Pages

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?

"முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

இது குறித்து "சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது. இதை எவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படும். அவ்வளவு தான்." என்று குர்ஷித் கூறினார் என செய்திகள் கூறுகின்றன.
இந்திய அரசியல் அமைப்பின் 72 ஆம் பிரிவின் கீழ் நடுவண் அமைச்சரவை முடிவைத்தான் குடியரசு தலைவர் பின்பற்ற முடியும். மாநில சட்டமன்ற தீர்மானம் குடியரசு தலைவரைக் கட்டுப்படுத்தாது. மூன்று பேரின் தூக்கு தண்டனையில் நடுவண் அமைச்சரவை முடிவு என்ன என்பது எல்லோரும் அறிந்ததுதான்.
அதேநேரத்தில், இந்திய அரசியல் அமைப்பின் 161 ஆம் பிரிவின் கீழ் தூக்கு தணடனையை மாநில ஆளுநரும் குறைக்கலாம் என்பதும், மாநில ஆளுநர் மாநில அமைச்சரவை முடிவையே பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் - தமிழ்நாடு அரசுக்கு எளிய வாய்ப்பை அளித்துள்ளது.

“The power under Articles 72 and 161 of the Constitution can be exercised by the Central and State Governments, not by the President or Governor on their own. The advice of the appropriate Government binds the Head of the State." 
Maru Ram Etc. Etc vs Union Of Lndia & Anr on 11 November, 1980

"கருணை மனு இந்திய அரசமைப்புச் சட்டம் 72-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகூறு 161-ன்படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்த மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை" என தமிழக முதலமைச்சர் கூறுகிறார். இது சரியான வாதம் அல்ல. அரசியல் அமைப்பில் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மாற்ற வேண்டுமானால், மீண்டும் அரசியல் சாசனத்தைதான் திருத்த வேண்டும். வெறும் கடிதம் அல்லது உத்தரவு மூலமாக அரசியல் அமைப்பை நடுவண் அரசு மாற்ற முடியாது. 


எனவே,  மூன்று பேரும் மீண்டும் மாநில ஆளுநருக்கு கருணை மனு அளிக்கச் செய்து, அந்த மனு மீது மாநில அமைச்சரவை தூக்குதண்டனையைக் குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்தால் - மூன்று பேரின் உயிரும் காப்பாற்றப்பட்டுவிடும். 

இது அரசியல் அமைப்பு மாநில அரசுக்கு அளித்துள்ள அதிகாரம் என்பதால், நடுவண் அரசு இதில் தலையிட முடியாது.

காண்க:

13 கருத்துகள்:

ரா: அரசகுமாரன் சொன்னது…

Great information thank you...

Prabu Krishna சொன்னது…

அவர்களின் ஒரே குறிக்கோள் தமிழன் எவனும் உயிரோடு இருக்கக் கூடாது. இருந்தால் அவன்களுக்கு ஜால்ரா போடவேண்டும்.

சார்வாகன் சொன்னது…

அருமையான தேவையான் விஷயம் சொல்லி இருக்கிறீர்கள்.
பொதுவாக நம் அரசியல்வாதிகள் எப்படியாவது பொறுப்பேற்காமல் தப்பித்துக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். எதனையும் மக்கள் போராடும் போது மட்டும் வேறு வழியில்லாமல் நிறை வேற்றுகின்றனர்.
இன்னும் நம்பிக்கை இருக்கிறது.அனைத்து வேறுபாடுகளையும் மறந்து குரல் கொடுப்போம்!!!!!!!!.
நன்றி

ராஜ நடராஜன் சொன்னது…

இப்போதைக்கு 2 மாத கால அவகாச இடைவெளி உள்ளது.சட்ட முறைகளின் படி மக்கள் ஆதரவுடன் இதனை மேலும் எதிர்கொள்வோம்.

சட்டநுணுக்கங்களின் இருபக்க வாதத்தையும் முன்வைத்தற்கு நன்றி.

settaikkaran சொன்னது…

முன்னாள் அட்டார்னி ஜெனரல் சாலி சொராப்ஜியின் பேட்டியை இப்போதுதான் பார்த்தேன். இந்த மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற (அ) கருணை மனுவை நிராகரிக்க ஏன் இத்தனை வருடங்கள் ஆயின என்று அறிந்து கொள்ளவே சென்னை உயர்நீதி மன்றம் இடைக்காலத்தடை விதித்திருக்கிறதாம். :-(

சுதா SJ சொன்னது…

அட நமக்கு தெரியாத தகவல்,
தேங்க்ஸ் பாஸ்

சுதா SJ சொன்னது…

இப்போது இந்த தகவல் அவசியமாதுதான் பாஸ்.
இனி அவ மூவர் விடையத்தில் என்ன நடக்க போகுதோ..
முடிவெடுப்பவர்கள் மட்டும் அல்ல
அதற்காக பாடுபடுபவர்கள் கூட சட்டத்தை தெரிந்து வைத்து இருப்பதுதான்
மிக அவசியமானது.

காந்தி பனங்கூர் சொன்னது…

சரியான தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.
www.panangoor.blogspot.com

அருள் சொன்னது…

நன்றி

திரு.ரா. ராஜ்குமார்,
திரு.rabu Krishna (பலே பிரபு),
திரு.சார்வாகன்,
திரு.ராஜ நடராஜன்,
திரு.சேட்டைக்காரன்,
திரு.துஷ்யந்தன்,
திரு.காந்தி பனங்கூர்

அருள் சொன்னது…

டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் என்று நினைக்கிறேன்:

சுப்பிரமணிய சுவாமி பேசும்போது, "தமிழ்நாட்டில் ஒருசிலர்தான் இதனைப் பெரிதுபடுத்துகிறார்கள். மற்றபடி மக்களிடத்தில் இது ஒரு பெரிய விடயமாக இல்லை" என்று சொன்னார்.

சோ பேசும்போது "இராசீவுடன் உயிரிழந்த மற்ற குடும்பத்தினர் இதனை மன்னிப்பார்களா?" என்று கேட்டார். (இந்த கேள்வியை சங்கராச்சாரியரால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் சங்கரராமன் மனைவியிடம் கேட்பாரா? என்று தெரியவில்லை)

வட இந்திய ஊடகங்கள் தூக்கைத் தடுப்பது நீதியைத் தடுக்கும் செயல் என்பதாகவே பேசுகின்றன. இராசீவ் கொலை வழக்கை மற்றவர்களைவிட அதிகம் கவனித்தவர்கள் தமிழர்கள். இங்கு மிகப்பெரும்பான்மையான மக்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தக் குற்றத்தை செய்யவில்லை என்றே கருதுகின்றனர். இத்தகைய ஒரு பார்வை வட இந்திய ஊடகங்களிடம் கொஞ்சமும் இல்லை.

தமிழக மக்களின் கருத்து என்றால் அது சோ, சுப்பிரமணிய சாமியின் கருத்தாக பார்க்கப்படுவதும் வியப்பளிக்கிறது.

ஒரே தேசம் என்றால் - அது ஒரேவிதமான சமூக மனப்பாங்குடைய மக்களைக் கொண்டதாக இருக்கும் என்பார்கள். ஆனால், இந்த விடயத்தில் தமிழக மக்களின் மனப்பாங்கிலிருந்து இந்திய மக்களின் மனப்பாங்கு மாறுகிறதா?

Unknown சொன்னது…

விளக்கமான தகவலுக்கு நன்றி.
http://mugamoody.blogspot.com/2011/08/blog-post_31.html

தாறுமாறு சொன்னது…

"சோ பேசும்போது "இராசீவுடன் உயிரிழந்த மற்ற குடும்பத்தினர் இதனை மன்னிப்பார்களா?" என்று கேட்டார். "


அருள்,
இந்தக் கேள்வியில் லாஜிக்கலாகவும், மனிதாபிமான ரீதியிலும் என்ன தவறு? அதில் இறந்த ஒரு பொலிஸ் அதிகாரியின் குடும்பம் எனக்குத் தெரியும். அவர்கள் யாருக்கும் இந்த மன்னிப்பில் விருப்பம் இல்லை. இதுபோல் எத்தனை குடும்பங்களோ? இதற்கு உங்கள் பதில்?

சூரி பகலவன் சொன்னது…

இது நேற்று இன்று பிரச்சனை அல்ல. 2000 ஆண்டுகால பிரச்சனை. ஓரு லட்சத்தி எழுபத்தந்து ஆயிரம் பேரை பலி கொடுத்தவர்கள் நாம். இந்த மூன்று பேரின் இழப்பை தாங்கிக் கொள்ளமுடியும். அது போல் மூவருக்கும் இதில் சம்பந்தம் இல்லை என்று அவாளுக்கும் தெரியும். அதனால் மூவரையும் விடுவிப்பது அவர்களுக்கு பெரிய விஷயம் இல்லை. விடுதலை செய்ய முடியும்.

அதனால் அவாளுக்கும் நமக்கும் இடையே இருக்கும் உண்மையான பிரச்சனை என்ன?

முவரையும் தூக்கில் போட்டால் இனி தமிழ்நாட்டில் யாரும் தமிழ்-தமிழன் என்று பேச பயப்படுவார்கள். அதுவும் நிரபராதி என்று தெரிந்தபிறகும் தூக்குதான் என்றால் இன்னும் பெரிய பீதி உண்டாகும். பார்பனியம் பற்றியும் இந்திய ஏகாதிபத்தியம் பற்றியும் எந்த கேள்வியும் இல்லாது பாரதமாதா பஜனை நன்றாக நடைபெறும் அதுதான் அவாளின் விருப்பம்.

நமக்கு இந்த போராட்டத்தில் தோற்றால் இனி அவாளுக்கு நிரந்தர அடிமைகள் தான். அதனால் ஏதோ நிரபராதிகளுக்காக மட்டுமல்லாமல் வரலாற்றுவழி வரும் உளவியளை,சூதை உள்வாங்கிக் கொண்டு போராட வேண்டும்