Pages

புதன், நவம்பர் 09, 2011

அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்


கூடங்குளத்தில் அணுமின்நிலைய போராட்டம் தீவிரமடைந்துவரும் நிலையில் அணுமின்சாரம் குறித்த கட்டுக்கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவை, உலகின் பலநாடுகளால் விரும்பப்படுபவை, இதைவிட்டால் இந்தியாவில் மின் தேவையை ஈடுசெய்ய வேறுவழியே இல்லை - இப்படியாக நீள்கின்றன கட்டுக்கதைகள். இந்த கோயபல்சு பிரச்சாரத்திற்கு இப்போது தலைமையேற்றுள்ளார் அப்துல்கலாம்!

எனவே, உண்மை நிலையை அறியவேண்டியது அவசியம். (அணுமிசாரம் குறித்த எனது விரிவான கட்டுரையை இங்கே PDF வடிவில் காண்க.)
கட்டுக்கதை 1. அணுமின்சாரம் சிறந்தது, எனவே, உலக நாடுகள் அதை விரும்புகின்றன.

உண்மை: அணுமின்சாரம் சிறந்த மின்சாரமாக இருந்திருந்தால் உலகநாடுகள் அதிக அளவில் அணு உலைகளை அமைத்திருக்கும். ஆனால், உலகின் 31 நாடுகளில் மட்டுமே அணு உலைகள் அமைக்கப்பட்டன. அதிலும் ஒருநாடு, லிதுவேனியா தனது கடைசி அணு உலையை மூடிவிட்டது. இப்போது ஐ.நா. அவையில் உறுப்புநாடுகளாக உள்ள 192 நாடுகளில் வெறும் 30 நாடுகளில் மட்டுமே அணு உலைகள் உள்ளன.

அதிலும் உலகின் அணு உலைகளில் முக்கால் பங்கு வெறும் 6 நாடுகளில் மட்டுமே உள்ளன. அவை. அமெரிக்கா, பிரான்சு, ஜப்பான், ரசியா, செர்மனி, தென் கொரியா. இவற்றில் - செர்மனி, ஜப்பான் நாடுகள் அணு உலைகளுக்கு விடைகொடுக்கப்போவதாக அறிவித்துள்ளன.

2002 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 444 அணு உலைகள் இருந்தன. இப்போது 437 அணு உலைகள் மட்டுமே உள்ளன. அதாவது - உலகளவில் அணுமின் திட்டங்கள் அதிகமாகவில்லை. குறைந்து வருகின்றன.

கட்டுக்கதை 2: அணுமின்சாரம்தான் எதிர்காலத்தின் மின்சாரம்.

உண்மை: "அணுமின்சாரம்தான் எதிர்காலத்தின் மின்சாரம்" என்பது ஒரு அயோக்கியத்தனமான கூற்று. இதனை அப்துல் கலாம் அவர்கள் கூறிவருகிறார். இப்போது சுமார் 4,800 மெகாவாட் அளவாக உள்ள இந்திய அணுமின் உற்பத்தியை 50,000 மெகாவாட் அளவாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இந்திய அணுசக்தி துறை 1970 ஆம் ஆண்டில் வெளியிட்ட கணிப்பில் 2000 ஆவது ஆண்டில் இந்தியாவில் 43,000 மெகாவாட் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறியது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் கூட 4,870 மெகாவாட் அளவுதான் எட்ட முடிந்தது.

உலகளவில் 2000 ஆம் ஆண்டில் 4,450 ஜிகாவாட் (ஒரு ஜிகாவாட் = 1000 மெகாவாட்) அளவு அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று பன்னாட்டு அணுசக்தி முகமை 1974 ஆம் ஆண்டிலேயே அறிவித்தது. ஆனால், 2011 ஆம் ஆண்டில் கூட 375 ஜிகாவாட் அளவுதான் உலகம் முழுவது அணுமின்சாரம் உற்பத்தி ஆகிறது.

அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டில் அந்நாட்டு அதிபர் நிக்சன் அங்கு 1000 அணு உலைகள் அமைக்கப்போவதாகக் கூறினார். ஆனால், அங்கு ஒட்டுமொத்தமாக 253 அணு உலைகள் தொடங்க உத்தரவிடப்பட்டு, 71 நிலையங்கள் தொடங்குவதற்கு முன்பே கைவிடப்பட்டன, 50 நிலையங்கள் கட்டுமானம் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டன. 28 நிலையங்கள் தொடங்கிய பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டன. இப்போது 104 அணுமின் நிலையங்கள் மட்டுமே உள்ளன. அதுமட்டுமல்லாமல் கடந்த 37 ஆண்டுகளாக அமெரிக்காவில் புதிய அணுமின் நிலையம் தொடங்கப்படவில்லை.
உலகிலேயே அதிக அணு உலைகள் உள்ள பகுதி மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஆகும். அங்குள்ள 18 நாடுகளில் எட்டு நாடுகள் அணுமின்சாரத்திட்டங்கள் இல்லாத பகுதி என அறிவித்து விட்டன. 4 நாடுகள் புதிய அணு உலைகள் தொடங்க மாட்டோம் எனக் கூறிவிட்டன. செர்மனி நாடு 2022 க்குள் அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடப்போவதாகக் கூறிவிட்டது. அங்கு வெறும் மூன்று நாடுகள் மட்டுமே அணுமின்சாரத்தை ஆதரிக்கின்றன. ஐரோப்பா முழுவதிலும் கடந்த 30 ஆண்டுகளாக புதிய அணுமின் திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை.

இப்போது உலகின் மொத்த மின் உற்பத்தியில் 13% அணுமின்சாரம் ஆகும். இது 2050 ஆம் ஆண்டில் 6% ஆகக் குறையும் என மதிப்பிட்டுள்ளது பன்னாட்டு அணுசக்தி முகமை. எனவே, அணுமின்சாரம்தான் எதிர்கால மின்சாரம் என்பது காதில் பூ சுற்றும் வேலை.

அணுமின்சாரம் பாதுகாப்பானதா? மலிவானதா? தூய்மையானதா? அணுமிசாரத்திற்கு மாற்றே இல்லையா? : இந்தக் கேள்விகளுக்கெல்லாம்  பதிலை PDF வடிவில் இங்கே காண்க:

http://www.scribd.com/fullscreen/72120961?access_key=key-1l58hvqnghuv47o9q84r

11 கருத்துகள்:

நிவாஸ் சொன்னது…

உண்மையின் தெளிவு இந்த கட்டுரை

அணு உலையால் என்ன பாதிப்பு, விபத்து ஏதேனும் நடந்துவிட்டால் என்ன செய்வது? இதனால் நமது சந்ததியினருக்கு பாதிப்பு வருமே என்றெல்லாம் சிந்திப்பதில்லை

முதலீடு செய்தவர்களுக்கு லாபம் வேண்டும்

அரசியல் வாதிகளுக்கு இதில் வரும் பணம் மூலம் ஆதாயம் வேண்டும்

இதன்மூலம் சிலருக்கு வேலை வேண்டும்

அனைவர் வீட்டிற்க்கும் மின்சாரம் வேண்டும்

அதற்காக ஆயிரம் ஆயிரம் மக்களின் உயிரும் வாழ்வாதாரமும் பனையமாக வைக்க வேண்டும்

என்ன ஒரு மனப்பான்மை இவர்களுக்கு?


நல்ல பதிவு சகோ

மிக்க நன்றி

Prabu Krishna சொன்னது…

சூரிய ஓலையில் தனியார் இருப்பதால் தான் அரசு அந்த பக்கம் திரும்பவில்லை போலும். பெட்ரோல் விலை போல இதிலும் நிறைய அரசியல் உள்ளது சகோ.

நல்ல கட்டுரைக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

முதலில் இலவசம் தருவார்கள்... பிறகு பயம் காட்டுவார்கள்...

கூடவே கட்டுக்கதைகளும் பரப்புவார்கள்...கீழ்த்தரமாய் போய் இன்னும் பல செய்வார்கள்...

அணுமின்சாரம்தான் எதிர்கால மின்சாரம் என்பது காதில் பூ சுற்றும் வேலை.//


இது எம் ஜி யார் உயிரோடு இருப்பதாய் நம்பி இன்னும் ஒட்டு போடும் மக்கள் கூட்டம் என்று நினைத்து விட்டார்கள் போல...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அப்துல்கலாம் மீது இருந்த மரியாதை போயே போச்சண்டி....!!!

வேண்ணா பாருங்க இவருக்கு கவர்னர் பதவி கண்டிப்பா காங்கிரஸ் மேலிடம் கொடுக்கும். அப்போது கலாமின் சாயம் வெளுத்து விடும் அப்புறமென்ன, சுப்பிரமணியன் சாமி மாதிரி காமெடி பீசாகிருவார்...!!!

முருகன் சொன்னது…

EVERYONE MUST READ AND THINK...GOOD ONE. HATS OFF!!!

எஸ் சக்திவேல் சொன்னது…

>கடந்த 37 ஆண்டுகளாக அமெரிக்காவில் புதிய அணுமின் நிலையம் தொடங்கப்படவில்லை

Good

சீனி மோகன் சொன்னது…

1991 - இல் நான் எழுதிய இந்தச் சிறுகதையை நண்பர்கள் சற்று நேரம் ஒதுக்கி படியுங்கள்.

http://seenimohan.blogspot.com/2011/11/blog-post_13.html

ரசிகன் சொன்னது…

விழிச்சிகிட்டிருக்கும் போதே, வித்துட்டு போக பாக்கறாங்க. தெளிவா சொல்லி இருக்கீங்க.

உங்கள் பசுமை பணி தொடர வாழ்த்துக்கள்.

PUTHIYATHENRAL சொன்னது…

தமிழர் சிந்தனை தளத்தில் நல்ல பதிவுகளை வழங்கி வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.
தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்! http://www.sinthikkavum.net/2011/11/blog-post_14.html

PUTHIYATHENRAL சொன்னது…

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

PUTHIYATHENRAL சொன்னது…

நல்லபதிவு தோழரே வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும். அதிகாரவர்க்கத்தின் முகத்திரையை கிழிக்கும் பதிவு. அபுல்கலாம் என்றுமே அரசின் கைதடிதானே அதனால் பாடித்தான் சொல்லுவார். சாதாரண தமிழனே தேசபக்தி முகமூடி போட்டு கொண்டு இதையெல்லாம் எதிர்க்க தயங்குகிறான். அவர் முன்னாள் ஜனாதிபதி ஆச்சே எப்படி அரசுக்கு விரோதமா பேசுவார். துன்பப்படபோவது கூடங்குளம் மீனவர்களும், அதைசுற்றி உள்ள விவசாயிகளும் மற்ற ஏழைஎளிய மக்களும்தான். அபுல்காலாமுக்கு என்ன அவர் டில்லி, மும்பை என்று எங்காவது பாதுகாப்பா இருப்பார்.