Pages

திங்கள், மார்ச் 12, 2012

"அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார்: காமெடியா? லூசுத்தனமா? 

"அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார் எனும் 'பிரபல' பதிவர் "அகில உலக ஆரியர் அன்புமணி ராமதாஸ் பேட்டி காமெடி கும்மி" எனும் ஒரு பதிவினை எழுதியுள்ளார். அரசியல் தலைவர்கள் நகைச்சுவைக்கு ஆளாவது இயல்பானது. அதை நகைச்சுவையாக பார்ப்பதே நல்லது. நியாயமும் கூட.

ஆனால், "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமாரின் மேற்கண்ட பதிவு நகைச்சுவையாக இல்லை. மாறாக, கேலி பேசுதல், லூசுத்தனமாக பேசுதல், விஷமப் பிரச்சாரம் செய்தல், அவதூறு என பலவற்றையும் அது உள்ளடக்கியிருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள "புதிய அரசியல் புதிய நம்பிக்கை" எனும் ஆவணத்தை முன்வைத்து நடக்கும் விவாதங்களையொட்டி இப்பதிவினை அவர் வெளியிட்டுள்ளார். (புதிய அரசியல் புதிய நம்பிக்கை - இங்கே காண்க)
"(மருத்துவர் அன்புமணி) அண்ணே, உங்க பாயிண்ட்ஸ் எல்லாம் கரெக்ட் தான்... ஆனா, ஜாதிக்கட்சி இன்னும் ஆபத்தாச்சே... அதிகாரம் கைல இல்லாதப்பவே உங்கப்பா படப்பெட்டியை தூக்கிட்டு ஓடரது, மரத்தை வெட்டி போடறதுன்னு வன்முறைல இறங்கறாரு... சி.எம் ஆகிட்டா அவ்வளவ் தான் தமிழகம் 2 ஆகிடும்" என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் இந்த "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார்.

ஆக,
1. சினிமாக்காரர்களை எதிர்த்துப் போராடியது ஒரு ஆபத்தான செயல்.
2. சாதிக்கட்சி வைப்பதும் ஆபத்தானது.
3. சாலைமறியல் போராட்டத்தில் மரம் வெட்டப்பட்டது ஒரு பெரும் குற்றம்
-- என்பன  "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமாரின் கருத்துகளாகும். இந்த லூசுத்தனமான, அவதூறான விஷமப்பிரச்சாரத்தின் ஒவ்வொரு கருத்திற்கும் பதிலளிக்க வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன்.

திராவிட ஆதிக்க சாதிவெறியர்களின் அவதூறுப் பிரச்சாரத்தின் உண்மையை மண்ணின் மைந்தர்கள் அறிந்துகொள்ள இதுவும் ஒரு சிறிய வாய்ப்பாக அமையக்கூடும்.

அந்தவகையில், "சினிமாக்காரர்களை எதிர்த்துப் போராடியது ஒரு ஆபத்தான செயல்"தானா? என்பது குறித்து முதலில் விளக்கமளிக்க விரும்புகிறேன். (இதன் இரண்டாம் பகுதியை இங்கே காண்க: (பகுதி 2) சாதிக்கட்சி ஆபத்தானதா?)

மரணத்தை விற்கும் சினிமா!

 "(மருத்துவர் அன்புமணி) அண்ணே, உங்க பாயிண்ட்ஸ் எல்லாம் கரெக்ட் தான்... ஆனா, அதிகாரம் கைல இல்லாதப்பவே உங்கப்பா படப்பெட்டியை தூக்கிட்டு ஓடரதுன்னு வன்முறைல இறங்கறாரு" என்கிறார்  "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார். இது அவர் குறிப்பிடும் மூன்று பயங்கரவாதங்களில் ஒன்று.

படப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு வீம்புக்காக ஓடவில்லை. அது சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சியை எதிர்த்து நடத்தப்பட்ட மிக முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம். பாபா திரைப்படத்தில் ரஜினி புகைபிடிக்கிறார் என்பதற்காக நடத்தப்பட்டது என்று தெரிந்துதான் இப்படி எழுதுகிறார் "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார்..
புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஆண்டுக்கு 10 லட்சம் இந்தியர்கள் இறந்து போகின்றனர். புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் தடுக்கப்பட வேண்டும் என்பது மெய்ப்பிக்கப்பட்ட அறிவியல் உண்மை ஆகும்.

சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளால் 52 % இளைஞர்கள் புகைபிடிக்கின்றனர் என்பது புகழ்பெற்ற லான்செட் இதழில் வெளியான கட்டுரை. அதனை இங்கே காண்க:

Effect of viewing smoking in movies on adolescent smoking initiation: a cohort study

இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அதிகம் திரைப்படம் பார்க்காத சிறுவர்களை விட அதிகம் திரைப்படம் பார்க்கும் சிறுவர்கள் இருமடங்கு அதிகமாக புகைபிடிக்க கற்றுக்கொள்வது தெரியவந்தது.

சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் இளைஞர்களையும் சிறுவர்களையும் எப்படி சீரழிக்கிறது என்பதை உலக சுகாதார நிறுவனம் தெளிவாக விளக்கியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் ஆவணத்தில், திரைப்படங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கின்றன எனவும் அதிகம் சினிமா பார்க்கும் சிறுவர்கள் புகைப்பழக்கத்திற்கு அதிகமாக அடிமையாகின்றனர் என்றும் தெளிவாக சுடிக்காட்டியது WHO. அதனை இங்கே காண்க:

இந்திய சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் எவ்வாறு திணிக்கப்படுகின்றன என்பதையும் "பாலிவுட்: நண்பனா, வில்லனா?" எனும் அறிக்கையில் விரிவாக விளக்கியது உலக சுகாதார நிறுவனம். அதுமட்டுமல்லாமல், சினிமாக்காரர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் புகைப்பழக்கத்தை திணிக்கின்றனர் என்பதையும் அந்த அறிக்கை தெளிவு படுத்தியது. அதனை இங்கே காண்க:

Bollywood’: Victim or Ally?

இந்தி திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் திணிக்கப்படுவது குறித்த காணொளியை (YOUTUBE) இங்கே காண்க:

இத்தனை ஆதாரங்கள் உள்ள, ஒரு உயிர் காக்கும் போராட்டம் உங்களுக்கு "படப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடினார்" என்று கேலி பேசும் விஷயமாகிவிட்டதா?

சினிமாவில் புகைபிடிப்பதை எதிர்க்கும் போராட்டம்


மருத்துவர் இராமதாசு அவர்களின் தொடர் பிரச்சாரத்தால் தமிழ் சினிமா கதாநாயகர்கள் பெரும்பாலும் புகைபிடிக்கும் காட்சிகளை கைவிட்டுள்ளனர். 2002 வாக்கில் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிரான போராட்டத்தை தொடங்கிய போது தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லா கதாநாயகர்களும் திரைப்படத்தில் புகைபிடித்தனர்.

ஆனால், இப்போது ரஜினி, கமல், சூர்யா, விஜய், விகரம் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் திரைப்படத்தில் புகைபிடிப்பது இல்லை. ஏவிஎம் நிறுவனம் புகைபிடிக்கும் காட்சிகளை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.

அசல் திரைப்பட விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சி
பசுமைத் தாயகத்தின் போராட்டம்
அசல் திரைப்பட விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சி நீக்கம்

சினிமாவில் புகைபிடிப்பதை எதிர்க்கும் மருத்துவர் இராமாதாசு அவர்களின் போராட்டங்களால் தமிழ் திரை உலகில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசும் இத்தகைய காட்சிகளுக்கு எதிரான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனாலும். இன்னமும் சிகரெட் நிறுவனங்களின் மரண விளம்பரங்கள் தொடரவே செய்கின்றன. எடுத்துக்காட்டாக, எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் சிகரெட் கம்பெனிகளிடம் பணம் பெற்று புகைபிடிக்கும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஆதாரம் இதோ:
"From a textile outlet to cigarettes, Engeyum Eppothum looks replete with subliminal advertisements."

இப்படியாக, இந்திய அரசால் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ள புகையிலை விளம்பரங்கள் மறைமுகமாகவும் திருட்டுத்தனமாகவும் சினிமா மூலம் திணிக்கப்படுவதை மருத்துவர் இராமதாசு எதிர்க்கிறார்.


திருவாளர் "அட்ரா சக்க" சி.பி.செந்தில்குமார் அவர்களே! எதிர்கால தலைமுறையினரின் வாழ்வைக் காக்கும் இந்த போராட்டம் உங்களுக்கு காமடியாகத் தெரிகிறதா?

11 கருத்துகள்:

முரளிதீர தொண்டைமான் சொன்னது…

ஆணித்தரமான கருத்துக்கள்!

ஆனால் கவர்ச்சி கூத்தினையும் மானாட மார்பாட் நிகழ்ச்சியினையும் விடிய விடிய பார்த்து ஏங்கித்திரியும் இன்றைய மங்குனி மக்களுக்கு நாளும் இலவசங்களுக்காக பிச்சைகாரர்களாக ஏங்கும் மக்களுக்கு எப்படி இதெல்லாம் புரியபோகுது?! யாரும் முன்வராத போது புரியவைக்கும் நமது இனமான மருத்துவர் அவர்களைப்பார்த்து அத்தகையா பசப்புக்கூட்டம் எல்லி நகைக்கத்தான் செய்யும்!

அனைத்து அடிப்படை உரிமைகளையும் இழந்து தனது வாழ்வுக்கே குந்தகம் விளையும் போதுதான் அவர்களது அறிவிற்க்கு எட்டும்போல!? அப்பொழுதாவது அவர்களது மரமண்டையில் உரைத்தால் அப்பெருமை மருத்துவர் இராமதாசு அய்யவைனை மட்டுமே சாரும்!

Vanathi Rayar Senthil Nathan சொன்னது…

Excellent points and explanations, if you explain many more times also, there are more cinema mentals are there, what to do

நிஸார் அஹமது சொன்னது…

அட்ராசக்க செந்தில்குமார் என்பவர், சினிமா விமர்சனங்களை (?) சினிமாக்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதுவதோடு அல்லாமால். ஆபாச பத்திரிக்கைகளான ஆனந்த விகடன் இவ்வளவு மார்க் போடுவான் என்று தன கற்பனைகளை எழுதுவார். பத்தாதற்கு அந்த ஆபாச விகடன் கட்டுரைகளை தனது கட்டுரைகளைப்போல பதிவிட்டு அவைகளுக்கு இலவச விளம்பரம் செய்வார். இது ஒரு மனோ வியாதி...

அது போக, டாக்டர் இராமதாசு, இன்னும் இது போன்ற சிகரெட் குடிப்பது, மது அருந்துவது போன்ற படங்கள் வந்துகொண்டு இருந்தும் இவைகளுக்கு ஏன் எதிருப்பு தெரிவிப்பதில்லை?

மர்மயோகி சொன்னது…

அட்ராசக்க செந்தில்குமார் என்பவர், சினிமா விமர்சனங்களை (?) சினிமாக்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதுவதோடு அல்லாமால். ஆபாச பத்திரிக்கைகளான ஆனந்த விகடன் இவ்வளவு மார்க் போடுவான் என்று தன கற்பனைகளை எழுதுவார். பத்தாதற்கு அந்த ஆபாச விகடன் கட்டுரைகளை தனது கட்டுரைகளைப்போல பதிவிட்டு அவைகளுக்கு இலவச விளம்பரம் செய்வார். இது ஒரு மனோ வியாதி...

அது போக, டாக்டர் இராமதாசு, இன்னும் இது போன்ற சிகரெட் குடிப்பது, மது அருந்துவது போன்ற படங்கள் வந்துகொண்டு இருந்தும் இவைகளுக்கு ஏன் எதிருப்பு தெரிவிப்பதில்லை?

அழி சொன்னது…

இந்த செந்தில் போன்ற அறை வேக்காட்டுத்தனமான மணிதர்களால் தான் தமிழர்களுக்கும், தமிழனுக்கும், தமிழினத்திற்கும் இவ்வளவு கேவலம், சமூக பொருளாதார வளர்சியின்மை, சமூக அக்கறையில்லா தன்மை

இப்படிப்பட்டவர்கள் எதையும் இழந்து, எதை வேண்டுமானாலும் வி( )ட்டுக்கொடுத்து எப்படியாவது இன்றய கேளிக்கைகளில் மூழ்க வேண்டும்.

இன்றைக்கு தமிழருக்கும், தமிழுக்கும் தமிழினத்திற்கான சாவால்களையும், சிக்கல்களையும் புரியாத, புரிந்து கொள்ள தயாரில்லாத மணிதமிருக கூட்டங்களில் சுற்றித்திரியும் ஓநாய்கள்

Rafeek சொன்னது…

புகைக்கு எதிரான உங்கள் க்ருத்து நியாயமானதுதான். ஆனால் துக்கு ரஜினி படப்பெட்டியை தூக்கினா தீர்வு வந்துடுமா? அது வன்முறை தானே.. ஏன் கலைஞர் அம்மான்னு மாறி மாறி கூட்டணி வச்சப்போது சிகரெட்ட தடை செய்தாதான் கூட்டனின்னு கண்டிசன் போட வேண்டியது தானே? அடுத்தவரின் மூக்கு நுனி வரைதான் உங்கள் சுதந்திரம் பாஸ்..பாபா படப்பெட்டியோ.. மற்ற திரைப்பட பெட்டியோ தூக்கியது தவறுதான்.. சுகாதர துறை அமைச்சரா..ஷாருக்கான் வரை ஆட்டி பார்த்தது தான் முறையான நடவடிக்கை..!அதற்கு அன்புமணி அவர்களின் தைரியம் மற்றும் குறிக்கோளை பாரட்டிய ஆக வேண்டும்!!

SURYAJEEVA சொன்னது…

மத்திய அரசில் அங்கம் வகித்த பொழுது, பேசாமல் சிகரட் தயாரிப்பையே தடை செய்திருக்கலாம்.. ஒரு வேளை கள்ள சிகரெட் சந்தையில் வந்து விடும் என்று கதை விடலாம்... ஆனால் உண்மை எங்கோ ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருக்கிறது... பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ளவர்கள் புகை பிடிக்கவோ குடிக்கவோ கூடாது என்று சொல்லப் பட்டாலும் அந்த கட்சியில் இருக்கும் தொண்டர்களே காது கொடுத்து கேட்பதில்லை... புண்ணை சொரியும் இன்பம் மட்டும் தான் இந்த மாதிரியான திசை வழி அறியாத போராட்டங்களில் இருக்கும்

durai சொன்னது…

ungaludaya pathilum vilakkamaaga illai. pugai pidippathu epadi akkiramamo, athepola akkiramam vaarisu arasiyalum. athu kurithum ungalathu nermayaana pathilai ethirparkiren.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நெத்தியடியான பதிவு !

Karthik Sambuvarayar சொன்னது…

அட்ரா சக்கை செந்தில் போன்ற மனநிலை பாதிக்கபட்ட ஒரு பதிவரின் பதிவுக்கு நீங்கள் இவ்ளோ சிரமம் எடுத்து பதில் கூற தேவை இல்லை. இருந்தாலும் உங்களுடைய பதில்கள் பாராட்டுக்குரியது. நியாயத்தை முன்னிறுத்தி எதையும் பார்க்கும் மக்கள் உங்களின் கருத்துக்களை ஏற்று கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

அன்பு துரை சொன்னது…

//**
HK கூறியது...
அட்ரா சக்கை செந்தில் போன்ற மனநிலை பாதிக்கபட்ட ஒரு பதிவரின் பதிவுக்கு நீங்கள் இவ்ளோ சிரமம் எடுத்து பதில் கூற தேவை இல்லை. **//

நிச்சயமாக இதுபோன்ற பதிவுகள் தேவை... இல்லைனா.. பல சேதிகள் தெரியாமலேயே போய்விடும்.. மேலும் அவர்கள் ஏற்படுத்தும் கலங்கங்கள் மாறாத வடுக்களாக அப்படியே நின்றுவிடும்..