Pages

சனி, ஏப்ரல் 23, 2011

வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.

2011 தமிழக தேர்தலில் வரலாறு காணாதவகையில் 78 சதவீத அளவுக்கு வாக்குப்பதிவு நடந்ததாகவும், வழக்கத்தில் இல்லாத வகையில் மக்கள் வாக்களித்தது ஆளும் கட்சிக்கு பாதகமாகவே அமையும் என்றும் பிரச்சாரம் நடக்கிறது.

"அதிக வாக்குப்பதிவு ஆளும் கட்சிக்கு பாதகமா?" என்ற கருத்து சரியா என்பது ஒருபக்கம் இருந்தாலும் - வரலாறு காணாதவகையில் வாக்குப்பதிவு நடந்தாகக் கூறப்படுவதே ஒரு கட்டுக்கதை.

கடந்த 1981 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளுக்கிடையே தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 72 லட்சம் பேர் புதிதாக சேர்ந்ததாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது. அவர்கள் அனைவரும் இன்று 20 வயதைக் கடந்த வாக்காளர்களாக இருப்பார்கள்.

ஆனால், 2001 - 2011 ஆம் ஆண்டுகளுக்கு இடையே தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் ஒரே ஒருவர் கூட கூடுதலாக அதிகமாகவில்லை. அப்படியானால் அந்த 72 லட்சம் பேர் எங்கே போனார்கள்?

இதுதான் வாக்குப்பதிவு அதிகமாகத் தெரிவதன் பின்னுள்ள மருமம் ஆகும்.

தமிழ்நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும், வாக்காளர் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பார்த்தால் - ஒவ்வொரு முறையும் மக்கள் தொகை அதிகரிப்பதற்கு ஏற்ப, வாக்காளர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்ததைக் காணலாம்.

எடுத்துக்காட்டாக 1971 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு மக்கள் தொகை 4 கோடியே 11 லட்சம் பேர். அதுவே 1981 ஆம் ஆண்டில் 4 கோடியே 84 லட்சம் பேர். இதற்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் அதிகமான மக்கள் தொகை 72 லட்சம் பேர்.

அதே போன்று 1971 ஆம் ஆண்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சம் பேர். இதுவே 1981 ஆம் ஆண்டில் 2 கோடியே 92 லட்சம் பேர். இடைப்பட்ட பத்தாண்டுகளில் அதிகமான வாக்காளர் எண்ணிக்கை 62 லட்சம் பேர்.

ஆக 1971 - 1981 ஆம் ஆண்டுகளுக்கிடையே மக்கள் தொகையில் 71 லட்சம் பேரும் வக்காளர் பட்டியலில் 62 லட்சம் பேரும் அதிகமாகியுள்ளனர்.

இவ்வாறு 1961 தொடங்கி 2011 ஆம் ஆண்டுவரையிலான ஐம்பதாண்டு விவரம் இதோ:

1961 - 1971: அதிகரித்த மக்கள்தொகை - 75 லட்சம், அதிகரித்த வாக்காளர் - 43 லட்சம்.

1971 - 1981: அதிகரித்த மக்கள்தொகை - 72 லட்சம், அதிகரித்த வாக்காளர் - 62 லட்சம்.

1981 - 1991: அதிகரித்த மக்கள்தொகை - 75 லட்சம், அதிகரித்த வாக்காளர் - ஒரு கோடியே 7 லட்சம்.

1991 - 2001: அதிகரித்த மக்கள்தொகை - 65 லட்சம், அதிகரித்த வாக்காளர் - 75 லட்சம்.

2001 - 2011: அதிகரித்த மக்கள்தொகை - 97 லட்சம், வாக்காளர் அதிகரிக்கவில்லை - (4 லட்சம்பேர் குறைவு)

மேற்கண்ட பட்டியலின் படி "வரலாற்றில் முதன் முறையாக" 2001 - 2011 பத்தாண்டு காலத்தில் வாக்காளர்கள் அதிகரிக்காமல் 4 லட்சம் பேர் குறைந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இல்லாத பெயர்கள் அனைத்தும் நீக்கப்பட்டு பட்டியல் கச்சிதமாக்கப்பட்டதே இதற்கு காரணம் ஆகும்.

வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்பட்டு வாக்காளர் எண்ணிக்கை குறைந்ததால்தான் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாகிவிட்டது போன்ற மாயத்தோற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் 2011 தேர்தலில் 78% வாக்குப்பதிவு காட்டப்படுகிறது. ஒருவேளை வாக்காளர் பட்டியல் பழைய தன்மையிலேயே அமைந்திருந்தால் இப்போதைய வாக்குப்பதிவு வெறும் 67% ஆக மட்டுமே இருந்திருக்கும்:

இதுகுறித்து விளக்கமாக கீழே காணலாம்:
TN Election “turnout myth”- R. ARUL 1

9 கருத்துகள்:

Prakash சொன்னது…

Good Analysis..

crjayaprakash சொன்னது…

This perspective seems to be rational.

சிவக்குமார் சொன்னது…

நம்பவே முடியலைங்க நண்பா ! மிகச் சிறப்பாக அலசியிருக்கிறீர்கள்

வெற்றியின் பக்கங்கள் சொன்னது…

திரு. அருள், உங்களின் கூற்று ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றுதான்.

மக்கள் தொகை மற்றும் வாக்காளர் பட்டியல் விவரங்களுக்கான தரவுகளை இணைத்தால் இடுகை இன்னும் முழுமை பெறும்.

Unknown சொன்னது…

பிடிஎஃப் கோப்புகளை ஸ்கிரிப்ட் தளம் வாயிலாக இணைக்காதீர்கள். இரண்டொரு நாட்களில் அதிலுள்ள தமிழ் எழுத்துருக்கள் கண்ணுக்குத் தெரியாமல் கொக்கி கொக்கியாகத் தெரியத் தொடங்கி விடுகிறது. பிடிஎஃப் கோப்பை கூகுள் சைட்ஸ் போன்ற தளங்களில் சேமித்து தொடுப்பை மட்டும் உங்கள் பதிவில் இடுங்கள். தேவை எனில் ஒவ்வொரு பக்கத்தையும் ஜேபிஜி ஃபார்மெட்டில் உங்கள் பதிவில் இடுங்கள். தமிழ் எழுத்துருக்களைப் பொருத்த வரை ஸ்கிரிப்ட் ஒரு நம்பகமான தளம் இல்லை.

ஞாஞளஙலாழன் சொன்னது…

நல்ல அலசல். உங்களுடைய சமீபத்திய பதிவுகள் உங்கள் மீதான நல்லெண்ணத்தை அதிகப்படுத்தியிருக்கின்றன.

அன்புடன்,
ஞாஞளஙலாழன்.

Carfire சொன்னது…

//////மேற்கண்ட பட்டியலின் படி "வரலாற்றில் முதன் முறையாக" 2001 - 2011 பத்தாண்டு காலத்தில் வாக்காளர்கள் அதிகரிக்காமல் 4 லட்சம் பேர் குறைந்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இல்லாத பெயர்கள் அனைத்தும் நீக்கப்பட்டு பட்டியல் கச்சிதமாக்கப்பட்டதே இதற்கு காரணம் ஆகும்./////

அதாவது இதற்கு முன்பு வரை வாக்காளர் பட்டியல் சரியான முறையில் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறிர்கள் அப்படி தானே ....

எனக்கு தெரிந்து கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை ஒரே நபருக்கு இரண்டு அல்லது மூன்று இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தது அதில் எவ்வளவு பேருக்கு மற்றொருவர் ஒட்டு போட்டார் என்பது எல்லாம் கணக்கில் இல்லை அப்படியாக இருக்கும் பட்சத்தில் இந்த தேர்தலுக்கு முன்பு வரை நடந்த வாக்கு பதிவு சதவீதங்கள் அனைத்துமே உண்மையானவை என்று ஏற்றுக்கொள்ள இயலாதவை அவைகளுடன் இந்த முறை நடந்த தேர்தல் ஒட்டு பதிவு விவரங்களை ஒப்பிடுவது முட்டாள்தனமான வேலை...
எதோ நீங்களும் நீங்கள் சார்ந்த கட்சிக்கு சாதகமாக பல இல்லாத புள்ளி விவரங்களை காட்டி உங்கள் வாசகர்களை நன்றாக குழப்பி இருக்கிறிர்கள் அதற்கு அந்த maths puzzl (அந்த பலூன் போட்டி )e நன்றாகவே உதவி இருக்கிறது...

பெஞ்சமின் சொன்னது…

In 2004, 2006 2009 elections also the poll percentages were low compared to 2011 poll percentage. How it happened? Are you telling that voters list is prepared correctly only after 2009 election? I think identifying bogus voters list and deleting wrong voter are happening after the arrival of Electoral ID card.Please clarify my doubt.

பெஞ்சமின் சொன்னது…

In 2004, 2006 2009 elections also the poll percentages were low compared to 2011 poll percentage. How it happened? Are you telling that voters list is prepared correctly only after 2009 election? I think identifying bogus voters list and deleting wrong voter are happening after the arrival of Electoral ID card.Please clarify my doubt.