Pages

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

தூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா? 

"3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவருவதாக முதல்வர் தெரிவித்தார். பேரவையில் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. கருணை மனுக்களை பரிசீலித்து குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்கும்படி இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பேரவைத் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உடனே தெரிவிக்கப்பட்டது." என செய்திகள் தெரிவிக்கின்றன.

"கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு கூறு 257 (1)-ன்படி கட்டளையிடுகிறது" என 29.08.2011இல் சொன்னார் முதலமைச்சர்.

ஆனால், அந்த நிலையிலேயே நிற்காமல் மறுநாளே - "3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி" தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நிகழ்வு வரவேற்க தக்கதாகும். அதிலும் தூக்கில் போடலாம் என முதலில் பரிந்துரைத்தவர் கலைஞர்தான் என்கிற நிலையில் இது வரவேற்க தக்க முடிவாகும்.

முதலமைச்சருக்கு அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சுவது ஏன்? 

"கருணை மனுக்களை பரிசீலித்து குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்கும்படி இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது" என சட்டமன்ற தீர்மானம் கூறுவது போதுமானதுதானா? என்கிற ஐயம் எழுகிறது. ஏனெனில், இந்திய அரசியல் அமைப்பில் நடுவண் அரசுக்கும் மாநில அரசுக்கும் சம உரிமை அளிக்கப்பட்டுள்ளது. 
தூக்குதண்டனையை குறைக்க தமிழக ஆளுநர் மறுத்த பின்னர் குடியரசு தலைவரும் மறுத்துள்ளார் என பேசுவது சரியான தகவல் அல்ல. ஒரு வழக்கில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் மாற்றுவது போன்ற நிகழ்வாக இதனைக் கருதமுடியாது. அதாவது, ஆளுநருக்கு மேல் அதிகாரம் படைத்தவராக இந்த விடயத்தில் குடியரசுத் தலைவர் இல்லை.

தூக்கு தண்டனையை எதிர்நோக்கும் கைதிக்கு அதிலிருந்து தப்பிக்க இரண்டு வாய்ப்புகள் உள்ளன. 


1. அரசியல் அமைப்பின் 161 ஆம் பிரிவின் படி ஆளுநரிடம் கருணை கோருவது.


2. அரசியல் அமைப்பின் 72 ஆம் பிரிவின் படி குடியரசு தலைவரிடம் கருணை கோருவது. 


இவை இரண்டும் தனித்தனியான சமமான அதிகாரங்களாகும். ஒன்றைவிட மற்றது உயர்வானது எனக்கூற முடியாது.

அதாவது - அரசியல் அமைப்பின்படி ஆளுநரும் குடியரசு தலைவரும்  இந்த விடயத்தில் சம அதிகாரம் உள்ளவர்கள். இருவரில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தூக்குதணடனையை குறைக்க முடியும். இதில் ஆளுநரின் முடிவு என்பது மாநில அமைச்சரவையின் முடிவு என்றும் குடியரசுத் தலைவரின் முடிவு என்பது நடுவண் அமைச்சரவையின் முடிவு என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இங்கிலாந்து நாட்டில் மன்னருக்கும், அமெரிக்காவில் அதிபருக்கும் உள்ள மன்னிக்கும் அதிகாரம் இந்தியாவில் ஆளுநருக்கும் குடியரசு தலைவருக்கும் உண்டு என்கிறது உச்ச நீதிமன்றம்:

"The view of the language of Articles 72 and 161, which was similar to that used in Section 295 (2) of the Government of India Act, 1935 and similar to that of American Constitution, the President and the Governors of the States in India had the same powers of pardon both in nature and effect, as is enjoyed by King in Great Britain and the President in the United States. Therefore, in India also the pardoning power can be exercised before, during, or after trial."

K.M. Nanavati vs The State Of Bombay on 5 September, 1960


இந்திய கூட்டாட்சி முறையில் மாநில அரசுக்கு தூக்கு தண்டனையைக் குறைக்க எல்லா அதிகாரமும் உண்டு. இதுகுறித்து பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. அதுகுறித்து விரிவாக இங்கே காண்க: CAPITAL PUNISHMENT AND STATUTORY FRAME WORK IN INDIA Krishna Kumari

குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்தாலும் மாநில அரசினால் தூக்கு தண்டனையை குறைக்க முடியும் என்று பி.யு.சி.எல் தனது கோரிக்கை மனுவில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

"The fact that an earlier clemency petition was rejected by the President of India on the advice of the Central Council of Ministers, is not and cannot be an obstacle to the Government of Tamil Nadu to consider afresh the issue of commutation of the death sentences of Santhan, Murugan and Perarivalan. Stated differently, the State Government on its own volition u/s 54 r/w 55 A IPC, s.433 (a) & 432(7) Cr.P.C and also Art. 161 of the Constitution of India can independently commute their death sentence to life imprisonment.


The preservation of the statutory powers of the State Government and the Constitutional power under Art. 161 is also in accordance with the federal structure of the Constitution."

அதனை இங்கே காண்க: Petition to Commute the death sentence of  Santhan, Murugan and Perarivalan PEOPLE'S UNION FOR CIVIL LIBERTIES (PUCL)- TAMIL NADU

இந்நிலையில், "கவர்னர், ஜனாதிபதியால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கோ, நிறுத்தி வைப்பதற்கோ எனக்கு அதிகாரம் இல்லை,'' என முதலமைச்சர் கருதுவது அரசியல் அமைப்பு அளித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்த மறுக்கும் செயலாகவே கருதமுடியும்.

உண்மையில் ஆளுநர் கருணை மனுவை முன்பே நிராகரித்தார் என்று கூறுவது தவறான வாதம். மாறாக, முன்பிருந்த கலைஞரின் அமைச்சரவைதான் கருணைமனுவை நிராகரித்தது. இப்போதுள்ள அமைச்சரவை இந்த முடிவை எளிதாக மாற்றிவிட முடியும். 

தமிழக முதலமைச்சர் "கருணை மனுக்களை பரிசீலித்து குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்கும்படி தீர்மானம்" கொண்டுவந்தது சரியான செயல்தான். ஆனால், போதுமானது அல்ல. இதனுடன் சேர்த்து தமிழக அமைச்சரவையில் இதனை ஒரு முடிவாக எடுத்து தமிழக ஆளுநருக்கு அனுப்பினால் - தூக்கு தண்டனை நிச்சயமாகக் குறைக்கப்பட்டு விடும். ஏனெனில், மாநில அமைச்சரவை முடிவைத்தான் ஆளுநர் எடுக்க வேண்டும் என ஏற்கனவே உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநில முதலமைச்சர் தனது அதிகாரத்தை பயன்படுத்த முன்வரவேண்டும்.

9 கருத்துகள்:

Prabu Krishna சொன்னது…

இப்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் இன்னும் முயற்சிக்க உதவும்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சட்டமன்றத்திற்க்கு அந்த அதிகாரம் இருக்கிறதுதான் ஆனால் அம்மா அவர்கள் அந்த மூவரின் தண்டையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது...

அதனுடைய வெளிப்பாடுதான் நேற்றைய அறிக்கை...

இன்று எப்படியும் நீதிமன்றத்தில் தண்டனை தள்ளிவைக்க நேரிடும் என்று தெரிந்துக் கொண்டு மற்றும் மாநிலம் முழுவதும் எழுந்த போரட்டம் காரணமாகவே இன்றை தீர்மானம்...


அம்மா அவர்களின் இரட்டை வேடம் இதன் மூலம் வெளிவந்து விட்டது...

தண்டனை குறைய இன்னும் போராட்டங்கள் தேவை...

அந்நியன் 2 சொன்னது…

இன்று எப்படியும் நீதிமன்றத்தில் தண்டனை தள்ளிவைக்க நேரிடும் என்று தெரிந்துக் கொண்டு மற்றும் மாநிலம் முழுவதும் எழுந்த போரட்டம் காரணமாகவே இன்றை தீர்மானம்...


அம்மா அவர்களின் இரட்டை வேடம் இதன் மூலம் வெளிவந்து விட்டது...

தண்டனை குறைய இன்னும் போராட்டங்கள் தேவை...

இதைத்தான் நான் ஒரு வாரமாக கத்தி கொண்டு இருக்கின்றேன் மக்கள் சக்தியை திரட்டுங்கள் என்று.

அழகான ஒரு பதிவு வாழ்த்துக்கள் சகோ

நீதிக்கு குரல் கொடுப்போம்.

தமிழ்வாணன் சொன்னது…

சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குடியரசு தலைவரின் முடிவை மாற்றாத ?
டாக்டர் ராமதாஸ் in http://thatstamil.oneindia.in/news/2011/08/29/jayalalitha-can-still-save-3-convicts-aid0091.html :
இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி பெருமை தேடிக் கொண்ட முதல்வர் அவர்கள், இம்மூவரின் தூக்கு தண்டனையையும் இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

காந்தி பனங்கூர் சொன்னது…

இந்த சட்டங்கள் பற்றி முதலமைச்சருக்கு தெரியாமலா இருக்கும்? அப்படி தெரிந்திருந்தால் ஏன் அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்று தெரியவில்லை. மூன்று பேரின் உயிரை காப்பாற்றி தமிழக மக்களீடம் நல்ல பெயரை வாங்க்கிகொள்ள வேண்டியதுதானே. இந்த உலக மகா அரசியல் நாடகத்தை புரிந்துக்கொள்ள தனியாக ஒரு பாடம் படிக்கனும் போல.

தங்களின் பதிவு ஒவ்வொரு சட்டத்தை பற்றியும் தெள்ள தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி
www.panangoor.blogspot.com

ராஜ நடராஜன் சொன்னது…

தொடுப்பை இப்பொழுதுதான் கவனித்தேன்.சட்டவியல் சார்ந்தவர்கள் இது குறித்து கருத்து பதிவு செய்தால் பயனுடையதாக இருக்கும்.

ராஜ நடராஜன் சொன்னது…

//
அம்மா அவர்களின் இரட்டை வேடம் இதன் மூலம் வெளிவந்து விட்டது...

தண்டனை குறைய இன்னும் போராட்டங்கள் தேவை...//

அந்நியமாக ஏன் யோசிக்கிறீர்கள்:)ஜெயலலிதா முதல் நாள் அறிக்கைக்குப் பின் மறுநாள் தீர்மானம் சரியான நடவடிக்கையே என்பேன்.முதல் நாள் எதிர்ப்பாளர்களை குஷி படுத்தியது போலும் ஆச்சு.மறுநாள் காரியம் சாதிச்சது போலும் ஆச்சு.என்ன சொல்றீங்க அந்நியன்?

ராஜ நடராஜன் சொன்னது…

இப்போதைய வை.கோ,நெடுமாறன்,மருத்துவர் ராமதாஸ்,திருமா,கருணாநிதி(?)ஒட்டுமொத்த குரலை வரவேற்கிறேன்.இதே மாதிரியான ஒற்றுமை குரல் 2008-2009 காலகட்டத்தில் ஒலித்திருந்தால் வரலாற்றுப் பழிகளை நீக்கியிருக்கலாம்.

Unknown சொன்னது…

தூக்குத் தண்டனைக்குத் தூக்கு போடவேண்டும் என்பதே என் கருத்து. நெருக்கமான நாட்கள் எல்லாம் இலங்கை இதழ்களின் செய்திகளையே மீள் பதிவு செய்துள்ளேன்.