Pages

வியாழன், மார்ச் 08, 2012

இலங்கை: ஐ.நா.வில் வைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தீர்மானம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா 7.3.2012 புதன் அன்று அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளது.

ஐ.நாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஒரே குரலில் வேண்டுகோள் வைத்தது. கங்கிரசு கட்சியின் அமைச்சர்கள் ஜி.கே. வாசன், நாராயணசாமி உள்ளிட்டோர் கூட இந்தியா ஐ.நா தீர்மானத்தை ஆதரிக்கும் என்றனர். ஒருமுறை பிரதமருக்கு கடிதம் எழுதி, பதில் கிடைக்காததால், தமிழக முதல்வர் இரண்டாவதாகவும் கடிதம் எழுதி 'என்னதான் உங்கள் பதில்' என்று கேட்டார். (இந்திய அரசுக்கு தமிழக முதல்வரைவிட இலங்கை அதிபர் முக்கியமானவர் போலும்!).

ஆனாலும் தனது கும்பகர்ண தூக்கத்தைக் கலைக்க இந்தியா முன்வரவில்லை. நேரடியாக பதில் சொல்லாமல் யாரோ ஒரு அதிகாரி தனது பெயரைக்கூட குறிப்பிடாமல் பதில் சொன்னதாக பத்திரிகைகள் கூறின. "ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்." என்று தினமணி மற்றும் தி இந்து நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.நா. தீர்மானத்தின் பின்னணி

இலங்கை இறுதிப் போரில் பல லட்சம் தமிழர்களை இலங்கை இராணுவம் ஈவிரக்கமின்றி படுகொலை செய்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழு, ஈழப் போரின் இறுதிக் கட்டத்தின்போது பெருமளவில் போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதை வெளிப்படுத்தியிருந்தது. மேலும், தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான பரிந்துரைகளையும் வழங்கியிருந்தது.
UNHRC
இதையடுத்து உலக அளவில் இலங்கைக்கு எதிராக கண்டனங்கள் வெடித்தன. ஆனால் இதனைப் பற்றி இலங்கை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. பின்னர் சர்வதேச நாடுகளின் கடுமையான நெருக்கடியினால் இலங்கை அரசாங்கமே ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அந்தக் குழுவும் சில பரிந்துரைகளை அளித்தது. இதனைப் பற்றியும் ராஜபக்ச அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரம் சர்வதேச ரீதியாக பெரும் விவாதத்துக்குள்ளானது.

இலங்கை அரசு நடத்திய விசாரணைக் குழுவின் பரிந்துரைகளையாவது நிறைவேற்றுமாறும் எப்படி நிறைவேற்றப் போகிறீர்கள் என்பதை தெரியப்படுத்துமாறும் அமெரிக்கா அண்மையில் வலியுறுத்தியது. இலங்கை அரசு இநத நடவடிக்கையை மேற்கொள்ளாமல் போனால் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட உத்தேசித்துள்ள தீர்மானத்தை ஆதரிப்போம் என்றும் கூட அமெரிக்கா எச்சரித்தது.

இதேபோல் ஐ.நா. குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றியாக வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றமும் நெருக்கடி கொடுத்தது. ஆனால் ராஜபக்ச எதையும் கண்டுகொள்ளவில்லை.

இந்த சூழலில்தான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை அமெரிக்கா 7.3.2012 புதன் அன்று அதிகார பூர்வமாக முன்வைத்துள்ளது.

அமெரிக்க தீர்மானம் இதோ:
UNHRC– US Draft Resolution - Promoting Reconciliation and Accountability in Sri Lanka
இந்த தீர்மானத்தில்:

1. இலங்கை அரசு நடத்திய விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும்.

2. அதற்கான திட்டம் மற்றும் கால அட்டவணையை கூற வேண்டும்.

3. ஐ.நா. மனித உரிமை ஆணையம் இதனைக் கண்காணித்து, ஐ.நா மனித உரிமைக்குழுவின் 22 ஆவது கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசு நடத்திய விசாரணைக் குழுவின் விசாரணை முழுமையானது அல்ல என்கிற கவலையையும் இந்த தீர்மானம் உள்ளடக்கியதாக இருக்கிறது.

மிகவும் குறைந்த பட்ச அளவில் மனித உரிமை பேசும் இந்த தீர்மானத்தைக் கூட ஆதரிக்க இந்தியா தயங்குவதற்காக ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்பட வேண்டும். இந்த அவலத்தைப் பார்த்த பின்னரும் தமிழர்கள் தம்மை இந்தியக் குடிமக்கள் என்று பேசுவதற்கு பதிலாக நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாவதே மேல்!

9 கருத்துகள்:

JP சொன்னது…

அண்ணா சில விஷயங்கள் எனக்கு புரியவில்லை...இலங்கை அரசாங்கம் என்பதும் ராஜபக்சே என்பவனும் ஒன்றுதானே?

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

கண்டிப்பாக இந்தியா ஆதரிக்க வேண்டும்! ஆனால் பொம்மை பிரதமர் செய்வாரா?

அருள் சொன்னது…

@ நம்பிக்கைபாண்டியன்

ஐ.நா. மனித உரிமை அவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அதில் ஒரு நாடு ஒதுங்குவதாலோ, எதிர்ப்பதாலோ பெரிதாக ஒன்றும் இல்லை.

ஆனால், இந்தியா தெற்காசியாவில் ஒரு முக்கிய நாடாக இருப்பதும், உலகிலேயே தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடாக இருப்பதும், கியூபாவுடன் சேர்ந்து இலங்கையை ஆதரிப்பதும் 'புவிஅரசியல்' சூழலில் அதிக தாக்கத்தை விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது.

ராஜ நடராஜன் சொன்னது…

அருள்!புவியியல் அரசியல் சார்ந்தே இலங்கையின் போர்க்குற்றங்கள் நோக்கப்படுகிறது.அமெரிக்காவின் சுயநல அரசியல் இருந்தாலும் தமிழர் நலன்களுக்கும்,உணர்வுக்கும் எதிராக செயல்படும் காங்கிரஸின் மத்திய ஆட்சியை விட அமெரிக்காவை வரவேற்க வேண்டியுள்ளது.

காங்கிரஸ் ஏற்கனவே மற்ற மாநிலங்களில் மண்ணைக் கவ்வியுள்ளது.வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து காங்கிரஸை வேரோடு சாய்ப்போம்.

kavirimainthan சொன்னது…

நண்பர் அருள்,

இது மிகவும் பயனுள்ள,
அவசியம் தேவையான இடுகை.
வாழ்த்துக்கள்.

அமெரிக்காவின் தீர்மானம் - எதிர்பார்த்ததை விட
நன்றாகவே அமைந்திருக்கிறது.

இன்று தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கும்போது
வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, இந்த
விஷயத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும்போது,
தமிழ் நாட்டின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும்
என்று கூறி இருக்கிறார்.

இதெல்லாம் வெறும் கதை.
கிருஷ்ணா என்ன சொன்னாலும்,
மன்மோகன் சிங் என்ன நினைத்தாலும் -
இறுதியில் நிறைவேறப்போவது "அன்னையின்"
விருப்பம் தான்.

இத்தனைக்குப் பிறகும்,ஐ.நா.சபையில்
அமெரிக்காவின் தீர்மானத்தை
இந்தியா எதிர்த்தால் - இனி மத்திய மந்திரிகள்
யாரும் தமிழ் நாட்டுக்குள் நுழைய முடியாது
என்பதை தமிழ் நாட்டின் அனைத்து கட்சிகளும்,
ஒரே குரலில் - உடனடியாக - தெரிவிப்பது
அவசியம்.

தமிழ்நாட்டின் கருத்து -
பலமாகவும்,
ஒரே குரலிலும்,
உடனடியாகவும்,
வெளிப்படையாகவும் - தெரியப்படுத்தப்பட வேண்டும்.

-காவிரிமைந்தன்

kavirimainthan சொன்னது…

நண்பர் அருள்,

இது மிகவும் பயனுள்ள,
அவசியம் தேவையான இடுகை.
வாழ்த்துக்கள்.

அமெரிக்காவின் தீர்மானம் - எதிர்பார்த்ததை விட
நன்றாகவே அமைந்திருக்கிறது.

இன்று தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கும்போது
வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, இந்த
விஷயத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும்போது,
தமிழ் நாட்டின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும்
என்று கூறி இருக்கிறார்.

இதெல்லாம் வெறும் கதை.
கிருஷ்ணா என்ன சொன்னாலும்,
மன்மோகன் சிங் என்ன நினைத்தாலும் -
இறுதியில் நிறைவேறப்போவது "அன்னையின்"
விருப்பம் தான்.

இத்தனைக்குப் பிறகும்,ஐ.நா.சபையில்
அமெரிக்காவின் தீர்மானத்தை
இந்தியா எதிர்த்தால் - இனி மத்திய மந்திரிகள்
யாரும் தமிழ் நாட்டுக்குள் நுழைய முடியாது
என்பதை தமிழ் நாட்டின் அனைத்து கட்சிகளும்,
ஒரே குரலில் - உடனடியாக - தெரிவிப்பது
அவசியம்.

தமிழ்நாட்டின் கருத்து -
பலமாகவும்,
ஒரே குரலிலும்,
உடனடியாகவும்,
வெளிப்படையாகவும் - தெரியப்படுத்தப்பட வேண்டும்.

-காவிரிமைந்தன்

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) சொன்னது…

நண்பரே நம்மை கடவுள்தான் இனி காப்பாற்ற வேண்டும்

balamuruganthirunavukarasu சொன்னது…

iniyum naam tamilarkal eandru solvathil payan yeathum illai. tamil unarvukalai vaithu arasiyal pannum arasiyal vaathikal ithai vaithum arasiyal mattum thaan seaivaarkal. mathiya arasuku tamilarkal yeandralea keavalam thaan. kolai vaalinai yeaduda migakodiyor seyal araveaa..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இது மிகவும் பயனுள்ள,
தகவல்கள் பல அரியத்தஎதமைக்கு நன்றி.