Pages

திங்கள், அக்டோபர் 04, 2010

ராமர் பிறந்த இடம்: அடிப்படை ஆதாரம் யாருக்கு வேண்டும்?

ராமர் பிறந்த இடம் - தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களின் கருத்து:

""நீதிபதி டி.வி.சர்மா வழங்கிய தீர்ப்பில 'சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம்தான். ராமர் ஒரு கடவுள். அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபடப்பட்டிருக்கிறார். அங்கு பாபரால் கட்டடம் எழுப்பப்பட்டது. அந்த இடம் ராமர் பிறந்த இடமாகக் கருதி இந்துக்கள் வழிபட்டு வந்துள்ளனர். நினைவு தெரிந்த நாளிலிருந்தே, அதை ஆன்மீகப் புனிதத் தலமாகக் கருதி ஆன்மிகப் பயணம் சென்று வருகிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.


ராமர் கிருத யுகத்தில் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டதாகும். இப்படி கற்பனைக்கே எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என்று அறுதியிட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.


இந்தத் தீர்ப்பைப் பார்க்கும்போது, சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது; ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தென்னகத்தையே ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்காக நினைவுத்தூண் அமைந்த இடத்தையோ அறியமுடியவில்லையே என அகம் நொந்து வருந்ததானே வேண்டியுள்ளது.""

அய்யோ பாவம் முதல்வர். இதெல்லாம் ஒரு பெரிய வேலையா?


ஏதாவது ஒரு பிடிக்காதவரின் இடத்தக்காட்டி அங்குதான் ராஜராஜன் இறந்தான் என்று கட்டுக்கதையை கட்டிவிட்டால் போதாதா?


அப்புறம் இருக்கவே இருக்கு நீதிமன்றம் - மக்கள் நம்புகிறார்கள் என்று தீர்ப்பளித்துவிடாதா?


ஆனால் அவர் ஆதாரங்கள் குறித்து பேசுகிறார்:


""ஆராய்ச்சிகள் மூலமாக தொல்லியல் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள் திராவிட நாகரீகம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்துத்தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றினைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரீகம் அடிப்படை ஆதாரம் இல்லாமலேயே வெறும் மூடநம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாக செயல்பட்டிருக்கிறது.""

என்கிறார் முதலமைச்சர் கருணாநிதி.

தமிழனின் நிலை பரிதாபகரமானது. வரலாற்று ஆதாரங்களின்படி தமிழனுக்கு 3 ஆயிரம் ஆண்டு நாகரீகம் உண்டு. ஆனால், மூடநம்பிக்கை, கட்டுக்கதைகளின் படி ஆரியர்கள் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையவர்கள்.

3 ஆயிரம் பெரிதா? 17 லட்சம் பெரிதா?

அடிப்படை ஆதாரம் யாருக்கு வேண்டும்? அதுதான் மூட நம்பிக்கையே போதுமானது என்று "நீதிமன்றமே" சொல்லிவிட்டதே!

3 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

இந்தக் கொலைக்குற்றம் சாட்டப்பட்டக், காமம் பிடித்தக் கழிசடைச் சுப்புணியும், மற்ற அரசுகளுக்குக் கைக்கூலியான மாமா சுப்புணியும் சிறையிலடைக்கப் பட வேண்டியவர்கள். "இந்து" "ராமன்" என்ற முகமூடியைக் கிழித்து அனைத்துச் சிறு பான்மையினரும், மற்றும் பிற்படுத்தத் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் இதில் ஒன்று சேர்ந்து சர்மாக்களின் நரித்தனத்தை ஒடுக்க வேண்டும். இல்லையோ பார்ப்பனீயத்தின் அட்டகாசம் மற்றவர்களைப் பிரித்து சண்டை மூட்டி வேடிக்கை பார்த்து பலனை அனுபவித்துக் கொள்ளும்

Unknown சொன்னது…

நடு நிலையான கட்டுரை. தங்களுடைய எழுத்து பணி தொடர அதிரை வாய்ஸ் சார்பாக வாழ்த்துகிறேன்

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) சொன்னது…

ஆணி அடித்தது போல் சொல்லி இருக்கிறீர்கள்.

additional matter : இந்த தமிழனின் நாகரீகத்தைப் பற்றி பேசும் கலைஞரின் டி.வி தான் நமது நாகரிகத்துக்கு பெரிதும் உதாரணமாகத் திகழும்(??) மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறது. இதனால் எப்படி தமிழனின் நாக்ரிகம் வெளிப்படுகிறது என்றெல்லாம் கேட்கப்படாது, அது மேடையில் பேசியது, இது காசுக்காக?