Pages

திங்கள், ஜனவரி 25, 2016

விகடன் பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டும்: பணத்துக்காக செய்தி வெளியிடுவதை நிறுத்து!


'சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு: லயோலா கருத்து கணிப்பு!' - என்ற தலைப்பில் ஒரு செய்தியை ஆனந்த விகடன் பத்திரிகை குழும இணைய தளங்கள் 23.1.2016 அன்று வெளியிட்டன. இது ஒரு அப்பட்டமான மோசடி செய்தி ஆகும்.

'வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது' என்று ஆனந்த விகடன் செய்தியில் கூறப்பட்டது.

ஆனந்த விகடனின் பித்தலாட்டம்

'மக்கள் ஆய்வு' என்கிற அமைப்பை நடத்திவரும் எஸ்.ராஜநாயகம் என்பவருக்கும் சென்னையின் புகழ்பெற்ற லயோலா கல்லூரிக்கும் எந்தவொரு தொடர்பும் தற்பொது இல்லை. அவர் அந்தக் கல்லூரியின் ஒரு முன்னாள் பேராசிரியர். ஆனால், இதை வைத்து, 'லயோலா கருத்து கணிப்பு' என்று செய்தி வெளியிடுகிறது விகடன் குழுமம்.
(விகடன் டுவிட்டர் செய்தி)
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி வெளியிடும் அறிவிப்பை, 'தமிழ்நாடு அரசின் அறிவிப்பு' என்று இப்போதும் கூற முடியுமா? அப்படி சொல்வதற்கு இணையான மடத்தனமான செய்கை தான் 'ராஜநாயகம் கருத்து கணிப்பு' என்பதை 'லயோலா கருத்து கணிப்பு' என்று எழுதுவதும் ஆகும்!

ஜனவரி 23, சனிக்கிழமை அன்று காலை பதினோரு மணிக்கு பின்பு ராஜநாயகத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் 'சட்டமன்றத் தேர்தல் 2016: ஒரு முன்னோட்டம்' எனும் அறிக்கை வெளியிடப்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில், மதியம் 12.30 மணிக்கு 'லயோலா கருத்து கணிப்பு' என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்டது விகடன். https://twitter.com/vikatan/status/690813893480845312 

இதே செய்தி அறிக்கை விகடன் முகநூல் பக்கத்திலும், விகடன் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டது. https://www.facebook.com/vikatanweb/posts/1060021734056616  http://bit.ly/20kemcH
(விகடன் முகநூல் செய்தி)
இதன் தொடர்ச்சியாக, பகல் 1.11 மணியளவில் "லயோலா - கல்லூரி வெளியிடும் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் - சரியாக இருக்குமா?" என்கிற டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது விகடன். https://twitter.com/vikatan/status/690824135367196672
(விகடன் டுவிட்டர் கருத்துக்கேட்பு)
இதன் பின்னர், மு.க. ஸ்டாலினுடைய மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் "அடுத்து லயோலா காலேஜ உதயநிதி வாங்கிட்டாருனு கெளம்புவானுங்களே.." என்று கருத்து வெளியிட்டார். https://twitter.com/Udhaystalin/status/690858678333734912
(உதயநிதி ஸ்டாலின் டுவிட்டர் செய்தி)
ஆக மொத்தத்தில், 'கலைஞர் குடும்பத்தினருடன் சேர்ந்து' இந்தக் கருத்துக் கணிப்பு "லயோலா கல்லூரி வெளியிடும் கருத்துக் கணிப்பு" என்று உடனடியாக செய்தி பரப்புவதில் கவனமாக இருந்தது விகடன் குழுமம்.

விகடன் விரிவான செய்தியில் கூட, ராஜநாயகம் ஒரு முன்னாள் லயோலா பேராசிரியர் என்பதை மறைத்து, "லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம்" என்றே வெளியிட்டது விகடன் குழுமம். (ஆனந்த விகடனின் பரப்புரையை நம்பி, வேறு சில ஊடகங்கள் மறுநாள் செய்தியில் இதை லயோலா கருத்துக் கணிப்பு என்று வெளியிட்டன).

ஆனந்த விகடன் - அப்பட்டமான மோசடி

1. சர்வே அறிக்கையில் இல்லாத வார்த்தை லயோலா!

மக்கள் ஆய்வு என்கிற அமைப்பு லயோலா கல்லூரியில் இல்லை. அது சூளைமேடு வன்னியர் தெருவில் உள்ள ஒரு அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 23.1.2016 ஆம் நாள் வெளியிட்ட, "சட்டமன்றத் தேர்தல் 2016: ஒரு முன்னோட்டம்" அறிக்கையில், ஒரே ஒரு இடத்தில் கூட 'லயோலா கல்லூரி' என்கிற வார்த்தை இல்லை. 
(ராஜநாயகம் அறிக்கை)
அறிக்கையை வெளியிட்டராஜநாயகமே 'லயோலா கல்லூரி' பெயரை சொல்லாத போது - ஆனந்த விகடன் குழுமம் திட்டமிட்டு, "லயோலா கருத்து கணிப்பு" என்று பொய்யை பரப்பியது ஏன்?

2. லயோலா கல்லூரியின் மறுப்பு

இது போன்ற கருத்துக் கணிப்புகள் தொடர்பாக, லயோலா கல்லூரி நிர்வாகம் கடந்த 5.1.2016 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் "கருத்துக் கணிப்புக் குறித்து கல்லூரி நிர்வாகத்துக்கோ அல்லது எந்த ஒரு ஆசிரியர், மாணவர், முன்னாள் மாணவர் அமைப்பிற்கோ சம்பந்தம் இல்லை. கல்லூரியின் பெயரை தேவையின்றி, தவறாக உபயோகிப்பதை ஏற்க முடியாது. அத்தகைய உரிமையை கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு தனி நபருக்கோ, அமைப்புக்கோ கொடுக்கவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளது.
(லயோலா கல்லூரி விளக்கம்)
"கல்லூரியின் பெயரை தேவையின்றி, தவறாக உபயோகிப்பதை ஏற்க முடியாது" என்று லயோலா கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் - ஆனந்த விகடன் குழுமம் திட்டமிட்டு, "லயோலா கல்லூரி" பெயரை பயன்படுத்தியது ஏன்?

3. இந்திய பத்திரிகை கவுன்சில் விதிகள் மீறல்

இந்திய பத்திரிகை கவுன்சில் (Press Council of India) வழிகாட்டு நெறிகளின் படி, பத்திரிகை செய்தி தலைப்புகள், அதற்கு கீழே உள்ள செய்தியை நியாயப்படுத்த வேண்டும். மேலும், செய்திகள் ஆதாரப்பூர்வமாகவும், தகுந்த அடிப்படையுடனும், திசை திருப்பாத வகையிலும் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

"Headings must reflect and justify the matter printed under them" - Article 21. (i)(b). Press Council of India, Norms Of Journalistic Conduct  

"The Press shall eschew publication of inaccurate, baseless, graceless, misleading or distorted material" Article 1. (i). Press Council of India, Norms Of Journalistic Conduct 

பத்திரிகை தர்மத்தை தாங்கிப் பிடிப்பதாகக் கூறும் விகடன் குழுமம் - பத்திரிகை தர்மத்தை அப்பட்டமாக மீறுவது ஏன்?

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்திய ஜனநாயக அமைப்பில் ஊடகங்கள் இன்றியமையாதவை. அவை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் தமிழக ஊடகங்கள் சில அரசியல் கட்சிகளின் தொங்கு சதையாக மாறிவிட்டன. 

அதிலும் குறிப்பாக, அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தவறான செய்திகளை வெளியிடுகின்றன. ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமான செய்தியை மிகைப்படுத்தியும், பொய்யாகவும் வெளியிடுகின்றன. அதே நேரத்தில், மாற்று அரசியல் கட்சிகளின் செய்திகளை இருட்டடிப்பு செய்தும், தவறான செய்திகளை வெளியிட்டும் - ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுகின்றன.

அந்த வகையில் ஆனந்த விகடன் குழுமத்தின் ஜனநாயகப் படுகொலைதான் "லயோலா கருத்து கணிப்பு" செய்தி ஆகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் இந்த அநீதியை வேடிக்கைப் பார்க்கக் கூடாது. தட்டிக்கேட்க வேண்டும்.

நியாயம் கேளுங்கள்

1. ஆனந்த விகடன் மன்னிப்புக் கேட்கக் கோருங்கள் - பணத்துக்காக செய்தி வெளியிடுவதை நிறுத்த சொல்லுங்கள்.

உங்கள் எதிர்ப்பினை ஆனந்த விகடன் குழுமத்துக்கு மின்னஞ்சல், தொலைபேசி, கடிதம் வழியாக சொல்லுங்கள். (மிக முக்கிய குறிப்பு: நீங்கள் நியாயம் கோருகிறோம். உங்களது வார்த்தையில் நீதி உள்ளது. எனவே, நாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி நியாயம் கோருங்கள்)

Phone : 044-28545500, 28545588, 28543300

Direct line: 044 - 2851 0808,  044-2851 1919

Fax : 044-2851 2929

மின்னஞ்சல்:

editor@vikatan.com, av@vikatan.com, jv@vikatan.com,

முகநூலில் எதிர்ப்பு தெரிவிக்க: https://www.facebook.com/vikatanweb 

டிவிட்டரில்  எதிர்ப்பு தெரிவிக்க: https://twitter.com/vikatan

கடிதம்:

ஆனந்த விகடன் ஆசிரியர் இலாகா,
757, அண்ணாசாலை, சென்னை - 600 002

2. லயோலா கல்லூரி பெயரை ஊடகங்கள் தவறாக பயன்படுத்துவதற்கு லயோலா நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கக் கோருங்கள்

Dr. K. S. Antonysamy,
Chief Editor - www.loyolacollege.edu &
Director, WEPRO,
MG 08, Main Building,
Loyola College, Chennai - 600 034.
Tel: 91 44 28178200 Ext: 469

Email ID: wepro@loyolacollege.edu

பணத்துக்காக செய்தி வெளியிடும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம்:  #StopPAIDNEWS #PaidNews



கருத்துகள் இல்லை: