Pages

சனி, ஜனவரி 30, 2016

முஸ்லிம்களுக்கு ஓர் எச்சரிக்கை: அமைதிக்கு வேட்டு வைக்கும் மத அமைப்புகள்!

தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை உருவாக்கும் வேலைகளை சில அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. அவை குறித்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் நடத்தும் 'ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்காக' எல்லை மீறி அடுத்தவர் மத நம்பிக்கைகளை சீண்டும் வகையிலான விளம்பரங்களை சில இடங்களில் மேற்கொள்கின்றனர். இதனை பயன்படுத்தி, சில உள்நாட்டு தீவிரவாத அமைப்பினர் போலியான விளம்பரங்களையும் வாட்ஸ்அப் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றனர். 

இதன் உச்சகட்டமாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களே மோசடி விளம்பரங்களை பயன்படுத்தி விஷமத்தனமான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவற்றின் பின்னணி குறித்து பார்ப்போம்:

1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்: ஷிர்க் ஒழிப்பு மாநாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் "ஷிர்க் ஒழிப்பு மாநாடு" என்கிற ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். இஸ்லாமிய மதத்திற்குள் மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் இயக்கம் இது என்றே நான் கருதுகிறேன்.
 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' உண்மை விளம்பரம்
ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் அவர்களது மதத்தில் சீர்திருத்தம் கேட்பதில் தவறேதும் இல்லை. (அது சரியா தவறா என்பது அந்த மதத்தின் உள் விவகாரம்). 'சட்டம் ஒழுங்கை பாதிக்கும் நிலை இல்லாதவரை' - அதில் மற்ற மதத்தினர் தலையிட வேண்டிய தேவையும் இல்லை.

2. பா.ஜ.க.,வினரின் மோசடி பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் முஸ்லிம் மதத்தினருக்கான "ஷிர்க் ஒழிப்பு மாநாடு" என்பதை இந்துக்களுக்கு எதிரான "சிலை ஒழிப்பு மாநாடு" என்று சில விஷமிகள் பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். (இது இஸ்மியர்களுக்கு எதிரான அமைப்பின் பிரச்சாரமாக இருக்கலாம்).

"ஷிர்க் ஒழிப்பு" என்பது "சிலை ஒழிப்பு" என்று மோசடியாக கிராஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காண்க.
 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' போலி விளம்பரம்
தவ்ஹித் ஜமாத்தினரின் விளம்பரங்கள் போன்றே மோசடியாக விளம்பரம் தயாரித்து, அவற்றில் இந்து கடவுளர் சிலைகள் மீது 'தவறானவை' என குறியிட்டுள்ளனர். 

இந்த மோசடியான கிராபிஃக்ஸ் படத்தை உண்மையானது போன்று காட்டி, இதனை பாஜகவின் முன்னணி நிர்வாகிகளே விளம்பரமும் செய்கின்றனர். 

பாஜகவின் செய்தித் தொடர்பாளரான கே.டி. ராகவன் இந்த மோசடி விளம்பரத்தை அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கே.டி. ராகவன் வெளியிட்டுள்ள படம் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் விளம்பரம் அல்ல. அது மோசடியான கிராபிஃக்ஸ் படம்.
போலி விளம்பரத்தை உண்மை போல காட்டும் பாஜகவின் கே.டி. ராகவன்
ஆக, முஸ்லிம்களின் மாநாடு குறித்த போலியான மோசடி விளம்பரங்களை பாஜகவினர் அதிகாரப்பூர்வமாகவே வெளியிட்டுள்ளனர்.

3. எல்லை மீறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

எந்த ஒரு மதத்தினரும் அவர்களது மத நம்பிக்கைகள் குறித்து, அவர்களுக்குள் மேற்கொள்ளும் பிரச்சாரங்களுக்கு ஒரு எல்லை இருக்க வேண்டும்.

ஷிர்க் ஒழிப்பு மாநாடு என்பதற்காக வைக்கும் விளம்பரங்களில் "சிலைகள், தேர், விபூதி, சூடம், விளக்கு, பாலாபிஷேகம், அர்ச்சனை, திதி" - என வரிசையாக இந்து மத வழிபாடுகளை குறிப்பிட்டு - அதையெல்லாம் முஸ்லிம்களின் தர்காவில் செய்வதாக குறிப்பிடுகிறார்கள். இதெல்லாம் இழிவான செயல் என்றும் கூறுகின்றனர்.
இந்துமத்தை சீண்டும் தவ்ஹீத் ஜமாத்தின் உண்மை விளம்பரம்
பிற மதங்களின் வழிபாடு குறித்து முஸ்லிம்கள் விளம்பரம் செய்யும் தேவை எதுவும் இல்லை. தன்னுடைய மதத்தின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காக, பிற மதத்தின் 'ஆத்மார்த்தமான' நம்பிக்கைகளை எடுத்துக்காட்டாக குறிப்பிடுவது - மாற்று மதத்தினரை இழிவுபடுத்தும் செயலாகும்.

இந்திய அரசியல் சாசனம் எல்லா மதங்களையும் சரிசமமாக ஏற்கிறது. எனவே, இது ஒரு இஸ்லாமிய நாடு இல்லை என்பதை 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' நடத்துகிறவர்கள் உணர வேண்டும். இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்பது இஸ்லாமிய மதத்தின் நம்பிக்கையாக இருக்கலாம். அதற்காக மற்ற மதத்தின் நம்பிக்கைகளை இழிவாக பிரச்சாரம் செய்வதை ஏற்க முடியாது!

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எச்சரிக்கை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் எல்லை மீறும் போக்கினை தடுக்கும் கடமை அனைத்து முஸ்லிம்களுக்கும் இருக்கிறது. 

இந்துக்களை பொறுத்தவரை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரின் எல்லை மீறும் விளம்பரங்களை எதிர்க்கும் அதே நேரத்தில், முஸ்லிம்கள் போன்று வேடமிட்டு கட்டுக்கதைகளை பரப்பும் சதிகாரர்களின் போலி விளம்பரங்களை நம்பாமல் விழிப்போடு இருக்க வேண்டும்.

மதக்கலவரங்களுக்கு தமிழ்நாட்டில் இடமளிக்க மாட்டோம் என உறுதி ஏற்போம்.

வெள்ளி, ஜனவரி 29, 2016

மாணவிகள் தற்கொலை: SVS கல்லூரிக்கு விளம்பரம் செய்த ஜூனியர் விகடனுக்கு என்ன தண்டனை?

சட்டவிரோத எஸ்.வி.எஸ் கல்லூரியின் முறைகேடான விளம்பரத்தை வெளியிட்டு காசு பார்த்துள்ளது விகடன் குழுமம். எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு ஆதரவாக ஜூனியர் விகடன் வெளியிட்ட விளம்பரம் குறித்து அப்போதே எச்சரித்துள்ளது எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகம்.

விகடன்: படிப்பது இராமாயணம் - இடிப்பது அனுமார் கோவிலா?

"எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் அன்புமணியின் பங்கு என்ன?" என்று கட்டுரை எழுதியது விகடன்.

ஆனால், 'எஸ்.வி.எஸ். கல்லூரி அனுமதிக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்புமே இல்லை. இது் 100% மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் கல்லூரி' என்பதை விளக்கி, இன்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்.

அதற்கு பின்பும் விகடன் இணயதளம் இன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில்: "அரசியல் அரங்கில் பொறுப்பேற்க வேண்டியவர்கள், மத்தியில் இருந்த பாமக அ​மைச்சர், தமிழகத்தில் அப்போது ஆட்சியில் இருந்த திமுக அமைச்சர், தற்போது ஆட்சியில் இருக்கின்ற அதிமுக அமை​ச்சர், ஆகிய அனைவரும் ஆவர்" - என்று பாமகவை இழுத்து உள்நோக்கத்துடன் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது விகடன்.

ஆனால், இதே விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் பத்திரிகை 20.5.2015 தேதியிட்ட இதழில், இதே சட்டவிரோத எஸ்.வி.எஸ்  கல்லூரியில் மாணவர்களை சேரச்சொல்லி 'முறைகேடான' விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளது.

ஜூனியர் விகடன் பத்திரிகையில் வெளியான 
எஸ்.வி.எஸ் கல்லூரி விளம்பரம் 
ஜூனியர் விகடன் 20.5.2015

ஜூனியர் விகடன் விளம்பரத்துக்கு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கண்டனம்
எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழக அறிவிப்பு

ஜூனியர் விகடன் வெளியிட்ட இந்த விளம்பரம் முறைகேடானது என்றும், இந்த கல்லூரிக்கு அரசு அனுமதி அளிக்க வில்லை என்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையும் மீறி, இக்கல்லூரியில் சேர்ந்தால், அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் விளக்கம் அளித்தது.

ஜூனியர் விகடன் கொஞ்சமாவது நியாயமான ஊடகமாக இருந்திருந்தால், தாங்கள் வெளியிட்ட முறைகேடான விளம்பரத்துக்காக மன்னிப்புக் கேட்டு, மாணவர்களை எச்சரித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யவில்லை விகடன் குழுமம்.

ஜூனியர் விகடன் விளம்பரம் வெளியான இதழ்.
ஜூனியர் விகடன் 20.5.2015
திமுகவிடம் காசு வாங்கிக்கொண்டு, பாமக மீது சேறுவாரி தூற்றும், விகடன் கும்பல் - மாணவிகள் தற்கொலைக்கு காரணமான எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு ஆதரவாக 'முறைகேடா' விளம்பரம் செய்ததற்காக இப்போதாவது மன்னிப்பு கேட்குமா? 

'விலைபோன' தி இந்து + விகடன்: விழுப்புரம் SVS கல்லூரி விவகாரத்தில் உண்மையை மறைப்பது ஏன்?

எஸ்.வி.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மாணவிகள் மூன்றுபேர் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளி தி.மு.க., இந்த பிரச்சினையை பாமக மீது திசைதிருப்பி விடுகிறது.

திமுகவின் பணத்துக்கு அடிமையாகி, பத்திரிகை தர்மத்தை விலைபேசி விற்றுள்ள தி இந்து மற்றும் விகடன் பத்திரிகைகள் -இந்த இழிசெயலுக்கு துணை போயுள்ளன. அபாண்டமான கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி பரப்பி வருகின்றன இந்த பத்திரிகைகள். 
நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு அவர்களும், முன்னாள் இராணுவ தளபதி வி.கே. சிங் அவர்களும் சொன்னது போல தி இந்துவும் விகடனும் Presstitutes தொழிலில் ஈடுபட்டுள்ளன.

அபாண்டமாக பழிபோடும் கோயபல்ஸ் பிரச்சாரம்

1. தி இந்து பத்திரிகையின் அபாண்டம்.

'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்' விஜயகாந்த் வெளியிட்ட ஒரு அறிக்கையில், 'முன்னாள் தமிழக மத்திய அமைச்சர் ஒருவர் தான் மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட கல்லூரிக்கு அனுமதி அளித்தார்' என்று 25.1.2016 ஆம் நாள் அறிக்கை வெளியிட்டார்.

இதனை 27.1.2016 ஆம் நாளன்று, "இந்த கல்லூரிக்கு அன்புமணி அமைச்சராக இருந்தபோது அனுமதி அளிக்கப்பட்டது" ('Nod given during Anbumani tenure') என்று தலைப்பிட்டு பிரச்சாரம் செய்தது தி இந்து.
அதாவது - விஜயகாந்த் அறிக்கையில் அன்புமணி என்கிற பெயர் இல்லாத நிலையில் - அன்புமணி என்று தலைப்பிலேயே குறிப்பிட்டது தி இந்து.

2. விகடன் கும்பலின் அராஜகம்.

தி இந்துவின் செய்தியை பின்தொடர்ந்து உடனடியாக, "எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் அன்புமணியின் பங்கு என்ன?" என்று கட்டுரை எழுதியது விகடன். (திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு 'ராஜநாயகம் சர்வே' என்பதை 'லயோலா சர்வே' என்று சொன்னது தான் விகடன் கும்பல்).

(விகடன் மற்றும் இந்து பத்திரிகைகளின் வதந்திகளுக்கு பதில் அளித்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் - 'மாணவிகளின் உயிரிழப்புக்கு காரணமான கல்லூரிக்கு நான் அனுமதி வழங்கவில்லை. அதுகுறித்த எந்த கோப்பிலும் நான் கையெழுத்திடவில்லை. இந்த விஷயத்தில் நடந்த உண்மை என்ன? என்பதை கண்டுபிடிப்பதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரினார்)

3. திருமாவளவனின் கட்டுக்கதை.

இதன் தொடர்ச்சியாக பேட்டியளித்த திருமாவளவன்  "விழுப்புரம் மாவட்டம் எஸ்.வி.எஸ்., இயற்கை மருத்துவ கல்லுாரிக்கு அனுமதி அளித்ததில் தனக்கு சம்மந்தம் இல்லை என அன்புமணி கூறியது அப்பட்டமான பொய். கேபினட் அமைச்சர் தான் அனுமதி வழங்க முடியும்" என்று கூறினார். (காண்க: அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய் திருமாவளவன் பேட்டி)

(விசிக திருமாவளவனுக்கு நெருக்கமானவராக கருதப்படும் 'ஆதிதிராவிடன் புரட்சிக்கழகம்' எனும் அமைப்பை நடத்தும் கள்ளக்குறிச்சி 'தாதா' வெங்கடேசன் என்பவர்தான் எஸ்.வி.எஸ் கல்லூரியில் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு காரணமானவர். இந்த உண்மையை மறைக்கவே மருத்துவர் அன்புமணி மீது பாய்கிறார் திருமாவளவன்)

உண்மை இதுதான்: மத்திய அரசுக்கு தொடர்பு இல்லை - திமுகவே காரணம்!

மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட எஸ்.வி.எஸ். கல்லூரி அனுமதிக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்புமே இல்லை. இது 100% மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வரும் கல்லூரி.

அலோபதி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் விவகாரம் மத்திய சுகாதாரத் துறையின் கீழ் வருகிறது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவ முறைகளுக்கு மாநில அரசின் பரிந்துரை பேரில் மத்திய அரசின் 'ஆயுஷ்' துறை அனுமதி அளிக்கிறது.

விழுப்புரம் கல்லூரி இந்தப் பட்டியல் எதிலும் வரவில்லை. எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை கல்லூரி என்பது ஒரு சித்தமருத்துவக் கல்லூரி அல்ல. அது இயற்கை மற்றும் யோகா கல்லூரி மட்டுமே (BNYS).

மத்திய அரசின் 2006 உத்தரவு

இயற்கை மற்றும் யோகா துறைகள் விவகாரத்தை மத்திய அரசு கவனிப்பது இல்லை. 4.9.2006 ஆம் நாள் மத்திய அரசின் ஆயுஷ் துறை வெளியிட்ட உத்தரவில் "இயற்கை மற்றும் யோகா" படிப்புகளில் மிகக் குறைவானவர்களே படிப்பதால், இதனை முறைப்படுத்தும் சட்டங்களை மாநில அரசுகள் வகுக்க வேண்டும். மத்திய அரசு இதில் தலையிடாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது. காண்க படம்:

மத்திய அரசின் 2014 விளக்கம்

7.2.2014 ஆம் நாள் இதுகுறித்து Press Information Bureau வெளியிட்ட செய்திக் குறிப்பிலும், "இயற்கை மற்றும் யோகா" படிப்புகளை மத்திய அரசு கட்டுப்படுத்தாது என்று தெளிவுபடுத்தி விட்டது. அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் 1995 ஆம் ஆண்டுமுதல் இதற்கான மாநில சட்டம் இருப்பதாகவும் கூறியுள்ளது. இங்கே காண்க: 

(There is no system of registration of Yoga practitioners under Act/guidelines of Government of India. The Department of AYUSH has already asked State Governments to enact comprehensive legislation for the regulation of naturopathy covering registration of practitioners, medical education and all matters related to naturopathy.)

ஆக, மத்திய அரசின் கட்டுப்பாட்டிலோ, பார்வையிலோ இல்லாத  "இயற்கை மற்றும் யோகா" படிப்புக்கு - மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி இராமதாஸ் அவர்கள்தான் அனுமதி அளித்தார் என்று கட்டுக்கதையை பரப்புகின்றன தி இந்து + விகடன் கட்டுக்கதை கும்பல்.

பணத்துக்காக செய்தி வெளியிடும் அநியாயம் தடுக்கப் பட வேண்டும்.

இந்திய ஜனநாயக அமைப்பில் ஊடகங்கள் இன்றியமையாதவை. அவை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் தமிழக ஊடகங்கள் சில அரசியல் கட்சிகளின் தொங்கு சதையாக மாறிவிட்டன. அதிலும் குறிப்பாக, அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தவறான செய்திகளை வெளியிடுகின்றன.

தி இந்து + விகடன் கும்பல், திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு செய்திகளை திசை திருப்புவதை புதிய தொழிலாக தொடங்கியுள்ளன. இது ஒரு அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை.

பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிட்டு, ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதை விட, மிகக் கேவலமான வேறு தொழிலை நாடுவது - சிறிதளவாவது மனசாட்சி உள்ள செயலாக இருக்கும்.




புதன், ஜனவரி 27, 2016

மாணவிகள் மரணம் - SVS தலித் கல்லூரிக்கு தலித் அமைச்சர் அனுமதி அளித்தார்: பா.ம.க.,வை குற்றம் சாட்டுவது ஏன்?

சின்னசேலம் எஸ்.வி.எஸ் கல்லூரி தலித் ஒருவரால் நடத்தப்படும் கல்லூரி ஆகும். இதற்கு அனுமதி அளித்தவரும் ஒரு தலித் அமைச்சர் தான். பிரச்சினைக்கு காரணமான கல்லூரியும் அனுமதி அளித்தவரும் தலித் பிரிவை சேர்ந்தவர்களாக இருக்கும் போது - திமுக கூட்டணி பத்திரிகைகள் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர்.
எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை சித்த மருத்துவ கல்லூரி மாணவிகள் மூன்றுபேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். "மத்திய சுகாதார துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி இருந்தபோதுதான், இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்கிற வதந்தியை 'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்' விஜயகாந்தும், தி.மு.க கும்பலும் பரப்பிவருகிறது.

தி.மு.க ஆதரவு நிலையில் இருக்கும் தி இந்து ஆங்கிலப் பத்திரிகை இதனை ஒரு செய்தி தலைப்பாகவே வெளியிட்டுள்ளது ('Nod given during Anbumani tenure' - The Hindu)

எஸ்.வி.எஸ் கல்லூரி அனுமதியின் பின்னணி

சித்த மருத்துவ கல்லூரி நடத்த விரும்புகிறவர்கள் மாநில அரசிடம் (Essentialist Certificate) எனும் சான்றிதழை வாங்க வேண்டும். பின்னர் 'அனைத்து அடிப்படை வசதிகளையும் பரிசோதித்து, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி அனுமதி வழங்க வேண்டும். இந்த அனுமதிகளுக்கு பின்னரே மத்திய அரசிடம் அனுமதி கோர முடியும்.

எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரிக்கு இந்த 'போலி' அனுமதிகளை அளித்தது வேறு யாருமல்ல, பா.ம.க மீது அவதூறு பரப்பும் அதே திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அரசு தான் அனுமதி அளித்தது.

எஸ்.வி.எஸ் கல்லூரியில் எல்லா வசதிகளும் இருப்பதாக தி.மு.க அரசு அனுமதி அளித்த பின்னர், மத்திய அரசின் அனுமதியை வழங்கியவர் அப்போது மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சராக இருந்த பனபாக லட்சுமி. இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.

(யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் ஆயுஷ் பிரிவு பனபாக லட்சுமி அவர்கள் தலைமையில்தான் இயங்கியது. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அதற்கு பொறுப்பாக இல்லை)

எஸ்.வி.எஸ் கல்லூரி தொடர்பான எந்த ஒரு கோப்பும் மருத்துவர் அன்புமணி அவர்கள் பார்வைக்கு வரவில்லை. அப்படி எந்த ஒரு கோப்பிலும் அவர் கையொப்பம் இடவுமில்லை.

திமுக ஊடகங்களும் கிறிஸ்தவ மதபோதக டாக்டரும் வதந்தி பரப்புவது ஏன்?

மருத்துவர் அன்புமணி அவர்களுக்கு எதிராக 'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்' விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனை திமுக ஆதரவு தி இந்து ஆங்கிலப் பத்திரிகை 'Nod given during Anbumani tenure' என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், மாநில அரசின் அனுமதியையும், எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரி அனுமதியும் தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டதை திட்டமிட்டு மறைத்துவிட்டது The Hindu. #PaidNews
(திமுக என்கிற எஜமானர் எப்படி விரும்புகிறரோ, அப்படியே திமுக அடிமை தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. அதிலும் ஜனவரி 25 ஆம் தேதி விஜயகாந்த் அறிக்கையை 27 ஆம் தேதி காலம் தாழ்த்தி வெளியிட்டுள்ளது தி இந்து.)

தலித் ஒருவரால் நடத்தப்படும் கல்லூரிக்கு, திமுக அரசும் ஒரு தலித் அமைச்சர் ஒருவரும் அனுமதி அளித்தனர் என்பதே உண்மை. இதற்காக திமுக, தி இந்து, டாக்டர்' விஜயகாந்..த்தூ.. ஆகியோர் மருத்துவர் அன்புமணி மீது பாய்வது என்ன நியாயம்?  இனி வானத்துக்கீழ் எந்த தீமை நடந்தாலும் - அதற்கு பாமக காரணம் என்று கூறாவிட்டால் இந்த திமுக கூட்டணிக்கு தூக்கம் வராது போலிருக்கிறது! 

(தற்போதைய திமுக கூட்டணி = திமுக + தேமுதிக + விகடன் குழுமம் + தி இந்து)
-------------------------------------
(குறிப்பு:  'கிறிஸ்தவ மதபோதக டாக்டர்': பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி ஆகியவற்றில் விஜயகாந்த் நிபுணத்துவம் பெற்றமைக்காக பன்னாட்டு கிறித்துவ தேவாலய மேலாண்மை நிறுவனத்தில் (International Institute of Church Management Inc.) டாக்டர் பட்டம் பெற்றவர் விஜயகாந்த். அவர் "டாக்டர் விஜயகாந்த்" ஆனது இப்படித்தான்: "'டாக்டர்' விஜயகாந்த் - பணம் கொடுத்து வாங்கிய பட்டம்?" http://arulgreen.blogspot.com/2010/12/blog-post_10.html  

திங்கள், ஜனவரி 25, 2016

விகடன் பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டும்: பணத்துக்காக செய்தி வெளியிடுவதை நிறுத்து!


'சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு: லயோலா கருத்து கணிப்பு!' - என்ற தலைப்பில் ஒரு செய்தியை ஆனந்த விகடன் பத்திரிகை குழும இணைய தளங்கள் 23.1.2016 அன்று வெளியிட்டன. இது ஒரு அப்பட்டமான மோசடி செய்தி ஆகும்.

'வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது' என்று ஆனந்த விகடன் செய்தியில் கூறப்பட்டது.

ஆனந்த விகடனின் பித்தலாட்டம்

'மக்கள் ஆய்வு' என்கிற அமைப்பை நடத்திவரும் எஸ்.ராஜநாயகம் என்பவருக்கும் சென்னையின் புகழ்பெற்ற லயோலா கல்லூரிக்கும் எந்தவொரு தொடர்பும் தற்பொது இல்லை. அவர் அந்தக் கல்லூரியின் ஒரு முன்னாள் பேராசிரியர். ஆனால், இதை வைத்து, 'லயோலா கருத்து கணிப்பு' என்று செய்தி வெளியிடுகிறது விகடன் குழுமம்.
(விகடன் டுவிட்டர் செய்தி)
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வெளியிடும் அறிவிப்பை, 'தமிழ்நாடு அரசின் அறிவிப்பு' என்று இப்போதும் கூற முடியுமா? அப்படி சொல்வதற்கு இணையான மடத்தனமான செய்கை தான் 'ராஜநாயகம் கருத்து கணிப்பு' என்பதை 'லயோலா கருத்து கணிப்பு' என்று எழுதுவதும் ஆகும்!

ஜனவரி 23, சனிக்கிழமை அன்று காலை பதினோரு மணிக்கு பின்பு ராஜநாயகத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் 'சட்டமன்றத் தேர்தல் 2016: ஒரு முன்னோட்டம்' எனும் அறிக்கை வெளியிடப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில், மதியம் 12.30 மணிக்கு 'லயோலா கருத்து கணிப்பு' என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்டது விகடன். https://twitter.com/vikatan/status/690813893480845312 

இதே செய்தி அறிக்கை விகடன் முகநூல் பக்கத்திலும், விகடன் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது. https://www.facebook.com/vikatanweb/posts/1060021734056616  http://bit.ly/20kemcH
(விகடன் முகநூல் செய்தி)
இதன் தொடர்ச்சியாக, பகல் 1.11 மணியளவில் "லயோலா - கல்லூரி வெளியிடும் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் - சரியாக இருக்குமா?" என்கிற டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது விகடன். https://twitter.com/vikatan/status/690824135367196672
(விகடன் டுவிட்டர் கருத்துக்கேட்பு)
இதன் பின்னர், மு.க. ஸ்டாலினுடைய மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் "அடுத்து லயோலா காலேஜ உதயநிதி வாங்கிட்டாருனு கெளம்புவானுங்களே.." என்று கருத்து வெளியிட்டார். https://twitter.com/Udhaystalin/status/690858678333734912
(உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் செய்தி)
ஆக மொத்தத்தில், 'கலைஞர் குடும்பத்தினருடன் சேர்ந்து' இந்தக் கருத்துக் கணிப்பு "லயோலா கல்லூரி வெளியிடும் கருத்துக் கணிப்பு" என்று உடனடியாக செய்தி பரப்புவதில் கவனமாக இருந்தது விகடன் குழுமம்.

விகடன் விரிவான செய்தியில் கூட, ராஜநாயகம் ஒரு முன்னாள் லயோலா பேராசிரியர் என்பதை மறைத்து, "லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம்" என்றே வெளியிட்டது விகடன் குழுமம். (ஆனந்த விகடனின் பரப்புரையை நம்பி, வேறு சில ஊடகங்கள் மறுநாள் செய்தியில் இதை லயோலா கருத்துக் கணிப்பு என்று வெளியிட்டன).

ஆனந்த விகடன் - அப்பட்டமான மோசடி

1. சர்வே அறிக்கையில் இல்லாத வார்த்தை லயோலா!

மக்கள் ஆய்வு என்கிற அமைப்பு லயோலா கல்லூரியில் இல்லை. அது சூளைமேடு வன்னியர் தெருவில் உள்ள ஒரு அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 23.1.2016 ஆம் நாள் வெளியிட்ட, "சட்டமன்றத் தேர்தல் 2016: ஒரு முன்னோட்டம்" அறிக்கையில், ஒரே ஒரு இடத்தில் கூட 'லயோலா கல்லூரி' என்கிற வார்த்தை இல்லை. 
(ராஜநாயகம் அறிக்கை)
அறிக்கையை வெளியிட்டராஜநாயகமே 'லயோலா கல்லூரி' பெயரை சொல்லாத போது - ஆனந்த விகடன் குழுமம் திட்டமிட்டு, "லயோலா கருத்து கணிப்பு" என்று பொய்யை பரப்பியது ஏன்?

2. லயோலா கல்லூரியின் மறுப்பு

இது போன்ற கருத்துக் கணிப்புகள் தொடர்பாக, லயோலா கல்லூரி நிர்வாகம் கடந்த 5.1.2016 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் "கருத்துக் கணிப்புக் குறித்து கல்லூரி நிர்வாகத்துக்கோ அல்லது எந்த ஒரு ஆசிரியர், மாணவர், முன்னாள் மாணவர் அமைப்பிற்கோ சம்பந்தம் இல்லை. கல்லூரியின் பெயரை தேவையின்றி, தவறாக உபயோகிப்பதை ஏற்க முடியாது. அத்தகைய உரிமையை கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு தனி நபருக்கோ, அமைப்புக்கோ கொடுக்கவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளது.
(லயோலா கல்லூரி விளக்கம்)
"கல்லூரியின் பெயரை தேவையின்றி, தவறாக உபயோகிப்பதை ஏற்க முடியாது" என்று லயோலா கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் - ஆனந்த விகடன் குழுமம் திட்டமிட்டு, "லயோலா கல்லூரி" பெயரை பயன்படுத்தியது ஏன்?

3. இந்திய பத்திரிகை கவுன்சில் விதிகள் மீறல்

இந்திய பத்திரிகை கவுன்சில் (Press Council of India) வழிகாட்டு நெறிகளின் படி, பத்திரிகை செய்தி தலைப்புகள், அதற்கு கீழே உள்ள செய்தியை நியாயப்படுத்த வேண்டும். மேலும், செய்திகள் ஆதாரப்பூர்வமாகவும், தகுந்த அடிப்படையுடனும், திசை திருப்பாத வகையிலும் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

"Headings must reflect and justify the matter printed under them" - Article 21. (i)(b). Press Council of India, Norms Of Journalistic Conduct  

"The Press shall eschew publication of inaccurate, baseless, graceless, misleading or distorted material" Article 1. (i). Press Council of India, Norms Of Journalistic Conduct 

பத்திரிகை தர்மத்தை தாங்கிப் பிடிப்பதாகக் கூறும் விகடன் குழுமம் - பத்திரிகை தர்மத்தை அப்பட்டமாக மீறுவது ஏன்?

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்திய ஜனநாயக அமைப்பில் ஊடகங்கள் இன்றியமையாதவை. அவை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் தமிழக ஊடகங்கள் சில அரசியல் கட்சிகளின் தொங்கு சதையாக மாறிவிட்டன. 

அதிலும் குறிப்பாக, அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தவறான செய்திகளை வெளியிடுகின்றன. ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமான செய்தியை மிகைப்படுத்தியும், பொய்யாகவும் வெளியிடுகின்றன. அதே நேரத்தில், மாற்று அரசியல் கட்சிகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்தும், தவறான செய்திகளை வெளியிட்டும் - ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுகின்றன.

அந்த வகையில் ஆனந்த விகடன் குழுமத்தின் ஜனநாயகப் படுகொலைதான் "லயோலா கருத்து கணிப்பு" செய்தி ஆகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் இந்த அநீதியை வேடிக்கைப் பார்க்கக் கூடாது. தட்டிக்கேட்க வேண்டும்.

நியாயம் கேளுங்கள்

1. ஆனந்த விகடன் மன்னிப்புக் கேட்கக் கோருங்கள் - பணத்துக்காக செய்தி வெளியிடுவதை நிறுத்த சொல்லுங்கள்.

உங்கள் எதிர்ப்பினை ஆனந்த விகடன் குழுமத்துக்கு மின்னஞ்சல், தொலைபேசி, கடிதம் வழியாக சொல்லுங்கள். (மிக முக்கிய குறிப்பு: நீங்கள் நியாயம் கோருகிறோம். உங்களது வார்த்தையில் நீதி உள்ளது. எனவே, நாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி நியாயம் கோருங்கள்)

Phone : 044-28545500, 28545588, 28543300

Direct line: 044 - 2851 0808,  044-2851 1919

Fax : 044-2851 2929

மின்னஞ்சல்:

editor@vikatan.com, av@vikatan.com, jv@vikatan.com,

முகநூலில் எதிர்ப்பு தெரிவிக்க: https://www.facebook.com/vikatanweb 

டிவிட்டரில்  எதிர்ப்பு தெரிவிக்க: https://twitter.com/vikatan

கடிதம்:

ஆனந்த விகடன் ஆசிரியர் இலாகா,
757, அண்ணாசாலை, சென்னை - 600 002

2. லயோலா கல்லூரி பெயரை ஊடகங்கள் தவறாக பயன்படுத்துவதற்கு லயோலா நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கக் கோருங்கள்

Dr. K. S. Antonysamy,
Chief Editor - www.loyolacollege.edu &
Director, WEPRO,
MG 08, Main Building,
Loyola College, Chennai - 600 034.
Tel: 91 44 28178200 Ext: 469

Email ID: wepro@loyolacollege.edu

பணத்துக்காக செய்தி வெளியிடும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம்:  #StopPAIDNEWS #PaidNews



வியாழன், ஜனவரி 14, 2016

ஜல்லிக்கட்டு விவாதம்: ஒரு தரப்பாக நடப்பது ஏன்?

ஜல்லிக்கட்டு தடையை எதிர்ப்பவர்களை மட்டுமே வைத்து தமிழ்நாட்டு ஊடகங்கள் விவாதங்ளை வைக்கிறார்கள். அதற்கு எதிரான தரப்பினரின் கருத்துகளை திட்டமிட்டு மறைக்கின்றனர். இது நியாயம் இல்லை?

ஜல்லிக்கட்டு வேண்டாம் என்று 'பீட்டா' (PeTA) மட்டும்தான் கூறுகிறதா? விலங்குகளை வதையை எதிர்ப்பவர்கள் மட்டும்தான் இதனை எதிர்க்கின்றனரா? சாதி ஒழிப்புப் போராளிகள், இடதுசாரிகள், திராவிட அமைப்பினரும் ஜல்லிக்கட்டை தீவிரமாக எதிர்க்கின்றனர்.

பழங்கால சிலையில் ஜல்லிக்கட்டு
"ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?" என்று கேட்கிறது கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகம்.

"ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் ஊதிப் பெருக்குவது போல, ஜல்லிக்கட்டு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளமல்ல. தென்மாவட்ட ஆதிக்க சாதியினரின் சாதித் திமிரைப் பறைசாற்றும் ஓர் ஆதிக்கப் பண்பாட்டுச் சின்னம்தான்." என்கிறது, ம.க.இ.க அமைப்பின் வினவு.
சிந்து சமவேளி படிமத்தில் ஜல்லிக்கட்டு
"ஜல்லிக்கட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசின் விலங்குகள் நல வாரியமும், தலித் எழுத்தாளர்களான ஜல்லிக்கட்டு ஒழிப்புக் குழுவினரை உள்ளடக்கியவர்களும் இணைந்து 1998 -லிருந்து இதனை தடை செய்யப்போராடி வருகிறோம்" என்கிறது "ஜல்லிக்கட்டு : தடையை வரவேற்கிறோம் – ஏன்?" எனும் ஒரு கட்டுரை.

"ஜல்லிக்கட்டு – ஒட்டுமொத்த தமிழர் அடையாளம் என்றால், அது ஏன் தமிழகத்தில் குறிப்பட்ட பகுதியில் மட்டும் நடக்கிறது? குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களே அதிகம் பங்கெடுக்கிறார்கள்?" என்கிறது "வே.மதிமாறன்" என்பவரின் ஒரு கட்டுரை.
பழங்குடி ஓவியத்தில் ஜல்லிக்கட்டு
"ஜல்லிக்கட்டும் ஊரின் ஆதிக்க வகுப்பினருக்கே உரியதாக இருந்து வருகிறது. மக்களின் உணர்வு, பண்பாடு என்ற சொல்லப்படுவதெல்லாம் பெரும்பான்மைச் சாதிசார்ந்ததே ஆகும். இதனாலேயே அரசும் அரசியல் கட்சிகளும் இதற்காகக் காவடி எடுக்கின்றன." என்கிறது "ஜல்லிக்கட்டு: புலப்படாத உண்மை" எனும் 'ஸ்டாலின் ராஜாங்கம்' என்பவரின் ஒரு கட்டுரை.

நாம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம்

சாதி கடந்தோ, மதத்தைக் கடந்தோ - எதற்காக ஜல்லிக்கட்டை பார்க்க வேண்டும்? சாதியையோ, மதத்தையோ அடிப்படையாக வைத்து ஜல்லிக்கட்டை நடத்தினால் என்ன தவறு? முத்தரையர், மறவர், கள்ளர் போன்ற சாதியினர் இதனை தங்களது விழா என்று கொண்டாடினால், அதில் என்ன குற்றம் இருக்கிறது?

ஒரு ஊரில் ஒரு சில சாதிகள் இதனை முன்னின்று நடத்தினால், வேறு சில ஊர்களில், வேறு சில சாதியினர் முன்னின்று நடத்துகின்றனர். சில சாதியினர் இதில் பங்கெடுப்பதே இல்லை - அதற்காக இது தமிழனின் விழா இல்லை என்று சொல்ல முடியுமா?
தமிழ்நாட்டின் 300 விதமான சாதிகளுக்கும் சம வாய்ப்பு அளித்து எந்த விழாவையும் நடத்த முடியாது. எனவே, சாதி கடந்து, அனைத்து தமிழர்களுக்குமான விழா என்று எதுவும் இருக்க முடியாது! (எல்லோருக்கும் பொதுவான பொங்கல் பண்டிகையைக் கூட, ஒவ்வொரு சாதியிலும் ஒவ்வொரு வகையறாவிலும் ஒவ்வொரு விதமாகத்தான் கொண்டாடுகிறார்கள்.)

நாம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறோம். அதன் எல்லா நிலைகளிலும் ஆதரிக்கிறோம். ஒரு மதம் சார்ந்ததாகவோ, ஒரு இனம் சார்ந்ததாகவோ, ஒரு சாதி சார்ந்ததாகவோ - எந்த அடிப்படையில் பார்த்தாலும் ஜல்லிக்கட்டு ஆதரிக்கப்பட வேண்டியதே.

திருவிழாக்கள், விளையாட்டுகள், வேளாண்மை, வியாபாரம், தொழில் என எல்லாவற்றிலும் சாதி ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கவே செய்கின்றன. அதற்காக 'திருவிழாக்கள், விளையாட்டுகள், வேளாண்மை, வியாபாரம், தொழில்' என எல்லாவற்றையும் இல்லாமல் செய்துவிட முடியாது. (தீண்டாமை, சாதி அடிமைத்தனம், மனித உரிமை மீறல்கள் எந்த இடத்தில் இருந்தாலும் - அவை களையப்பட வேண்டும்)

ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார நிகழ்வுகள் ஒரு இனத்துக்காக, ஒரு சாதிக்காக, ஒரு வம்சத்துகாக, ஒரு குடும்பத்துக்காக என எந்த அளவில் நடந்தாலும் - அதனை அந்த இனத்தின், சாதியின், வம்சத்தின், குடும்பத்தின் உரிமையாக கருதி அதனை பாதுகாக்கவே வேண்டும்.

சாதிகள், இனங்கள், மதங்கள், மொழிகள், நம்பிக்கைகள் என பன்முக அடையாளங்களை அங்கீகரித்துதான் மனித சமூகம் நீடித்திருக்க முடியும். இந்த அடையாளங்களை தொலைத்துவிட்டு, மானுட சமூகம் நீடித்திருக்க வாய்ப்பே இல்லை.

இணைப்புகள்:

1. ஜல்லிக்கட்டுக்கு மல்லுகட்டுவது தான் தமிழர் பண்பாடா?,  பெரியார் முழக்கம் 2016

2. ஜல்லிக்கட்டு : தமிழர் பாரம்பரியமா ? ஆதிக்கசாதி அடையாளமா ?, வினவு

3. ஜல்லிக்கட்டு : தடையை வரவேற்கிறோம் – ஏன்?

4. மாட்டுக் கொம்பில் மல்லுக்கட்டும் மனிதம், வே.மதிமாறன்

5. ஜல்லிக்கட்டு: புலப்படாத உண்மை, ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்