Pages

செவ்வாய், டிசம்பர் 07, 2010

விஜயகாந்த் ஒரு கிறித்தவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

"விஜயகாந்த் இனி 'புரட்சிக்கலைஞர் டாக்டர் விஜயகாந்த்'.  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஐ.ஐ.சி.எம். பலகலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியிள்ளது." - இது பத்திரிகை செய்தி.

நடிகர் - அரசியல்வாதியான திரு. விஜயகாந்த் அவர்கள் டாக்டர் பட்டம் வாங்குவதில் குறைசொல்ல எதுவும் இல்லை. அது வரவேற்க வேண்டியதுதான்.

அதேசமயம், நாட்டின் புகழ்பெற்ற முன்னணி பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்குவது நாம் அறிந்தது. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பலரும் இப்படி டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். இப்போது, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கூட டாக்டர் பட்டம் தருகின்றன. கமலஹாசன், நடிகர் விஜய் போன்றோர் இப்படி டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.

ஆனால், இவ்வாறெல்லாம் இல்லாமல் - அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஐ.ஐ.சி.எம். பலகலைக்கழகத்தில் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

அது என்ன - ஐ.ஐ.சி.எம்?

பன்னாட்டு கிறித்துவ தேவாலய மேலாண்மை நிறுவனம் (International Institute of Church Management Inc.) என்பதுதான்"ஐ.ஐ.சி.எம்" ஆகும். இது இணையத்தின் மூலம் கிறித்துவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பு. நமது ஊரில் ஆங்காங்கே உள்ள "இயேசு அழைக்கிறார்" என்கிற மதத்தைப் பரப்பும் அமைப்புகள் போன்றதுதான் அது. அது ஒரு பொதுவான கல்விநிலையமோ, பல்கலைக்கழகமோ அல்ல.

அதாவது - முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

அதிலும் அந்த அமைப்பு "டாக்டர் பட்டம்" அளிக்க வைத்திருக்கும் நிபந்தனைகளை பார்த்தால் - திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றது விந்தையாக இருக்கிறது.

கிறித்தவ மதம் தொடர்பான "Biblical Studies, Church Management, Christian Leadership, Ministry" ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் தங்களது "பயோ - டேட்டாவை" அனுப்பினால் "டாக்டர் பட்டம்" கிடைக்குமாம். ஆக, பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி இதிலெல்லாம் திரு. விஜயகாந்த் எப்போது நிபுணத்துவம் பெற்றார் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

இப்படிதான் முன்பு ஐ.நா. அவையின் பேரைச்சொல்லி - இல்லாத ஒரு பன்னாட்டு அமைப்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு "தங்கத்தாரகை விருது" கொடுத்தது. இப்போது - ஒரு மதப் பிரச்சார அமைப்பு பல்கலைக்கழகத்தின் பெயரால் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு "டாக்டர் பட்டம்" அளிக்கிறது.

இப்படி செல்வி. ஜெயலலிதா, திரு. விஜயகாந்த் போன்று உயர்ந்த இடத்தில் இருப்பவர்களே, எளிதில் ஏமாறுவது அதிர்ச்சியளிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணையதளத்தை காண்க.

http://www.iicmweb.org/

ஐ.ஐ.சி.எம் நிறுவனத்தின் நோக்கங்கள் இதோ:

OBJECTIVES OF IICM

To provide Continuing Education for Pastors, Evangelists, Bible Teachers and Christian Leaders;

To Equip Professionals, Businessmen/Women & Lay Leaders for Ministry.

To Teach the Word of God, topically in a Simple and Practical Way to make it Easy to Understand and Apply it, both in their Lives and Ministries

To help understand the importance of using Management Skills and Modern Technologies of Communication to Maximize Results in the Ministry

To impart Revelation Knowledge of the Word of God and the Anointing of the Holy Spirit

To facilitate Spiritual, Leadership and Church Growth and Development

To help being Effective and Successful in Life and Ministry in terms of achieving Goals and realizing Full Potential

To help Discover and Fulfill God's Will & Purpose!

19 கருத்துகள்:

பொன் மாலை பொழுது சொன்னது…

ஐ ஐ சி எம் பற்றி முன்னரே நெட்டில் படித்துள்ளேன். தாங்கள் கூறியுள்ளது சரியே.
இந்த அமைப்பு ஒரு கிருஸ்துவ மத பிரசார அமைப்பே அன்றி பிற கல்வி பணியாற்றும் பல்களிக்கழக்கம் அல்ல.


// இப்படி உயர்ந்த இடத்தில் இருப்பவர்களே, எளிதில் ஏமாறுவது அதிர்ச்சியளிக்கிறது.//

உண்மையில் ஏமாந்தது விஜகாந்த் தான் அன்றி ஐ.ஐ.சி எம் அல்ல.
விஜயகாந்துக்கு ஐ ஐ சி எம் பற்றி உண்மைதெரிய வாய்ப்பில்லை. இவர்கள்தான் "தாங்கள் ஒரு பெரிய அமெரிக்க பல்கலைக்கழகமாக்கும் " என்று உதார் விட்டுள்ளனர் என்று தெரிகிறது. இனிமேல்தான் உண்மைகள் வெளிவரும் பாருங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

என்ன கொடும சார் இது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அப்போ கேப்டன இனிமே டாக்டர்னு கூப்பிடறதா இல்லையா?

Unknown சொன்னது…

உங்களுக்கு ரெண்டு மூனு வேணுமா கேட்டு வாங்கிட்டு போங்க... எதுக்கு இப்படி அசிங்கமா பிளாக்ல வந்து எழுதிகிட்டு இருக்கீங்க... இப்ப இந்த டாக்டர் பட்டத்த வச்சி நாங்க என்ன பண்ணப்போறோம்.. கேப்டன் தன் ஒரிஜினல் கேரக்டர.. நானே ராஜா நானே மந்திரி என்கிற படத்துல பண்ணிருப்பாரு... போய் அதப்பாருங்க....

எஸ்.கே சொன்னது…

என்னென்னமோ நடக்குது!

அருள் சொன்னது…

கக்கு - மாணிக்கம் சொன்னது…

// //உண்மையில் ஏமாந்தது விஜகாந்த் தான் அன்றி ஐ.ஐ.சி எம் அல்ல.// //

நானும் "செல்வி. ஜெயலலிதா, திரு. விஜயகாந்த் போன்று உயர்ந்த இடத்தில் இருப்பவர்களே, எளிதில் ஏமாறுவது அதிர்ச்சியளிக்கிறது" என்கிற பொருளில்தான் கூறினேன்.

அதற்கேற்ப பதிவிலும் மாற்றிவிட்டேன். நன்றி.

virutcham சொன்னது…

தொ.கா செய்தியில் பார்த்தவுடனே எதோ நெருடலாக தோன்றியது. இது என்ன சம்பந்தமே இல்லாம இருக்கேன்னு.
ம்ம்ம்...

அஞ்சா சிங்கம் சொன்னது…

விஸ்வநாதன் ஆனந்தால் வாங்க முடியாத டாக்டர் பட்டம். இவர்களுக்கு மட்டும் எந்த சாதனையும் செய்யாமல் சுலபமாக கிடைக்கிறது.உங்களுக்கு தெரிஞ்சி எங்கயாவது டாக்டர் பட்டம் விக்கிராங்கன்னா சொல்லுங்க ஒன்னு ரெண்டு வாங்கி போடலாம்.
பின்னால ஒதவும்.

Unknown சொன்னது…

மக்களுக்கு பணம், தலைவர்களுக்கு டாக்டர் பட்டம் .
வெளங்கிடும் நாடு?

Unknown சொன்னது…

//விஸ்வநாதன் ஆனந்தால் வாங்க முடியாத டாக்டர் பட்டம். இவர்களுக்கு மட்டும் எந்த சாதனையும் செய்யாமல் சுலபமாக கிடைக்கிறது.உங்களுக்கு தெரிஞ்சி எங்கயாவது டாக்டர் பட்டம் விக்கிராங்கன்னா சொல்லுங்க ஒன்னு ரெண்டு வாங்கி போடலாம்.
பின்னால ஒதவும். //

இங்க ரெண்டு ,
கொஞ்சம் சூடா கெடைக்குமா?

Unknown சொன்னது…

please remove word verification.
படிப்பவர்கள் பின்னூட்டம் போடாமல் போக வாய்ப்புள்ளது.

பெயரில்லா சொன்னது…

Nowadays I hate when people make fun of Vijay's & Vijayakanth's 'Honorary Doctorates"; after all they are honorary doctorates. None is expected to go for school and to do the coursework and research for getting the degree. Honorary doctoral degree for what they have achieved in their field. They do not hang PhD or DSc behind their names.However I hate seeing dogs running around with online college degrees even without stepping into the school (of course, if there were a physical structure with the school). scroll down in this notes to read about the degree that a dog got from Ametread University. It is not hilarious, but indicates the dangerous time for education that we live.

-------------------------------Dr. Prakash M. Swamy M.COM., B.J. B.S.J (USA), PhD (USA)

http://rfaadistrict3230.org/Detail.asp?rid=R00002http://www.newyorkbookfairexpo.com/autor.php?id=119

"...a doctoral degree in media studies from Amstead University"------------------------------

Amstead University

http://www.amsteaduniversity.org/Amstead University sells BBM to dog

http://tinyurl.com/36ybxrj

News First Investigates: diploma mills, NBC News First 5/30 (Colorado), February 4, 2005."...In the past year the General Accounting Office has found 463 federal government employees with bogus degrees from just three non-accredited schools, often called diploma mills. In those cases, taxpayers paid for the bogus degrees; at a cost of $170,000.To see how easy it is to get a degree we filled out an application for Brinkley Moore, a dog who was Pug of the month last October on pugnation.com. It cost us $180, but Brinkley now has a Bachelor's degree in Business Management from Amstead University. Her transcripts show she had a 3.3 grade point average, even though she's less than two years old.Amstead University's website is registered overseas, but the phony transcript came from a U.P.S. story in Santa Fe, New Mexico.Several "universities" use the same New Mexico address, but no one's been able to track down who runs them. "These drop boxes are often rented out, they're paid for with cash and so there's not even really a way for law enforcement to track who's responsible for running these types of companies because of where they're located out of.," said Katie Mitzner of the Better Business Bureau... "

---------

More on Amstead University

1. "Amstead University Distance Learning Accreditation Report"

http://tinyurl.com/33vwsp9

2. "Just call me Doctor"

http://tinyurl.com/36x4lan

3. "Amstead University ripoff Internet"

http://tinyurl.com/3a5vq6z

4. "Schools that are not Authorized to Offer Degrees in the State of Oregon"

http://tinyurl.com/mfvart

5. Amstead University

http://tinyurl.com/324b6nz

6. "Non-Accredited Colleges & Universities List in Maine"

http://tinyurl.com/394lg2c

ரிஷபன்Meena சொன்னது…

தமிழ் நாட்டு அரசியல்வாதி , நடிகர்கள் எல்லாருக்கும் இது ஒரு வியாதி.

“துக்ளக்” பத்திரிக்கை கொடுத்த டாக்டர் பட்டத்தை நான் கூட தான் வாங்கினேன். ஆனா அதையெல்லாமா பேருக்கு முன்னாடி போட்டுக்குவாங்க.
word verification -ஐ நீக்கவும். பின்னூட்டம் தனியாக திறக்க ஏற்பாடு செய்யவும். இது பாதி நேரம் எரர் மெஸேச் தான் தரும்

நையாண்டி நைனா சொன்னது…

ஐயோ ஐயோ ஏமாந்தது விஜயகாந்தும் இல்லே, அந்த பல்கலைகழகமும் இல்லே...
இது ரெண்டு பேரும் சேர்ந்து சாதாரண மக்களை ஏமாற்ற....
இப்ப ஏமாந்தது நீங்களும் நாமும் தான். போங்க
போங்க போயி நீங்களும் எங்காவது எஞ்சினீர் பட்டம் கெடைக்குதான்னு பாருங்க

smart சொன்னது…

சோனியா காந்தி போல விஜயகாந்தும் மாறிருவாரோ?

தமிழ்மலர் சொன்னது…

அன்டோனியாவுக்கு யாராவது டாக்டர் பட்டம் கொடுப்பார்களா?

Arun Ambie சொன்னது…

விசயகாந்து இசுலாமியருக்கு ஆதரவாகத்தானே இருந்து வந்தார். இப்ராகிம் ராவுத்தர் ஜிகிரி தோஸ்து, மகனுக்கு முஸ்லிம் பேர் வைக்க நினைத்தது என்று பல கும்மட்டங்கள் கட்டினாரே? இப்போது திடீரென கிரிஸ்தவ தேவாலய மேலாண்மை நிறுவனத்திடம் பட்டம் பெறுகிறார் என்றால் சிலபல காரணங்கள் இருக்கும். அரபு நாடுகளில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் இப்படி ஓப்பியடிக்கிற டாக்டர் பட்டங்கள் தருவதில்லை.

அமெரிக்காவில் பல பல்கலைக்கழகங்கள் 10x10 அறையில் நடத்தப்படுகின்றன. அமெரிக்க கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களுக்கும் தரும் பட்டங்களுக்கு வெளிநாடுகளில் குறிப்பாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் மவுசு காரணமாக இப்படிப் பவிசு காட்டும் பல நிறுவனங்கள் இருக்கின்றன. சொன்ன காசைக் கொடுத்துவிட்டால் பட்டத்தைக் கச்சிதமாக வழங்கிவிடுவார்கள்.

IICMல் சற்றே குறைந்த விலையில் பட்டத்தை அளித்திருப்பார்கள். ஆடம்பரம் வேண்டாம் என்று குறைந்த செலவில் விசயகாந்து பட்டம் வாங்கியிருப்பார். அதுவும் Convocation எல்லாம் கிடையாது, பணம் கைக்கு வந்ததும் ஒரு சான்றிதழ் அச்சடித்து கூரியரில் அனுப்புவார்கள். டிக்கெட் எடுத்துக் கொடுத்தால் ஒரு அமெரிக்கர் வந்து இவர்கள் நடத்தும் விழாவில் பங்கெடுத்துக் கொண்டு பட்டத்தை கையில் கொடுப்பார். அப்படியே விசயகாந்து மக்கள் நலனுக்கு ஆற்றிய அரும்பணிகள் குறித்து சொற்பொழிவு ஆற்றுவார்.

டப்பு மட்டும் வெச்சிருந்தாப் போதும் நீங்க தப்பு கிப்பு செஞ்சாலும் நியாயம்னு சினிமாவுல பாடியே வெச்சிருக்காங்களேய்யா.... சினிமாக்காரர் விசயகாந்து அதை நடைமுறையில கடைப்பிடிக்கிறாரு...............

சீ.பிரபாகரன் சொன்னது…

விசயகாந்த் போன்ற தற்குறிகளுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமா டாக்டர் பட்டம் கொடுக்கும். ஒரு டுபாக்கூருக்கு இன்னொரு டுபாக்கூருதான் பட்டம் கொடுக்கும்.

☀நான் ஆதவன்☀ சொன்னது…

அடப்பாவிகளா.. செய்யிற தப்பை ஒழுங்கா செய்ய வேணாமா :)