Pages

திங்கள், ஏப்ரல் 25, 2011

சாய் பாபா - ஒரு மாறுபட்ட அனுபவம்

கடவுள் நம்பிக்கை என்று வரும்போது மனிதர்களை 1. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், 2. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று இரண்டு பகுப்பாக பிரிக்க முடியும். உலகில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்தான் அதிகம்.

கடவுளை நம்புகிறவர்களோ, நம்பாதவர்களோ - எவராக இருப்பினும் அடுத்தவரது நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது அவசியம். அதாவது, அடுத்தவர் நம்பிக்கையில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அத்தகைய ஒரு நம்பிக்கையை அவர் கொண்டிருப்பதற்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும். மத நம்பிக்கை குறித்த ஐ.நா பிரகடனத்தை காண இங்கே சொடுக்கவும். (மேலு விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.)
ஆனால், இந்த அடிப்படை உரிமையைக் கூட அங்கீகரிக்காத போக்கினை பதிவுகில் பார்க்க முடிகிறது. ஒருவகையில் பார்த்தால் - பத்திரிகைகள், அரசியல்வாதிகளிடம் காணப்படும் பண்பாட்டு முதிர்ச்சியை பதிவுலகில் காண முடியாதது அதிர்ச்சியளிக்க கூடியதாக இருக்கிறது.

எடுத்துக்காட்டாக, சாய் பாபாவின் மறைவு குறித்து சி.என்.என் - ஐ.பி.என் செய்தியில் "சாய் பாபா குறித்த விமர்சனங்கள் பல இருப்பினும் அதையெல்லாம் அலசும் நேரம் இதுவல்ல" என்று கூறினார்கள். தமிழ்நாட்டின் எதிர்எதிர் அரசியல் துருவங்களான கலைஞரும் செயலலிதாவும் இரங்கல் தெரிவித்தனர். சென்னைக் குடிநீர் திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் அளித்தற்கு நன்றிக்கடனாக துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.

ஆனால், பதிவுலகில் பலரும் மனம் போன பொக்கில் சாய் பாபா மரணத்தை கேலிக்கூத்தாக்க முயற்சிக்கிறார்கள். இது மன விகாரத்தின் வெளிப்பாடன்றி வேறல்ல!  கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டுமின்றி - தமக்கென்று ஒரு மத அல்லது கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் சாய் பாபாவை இந்த தருணத்தில் தூற்றுவது வியப்பளிப்பதாக இருக்கிறது.

சாய் பாபா கடவுள் அல்ல, அவர் ஒரு மனிதர்தான் என்பது சிலரது தூற்றுதலின் பின்னணியாக இருக்கிறது. ஆனால், அவர்களில் பலர் இராமன், கிருட்டிணன், இயேசு எல்லோரும் இந்த பூமியில் மனிதனாக வாழ்ந்து மறைந்தார்கள் என்பதை இன்னமும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சாய் பாபா ஏதோ சித்து வேலைகளை செய்தார் என்று அவரை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள் - ஆனால், அவர்களில் பலர் சித்து வேலைகளின் களஞ்சியமாக இருக்கும் இராமாயணம், மகாபாரதம், பைபிளை நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். (ஒரு ஒப்பீட்டுக்குத்தான் சொல்கிறேன், இவ்வாறு கூறுவதன் மூலம் நான் எவரது நம்பிக்கையையும் கேலி செய்வதற்கு முயற்சிக்கவில்லை.)

சாய் பாபா'வை நம்புகிறவர்களின் மனநிலையை அல்லது அவர்களது நம்பிக்கையை கொஞ்சமும் அறியாமல் வீசப்படும் அநாகரீக பதிவுகளாகவே நான் இவற்றை பார்க்கிறேன்.

சாய் பாபா - எனது அனுபவம்

நான் சாய் பாபா'வை 1994 ஆம் ஆண்டு புட்டபர்த்தியிலும் 2005 ஆம் ஆண்டில் கொடைக்கானலிலும் நேரில் பார்த்தது உண்டு. அங்கெல்லாம் - சாதி மதத்தை கடந்து அன்பு ஒன்றே நிலவும் சூழலைத்தான் நான் கண்டிருக்கிறேன். பதிவுலகில் பேசப்படுவது போல எவரும் ஏமாற்றப்பட்டு நான் பார்க்கவில்லை.

இப்போதும், சாய் பாபா மறைவால் அவரது பக்தர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருப்பதாகவும் தெரியவில்லை. அவர் மறைந்த 24.04.2011 அன்று,சென்னயில் உள்ள சாய் பாபா ஆலயமான சுந்தரத்திற்கு நான் சென்று பார்த்தேன். அங்கு வந்த ஆயிரக்கணக்கானோரில் ஒருவரும் அழுது புலம்பவில்லை. ஒரு சிலர் கண்ணீர் விடுவதாக, கதறுவதாக செய்திகள் வந்தாலும், அது சாய் பாபாவை மீண்டும் பார்க்க முடியாது என்கிற - அல்லது தமது குடும்பத்தில் ஒருவர் மறைந்தால் எழும் சோகம் போன்றதுதான். (85 வயதில் ஒருவர் இறந்து போவதில் வியப்பதற்கு எதுவும் இல்லை)

உலகிலுள்ள எல்லா சாய் பாபா வழிபாட்டு இடங்களிலும், வழிபாட்டின் போது ஒரு அமர்வு நாற்காலியை போட்டு வைத்திருப்பார்கள். அந்த நாற்காலியில் சாய் பாபா கண்களுக்கு தெரியாமல் அமர்ந்திருப்பதாக நம்புவார்கள். இது காலம் காலமாக நடக்கும் நிகழ்வு. இப்போது புட்டபர்த்தியிலும் ஒரு நாற்காலியை போட்டு அதில் அவர் அமர்ந்திருப்பதாக நம்பப் போகிறார்கள் (இது பகுத்தறிவுக்கு உகந்ததா என்பதெல்லாம் தேவையற்ற கேள்வி). எனவே, சாய் பாபா பக்தர்கள் ஏமாந்துபோனதாக பேச எதுவுமே இல்லை.

""உலகம் முழுவதும் மூன்று கோடி பக்தர்கள் தங்களது வாழும் தெய்வமாகக் கருதி வந்த சத்ய சாய் பாபா பருவுடல் நீத்தபோதிலும் அவரது பக்தர்களைப் பொருத்தவரை அவர் ஆன்மா எப்போதும் துணை நின்று வழிநடத்தும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்."" என்கிறது தினமணி தலையங்கம். அதுதான் உண்மை நிலைமை.

மேலும் "மீஇயல் ஆற்றல்களை நாம் ஏற்க மறுத்தாலும்கூட, அவர் எல்லாரையும் போன்று சாதாரண மனிதரா அல்லது இறைநிலை எய்திய சித்தரா அல்லது வெறும் துறவி மட்டும்தானா என்பதெல்லாம் அவரது வட்டத்துக்கு வெளியிலான வெறும்பேச்சுகளும் விவாதங்களுமாக மட்டுமே இருக்க முடியும்" என்கிறது அந்த தலையங்கம். மொத்தத்தில் சாய் பாபா'வின் பக்தர்கள் அவர் எப்போதும் தம்முடன் வாழ்வதாக நம்புகிறார்கள், நம்புவார்கள்.

என்னைக் கவர்ந்த பாபா'வின் கருத்துகள்.

1. நல்ல நேரம் - கெட்ட நேரம் என்கிற கருத்துக்களை பாபா நம்பவில்லை. மனதில் நல்ல நோக்கத்தோடு நல்ல செயலில் ஈடுபடும் எல்லா நேரமும் நல்ல நேரமே. அதுபோல கெட்ட நோக்கில் கீழான காரியங்களில் ஈடுபடும் எல்லா நேரமும் கெட்ட நேரமே. எனவே, இராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்ப்பது வீண் வேலை.

2. பூசை, யாகம் செய்வது, விரதம் இருப்பது, கோவிலுக்கு போவது, உண்டியலில் பணம் போடுவது போன்ற எல்லாமும் அவரவர் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவே செய்யப்படுகின்றன. இதனாலெல்லாம் கடவுளை வசப்படுத்தவோ, காரியங்களை சாதிக்கவோ முடியாது. ஒரு மனிதன் சிறிதாக வழிபடுகிறானா, பெரிதாக வழிபாடுகளை நடத்துகிறானா? என்றெல்லாம் இறைவன் எதிர்பார்ப்பது இல்லை. மனிதனால் இறைவனுக்கு எந்த ஒரு பொருளையும் கொடுக்க முடியாது. அன்பும் சகமனிதர்களை நேசிப்பதுமே இறவனை வழிபடும் ஒரே வழியாகும்.

3. கோவில் கட்டுவதற்காக ஒரு ரூபாய் கூட நன்கொடை அளிக்காதீர்.

4. இராமனுக்கு கோவில் கட்டுவதாகக் கூறி, இன்னொரு வழிபாட்டு தளத்தை இடிப்பது மூடச்செயல். அது உண்மை பக்தி அல்ல. இராமனுக்கு கோவில் கட்ட வேண்டுமானால், அவரவர் மனதில் கட்டுங்கள்.

5. பல ஆறுகள் ஒரே கடலில் கலப்பது போல - எல்லா மதங்களும் ஒரே கடவுளைத்தான் போதிக்கின்றன.

சாய் பாபாவின் சாதனை

பார்ப்பனர் அல்லாத வகுப்பில் பிறந்து - இந்திய ஆன்மீகத்திலும் சேவையிலும் மிக உயர்ந்த நிலையை எட்டியவர் சாய் பாபா. சாதியை மட்டுமின்றி மதத்தையும் கடந்தவர். அன்பும் சேவையுமே லட்சியம் என வாழ்ந்தவர்.

பாபா ஒரு ஆன்மீக வாதியாகவே பார்க்கப்பட்டாலும் - அவரிடம் அளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொண்டு அவர் கோவில்களையோ மடங்களையோ எழுப்பவில்லை. மருத்துவ மனைகள், கல்வி நிறுவனங்கள், குடிநீர்த் திட்டங்கள் என சமூக நலப்பணிகளுக்காகவே அவர் நிதியை செலவிட்டார்.

இந்தியாவின் ஜனாதிபதிகளும், பிரதமர்களும், பல மாநில முதல்வர்களும் அவரை நாடி வந்ததே வரலாறாக இருக்கையில் - சென்னையின் குடிநீர் தேவையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நாத்திகரான கலைஞரை தேடிவந்தார் சாய் பாபா. அத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாயை அளித்தார் அவர்.
சாய் பாபா ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி, பலருக்கு அவர் தம்மை வழிநடத்தும் கடவுள். ஆனால், அவர் உலகில் ஒருவருக்கும் கேடிழைத்தவர் அல்ல. 

72 கருத்துகள்:

Murugeswari Rajavel சொன்னது…

பாபாவுக்கு அஞ்சலி!
நல்ல பதிவு!!

Unknown சொன்னது…

நல்ல பதிவு !

பெயரில்லா சொன்னது…

//என்னைக் கவர்ந்த பாபா'வின் கருத்துகள்.//

சாய் பாபா பற்றி அதிகம் தெரியாது. அவரை அறிந்து கொள்ள / போலியா இல்லையா என்று ஆராய்ச்சி செய்ய இஷ்டமில்லாததால் விட்டுவிட்டேன். மதம் உள்ளதா இல்லையா, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராய்ச்சியால் எனக்கு எந்த பலனும் இல்லை என்பதால் விட்டுவிட்டுவேன். ஆனால் சாய்பாபாவின் கருத்துக்களைப் பற்றி இன்றே தெரிந்துகொண்டேன். பரவாயில்லை. நல்ல கருத்துக்கள் தான்.

priyamudanprabu சொன்னது…

சென்னைக் குடிநீர் திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் அளித்தற்கு நன்றிக்கடனாக துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.


////

from whr he got this money?

கோவி.கண்ணன் சொன்னது…

//கடவுளை நம்புகிறவர்களோ, நம்பாதவர்களோ - எவராக இருப்பினும் அடுத்தவரது நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது அவசியம். அதாவது, அடுத்தவர் நம்பிக்கையில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அத்தகைய ஒரு நம்பிக்கையை அவர் கொண்டிருப்பதற்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.//

எங்க சாமி தான் சாமி உங்க சாமி பேய் (சாத்தான்) - என்னும் கிறித்துவ, இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு உங்கள் பதில் என்ன ?

எங்களை முகத்தில் இருந்து படைத்தான், உங்களை வெறெங்கேர்ந்து படைத்தான், நீங்களெல்லாம் தீண்டத்தாகதாவா.......என்பதும் கூட மத நம்பிக்கை தான்.

இதுலெல்லாம் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிடிலும் அவுக/அவா நம்பிக்கை மதிப்புக் கொடுத்து துண்டெடுத்து இடுப்புல சுற்றிக் கொண்டு காலில் செருப்பில்லாமல் நடப்பிகளா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அவர் உலகில் ஒருவருக்கும் கேடிழைத்தவர் அல்ல. //

அப்ப சிறுவர்களிடம் சில்மிசம் மற்றும் ஆசிரமத்தில் கொலைகள் நடந்தன-னு செய்தி வருவதெல்லாம் பச்சைப் பொய்யா ?

அருள் சொன்னது…

பிரியமுடன் பிரபு சொன்னது…

// //
சென்னைக் குடிநீர் திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் அளித்தற்கு நன்றிக்கடனாக துணை முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.
//

from whr he got this money?
// //

""பாபா ஒரு ஆன்மீக வாதியாகவே பார்க்கப்பட்டாலும் - அவரிடம் அளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொண்டு அவர் கோவில்களையோ மடங்களையோ எழுப்பவில்லை. மருத்துவ மனைகள், கல்வி நிறுவனங்கள், குடிநீர்த் திட்டங்கள் என சமூக நலப்பணிகளுக்காகவே அவர் நிதியை செலவிட்டார்."" என்று நான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.

அவரிடம் அவரது பக்தர்களால் அளிக்கப்பட்ட நன்கொடைகளைத்தான் அவர் அளித்துள்ளார். இப்பணிகள் அனைத்தும் அறக்கட்டளை மூலமாகவே நடைபெறுவதால் - பணம் யாரிடமிருந்து வந்தது என்கிற கணக்குகளை அந்த அறக்கட்டளை வைத்திருக்கும். வருமான வரித்துறையினரிடமும் விவரங்கள் அளிக்கப்பட்டிருக்கும். எனவே, "யாரிடமிருந்து பணம் வந்தது?" என்பதை அறிய நீங்கள் தொடர்புடையவர்களை அனுகலாம்.

Amudhavan சொன்னது…

சரியான நேரத்தில் சொல்லப்பட்டுள்ள சரியான கருத்துக்கள். ஒருத்தர் மீது மதிப்பு இருக்கலாம் அல்லது விமரிசனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் மறைந்து உடல் இன்னமும் அடக்கம்கூடச் செய்யப்படாத நிலையில் கடுமையான விமரிசனங்கள் வைப்பதையும் கேலி செய்வதையும் ஏற்க முடியவில்லை. உங்கள் விமரிசனங்களையும் கேள்விகளையும் சில நாட்களுக்கேனும் தள்ளிப்போடுங்கள் தோழர்களே என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவரிடம் அளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொண்டு அவர் கோவில்களையோ மடங்களையோ எழுப்பவில்லை. மருத்துவ மனைகள், கல்வி நிறுவனங்கள், குடிநீர்த் திட்டங்கள் என சமூக நலப்பணிகளுக்காகவே அவர் நிதியை செலவிட்டார்.//

திருடன் அல்லது அவனது கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் கோவில் கட்டினால் அதில் விழுந்து கும்பிடுவதில் தப்பே இல்லேங்கிறேள்.

சமுத்ரா சொன்னது…

நல்ல பதிவு !

சீனு சொன்னது…

//ஆனால், இந்த அடிப்படை உரிமையைக் கூட அங்கீகரிக்காத போக்கினை பதிவுகில் பார்க்க முடிகிறது. //

இது ஒரு விதமான மனநோய் போன்று பீடித்திருக்கிறது. இவர்களெல்லாம் உத்தமர்கள் போலும், இப்படி ஏதாவது பதிவிடுவது அவர்களை அறிவுஜீவிகளாக காட்டும் என்று நம்புகிறார்கள்.

சாய்பாபா உத்தமரோ, இல்லையோ...ஆனால், அவர் மரணப்படுக்கையில் இருந்த போதே இப்படியெல்லாம் குதூகலிப்பது என்பது அவர்களுடைய மன விகாரங்களை தான் காட்டுகிறது.

சீனு சொன்னது…

//from whr he got this money?//

அவரை கடவுள் என்று 'நம்பும்' பக்தர்களிடமிருந்து தான்.

Feroz சொன்னது…

// நாத்திகரான கலைஞரை தேடிவந்தார் சாய் பாபா//அன்பின் சகோதரர் அருள் மேல நீங்கள் சொன்ன வரிகள் தான் உலகின் மிகப்பெரிய காமெடி. தலை நகரம் வடிவேலு காமெடி போல் நானும்தான் ரவுடி என்று சொல்வது போல் இருக்கிறது. கருணாநிதியின் பகுத்தறிவு சிரிப்ப்பா சிரித்து வருடங்கள் ஆகிறது சகோ.அவர் வேண்டும் என்றால் சொல்லிக்கொள்ளலாம் நாத்திகர் என்று ஆனால் தமிழர்கள் எல்லாம் புன்னகை மன்னன்கள் இல்லை. நட்புடன்

Jayadev Das சொன்னது…

\\கடவுள் நம்பிக்கை என்று வரும்போது மனிதர்களை 1. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், 2. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று இரண்டு பகுப்பாக பிரிக்க முடியும். உலகில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்தான் அதிகம்.\\ கடவுள் நம்பிக்கை என்பது வேறு, சாதாரண மனிதனை கடவுளாக சித்தரிப்பது வேறு. இரண்டும் ஒன்றல்லா. இந்த புட்டபர்த்தியாரின் விஷயத்தில் நடந்தது இரண்டாமாவது. God என்றால் என்ன என்று சொல்லவும், அப்புறம் இவர் அந்தத் தகுதிகளைக் கொண்டவரா என்றும் நீங்களே சொல்லவும்.

Jayadev Das சொன்னது…

\\ கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டுமின்றி - தமக்கென்று ஒரு மத அல்லது கடவுள் நம்பிக்கை கொண்டவர்களும் சாய் பாபாவை இந்த தருணத்தில் தூற்றுவது வியப்பளிப்பதாக இருக்கிறது.\\ கடவுள் நம்பிக்கையும், மனிதனைக் கடவுளாக்குவதும் ஒன்றல்ல. சொல்லப் போனால், நீ என்னதான் நல்லது செய்திருந்தாலும், சாதாரண மனிதன் ஒருத்தன் தன்னை கடவுளாக அறிவித்துக் கொண்டது பேரும் பாவம், நீ செய்த நல்லது எல்லாம் இந்த ஒரு செயலே உபயோகமற்றதாக்கி விடுகிறது.

Jayadev Das சொன்னது…

\\சாய் பாபா கடவுள் அல்ல, அவர் ஒரு மனிதர்தான் என்பது சிலரது தூற்றுதலின் பின்னணியாக இருக்கிறது. ஆனால், அவர்களில் பலர் இராமன், கிருட்டிணன், இயேசு எல்லோரும் இந்த பூமியில் மனிதனாக வாழ்ந்து மறைந்தார்கள் என்பதை இன்னமும் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.\\இராமர் இலங்கைக்கு மிதக்கும் கர்க்கலாலேயே பாலமமைத்து இராவணனை வதம் செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை இடது கை சுண்டு விரலால் ஒரு வாரம் தாங்கி நின்றார். இதையெல்லாம் நீங்கள் நெறி பார்க்கவில்லை என்றாலும், ஸ்ரீ கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை இன்னமும் இருக்கிறது, அதற்க்கு இணையான ஒரு புத்தகத்தை உம்மால் காட்ட முடியுமா? இயேசு பிரான் தண்ணீரில் நடந்தார், நான்கு அப்பத்தை நாலாயிரம் பேருக்குக் கொடுத்தான் அந்த நான்கு மீதமிருக்குமாறு செய்தார். உங்கள் பாபாவும் அற்புதங்கள் செய்தார், ஆனால் அவை எல்லாம் தெருவில் செல்லும் மேஜிக் வித்தைக் காரன் செய்யக் கூடியது, அவன் கெட்ட நேரம் வீடு வீடாக யாசகம் கேட்க வேண்டிய நிலை, உங்க பாபாவுக்கு யோகம் பணம் கொழுத்தது.

Jayadev Das சொன்னது…

\\சாய் பாபா ஏதோ சித்து வேலைகளை செய்தார் என்று அவரை விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள் - ஆனால், அவர்களில் பலர் சித்து வேலைகளின் களஞ்சியமாக இருக்கும் இராமாயணம், மகாபாரதம், பைபிளை நம்புகிறவர்களாக இருக்கிறார்கள். (ஒரு ஒப்பீட்டுக்குத்தான் சொல்கிறேன், இவ்வாறு கூறுவதன் மூலம் நான் எவரது நம்பிக்கையையும் கேலி செய்வதற்கு முயற்சிக்கவில்லை.)\\ அதுக்கு இணையா உங்க பாபா ஒன்னும் எழுதவில்லை, சொல்லப் போனால் அவற்றில் இருந்தது சிலதை எடுத்து கொஞ்சம் கற்பனையைக் கலந்தது மேடைகளில் அடித்து விடுவார். வேறொன்றுமில்லை.

Jayadev Das சொன்னது…

\\நான் சாய் பாபா'வை 1994 ஆம் ஆண்டு புட்டபர்த்தியிலும் 2005 ஆம் ஆண்டில் கொடைக்கானலிலும் நேரில் பார்த்தது உண்டு. \\
கடவுளுக்கு கூட வெயிலை தாங்க முடியவில்லை, பெங்களூரு, கொடைக்கானலிலும் தான் போய் தங்குகிறார். ம்ம்ம்ம்...

Jayadev Das சொன்னது…

\\அங்கெல்லாம் - சாதி மதத்தை கடந்து அன்பு ஒன்றே நிலவும் சூழலைத்தான் நான் கண்டிருக்கிறேன். பதிவுலகில் பேசப்படுவது போல எவரும் ஏமாற்றப்பட்டு நான் பார்க்கவில்லை.\\ அப்படியே நடந்தாலும், சாய்பாபா மேல் உமக்கு கண்மூடித் தனமான பக்தி இருப்பதால் நடப்பது உமது கண்களுக்குப் புலப் படாது.

Jayadev Das சொன்னது…

\\2. பூசை, யாகம் செய்வது, விரதம் இருப்பது, கோவிலுக்கு போவது, உண்டியலில் பணம் போடுவது போன்ற எல்லாமும் அவரவர் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவே செய்யப்படுகின்றன. இறைவன் எதிர்பார்ப்பது இல்லை. மனிதனால் இறைவனுக்கு எந்த ஒரு பொருளையும் கொடுக்க முடியாது. அன்பும் சகமனிதர்களை நேசிப்பதுமே இறவனை வழிபடும் ஒரே வழியாகும்.

3. கோவில் கட்டுவதற்காக ஒரு ரூபாய் கூட நன்கொடை அளிக்காதீர்.\\ இத்தனையும் சொன்ன சாய் பாபாவின் ஆசிரமச் சொத்துகள் இன்றைக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்கள்!! ஊருக்கு உபதேசம்!! பணம் வேண்டாதவர்களுக்கு இவ்வளவு பணம் எதற்கு, உடனே இவற்றை மாற்றி பள்ளி கல்லூரிகள், மருத்துவமனைகளாக்கச் சொல்லி விடலாமே?

Jayadev Das சொன்னது…

\\சாய் பாபா ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி, பலருக்கு அவர் தம்மை வழிநடத்தும் கடவுள். ஆனால், அவர் உலகில் ஒருவருக்கும் கேடிழைத்தவர் அல்ல. \\ தன்னைக் கடவுள் என்று மற்றவர்கள் சொன்னதைக் கேட்டும் திருந்தாமல் அனுமதித்ததை விட பெரிய கேடு வேறொன்றுமில்லை.

பிரபாஷ்கரன் சொன்னது…

உண்மையிலேயே அருமை வாழ்த்துக்கள்

geethappriyan சொன்னது…

ஐயா அருள்
உருப்படியான கட்டுரையை போட்டீர்!!!

வருண் சொன்னது…

நீங்க பகுத்தறிவு வாதினு நெனச்சேன். சாதாரண "பிலீவர்"தானா?!!!

வருண் சொன்னது…

****கடவுளை நம்புகிறவர்களோ, நம்பாதவர்களோ - எவராக இருப்பினும் அடுத்தவரது நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது அவசியம். அதாவது, அடுத்தவர் நம்பிக்கையில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அத்தகைய ஒரு நம்பிக்கையை அவர் கொண்டிருப்பதற்கான உரிமையை அங்கீகரிக்க வேண்டும். ***

He got all the attention and wealth BY LYING!

One wonderful example is that he claimed that he would die only at 96.

இவரை எப்படி பாராட்டுறீங்கனு எனக்குப் புரியலை!

VJR சொன்னது…

அய்யகோ அருளும் அருளாநந்தரா? இருக்கட்டும் இருக்கட்டும்.

அருள் சொன்னது…

@ Murugeswari Rajavel
@ ஆகாயமனிதன்
@ அனாமிகா துவாரகன்
@ Amudhavan
@ சமுத்ரா
@ சீனு
@ பிரபாஷ்கரன்
@ |கீதப்ப்ரியன்|Geethappriyan

நன்றி..நன்றி..நன்றி

pichaikaaran சொன்னது…

wonderful

அருள் சொன்னது…

வருண் கூறியது...

// //நீங்க பகுத்தறிவு வாதினு நெனச்சேன். சாதாரண "பிலீவர்"தானா?!!// //

பகுத்தறிவு வாதி என்பதற்கு என்ன அளவுகோள் வைத்திருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதேசமயம் என்னை ஒரு பகுத்தறிவுவாதி என்று நான் அழைத்துக்கொள்ளவும் இல்லை.

தந்தை பெரியார் இசுலாம் மதத்தையும் புத்த மதத்தையும் பல சமயங்களில் ஆதரித்து பேசியுள்ளார். இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை பெரியாரே நூலாக வெளியிட்டதும் உண்டு.

கடலூர் ஞானியார் மடத்தின் ஆன்மீகவாதி ஞானியார் அடிகள் ஒரு இந்துமதத்துறவி. அவரிடத்தில் பெரியார் பெரிதும் மதிப்பு கொண்டிருந்தார். 02.05.1925 அன்று குடியரசு மாத இதழின் முதல் பிரதியை ஞானியார் அடிகள் கைகளினால் வெளியிடச்செய்தார் பெரியார்.

(சாய் பாபா தொடர்பான விவாதத்திற்காக பெரியாரை சுட்டவில்லை. மாறாக, இறைநம்பிக்கை குறித்து பெரியாருக்கு இருந்த இணக்கமான கருத்துகளையே சுட்டுகிறேன்.)

அருள் சொன்னது…

@ பிரியமுடன் பிரபு
@ கோவி.கண்ணன்
@ Feroz
@ Jayadev Das
@ வருண்
@ VJR

எந்த ஒரு மதநம்பிக்கை அல்லது இறைநம்பிக்கையை பின்பற்ற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. தான் நம்பும் நம்பிக்கையை கடைபிடிக்கவும், பரப்பவும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. அதேநேரத்தில் தனது நம்பிக்கையின் பெயரால் எந்த ஒரு மனிதரது மனிதஉரிமைகளையும் மறுக்க எவருக்கும் உரிமை இல்லை.

அவ்வாறே, எந்த ஒரு மதநம்பிக்கையையும் விமர்சிக்கவும், எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்கும் கூட ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமை உண்டு.

பேச்சுரிமை - மதஉரிமை, இவை இரண்டுமே எல்லையில்லா உரிமைகள் அல்ல. பேச்சுரிமை என்ற பெயரிலோ மதத்தின் பெயரிலோ மேற்கொள்ளப்படும் "ஒதுக்குதல், பகைமைச் செயல்கள் அல்லது வன்முறை" (discrimination, hostility or violence) ஆகியன தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்கள் ஆகும்.

எனவே, சாய் பாபா மீதான விமர்சனங்களை முன்வைக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அவ்வாறே, அதனை எதிர்த்து கருத்து சொல்லவும் உரிமை உண்டு. அவரவர் நம்பிக்கை, கருத்து அவரவர்க்கு. ஆனால், ஒருவர் இறந்த உடனேயே அவர் மீதான அவதூறுகள் அள்ளிவிடப்படுவது நாகரீகமான செயலாகத் தெரியவில்லையே என்பதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன்.

மற்றபடி, நாகரீகமோ நாகரீகம் இல்லையோ - சாய் பாபாவை "தூற்றுவதும்" ஒரு அடிப்படை பேச்சுரிமைதான். நன்றி.

Siva Sutty - m of n சொன்னது…

என்னுடைய அஞ்சலி இங்கே

http://www.tamilhindu.com/2011/04/sathya-sai-baba-a-tribute/

குடுகுடுப்பை சொன்னது…

பாபா ஒரு ஆன்மீக வாதியாகவே பார்க்கப்பட்டாலும் - அவரிடம் அளிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொண்டு அவர் கோவில்களையோ மடங்களையோ எழுப்பவில்லை. மருத்துவ மனைகள், கல்வி நிறுவனங்கள், குடிநீர்த் திட்டங்கள் என சமூக நலப்பணிகளுக்காகவே அவர் நிதியை செலவிட்டார்.//

முதலில் நல்ல மனிதருக்கு அஞ்சலி.திருப்பதி உண்டியலில் இருந்தால் கூட நல்ல காரியத்துக்கு உதவி இருக்காது. மற்றவைகள பிரிதொரு நாளில்.

PUTHIYATHENRAL சொன்னது…

என்னை கவர்ந்த சாய் பாபா!! மிஸ்டர் அருள்!! சாய் பாபாவிடம் உள்ள நல்ல விசயங்களை பார்ப்போமே என்று மிஸ்டர் அருள் சொல்கிறார். கேளுங்கள் கருத்துக்கள் இருந்தால் சொல்லுங்கள்.

http://www.sinthikkavum.net/2011/04/blog-post_7512.html

GO TO VISIT WWW.SINTHIKKAVUM.NET

Unknown சொன்னது…

கடந்த அம்மா ஆட்சி காலத்திலேயே இந்த கால்வாய் திட்டத்தை தான் நிறைவேற்றித் தருவதாக சாய்பாபா கூறினார், ஆனால் பணத்தை தங்களிடம் தருமாறும் அரசே அத்திட்டத்தை நிறைவேற்றும் என்றும் அம்மா கோஷ்டிகள் வலியுறித்தயதால் அதை விரும்பாத சாய்பாபா அத்திட்டத்தை கைவிட்டார்.

(இதுபற்றி அப்போதே ஜூனியர் விகடனில் செய்தி வந்தது)

பணத்தை அம்மாவும் அவர் உடன்பிறவா சகோதரி(!) யும் ஆட்டையை போட முயன்றதை இந்த அம்மா அடிவருடிகள் மறந்தது போல் நடிக்கிறார்கள் :)

ஒரு நல்ல காரியம் செய்தவரின் இறப்பிற்கு துணை முதல்வர் அஞ்சலி செலுத்த சென்றதில் என்ன தவறு என்று இந்த அறிவு ஜீவிகள்தான் விளக்க வேண்டும்.

கிராமத்தான் சொன்னது…

மனிதனை படைத்தவன் கடவுள் என்றால்....உண்ண உணவு உடுத்த உடை இன்றி தினம் தினம் போரடும் மக்களை படைத்தவன் கடவுளா...?

தன் மேல்சட்டை (ஜாக்கட்) கிழிந்தபடி வீதி வீதியாக உலவரும் பெண்கைளை படைத்தவன் கடவுளா.....?

பிறக்கும் போதே மனவளர்ச்சி குன்றியதாக பிறக்கும் குழந்தையை படைப்பவன் கடவுளா....?

நாட்டில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடுடன் படைக்கும் ஓரவஞ்சனை பிடித்தவன் கடவுளா....?

நாட்டில் கொள்ளையடிப்பவனும் இருக்கின்றான். கூழுக்காக போரடுபவனும் இருக்கின்றான்.
அப்படியனால்.....?

கடவுள் இருப்பது உண்மையென்றால் காற்றை கூட அறியும் மனிதர்கள்....இதுவரை கடவுளை அறிந்தது உண்டா...கண்டது உண்டா

சினிமாவிலும் மனிதர்களால் படைக்கபட்ட உருவாக்க பட்ட கோயில்களில் மட்டுமே நாம் இதுவரை கடவுளை கல்லாகவே..(நவின உலகத்தில் அவரவரவது கற்பனை திறனுக்கு ஏற்றார் போல் பல வண்ணங்களில் பல உருவங்களில்) பார்த்து வந்திருக்கிறோம்.வருகிறோம்...


மனிதர்கள் வழிபடும் கடவுள் நம் முன்னோர்களே தவிற கடவுள் அல்ல...

அன்று வாழ்ந்த சீறடி சாய்பாபா இன்று கடவுள்

இன்று வாழும் நித்யனந்தா, புட்டபாத்தி சாய்பாபா ,மேல்மருவத்துர் அம்மா போன்றவர்கள் நாளை கடவுள்...


கடவுளை மற - மனிதனை நினை-பெரியார்


ஆன்மீக போர்வையில் மக்களுக்கு நற்பணிகளை செய்தவர் சாய் பாபா - அவர் ஒரு மாறுபட்ட அனுபவம்
தான்”

Jayadev Das சொன்னது…

@கிராமத்தான்

திருவிளையாடல் நாகேஷ் போல உங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியும் போல இருக்கிறது, எதற்கும் பதில் உங்களால் யோசிக்க முடியாதா? உமது வீட்டில் ஒரு தொலைக் காட்ச் பேட்டி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் சில சமயம் படம் சரியாகத் தெரியாது இருக்கலாம், ரிப்பேர் ஆகலாம், அதற்க்கு மின் இணைப்பு கொடுக்கும் போது உங்களுக்கு ஷாக் அடிக்கலாம், ஏன் வெடித்துக் கூட சிதறலாம் [தமிழக அரசு கொடுத்த இலவச வண்ணத் தொலைக் காட்சிகளில் பல வெடித்துள்ளன]. இதெல்லாம் நடக்கிறதே, இந்த தொலைக் காட்சியைத் தயாரித்த நிறுவனம் இருக்க இயலுமா? இருந்தால் இத்தனையும் நடக்குமா என்று கேட்பது போல இருக்கிறது உமது கேள்விகள். நாட்டில் அட்டூழியங்கள் நடக்கின்றன, ஏழ்மை இருக்கிறது, பிறப்பிலேயே பலர் கஷ்டப் படுகிறோம், இயற்க்கையும் நம்மை அவ்வப்போது தாக்குகிறது. சரி இவற்றுக் கெல்லாம் பகுத்தறிவு வாதி என்று சுய பட்டம் கொடுத்துக் கொண்ட நீங்கள் தரும் விளக்கம்தான் என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா? அல்லது காரணம் கண்டுபிடித்து இவற்றை தடுத்து நிறுத்த முடியுமா? பேச்சுத் திறன் இருக்கிறது என்று வெறும் வாய்ச் சவடால் எதற்கு? நீங்கள் சொல்வதில், போலிச் சாமியார்கள், [சாய்பாபா உட்பட] பலர் பலர் நாட்டில் உள்ளார்கள், ஏமாற்றுகிறார்கள், அதற்காக படைத்தவன் இல்லாமல் இந்த உலகம் வந்தது என்று சொல்லிவிட முடியுமா? காரணமில்லாமல் ஏதாவது நடக்குமா? இதுதான் பகுத்தறிவா?

Unknown சொன்னது…

பாபாவுக்கு அஞ்சலி!

Madhavan Srinivasagopalan சொன்னது…

சொல்லிய அனைத்துக் கருத்துக்களும்..

வருண் சொல்லிய
//One wonderful example is that he claimed that he would die only at 96.

இவரை எப்படி பாராட்டுறீங்கனு எனக்குப் புரியலை! //

இந்தக் கருத்திற்கும்.. யாரிடமாவது சரியான பதில் இருக்கிறதா ?

என்னதான் புகழ் பணம் பதவி வந்தாலும்.. சாதரணமாக இருக்க முடிந்தவனே.. மனித உருவில் இருக்கும் (!) கடவுள்.. அவனை கடவுளாகச் சொன்னாலும்.. அவன் அதை ஏற்றுக்கொள்ளமாட்டான்..

ராமனோ.. கிருஷ்ணனோ.. தன்னை கடவுளாக நினைத்து தனது சக்தியை காட்டியதில்லை. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையே அவர்களை கடவுளாக மதிக்கும்படி வைத்தது..

சீனு சொன்னது…

//ராமனோ.. கிருஷ்ணனோ.. தன்னை கடவுளாக நினைத்து தனது சக்தியை காட்டியதில்லை. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையே அவர்களை கடவுளாக மதிக்கும்படி வைத்தது..//

இது தான் பாபா என்ற 'கடவுள்'க்கும் மற்ற கடவுளுக்கும் உள்ள வித்தியாசம்.

அருள் சொன்னது…

Madhavan Srinivasagopalan சொன்னது…

// //ராமனோ.. கிருஷ்ணனோ.. தன்னை கடவுளாக நினைத்து தனது சக்தியை காட்டியதில்லை. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையே அவர்களை கடவுளாக மதிக்கும்படி வைத்தது..// //

அனுமன் எப்போதும் இராமநாமத்தை உச்சரித்ததாக இராமாயணக் கதைகள் கூறுவதாகத் தெரிகிறது. ஒரு மனிதனது நாமத்தை வானரம் செபித்தது எதற்கோ...?

கிருஷ்ணன் மண் தின்ற வாயைத் திறந்து அண்டசராசரமும் தான் தான் என்று காட்டியதாக அவர் தொடர்பான கதைகள் கூறுகின்றன. மனிதன் தனது வாய்க்குள் அண்டசராசரத்தைக் காட்ட இயலுமா...?

ஆனால், நீங்களோ, அவர்கள் கடவுளாக வரித்துக்கொள்ளவில்லை என்கின்றீர்கள். குழப்பமாக இருக்கிறது!

இயேசு "முதலில் தான் கடவுளின் தூதுவன் என்றார். பின்னர் தானே கடவுள் என்றார்". ஆன்மீகம் என்று வரும்போது பலவித நம்பிக்கைகள், பலவித கருத்துகள் இருக்கின்றன.

ஒன்று சரி, மற்றது தவறு - என்று சொல்வதன் அடிப்படை என்னவென்று புரியவில்லை!

கிராமத்தான் சொன்னது…

@jayadev dos

திருவிளையாடல் நாகேஷ் போல உங்களுக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியும் போல இருக்கிறது, எதற்கும் பதில் உங்களால் யோசிக்க முடியாதா?

என நீங்களும் கேள்விதான் கேட்கிறீர்கள் என்பதை மறந்து நீங்களும் கேள்வி கேட்டு நாகேஷ் ஆகிவிட்டுடடீர்களே....

காரணத்தோடு நான் கூறியவை நடந்தது என்றால் காரணங்கள் கூறுங்கள் பார்க்கலாம்.....

Jayadev Das சொன்னது…

@ கிராமத்தான்

\\மனிதனை படைத்தவன் கடவுள் என்றால்....உண்ண உணவு உடுத்த உடை இன்றி தினம் தினம் போரடும் மக்களை படைத்தவன் கடவுளா...?

தன் மேல்சட்டை (ஜாக்கட்) கிழிந்தபடி வீதி வீதியாக உலவரும் பெண்கைளை படைத்தவன் கடவுளா.....?

பிறக்கும் போதே மனவளர்ச்சி குன்றியதாக பிறக்கும் குழந்தையை படைப்பவன் கடவுளா....?

நாட்டில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடுடன் படைக்கும் ஓரவஞ்சனை பிடித்தவன் கடவுளா....?

நாட்டில் கொள்ளையடிப்பவனும் இருக்கின்றான். கூழுக்காக போரடுபவனும் இருக்கின்றான்.
அப்படியனால்.....?

கடவுள் இருப்பது உண்மையென்றால் காற்றை கூட அறியும் மனிதர்கள்....இதுவரை கடவுளை அறிந்தது உண்டா...கண்டது உண்டா \\ கடவுள் இல்லைஎன்று assume செய்து கொண்டு விட்டால் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்து விடுமா? ஆம் எனில், விடையை சொல்லுங்களேன்?

கிராமத்தான் சொன்னது…

2011/4/29 அன்று Jayadev Das சொன்னது.

கடவுள் இருப்பது உண்மையென்றால் காற்றை கூட அறியும் மனிதர்கள்....இதுவரை கடவுளை அறிந்தது உண்டா...கண்டது உண்டா \\ கடவுள் இல்லைஎன்று assume செய்து கொண்டு விட்டால் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்து விடுமா? ஆம் எனில், விடையை சொல்லுங்களேன்? ”
---------------------------------------------------------------------------------------------------------------------------------------


அன்பு நண்பரே கடவுள் இருக்கிறார் என்று கற்பனை செய்து கொண்டால்
நான் கூறியவைக்கு எல்லாம் விடை கிடைத்து விடுமா?

நான் கற்பனை செய்தது உண்மை என்றால் உங்கள் கூற்று படி கடவுள் இல்லை என்று தானே கூறுகிறீர்கள்....

நான் மறுபடியும் கூறுவது கடவுளுக்காக வாதம் செய்யும் நீங்கள் வருமையில் வாடும் பல நல்ல உள்ளங்களுக்கு உதவி செய்து பாருங்கள்
அவர்கள் மனிதர்களான உங்களை கடவுளாக வழிபடுவதை உங்களால் காண முடியும்...

நல்ல உள்ளங்களே சரித்திரத்தில் என்றும் நிலைத்து இருப்பார்கள்....

Jayadev Das சொன்னது…

@கிராமத்தான்

\\அன்பு நண்பரே கடவுள் இருக்கிறார் என்று கற்பனை செய்து கொண்டால் நான் கூறியவைக்கு எல்லாம் விடை கிடைத்து விடுமா?\\ கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், அல்லது நான் என்ன நினைக்கிறேன் என்பதற்க்கெல்லாம் அப்பாற் பட்டது. சூரியன் சுடுவான் என்பது எப்படி நமது கருத்துக்களுக்கு அப்பாற்பட்டதோ அது மாதிரி. இறைவன் இருக்கிறானா என்று கேட்பது, என் தாயார் மலடியா இல்லையா என்று கேட்பதர்க்குச் சமம். உங்கள் தாயார் மலடி இல்லை என்பதற்கு நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் என்பதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? அதே போல இந்தப் படைப்பு இருப்பதே படைத்தவன் இருப்பதை உறுதி செய்கிறது. கல்லும் மண்ணும் சேர்ந்து நமது மனித உடலைப் போல ஒரு அற்புதமான அமைப்பை தானாக உருவாக்க இயலாது, ஏனெனில் இதை உருவாக்க அறிவு வேண்டும், அறிவு என்றால் அறிவாளியும் வேண்டும். வெறும் களிமண்ணால் அற்புதமான ஒன்று தானாக வராது, ஒரு படம் பிடிக்கும் காமிரா எப்படி தானாக உருவாகாதோ அப்படி. மேலும் நீங்கள் கேட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் பதில் இருக்கிறது, ஆனால் அதற்கு உங்களுக்கு பொறுமை வேண்டும், தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளிக்குச் சென்ற ஒரே நாளில் நீங்கள் எஞ்சினியராகவோ, டாக்டராகவோ ஆகிவிட முடியாது. முறைப் படி பயின்றால் ஒரு நாள் நீங்கள் ஆகலாம். உங்களுடைய எண்ணம் நான் பள்ளிக்கும் செல்ல மாட்டேன், எந்த முயற்சியும் செய்ய மாட்டேன் ஆனால் இதய அறுவை சிகிச்சை செய்வதை ஒரே நிமிடத்தில் விளாகம் கொடு என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அது கஷ்டம். புரிந்து கொள்ள வேண்டுமென்றால் பெரிய விஷயமே அல்ல, விதண்டா வாதம் செய்ய வேண்டுமென்றால் அதற்க்கு முடிவே இல்லை.

Jayadev Das சொன்னது…

\\நீங்கள் வருமையில் வாடும் பல நல்ல உள்ளங்களுக்கு உதவி செய்து பாருங்கள் அவர்கள் மனிதர்களான உங்களை கடவுளாக வழிபடுவதை உங்களால் காண முடியும்...\\ வறுமை... ம்ம்..... என்ன நண்பரே, 80 லட்சம் கோடி ரூபாயை சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு வங்கியில் மட்டும் போட்டுள்ள பணக்கார நாட்டில் பிறந்து கொண்டு வறுமை என்று சொல்கிறீர்களே? ஆசியாவிலேயே பெரிய பணக்காரரை முதல்வராகக் கொண்ட தமிழகத்தில் பிறந்த நீங்கள் வருமையானவரா? மேலும், மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ளவரே பெரியாரின் உண்மையான தொண்டன் என்று சொல்லிக் கொல்பவர்தானே, அவரது ஆட்சியில் வறுமை உங்களைத் தாக்குவது நியாயமா? சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரத் தேவையான 200 கோடி ரூபாய்க்காக ஒரு சாமியாரிடம் கையேந்தி நிற்கிறது உங்கள் அரசு, ஆனால் மருத்துவக் காப்பீடு என்னும் பெயரில் மக்களுக்கு பயனைத் தராத திட்டத்திற்காக தனியாருக்கு கொடுக்கப் பட்ட தொகை 4000 கோடி, ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டுக்கு ஏற்ப்பட்ட வருமான இழப்போ , 1.76 லட்சம் கோடி ரூபாய்கள்!! ஹா.ஹா...ஹா.... ஆக, வறுமை நம்முடையது அல்ல, திணிக்கப் பட்டது நண்பரே. நீங்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியாளர்கள் செய்த அயோக்கியத் தனத்தால் தான் உங்களுக்கு வறுமையே தவிர உண்மையில் அல்ல. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் சொல்கிறார், உலகில் முறைப்படி விவசாயம் செய்தால் இப்போதுள்ளதைப் போல பத்து மடங்கு மக்கட் தொகைக்கு உணவு வழக முடியுமென்று. காந்திஜி சொன்னார், "இயற்க்கை மனிதனின் தேவைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கும், பேராசைக்கு கொடுக்க இயலாது" என்று. உங்களுக்குத் தேவையானது இயற்கையிலேயே கிடக்கும் போது நடுவில் நான் அதைப் பிடிங்கிக் கொண்டு கொஞ்சத்தை திரும்ப உங்களுக்குக் கொடுத்துத்தான் நான் வள்ளல் என்ற பெயரை எடுக்க வேண்டுமானால், அப்படிப்பட்ட பெயரே தேவையில்லை நண்பரே, அதற்க்கு மஞ்சள் துண்டு போட்டுக் கொண்டு எவானாவது உட்கார்ந்திருப்பான் பாருங்கள்.

அருள் சொன்னது…

Jayadev Das கூறியது...

// //சூரியன் சுடுவான் என்பது எப்படி நமது கருத்துக்களுக்கு அப்பாற்பட்டதோ அது மாதிரி. இறைவன் இருக்கிறானா என்று கேட்பது, என் தாயார் மலடியா இல்லையா என்று கேட்பதர்க்குச் சமம். உங்கள் தாயார் மலடி இல்லை என்பதற்கு நீங்கள் பிறந்திருக்கிறீர்கள் என்பதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? அதே போல இந்தப் படைப்பு இருப்பதே படைத்தவன் இருப்பதை உறுதி செய்கிறது.// //

நல்ல விளக்கம்தான்.

சரி, நீங்கள் நம்பும் கடவுள் அல்லது இறைவன் யார்? உங்கள் வழிபாட்டு முறை என்ன? உங்களது மதம் எது?

உங்களுக்கு அப்படி ஒரு "கடவுள் நம்பிக்கை", "ஒரு வழிபாட்டு முறை", "ஒரு மத அமைப்பு" அல்லது இவற்றில் ஏதோ ஒன்று இருக்கும் என்றால் - அதில் நான் எந்த குற்றமும் காண மாட்டேன். அது உங்களது உரிமை. அதில் எவரும் தலையிட முடியாது.

மனிதனுக்கு விடைதெரியாத கேள்விகள் பல இருக்கின்றன. அதில் "கடவுளும்" ஒன்று. தத்துவார்த்தமாக விளக்கம் கொடுக்கலாம், மனப்பூர்வமாக நம்பலாம் - ஆனால், அறிவியல் ஆய்வுகளுக்கு உட்பட்டு மெய்ப்பிக்க முடியாது. ஏனேனில், மனிதனின் "அறிவியல் அறிவு" அவ்வளவுதான்.

இப்படி மெய்ப்பிக்க முடியாத ஒரு நம்பிக்கையை நீங்கள் கொண்டிருப்பது சரி என்றால் - மற்றொருவர் "சாய் பாபாவை நம்புவதில்" என்ன தவறு இருக்கமுடியும்?

Jayadev Das சொன்னது…

\\மனிதனுக்கு விடைதெரியாத கேள்விகள் பல இருக்கின்றன. அதில் "கடவுளும்" ஒன்று. தத்துவார்த்தமாக விளக்கம் கொடுக்கலாம், மனப்பூர்வமாக நம்பலாம் - ஆனால், அறிவியல் ஆய்வுகளுக்கு உட்பட்டு மெய்ப்பிக்க முடியாது. ஏனேனில், மனிதனின் "அறிவியல் அறிவு" அவ்வளவுதான்.\\ அறிவியல் மேல ரொம்ப மதிப்பு வச்சிருக்கீங்க போலிருக்கே!! ரொம்ப நல்லது!! அறிவியல் என்றால் A-Z எல்லாத்தையும் நிரூபிச்சித் தான் வேற வேலையே பார்ப்பாங்க, ரொம்ப சுத்தம்... இப்படியெல்லாம் ஒரு உயர்ந்த கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள் போல!! பாராட்டுக்கள். ஆனால், உண்மை அதுதானா என்று நீங்கள் எப்பவாச்சும் யோசிச்சுப் பார்த்திருப்பீங்கலான்னு தெரியலை. ஒரு கதை எங்கேயோ படிச்சேன். நாலு பேர் ஒரு சோதனை செய்யலாம் என்று ஒரு கரப்பான் பூச்சியைப் பிடித்தார்கள். அதை டேபிலின் மேலே விட்டார்கள். ஒருத்தன் அதன் பின்னால் டப்... என்று டேபிலைத் தட்டினான். கரப்பான் பூச்சி வேகமாக ஓடியது. அதைப் பிடித்து இரண்டு கால்களை ஒடித்தார்கள், பின்னர் அதே சோதனையைச் செய்தார்கள், இப்போதும் அது ஓடியது, ஆனால் வேகம் குறைந்தது. அடுத்த இரண்டு கால்களையும் பிய்த்துப் போட்டு ஓட விட்டார்கள். அதனால் ஓடவே முடியவில்லை. இந்த பரிசோதனையின் முடிவில் அவர்கள் அறிவித்தார்கள், "கரப்பான் பூச்சிக்கு கால்களை நீக்கும்போது, அதற்க்கு கேட்கும் திறன் குறைந்து போகிறது, எத்தனை கால்களை நீக்குகிறீர்கள் அந்த அளவுக்கு கேட்கும் திறனும் குறையும், எல்லா காலகளையும் பிடுங்கி விட்டால், சுத்தமாக காதே கேட்காது!!". ஐயா, உங்க அறிவியலும் இதே போலத்தான் செயல்படுகிறது, என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?

Jayadev Das சொன்னது…

விஞ்ஞானம் என்பது எல்லாவற்றுக்கும் விடை தர கிளம்பி விட்ட சூப்பர் மேன் அல்ல. It just explores the properties of matter and energy and the ways to exploit them for our benefit, that's all. Let us make the physical laws with basic assumptions, have them till they are valid, and modify them, restructure, or totally discard them it need be, and keep going!! பொருளீர்ப்பு விசையைத் [Gravitational Force] தீர்மானிக்கும் மாறிலி, G , ஒளியின் திசை வேகம் C, எலக்ட்ரானின் மின்னூட்டம் என எக்கச் சக்கமான மாறிகள் உள்ளன, இவற்றுக்கு ஏன் இந்த மதிப்பு வந்தது, எது தீர்மானித்தது என்ற கேள்விக்கு அறிவியலில் ஒரு போதும் பதிலில்லை. முடிக்கமடையும் மின்னூட்டம் [an accelerating charge] மின்காந்த அலைகளை உமிழும், ஆனால் அணுவுக்குள் இருக்கும் எலக்ட்ரான்கள் நிலையாக ஓரிடத்தில் இருக்காது எனினும் அவை அந்த ஆற்றல் மட்டத்தில் [Energy level] இருக்கும் வரை மின்காந்த அலைகளை உமிழ்வதில்லை, ஏன் என்ற விடை தெரியாது. அண்டத்தில் எத்தனை கோடான கோடி எலெக்ட்ரான்கள் இருந்தாலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமே காண முடியாத படி எப்படி வந்தது என்று தெரியாது. ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது, ஆனால் நான் காணும் இந்த கோடான கோடி விண்மீன்கள், நட்சத்திரக் கூட்டம் எல்லாம் எப்படி [யாரோட பாக்கெட் மணியிலிருந்து] வந்தது என்று தெரியாது. உலகத்தின் எண்ட்ரோபி [a measure of Chaos] அதிகமாகிக் கொண்டே போகிறது, அதாவது ஒழுங்கான நிலையில் இருந்து ஒழுங்கற்ற நிலைக்குப் போகிறது [there is always increase in disorder-இது அறிவியல் disorder நம்ம சட்டம் ஒழுங்கோடு குழப்பிக் கொள்ள வேண்டாம், இது வேறு!!]. அப்படியானால் முதலில் ஒழுங்காக அமைத்து வைத்தது யார்? அது எல்லாத்துக்கும் மேல, உயிர் என்றால் என்ன, மனம், புத்தி என்றால் என்ன? செத்த உடலுக்கும், உயிருள்ள ஜீவனுக்கும் உள்ள வேறு பாடு என்ன? பிணத்தைக் கையில் கொடுத்து, அதை திரும்ப உயிருக்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும், இது எல்லாத்துக்கும் அறிவியலில் பதில் இல்லை.

அருள் சொன்னது…

Jayadev Das கூறியது...

// //அறிவியல் மேல ரொம்ப மதிப்பு வச்சிருக்கீங்க போலிருக்கே!! ரொம்ப நல்லது!! அறிவியல் என்றால் ஆ-Z எல்லாத்தையும் நிரூபிச்சித் தான் வேற வேலையே பார்ப்பாங்க, ரொம்ப சுத்தம்... இப்படியெல்லாம் ஒரு உயர்ந்த கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள் போல!! பாராட்டுக்கள். ஆனால், உண்மை அதுதானா என்று நீங்கள் எப்பவாச்சும் யோசிச்சுப் பார்த்திருப்பீங்கலான்னு தெரியலை.// //

மிகத்தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.

நான் //மனிதனின் "அறிவியல் அறிவு" அவ்வளவுதான்// என்று அறிவியலின் எல்லைகளைதான் கூறியுள்ளேன். இயற்கை மனித அறிவைவிட மேலானது என்பதே எனது நம்பிக்கை.

ஒரு சின்னஞ்சிறிய ஆல மர விதையை மண்ணில் புதைத்தால் - அது துளிராக, செடியாக, மரமாக வளர்வது எப்படி என்பதை அறிவியலால் விளக்க முடியாது. விதைக்குள் ஒளிந்திருக்கும் மரத்தை முளைக்க வைக்கும் சக்தி எது என்பது மனிதனுக்கு தெரியாது.

அது போலவே, கடவுள் என்றால் யார்? அவரது குணநலன்கள் யாவை என்பதும் மனித அறிவுக்கு எட்டாது. இன்னும் சொல்லப்போனால் - கடவுள் இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ மனிதனால் ஒருபோதும் நிரூபிக்க முடியாது.

எனவே, உங்களிடம் நான் கேட்கும் கேள்வி மிக எளிதானது: //இப்படி மெய்ப்பிக்க முடியாத ஒரு நம்பிக்கையை நீங்கள் கொண்டிருப்பது சரி என்றால் - மற்றொருவர் "சாய் பாபாவை நம்புவதில்" என்ன தவறு இருக்கமுடியும்?//

Jayadev Das சொன்னது…

\\இயற்கை மனித அறிவைவிட மேலானது என்பதே எனது நம்பிக்கை.\\ இங்கதான் எல்லோருமே தப்பு செய்கிறோம். இயற்கையில் நாம் காண்பது கல்லும் மண்ணும் தான். எங்கேயாவது களிமண் தானாகவே பானையாக மாறிப் பார்த்திருக்கிறீர்களா? அப்படியிருக்க, அற்புதமான நமது உடல் உறுப்புகள் தானாக உருவாகுமா? நவீன விமானங்கள் எல்லாம் வருவதற்கு முன்னரே பறவைகள் பறந்தனவே, அவற்றில் உடலைப் பறக்கும் விதத்தில் உருவாவதற்கான Aeronautical Engineering அறிவு எங்கிருந்து வந்தது. நமது கண்கள் இயங்கும் விதத்தைப் பார்த்தால் ஜெர்மனியின் தரமானக் கம்பனி உருவாக்கிய கேமராவைப் போல இயங்குகிறது [முடிந்தால் பாடப் புத்தகத்தில் பாருங்கள்] அந்த ஆப்டிகல் அறிவைக் கொண்ட விஞ்ஞானி யார்? இப்படி கேட்டுக் கொண்டே போகலாம். நீங்கள் சொல்வீர்கள் இயற்கையில் தானாகவே இவை உருவாகின என்று. இயற்க்கைக்கு அறிவு கிடையாது, [அதனால்தான் கொஞ்சம் புத்தி கம்மியாக உள்ளவனைப் பார்த்து உன் தலையில் களிமண்ணா இருக்கிறது என்போம்]. என்றென்றும் இயங்குபவன் சொல்படித்தான் அது நடக்கும், இயற்கையின் பின்னல் இருந்து இயக்கம் அந்தக் குயவன், எஞ்சினியர் யார்? இது யாராக வேண்டுமானாலும் இருக்க முடியாது. என்னைப் பெற்ற தகப்பன் ஒருத்தன் நிச்சயம் இருப்பார், அது எனக்குத் தெரியாமல் கூட இருக்கலாம், ஆனால் நிச்சயம் இருப்பார். இது எனது நம்பிக்கை அல்ல, உண்மை. இந்த உண்மை ஒருத்தரின் நம்பிக்கையைப் பொறுத்து மாறிவிடாது. நூறு பேர் நூறு வெவ்வேறு நபர்களை எனது தந்தையாக இருக்கலாம் என நம்புவதால், நூறு பேரும் எனது தந்தையாகி விட மாட்டார்கள். என் தந்தை, ஒரே ஒருத்தர் தான், எனக்கு இன்று அவர் யார் என்று தெரியாமல் இருக்கலாம், அதற்காக யாரை வேண்டுமானாலும் எனது தந்தை என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

Jayadev Das சொன்னது…

\\இப்படி மெய்ப்பிக்க முடியாத ஒரு நம்பிக்கையை நீங்கள் கொண்டிருப்பது சரி என்றால் - மற்றொருவர் "சாய் பாபாவை நம்புவதில்" என்ன தவறு இருக்கமுடியும்?\\ எனக்கு என்னோட அப்பா யாருன்னு இன்னைக்குத் தெரியவில்லை என்ற காரணத்துக்காக, ரோட்டில போற நாயைக் காண்பிச்சு, அதுதான் உன் அப்பான்னு நம்பிக்கை வை என்று சொல்வீர்களா? படிச்சிருக்கீங்க, லாஜிக்கா கேள்வி கேட்கிறீர்கள், எந்த லாஜிக்கை வைத்து இந்த ஆளை கடவுள்னு சொல்றீங்க? முதலில் இறைவன் என்பதற்கு டிக்ஸ்னரியிலயாச்சும் அர்த்தம் என்னன்னு பார்த்திருப்பீங்களா? அதில போட்டிருக்கும் அர்த்தத்திலாவது இந்த ஆளைக் கடவுள் என்று சொல்ல முடியுமா? இவன் மோடி வித்தைக்காரன், வாட்ச் மோதிரம் மாதிரி கையில் ஒளித்துவைத்துக் கொள்ள முடிஞ்ச அயிட்டங்களை எடுத்துக் கொடுப்பான், அவனால ஒருபோதும், ஒரு பூசணிக்காயை எடுத்துக் கொடுக்க முடியாது. ஊர்ல எல்லோருக்கும் நலமடைய வைக்கும் அவனே நாலு தடவை செத்துப் பிழைத்திருக்கான், அவனுடைய பக்தர்களுக்கு எங்கு எது நடந்தாலும் அறிந்து கொள்வதாகவும் அவர்களைக் காப்பதாகவும் கூறும் அவனைப் போட்டுத் தள்ள ஆறு பேர் அவனுடைய அறைக்குள் நுழைந்த போது, வேறு அறைக்குத் தப்பி ஓடியவன், இத்தனையும் தெரிந்தும் அவனைக் கடவுள் என்று நம்புபவர்கள், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள் அவ்வளவுதான், நான் அவ்வாறிருக்க விரும்பவில்லை.

கிராமத்தான் சொன்னது…

jayadev dos கூறியது

ஒரு படம் பிடிக்கும் காமிரா எப்படி தானாக உருவாகாதோ அப்படி. மேலும் நீங்கள் கேட்டுள்ள ஒவ்வொரு கேள்விக்கும் பதில் இருக்கிறது, ஆனால் அதற்கு உங்களுக்கு பொறுமை வேண்டும், தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளிக்குச் சென்ற ஒரே நாளில் நீங்கள் எஞ்சினியராகவோ, டாக்டராகவோ ஆகிவிட முடியாது. முறைப் படி பயின்றால் ஒரு நாள் நீங்கள் ஆகலாம். உங்களுடைய எண்ணம் நான் பள்ளிக்கும் செல்ல மாட்டேன், எந்த முயற்சியும் செய்ய மாட்டேன் ஆனால் இதய அறுவை சிகிச்சை செய்வதை ஒரே நிமிடத்தில் விளாகம் கொடு என்று கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அது கஷ்டம். புரிந்து கொள்ள வேண்டுமென்றால் பெரிய விஷயமே அல்ல, விதண்டா வாதம் செய்ய வேண்டுமென்றால் அதற்க்கு முடிவே இல்லை.

-----------------------------------
அன்பு நண்பரே நீங்கள் கூறும் பள்ளிக்கூடம் எது என்று எனக்கு தெரியவில்லை..நீங்கள் கூறுவது ஆன்மிகத்தைதான் பள்ளிகூடம் என்கிறீர்களோ அப்படியானல் ஆன்மிகத்தை கற்றுகொண்டால் எனக்கு அனைத்தும் தெரிந்து விடும் என்கீறீர்கள் போல நானும் ஆன்மிகத்தை நன்கு அறிந்தவன் ஆனால் நீங்கள் நான் பெரியாரின் கருத்தை பிரதிபலிப்பவன் போல கூறுகிறீர்கள். எனக்கு பெரியார் என்ற பெயரை தவிற வெறொன்றும் தெரியாது. நான் கூறும் அனைத்து கருத்துகளும் என் மனதில் பட்டவை தான்.. நான் ஆன்மீக வாதிகளுக்கு எதிரியும் அல்ல. நாத்திகவாதிகளுக்கு நண்பனும் அல்ல..

இவ்வுலகத்தில் நடைபெறும் அனைத்து நற்செயல்களுக்கும் கடவுள் பெயரை கூறும் நீங்கள்...

தீய செயல் அனைத்திற்க்கும் அது அவன் தலையெழுத்து என்று கூறுகிறீர்களே தவிற வெறொன்றும் கூறுவதில்லை..

நான் கேட்பதெல்லாம்

நாட்டில் நடக்கும் அனைத்து காரியங்களுக்கும் மனிதனுடைய சமுதாயமே காரணம் . அவ்மனிதனுக்கு அவனே தீர்வு...

என்பதை மறைக்க ஆன்மீகவதி என்ற போர்வையில் நீங்கள் கூறுவது விதண்டவாதம் அல்ல...
காரணங்களை சுட்டி காட்டினால் நான் விதண்டவாதியா?

நீங்கள் கூறும் பள்ளிக்கூடம் எதையும் யோசிக்கும் மனபக்குவத்தையோ மனிதர்களின் இன்ப துன்பங்களை பற்றி உங்களுக்கு கூறாமல் இன்பம் என்றால் அது கடவுள் என்றே போதித்துள்ளது போல...


நற்குணங்களுடன் எளியோர்க்கு உதவும் நல்ல உள்ளங்கள் ஆன்மிக வாதியானலும் நாத்திக வாதியானலும்
உதவி பெற்று பயன்பொறுபவர்களுக்கு அவ்மனிதனே கடவுள்..

அவ்வகையில் தான் சாய்பாப எனக்கு திரு அருள் கூறியது போல அவர் ஒரு மாறுபட்ட அனுபவம் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடிந்தது.

அருள் சொன்னது…

Jayadev Das கூறியது...

// //நூறு பேர் நூறு வெவ்வேறு நபர்களை எனது தந்தையாக இருக்கலாம் என நம்புவதால், நூறு பேரும் எனது தந்தையாகி விட மாட்டார்கள். என் தந்தை, ஒரே ஒருத்தர் தான், எனக்கு இன்று அவர் யார் என்று தெரியாமல் இருக்கலாம், அதற்காக யாரை வேண்டுமானாலும் எனது தந்தை என்று ஏற்றுக் கொள்ள முடியாது.// //

சரி, அப்புறம் எப்படித்தான் "சரியான" தந்தையைக் கண்டுபிடிப்பீர்கள்?

(சாய் பாபா'வை நம்புகிறவர்கள் - பாபா'தான் அவர்களைக் கண்டுபிடிப்பதாகக் கூறுகிறார்கள். அதாவது, வழிகாட்டிதான் மாணவனை தேர்வு செய்கிறார்)

ஓரிரு வரிகளிலேயே முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறீர்கள், பாருங்கள்.

உங்களது கருத்துப்படியே, உங்களது தந்தை என்று நீங்கள் நம்புகிறவரை - அவர் உண்மையிலேயே உங்களது தந்தைதான் என்று உறுதிப்படுத்த முடியாது.

அப்புறம், நீங்கள் அடுத்தவரைப் பார்த்து மட்டும் "அடுத்தவர் நம்பும் தந்தை அவரது தந்தை அல்ல" என்று கூறுவது எப்படி?

அய்யோ பாவம்! உங்களைப் படைத்த இறைவன் தந்தை என்றால், தாய் யார்?

தாயும் தந்தையும் ஏன் ஒருவராக இருக்கக்கூடாது? அல்லது ஒற்றை சக்தியாக இருக்கக் கூடாது?

உங்களைப் படைத்த தந்தை இறைவன் என்றால் - இறைவனின் தந்தை யார்? இறைவனால் எல்லோரும் படைக்கப்பட்டால், அந்த இறைவனைப் படைத்தது யார்?

அருள் சொன்னது…

Jayadev Das கூறியது...

// //எனக்கு என்னோட அப்பா யாருன்னு இன்னைக்குத் தெரியவில்லை என்ற காரணத்துக்காக, ரோட்டில போற நாயைக் காண்பிச்சு, அதுதான் உன் அப்பான்னு நம்பிக்கை வை என்று சொல்வீர்களா? படிச்சிருக்கீங்க, லாஜிக்கா கேள்வி கேட்கிறீர்கள், எந்த லாஜிக்கை வைத்து இந்த ஆளை கடவுள்னு சொல்றீங்க?// //

நான் சாய் பாபா'வை கடவுள் என்று கூறவில்லை. என்னைப் பொருத்தவரை எல்லா நம்பிக்கையும் ஒன்றுதான். இது சிறந்தது, இது தாழ்ந்தது என்று எதுவும் இல்லை. (அதாவது, எந்த ஒரு நம்பிக்கையும் அடுத்தவர் உரிமையைப் பறிக்காத வரை அது நியாயமானதுதான்).

எனவே- சாய் பாபா கடவுள் என்று சிலர் நம்பினால், அப்படி ஒரு நம்பிக்கையைக் கைக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு.

உலகில் எந்த ஒரு நபரும் தனது கடவுள் நம்பிக்கை மட்டுமே சரியானது என்று வாதிட ஒரே ஒரு காரணமும் இல்லை. அப்படி ஏதாவது ஒரு காரணம் இருந்தால் சொல்லுங்கள்.

நீங்கள் சாய் பாபா'வை திட்டுவது போல - உலகின் எல்லா கடவுள் நம்பிக்கையையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி திட்ட முடியும். நீங்கள் //ரோட்டில போற நாயைக் காண்பிச்சு, அதுதான் உன் அப்பான்னு நம்பிக்கை வை என்று சொல்வீர்களா?// என்று அடுத்தவரை நோக்கி கூறினால் - இதே வார்த்தைகளை உங்களை நோக்கியும் கூற முடியும்.

நீங்கள் மிக முக்கியமான ஒரு கருத்தை திசை திருப்புகிறீர்கள். எனக்கு தெரிந்து சாய் பாபா'வை நம்புகிறவர்கள் எவரும் "சாய் பாபாதான் கடவுள், நீங்கள் நம்ப வேண்டும்" என்று அடுத்தவரை கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, நம்புகிறவர்கள் - அவரவர் நம்பிவிட்டு போகிறார்கள். இதில் அடுத்தவருக்கு என்ன பிரச்சினை?

Jayadev Das சொன்னது…

@ கிராமத்தான்
\\நற்குணங்களுடன் எளியோர்க்கு உதவும் நல்ல உள்ளங்கள் ஆன்மிக வாதியானலும் நாத்திக வாதியானலும் உதவி பெற்று பயன்பொறுபவர்களுக்கு அவ்மனிதனே கடவுள்..\\ ஐயா தெய்வமே, இப்படியெல்லாம் வரையறையை எங்கேயிருந்து புடிச்சிகிட்டு வந்தீங்க? நான் சொல்லட்டுமா, நாலு காலு, ஒரு வாலு இருக்கிறதெல்லாம் கடவுள்-ன்னு? ஆடு, மாடு, கழுதைஎல்லாம் கடவுளாயிடும், பரவாயில்லையா? இங்கே அந்த மாதிரிக் கடவுளைப் பற்றி நான் பேச வில்லை. நாம் காணும் இந்த அண்டத்தை படைத்து-காத்து-அழித்தல் இது மூன்றும் செய்பவர், எல்லா காரணத்துக்கும் காரணமானவர், அவருக்கென்று வேறு காரணம் இல்லாதவர், எல்லாவற்றுக்கும் மிஞ்சியவர், அவரை மிஞ்ச யாரும் இல்லை- இவர் தான் எங்க மொழியில் கடவுள். அந்தத் தகுதிகள் இப்போ மண்டையைப் போட்ட சாய்பாபாவுக்குக் கிடையாது. அவனும் உம்மையும் என்னையும் போல சாதாரண மனிதன்தான், ஒரே வித்தியாசம், மேஜிக் தெரியும், அதை வைத்து எல்லோரையும் ஏமாற்றத் தெரியும், அவனது அதிர்ஷ்டம் அவனிடம் ஏமாறவும் நிறைய பேர் இருக்கிறார்கள் அவ்வளவுதான்.

Jayadev Das சொன்னது…

\\நாட்டில் நடக்கும் அனைத்து காரியங்களுக்கும் மனிதனுடைய சமுதாயமே காரணம் . அவ்மனிதனுக்கு அவனே தீர்வு...\\ எல்லா கடவுள் மறுப்பாளர்களும் ஒரே மாதிரிதான் சிந்திப்பீர்கள் போல!! சரி, நம் நாட்டில் சமுதாயம் சரியில்லை, அரசும் சரியில்லை, எல்லாம் திருடர்கள், கஷ்டப் படுகிறோம். அது சரி, பணக்கார நாடுகளில் உள்ளவர்களுக்கு எந்தக் கஷ்டமும் வருவதே இல்லையா? ஜப்பானில் எல்லோரும் பணக்கார்கள், கிட்டத் தட்ட ஊழலற்ற அரசாங்கம் தான், ஆனால் சமீபத்தில் ஜப்பானை சுனாமி தாக்கி கடும் அழிவைத் தந்ததே அதற்கு எதை வைத்து சரி செய்வீர்கள்? நில நடுக்கம், புயல் போன்றவற்றினால் ஏற்ப்படும் உயிரழப்புக்கு உங்கள் தீர்வு என்ன? அந்தக் கஷ்டமெல்லாம் எந்த சமுதாயம் உருவாக்குகிறது? இந்தியர்களுக்கு ஒரு விதமான கஷ்டம் என்றால் மற்ற நாடுகளில் வேறு விதமான கஷ்டம், ஆக துன்பம் இருந்து கொண்டுதான் இருக்கிறது அதை யாராலும் தீர்க்க முடியாது. அதற்காக, எதுவுமே செய்யாமல் இருக்க வேண்டுமா? அப்படி இல்லை, உங்களால் என்ன முடியுமோ அதைச் செய்யுங்கள், ஆனால், என்ன நடக்க வேண்டுமென்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. அதுக்கு மேல ஒருத்தன் உட்கார்ந்துகிட்டு தீர்மானிக்கிறான். Man proposes, God Disposes.

Jayadev Das சொன்னது…

\\நீங்கள் கூறுவது ஆன்மிகத்தைதான் பள்ளிகூடம் என்கிறீர்களோ அப்படியானல் ஆன்மிகத்தை கற்றுகொண்டால் எனக்கு அனைத்தும் தெரிந்து விடும் என்கீறீர்கள் போல நானும் ஆன்மிகத்தை நன்கு அறிந்தவன்\\ ஐயா, கடவுள் என்பதற்கு நீங்களாக ஒரு விளக்கம் கொடுத்தீர்களே, அது போல ஆன்மிகம் என்பதற்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்களோ தெரியவில்லை. நீங்களே ஏதாவதோ ஒன்றை ஆன்மிகம் என்று சொல்லி, அதன் படி நீங்களும் ஆன்மிகம் அறிந்தவர் என்று சொல்லிக் கொண்டால், மன்னிக்கவும்... அதற்க்கு நான் பொறுப்பல்ல. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளைப் பார்த்தால், ஆன்மீகத்தின் அரிச்சுவடியைக் கூட தொடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பகவத் கீதையின் முதல் சில அத்தியாயங்களிலே உங்கள் கேள்விகள் அத்தனைக்கும் விடை இருக்கிறது. நல்ல பதிப்பு ஒன்றை வாங்கிப் படியுங்கள், அப்புறம் பேசுங்கள்.

Jayadev Das சொன்னது…

@அருள்

சிலர் ஒரு கழுதையைக் கூட கடவுளாகக் கும்பிடலாம், அதில் அவர்களுக்கு மன நிம்மதி கிடைப்பதாகவும், அவர்கள் பிரச்சனைகளை எல்லாம் அந்தக் கழுதையே தீர்ப்பதாகவும் கூட அவர்கள் நம்பலாம். நான் அதைப் பற்றி கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால், அந்த கழுதான், இந்த உலகின் படைப்பு, காத்தல், அழித்தல் ஆகிய பணிகளைச் செய்கிறதா? எல்லோரையும் கட்டுப் படுத்தும் அக்கழுதையை வேறு யாரும் கட்டுப் படுத்தத் முடியாதா? எல்லாவற்றுக்கும் காரணமான அந்தக் கழுதைக்கு வேறு காரணம் எதுவும் இல்லையா? இந்தக் கேள்விகளுக்குப் பதில் இல்லை என்பது. நம்பிக்கை வேறு உண்மை வேறு. கழுதை கடவுள் என நினைப்பது நம்பிக்கை, அது கடவுள் இல்லை என்பது உண்மை.

Jayadev Das சொன்னது…

\\ சரி, அப்புறம் எப்படித்தான் "சரியான" தந்தையைக் கண்டுபிடிப்பீர்கள்? \\ ஏன் சார் எல்லாக் கேள்வியையும் என்னையே கேட்கிறீங்க? உங்க ஆராய்ச்சியைக் கொஞ்சம் தட்டி விடுங்களேன், கண்டு பிடியுங்களேன்?

Jayadev Das சொன்னது…

\\நீங்கள் சாய் பாபா'வை திட்டுவது போல - உலகின் எல்லா கடவுள் நம்பிக்கையையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி திட்ட முடியும்.\\ நான்தான் கடவுள் என்ற பொய்யை அவர்கள் பக்தர்கள் மத்தியில் உலவவிட்டு நம்ப வைத்தது இந்தாளோட குற்றம். திருடனைத் திருடன் என்று கூறினால் திட்டுகிறேன் என்று அர்த்தமல்ல, உண்மையைச் சொன்னேன் என்று அர்த்தம்.

Jayadev Das சொன்னது…

\\உங்களைப் படைத்த தந்தை இறைவன் என்றால் - இறைவனின் தந்தை யார்? இறைவனால் எல்லோரும் படைக்கப்பட்டால், அந்த இறைவனைப் படைத்தது யார்?\\ எல்லா காரணத்துக்கும் காரணமாக இருப்பவர், அவருக்கென்று ஒரு காரணமும் இல்லாதவரே கடவுள். [God is one who is the cause of all causes and who has no other cause]. இன்னொருத்தரால் படைக்கப் பட்டவராக இருந்தால் இந்த வரையரைப் படி அவர் கடவுள் என்ற தகுதியை இழந்து விடுவார். எல்லா ரயில் பெட்டிகளையும் இழுப்பதற்குப் பெயர்தான் எஞ்சின் இது வரையறை. அப்போ, எஞ்சினை இழுப்பதற்கு எஞ்சினுக்கு முன்னாடி எதாச்சும் இருக்கணுமே அது என்ன என்று லாஜிக்கலாக கேள்வி கேட்கக் கூடாது. தன்னையும் இழுத்துகிட்டு, மற்ற பெட்டிகளையும் இழுப்பதற்குப் பெயர் தான் எஞ்சின், அதற்க்கு முன்னாடி எதாச்சும் இருந்து இழுத்தா அது எஞ்சின் அல்ல, இன்னொரு பெட்டி என்று அர்த்தம். [அந்த எஞ்சின் இழுப்பதற்கும் உள்ள மூலப் பொருட்கள், ஆற்றலைத் தரும் எரி பொருட்களுக்குக் காரணம் இறைவன், அந்த இறைவனுக்கு இன்னொரு காரணம் இல்லை, அப்படி இருந்தால் அந்த இன்னொன்று தான் இறைவன், இவர் இல்லை.]

அருள் சொன்னது…

Jayadev Das கூறியது...

// //பகவத் கீதையின் முதல் சில அத்தியாயங்களிலே உங்கள் கேள்விகள் அத்தனைக்கும் விடை இருக்கிறது. நல்ல பதிப்பு ஒன்றை வாங்கிப் படியுங்கள், அப்புறம் பேசுங்கள்.// //

இந்திய நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கிய நூல் 'பகவத் கீதை'. அது பார்ப்பன மேலாதிக்கத்தை வளர்க்கவே உருவாக்கப்பட்டது. சாதிக் கொடுமையை நிலைநாட்டிய நூல் அது. நீங்கள் தயவுசெய்து "இந்திய வரலாற்றில் பகவத் கீதை" எனும் நூலை படித்துப்பாருங்கள்.

பகவத் கீதை கூறுவது என்ன?

""கண்ணன்: குலம் அழிந்தால் தொன்றுதொட்டு வரும் குலதர்மம் அழிந்துவிடும்.

அர்ச்சுனன்: குலதர்மம் அழிந்தால் என்ன ஆகும்?

கண்ணன்: குலம் முழுவதிலும் அதர்மம் பரவும்.

அர்ச்சுனன்: அதர்மம் பரவினால் என்ன ஆகும்?

கண்ணன்: அதர்மம் பரவினால் நல்லொழுக்கம் நசிந்து குலப்பெண்கள் கெட்டுபோவார்கள்

அர்ச்சுனன்: குலப்பெண்கள் கெட்டுப்போனால் என்ன ஆகும்?

கண்ணன்: குலப்பெண்கள் கெட்டுபோனால் கேடுகள் உள்ள இனக்கலப்பு ஏற்படும்.

அர்ச்சுனன்: இனக்கலப்பால் என்ன கேடுவரும் கண்ணா?

கண்ணன்: .இனக்கலப்பு இதற்கு காரணமாக இருந்தவர்களை மட்டுமல்ல, அக்குலம் முழுவதையும் நரகத்திற்கேஇட்டுச் சென்றுவிடும்.பிண்டதானம்,ஜலதானம்,(சிராத்தம்,தர்ப்பணம்)இல்லாததால் முன்னோர்கள்(பிதுருக்கள்) தாழ்வு நிலையடைவார்கள்.இனக்கலப்பு ஏற்படுத்தும் குற்றங்களால் குலதர்மம், ஜாதி,தர்மம் இரண்டுமே அழிந்து போகின்றன.

அர்ச்சுனன்: கண்ணா! குலதர்மம் அழிந்த மனிதர்களுக்கு என்ன ஆகும்?

கண்ணன்: . ஜானார்த்தனா! அத்தகைய பாவி மனிதர்கள் வெகுகாலம் நரகத்தில் கிடந்து உழலவேண்டும்.இது உலகறிந்த உண்மை.""

இப்படி சாதியை காப்பாற்றும் நூல்தான் உங்களது கடவுள் படைத்த நூலா?

Jayadev Das சொன்னது…

வர்ணங்கள் என்பது பிறப்பால் அல்ல. உதாரணத்திற்கு விஸ்வாமித்திரர் முதலில் ஷத்த்ரியராக இருந்தார், அவர் மன்னனாக நாட்டை ஆண்டு வந்தார். ஆனால் பின்னர் வேதங்கள் கற்று பிராமணராக மாறியது எப்படி? அதே போல ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்த மகன்களில் சிலர் பிராமணராகவும், சிலர் ஷத்ரியராகவும் சிலர் வைஷ்யராகவும் சிலர் சூத்திரராகவும் ஆனாதாக குறிப்புகள் உள்ளனவே! எனவே பிறப்பாலேயே வர்ணம் முடிவாகிறது என்பது இன்றைய ஜாதிப் பிராமணர்களின் துர்போதனை, வேதங்களில் சொல்லப் படவில்லை. [முடிந்தால் சோ ராமசாமி எழுதிய எங்கே பிராமணம் என்ற புத்தகத்தை வாங்கிப் படிக்கவும்]. வேத காலத்தில் நான்கு வர்ணங்கள் இருந்தாலும், யாரும் தாழ்ந்தவர் கிடையாது அவரவர் தங்களது கடமைகளைச் செய்து வந்தனர். நமது உடலில் தலைதான் பிரதானம் என்றாலும், காலுக்கு ஏதாவது ஒன்று என்றால், உடனே வெட்டி எறிந்து விடுங்கள் என்று சொல்ல மாட்டோம், அதற்கும் என்ன செலவு ஆனாலும் செய்வோம், அதைப் போலத்தான். இந்த ஆரோக்கியமான வர்ணம் என்ற பிரிவுகள் பின்னர் உருக்குலைந்து ஜாதிகளாகி விட்டன.

Jayadev Das சொன்னது…

வேத காலங்களில் வர்ணம் என்பது பிறப்பால் நிர்ணயிக்கப் பட்டதல்ல, அந்த தனிப்பட்டவரின் தகுதிளாலும் செயல் பாடுகளாலுமே நிர்ணயிக்கப் பட்டது. உதாரணத்திற்கு, ஒரு டாக்டரின் மகன் என்பதாலேயே ஒருத்தன் டாக்டராகிவிட முடியாது, அவனும் படித்து பயிற்சி செய்து பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப் பட்டால் மட்டுமே டாக்டர் ஆக முடியும். ஆனால், அப்ப மருத்துவர் எனும் போது மகனும் மருத்துவராவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். கீதையில் இதைத்தான் கீழ்க் கண்டவாறு பகவான் கூறுகிறார்.

catur-varnyam maya srstam
guna-karma-vibhagasah
tasya kartaram api mam
viddhy akartaram avyayam

According to the three modes of material nature and the work ascribed to them, the four divisions of human society were created by Me. And, although I am the creator of this system, you should know that I am yet the non-doer, being unchangeable. [B.G 4.13]

இங்கே பகவான் நான்கு வர்ணங்கள் guna-karma பொறுத்து உருவாகிறது என்று சொல்கிறார். அதாவது, தகுதி, செயல்பாடு என்று பொருள். பிறப்பால் மட்டுமே என்றால் janma-karma என்று சொல்லியிருப்பார். சரி, இந்த தகுதி எங்கிருந்து வருகிறது? அது இறைவனின் படிப்பிலேயே இருக்கிறது. சிலர் நன்றாக படிப்பார்கள், போய் சொல்லவே வராது, எளிமையாக இருப்பார்கள், எந்த சண்டை சச்சரவுக்கும் போக தயங்குவார்கள். அடுத்து சிலர், தலைமை தாங்கும் திறனோடு இருப்பார்கள், மற்றவர்களை கையாள்வதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள், ஏதாவது கைகலப்பு என்றால் துணிந்து இறங்குவார்கள். அடுத்து, சிலர், வியாபாரம் செய்யும் திறமையோடு இருப்பார்கள், விவாசாயம் செய்வதற்கு விரும்புபவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் எந்தத் திறமையுமே இருக்காது, எங்காவது ஏதாவது வேலை கிடைத்தால் செய்து விட்டு, ரொட்டி-கப்டா -மக்கான் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இந்த வகையறாக்களை எந்த ஜாதியிலும், மொழியிலும், நாட்டிலும் நீங்கள் பார்க்க முடியும். இது இயற்க்கை. அப்படி இல்லா விட்டால் சமுதாயம் இயங்கவே முடியாது. ஒரு வங்கியில் என்ல்லோரும் மேனஜராக இருக்க முடியாது, பியூன்களும் வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் வேண்டாமென்று சொல்பவர்கள், மேனேஜர், பியூன் இருவருக்கும் ஒரே சம்பளம், சலுகைகள் தாருங்கள் என்று சொல்லி வாங்கித் தந்து விடுவார்களா? மேனஜர் பியூன் என்று இருப்பதால் அவர் உயர்ந்த ஜாதி, இவர் தாழ்ந்தவர் என்ற பேதத்தை நிறுவனமே உருவாக்குகிறது என்று குற்றம் சாட்டுவீர்களா? மேனஜருக்குண்டான தகுதியுடைவரும் வேண்டும் பியூனுக்குண்டானவரின் தகுதியுடைவரும் வேண்டும், அப்படியில்லாவிட்டால் வங்கி வேலை நடக்கவே நடக்காது. அதே போலத்தான், ஒரு சமுதாயத்தில் பொறுமையாக சிந்திப்பவர், காக்கும் வீரர், வேளாண்மை, பால் உற்பத்தி, விவாசாயம் செய்வோர், இவர்களுக்கு உதவுவோர் இவை வேண்டும். இல்லாவிட்டால் சமுதாயம் இயங்காது.

அருள் சொன்னது…

பிறப்பால் அமைவதல்ல வர்ணம் என்றால் அப்புறம் இனக்கலப்பு கூடாதென்று கீதை கூறுவது ஏன்?

Gita 1:41

In regard to the result of undesirable progeny. The intermixture of castes that follow the family customs and honor the age-old Vedic traditions with those that do not causes a degradation in society and leads the family to a hellish existence. Not only this but the anscestors of such a family also suffer as well because there is no descendant qualified to perform the propitiatory rites prescribed in Vedic scriptures such as sraddha and tarpana. . Being deprived of these oblations due to the absence of qualified progeny as a result of destruction of the family structure the ancestors fall down from heaven and go directly to the hellish planets.

Gita 1:42

In the previous verse the effects of the intermixture of castes as described in the Vedic scriptures regarding the ancestors has been determined. Now Arjuna describes the misery experienced for those who are responsible for causing this intermixture of castes beginning with dosair etaih. Due to these evils the essential duties prescribed in the Vedic scriptures for the four castes which are the authorised and proven means leading humanity to the highest good and which are faithfully instructed by holy sages and spiritual masters are all forsaken.

Jayadev Das சொன்னது…

@ அருள்
வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்துக் கொள்வீர்கள் போலிருக்கே!! இந்த மாதிரி பொளிப்புரையைப் படிச்சிட்டு நீங்க இப்படி இருப்பதில் வியப்பே இல்லை. E=mC2, இதை சாதாரண ஆள் கிட்ட கொடுத்தா அவன் E is eaqual to m C two என்று தான் படிப்பான், மேலும் இது அர்த்தமற்றது என்று சொல்வான், அதையே ஓர் இயற்பியல் ஆசிரியர் கிட்ட கொடுத்தா, இது E is eaqual to m C squared, இது ஐன்ஸ்டீனின் mass energy equivalence விதி என்று சரியாகச் சொல்வார். நீங்க இப்போ பகவத் கீதையை அந்த மாதிரி அட்ரஸ் இல்லாத பயல் பொளிப்புரை எழுதியிருக்கான், அதைக் கொண்டாந்து ஆதாரமா வைக்கிறீங்க, நீங்க தகுதியான ஒருத்தர் மூலமா கத்துக்க வேண்டுமானால், http://www.asitis.com/ க்குச் செல்லவும்.

கிராமத்தான் சொன்னது…

jayadev dos கூறியது..


நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளைப் பார்த்தால், ஆன்மீகத்தின் அரிச்சுவடியைக் கூட தொடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பகவத் கீதையின் முதல் சில அத்தியாயங்களிலே உங்கள் கேள்விகள் அத்தனைக்கும் விடை இருக்கிறது. நல்ல பதிப்பு ஒன்றை வாங்கிப் படியுங்கள், அப்புறம் பேசுங்கள்.

-----------------------------------
நீங்கள் கூறும் அரிச்சுவடி ஒரு புத்தகத்தில் தான் அடங்கி இருக்கிறது என புலம்புவது தெரிகிறது.

அப்படியானல் ஒரு புத்தகத்தின் மூலமே கடவுளை காண்கிறீர்கள் என தெரிகிறது. நீங்கள் கூறும் நல்ல பதிப்பு கெட்ட பதிப்பு இரண்டையும் படியுங்கள் அப்பொதவது அதிலுள்ள நல்ல விசயங்களையும் கெட்ட விசயங்களையும் படித்து தெளிவு பெறுங்கள் அப்போதவது சிந்திப்பீர்களா பார்க்கலாம்...

ஓரே சட்டியில் குதிரை ஓட்டுவதை நிறுத்திவிட்டு அனைத்து விசயங்களையும் ஆராயும் மன பக்குவத்தை உருவாக்கி கொள்ள முயற்ச்சியுங்கள்..

அருள் சொன்னது…

Jayadev Das கூறியது...

// //நீங்க இப்போ பகவத் கீதையை அந்த மாதிரி அட்ரஸ் இல்லாத பயல் பொளிப்புரை எழுதியிருக்கான், அதைக் கொண்டாந்து ஆதாரமா வைக்கிறீங்க// //

உள்ளது உள்ளபடி உணர வேண்டுமானால் அதற்கு சமற்கிருதத்தை நான் கற்று பகவத் கீதையைப் படிக்க வேண்டுமா?

நான் கொடுத்த விளக்க உரை "எவனோ எழுதிய அட்ரஸ் இல்லாத பயல் பொளிப்புரை" அல்ல. வணவத்தில் அதிகாரமிக்க நான்கு சம்ப்ரதாயங்களில் ஒன்றான "குமார வைணவ சம்ப்ரதாயத்தின்" Kesava Kasmiri உரைதான் அது

http://www.bhagavad-gita.org/Gita/Commentaries/kumara-intro.html

பகவதி கீதை விளக்க உரைகளில் பல பிரிவுகள் உள்ளன. இந்து மதத்திற்கு உள்ளேயே சைவம் வேறு வைணவம் வேறு என இருக்கிறது. சிறுதெய்வங்கள் நம்பிக்கை பல நூறு பிரிவுகள் உள்ளன.

வீர சைவத்தை நம்பும் ஒருவன் பகவத் கீதையை நம்பமாட்டான். வைகுண்ட பதவி அவனுக்கு வேண்டவே வேண்டாம்.

இப்படி பலப்பல நம்பிக்கைகள் இருக்கும் உலகில் - சாய் பாபா'வை பார்த்தால் மட்டும் உங்களுக்கு வயிறு எரிவது ஏன்? பார்ப்பனர் அல்லாத ஒருவர் அவதாரமாக பார்க்கப்படுவதால் தானே?

Jayadev Das சொன்னது…

\\பார்ப்பனர் அல்லாத ஒருவர் அவதாரமாக பார்க்கப்படுவதால் தானே?\\ "ராசா ஒரு தலித் என்பதால் தான், அந்த ஒரு பாவமும் அறியாத அப்பாவி மீது திட்டமிட்டே ஸ்பெக்ட்ரம் ஊழல் பழியைப் போடுகிறார்கள்" -என்று கருணாநிதி சொல்வது போல இருக்கிறது நீங்கள் சொல்வது!! இறைவனுக்குக் கூட சாதி சாயம் பூசி அவருக்கும் OBC/MBC/SC இதில் ஏதாவது ஒரு Quota வில் இட ஒதுக்கீடு வாங்கித் தராமல் மாட்டீர்கள் போலிருக்கிறதே? மேலும் சாய் பாபாவைப் பார்த்து நான் என் வயிறு ஏறிய வேண்டும்? அந்த மாதிரி தேவை எனக்கில்லை அன்பரே. இவரைப் பார்த்து வயிறு எரிந்து தான் என் வயிறு நிறையும் என்ற அவசியம் எனக்கில்லை. எனக்கு போதுமானதை ஆண்டவன் குறையில்லாமல் தந்திருக்கிறான். மேலும், இறைவன் ஒருவன்தான், ஆனால், அவருக்கு வேலையாட்கள் ஏகப்பட்ட பேர் உள்ளார்கள். என் கடவுள் உசத்தி, உன் கடவுள் மட்டம் ஏற மதச் சண்டைகள் அறியாமையால் நடக்கின்றன. அதே போல சரியான புரிதல் இல்லாமையால் ஒரு மதத்துக்குள்ளேயும் இதே கருத்து வேறுபாடுகள் உள்ளன, தகுதியான ஆசானை நாடினால் அவர் எல்லா முரண்பாடுகளையும் சரி செய்வார். தனியா உட்கார்ந்து கிட்டு யோசிச்சா இப்படித்தான் நடக்கும். நீங்கள் சொல்லும் தேவர்கள் இந்த லிஸ்டில் வருவார்கள். மேலும், வைணவ சம்பிராதயங்களில் ஆசார்யர்கள் தோன்றி கொடுத்த போதனைகளை, பின் வந்தவர்கள் அவர்கள் இஷ்டத்துக்கும் சிதைத்து விட்டார்கள். நல்ல பகவத் கீதையைப் படிக்க ஒரு லிங்க் நான் கொடுத்துள்ளேன், [அது தான் சிறந்தது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்!! ஐன்ஸ்டீன் சிறந்த விஞ்ஞானி என்று நான் நம்புகிறேன், ஆனால் அவரைப் பரிசோதித்துப் பார்க்கும் அளவுக்கு எனக்கு எள்ளளவும் தகுதி இல்லை, அறிவும் இல்லை, ஆனாலும் நம்புகிறேன், அதே போல இந்த பகவத் கீதை உண்மையானது, எனக்கு அதை மதிப்பிட தகுதி இல்லையென்றாலும் இதைச் சொல்ல முடியும்]. அது உங்களுக்கு எற்ப்புடையதாக இல்லை என்றால், உங்கள் இஷ்டப் படி வேறு இடத்தில், வேறு விதத்தில் உண்மையைத் தேடலாம், தேடாமலும் போகலாம். அதில் நான் தலையிட விரும்பவில்லை.

Jayadev Das சொன்னது…

\\அப்படியானல் ஒரு புத்தகத்தின் மூலமே கடவுளை காண்கிறீர்கள் என தெரிகிறது. நீங்கள் கூறும் நல்ல பதிப்பு கெட்ட பதிப்பு இரண்டையும் படியுங்கள் அப்பொதவது அதிலுள்ள நல்ல விசயங்களையும் கெட்ட விசயங்களையும் படித்து தெளிவு பெறுங்கள் அப்போதவது சிந்திப்பீர்களா பார்க்கலாம்...
ஓரே சட்டியில் குதிரை ஓட்டுவதை நிறுத்திவிட்டு அனைத்து விசயங்களையும் ஆராயும் மன பக்குவத்தை உருவாக்கி கொள்ள முயற்ச்சியுங்கள்..\\ ஒரு நல்ல பெண் தகுதியான ஒருத்தனைக் கணவனாக தேர்ந்தெடுத்து அவனுக்கு மட்டுமே முந்தானையை விரிப்பாள். நீங்க அவளிடம் போய் நீ ஒருத்தனோடு மட்டும் ஏன் சுகம் காண்கிறாய், நல்லவன், கெட்டவன் எல்லோரிடமும் போ, அப்புறமா ஒரு முடிவுக்கு வரலாம் என்று சொல்வீர்களா? ஒரு பெண்ணுக்கு அவள் கணவன் மீதுள்ள விசுவாசம் எவ்வளவு முக்கியமோ, அதை விட ஆயிரம் மடங்கு , ஒருத்தரின் ஆன்மீக வழி காட்டி மீதுள்ள விசுவாசம் முக்கியம். ஏனெனில், பெண் கற்பு போனால் இந்த வாழ்க்கை தான் வீணாகும், ஆனால், ஆன்மீகத்தில் தவறினால், ஆன்மாவையே இழக்க வேண்டி வரும். இந்த வழிகளை நீங்கள் வேண்டுமானால் பின்பற்றுங்கள் நண்பரே, எனக்குத் தேவையில்லை.

Jayadev Das சொன்னது…

\\ நீங்கள் கூறும் நல்ல பதிப்பு கெட்ட பதிப்பு இரண்டையும் படியுங்கள் அப்பொதவது அதிலுள்ள நல்ல விசயங்களையும் கெட்ட விசயங்களையும் படித்து தெளிவு பெறுங்கள் அப்போதவது சிந்திப்பீர்களா பார்க்கலாம்...\\ ஆஹா... தெளிவாவது எப்படி என்று கண்டுபிடித்து வைத்துள்ளீர்கள். அது சரி, இதையெல்லாம் முதலில் நீங்கள் செய்தீர்களா? தெளிவாகி விட்டீர்களா? நீங்கள் என்ன தெளிவாகத் தெரிந்து வைத்துள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா?

கிராமத்தான் சொன்னது…

jayadev dos உலறியது..

ஆனால், ஆன்மீகத்தில் தவறினால், ஆன்மாவையே இழக்க வேண்டி வரும்.
----------------------------------
ஆகா என்ன அருமையான எடுத்துகாட்டு ஆன்மை இழக்க வேண்டி வரும்என்பதற்க்கு பதில் ஆண்மை இழக்க வேண்டி வரும் என்று போட்டிருந்தால் அருமையாக இருந்து இருக்கும் உங்கள் முட்டாள்தனமான எடுத்துகாட்டு

பார்த்து பார்த்து சட்டையெல்லாம் கிழித்து கொண்டு நான் ஆன்மிகவாதின்னு நடுதெருவுலா சுத்தபோறிங்க...