Pages

திங்கள், ஜனவரி 30, 2012

தினமலருக்கு வன்னியர்கள் மேல் ஏன் இந்த கொலைவெறி? சாதிக்கலவரத்தை தூண்டும் தினமலர் தண்டிக்கப்பட வேண்டும்.

உலகின் நம்பர் 1 தமிழ் நாளிதழ் என தன்னைத் தானே புகழ்ந்துகொள்ளும் தினமலர் இப்போது வன்னியர்கள் மீது போர்தொடுத்துள்ளது. 
வன்னியர்களை திட்டமிட்டு அவமானப்படுத்தும் வகையில் "வாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியா: "கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள்" எனும் செய்தியை 29.01.2012 அன்று வெளியிட்டது தினமலர். 

இச்செயதியில் 1. ஒருபிரிவு மக்களின் கௌரவத்தை படுகொலைச் செய்தல், 2. பொய்யான தகவல்களின் அடிப்படையில் கட்டுக்கதையைப் பரப்புதல், 3. சாதிச்சண்டையைத் தூண்ட முயற்சி செய்தல் ஆகிய செயல்களின் மூலம் 'பத்திரிகையாளர் நடத்தை விதிகளுக்கு (NORMS OF JOURNALISTIC CONDUCT) எதிரான' படுபாதகங்களை அரங்கேற்றியுள்ளது தினமலர்.

இந்த கொடும்குற்றங்களுக்காக தினமலர் நாளேடு தண்டிக்கப்பட்டாக வேண்டும்.
1. வன்னியர்களின் கௌரவத்தை படுகொலைச் செய்தல்

"இவர்கள் (வன்னியர்கள்) வறுமை காரணமாக, சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட காலமும் உண்டு. தற்போது, நாகரிக வளர்ச்சியின் காரணமாக, சமூகத்தில் தங்களை மேம்படுத்திக் கொண்டு வருகின்றனர்."


"சமூகத்தில் தங்களை மேம்படுத்தப்பட்டவர்களாக உயர்த்திக் கொண்டாலும், இன்றளவும் அவர்கள் வம்புக்கும் (சண்டைக்கும்), அடாவடிக்கும் (அடக்குமுறைக்கும்) பெயர் போனவர்கள் என்ற எண்ணம் பிற சமூகத்தினரிடம் உள்ளது. அதன் காரணமாக வன்னியர்கள் என்றால், அவர்களிடம் வரவு செலவு, கொடுக்கல் வாங்கல் கூடாது என்பதை, எழுதப்படாத விதியாக பிற சமூகத்தினர் கடைபிடிக்கின்றனர்." - என்கிறது தினமலர்.

இந்த செய்தி வன்னியர்கள் பற்றி தவறான கருத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு வேண்டுமென்றே எழுதப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் குற்றப்பரம்பரையினராகக் கருதப்பட்டதாகக் கூறப்படும் சமூகங்கள் தற்போது அப்படி அழைக்கப்பட்டால் அதனை எதிர்த்து கடுமையாகப் போராடி கௌரவத்தை பாதுகாக்க முன்வருகின்றனர். எந்த ஒரு சமூகமும் தனது தன்மதிப்புக்கு இழுக்கான 'பொய்ச்செய்திகளை' வேடிக்கைப் பார்க்க முடியாது.

வன்னியர்கள் "சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட காலமும் உண்டு" என்பதும், "வன்னியர்கள் என்றால், அவர்களிடம் வரவு செலவு, கொடுக்கல் வாங்கல் கூடாது என்பதை, எழுதப்படாத விதியாக (அதாவது இன ஒதுக்கல்) பிற சமூகத்தினர் கடைபிடிக்கின்றனர்" என்பதும் வன்னியர்களின் கௌரவத்தை படுகொலைச் செய்யும் கொடூரச் செயலாகும்.

2. பொய்யான தகவல்களின் அடிப்படையில் கட்டுக்கதை

"சமூகத்தில் மேம்பட்ட நிலைக்கு வந்துள்ள வன்னியர்கள் பலர், தொழில் ரீதியான பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், தங்களை, "கவுண்டர்' என சமூகத்தில் அறிமுகம் செய்து கொண்டு வலம் வருகின்றனர்." - என்கிறது தினமலர்.

இதுஒரு அப்பட்டமான கடைந்தெடுத்தப் பொய். வன்னியர்கள் எவரும் எந்த இடத்திலும் சாதியை மாற்றிக்கொள்வது இல்லை. அதிலும் MBC பட்டியலில் உள்ள வன்னியர்கள் தம்மை BC ஆக மாற்றுவதால் சிறிதளவும் பயன் இல்லை.

வன்னியர் ஒருவர் தன்னை கொங்கு வேளாள கவுண்டராக "எங்கே? யார்? எப்போது? " சாதியை மாற்றிக்கூறினார்? அதனால் அவர் அடைந்த பயன் என்ன? உண்மை என்றால் அதனை ஆதாரத்துடன் விளக்க வேண்டும்.

3. சாதிச்சண்டையைத் தூண்டும் முயற்சி

"அரசியில் ரீதியா வளர்ச்சி கண்டுள்ள பலர், தங்களை, "வன்னியர்' என அரசியலுக்காக வெளியில் கூறினாலும், தங்கள் சமூகத்தினர் மத்தியில், "கவுண்டர்' என அடையாளம் காட்டுவதை தான் பெருமையாக கருதுகின்றனர். "கவுண்டர்' என வலம் வரும் பலர், தற்போது தங்களை, "கொங்கு வேளாள கவுண்டர்' என, மாற்றிக் கொள்ளவும் துவங்கி விட்டனர்." - என்கிறது தினமலர்.

"தன்னுடைய சாதியைவிட தான் மாற்றிக்கூறும் சாதி உயர்வானது" என்று ஒருவர் நினைக்கிறார் என்பது சாதி ஏற்றத்தாழ்வினை கட்டமைக்கும் முயற்சி. இது நாட்டு நலனுக்கு எதிரான தினமலரின் சமூகவிரோதச் செயல்.

கூடவே, நல்லுறவுடன் பழகிவரும் இரண்டு தமிழ்ச் சமூகத்தினரிடையே பகைமையை உண்டாக்கும் சதிச்செயல்

தினமலரைத் தண்டிப்பது எப்படி?

1. ஒவ்வொருவரும் (குறிப்பாக வன்னியர்கள்) தினமலர் வாங்கும் நண்பர்கள், உறவினர்கள், தனக்குத் தெரிந்த நிறுவனங்களிடம் மன்றாடி (காலில் விழுந்தாவது) தினமலர் வாங்குவதை நிறுத்தச்செய்ய வேண்டும். 


2. தினமலரில் விளம்பரம் செய்யும் நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும். இதுகுறித்து அந்த நிறுவனங்களுக்கு கடிதம் எழுத வேண்டும்.


3. சாதிக்கலவரத்தைத் தூண்டும் தினமலர் பத்திரிகையின் பத்திரிகை உரிமத்தை ரத்து செய்யக்கோரி இந்திய பத்திரிகை பதிவாளர் (RNI) அமைப்புக்கு நூற்றுக்கணக்கில் புகார் மனு அனுப்ப வேண்டும்.




4. பத்திரிகை நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்படும் தினமலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய பத்திரிகை கவுன்சிலுக்கு நூற்றுக்கணக்கில் புகார் மனு அனுப்ப வேண்டும்.




குறிப்பு: "வன்னியர்கள் நிலை: தினமலர் தரும் விளக்கம்" எனும் செய்தியை 30.01.2012 அன்று வேளியிட்டுள்ளது தினமலர். அதில் "சுயநலமாக செயல்படும் ஒரு சிலரின் நடவடிக்கைகளை சுட்டிக் காட்டும் வகையில் தான், ""வாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியா - "கவுண்டர்'களாக மாறி வரும் வன்னியர்கள்'' என்ற தலைப்பிலான கட்டுரை, 29- 1- 2012 இதழில் வெளியானது. யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் இந்த கட்டுரை வெளியிடப்படவில்லை. வன்னியர்களின் பின் தங்கிய நிலையை வெளிப்படுத்தும் வகையில் வெளியான இந்த கட்டுரை, சிலருடைய மனதை புண்படுத்தியதாக அறிகிறோம். அப்படி யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால், அதற்காக வருந்துகிறோம்." என்கிறது தினமலர்.


இந்த விளக்கம் ஏற்புடையதோ போதுமானதோ அல்ல. 

7 கருத்துகள்:

UNMAIKAL சொன்னது…

Click and read


>>>>> தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது! <<<<<<


-

கிராமத்தான் சொன்னது…

தினமலரை இனி தினமலம் என்றே அழைப்போம்..வன்னியர்களின் பதிவை கண்டிப்பாக பதிவுசெய்வோம்..

Aruna சொன்னது…

பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு நிலைக்கும் என்று பார்ப்போம்

பார்ப்பன வன்மத்துடன்

கொஞ்சமாவது மனிதத் தன்மையோடு சிந்திக்க மாட்டானா
இந்த மானங்கெட்ட தினமலர்?

pattu சொன்னது…

அது ஒரு நராதார் தொடச்ச பேப்பர். நா தினமலத்தில் comment போடுவேன் வெளியிடதே இல்லை அப்பறம் தெரிந்தது அங்கே போடரதுக்கு நிறைய பேர் Q நிக்கறங்கா அவங்களை சொல்லி என்ன பன்னா எல்லத்துக்கும் பேட்டா, சம்பளம் தரனுமே ஒரு சில ஆட்களே குத்தகை எடுத்துருக்கனுங்கா நான் நினைக்குறேன் அங்கா வேலை செய்யார்னு comment போட்டு ஹிட்க் ஆக்குரனுங்கா.

பாண்டியன் சொன்னது…

http://tamizyan.blogspot.in/2012/01/blog-post_21.html

வந்து பாருங்க

Vijayan@sg சொன்னது…

"திரு அருண் அவர்களுக்கு,
நான் நாள்தோறும் இரண்டு, மூன்று முறை இணைய தளத்தில் தினமணி , தினமலர், நக்கீரன் மற்றும் சில நாளிதழ்களை படிக்கிறேன். தினமலருக்கு எப்போதுமே நமது வன்னியர்களின் மேல் மற்றும் பா.ம.க-வின் மேல் பகையாக உள்ளது. நான் ஆரம்பத்தில் நிறைய கண்டன கருத்துகளை எழுதிருக்கிறேன். ஆனால் அது வெளிவருவதில்லை, அதற்க்காக பலமுறை அதன் ஆசிரியர்க்கு ஈ-மெயில் எழுதினேன், ஒருமுறை பதில் வந்தது பிறகு எந்த ஒரு பதிலும் இல்லை. நான் தினமலர் பற்றி நமது இணையதள நண்பர்களிடம் பலமுறை எழுதிருக்கிறேன். நம்மிடையே உள்ள இந்த இன உணர்வு நம்மில் பெரும்பகுதி நம் இன மக்களுக்கு இல்லை என்பது சிறிது வருத்தமளிக்கிறது. இஸ்லாமியர்களுக்கு ஒரு பங்கம் தினமலரால் வந்தது அன்று அதன் கண்டனத்தை அவர்கள் கடுமையாக தெரிவித்தார்கள், அதன் youtube லிங்க் இதோ http://www.youtube.com/watch?v=wY3zlSgP6eA . ஆனால் பெரும்பான்மையான நமது இனத்திற்கு ஒரு இழிவு என்றால் நமது இன மக்களிடையே அந்த உணர்வு குறைந்துவிட்டதை நினைக்கும்போது கழ்டமாகத்தன் உள்ளது.தாங்கள் கூறியுள்ள கருத்துகளை இதுற்கு முன்பிலிருந்தே கடைபிடித்து வருகிறேன். தினமலம் என்று Google-லில் தேடினால் வரும் செய்திகளை படித்தால் மிகவும் சுவாரிசயமாக உள்ளது. நாம் அனைவரும் தினமலருக்கு எதிராக செயல்பட்டு நமது வலிமையை காட்டுவோம். வெற்றிபெறுவோம்.

இவன்,

பா.விஜய்,
சிங்கப்பூர்."

PUTHIYATHENRAL சொன்னது…

செருப்பால அடித்தாலும் திருந்தாது இந்த தினமலம்.... தமிழர்களை சூழ்ச்சி செய்து பிரித்து அதன் மூலம் ஆதாயம் தேடுவது என்பது பார்பனர்களுக்கு கைவந்த கலை. அத்தைத்தானே இவ்வளவு காலமும் செய்து வந்திருகிறார்கள். தமிழகத்தில் வாழும் இந்துக்களுக்கு ஒரு முன்னனி அமைத்து அதற்கும் ஒரு ஐயரைதானே தலைவராக (ராமகோபால ஐயரைத்தானே) ஆக்க முடிந்திருக்கிறது என்றால் இவர்களது சூழ்ச்சி எப்படி பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியும். ஜாதி வேறுபாடுகள் இருத்தால்தான் இவர்கள் உயர் குலம் என்று சொல்லி கொண்டு அவர்களை அடிமைபடுத்தி வைத்திருக்க முடியும்.