Pages

திங்கள், மே 30, 2011

உண்மைத்தமிழனின் உளறல் - ஹெல்மெட் அவசியமா?


இப்படி ஒரு தலைப்பு வைத்ததற்காக மன்னிக்க வேண்டுகிறேன். இதற்கு உண்மைத்தமிழனின "ஹெல்மெட் அவசியமா..?" எனும் கட்டுரைதான் காரணம். உண்மைத்தமிழன் அவர்களின் பல அறிவுபூர்வமான, ஆக்கபூர்வமான கட்டுரைகளை கண்டு நான் வியந்திருக்கிறேன். பதிவுலகில் அவர் ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கி வருகிறார். ஆனால், தலைக்கவசம் அணிவது குறித்த அவரது கட்டுரை அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. இப்படி பொறுப்பற்ற கட்டுரையை அவர் எழுதியிருப்பது ஒரு வாய்ப்புக்கேடான நிகழ்வு.

சாலைவிபத்துகள் - சாதாரண நிகழ்வா?

உலகெங்கும் சாலைவிபத்துகளில் ஆண்டுக்கு 13 லட்சம் பேர் சாகிறார்கள். 5 கோடி பேர் காயமடைகின்றனர். அதில் பலர் நிரந்தரமாக உடல் உறுப்புகளை இழக்கின்றனர். இவை அனைத்தும் தவிர்க்கக் கூடியவை.

உலகிலேயே மிக அதிகமானோர் சாலைவிபத்துகளில் பலியாகும் நாடு இந்தியா. இங்கு 2009 ஆம் ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 27 ஆயிரம்பேர் சாலைவிபத்துகளில் இறந்துள்ளனர். இந்திய அளவில் மிக அதிக எண்ணிக்கையிலான விபத்துகள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. 2009 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த 60,794 விபத்துகளில் 13,746 விபத்துகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.

அதாவது ஆயிரம் இந்தியர்களில் 57 பேர்தான் தமிழ்நாட்டில் வசிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் நடக்கும் 1000 சாலைவிபத்துகளில் 144 விபத்துகள் தமிழ்நாட்டில் நடக்கின்றன.

அகில இந்திய மாநகரங்களில் புதுதில்லிக்கு அடுத்ததாக அதிக விபத்துகள் நடக்கும் மாநகரம் சென்னை. இங்கு 2010 ஆம் ஆண்டில் சாலைவிபத்துகளில் 1415 பேர் இறந்துள்ளனர்.
சாலைவிபத்துகள் அரசின் குறைபாட்டால் நேர்பவை. இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு இதனை புரிந்துகொள்ள முடியும். உலகில் சாலை விபத்துகளை கணக்கிட - ஒரு லட்சம் வாகனங்கள் சாலையில் ஓடினால், அதனால் ஒரு ஆண்டில் எத்தனைபேர் இறக்கின்றனர்? - என்பதை வைத்து கணக்கிடுகின்றனர். இதன்படி நெதர்லாந்து நாட்டில் ஒரு லட்சம் வாகனங்களுக்கு 5 பேர் சாலைவிபத்தில் இறக்கிறார்கள். இந்த எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் 8 பேர், சீனாவில் 56 பேர். ஆனால் இந்தியாவில் 146 பேர்!

தலைக்கவசம் - சாலைவிபத்து இறப்பை தடுக்கும் மிக முக்கிய நடவடிக்கை.

சாலைவிபத்துகளால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க நான்கு முக்கிய நடவடிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. அவை, 1. வேகக்கட்டுப்பாடு, 2. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுத்தல், 3. தலைக்கவசம், 4. மகிழுந்துகளில் வார்ப்பட்டைக் கட்டாயம் - ஆகியனவே அந்த நடவடிக்கைகள் ஆகும். இதுகுறித்த உலக சுகாதார நிறுவன அறிக்கை இதோ: GLOBAL STATUS REPORT ON ROAD SAFETY

தலைக்கவசம் எனும் ஒற்றை நடவடிக்கை மூலம் இருசக்கர மோட்டார் வாகனங்களில் செல்வோரின் சாலைவிபத்து மரணத்தில் 42% இறப்புகளை தடுக்க முடியும், 69% தலைக்காயத்தை தடுக்க முடியும்.
"Head injuries represent the most devastating injury subcategory for motorcyclists. Victims who survive a head injury often suffer brain damage that impedes their ability to continue as a breadwinner, and in fact may require a lifetime of personal care that can drain resources from already impoverished families.


The logic for using helmets to address this issue is straightforward: helmet use makes a difference. A 2005 Cochrane Study highlights that use of a helmet reduces risk of a fatality by an average of 42% and of severe injury by 69%. By extension, high rates of helmet use lead to fewer deaths, shorter hospital stays, and speedier recoveries, all of which reduce the economic burden on society, and the emotional burden on families. Despite these simple truths, helmet use remains low in many countries." http://www.helmetvaccine.org/about/challenge.html

2009 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்றவர்களில் 3251 பேர் மரணமடைந்துள்ளனர் என்கிறது தேசிய குற்ற ஆவணப்பிரிவு. தலைக்கவசம் இவர்களில் பலரது உயிரைக்காப்பாற்றி இருக்கும்.

//விபத்துக்கள் ஏற்படுவதும் வாழ்க்கையில் சகஜம்தானே. விபத்து என்பதே தற்செயலாக நடப்பதுதான். இந்த விபத்தால் ஒருவன் வாழ்க்கை கதை முடிகிறது என்றால் அவன் காலன் வசம் போய்விட்டான் என்று பொருள்.


"இல்லை. இல்லை.. காலனை வெல்வோம்.. காப்பாற்ற ஆயுதம் உண்டு. அணிந்து கொள்ளுவோம்.." என்று மனிதர்களாகிய நாம் அவ்வப்போது கூக்குரலிடுகிறோம். காரணம், நமக்குள் இருக்கும் வாழ்க்கையின் மீதான ஆசை. அப்படி ஒரு ஆசைதான் இந்த ஹெல்மெட் மேட்டர்.// என்கிறார் உண்மைத்தமிழன்.

சாலை விபத்துகளை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள் முடியாது. இப்போது உலகெங்கும் சுமார் 13 லடசம் பேர் ஆண்டுதோரும் சாலை விபத்துகளில் இறக்கின்றனர். இதில் அதிகமானோர் அதிக வாகனங்கள் உள்ள மேலைநாடுகளில் இறப்பதில்லை. 90% விபத்துகள் ஏழை நாடுகளில்தான் நேருகின்றன. அதிலும் இந்தியா உலகில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

இதை இப்படியே விட்டால் 2030 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 24 லட்சம் பேராக இறப்புகள் அதிகரிக்கும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. இன்று உலகின் அனைத்து மரணங்களுக்குமான காரணங்களில் 9 ஆவது இடத்தில் (மொத்த மரணத்தில் 2.2%) உள்ள சாலை விபத்துகள் 2030 ஆம் ஆண்டில் 5 ஆவது காரணமாக (மொத்த மரணத்தில் 3.6%) மாறும் எனக் கணிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டுக்கு ஒரு கெட்ட செய்தி.

சாலை விபத்துகளில் 95% மனித தவறுகளால் நேருபவை. மனித தவறு இயல்பு, அரசாங்கம்தான் உரிய கொள்கைகள் மூலம் நிலைமையை மாற்ற வேண்டும். ஒருலட்சம் வாகனங்களுக்கு 5 பேர் மட்டுமே இறப்பு என்கிற நிலை நெதர்லாந்தில் உள்ளது என்றால், அது இந்தியாவில் மட்டும் ஏன் 146 பேராக இருக்க வேண்டும்? அரசாங்கமே இதற்கு காரணம்.

"என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?" 

"என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?" என்கிறார் உண்மைத்தமிழன். அவர் குறிப்பிடும் 'இவர்கள்' அரசாங்கம் ஆகும். தற்கொலை செய்வது கூட சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட ஒன்று. எனவே, எவரையும் இயல்புக்கு மாறாக சாக அனுமதிக்க முடியாது. அதிலும் சாலை விபத்தென்பது பலநேரங்களில் "தற்கொலை குண்டாக" நடக்கிறது. அதிவேகத்தில் செல்பவர்களும் குடித்துவிட்டு ஓட்டுபவர்களும் தாங்கள் மட்டும் சாகாமல், தற்கொலை குண்டு போல அடுத்தவரையும் கொலை செய்கிறார்கள்.

சாலைவிபத்து மரணங்கள் இளம் வயதில்/உழைக்கும் வயதில் நேர்கின்றன. 15 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டோரின் அகால மரணத்திற்கு முதல் காரணம் சாலைவிபத்துதான் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்த வயதில் ஒருவர் இறப்பது அரசாங்கத்திற்கு பெரும் இழப்பாகும். ஏனெனில் கல்வி, நலவாழ்வு என பலவழிகளிலும் அரசின் பணம் அவர்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. மேலும், அடிபட்டு சிகிச்சை அளிப்பதும் அரசின் பொறுப்பாகிறது, அரசின் பணம் செலவாகிறது. அடுத்து சட்டம் ஒழுங்கு - நீதிவிசாரணை என பல வழிகளில் தனிமனித விபத்துகள் அரசை பாதிக்கின்றன.

எனவே, உண்மைத்தமிழனின் கருத்தை புறந்தள்ளிவிட்டு, தயவு செய்து அனைவரும் தலைக்கவசம் அணியுங்கள்.

26 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உரிரைகாக் கூடிய எதையும் மக்கள் பொருட்படுத்ததது மிகவும் வேதனைதான்..

கண்டிப்பாக தலைகவசம் அணியவேண்டும்...

Kannan.S சொன்னது…

I agree...

Unknown சொன்னது…

அருமையான வாதம். உ.த வுக்கு உறைச்சா சரி

ராஜ நடராஜன் சொன்னது…

அருள்!உண்மைத் தமிழனின் கருத்து அரசு செயல்படும் முறையில் வந்த விரக்தி என நினைக்கிறேன்.ஆனால் அவர் வாதத்தில் நியாயமில்லை என உங்களால் கூற முடியுமா?

அவரது பதிவின் பின்னூட்டத்தில் ஹெல்மெட் அணிவதால் சாலையின் வாகன சப்தம்,பார்க்கும் நிலையின் கோணங்கள் மறைக்கப்படுவது போன்றவையும்,முக்கியமாக தமிழக தட்ப வெட்ப நிலைக்கு ஹெல்மெட் முகமூடி சரிப்பட்டு வராது என்பதோடு இந்தக் குறைகளுக்கு மாற்று வழிகளைக் கண்டு பிடித்து ஹெல்மெட் அணிவது அவசியம்.

அருள் சொன்னது…

@ராஜ நடராஜன்

தலைக்கவசம் குறித்த பலவிதமான கட்டுக்கதைகளில் இவையும் அடங்கும். தமிழ்நாட்டில் நிலவுவதுபோன்ற தட்பவெப்பம்தான் மலேசியாவிலும் நிலவுகிறது. அங்கு இருசக்கர வாகனங்களில் வாகன ஓட்டி மட்டுமின்றி பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயம். இங்கே தலைக்கவசத்தை அணியாத பலர் மலேசியாவில் அணிகின்றனர்.

இன்னும் பல கட்டுக்கதைகளுக்கு பதிலை இங்கே காணுங்கள்:

http://www.shoeirf1000.com/node/52

http://bikeadvice.in/motorcycle-helmets-interesting-facts-myths/

http://www.nhtsa.gov/people/injury/pedbimot/motorcycle/safebike/myths.html

http://www.smarter-usa.org/PDF%20DOCUMENTS/Myths_v_Facts_printerfriendly.pdf

http://www.msf-usa.org/downloads/helmet_CSi.pdf

ஜோதிஜி சொன்னது…

இன்னமும் அறிமுக கட்டுரை கூட எழுதாமல் இதென்ன அடம் அருள்? இந்த வாய்ப்பை கொஞ்சம் உருப்படியாக பயன்படுத்துங்க. வாழ்த்துகள்.

வில்லவன் கோதை சொன்னது…

/விபத்துக்கள் ஏற்படுவதும் வாழ்க்கையில் சகஜம்தானே. விபத்து என்பதே தற்செயலாக நடப்பதுதான். இந்த விபத்தால் ஒருவன் வாழ்க்கை கதை முடிகிறது என்றால் அவன் காலன் வசம் போய்விட்டான் என்று பொருள்.


"இல்லை. இல்லை.. காலனை வெல்வோம்.. காப்பாற்ற ஆயுதம் உண்டு. அணிந்து கொள்ளுவோம்.." என்று மனிதர்களாகிய நாம் அவ்வப்போது கூக்குரலிடுகிறோம். காரணம், நமக்குள் இருக்கும் வாழ்க்கையின் மீதான ஆசை. அப்படி ஒரு ஆசைதான் இந்த ஹெல்மெட் மேட்டர்.//
உளரலில் உச்சம்!
பாண்டியன்ஜி

Indian சொன்னது…

அருமையான இடுகை.

நற்குணத்தான் சொன்னது…

ஹெல்மெட் அணிவதால் சாலையின் வாகன சப்தம்,பார்க்கும் நிலையின் கோணங்கள் மறைக்கப்படுவது போன்றவையும்,முக்கியமாக தமிழக தட்ப வெட்ப நிலைக்கு ஹெல்மெட் முகமூடி சரிப்பட்டு/// அதுபோல தலைகவசம் பயன்படுத்த தேவை இல்ல முகத்த மறைக்கமா கூட பயன்படுத்தலாம் தைவான்ல 100 விழுக்காடு மக்கள் பயன்படுதுரர்கள் இங்கலாம் விபத்தை பார்ப்பது அபூர்வம் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்றுரர்கள் ஆனால் நம்ம மக்கள் எதயும் யோசிக்கமா குதர்க்கம் பேசுவதே பொழப்ப வட்சிகிட்ட எப்படி எல்லாத்துக்கும் வெளிநாட்டு மோகம் ஆனல் நல்ல செயல்களை பின்பற்ற மட்டும் யோசிக்கிறது

ஷர்புதீன் சொன்னது…

நட்சத்திர பதிவரானதர்க்கு வாழ்த்துக்கள்

boopathy perumal சொன்னது…

திரு.ராஜநடராஜன், துபாயில் அடிக்காத வெயிலா, மே, ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்கள் திறந்த வெளியில் வேலை செய்பவர்களுக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும்நரக வேதனைதான். ஆனால் இந்த சூட்டிலும் இரு சக்கர வாகன ஓட்டியும், பின்னால் அமர்ந்திருப்பவரும் கட்டாயாம் தலைக்கவசம் துபாயில் மட்டும்மல்ல, அரபுநாடுகள் எல்லாவற்றிலும் அணிந்துதான் ஆகவேண்டும். காப்பி பேஸ்ட் உ.த. தான் சென்னையிலுருந்து இப்படி ஒரு உளறல் பதிவு இடுகிறார்னா, திரு.நடராசன் நீங்களுமா அதற்கு ஆதரவு.
வடை பஜ்ஜின்னு மறுமொழி இடுபவர்களுக்கிடையே எல்லா பதிவுகளள்ம் ஆக்கபூர்வமான மறுமொழி இடுபவர் திரு.நடராசன் அவர்கள். சென்னை,மலேசிய, சிங்கப்பூரைவிட கடும் சூடுநிலவும் வளைகுடாநாடுகளில்நமதுநாட்டினர் கவசம் அணிந்துதான் வாகனம் ஒட்டுறாங்க.
ஊ ழல் இல்லாதநிர்வத்துக்கும், முன்னேறியநாடுகளுக்கும் துபை, சிங்கப்பூர்ன்னும் எடுத்துக்காட்டுபவர்கள் இது போன்றநல்ல சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
பூபதி
துபை

பெயரில்லா சொன்னது…

தலைக் கவசம் என்பது மிகவும் அவசியம் என்பேன். வாகனம் செலுத்துவோர் மட்டுமல்ல, வாகனத்தில் செல்வோர் அனைவருக்கும் தலைக் கவசம் மிகவும் அவசியம். தலைக் கவசம் ஏன் ? விபத்து ஏற்படும் போது CRITICAL HEAD COLLISION-ஐத் தவிர்க்கவே .... !!!

அடுத்தது - மிதிவண்டியில் செல்வோரும் கூட தலைக் கவசம் அணிதல் மிகவும் அவசியமானது .. குறிப்பாக மெயின் ரோடுகளில் செல்லும் மிதிவண்டி ஓட்டுநர்கள் கூட தலைக் கவசம் போடுவது அவசியம் என்பேன்.

நமது நகரங்களில் குறைவுப் பாடே.. சீரற்ற சாலைகளும், உச்சக்கட்ட நெருக்கடியுமே ஆகும்.. இதனையும் சீர் செய்தால் வாகன விபத்துக்கள் பெரிதளவுக் குறையும்.

சில முக்கிய சாலைகளை கட்டண சாலைகளாக மாற்றும் பட்சத்தில் வாகன நெருக்கடிகளை மேலும் குறைக்கலாம் .. சீரற்ற சாலைகளை சீர் படுத்துதலும் அவசியம்...

எது எப்படியானாலும் - தலைக் கவசம் என்பது மிகவும் அவசியமான ஒன்று .. அது சிறுக் குழந்தைக்கு கூட புரியும் .. நம்மவர்களுக்கு மட்டும் புரியாது இருப்பது வியப்பே !

துளசி கோபால் சொன்னது…

சாலை விதிகள்( அப்படி ஒன்னு இருக்கா இந்தியாவில்?) ஒழுங்கா எல்லோரும் பின்பற்றினாலே விபத்துக்கள் குறைஞ்சுரும்.

எங்கள் நாட்டில் (நியூஸி) வெறும் சைக்கிள் ஓட்டணுமுன்னாலும் தலைக்கவசம் அணியணும் சின்னக் குழந்தைகள் உட்பட.

பெயரில்லா சொன்னது…

தமிழ்மண நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் அருள் .. மெய் சொல்ல வேண்டும் எனில் தங்கள் வலைப்பதிவை முழுமையாக இனம் கண்டுக் கொண்டது இப்போது தான். அருமையான பதிவுகள் சகோ. தொடருங்கள்.

அண்ணா பல்கலைக் கழகங்கள் அனைத்தையும் நிர்மூலமாக்க இந்த அரசு எத்தனித்துள்ளது. அதுக் குறித்து பதிவுலகில் ஒரு சலனத்தையும் காணவில்லை சகோ. தாங்களும் இதுக் குறித்து எழுதினால் மகிழ்வேன்.

தமிழகத்தைப் பிடித்த புதிய பேய் - அண்ணா பல்கலைக் கழகத்திலுமா ?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ சொன்னது…

சஜோ.அருள்...

//"என் சாவைத் தடுக்க இவர்கள் யார்..?" என்கிறார் உண்மைத்தமிழன். அவர் குறிப்பிடும் 'இவர்கள்' அரசாங்கம் ஆகும். தற்கொலை செய்வது கூட சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட ஒன்று. எனவே, எவரையும் இயல்புக்கு மாறாக சாக அனுமதிக்க முடியாது.//---மிகச்சரியான பதில்..!

நான் கூட நேற்று இவ்வரிகளை படித்துவிட்டு... "அட..! இவரா இப்படி.. அரைகுறையாக...!" என்று ஆச்சர்யப்பட்டு, கமென்ட் கூட போட்டு சொல்ல பிரியம் இன்றி பதிவில் இருந்து வெளியே போய் விட்டேன்..!

அவசியமான நல்ல பதில் இடுகை, சகோ.அருள். நன்றி.

உண்மைத்தமிழன் சொன்னது…

நாகரிகமான முறையில் உங்களது எதிர் கருத்துக்களை முன் வைத்தமைக்கு மிக்க நன்றிகள் அருள்..!

THOPPITHOPPI சொன்னது…

//உண்மைத்தமிழனின் உளறல்//


உண்மைத்தமிழன் பதிவுலகில் மதிப்புமிக்க நபர். தலைப்பை நாகரீகம்மாக வைத்திருக்கலாம். தவறான, ஹிட்சுக்காகவே வைக்கப்பட்ட தலைப்பு.

உளறல் என்று சொல்லும்வகையில் அவர் ஏனோ தானோ என்று பதிவிடவில்லையே? தனது கருத்தை ஞயாயம்மாகதான் சொல்லி இருக்கிறார். அதில் உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் அங்கேயே குறிப்பிட்டு இருக்கலாம் இல்லை உங்களுடைய வலைப்பதிவில் நாகரீகம்மான தலைப்பில் பதிவிட்டு இருக்கலாம்.

தமிழ்மணம் "நட்சத்திர பதிவருக்கு" வாழ்த்துக்கள் .

erodethangadurai சொன்னது…

நல்ல பதிவு

ராஜ நடராஜன் சொன்னது…

தோழர் பூபதி பெருமாளின் பின்னூட்டத்திற்கு மறுமொழியாக இந்த பின்னூட்டம்...

கடந்த டிசம்பர் 25ம் தேதி சென்னையில் நடு இரவில் கண்டெய்னர் லாரியின் இரு சக்கரங்களுக்குமிடையில் இரு சக்கர வாகன ஓட்டி ஹெல்மெட்டோட மாட்டிக்கொண்டதை அந்த கணத்தில் பார்த்து விட்டும் நான் ஹெல்மெட் அணிய வேண்டாமென்று சொல்வேனா?அதில் உள்ள பிரச்சினையை களைவதற்கு வழி என்ன என்பதும் உண்மைத் தமிழன் கூற்றில் இருக்கும் எதிர் மறை கருத்தின் உண்மைகளை உணர வேண்டுமென்பதே எனது கருத்து.

ராஜ நடராஜன் சொன்னது…

பூபதி பெருமாள்!இன்னுமொரு மறுமொழி சொல்லி விடுகிறேனே!

கடந்த சில தினங்களாக தலைக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் ஒன்று வளைகுடா,அமெரிக்கா மாடல் இந்தியாவுக்குப் பொருந்தி வராதோ என்ற சந்தேகம்.இதற்கான காரணமாக ஜனத்தொகை விகித்தாச்சார வித்தியாசம்,சுதந்திரத்தை நாம் காணும் அளவுகோல் போன்றவையும்,சுகாதாரத்தை பேணும் நிலைகள் போன்றவைகளோடு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் மீதான அவநம்பிக்கைகளும் கலந்து கொள்ளும் போது நாட்டு மீதான விரக்தி எட்டிப்பார்க்கிறது.

அடிப்படைக்கட்டமைப்புக்கள் விரிவாக்கம்,சாலை விதிமுறைகள் மேம்படுத்தல் போன்ற நிலை உருவாகும் போதே விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க இயலும்.ஹெல்மெட் அணிவது தொட்டுக்க ஊறுகாய் மட்டுமே.

அருள் சொன்னது…

வருகைக்கு நன்றி

திரு. # கவிதை வீதி # சௌந்தர்
திரு.Kannan.S
திரு.jaisankar jaganathan
திரு.JOTHIG ஜோதிஜி
திரு.பாண்டியன்ஜி
திரு.Indian
திரு.ஷர்புதீன்
திரு.Ramaiyan Manikannan
திரு.boopathy perumal

சிநேகிதன் அக்பர் சொன்னது…

ஹெல்மெட்டின் அவசியத்தை மிக அழகாக எழுதியுள்ளீர்கள். இன்றைய சூழலில் மிகத்தேவையான பதிவு.

தலைப்பில் "உளறல்" என்ற வார்த்தை இல்லாமிலிருந்தால் இந்த பதிவு முழு நிறைவு பெற்றிருக்கும்.

நட்சத்திர வாழ்த்துகள்.

அருள் சொன்னது…

வருகைக்கு நன்றி

திரு.இக்பால் செல்வன்
திரு.துளசி கோபால்
திரு.முஹம்மத் ஆஷிக் 'Citizen of World'
திரு.ஈரோடு தங்கதுரை

அருள் சொன்னது…

THOPPITHOPPI

//உண்மைத்தமிழன் பதிவுலகில் மதிப்புமிக்க நபர். தலைப்பை நாகரீகம்மாக வைத்திருக்கலாம். தவறான, ஹிட்சுக்காகவே வைக்கப்பட்ட தலைப்பு.//

உண்மைத்தமிழன் கூறியது...

//நாகரிகமான முறையில் உங்களது எதிர் கருத்துக்களை முன் வைத்தமைக்கு மிக்க நன்றிகள் அருள்..!//

"உளறல்" என்கிற வார்த்தையை தலைப்பில் வைத்தது நாகரீகக் குறைவு என்பது உண்மை. அதற்காக, முதல் வரியிலேயே மன்னிப்பு கேட்டுள்ளேன்.

தெரிந்தும் நாகரீகக் குறைவான வார்த்தையை ஏன் பயன்படுத்த வேண்டும்? என்ற கேள்வி எழலாம்! "தலைக்கவசம் தேவையா?" என்கிற கேள்விக்கு தேவைதான் என்பது மட்டுமே ஒரே பதிலாக இருக்க முடியும். இதற்கு மாற்றான கருத்தினை தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே அந்த தலைப்பு. வருந்துகிறேன். நன்றி.

அருள் சொன்னது…

ராஜ நடராஜன் கூறியது...

//அடிப்படைக்கட்டமைப்புக்கள் விரிவாக்கம்,சாலை விதிமுறைகள் மேம்படுத்தல் போன்ற நிலை உருவாகும் போதே விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க இயலும்.//

சாலைவிபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தேவை என்பது உண்மைதான். குறிப்பாக, போதுமான நடைபாதை, அதிக பேருந்து, தொடர்வண்டி போன்ற பொது போக்குவரத்து வசதிகள், தெளிவான சமிஞைகள் போன்ற பலவும் தேவை.

கூடவே, தெளிவான கொள்கை, விதிகள் - விதிகளை உறுதியாக செயல்படுத்துதல் ஆகியன மிக முக்கியமாகும்.

அதுமட்டுமல்ல, வாகன வடிவமைப்பில் பெரிய அளவில் மாற்றம், திருத்தம் தேவை. குடி போதையில் வாகனத்தை ஓட்டாமல் தடுக்க நுட்பங்கள் உள்ளன. ஒரே நிறுவனத்தின் வாகனம் அமெரிக்காவில் நடக்கும் விபத்தில் நொறுங்காது, தமிழ்நாட்டில் நடக்கும் விபத்தில் நொறுங்கும் - காரணம் தரத்தில் வேறுபாடு.

இப்படி பலவிதமான நடவடிக்கைகள் தேவைதான் - அவற்றில் தலைக்கவசம் முக்கியமான ஒன்று. இதில் 'முட்டை முதலில் வந்ததா, கோழி முதலில் வந்ததா' என்பது போன்ற வாதங்கள் தேவையற்றவை. ஏதாவது ஒருபுள்ளியில் தொடங்க வேண்டும். அது தலைக்கவசமாக இருக்கலாம்.

Amudhavan சொன்னது…

தலைக்கவசம் பற்றிய தங்கள் கருத்துக்கள் சரியே.'அடிப்படைக் கட்டமைப்புக்கள் விரிவாக்கம், சாலை விதிகளை மேம்படுத்துதல்....' இவற்றையெல்லாம் புதிதாக உருவாக்கும் சாலைகளில் வேண்டுமானால் செய்யலாம். நம்முடைய இந்திய நகரங்களில் முக்கால்வாசி சாலைகள் கிட்டத்தட்ட நெருக்கடி மிகுந்த சந்துக்கள்தானே...அதிலும் டூவீலர் ஓட்டுபவர்கள் எப்படிப்பட்ட மனப்பாங்கினர்(எல்லாரையும் சொல்லவில்லை) என்பதும் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான். சிலபேர் டூவீலர்களில் போகும்போது நடந்துசெல்கிறவர்கள்தாம் தலைக்கவசம் அணிந்துசெல்லவேண்டும் என்ற நிலைமையும் இருக்கிறது.......'என் சாவைத்தடுக்க இவர்கள் யார்?' என்பதெல்லாம் மிகவும் பொறுப்பற்ற வாதமாகத்தான் தோன்றுகிறது. இந்தக் கேள்வியின்படி உலகிலுள்ள எல்லா ஆஸ்பத்திரிகளையும்கூட மூடிவிடலாம்தான்......நட்சத்திரப் பதிவரானதற்கு வாழ்த்துக்கள் அருள்!