Pages

திங்கள், மே 09, 2011

டோனியை எதிர்த்து போராட்டம்: மதுபான விளம்பரங்கள் அகற்றப்பட்டன 


இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனியின் படத்துடன் McDowells VSOP விளம்பரம் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் நடுவண் நலவாழ்வுத்துறை அமைச்சர் அன்புமணி இராமதாசு அவர்கள் 2.5.2011 அன்று டோனிக்கு கடிதம் எழுதினார்.

இதனைத்தொடர்ந்து, மகேந்திரசிங் டோனி மதுமான விளம்பரங்களில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று பசுமைத்தாயகம் அமைப்பினர் 4.5.2011 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை வந்திருந்த டோனி சென்னை அடையாறில் பார்க் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். இந்த விடுதி முன்பு திரண்ட பசுமைத் தாயகம் அமைப்பினர் "மதுபான விளம்பரங்களில் டோனி நடிக்கக்கூடாது. சென்னையில் வைக்கப்பட்டுள்ள விளம்பரங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்" எனக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 7.5.2011 அன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த McDowells VSOP விளம்பரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. 
படம் 1: McDowells VSOP மதுபான விளம்பரதில் டோனி (1.5.2011). இடம்: பாம்குரோவ் விடுதி அருகில், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,தி.நகர், சென்னை
படம் 2: McDowells VSOP மதுபான விளம்பரம் நீக்கம் (7.5.2011). இடம்: பாம்குரோவ் விடுதி அருகில், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,தி.நகர், சென்னை
படம் 3: பசுமைத் தாயகம் ஆர்ப்பாட்டம் (4.5.2011) - பார்க் ஷெராட்டன் நட்சத்திர விடுதி முன்பு

 "முன்னாள் நடுவண் நலவாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களது கோரிக்கைக்கு ஏற்ப, சென்னை நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மதுபான விளம்பரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டதை வரவேற்கலாம். அதேநேரத்தில், ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் பல மதுபான நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு - மதுபானங்களை சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் திணிக்கின்றன என்பதை மறைத்துவிட முடியாது. 

இந்த தவறான செயலில் இருந்து அனைத்து ஐ.பி.எல். அணிகளும் விலக வேண்டும். எந்த ஒரு அணியும் இனி எந்த ஒரு மதுபான நிறுவனத்திடமிருந்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணமோ பொருளோ வாங்க மாட்டோம் என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களான கோடிக்கணக்கான இளைஞர்களை காப்பாற்ற ஐ.பி.எல். அணியினர் முன்வர வேண்டும்" 

3 கருத்துகள்:

குடந்தை அன்புமணி சொன்னது…

போராட்டத்தில் இறங்கினால்தான் வெற்றி கிடைக்கும்போல...
http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

NKS.ஹாஜா மைதீன் சொன்னது…

நல்ல விசயம்தான்....

VJR சொன்னது…

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=237900

அன்றே சொன்ன அருள். கீப் இட் அப்.