Pages

சனி, நவம்பர் 30, 2013

தி இந்துவின் சாதிவெறி ஒருபோதும் அடங்காதா? வன்னியர்கள் மீது வன்மம் ஏன்?

தி இந்து பத்திரிகை சாதிவெறியின் உச்சத்தில் இருக்கும் ஒரு பத்திரிகை. அதிலும் குறிப்பாக, வன்னியர்கள் குறித்து செய்தி வெளியிடும் போதெல்லாம் அதில் 'உள்ளடி வேலையாக' வன்மத்தைக் கலந்து விஷமத்துடன் எழுதுவது தி இந்துவின் வாடிக்கை.


திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டி வன்னியர் இன பனிரெண்டாம் வகுப்பு மாணவி தனது உறவினரைப் பார்த்துவிட்டு நடுப்பட்டி அருந்ததியினர் காலனி வழியாக திரும்பியபோது கேலி, கிண்டல், வன்பகடிக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பான மோதலில் 51 வன்னியர்களும் 21 அருந்ததியினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். (இங்கே காண்க: தர்மபுரிக்கு அடுத்தது திண்டுக்கல்லா? வன்னியர்கள் இரத்தம் குடிக்கத் துடிக்கும் முற்போக்கு வேடதாரி ஓநாய்கள்!)
இந்த சம்பவத்தில் 'வன்னியர்களும் அருந்ததியினரும்' சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் மிகத் தெளிவாக வெளியிட்டுள்ளது. ஆனால், தி இந்து பத்திரிகையோ வன்னியர்களை மட்டும் சாதியைக் குறிப்பிட்டுவிட்டு - அருந்ததியினரை பொத்தாம் பொதுவாக 'தலித்' என்று குறிப்பிடுகிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி:


Tension grips two villages near Nilakottai in Dindigul district even nearly a week after inter-community clashes on Sunday. ....Vanniyars from Kariyampatti village on her village Nadupatti which is predominantly inhabited by Arunthathiyars, a dalit community.

தி இந்து செய்தி:


Five days after a Dalit-Vanniyar clash in a hamlet in Dindigul district, all the men in the Dalit hamlet of about 300 families, Nadupatti, have gone missing: as many as 50 were arrested by the police, while the remaining fled the hamlet. The clash has its genesis in a complaint of eve-teasing.

(இந்த முதல் பத்தியிலேயே வனமம்: 800 வன்னியர் குடும்பங்களின் ஆண்கள் ஊரில் இல்லை என்கிற விவரம் இந்த செய்தியில் இல்லை. அதுபோலவே, கைது செய்யப்பட்ட 50 பேரும் வன்னியர்கள் என்கிற தகவலும் இல்லை.)


தமிழ்நாட்டில் ஊடகங்கள் சாதி மோதல்கள் நேரும் போது, பொத்தாம் பொதுவாக 'இரு தரப்பினர் இடையேயான மோதல்' என்று குறிப்பிடுவார்கள். அல்லது 'தலித் - சாதி இந்துக்கள் மோதல்' என்று குறிப்பிடுவார்கள். இதனை தி இந்து இன்னும் கேவலாமாக்கி 'தலித் - இடைநிலைச் சாதி மோதல்' என்று குறிப்பிடும்.
இதற்கு மாறாக, எந்த ஒரு தனிப்பட்ட சாதியையும் நேரடியாகக் குறிப்பிட நேர்ந்தால், அதற்கு எதிர் தரப்பில் உள்ள தனி சாதியையும் குறிப்பிடுவதுதான் குறைந்தபட்ச ஊடகத் தர்மமாக இருக்க முடியும். எனவே, திண்டுக்கல் சம்பவத்தில் ஒரு தரப்பில் இருப்பது 'வன்னியர்' என்றால் - மறு தரப்பில் இருப்பது 'அருந்ததியினர்' என்று குறிப்பிடுவதே சரி.  ஆனால், இத்தகைய குறைந்தபட்ச நேர்மை எதுவும் தி இந்துவின் சாதிவெறிக் கண்களுக்கு புலப்படவில்லை.

தி இந்துவின் சாதிக்கலவரச் சதி!

திண்டுக்கல் சம்பவத்தினை 'வன்னியர் - அருந்ததியினர்' மோதல் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டது போன்று அல்லாமல் 'தலித் - வன்னியர் மோதல்' என தி இந்து குறிப்பிடக் காரணம் - வடதமிழ் நாட்டில் அருகருகே வாழும் 'வன்னியர்களுக்கும் பறையர் இன வகுப்பினருக்கும் இடையே' மோதல் நிலையை உறுவாக்க வேண்டும்' என்பதுதான்.

ஏனெனில், 'வன்னியர் - தலித்' மோதல் என்கிற செய்தி வந்தாலே வடதமிழ்நாட்டில் அது இந்த இரு பிரிவினருக்கும் இடையேயான மோதல் என்றே புரிந்துகொள்ளப்படும்.

எனவே, எப்படியாவது வன்னியர்களுக்கு எதிரான கலவரங்களைத் தூண்ட வேண்டும் என்கிற அடங்காத வன்மத்துடன் எழுதுவதே தி இந்து பத்திரிகையின் குலத்தொழில் ஆகிவிட்டது.

தி இந்துவின் சாதிவெறி!

தி இந்து பத்திரிகை அதன் தமிழ் பதிப்பைத் தொடங்கிய போது - அதன் தலைமைப் பொறுப்பில் பார்ப்பனர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என நிர்வாகக் கூட்டத்தில் முடிவெடுத்தனர். அதன்படி தி இந்து தமிழ் பதிப்பின் முதல் ஆறு தலைமைப் பொறுப்புகளில் பார்ப்பனர்களை மட்டுமே பணியில் அமர்த்தியுள்ளனர். இது தி இந்து குழுமத்தின் தன் சாதிப்பற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

காஞ்சி சங்கராச்சாரிகளின் விடுதலையை, தி இந்து அன்று இரவே கொண்டாடியது. முதல் பக்கத்தில் வண்ணப் படத்துடன் தலைப்புச் செய்தி, உள்ளே கூடுதல் செய்தி ஒன்று, அப்புறம் தலையங்கம், கடைசிப் பக்கத்தில் சங்கரமடத்தின் முழுப்பக்க வண்ண விளம்பரம் என சாதிப்பாசம் வழிந்து ஓடியது.
தி இந்துவின் பார்ப்பனப் பாசத்தில் குறை காண எதுவும் இல்லை. ஆனால், வன்னியர்கள் மீது தி இந்துவுக்கு வன்மம் ஏன்? பார்ப்பனர்களிடம் ஊடக பலம் இருக்கிறது, வன்னியர்களிடம் ஊடக பலம் இல்லை என்கிற அதிகாரத்திமிர் தவிர இதில் வேறு என்ன இருக்கிறது?

கல்வி, ஆயுதம், பணம் என்கிற அடிப்படை அதிகாரங்கள் எல்லா காலங்களிலும் சிறுபான்மைக் கூட்டத்திடம் மட்டுமே இருக்காது. பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை ஆதிக்கத்தை அகற்றி, அதிகாரத்தை மீட்கும் காலம் வரும்.

தொடர்புடைய சுட்டிகள்:

தி இந்து - ஒரு விபச்சார பத்திரிகையா...? குற்றங்களில் கூட்டாளியாகும் பத்திரிகை அதர்மம்!

சாதிவெறி தலைக்கேறிய தி இந்து நாளிதழ்:பிடிக்காதவர்கள் மீது அபாண்டமாக பழிசுமத்தும் அவலம்!

தர்மபுரிக்கு அடுத்தது திண்டுக்கல்லா? வன்னியர்கள் இரத்தம் குடிக்கத் துடிக்கும் முற்போக்கு வேடதாரி ஓநாய்கள்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் கரியாம்பட்டியில் உள்ளூர் மக்களிடையே திருவிழா, பணம் கொடுக்கல் வாங்கல், கிரிக்கெட் குழு போட்டி உள்ளிட்ட தனிப்பட்ட முறையிலான சச்சரவுகளை சாதி மோதலாகக் காட்டி வன்னிய மக்களை மீண்டும் வன்முறையாளர்களாக சித்தரிக்கும் வேலையில் சில முற்போக்கு வேடதாரி ஓநாய்கள் ஈடுபட்டுள்ளனர்.
நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கரியாம்பட்டி  கோவில் திருவிழாவில் ஒண்டிவீரன் படம் அணிந்த பனியனுடன் வந்து ஆட்டம் ஆடியதால் இரண்டு ஊர் மக்களுக்கும் இடையே பிரச்சினை எழுந்தது. கடந்த 22.07.2013 அன்று அருந்ததியின மக்களில் சிலர் அளித்த புகாரின் பேரில் 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதுதொடர்பாக எழுந்த பதற்றத்தின் காரணமாக ஆர்டிஓ தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அருந்ததியின மக்களுக்கு இலவச நிலம் வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும், கழிவறை வேண்டும், தனியாக மின்மாற்றி வேண்டும், வன்னியர் பகுதிக்கு அருந்ததியினர் பகுதி வழியாக குடிநீர் குழாய் செல்லக்கூடாது - என்கிற வகையிலான கோரிக்கைகள் வைக்கப்பட்டு, அவற்றில் பல கோரிக்கைகளை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

சாதி ரீதியான ஒடுக்குமுறைப் பிரச்சினை எதுவும் இல்லை என மாவட்ட நிராகம் தெரிவித்தது. அப்போது முதல் சிசிடிவி கேமரா கண்காணிப்பும் காவல்துறை பாதுகாப்பும் கரியாம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.

"வன்னிய இளம்பெண் மீது வன்பகடி"

இந்நிலையில் 24.11.2013 அன்று மாலை 3.00 மணி அளவில் கரியாம்பட்டி வன்னியர் இன பனிரெண்டாம் வகுப்பு மாணவி சகிலாதேவி தனது உறவினரைப் பார்த்துவிட்டு நடுப்பட்டி காலனி வழியாக திரும்பியபோது கேலி, கிண்டல், வன்பகடிக்கு ஆளாக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அங்கிருந்த காவல்துறையினரிடம் முறையிட்டார். காவல்துறையினரும் கேலி செய்த இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது இளைஞர்களை விட்டுவிட வலியுறுத்தி அருந்ததியின மக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வன்னிய மக்கள் இதனைக் கேள்விப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற வன்னிய மக்கள் மீது கல், செருப்பு வீசி தாக்கப்பட்டது. காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடந்தது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் சூழல் எழுந்தபோது போலிசாரின் முன்னிலையிலேயே அருந்ததியினர் வீடுகள் முன்பு இருந்த சில கொட்டகைகள் 'தானாக' எரிந்துள்ளன.
தர்மபுரியில் நடந்தது போலவே 51 வன்னியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் அரசு ஊழியர்கள், 3 பேர் பள்ளி மாணவர்கள். (அருந்ததியினர் தரப்பில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளன்ர். பாதிக்கப்பட பெண் சகிலாதேவி அளித்த புகாரின் பேரில் இரண்டு அருந்ததியின இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்).

இந்த சம்பவத்தை அடுத்து, தர்மபுரியில் நேர்ந்தது போலவே, காவல்துறையினர் வன்னியர் பகுதிகளில் தேடுதல் வேட்டையிலும் அத்துமீறல்களிலும் ஈடுபட்டுள்ளனர். ஆயிரம் வன்னியக் குடும்பத்தினருக்கு மேல் வசிக்கும் இந்த ஊரில் இப்போது ஆண்கள் யாரும் இல்லை. வெளியூரில் இருந்து உறவினர்களும் அனுமதிக்கப்படுவது இல்லை. ஊரில் இரண்டு முதியவர்கள் இறப்புக்குக் கூட யாரும் சென்று அஞ்சலி செலுத்த இயலவில்லை.

"முற்போக்கு வேடதாரி ஓநாய்களின் வன்னிய எதிர்ப்பு சாதிவெறி"

இவ்வாறாக, கரியாம்பட்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வன்னியர்களாக இருக்கும் நிலையில், வன்னிய மக்களுக்கு எதிராகவே போலி 'உண்மை அறியும்' அறிக்கைகளை வெளியிட்டு - வன்னியர்களுக்கு எதிரான கட்டுக்கதைகளைக் கட்டமைக்க போலி புரட்சியாளர்கள் - வன்னியர் எதிர்ப்பு சாதிவெறி + ரத்தவெறி பிடித்த ஓநாய்கள் அலைந்து வருகின்றனர். இதற்கு சிபிஎம் உள்ளிட்ட வன்னியர் எதிர்ப்பு கட்சிகளும் ஆதரவளிக்கின்றன.
(வன்னியர்களுக்கு எதிராக புரளி கிளப்புவதில் முதல் ஆளாக செயல்பட்டு தர்மபுரிக்கு உண்மை அறியும் குழுவை அனுப்பிய திமுக இப்போது அமைதியாக இருக்கிறது. ஒருவேளை, ஏற்காடு தேர்தல் முடிந்த பிறகு வன்னியர் எதிர்ப்பு முழக்கத்தை எடுப்பார்களோ என்னவோ!).

"வன்னிய இளம்பெண்கள் மானம் பறிக்கப்படுவதை எந்த ஒரு வன்னியனும் வேடிக்கைப் பார்க்கமாட்டான். முற்போக்கு வேடதாரி ஓநாய்கள் அத்தனை பேரும் ஒன்றுதிரண்டு வந்தாலும் கடைசி வன்னியன் இருக்கும் வரை இந்த அநீதியை எதிர்த்து நியாயத்தின் பக்கம் நிற்பான்"

புதன், நவம்பர் 06, 2013

கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: வரவேற்போம்!

'அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதற்காக திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு வரவேற்க வேண்டிய நிகழ்வாகும்.

சேலத்தில் மத்திய அரசு அலுவலகமான வருமானவரித்துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெட்ரோல் குண்டு வீசத்தூண்டியதாக திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார். பின்னர் சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.'

தடுப்புக்காவல் சட்டம் நீதிக்கு எதிரானது.

தடுப்புக்காவல் சட்டம் என்பது நீதிக்கு எதிரானது. குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்றத்தில் நிறுத்தி, உரிய விசாரணை நடத்தி, குற்றத்தை நிரூபித்து தண்டனை வழங்குவத்தான் சரியான நீதிபரிபாலன முறையாகும். ஆனால், எந்த விசாரணையும் இன்றி அரசாஙகமே தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் ஓராண்டுகாலம் சிறைவைக்கும் கொடூரமான சட்டம் இதுவாகும்.

முதிர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகள் எதிலும் தடுப்புக்காவல் தண்டனைச் சட்டங்கள் இல்லை.

தடுப்புக்காவலில் அப்பாவி வன்னியர்கள்.

மாமல்லபுரம் வன்னியர் சங்க மாநாட்டில் பேசினார், அதனால் கலவரம் வரக்கூடும் என்கிற நிரூபிக்க முடியாத 'கற்பனையான' குற்றச்சாட்டில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு கைது செய்யப்பட்டார்.

மரக்காணம் வன்னியர் படுகொலைக்கு நீதி வேண்டும் என போராட்டம் நடத்திய  மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் உட்பட அமைதி வழியில் போராட்டம் நடத்திய சுமார் 7500 பேர் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, பாட்டாளி மக்கள் கட்சி நிருவாகிகள், உறுப்பினர்கள், அனுதாபிகள் என 134 வன்னியர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் குண்டர் சட்டத்தின் கீழும் ஒரு ஆண்டு 'தடுப்புக்காவல்' சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவை அனைத்தும் ஒருமாத காலத்திற்குள் அவசரம் அவசரமாக நடத்தப்பட்டது.

இந்திய வரலாற்றிலேயே ஒரே மாதத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த, ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் இவ்வளவு பேர் தடுப்புக்காவல் சட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது இதுதான் முதல் முறை.

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டவர்களை மத்திய அரசு விடுதலைச் செய்ய ஆணையிட்டது. ஆனால், சட்டத்தையும் மனித உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கும் தமிழக அரசு அத்தனை பேர் மீதும் இரண்டாவது முறையாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தினை திணித்தது.

ஒரு நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பின்பு, ஓராண்டு தடுப்புக்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 134 பேரில், 133 பேரை சிறையில் இருந்து மீட்டது பாட்டாளி மக்கள் கட்சி. அவர்கள் அவ்வளவு பேரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு அவர்கள் மீது மட்டும் மீண்டும் மீண்டும் நான்கு முறை தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு - இப்போது நீதி மன்றத்தில் தீர்ப்பு காத்திருக்கிறது. இந்திய வரலாற்றில் நான்கு முறை தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்ட ஒரே நபர் ஜெ. குரு அவர்கள் மட்டும்தான்.

நேற்று நான் - இன்று நீ

தனது கருத்துரிமையை ஜனநாயக வழியில் பயன்படுத்தியதற்காக 124 பேர் கொடூரமான தடுப்புக்காவல் சாட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்படும் நாட்டில் - மத்திய அரசு அலுவலகத்தின் மீது குண்டு வீசி, அரசுக்கு எதிராக போர்த்தொடுப்பவர்கள் அதே கொடூரமான தடுப்புக்காவல் சாட்டங்களின் கீழ் சிறையில் அடைக்கப்படுதல் நியாயம் தானே.

இன்று கொளத்தூர் மணி கைதுக்காக கொந்தளிக்கும் மனித உரிமைப் போராளிகள் பலரும் அன்று 134 வன்னியர்கள் இதேபோன்று தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது அதனை மவுனமாக, மகிழ்ச்சியாக வரவேற்றார்கள் என்பதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது.

வன்னியர்களுக்கு வந்தால் அது 'தக்காளி சட்னி', மற்றவர்களுக்கு வந்தால் அது 'ரத்தம்' என்பதுதான் தமிழ்நாட்டின் மனித உரிமை நீதி போலிருக்கிறது!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

"கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை கண்டிக்கத் தக்கது"

சேலத்தில் நடந்த நிகழ்வு தொடர்பாக கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்திருக்கிறது. தமிழக அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் உரிமைகளுக்காகவோ அல்லது இன விடுதலைக்காகவோ எவரும் போராடவேக் கூடாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு நினைக்கிறது. அதனால் தான் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு  எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், போராடுபவர்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் தான் கொளத்தூர் மணி மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அரசு பாய்ச்சியிருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பிற்காக அரிதிலும் அரிதாக பயன்படுத்த வேண்டிய தடுப்புக்காவல் சட்டங்களை, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்துவதையே இந்த அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. மரக்காணம் கலவரத்தில் அப்பாவி வன்னியர்கள் இருவர் வன்முறைக் கும்பலால் படுகொலை செய்யப் பட்டதற்காக நீதி கேட்டு போராடிய என்னையும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி தலைவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் பேரையும் கைது செய்த தமிழக அரசு, எந்தத் தவறும் செய்யாத பா.ம.க. தொண்டர்கள் 134 பேரை குண்டர் சட்டத்திலும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்து வரலாறு காணாத அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. 

அதிலும் குறிப்பாக பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜெ. குருவை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் 4 மாதங்களில்   4 முறை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து கொடுமைப் படுத்தியது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை கண்டிக்க எந்தக் கட்சியும் முன்வரவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி தான் சட்டம் மற்றும் நீதியின் துணையுடன் போராடி 133 பேரை நீதிமன்றத்தின் மூலமாக மீட்டதுடன் தமிழக அரசு மேற்கொண்டது பழிவாங்கும் நடவடிக்கை என்பதை நிரூபித்தது.

பா.ம.க.வினர் மீது தடுப்புக்காவல் சட்டங்கள் பாய்ச்சப்பட்டபோது அதைக் கண்டித்து மற்றக் கட்சிகள் குரல் கொடுத்திருந்தால் இப்போது  கொளத்தூர் மணி மீது இத்தகைய நடவடிக்கையை எடுக்கும் துணிச்சல் அரசுக்கு வந்திருக்காது. விரைவில் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காகவும், மக்களின் உணர்வுகளைத் தூண்டும் போராட்டங்களை ஒடுக்கவும் மேலும் பல தலைவர்களை கைது செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.

எனவே, அரசின் ஒடுக்குமுறைகளுக்கு  எதிராக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசும் ஈழத் தமிழர் போராட்டங்களுக்கு எதிரான உணர்வைக் கைவிட்டு, கொளத்தூர் மணியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்."

வெள்ளி, நவம்பர் 01, 2013

இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம்: கூட்டாளி ராஜபக்சேவை இந்தியா கைகழுவ வேண்டும்

இசைப்பிரியா இலங்கை ராணுவத்தால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கான ஆதாரத்தை சானல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இசைப்பிரியா உயிருடன் இராணுவத்தினரிடம் பிடிபட்ட காட்சியும் பின்னர் உயிரற்ற சடலமாக சீரழிக்கப்பட்டுக் கிடக்கும் காட்சியும் இந்தக் காணொலியில் காட்டப்படுகிறது.

சானல்4 தொலைக்காட்சி ஆதரம்

ராஜபக்சேவை கைகழுவுவதற்கான நேரம்

இந்திய அரசு தனது கொலைகாரக் கூட்டாளி ராஜபக்சேவை கைகழுவுவதற்கான நேரம் இதுவே. இலங்கையைக் காப்பாற்றும் போக்கில் இந்திய அரசு இனியும் நடக்கக்கூடாது. இலங்கை மீதான பன்னாட்டு விசாரணைக்கு இந்தியா இனிமேலும் எதிர்ப்புக் காட்டக்கூடாது.

'அரசன் அன்று கொல்வான், நீதி நின்று கொல்லும்' என்பார்கள். இந்திய ஆட்சியாளர்கள் இனியும் திருந்த மறுத்தால் 'நீதி அரசனைக் கொல்லும்' காலம் வரும். இனப்படுகொலை - போர்க்குற்ற கொடூரன் இராஜபக்சேவுடன் சேர்த்து இந்திய அட்சியாளர்களும் பன்னாட்டு சமூகத்தால் தண்டிக்கப்படும் காலமாக அது அமைந்துவிடக் கூடும்.

தேவை பன்னாட்டு விசாரணை ஆணையம் - இந்திய அரசே முன்மொழிய வேண்டும்

'பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்கள், பன்னாட்டு மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமைக் குறித்து தன்னிச்சையான மற்றும் நம்பகத்தன்மையுள்ள வகையில் விசாரணை நடத்தப்பட பன்னாட்டு விசாரணை ஆணையத்தை ஐநா அமைக்க வேண்டும்' என ஜெனீவா ஐநா மனித உரிமைப் பேரவையில் செப்டம்பர் 23 அன்று மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் வலியுறுத்திப் பேசினார்.

அதேபோன்று "ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரசு சம உரிமையும், சம அந்தஸ்தும் வழங்காது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு, இலங்கைப் போரில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தாது என்பதும் உண்மையாகும். எனவே, இலங்கை மீது தவறான நம்பிக்கை வைப்பதை விடுத்து, அங்கு நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியாவே கொண்டு வரவேண்டும்" என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் இந்திய அரசை கேட்டுக்கொண்டார்.

பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டே ஆகவேண்டும் என்கிற கோரிக்கையின் நியாயத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை.

ஜெனிவா ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில்  மருத்துவர் அன்புமணி இராமதாசு ஆற்றிய உரை:



உலகில் அனைத்து வகையான இன வெறியையும், அது தொடர்பான சகிப்புத் தன்மையின்மையையும்  பசுமைத் தாயகம் கண்டிக்கிறது. இன வெறியால் அன்றாட ஒடுக்குமுறை முதல் ஒட்டுமொத்த இனப்படுகொலை வரை பலவிதமான விளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றில் இரண்டாவது விளைவான இனப்படுகொலை துரதிருஷ்டவசமாக இன்று இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இனப்படுகொலை என்பது அப்பாவி மக்களைத் திட்டமிட்டு அழிப்பது என்று வரையறுக்கப் பட்டிருக்கிறது.  இனப்படுகொலைக்கு எதிரான இரண்டாவது பிரிவின்படி, ஓர் இனத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத அளவுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதும் ஒரு வகையான இனப்படுகொலை ஆகும்.

இலங்கை வடக்கு மாநிலத்தில் செயல்பட்டுவரும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கைகளில், தமிழ்ப் பெண்களை மிரட்டிக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது குறித்து ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வடக்கு மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்களை, அவர்களின் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக, கிளிநொச்சி பகுதியில் உள்ள வேராவில் அரசு மருத்துவமனைக்கு வரும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி அவர்கள் அங்கு சென்ற போது, அவர்களை  மோசடி செய்து நீண்டகாலம் குழந்தை பிறக்காமல் இருப்பதற்கான ஊசியை அவர்களின் கைகளில் செலுத்தியுள்ளனர். கருத்தடை ஊசியைப் போட்டுக் கொள்ளாவிட்டால், அந்த அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் எந்த சிகிச்சையையும் இனி பெற முடியாது என்று அப்பெண்கள் மிரட்டப் பட்டிருக்கின்றனர்.

கட்டாயக் கருத்தடையும், கருக்கலைப்பும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனித நேயச் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். நலிவடைந்த மக்களுக்கு அடிப்படை சுகாதார சேவைகள் மிகவும் முக்கியமாக தேவைப்படும் இந்த நேரத்தில், அவர்கள் அச்சுறுத்தி  கட்டாயக் கருத்தடைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது ஒரு மருத்துவர் என்ற முறையிலும், இந்தியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற முறையிலும் எனக்கு சீற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் குற்றச்சாற்றுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பால் விசாரிக்கப்பட வேண்டும்.

இந்தக் குற்றங்கள் அனைத்தும், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை வரலாற்றில் அண்மையில் நடைபெற்றவையாகும்.

2009 ஆம் ஆண்டில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் இந்த அட்டூழியங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தன. வன்னி பகுதி மக்களை பாதுகாப்பு வலயப் பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்குள் அடைத்து வைத்து குண்டு வீசிய பின்னர், சுமார் 1.46 லட்சம் மக்கள் என்ன ஆனார்கள் என்பதே இன்னும் தெரியவில்லை.

ஆட்களைக் கடத்திச் செல்லுதல், தமிழர்கள் வாழும் பகுதிகளை ராணுவமயமாக்குதல், தமிழர்களின் நிலங்களை பறித்தல், அரசியல் எதிர்ப்புகள் மற்றும் பத்திரிகைச் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தல் ஆகிய நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபடுவதால் அந்நாட்டில் மனித உரிமை மீறல்கள் இன்னும் தொடர்கின்றன.

எனவே, இலங்கை அரசின் கடந்தகால மற்றும் நிகழ்கால போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் ஆகியவை குறித்து விசாரிக்க சுதந்திரமான, பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைக்கும்படி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

(23 செப்டம்பர் 2013 அன்று ஜெனீவா நகரில் உள்ள ஐநா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பேசியதன் தமிழ் மொழிபெயர்ப்பு)