீதியில் நடத்தப்பட்ட பன்னாட்டு குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு கலப்பு நீதிமன்றம் அமைப்பது கட்டாயமான தேவை. இத்தகைய குற்றங்களை விசாரிக்கும் வகையில் உள்நாட்டு சட்டங்களை உடனடியாக மாற்ற வேண்டும். மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும், குடிமக்கள் விவகாரங்களில் இருந்து இராணுவம் முழுவதுமாக விலக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் நடவடிக்கைகளை முழுமையாக செயலாக்க ஐநா மனித உரிமைகள் ஆணையரின் நேரடி அலுவலகத்தை இலங்கையில் நிறுவ வேண்டும். போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையை விசாரிப்பதற்கான ரோம் உடன்படிக்கையில் இலங்கை உடனடியாக கையொப்பம் இடவேண்டும். இலங்கை அரசின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஐநா மனித உரிமை ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டின் பேரவை தீர்மானத்தில் நிலைமாற்ற நீதி பொறிமுறை என்பதை இலங்கை அரசு ஏற்றது. இதில் உண்மையை வெளிக்கொணர்தல், குற்றவாளிகளைத் தண்டித்தல், இழப்புகளுக்கு பரிகாரம் தேடுதல், குற்றம் நடந்ததற்கான காரணங்களைக் கண்டுபிடித்து அமைப்புகளை மாற்றுதல் என நான்கு அங்கங்கள் உள்ளன. ஆனால், உண்மை, பரிகாரம் என இரு வழிமுறைகளை மட்டுமே இலங்கை அரசு ஓரளவுக்கு ஏற்பது போன்று தெரிவதாகவும், குற்றவாளிகளைத் தண்டிக்காமல் தவிர்க்க முயல்வதாகவும் ஆணையர் குற்றஞ்சாற்றியிருக்கிறார். இலங்கை அரசே அமைத்த ஆலோசனைக் குழுவின் அறிக்கையை ஏற்று செயல்படுத்த வேண்டும் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்காமல் ஏமாற்ற இலங்கை அரசு நடத்தும் நாடகம் மனித உரிமை ஆணையர் அறிக்கை மூலம் தெளிவாகியுள்ளது. இதற்கு மேலும் இலங்கை அரசின் ஏமாற்று சதிகளுக்கு சர்வதேச சமூகம் பலியாகக் கூடாது. 2015-ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், ஒருசிலவற்றை மட்டும் நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மாறாக, மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகளை தீவிரமாக்குவதுடன், ஐநா பொது அவைக்கும், பாதுகாப்பு மன்றத்துக்கும் இலங்கை விவகாரத்தை கொண்டு செல்ல வேண்டும்.

குறிப்பாக, இலங்கையை காப்பாற்றும் முயற்சிகளில் இந்தியா இனியும் ஈடுபடக்கூடாது. மாறாக,  நீதியின் பக்கம் நிற்க முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2015-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தின் அம்சங்களை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்தும் இலங்கை அரசைக் கண்டிக்கும் வகையிலான தீர்மானத்தை இந்திய அரசே கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள - பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் அமைப்பது உள்ளிட்ட - அனைத்து பரிந்துரைகளையும், உரிய காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதற்கான செயல்திட்டத்தையும் இந்திய அரசு அதன் தீர்மானத்தில் முன்வைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் போன்ற பன்னாட்டு அமைப்புகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இத்தகைய சூழலில், மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அம்சங்களை இலங்கை அரசு செயல்படுத்துவதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தொடர்ச்சியாக கண்காணிப்பதையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித உரிமைப் பேரவையில் விவாதிப்பதையும் உறுதி செய்யும்படி இந்தியத் தீர்மானம் வலியுறுத்த வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, இலங்கை இறுதிப்போரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட  போர்குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தரும் நோக்குடன், இலங்கை சிக்கலை ஐநா பொது அவையின் மூலம் ஐநா பாதுகாப்பு மன்றத்துக்கு கொண்டு செல்லும்படியும் ஐநா மனித உரிமை பேரவையை இந்தியா கோர வேண்டும். 

ஈழத் தமிழர்கள் இந்தியாவை தந்தை நாடாக கருதுவதாலும், ஈழத்தமிழரை தொப்புள் கொடி உறவாக இந்தியத் தமிழர்கள் கருதுவதாலும் அவர்களுக்கு நீதிபெற்றுத் தருவதற்கான தார்மீக கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உண்டு. ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில்  பொருத்தமான தீர்மானத்தைக் கொண்டு வந்து நட்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றுவதன் மூலம் இந்தக் கடமையை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
#PMK #AnbumaniRamadoss #UNHRC #HRC34 #SriLanka

புதன், மார்ச் 01, 2017

ஐநாவில் ஈழத்தமிழர் நீதி: குழப்பமும் தெளிவும்!

தற்போது ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், வரும் மார்ச் 22-ல் இலங்கை மீதான விவாதம் அங்கு நடைபெறவுள்ள சூழலில் - ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 தீர்மானத்தின் அடுத்தக் கட்டம் குறித்த தமிழர்களின் பார்வை இப்போது ஓரளவுக்கு தெளிவாகி வருகிறது. இது வரவேற்க தக்கதாகும்.

இலங்கை மீதான குற்றச்சாட்டுகளை ஐநா பாதுகாப்பு அவைக்கு அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மத்தியில், "ஐநா மனித உரிமைப் பேரவையின் தற்போதைய தீர்மானத்தின் காலத்தினை மேலும் நீட்டிக்க வேண்டும்" என்றும் "அதனை ஐநா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" நாடுகடந்த தமிழீழ அரசு ஏற்படுத்திய வல்லுநர் குழு 28.02.2017-ல் பரிந்துரை செய்துள்ளது. ("calls on the HRC to extend its mandate so as to review regularly the GSL’s compliance with HRC Resolution 30/1" -  Sri Lanka Monitoring and Accountability Panel)

இதே கோரிக்கைதான் கடந்த 25.02.2017-ல் சென்னையில் பசுமைத் தாயகம் நடத்திய - ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன? UNHRC 34 ஆவது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல் - கூட்டத்திலும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP, கவிஞர் காசி ஆனந்தன், தேவசகாயம் இ.ஆ.ப., இயக்குனர் வ. கௌதமன், தியாகு, பேராசிரியர் மணிவண்ணன், பேராசிரியர் சரசுவதி, டி.எஸ்.எஸ். மணி, அய்யநாதன்

குழப்பம் என்ன?

2015 ஐநா மனித உரிமைப் பேரவை தீர்மானத்தினை செயல்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது எனவும், இந்த விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு அனுப்ப வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்தனர். இது நியாயமான கருத்தே ஆகும்.

எனினும், ஐநா மனித உரிமைப் பேரவையில் இன்னொரு தீர்மானமே வரக்கூடாது என்பது போலவும், இந்த விடயத்தை ஒரேயடியாக ஐநா மனித உரிமைப் பேரவை கைக்கழுவ வேண்டும் என்பது போலவும் சிலர் பேசத்தொடங்கினர் (அதாவது, பொதுச்சபைக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்ட பின்னர், மனித உரிமைப் பேரவையில் வேலை இல்லை என்பதான தவறான புரிதல் உருவானது).

இதன் அடுத்தக்கட்டமாக, "இலங்கை மீது ஒரு தீர்மானத்தை முன் வைக்கப்போவதாக இங்கிலாந்து அரசு கூறுவதே தவறு" என்றும், அத்தகைய தீர்மானத்தை அந்த நாடு பின் வாங்க வேண்டும் என்றும் பேசினர். கடைசியில், "இன்னொரு ஐநா தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் தமிழினத் துரோகிகள்" என்கிற அளவுக்கு தவறான பிரச்சாரம் சென்றது.

'உண்மை என்ன?"

2015 ஆம் ஆண்டில் வெளியான ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணைக் குழுவின் அறிக்கை (OISL) மீதான சர்வதேச நடவடிக்கைகளை - நியூயார்க்கில் உள்ள ஐநா பொதுச்சபைக்கும், ஐநா பாதுகாப்பு அவைக்கும் - விரிவாக்க வேண்டும் என்பது சரியான வியூகம்தான். அதற்காக, ஜெனீவாவில் உள்ள ஐநா மனித உரிமைப் பேரவையில் இருந்து இதனை கைவிட வேண்டும் என்பது மிகத் தவறான வாதம் ஆகும்.

இப்போதைக்கு, ஜெனீவாவில் மட்டுமே இலங்கை விவகாரம் உயிர்ப்புடன் உள்ளது. அதுமட்டுமல்லாமல், மனித உரிமைகள் மற்றும் நிலைமாற்ற நீதி (transitional justice) விவகாரங்களில் உலகின் உச்சமான அமைப்பு இதுதான். இந்த அவையில் இலங்கை தொடர்ச்சியாக விவாதிக்கப்படுவதும், கண்காணிக்கப்படுவதும் மிக மிக மிக அவசியம் ஆகும். இதற்கு வரும் மார்ச் 23 ஆம் நாளன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டே ஆக வேண்டும். அப்படி ஒரு தீர்மானம் வராமல் போய்விட்டால், இனி இலங்கையை கேள்வி கேட்பதற்கு ஒரு பன்னாட்டு அரங்கம் இல்லாமலேயே பொய்விடும்.

எனவே, 'தீர்மானத்தில் என்ன இருக்கப்போகிறது' என்பதுதான் தமிழர்களின் கோரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, 'புதிய தீர்மானமே தேவையில்லை' என்பது அல்ல. மிகக் குறைந்த கோரிக்கையாக பார்த்தால் கூட, 2015 தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது என்பதும், பழைய தீர்மானம் உடனடியாகவும் முழுமையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதும்தான் முக்கியமானதாகும்.

அதே நேரத்தில், இந்த விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு அனுப்ப வேண்டும் என்கிற தமிழர்களின் கோரிக்கைக்கு 47 உறுப்பு நாடுகளில் ஒரே ஒரு நாடு கூட இதுவரை ஆதரவு அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

"குழப்பம் தவிர்க்க வேண்டும்"

ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தினை ஐநாவினை இலக்காக வைத்து நடத்தும் போது, பல தவறான கருத்துகள் உருவாக்கப்படுகின்றன.

குழப்பம் 1. போர்க்குற்றம் என்று சொல்லாதே!

போர்க்குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகிய மூன்றுமே கொடூரமான குற்றங்கள்தான் என்கிற நிலையில் 'போர்க்குற்றம்' என்று சொல்லாதே என்று சிலர் முழங்கினர்.

குழப்பம் 2. அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம்! 

இலங்கையில் நடந்த குற்றங்கள் குறித்து ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் விசாரணை நடத்த வேண்டும் என்கிற தீர்மானத்தை 2014-ல் அமெரிக்கா கொண்டு வந்தபோது - "அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம்" - என்கிற பிரச்சாரம் நடத்தப்பட்டது.
சென்னையில் அமெரிக்க நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால், அந்த தீர்மானத்தால் கிடைத்த விசாரணை அறிக்கைதான் (OISL Report 2015) இப்போது பன்னாட்டு அரங்கில் ஏற்கபட்ட ஒரே ஆயுதமாக உள்ளது.

2015-ல் தற்போதைய தீர்மானத்தினையும் சிலர் எதிர்த்தார்கள். அதனை தீயிட்டுக் கொளுத்தினார்கள். ஆனால், இன்னமும் அந்த ஒரே ஒரு தீர்மானம்தான் இந்த சிக்கலை சர்வதேச அரங்கில் நிலைநிறுத்தியுள்ளது.

குழப்பம் 3. நிலைமாற்ற நீதி தேவையில்லை!

பின்னர் 'நிலைமாற்ற நீதிப் பொறிமுறை' (transitional justice mechanisms) என்பதையும் சிலர் எதிர்த்தனர்.

அதாவது, சர்வதேசத்தின் பார்வையில் ஈழத்தமிழர் நீதிக்கான போராட்டத்தை எவையெல்லாம் நீடித்திருக்க செய்யுமோ - அவை எல்லாவற்றையுமே இல்லாமல் செய்யும் கோரிக்கைகள் அவ்வப்போது எழுவது வாடிக்கையாக உள்ளது (இவ்வாறான கோரிக்கைகளை முன் வைப்பவர்கள் - இதற்கான மாற்று எதையும் முன் வைப்பது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்)

குழப்பம் 4. புதிய தீர்மானம் தேவையில்லை!

அந்த பட்டியலில் ஒன்றாகத்தான் - தற்பொது நடைபெறும் ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் புதிதாக தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

"வட கொரிய முன்மாதிரி"

வட கொரிய விவகாரம் 2004 ஆம் ஆண்டிலிருந்து ஜெனீவா நிகழ்ச்சி நிரலில் உள்ளது. இந்தச் சிக்கலை 2014 ஆம் ஆண்டிலேயே ஐநா பொதுச்சபைக்கு அனுப்பும் தீர்மானத்தை ஐநா மனித உரிமைப் பேரவை நிறைவேற்றியது. ஆனால், அதன் பின்னரும் ஆண்டுதோரும் ஜெனீவாவில் வடகொரியா குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அந்த வரிசையில் 2016 ஆம் ஆண்டில், ஒரு சிறப்பு அலுவலகத்தை அமைத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. (அதாவது, வட கொரிய விவகாரத்தை ஐநா பொதுச்சபைக்கு கொண்டு போனதன் காரணமாக ஐநா மனித உரிமைப் பேரவை அதனைக் கைவிடவில்லை).

"என்ன செய்ய வேண்டும்?"

"ஐநா மனித உரிமைப் பேரவையின் தற்போதைய தீர்மானத்தின் காலத்தினை மேலும் நீட்டிக்க வேண்டும்" என்றும் "அதனை ஐநா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" நாடுகடந்த தமிழீழ அரசு ஏற்படுத்திய வல்லுநர் குழு  28.02.2017-ல் பரிந்துரை செய்துள்ளது வரவேற்கக் கூடியதாகும். (calls on the HRC to extend its mandate so as to review regularly the GSL’s compliance with HRC Resolution 30/1)

பொதுச்சபைக்கும், பாதுகாப்பு அவைக்கும் இலங்கையைக் கொண்டு செல்லும் கோரிக்கைகளை ஒருபக்கம் எழுப்பும் அதே வேளையில் - இப்போது உடனடியாக "ஐநா மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு தீர்மானத்தை எந்த வகையிலும் குறைக்காமல் மறு உறுதி செய்யும் வகையிலும், மேலும் வலுவாக்கும் வகையிலும், காலதாமதமின்றி செயலாக்கும் வகையிலும், சர்வதேசத்தை ஏமாற்றிவரும் இலங்கையை கண்டிக்கும் வகையிலும், ஒரு புதிய தீர்மானத்தை ஐநா மனித உரிமைப் பேரவையின் 34 ஆம் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும்.

கூடவே, ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் செயலாக்கப்படுவதை ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகம் தொடர்ச்சியாக கண்காணித்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் மனித உரிமைப் பேரவையில் தெரிவிக்க வேண்டும். அதன் மீது விவாதித்து கூடுதல் முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதுவே உடனடித் தேவை ஆகும்.

வெள்ளி, அக்டோபர் 07, 2016

கனடா நாட்டில் தமிழ் பண்பாட்டு மாதம்: நாடாளுமன்றம் தீர்மானம்


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை, கனடா நாட்டில் தமிழ் பண்பாட்டு மாதமாக (Tamil Heritage Month) கொண்டாட வேண்டும் என அந்த நாட்டின் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

இது தொடர்பாக, கேரி ஆனந்தசங்கரி MP கொண்டுவந்த தீர்மானம், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை (5.9.2016) நிறைவேற்றப்பட்டது.

ஆளும் லிபரல் கட்சியை சேர்ந்த கேரி ஆனந்தசங்கரி கொண்டுவந்த இந்த தீர்மானத்துக்கு கன்சர்வேட்டிவ் கட்சி, நியூ டெமாக்ரடிக் கட்சி, பசுமைக் கட்சி ஆகிய கட்சிகளும் ஆதரவளித்தன.
(கேரி ஆனந்தசங்கரி பசுமைத் தாயகத்தின் பிரதிநிதியாக 2009 ஆம் ஆண்டு முதல் ஜெனீவா - ஐநா மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) பங்குபெற்றவர். கனடா நாடாளுமன்றத் தேர்தலில், ஐநாவில் பாடுபட்டதை கனடிய ஈழத்தமிழர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். அவர் வெற்றிக்கு அதுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.)

தமிழ் பண்பாட்டு மாத தீர்மானம்

Tamil Heritage Month: That, in the opinion of the House, the government should recognize the contributions that Tamil-Canadians have made to Canadian society, the richness of the Tamil language and culture, and the importance of educating and reflecting upon Tamil heritage for future generations by declaring January, every year, Tamil Heritage Month.

(தைப்பொங்கல் கொண்டாடப்படும் தை மாதத்தை - ஜனவரி - தமிழ் பண்பாட்டு மாதம் குறிக்கிறது)

கனடா நாட்டின் நாடாளுமன்றத்தில் தமிழ் பண்பாட்டு மாத தீர்மானம் நிறைவேற்றம், கேரி ஆனந்தசங்கரி MP உரை - Youtube காணொலி: https://youtu.be/7CvaXtKzZ2w

திங்கள், ஆகஸ்ட் 29, 2016

மோனோ ரயில்: தமிழக அரசின் 'முட்டாள்' திட்டம்!

பூந்தமல்லி முதல் கத்திப்பாரா வரை இணைப்புடன் போரூரிலிருந்து வடபழனி வரை 20.68 கி.மீ. தூரத்துக்கு ரூ. 3 ஆயிரத்து 267 கோடி திட்ட மதிப்பில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.  

வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 22.80 கீ.மீ. தூரத்துக்கு ரூ. 3 ஆயிரத்து 135 கோடியே 63 லட்சம் திட்ட மதிப்பில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் - என தமிழக அரசு இன்று (29.8.2916) அறிவித்துள்ளது.

இது தமிழக அரசின் முட்டாள் திட்டம் என்றால் அது மிகையல்ல. ஏன் என்பதற்கான காரணத்தை அறிய - மும்பை மோனோ ரயிலை ஒப்பிட்டு பாருங்கள்!

மும்பை மோனோ ரயில்

தற்போது மும்பை நகரில் 10 கி.மீ. தூரத்துக்கு இயக்கப்படும் திட்டம் 1000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. இதில் தினமும் 16000 பேர் பயணம் செய்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கும் இத்திட்டத்திலிருந்து இதுவரை ஒரு ரூபாய் கூட இலாபம் கிடைக்கவில்லை.

மாறாக, ஒவ்வொருநாளும் 9 லட்சம் ரூபாய் நஷ்டம் ஆகிக்கொண்டிருக்கிறது. இதுவரை 18 கோடி ரூபாய் பணத்தை அரசாங்கம் மோனோ ரயிலை இயக்குவதற்காக மட்டும் செலவு செய்துள்ளது.
 மும்பை மோனோ ரயில்

அதாவது, பல ஆயிரம் கோடி செலவிட்டு கட்டப்பட்ட மோனோரயில் திட்டத்தை இயக்குவதற்காகவும் அரசாங்கம் பெருந்தொகை செலவிடுகிறது. இத்தனைக்கும் இந்த மோனோ ரயிலில் ஒவ்வொருநாளும் 16 ஆயிரம் பயணங்கள் மட்டுமே நடக்கின்றன. (சென்னை MTC பேருந்துகளில் ஒவ்வொருநாளும் 50 லட்சம் பயணங்கள் நடக்கின்றன).

நகர்ப்புற போக்குவரத்து திட்டங்களை எவ்வளவு மோசமாக திட்டமிடுவது என்பதற்கான மோசமான உதாரணமாக மும்பை மோனோ ரயில் இருப்பதாக வல்லுநர்கள் இப்போது குறிப்பிடுகின்றனர். ("Over two years after India's first monorail was launched in the city - Mumbai, it is increasingly being viewed as a symbol of bad planning and wasteful expenditure. Some urban transport experts even describe it as a vehicle for joyrides" - Times fo India 26.4.2016)

மோனோ ரயிலை விட பேருந்துகளே மிகச்சிறந்தவை

சென்னை மோனோ ரயிலுக்கான பணத்தை MTC பேருந்துக்கு செலவிட்டால் சென்னை சொர்க்கம் ஆகும்.

உலகத்தரமான 800 பேருந்துகளுக்கு சுமார் 500 கோடி செலவாகும். இதற்கான உலகத்தரமான பேருந்து நிலையம், இயக்க வசதிகளை செய்ய சுமார் 200 கோடி செலவாகும். ஆக உலகத்தரமான 800 குளிர்சாதன பேருந்துகளுக்கும் அதன் இயக்க வசதிகளுக்கும் சேர்த்து 700 கோடி தேவை.
இதுவே சென்னைக்கு தேவையான 8000 உலகத்தர பேருந்துகளின் இயக்கத்துக்கு 7000 கோடி தேவைப்படலாம். அதாவது -  தமிழக அரசின் 45 கி.மீ. தூர மோனோ ரயிலுக்கு தேவைப்படும் அதே அளவு செலவுதான்.

ஆனால், மோனோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளை விட ஆயிரம் மடங்கு அதிகமான பயணிகள், பலமடங்கு குறைவான செலவில் பேருந்துகளில் செல்ல முடியும். மோனோ ரயிலை விட விரைவாகவும், வசதியாகவும் செல்ல முடியும். மேலும், மோனோ ரயில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவது போல - பேருந்துகள் பெருநஷ்டத்தை ஏற்படுத்தாது.

ஆனாலும், மக்களுக்கு என்ன பயன் என்பதை விட, ஆட்சியாளர்களுக்கு என்ன பயன் என்பதுதானே - மெகா திட்டங்களை முடிவு செய்கிறது!

ஜெயலலிதா பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்

சென்னை மோனோ ரயில் திட்டத்தை 2006 ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அப்போது முதல் இந்த மோசமான திட்டத்தை மருத்துவர் அய்யா அவர்கள் எதிர்க்கிறார்கள்.  ஆனாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்கள் என சாதிக்க நினைக்கிறார் முதலமைச்சர்.

இந்த முட்டாள் திட்டம் குறித்த எனது பழைய எச்சரிக்கை கட்டுரை இதோ:

"சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து (3.6.2011 இல் எழுதியது)

சென்னை நகர் முழுவதையும் அடையக்கூடிய வகையில் முந்தைய அரசால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தொலைவுடன் நிறுத்தப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம்.

அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம். இதைப் படிக்கும் போது மயக்கமே வந்துவிடும் போலிருக்கிறது.

சென்னை மோனோ ரயில் - ஒரு உலக அதிசயம்

மோனோ ரயில் திட்டத்தில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

அவை இதோ:

1. உலகம் முழுவதும் மொத்தம் 60 மோனோ ரயில் திட்டங்களே உள்ளன (தற்போது புதிதாக அமைக்கப் படுபவைகளையும் சேர்த்து). அவற்றின் ஒட்டுமொத்த தூரம் வெறும் 400 கிலோ மீட்டர் மட்டும்தான்.

உலகிலேயே அதிக மோனோ ரயில் திட்டங்கள் உள்ள நாடு ஜப்பான் - அங்கு மொத்தம் 108 கிலோ மீட்டருக்கு மோனோ ரயில் உள்ளது. சீனா உள்ளிட்ட அனைத்து ஆசிய நாடுகளிலும் மொத்தம் 164 கிலோ மீட்டர், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மொத்தம் 38 கிலோ மீட்டர், அனைத்து வட அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 54 கிலோ மீட்டர், அனைத்து தென் அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 24 கிலோ மீட்டர், ஆப்பிரிக்காவில் 6 கிலோ மீட்டர், ஆஸ்திரேலியாவில் 7 கிலோ மீட்டர் என்ற அளவில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன.

ஆனால், சென்னையில் மட்டுமே 300 கிலோ மீட்டருக்கு தமிழ்நாடு அரசு மோனோ ரயில் திட்டத்தை அமைக்கப் போகிறதாம்!

2. உலகின் பெரும்பாலான திட்டங்கள் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே அமைக்கப் பட்டுள்ளன. வெறும் 12 திட்டங்கள் மட்டுமே 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூடுதலாக உள்ளன. 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிகமாக ஒரேஒரு திட்டம் கூட இல்லை. 

உலகின் மிகப்பெரிய மோனோ ரயில் திட்டம் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ள திட்டம் ஜப்பானின் ஒசாகா மோனோ ரயில் ஆகும். இதன் நீளம் வெறும் 28 கிலோ மீட்டர்தான்.

உலக நிலவரம் இப்படி இருக்கையில் - சென்னையில் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.


மோனோ ரயில் - கேடுகளே அதிகம்.

உலகில் மோனோ ரயில் என்பது சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க சின்னஞ்சிறு அளவில் அமைக்கப் படுபவை. பயணிகள் போக்குவரத்திற்காக அமைக்கப்படும் எல்லா திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. மலேசியாவின் கோலாலம்பூர், இந்தோனேசியாவின் ஜாகர்த்தா, அமெரிக்காவின் சீயாட்டில் என எல்லா திட்டங்களும் காலதாமதம் மற்றும் நிதிச்சுமை என்கிற சுழலில் சிக்கித்தவிக்கின்றன.
மலேசியாவின் 9 கிலோ மீட்டர் மோனோ ரயிலை அமைக்க 5 ஆண்டுகள் ஆயின. அதனை 8 மாதம் இயக்குவதற்கு மட்டும் 61 கோடி ரூபாய் செலவானது. இப்போது அந்த நிறுவனம் திவாலாகி 1215 கோடி ரூபாய் கடனில் மூழ்கிவிட்டது.

சீயாட்டில் நகர மோனோ ரயில் திட்டத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 450 கோடி ரூபாய் செலவானது. இதனால் 22 கிலோ மீட்டருக்கு தொடங்கப்பட்ட திட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

இப்படி உலகெங்கும் மொனோ ரயில் திட்டங்கள் பல்லிளிக்கின்றன. ஆனாலும், மலேசியாவில் உள்ள மோனோ ரயில் நிறுவனங்கள் உலகின் இதர நாடுகளில் பலவிதமான தந்திரங்களைக் கையாண்டும், பொய்யான கட்டுக்கதைகளை பரப்பி ஆசை வார்த்தைக் காட்டியும் ஏமாற்றி வருகின்றன.

இப்போது - மலேசியா மற்றும் ஜப்பானின் மோனோ ரயில் நிறுவனங்களுக்கு "உலகிலேயே மிகப்பெரிய இரை" சிக்கியிருக்கிறது. அது வேறு யாருமல்ல - அப்பாவி தமிழ்நாட்டு மக்கள்தான். ஒருபோதும் சாத்தியமே இல்லாத ஒரு திட்டத்திற்காக பல்லாயிரம் கோடி பணத்தை தமிழக மக்கள் இழக்க இருக்கின்றனர்.

வாழ்க ஜனநாயகம்! (3.6.2011 இல் எழுதியது)  

வெள்ளி, ஜூலை 25, 2014

மருத்துவர் அய்யா 75: வாழ்விக்க வந்த மகான்

ஐநூறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு, வாழ்விழந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் வன்னியப் பேரினத்தை - வாழ்விக்க வந்த மகான் மருத்துவர் அய்யா. அவரது 75 ஆம் பிறந்தநாள் இன்று. 

வன்னியர்கள் மட்டுமின்றி தமிழ் நாட்டின் ஒவ்வொரு வகுப்பினரும் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ வேண்டும் என உழைப்பவர் அவர்.

  • இந்தியத் தலைவர்களில், ஒருநாளும் ஒரு பதவியையும் ஏற்க மாட்டேன் என பதவி பற்றற்று வாழும் ஒரே தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் மட்டுமே.
  • வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடைப் பெற்றுத்தருவேன் எனப் போராடி, தனது வாழ்நாளிலேயே அந்த சாதனையைப் படைத்தவர் அவர் மட்டுமே. வன்னியர் உள்ளிட்ட 108 சாதியினருக்கான MBC இட ஒதுக்கீட்டால், இன்று பலன் பெறுவோர் பல ஆயிரம் பேர்.
  • வன்னியர்களை விட தாழ்ந்த நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்ததால் - பா.ம.க'வுக்கு அதிகாரம் கிடைத்தால், அதை தாழ்த்தப்பட்டவருக்கு அளிப்போம் என அறிவித்து, பா.ம.க'வின் "முதல்" மத்திய அமைச்சராக தாழ்த்தப்பட்டவரையே அமரச் செய்தார் மருத்துவர் அய்யா.
  • 1980 ஆம் ஆண்டில் வன்னியர் சங்கத்தை தொடங்கியது முதல், இன்றுவரை, ஒவ்வொரு நாளும் ஓயாமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார் மருத்துவர் அய்யா.
அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கான ஒரு மாபெரும் பேறு, அதுவே நமக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பு.
தமிழ்நாட்டில் வன்னியர்கள் எப்போதும் ஒரு தனிப்பட்ட இனமாகவே வாழ்ந்து வருகின்றனர்.

கிருஷ்ணதேவராயர் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தக் காலத்தில் வன்னியர்கள் ஒரு பேரினமாக, அதிகாரம் பெற்றவர்களாக வாழ்ந்திருந்தனர். ஆனால், அதன் பின்னார் தொடர்ச்சியாக வீழ்ச்சியை மட்டுமே சந்தித்து வந்தனர்.
  • வலங்கை - இடங்கை சாதி மோதல்களில் நியாயம் பேசியதால், எல்லா சாதிகளாலும் வன்னியர்கள் பகைக்கப்பட்டனர். 
  • ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், வன்னியர்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. 
  • ஆங்கிலேயர் ஆட்சியின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் - சத்திரிய சாதியினரான வன்னியர்களை, தாழ்த்தப்பட்ட சாதி என ஒடுக்கும் முயற்சிகள் நடந்தன.
  • இந்திய சுதந்திரப் போராட்டமும், திராவிட இயக்க அரசியலும் - வன்னியர்களின் உழைப்பையும், தியாகத்தையும் பயன்படுத்திக்கொண்டன. மற்றவர்கள் புகழுக்கும் அதிகாரத்துக்கும் வன்னியர்கள் உரமாகினர்.
இன்றைய வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் வளமாக இல்லை. இங்கு வாழும் இதர சமூகத்தவரின் வசதிக்கும் வளத்துக்கும் உழைத்த சமூகமாகவே வன்னியர்கள் இருக்கின்றனர். ஆயிரம் வன்னியர் குடும்பங்கள் வசிக்கும் ஊரில், ஐந்து குடும்பம் மட்டுமே உள்ள மாற்று சாதியினர் வசதி படைத்தவர்களாக வாழ்வதின் ரகசியம் - வன்னியர்களின் உழைப்புதான்.

சுதந்திரப் போராட்டத்தில் வன்னியர்கள் தலைமை தாங்கவில்லை. திராவிட இயக்கத்தில் வன்னியர்கள் தலைமை இல்லை. தனித்தமிழ் இயக்கத்திலோ, தமிழ்த்தேசியப் போராட்டத்திலோ வன்னியத் தலைமை இல்லை. 

தேர்தெடுக்கப்பட்ட அரசுகளின் தலைமை இடத்தில் வன்னியர்கள் ஒருபோதும் இருந்தது இல்லை. அதிகாரப் பதிவிகள், பொருளாதார வளம் எதிலும் வன்னியர்கள் உரிய இடத்தில் இல்லை.

வன்னியர்கள் அதிகாரமிழந்த நிலையில் வாழ்வதற்கு வன்னியர்கள் காரணம் இல்லை. மாறாக, வன்னியர்களுக்கு எதிராக இங்கு நிலைவும் இனவெறி மனநோய் - வன்னியஃபோபியா - தான் காரணம். (காண்க: வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA)

வீழ்ச்சிநிலையில் இருந்து வன்னிய சமூகத்தை மீட்கும் முயற்சிகள் 1880 களிலும், 1950 களிலும் நடந்தாலும் - அவையெல்லாம் ஒரு அளவுக்கு மேல் வெற்றி பெற முடியவில்லை.

- இந்த ஐநூறு ஆண்டுகால வன்னியர் வீழ்ச்சிக்குப் பின்னர், வன்னியர்களின் முதல் எழுச்சியை உருவாக்கிக் காட்டியவர் மருத்துவர் அய்யா அவர்கள். 

அவரது வழியில் - முழு வெற்றியை அடைய, அய்யாவின் 75 ஆம் ஆண்டில் உறுதி ஏற்போம்.
பசுமைத் தாயகம் நாள் 2001 - மரம் வளர்க்கும் விழா (நீலச் சட்டையில் இருப்பது (!) நான் தான்!)
குறிப்பு: வன்னியர்களே தமிழ் நாட்டின் மிகப்பெரிய சமூகம். வன்னியர் சமூகம் வளர்ச்சி அடையாதவரை, தமிழ் நாடு வளர வாய்ப்பே இல்லை. எனவே, தமிழ்நாடு முன்னேற வேண்டும் - என விரும்புகிறவர் எவராக இருந்தாலும், அவர்கள் வன்னியர்களின் வளர்ச்சியை, அதாவது வன்னியர்களின் வளர்ச்சிக்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

அதே போன்று, ஒவ்வொரு சமூகமும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையான விகிதாச்சார பங்கினை எல்லா நிலைகளிலும் அடைவதே தமிழ் நாட்டின் உண்மையான வளர்ச்சியாக இருக்கும்.

புதன், மார்ச் 19, 2014

ஐநா மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் பேச்சு: இனப்படுகொலை விசாரணை நடத்த நேரடியாகக் கோரிக்கை!

தற்போது ஜெனீவா நகரில் நடந்துவரும் ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பு கலந்துகொண்டுள்ளது. மனித உரிமைப் பேரவையில் 'இனப்படுகொலை' குறித்து நடத்தப்பட்ட விவாதத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் பிரதிநிதி தமையந்தி ராஜேந்திரா பங்கேற்று பேசினார். 

அவர் இலங்கையில் நடந்த இனப்படுகொலைக் குறித்து விசாரிக்க பன்னாட்டு விசாரணை ஆணையத்தை ஐநா அமைக்க வேண்டும் என ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் நேரில் வலியுறுத்தி உரையாற்றினார்.

ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் அவரது பேச்சினை கீழே காண்க:
http://youtu.be/mv6SAIH7nKs

பசுமைத் தாயகம் அமைப்பின் பிரதிநிதி தமையந்தி ராஜேந்திரா பேச்சின் எழுத்து வடிவம்:

25th Session of the United Nations Human Rights Council, Geneva

Item 3 – Interactive Dialogue with SASG on Prevention of Genocide

Organization: PASUMAI THAAYAGAM 

Presenter: Dhamayanthi Rajendra

Thank you Madam Vice President.

On the 65th anniversary of the “Convention on the prevention of Genocide” we are reminded,that every year, tens of thousands of civilians in Syria, Sudan, Democratic Republic of Congo, and many others continue to become victims of crimes against humanity and/or genocide.  

When crimes of genocide and crimes against humanity are left unpunished, and international community lacks the will to ensure accountability, it creates an environment of impunity that makes the world more vulnerable. Accountability requires first of all fact finding, then the identification of those responsible, punishment, reparations for victims, and restructuring of national institutions. 

When accountability is not a priority, prevention against future violations will also suffer.  The High Commissioner has recognized in two successive written reports that an international process of accountability must commence in Sri Lanka where tens of thousands of Tamils were killed in 2009 in ethnically-based violence. She and other global leaders, such as Bishop Desmond Tutu have correctly assessed the government of Sri Lanka has failed in its obligations to create a genuine and impartial domestic accountability mechanism and it lacks the political will to do so.

The UN’s own “Rights Up-Front” initiative to pre-empt and respond to early warning signs of mass atrocities in a timely manner, used Sri Lanka as a teaching moment after a UN internal inquiry found “systemic failure” in responding to the Sri Lanka crisis in 2009.  It is a timely initiative in response to the recommendations of the written statement submitted by the Society for Threatened Peoples.

The Human Rights Council is lagging behind the leadership of its own High Commissioner.  In this 25th session, the Council has an opportunity to establish an international mechanism with the mandate to conclusively establish the facts surrounding the now well-documented allegations of widespread systematic and gross violations including intentionally shelling of densely populated civilian areas and hospitals, extrajudicial killings and enforced disappearances.  

We call on UN member states to establish an international commission of inquiry on Sri Lanka to investigate international crimes, including that of genocide.  

Thank you Madam Vice President

தொடர்புடைய சுட்டிகள்: 

1. ஐநா தீர்மானம்: குழப்பவாதிகளிடம் இருந்து தப்புவார்களா ஈழத்தமிழர்கள்?!

2. இலங்கை: இனப்படுகொலையா? போர்க்குற்றமா? - கட்டுக்கதைகளும் உண்மையும்!

3. ராஜபக்சேவை காப்பாற்றும் தமிழ்த்தேசியப் போராளிகள்?!


4. இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை: ஐ.நா.வில் பசுமைத் தாயகம் வலியுறுத்தல்

சனி, மார்ச் 15, 2014

இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை: ஐ.நா.வில் பசுமைத் தாயகம் வலியுறுத்தல்

தற்போது ஜெனீவாவில் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைப் பேரவையில், ஐநாவின் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பான பசுமைத் தாயகம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையை ஐநா மனித உரிமைப் பேரவை ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதுகுறித்து மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்ட அறிக்கை: "இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை என்னால் நிறுவப்பட்ட பசுமைத்தாயகம் அமைப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இலங்கைப் போர் முடிவடைந்த நாளிலிருந்தே இலங்கை மீது போர்க்குற்ற மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் பசுமைத்தாயகம் வலியுறுத்தி வருகிறது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த 12 ஆவதுக் கூட்டத்தில் தொடங்கி கடந்த ஆண்டு நடைபெற்ற 24 ஆவதுக் கூட்டம் வரையிலான 13 கூட்டங்களிலும், இடையில் நடந்த பல சிறப்புக் கூட்டங்களிலும் இலங்கை தண்டிக்கப்பட வேண்டும் என பசுமைத்தாயகம் குரல் கொடுத்தது.

மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டம் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பசுமைத்தாயகம் அமைப்பு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட ஐ.நா. மனித உரிமை ஆணையம் அதை மனித உரிமைப் பேரவையின்  அனைத்து உறுப்பினர்களுக்கும் கடந்த 27 ஆம் தேதி அனுப்பி வைத்துள்ளது.

இலங்கையில் போரின் போதும், போருக்குப் பிறகும் சிங்களப்படையினர் கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகளையும், அட்டூழியங்களையும் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ள பசுமைத்தாயகம், ‘‘இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுபேற்றல் மற்றும் சமரசம் செய்தல் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை இலங்கை அரசு மதித்து செயல்படுத்தவில்லை. இலங்கை நீதித்துறையின் சுதந்திரம் குறித்தும், அதிகார வர்க்கம் மற்றும் இராணுவ அதிகாரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு போதிய அம்சங்கள் இல்லாதது குறித்தும் கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன.

இத்தகைய சூழலில் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், சர்வதேச மனித உரிமை மற்றும் மனித நேய சட்டங்கள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க நம்பகமான  விசாரணை அமைப்பை இலங்கை ஏற்படுத்தும் என்பது சந்தேகம் தான். எனவே இலங்கையின் இப்போதைய மற்றும் கடந்தகால போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை ஆகியவை குறித்து விசாரிக்க சுதந்திரமான, நம்பகமான சர்வதேச விசாரணைக்கு மனித உரிமை ஆணையம் ஆணையிட  வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்த இனப்படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலககெங்கும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இத்தகைய சூழலில் இலங்கைப் பிரச்சினையின் பின்னணி மற்றும் தீவிரத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் புரிந்து கொள்வதற்கு பசுமைத்தாயகம் அமைப்பின் அறிக்கை உதவும் என்று நம்புகிறேன்.

எனினும், இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அடுத்த சில ஆண்டுகளிலாவது நீதி கிடைக்க வேண்டுமென்றால், இலங்கை மீதான இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாற்றுகள் குறித்து சர்வதேச விசாரணைக்கு உடனடியாக ஆணையிடப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதை செய்து முடிக்க வேண்டிய கடமை அமெரிக்காவைவிட இந்தியாவுக்குத் தான் அதிகமாக உள்ளது.

எனவே, ஈழத்தமிழருக்கு அமெரிக்காவோ அல்லது வேறு ஏதேனும் நாடோ நீதி பெற்றுத்தரும் என்று எதிர்பார்ப்பதைவிட, இந்திய அரசே அதன் கடமையை நிறைவேற்ற வேண்டும். எனவே, இலங்கை மீது இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு  எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்பதை தனித் தீர்மானமாகவோ அல்லது ஏற்கனவே அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் திருத்தமாகவோ கொண்டுவந்து நிறைவேற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." இவ்வாறு மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமைப் பேரவை வெளியிட்டுள்ள பசுமைத் தாயகத்தின் அறிக்கை கீழே:

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

வரலாறு முக்கியம் அமைச்சரே! கலைஞரின் தந்திரம்: ஏற்கனவே ஐநா நிகழ்ச்சி நிரலில் உள்ளதை புதிய கோரிக்கையாக வைக்கும் விநோதம்!

ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை ஆகஸ்ட் 25 முதல் சுமார் ஒரு வாரகாலம் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், ஏதோ திமுகவின் வற்புறுத்தலுக்கு ஏற்ப அவர் அங்கு செல்கிறார் என்கிற அளவுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு, அதில் "இலங்கையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நவநீதம் பிள்ளை, ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்பாக ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். (இங்கே காண்க: நவநீதம் பிள்ளை ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க கருணாநிதி வலியுறுத்தல்)

ஐநா நிகழ்ச்சி நிரலில் உள்ளதையே கோரிக்கையாக வைக்கும் விநோதம்!

அமெரிக்காவின் முன்முயற்சியால் 2013 மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22 ஆம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலேயே, "2013 செப்டம்பர் மாதம் நடக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்தில் வாய்வழியாக ஒரு தகவல் அறிக்கையையும், அடுத்த ஆண்டு 2014 மார்ச் மாதவாக்கில் நடக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 25 ஆம் கூட்டத்தில் முழுமையான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. (இங்கே காண்க: 2013 Resolution on Promoting reconciliation and accountability in Sri Lanka)

அதன்படி, இப்போது ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், "ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்தில் வாய்வழியாக ஒரு தகவல் அறிக்கையை மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை அளிப்பார்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஐநா மனித உரிமைகள் அவையின் நிகழ்ச்சி நிரல் 2013 ஜூலை 24 ஆம் நாளே வெளியிடப்பட்டுள்ளது. (இங்கே காண்க: Agenda for the twenty-fourth session of the Human Rights Council)

In its resolution 22/1 on promoting reconciliation and accountability in Sri Lanka, the Human Rights Council requested OHCHR, with input from relevant special procedures mandate holders, as appropriate, to present an oral update to the Council on the implementation of that resolution. The Council will hear an oral update

ஆனால், இப்போது திடீரென கலைஞர் தனது அறிக்கையில் "நவநீதம் பிள்ளை அவர்கள் ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்று கேட்டுள்ளார். அதாவது 'ஐநாவில் நவநீதம் பிள்ளை அறிக்கை அளிப்பார்' என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதையே மீண்டும் கோரிக்கையாக வைத்துள்ளார் கலைஞர்
"டெசோ சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு 2012 ஆகஸ்ட் 12-ல் சென்னையில் நடைபெற்றது.இதில் ஈழ விவகாரம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த தீர்மானங்களை ஜெனீவாவுக்கு நேரில் சென்று நவநீதம் பிள்ளையிடம் திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சென்று கொடுத்தனர்.மேலும் நவநீதிமபிள்ளை இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சார்பில் அப்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இலங்கை செல்லும் நவநீதம் பிள்ளை ஈழத் தமிழர்களின் துன்பங்களையெல்லாம் நேரில் அறிந்து, ஐ.நா.முன்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று கருணாநிதி கோரியுள்ளார்.

தவறான தகவலைத் தரும் கலைஞர்

தனது அறிக்கையில் "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாகவே ஐநா மனித உரிமைகள் ஆணையமே 38 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையை தயாரித்து, அதன் தலைவர் நவநீதம் பிள்ளை சமர்ப்பித்தார்." என்று குறிப்பிடுகிறார் கலைஞர்.

ஆனால், அந்த அறிக்கை, ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் அடிப்படையில்தான் நவநீதம் பிள்ளை அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. (2012 Resolution on Promoting Reconciliation and Accountability in Sri Lanka)  அதாவது, 'அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாகவே அல்ல', மாறாக, 'அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததன் காரணமாகத்தான்' அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் முதல் வரியிலேயே '2012 ஆம் ஆண்டு மார்ச் தீர்மானத்தின் காரணமாக அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது' (இங்கே காண்க: Report of the Office of the United Nations High Commissioner for Human Rights on advice and technical assistance for the Government of Sri Lanka on promoting reconciliation and accountability in Sri Lanka)

The present report is submitted pursuant to Human Rights Council resolution 19/2,The present report is submitted pursuant to Human Rights Council resolution 19/2, in which the Council called upon the Government of Sri Lanka to implement the constructive recommendations made in the report of the Lessons Learnt and Reconciliation Commission and to take all necessary additional steps to fulfil its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability and reconciliation for all Sri Lankans. 

வரலாறு முக்கியம் அமைச்சரே - அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா!

என்னவோ போங்கள்!

ஐநாவில் என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப அறிக்கை விடுகிறார் கலைஞர், நாளை அவர் சொல்லிதான் எல்லாம் நடந்தது என்பார். தமிழ்நாட்டு மக்களும் நம்பித்தானே ஆகவேண்டும்.

அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா!

குறிப்பு: ஐநா மனித உரிமை ஆணையத்தில் இதே பிரச்சினையை பலமுறை எழுப்பியுள்ளது மருத்துவர் அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்ட பசுமைத்தாயகம்.

அவற்றை இங்கே காண்க:

1. ஜெனீவா: ஐநாவில் பசுமைத்தாயகம் சாதனை - இலங்கை மீது நேரடியாக சரமாரிக் குற்றச்சாட்டு!

2. ஜெனீவா ஐநா கூட்டத்தில் பசுமைத் தாயகம் பேச்சு: இலங்கை மீது சர்வதேச விசாரணை ஆணையம் - நேரடியாக வலியுறுத்தல்.


3. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!


4. இலங்கை இனப்படுகொலை, போர்க்குற்றம்: ஐநாவில் தொடரும் நீதிக்கான போராட்டம்.

ஞாயிறு, மார்ச் 17, 2013

ஜெனீவா: இந்தியாவின் பேசாத பேச்சுக்கே திட்டுகிறார் வைகோ - ஏன் இந்த அவரசம்?!


"இந்திய அரசு நேற்று முன்தினம் மார்ச் 15 ஆம் தேதி மனித உரிமை கவுன்சிலில் சிங்கள அரசை பட்டவர்த்தனமாக ஆதரித்து, அக்கிரமமான அறிக்கை தந்துள்ள துரோகம், தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணித்துள்ளது. இந்த அறிக்கை சிங்கள இராஜபக்சே அரசு தயாரித்துத் தந்த அறிக்கையாகவே தோன்றுகிறது." என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 17.03.2013 அன்று ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

ஐநாவில் தற்போது அரங்கேறிவரும் விவாதங்கள் தொடர்பில் தமிழ்நாட்டில் உள்ள குழுப்பத்தை இது வெளிப்படுத்துகிறது. 

கடந்த மார்ச் 15 ஆம் நாளன்று ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கை மீதான காலமுறை மீளாய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. (இது ஏற்கனவே கடந்த 2012 அக்டோபரில் நடந்த கூட்டத்தின் அறிக்கை ஆகும்). மார்ச் 15 கூட்டத்தில் - இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க அறிக்கை சமர்ப்பித்த பின்னர் அதன் மீது கருத்து சொல்ல நாடுகளுக்கும் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அது சமயத்தில் அம்னஸ்டி சார்பாக டாக்டர் மனோகரன் தனது காணாமல் போன மகன் குறித்து பேசினார்.

பேசும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெற்றிருந்தது. இந்தியாவிற்கு கீழே அரசு சார்பற்ற அமைப்புகளின் சார்பில் பசுமைத் தாயகம் இடம் பெற்றிருந்தது. ஆனால், நேரமின்மையின் காரணமாக இந்தியாவும் பேசவில்லை, பசுமைத் தாயகமும் பேசவில்லை.
ஐநா கூட்டத்தில் பேசுவதற்கு முன்பே பேச்சின் எழுத்து வடிவத்தை அளிக்க வேண்டும் என்பதால் - இந்தியாவும் பசுமைத் தாயகமும் தமது பேச்சினை அளித்திருந்தன. அது ஐநா மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலிலும் இடம் பெற்றுள்ளது. அதன்படி இந்தியா இலங்கைக்கு மழுப்பலான ஆதரவை தெரிவித்துள்ளது. பசுமைத் தாயகம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன் - பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கூறியது.

இந்தியா பேச இருந்த பேச்சின் எழுத்து வடிவம் இதோ (இங்கே சொடுக்கவும்): Statement by INDIA

பசுமைத் தாயகம் பேச இருந்த பேச்சின் எழுத்து வடிவம் இதோ (இங்கே சொடுக்கவும்): Statement by PASUMAI THAAYAGAM

ஆக, இந்தியா பேசுவதற்காக வைத்திருந்து, பின்னர் பேசாமல் விட்டுவிட்ட கருத்தினை தான் வைகோ அவர்கள் இந்தியாவின் அறிக்கை என்று குறிப்பிட்டு கண்டித்துள்ளார். (இந்தியாவின் அந்த வரைவிலேயே - இதைத்தான் பேசுகிறாரா என்று கவனித்து அதன் பின்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடவும் - Check against delivery - என்று குறிப்பிட்டுள்ளார்கள்!)  ஒருவேளை பேச வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் இந்தியா இதே கருத்தைதான் பேசியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எது எப்படியோ - பேசாத பேச்சுக்காகக் கூட திட்டு வாங்கும் நிலையில் இந்தியா இருப்பதை தமிழர்கள் வரவேற்கத்தான் வேண்டும்.

குறிப்பு: மார்ச் 15 காலை கூட்டத்தில் பசுமைத் தாயகம் பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றாலும் மதியம் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது பசுமைத் தாயகம் இலங்கைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததுடன் - பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கூறியது (அந்த பேச்சின் காட்சி வடிவம் இங்கு வெளியிடப்படும்).

தற்போது நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவையின் 22 ஆவது கூட்டத்தில் பசுமைத் தாயகம் இதுவரை நான்கு முறை இலங்கை மீது குற்றம் சாட்டி பேசியுள்ளது. ஆனால், ஒருமுறை கூட இந்தியா இலங்கை தொடர்பாக எதுவும் பேசவில்லை.

தொடர்புடைய சுட்டி:

ஜெனீவா: ஐநாவில் பசுமைத்தாயகம் சாதனை - இலங்கை மீது நேரடியாக சரமாரிக் குற்றச்சாட்டு!

வியாழன், மார்ச் 14, 2013

ஜெனீவா: ஐநாவில் பசுமைத்தாயகம் சாதனை - இலங்கை மீது நேரடியாக சரமாரிக் குற்றச்சாட்டு!

தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை பேரவையின் (UNHRC) கூட்டத்தில் பசுமைத் தாயகம் சார்பில் தமயந்தி ராஜேந்திரா, வழக்கறிஞர் கார்த்திகா தவராஜா, வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் ஆகியோர் "இலங்கையின் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தி பேசினர், இலங்கை மீது சரமாரிக் குற்றச்சாட்டினர்.

அவர்களது பேச்சினை கீழே காண்க:


பசுமைத் தாயகம் - கார்த்திகா தவராஜா

மார்ச் 11 திங்கள் அன்று நடந்த ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் கார்த்திகா தவராஜா கலந்து கொண்டு பேசினார். 

வழக்கறிஞர் கார்த்திகா தவராஜா பேச்சினை YOUTUBE வீடியோ மற்றும் எழுத்து வடிவிலும் அது தொடர்பான பத்திரிகை செய்தியையும் கீழே காணலாம்: (படத்தின் மீது சொடுக்கவும்)
Pasumai Thaayagam at UNHRC Kartiga Thavaraj, 11 March 2013
பேச்சின் எழுத்து வடிவம்: Pasumai Thaayagam at UNHRC - Kartiga Thavaraj, 11 March 2013


பசுமைத் தாயகம் -  தாஷா மனோரஞ்சன்

மார்ச் 12 செவ்வாய் அன்று நடந்த ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் கலந்து கொண்டு பேசினார்.

வழக்கறிஞர் தாஷா மனோரஞ்சன் பேச்சினை YOUTUBE வீடியோ மற்றும் எழுத்து வடிவிலும் அது தொடர்பான பத்திரிகை செய்தியையும் கீழே காணலாம்:(படத்தின் மீது சொடுக்கவும்)
Pasumai Thaayagam at UNHRC Tasha Manoranjan, 12 March 2013

பேச்சின் எழுத்து வடிவம்: Pasumai Thaayagam at UNHRC - Tasha Manoranjan, 12 March 2013

பத்திரிகை செய்தி: “Sri Lanka 'served as precursor' to Syrian tragedy”


பசுமைத் தாயகம் -  தமயந்தி ராஜேந்திரா 

அதற்கு முன்பாக மார்ச் 04 திங்கள் அன்று நடந்த ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் தமயந்தி ராஜேந்திரா கலந்து கொண்டு பேசினார். 

தமயந்தி ராஜேந்திரா பேச்சினை YOUTUBE வீடியோ மற்றும் எழுத்து வடிவிலும் அது தொடர்பான பத்திரிகை செய்தியையும் கீழே காணலாம்: (படத்தின் மீது சொடுக்கவும்)
Pasumai Thaayagam at UNHRC Dhamayanthi Rajendra, 4 March 2013

பேச்சின் எழுத்து வடிவம்: Pasumai Thaayagam at UNHRC - Dhamayanthi Rajendra, 4 March 2013

பத்திரிகை செய்தி: “UN Human Rights chief reiterates the need to monitor Sri Lanka's progress on accountability” 

ஐநாவில் பசுமைத் தாயகம்

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு ஐக்கிய நாடுகள் அவையால் சிறப்பு ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அமைப்பாகும் (non-governmental organization in special consultative status with UN ECOSOC). இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்புகள் மட்டுமே ஐநா அவையின் கூட்டத்தில் பங்கேற்கவும் பேசவும் முடியும்.

இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர்களுக்காக ஐநா மனித உரிமை பேரவை (UNHRC) கூட்டத்தில் பேசும் ஒரே அமைப்பாக 2009 முதல் பசுமைத் தாயகம் செயலாற்றி வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் அழைப்பின் பேரில் தற்போது ஜெனீவா நகரில் நடைபேற்றுவரும் 22 ஆவது ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஏழு பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர். அவர்கள் இலங்கையின் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என மனித உரிமை பேரவையின் உறுப்பினர்களை சந்தித்து வலியுறுத்து வருகின்றனர்.

ஐநா மனித உரிமை பேரவையில் நேரடியாக உரைநிகழ்த்தி அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.