Pages

புதன், ஏப்ரல் 06, 2016

வைகோவின் சாதிவெறி: வேடிக்கை பார்க்கும் கொம்யூனிஸ்ட் கும்பல்!

வைகோ இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், 'கலைஞருக்கு நாதஸ்வரம் வாசிக்கும் தொழில் தெரியும்' என்றும், 'ஆதிமனிதன் செய்த தொழிலை (விபச்சாரம்) செய்யலாம்' என்றும் பேசியுள்ளார்.

இப்படி,  நாதஸ்வரம் என சாதித்தொழிலை சுட்டிக்காட்டியும், விபச்சாரத் தொழிலை ஒரு தலைவர் மீது சுட்டியும் வைகோ பேசியது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. கூடவே, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் 'கலைஞரை இறைத்தூதராக சித்தரித்தார்கள். இதனை இஸ்லாமியர்கள் அனுமதிக்கலாமா?' என்றும் பேசியுள்ளார்.

சாதிவெறிப் பேச்சையும், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் வைகோ பேசுவதையும் கண்டுகொள்ளாமல் போவது தமிழக அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல.
வைகோவின் சாதிவெறி பேச்சு

குறிப்பு: வைகோ இவ்வாறு பேசிய இடத்தில் திருமாவளவனும், முத்தரசனும், இராமகிருஷ்ணனும் இருந்தார்கள். வைகோவின் இந்த அநாகரீக பேச்சை வேடிக்கப் பார்த்தனர்.

செய்தி: "மாரியம்மன் மீது ஆணை... நான் சாதியைக் குறிப்பிட்டு பேசவில்லை" என வைகோ விளக்கம். (கலைஞருக்கு நாதஸ்வரம் வாசிக்கத் தெரியும் என்பது சாதிவெறி பேச்சு இல்லையா?)

பழைய வரலாறு: காத்திருக்கும் காந்தாரி அம்மன்
காத்திருக்கும் காந்தாரி அம்மன்
நெல்லை மாவட்டம் குறிஞ்சாக்குளத்தில் தலித் இன மக்கள் தங்களுக்கென்று காந்தாரி அம்மன் கோவிலை கட்டமுயன்றதற்காக, 1992  மார்ச் 16 -ல் தலித் சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள். முதல் குற்றவாளி வைகோ அவர்களின் தம்பி ரவிச்சந்திரன். இரண்டாம் குற்றவாளி வைகோ அவர்களின் மாமா சங்குவெட்டி மோகன்தாசு நாயுடு.

காந்தாரியம்மன் கோவில் பீடம் இன்னமும் அப்படியேதான் நிற்கிறது. இன்றுவரை சாமியை கோவிலில் வைக்க தலித்துகளால் முடியவில்லை. தலித் மக்களுக்கு சொந்தமான ஊரில், தலித் மக்களுக்கு சொந்தமான நிலத்தில், தலித் மக்களின் சாமியை கோவிலில் வைத்து வழிபட 24 ஆண்டுகளாக முடியவில்லை.

கேப்டன் விஜயகாந்த் கூட்டணி செயல்வீரர்கள் இப்போதாவது காந்தாரி அம்மனை கோவிலுக்குள் அனுப்ப முடியுமா?

----------------------------------------
ஒரு பின்னணி கட்டுரை:
தேர்தல் 2016: தமிழக அரசியலின் உண்மை நிலை என்ன?

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Vaiko visit last 30/years devar memorial whereas he never visit immanual memorial last year only he went to paramagudi after making alliance with dalith group