Pages

ஞாயிறு, செப்டம்பர் 30, 2012

தி இந்துவில் வெளியான அநியாய விளம்பரம்: பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

மலேரியா கொசுவை இன்னும் ஒழிக்க முடியவில்லை. அதற்குள் மருத்துவமனைகளில் எலிகளை ஒழிப்பது நியாயம் தானா? என்று எலிகள் கூட்டமைப்பு விளம்பரம் கொடுத்தால் எப்படி இருக்கும்?

சாலை விபத்துகளால் அதிகமானோர் சாகிறார்கள். அதனை முழுவதுமாக தடுக்காமல், எதற்காக எய்ட்சை ஒழிக்கிறீர்கள்? என்று எச்.ஐ.வி கிருமிகள் கூட்டமைப்பு விளம்பரம் கொடுத்தால் எப்படி இருக்கும்?

நல்ல வேளையாக எலிகளும் எச்.ஐ.வி கிருமியும் மனிதர்கள் இல்லை. அவற்றுக்கெல்லாம் கூட்டமைப்பு சங்கம் இல்லை. இருந்திருந்தால் - தி இந்து பத்திரிகையில் கீழே உள்ளது போன்று விளம்பரம் வந்திருக்கும்!
குட்கா - பான் மசாலா தயாரிப்பாளர் கூட்டமைப்பின் விளம்பரம் 
(30.09.2012  தி இந்து மற்றும் டெக்கான் க்ரோனிக்கல்). 

சிகரெட்டை தடை செய்யாமல், குட்காவை தடைசெய்தது நியாயமா? என்று கேட்கின்றனர். பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதை வேண்டுமானாலும் விளம்பரப்படுத்தலாம். தி இந்து மற்றும் டெக்கான் க்ரோனிக்கல் ஆகிய நாளிதழ்கள் அதனை தாராளமாக விளம்பரப்படுத்தும் (வாழ்க பத்திரிகா தர்மம்)

குட்கா - பான் மசாலா: கொடிய விஷம்
  • குட்காவில் 3095 நச்சு ரசாயனங்கள் உள்ளன. அவற்றில் 28 நச்சுக்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை.
  • குட்கா - பான் மசாலா ஆகியன வாய் மற்றும் பற்களில் மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்துகின்றன.
  • உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயக் கோளாறுகளுக்கு குட்கா வழி செய்கிறது. 
  • குட்கா - பான் மசாலாவால் பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
  • பெண்களையும் வயிற்றில் வளரும் சிசுவையும் குட்கா கடுமையாக பாதிக்கிறது.
  • உலக சுகாதார அமைப்பு குட்காவும் பான்மசாலாவும் புற்று நோயை ஏற்படுத்தும் பொருள் என தெளிவாக வகைப் படுத்தியுள்ளது.
குட்கா - பான் மசாலா போதைப் பாக்குகளை இந்தியாவின் 14 மாநிலங்கள் தடை செய்துள்ளன. இதனை எதிர்த்து மராட்டிய மாநிலம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், கேரளா ஆகிய மாநில உயர்நீதி மன்றங்களில் குட்கா நிறுவங்கள் வழக்குத் தொடுத்தன.

ஆனால், அனைத்து மாநில உயர்நீதி மன்றங்களும் "குட்கா - பான்மசாலா போதைப் பாக்குகளுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும்' என்று தீர்ப்பளித்துள்ளன.

இப்படிப்பட்ட நிலையில்தான் 30.09.2012 அன்று தி இந்து மற்றும் டெக்கான் க்ரோனிக்கல் ஆகிய நாளிதழ்களின் முதல் பக்கத்தில் கால்பக்க விளம்பரம் குட்கா - பான்மசாலாவுக்கு ஆதரவாக வெளியிடப்பட்டுள்ளது.

அதுவும், அக்டோபர் 2, மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு குட்கா - பான்மசாலாவைத் தடை செய்ய வேண்டும் என்று பசுமைத் தாயகம் கையெழுத்து இயக்கம் தொடங்கியதற்கு மறுநாள் இந்த அநியாய விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

குட்கா - பான் மசாலா படுகொலைகள்

2010 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 5, 56, 000 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். (தி இந்து செய்தி: Cancer killed 5.56 lakh in India in 2010) புற்றுநோய் தாக்குவதற்கான முதன்மைக் காரணமாக இருப்பது புகையிலை. ஆண்களில் 45 விழுக்காடு வரையிலும் பெண்களில் 20 விழுக்காடு வரையிலும் புற்றுநோய்க்கு காரணமாக இருப்பது புகையிலைப் பொருட்கள்தான்.

உலக அளவில் மிக அதிக வாய்ப்புற்று நோய் தாக்கப்படும் நாடாக இந்தியா உள்ளது. உலகின் ஒட்டுமொத்த வாய் புற்றுநோய் பாதிப்பில் 25 விழுக்காடு பாதிப்புகள் இந்தியாவில்தான் ஏற்படுகின்றது. இந்திய புற்றுநோய் பதிவேட்டின் படி நாட்டிலேயே அதிக வாய் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆட்பட்ட நகரமாக சென்னை அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாய், தொண்டை, கழுத்து புற்றுநோய் தாக்குவதற்கு பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைதான் 90 விழுக்காடு காரணமாகும். அதாவது பான்மசாலா, குட்கா, கைனி இல்லையென்றால் 90 விழுக்காடு வாய் தொண்டை, கழுத்து புற்றுநோய் தடுக்கப்பட்டுவிடும்.

இப்போதையக் கணிப்பின்படி சென்னையில் மட்டும் 2012 - 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 32 விழுக்காடு அளவிற்கு புற்றுநோய் தாக்குதல் அதிகமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. (தி இந்து செய்தி: Article predicts 32% increase in total cancer burden in Chennai) இதுபோல தமிழ்நாடு முழுவதும் புற்றுநோய் தாக்குதல் அதிகமாகிவருகிறது. ஆண்டுதோரும் புதிதாக 55,000 பேர் புற்றுநோயால் தாக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகப்பரிய ஆபத்தாகும்.

எனவே, தமிழ்நாட்டு மக்களை புற்றுநோயிலிருந்து பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. அதற்கான சாதகமான சூழலும் இப்போது ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை தடை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகள் 2011 இன் 2.3.4 ஆம் பிரிவில் பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களுக்கு தடையும் விதித்துள்ளது. (2.3.4: Product not to contain any substance which may be injurious to health: Tobacco and nicotine shall not be used as ingredients in any food products) எனவே, தமிழ்நாடு அரசுக்கு இப்போது பான்மசாலா, குட்காவைத் தடைசெய்ய முழு அதிகாரம் உள்ளது.

தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையர் இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதிமுறைகள் 2011 இன் 2.3.4 ஆம் பிரிவினை செயல்படுத்தி இப்போது உத்தரவிட்டால் போதும். அத்தகைய ஒரு சட்டபூர்வமான உத்தரவின் மூலம் தமிழ்நாட்டில் பான்மசாலா, குட்கா, கைனி உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்கள் மீதானத் தடை செயலுக்கு வந்துவிடும்.

அப்படிப்பட்ட ஒரு உத்தரவினை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும். மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைவரும் அதற்காக குரல் கொடுக்க வேண்டும்.

பத்திரிகைகள் பொறுப்புடன் விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்று குடிமக்கள் எதிர்பார்ப்பது நியாயம்தான். அதனை, பத்திரிகையாளர்கள்தான் வலியுறுத்த வேண்டும்.

விளக்கம் 1: தி இந்து விளம்பரம் விதிமுறைகளுக்கு எதிரானது.

விளம்பரங்களை முறைப்படுத்தும் ASCI (The Advertising Standards Council of India) அமைப்பு விளம்பர வழிகாட்டி நெறிகளை வகுத்துள்ளது. அதன்படி விளம்பரம் உண்மையைப் பேச வேண்டும் என்பது விதியாகும்.

Declaration of Fundamental Principles - ASCI Codes: “To ensure the truthfulness and honesty of representations and claims made by advertisements and to safeguard against misleading advertisements”

ஆனால், தி இந்துவில் வெளியான விளம்பரம் "சிகரெட் ஆரோக்கியமானது என்று 14 மாநிலங்கள் நம்புகின்றன" என உண்மையில்லாத கருத்தைக் கூறுகிறது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சிகரெட் ஆரோக்கியமானது என நம்பவில்லை. அவ்வாறு நம்பினால் அது அரசியல் சட்டத்திற்கு எதிரான கருத்தாகும். இந்திய நாடாளுமன்றத்தால் கொண்டுவரப்பட்ட COTPA 2003 சட்டம் சிகரெட் தீங்கானது என்று கூறும்போது, மாநிலங்கள் அதை எவ்வாறு மறுக்க முடியும்?

எனவே, ASCI விதிமுறைகளுக்கு எதிராக தி இந்து விளம்பரம் பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

விளக்கம் 2: குட்காவைத் தடை செய்ய வேண்டும் - சிகரெட்டை மட்டும் தடை செய்ய வேண்டாமா?

சிகரெட்டை தடை செய்ய வேண்டாம் என்று நாம் கூறவில்லை. இந்திய சட்டங்களில் இப்போது என்ன இருக்கிறதோ அதை பின்பற்றக் கோருகிறோம். இனிமேல் வரவேண்டிய புதிய சட்டங்களை அப்புறம் பார்க்கலாம்.

FSSAI சட்டத்தின் படி, உணவுப்பொருளில் புகையிலை இருந்தால் தடை செய்யப்பட வேண்டும். உணவுப்பொருளாக கருதப்படும் குட்காவில் புகையிலை இருப்பதால் அது தடை செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும்.

சிகரெட் ஒரு உணவுப்பொருளாக வகைப்படுத்தப்படவில்லை. எனவே, இப்போதைய FSSAI சட்டத்தால் சிகரெட் தடை செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் COTPA 2003 எனும் புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் சிகரெட் விளம்பரங்களை தடை செய்கிறது.

சிகரெட் உட்பட எல்லா புகையிலைப் பொருட்களையும் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பதே பசுமைத் தாயகத்தின் கோரிக்கை. ஆனால், அது சட்டமாக இன்னும் பலகாலம் ஆகலாம். எனவேதான், இப்போதைய சட்டங்களை முழுமையாகப் பின்பற்றக் கோருகிறோம்.

குட்கா - பான்மசாலாவைத் தடை செய்வது புகையிலைப் பொருட்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பதற்கு எதிரான கருத்து அல்ல.


தொடர்புடைய சுட்டி:

குட்கா - பான் மசாலாவுக்கு தடை: இதுவே தக்க தருணம்!

குட்கா - பான் மசாலாவால் பாதிக்கப்பட்டோர் அதுபற்றி என்ன சொல்கின்றனர் என்று இங்கே காண்க: 

http://www.vovindia.org/

புதன், செப்டம்பர் 26, 2012

இலங்கை அரசின் இனவெறி - ஐநா சபையில் எதிர்ப்பு!

ஜெனீவா - ஐநா மனித உரிமை அவையில் இலங்கைக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்ட பசுமைத்தாயகம் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இலங்கை மீதான ஐ.நா. தீர்மானம் 2012 மார்ச்சில் வந்த போது பசுமைத் தாயகம் பங்காற்றியது (அது குறித்து இங்கே காண்க).

அதன் தொடர்ச்சியாக ஐநா மனித உரிமை அவையில் இலங்கையில் நீதிக்கான தேவையை வலியுறுத்தும் தொடர் பணியில் பசுமைத் தாயகம் ஈடுபட்டுள்ளது.

18.09.2012 செவ்வாய் அன்று சிரியா குறித்த ஐ.நா. மனித உரிமைகள் அவையின் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பசுமைத் தாயகத்தின் பிரதிநிதி, யேல் சட்டப்பல்கலைக் கழகத்தின் தாஷா மனோரஞ்சன் - சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலையை விட, இலங்கையின் நிலை மோசமானது என சுட்டிக்காட்டினார். (ஐ.நாவில் தாஷா மனோரஞ்சன் பேச்சின் காணொலி வடிவத்தைக் இங்கே காண்க)

மீண்டும் 25.09.2012 செவ்வாய் அன்று இனஒதுக்கல், இனவெறி குறித்த ஐ.நா.மனித உரிமைக்குழு கூட்டத்தின் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பசுமைத் தாயகத்தின் பிரதிநிதி, தமயந்தி ராஜேந்திரன் - இலங்கையில் தொடரும்  இனஒதுக்கலையும் இலங்கை அரசின் இனவெறிச் செயல்பாடுகளையும் சுட்டிக்காட்டி, பன்னாட்டு சமூகத்தின் தலையீட்டைக் கோரினார்.

ஐ.நாவில் தமயந்தி ராஜேந்திரன் பேச்சின் காணொலி வடிவத்தைக் இங்கே காண்க:

ஐ.நாவில் தமயந்தி ராஜேந்திரன் பேச்சின் எழுத்து வடிவம்: 
Item 9 – General Debate: Racism, racial discrimination, xenophobia and related forms of intolerance.

Pasumai Thaayagam: Presenter: Dhamayanthi Rajendra

Thank you Madam President.  

We draw this Council’s attention to racism and intolerance in Sri Lanka against Tamils, Muslims and Christians.

Since the proclaimed end of the armed conflict in May 2009, the Sinhalese led government of Sri Lanka has accelerated its systematic discrimination against the Tamil speaking peoples living in the war-torn Sri Lanka.

Despite calls from the international community and the government’s own Lessons Learned and Reconciliation Commission report to de-militarize, the Sri Lankan army (SLA) continues to construct new army cantonments and refuses to dismantle high security zones in the traditional Tamil majority areas of the island.

This has resulted in the coercive control and repression of the Tamils in virtually every aspect of their lives by an army whose ethnic composition is nearly entirely Sinhalese, and whose presence constitutes the largest military occupation per capita in Asia. There is 1 soldier for every 5 civilians, an army camp for every village, a guard post at every intersection.

The Sri Lankan army has facilitated the destruction of Muslim mosques and Christian churches, which is leading in part to the decimation of religious and ethnic identity of subjugated groups. The army is also responsible for exacerbating harsh conditions for women, particularly young or widowed Tamil women, who are victimized by rampant sexual violence by Sri Lankan soldiers.

Racism in areas of language, education and employment is pervasive and deeply ingrained in Sri Lanka’s social, economic and political structures.

For these reasons and more we request the Special Rapporteur on Racism to make an official visit to Sri Lanka to make an assessment of the underlying structural inequalities and escalating intolerance there, and to report his findings and recommendations to the Human Rights Council.   We also call upon the Council to establish an independent Commission of Inquiry to properly account for the past and present human rights violations committed by the Sri Lankan government.

Pasumai Thaayagam thanks this Council for its attention to the grave issue of racial discrimination and related intolerance.  We also commend the work of Special Rapporteur, Mr. Mutuma Ruteere, including his recent visit to Bolivia.

Thank you Madam President.

***

வியாழன், செப்டம்பர் 20, 2012


இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தொடரும் போராட்டம் - பசுமைத் தாயகத்தின் நீதிக்கான பயணம்!

ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் கொடூர அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் இப்போது ஈழ மண்ணில் நடக்கவில்லை. அந்தப் போராட்டம் சர்வதேச அரங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளது. 

இந்த புதிய சூழலில் மூன்று இடங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அவை 1. இலங்கைக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்தியா, 2. ஐ.நா. மனித உரிமைகள் அவை உள்ள ஜெனீவா, 3. ஐ.நா. பாதுகாப்பு அவை உள்ள நியூயார்க். 

நியூயார்க்கின் பாதுகாப்பு அவையில் ஈழத்தமிழர்களுக்காக பேச எவரும் இல்லை. இந்தியாவில் தமிழ்நாட்டின் இயக்கங்கள் அனைத்தும் ஓரணியில் போராடுகின்றன. ஜெனீவாவில் நீதிக்கான பணியில் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்ட பசுமைத்தாயகம் ஈடுபட்டுள்ளது.

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானம் 2012 மார்ச்சில் வந்த போது பசுமைத் தாயகம் பங்காற்றியது (அது குறித்து இங்கே காண்க). அதன் தொடர்ச்சியாக ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கையில் நீதிக்கான தேவையை வலியுறுத்தும் தொடர் பணியில் பசுமைத் தாயகம் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக - 18.09.2012 செவ்வாய் அன்று சிரியா குறித்த ஐ.நா. மனித உரிமைகள் அவையின் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பசுமைத் தாயகத்தின் பிரதிநிதி, யேல் சட்டப்பல்கலைக் கழகத்தின் தாஷா மனோரஞ்சன் - சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலையை விட, இலங்கையின் நிலை மோசமானது என சுட்டிக்காட்டினார். எனவே, சிரியாவிற்காக அமைக்கப்பட்டுள்ளது போன்றே இலங்கைக்காக ஒரு விசாணைக் குழு அமைக்கப்பட வேண்டும், இலங்கை அரசு பன்னாட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரினார்.

ஐ.நாவில் தாஷா மனோரஞ்சன் பேச்சின் காணொலி வடிவத்தைக் கீழே காண்க:

ஐ.நாவில் தாஷா மனோரஞ்சன் பேச்சின் எழுத்து வடிவம்:

Thank you Madam President.  

Pasumai Thaayagam welcomes this Council’s attention to the tragic situation unfolding in Syria. We support the Council’s Commission of Inquiry for Syria, and urge the Council to extend the Commission’s mandate in order to ensure that accountability – a necessary precursor to lasting peace – is achieved.

We would like to turn the Council’s attention to another example of international justice suffering under a violently oppressive regime. This is a situation in which a ruthless government corralled over 330,000 civilians into so-called “Safe Zones” prohibited humanitarian aid organizations from reaching this suffering population, and intentionally deployed heavy firing and shelling against these dense civilian areas. Over 40,000 civilians were killed in a matter of months. And yet three and a half years later, this Council has failed to even utter the words “Commission of Inquiry.” Today, we ask the Council – Why?

This is Sri Lanka. In early 2009, the Sri Lankan government ended decades of armed conflict through a brutal bloodbath on the beach. Now, Sri Lanka’s ongoing militarization in the war-torn Tamil North and East, forces victims of Sri Lanka’s war crimes to live next to their victimizers. The Sri Lankan government has not pursued a single investigation or prosecution regarding these war crimes and crimes against humanity.

Sri Lanka’s death toll sadly surpasses the death toll in Syria, and yet there is no discussion of a Commission of Inquiry for Sri Lanka. We urge the Council to demand accountability for Sri Lanka’s past and present war crimes and crimes against humanity – first, by initiating an independent Commission of Inquiry, and second, by requesting the UN Security Council to refer Sri Lanka to the International Criminal Court. These two mechanisms are the only way to bring truth, justice and sustainable peace to this war-ravaged island.

புதன், செப்டம்பர் 19, 2012

விநாயகர் சதுர்த்தியும் தமிழர்களின் வீரமும் - அறியாத தகவல்கள்!

விநாயகர் சதுர்த்தி தமிழர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகை அல்ல. விநாயகர் தமிழ்நாட்டின் முதல் கடவுளும் அல்ல. கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் விநாயகர் தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு முந்தைய தமிழ் இலக்கியங்களில் அப்படி ஒருவர் குறிக்கப்படவில்லை. எனினும் விநாயகர் தமிழ்நாட்டிற்கு வந்ததின் பின்னணியில் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.

பல்லவ - சாளுக்கிய போர்

தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும். 
 புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போர் - கற்பனைப் படம்
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்மன், இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி).
பாதாமி
இந்த போரின் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் மிக முக்கியமான நிகழ்வுகள் அமைந்துள்ளன. தமிழ்நாடெங்கும் உள்ள திரௌபதி அம்மன் கோவில்கள் இதனால் ஏற்பட்டவைதான். கூவாகம் கூத்தாண்டவர் இந்த நிகழ்வோடு தொடர்புடைய சாமிதான். இன்றும் பெங்களூரு நகரின் முதன்மை திருவிழாவாக இருக்கும் 'கரகா' திருவிழா இதன் தொடர்ச்சியே. தமிழ்நாடெங்கும் கோவில் திருவிழாக்களில் நடக்கும் பாரதம் படிக்கும் பழக்கம் இதனால் ஏற்பட்டதுதான். அவ்வாறே, புலிகேசியின் பாதாமி நகரைத் தாக்கி அழித்து அதன் நினைவாகக் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டவர்தான் விநாயகரும்.

சாளுக்கிய மன்னன் புலிகேசி - வன்னிய புராணம் - கூத்தாண்டவர்

நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். வன்னியர்கள் வாழும்பகுதிகளில் இப்போதும் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்துள்ளது. இத்தகைய தெருக்கூத்து முறைகள் வளர்ந்ததும் வன்னியர் சமூகத்தினரிடையேதான். பாரதக்கதையின் பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின.
திரௌபதி அம்மன்
சாளுக்கிய மன்னன் புலிகேசியை வாதாபி சூரனாக சித்தரித்து, அவனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம் வன்னியர்களிடையே கதையாக பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன்.

வாதாபி அரக்கனை அழிக்கப்புறப்படும் போது வீரவன்னியராசனின் மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை.
போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இதுதான் வன்னியக் கூத்து ஆகும்.

இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இப்படியாக வன்னியர் புராணத்தில் உள்ள ஒரு கதை - பாரதக் கதையில் உட்புகுத்தப்பட்டு கடைசியில் அரவாணிகள் கதை ஆகிவிட்டது.
கூவாகம் கூத்தாண்டவர்
கூவாகம், கொத்தட்டை, அண்ணாமைலை நகர், தேவனாம் பட்டினம், தைலாபுரம், பிள்ளையார் குப்பம் ஆகிய கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கோவை சிங்காநல்லூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. அனைத்து கூத்தாண்டவர் கோவில்களும் வன்னியர்களின் கோவிலாக உள்ளன. அவற்றில் பூசாரிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். இக்கோவிலுக்கு வழிபட வரும் சுற்றுக்கிராம மக்கள் அரவாணிகள் அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். தமது வேண்டுதலுக்காக தாலி கட்டிக்கொள்கின்றனர்.
மாமல்லபுரம் திரௌபதியம்மன் 
வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை. பாரதம் படிப்பதற்கென்று பல மானியங்களை மன்னர்கள் அளித்துள்ளதை கல்வெட்டுகள் காட்டுகின்றன. பாரதக் கதையின் பாதிப்பால் திரௌபதை அம்மன் கோவில்கள் உருவாயின. பல்லவர்களின் மாமல்லபுர கோவில்களில் திரௌபதிக்கும் கோவில் உள்ளது. எல்லா திரௌபதியம்மன் ஆலயங்களும் வன்னியர் கோவில்களாக நீடிக்கின்றன. வன்னியர்களே பூசாரிகளாக உள்ளனர். பெங்களூரின் முக்கிய விழாவான தர்மராஜா கோவிலின் கரகா திருவிழா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
திருச்செங்காட்டன்குடி வாதாபி கணபதி
நரசிம்மவர்ம்மனின் படை கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகரைத் தாக்கி அழித்தது என்பதற்கான கல்வெட்டு இப்போதும் பாதாமி நகரில் இருக்கிறது. அங்கிருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலை திருவாரூர் அருகே திருச்செங்காட்டன்குடி எனும் ஊரில் இருக்கிறது. தமிழ்நாட்டி விநாயகரை வாதாபி கணபதி என்றும் அழைக்கின்றனர்.

இப்போது இந்துத்வா அமைப்புகளால் ஊக்குவிக்கப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கும் - வாதாபி கணபதியின் வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

சமூகநீதிப் போராளிகளின் வீரத் தியாகம் - 17 செப்டம்பர் 1987

1987 ஆம் ஆண்டு - வன்னியர் உட்பட அனைத்து சாதியினருக்கும் சாதிவாரி மக்கள்தொகைக்கேற்ப இடஒதுக்கீடு கேட்டு செபடம்பர் 17, தந்தை பெரியார் பிறந்த நாள் முதல், ஒருவார கால சாலமறியலை அறிவித்தது, மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் நிறுவப்பட்ட வன்னியர் சங்கம். மூன்று மாத காலத்திற்கு முன்னறே அறிவிப்பு செய்து, நாடெங்கும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால், செப்டம்பர் 16 அன்று அண்ணா அறிவாலயம் திறக்கப்படும் என தாமதமாக அறிவித்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி.

அதாவது, செபடம்பர் 17 அதிகாலை 12 மணி முதல் மறியல் நடத்துவதாக வன்னியர் சங்கம் முன்பே கூறியிருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதே செபடம்பர் 16 இரவு சென்னையில் அறிவாலயம் திறப்புவிழா நடத்தி, செபடம்பர் 17 அதிகாலை 12 மணிக்கு மேல் தென்மாவட்ட திமுகவினர் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை கடக்கும் வகையில் - சதி செய்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி.

வன்முறையில் ஈடுபடுவதற்கு அணியமாக ஆயுதங்களுடன் வந்த குண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த வன்னியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதான் இட ஒதுக்கீட்டு போரில் 21 பேர் உயிரிழக்கவும், ஒரு லட்சம் பேர் சிறைக்கு செல்லவும், பல்லாயிரக் கணக்கானோரின் வீடுகளும், உடைமைகளும் காவல்துறை வெறியாட்டத்தில் பாழாக்கப்படவும் காரணமான முதல் நடவடிக்கையாகும்.

வன்னியர் சங்கத்தின் நியாயமான போராட்டத்தில் - வன்னியர்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 21 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் படுகாயம், லட்சம் பேர் சிறை, பல ஆண்டுகள் வழக்கு, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் உடமை இழப்பு - என ஏராளமான இழப்புகளை வன்னியர்கள் சந்தித்தார்கள். இந்தத் தியாகத்தால் இன்று தமிழ்நாட்டில் 107 சாதியினர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பெறுகின்றனர்.

திமுக குண்டர்கள், காவல்துறை வன்முறையாளர்களின் கொலைவெறியாட்டங்கள் தமிழ் மக்களின் நினைவலைகளில் இருந்து மறைந்து விட்டன. ஆனால், தமது உயிரைக் காப்பாற்ற வேண்டும், உடமைகளைப் பாதுகாக்க வேண்டும், காவல்துறையினர் துப்பாக்கிகளோடு ஊருக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, சிலநூறு மரங்களை வெட்டி, சாலையில் தடுப்பை ஏற்படுத்தியதற்காக - வன்னியர்கள் இன்றும் 'மரம் வெட்டிகள்' என்று ஆதிக்கச் சாதிக் கூட்டத்தினரால் தூற்றப்படுகின்றனர்.

வன்னியப் போராளிகளின் அந்த மாபெரும் தியாகம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த 21 தியாகிகளை நினைவு கூறுவோம்.

வீரவணக்கப்பாடல் - காணொலி 1 
1. தியாகி பார்ப்பனப்பட்டு ரங்கநாதக் கவுண்டர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிக்கு அருகில் உள்ள பார்ப்பனப்பட்டுக் கிராமத்தை சேர்ந்த தியாகி. சாலை மறியலுக்காக வீட்டைவிட்டுக் கிளம்பும் போதே காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவரின் வயது 55.

2. தியாகி சித்தணி ஏழுமலை
விழுப்புரம் மாவட்டம் சித்தணி கிராமத்தை சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்டம்  வீடூர் அணை அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25 க்கும் கீழ். காலவல் துறையினர் உரிய சிகிச்சை அளிக்காமல் அலைகழித்ததால் அடுத்த நாள், செப்டம்பர் 18 அன்று வீரமரணம் அடைந்தார். திருமணமானவர்.

3. தியாகி ஒரத்தூர் செகநாதன்
விழுப்புரம் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவர். திருமணமானவர். சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

4. தியாகி முண்டியம்பாக்கம் சிங்காரவேலு

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவர். திருமணாமானவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 43.

5. தியாகி கயத்தூர் முனியன்
விழுப்புரம் மாவட்டம் கயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். திருமணமானவர். பார்ப்பனப்பட்டு துப்பாக்கிச்சூடு நிகழ்வைக் கேள்விப்பட்டு, ஊர்வலமாக தலைமையேற்று சென்றவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 27. அவரது மனைவி வேதவல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

6. தியாகி கயத்தூர் முத்து

விழுப்புரம் மாவட்டம் கயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். திருமணமாகாதவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

7. தியாகி கொழப்பலூர் முனுசாமிக் கவுண்டர்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர்.சாலைமறியலில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். சென்னை மத்திய சிறையிலேயே வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 45. திருமணமானவர்.

8. தியாகி கோலியனூர் விநாயகம்.
விழுப்புரம் மாவட்டம் மிளகாய்க் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர். செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் வேலு ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர்.

9. தியாகி கோலியனூர் கோவிந்தன்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கிராமத்தை சேர்ந்தவர். செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் விநாயகம், கோலியனூர் வேலு ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர். திருமணமானவர். அப்போது அவருக்கு வயது 35.

10. தியாகி தொடர்ந்தனூர்  வேலு.

செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம் ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர்.  திருமணமானவர்.

(மற்ற தியாகிகள் குறித்து அடுத்த பதிவில் காண்போம்)

வீரவணக்கப்பாடல் - காணொலி 2 


சனி, செப்டம்பர் 15, 2012

வன்னியர் வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு - எங்கள் போராட்டம் எதற்காக?


இந்திய விடுதலைப்போரில் வன்னியர்களின் பங்களிப்பு மகத்தானது. மகாத்மா காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டத்தில் முதன்முதலில் உயிர்ப்பலியானவர் சாமி நாகப்பன் படையாட்சி. அதன்பின்னர் ஆதிகேசவ நாயக்கர், அர்த்தநாரீச வர்மா, ஜமதக்னி, கடலூர் அஞ்சலையம்மாள் என எண்ணற்ற தியாகிகளை இந்திய விடுதலைப் போருக்கு தந்த சமூகம் வன்னிய சமூகமாகும்.

ஆனால், விடுதலை அடைந்த இந்தியாவில் வன்னியர் சமூகம் வஞ்சிக்கப்பட்ட சமூகமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிகவும் அடித்தட்டில் வாழும் சமுதாயமாகக் கருதப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை விட, வன்னியர்களின் நிலை மோசமாகிவிட்டது என்பதே இன்றைய உண்மை நிலை.

வன்னியர் - தமிழ்நாட்டின் மிகப்பெரிய தனிப்பெரும் சமுதாயம்

மக்கள்தொகை அடிப்படையில் வன்னியர் சமுதாயம்தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமுதாயமாகும். வடதமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றியைத் தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தியாக வன்னியர்களே உள்ளனர்.

வரலாற்றில் வன்னியர்கள் அரசர்களாகவும், போர் வீரர்களாகவும் இருந்துள்ளனர். வேளாண்மையிலும் வன்னியர்களின் ஈடுபட்டிருந்தனர். தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு வடதமிழ்நாடு முழுவதும் வன்னிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. தமிழ்நாட்டின் வட பகுதியின் ஏராளமான கிராமங்கள் வன்னியரின் உடைமையாகவே இருந்தன. இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

வன்னியர்கள் - உரிமை இழந்த சமுதாயம்

தமிழ்நாட்டின் பொருளாதார நிலையில் இப்போது மிக மிக பின் தங்கியுள்ள சமுதாயம் வன்னியர் சமுதாயம்தான். வறுமை நிலையில் முதலிடத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் வன்னியர் பகுதிகளே. வன்னியர் சமுதாயத்தினர் வாழும் வடக்கு மாவட்டங்கள் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியை விட மோசமான நிலையில் உள்ளன.

அதிக எண்ணிக்கையில் குடிசை வீடுகள் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் வன்னியர் பகுதிகள்தான். வன்னியர் பகுதிகளில் மக்கள்தொகையில் முக்கால் பங்கினர் கிராமங்களில் வசிக்கின்றனர். மற்ற பகுதிகளில் மக்கள்தொகையில் பாதியளவினர் மட்டுமே கிராமங்களில் உள்ளனர்.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு மற்ற தொழில்களுக்கு மாறிவிட்டனர். ஆனால், ஆணும், பெண்ணும் அன்றாடம் வயலில் உழைத்து இன்னமும் உணவு உற்பத்தியில் ஈடுபடும் சமுதாயம் வன்னியர் சமுதாயம் ஒன்றுதான்.

தமிழ்நாட்டில் கல்வி நிலையில் மிக மிக பின்தங்கியுள்ள சமுதாயம் வன்னியர் சமுதாயம்தான். விடுதலைக்குப் பின்னால் வந்த ஐம்பது ஆண்டு காலத்தில், வன்னியர் பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் அதிகம் தொடங்கப்படவில்லை. பள்ளிகள் தனியார்மயமானதால் பாதிக்கப்பட்டதும் வன்னியர் சமுதாயம்தான். வன்னியர் வாழும் வடக்குப்பகுதிகளில் ஒரு பல்கலைக் கழகத்தைக் கூட அரசாங்கம் தொடங்கவில்லை.

இப்போது எழுத்தறிவிலும் கல்லாமையிலும் தமிழ்நாட்டின் மிக மிக பின்தங்கிய பகுதிகளாக வன்னியர் பகுதிகளே உள்ளன. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் கடைசி இடம் பிடிக்கும் மாவட்டங்கள் அனைத்தும் வன்னியர் பகுதிகளே.

தமிழ்நாடு அரசாங்கத்தின் உயர்பதவிகளில் இடம்பெறாத சமுதாயமாக வன்னியர்களே உள்ளனர். அரசு செயலாளர்கள், துறைத்தலைவர்கள், காவல்துறை உயர்பதவிகள் என எதிலும் வன்னியர்கள் உரிய எண்ணிக்கையில் இடம்பெறவில்லை.

நீதிமன்றப் பதவிகளில் வன்னியர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டுள்ளனர். சென்னை உயர்நீதி மன்றத்தின் 52 நீதிபதிகளில் 9 பேர் தேவர் வகுப்பினர், 9 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், 5  பேர் வெள்ளாளக் கவுண்டர்கள், 5 பேர் பிள்ளைமார் வகுப்பினர், 4 பேர் முதலியார் வகுப்பினர், 4 பேர் பார்ப்பன வகுப்பினர் உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய தனிப்பெரும் சமுதாயமான வன்னியர் சமுதாயத்தவர் ஒரே ஒருவர் மட்டுமே நீதிபதியாக உள்ளார்.

தமிழ்நாட்டின் 92 ஆண்டுகால வரலாற்றில் முதலமைச்சர்களாக 35 பேர் பதவி ஏற்றுள்ளனர். மலையாள மேனன் மூன்று முறையும், நாடார் மூன்று முறையும், இசை வேளாளர், அய்யங்கார் ஆகிய சமூகத்தவர் தலா ஐந்து முறையும் முதலமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். ஆனால், தனிப்பெரும் சமுதாயமான வன்னியர் ஒருவர் முதலமைச்சராக ஒரே ஒருமுறைக் கூட வரமுடியவில்லை. 

வன்னியர் - இடஒதுக்கீட்டு உரிமையை ஒருபோதும் பெறாத சமுதாயமும்

வன்னியர் சமுதாயத்தினருக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கை மிக நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. 1936 ஆம் ஆண்டு சென்னை இராஜதானி சட்டமன்ற கூட்டத்தில் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று வன்னியர்கள் கோரிக்கை வைத்தனர். 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட  தமிழ்நாடு அரசின் முதல் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு (சட்டநாதன் குழு) வன்னியர்களின் தனி இடஒதுக்கீட்டு கோரிக்கையை சுட்டிக்காட்டியது.

ஆனால், 1971 ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதமாக கருணாநிதி உயர்த்தினார். 1980 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் அதனை 50 சதவீதமாக அதிகரித்தார். அப்போதெல்லாம் வன்னியர் தனி இடஒதுக்கீடு கோரிக்கையை அவர்கள் புறக்கணித்தனர்.
மருத்துவர் அய்யா அவர்கள் 1980 ஆம் ஆண்டு அமைத்த வன்னியர் சங்கம் ஒருநாள் சாலை மறியல், ஒருநாள் இரயில் மறியல் எனப்பல போராட்டங்களை நடத்தியது. அதையெல்லாம் அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. எனவே, 1987இல் 'ஒரு வாரகால சாலைமறியல் அறப்போராட்டம்' அறிவிக்கப்பட்டது. போராட்டத்தின் போது 21 பேர் காவல்துறையால் கொலை செய்யப்பட்டனர். ஒரு லட்சம் பேர் சிறை சென்றனர். பல்லாயிரம் பேர் வழக்குகளை சந்தித்தனர்.
வன்னிய சமுதாயத்தின் இந்த தியாகங்களின் விளைவாக 1989 ஆம் ஆண்டு 'மிகவும் பிற்படுத்தப்பட்டோர்' எனும் பிரிவு உருவாக்கப்பட்டது. அப்போதும் கூட வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்க மறுத்தார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. வன்னியர் சமுதாயத்துடன் சேர்த்து 107 சாதிகளுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. வன்னியர்களை விட வசதி வாய்ப்புகளில் முன்னேறியிருந்த பல சாதியினர் இப்பட்டியலில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டனர்.

மிகவும் பிற்பட்டோர் இடஒதுக்கீட்டில் வன்னியர்கள் வஞ்சிக்கப்பட்டதால், 20 சதவீத இடஒதுக்கீட்டில் பெரும்பகுதி மற்ற சாதிகளுக்கே போய்விடுகிறது. இன்றைய நிலையில் வெறும் 8 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே வன்னியர்களுக்கு கிடைக்கிறது.

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு இல்லாததால் வன்னியர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். தமிழ்நாட்டின் மற்ற எல்லா சாதியினரும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். ஒருசில சாதிகள் மிகப்பெரிய வளர்ச்சியையும் அடைந்துள்ளனர். ஆனால், வன்னியர் சமூகத்தினர் மட்டுமே கடைநிலையில் வறுமையிலும் கல்லாமையிலும் அதிகாரமற்ற நிலையிலும் உழன்று வருகின்றனர். இந்த அநீதி நிலை இனி ஒருகணமும் நீடிக்கக் கூடாது.

வன்னியர் தனி இடஒதுக்கீடு - ஓர் உடனடித் தேவை

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 15 (4), 16 (4) ஆகிய பிரிவுகளில் சமூக பொருளாதார நிலைகளில் பின்தங்கிய எந்த ஒரு வகுப்பினருக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் போதுமான இடஒதுக்கீட்டினை அளிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஒரே தொகுப்பாக பார்க்காமல், பின்தங்கிய நிலைக்கு ஏற்ப தனி இடஒதுக்கீடு அளிக்கலாம் என மண்டல் குழு வழக்கில் இந்திய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் நாட்டில் அருந்ததியினர் வகுப்பினருக்கும், இசுலாமிய வகுப்பினருக்கும் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாட்டின் மற்ற எல்லா வகுப்பினரை விடவும் வன்னியர்கள் அதிகம் பின்தங்கி இருப்பதாலும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய தனிப்பெரும் சமுதாயமாக இருப்பதாலும் - இனியும் தாமதிக்காமல் வன்னியர் வகுப்பினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு உடனடியாக அளிக்கப்பட்டாக வேண்டும்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமுதாயமான வன்னியர்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லாதவரை தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக ஆகமுடியாது. தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக மாறவேண்டும் என்றால், தமிழ்நாட்டில் சமூகநீதி, ஜனநாயகம், மனித உரிமைகள் எல்லாம் காக்கப்பட வேண்டும் என்றால், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கட்டாயமாக அளிக்கப்பட்டே ஆகவேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியே செப்டம்பர் 17, 2012 அன்று "வன்னியர் தனி இடஒதுக்கீடு போராட்டம்" நடத்தப்படுகிறது.

வன்னியர் தனி இடஒதுக்கீடு எதற்காக? 12 பக்க கையேடு (இங்கே சொடுக்கவும்)

வன்னியர் தனி இடஒதுக்கீடு எதற்காக? 4 பக்க துண்டுப்பிரசுரம் (இங்கே சொடுக்கவும்)

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

வினவும் விமரிசனமும் - பதிவுலகில் எதிரொலிக்கும் ஒரு 'நீதிமன்ற' அதிசயம்! 


உயிரழப்பைத் தடுக்க அமெரிக்கா எதிர்ப்பு, ஆஸ்திரேலிய ஆதரவு!

அமெரிக்கா-ஆஸ்திரேலியா இந்த இரண்டு நாடுகளின் நீதிமன்றங்கள் ஒன்றுகொன்று எதிரான தீர்ப்புகளை அளித்துள்ளன. இதுகுறித்து தமிழ் பதிவுலகில் இன்று (11.09.2012) எழுதப்பட்டுள்ளது. அமெரிக்கா-ஆஸ்திரேலியா இரண்டும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் வாழும் நாடு. ஆனாலும், அமெரிக்காவை விட பல விடயங்களில் ஆஸ்திரேலியா முற்போக்காகவே இருந்து வருகிறது.

புகையிலைப் பொருட்கள் மீது எதற்காக எச்சரிக்கைப் படங்கள்?

புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பேரிழப்புகளைத் தடுக்க, அவற்றின் மீது எச்சரிக்கைப் படங்களை அச்சிடுவது மிகச்சிறந்த பயனளிக்கும் என்பது அறிவியல் பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டதாகும். அது குறித்து இங்கே காணலாம்: TOBACCO WARNING LABELS: EVIDENCE OF EFFECTIVENESS

புகையிலைப் பொருட்கள் மீது எதற்காக எச்சரிக்கைப் படங்கள் வெளியிடப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கே காணலாம்:

உலகெங்கும் இதுவரை வெளியிடப்பட்ட எச்சரிக்கப்படங்கள் குறித்த அறிக்கை:

ஆஸ்திரேலியாவில் புதிய புரட்சி: PLAIN PACKAGING

புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்கள்  வெளியிடுவதில் ஒரு மிகப்பெரிய முற்போக்குப் பாய்ச்சலாக - எந்தவிதமான லோகோ அல்லது வடிவமைப்பு விளம்பரங்கள் எதுவும் இல்லாமல், எல்லா சிகரெட் பாக்கெட்டுகளும் ஒரே மாதிரியாக, வெறுமனே எச்சரிக்கைப் படத்துடன் இருக்க வேண்டும் என்கிற புரட்சிகரமான உத்தரவை பிறப்பித்துள்ளது ஆஸ்திரேலிய அரசு. Tobacco plain packaging and new health warnings

இதற்கு எதிராக சிகரெட் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்த போது அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது ஆஸ்திரேலிய நீதிமன்றம்.

இதுகுறித்து ஒரு பதிவு தமிழ்ப் பதிவுலகில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. (விமரிசனம் – காவிரிமைந்தன்)

டாக்டர் அன்புமணி மீண்டும் மத்திய அமைச்சர் ஆனால்தான் இது நடக்குமா ?

அமெரிக்காவின் பிற்போக்குத்தனம்.

ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும் போது, மிகச்சாதாரணமான வடிவத்தில் ஒரு எச்சரிக்கை விளம்பரத்தை வெளியிட ஆணையிட்டது அமெரிக்க அரசு. அதனை எதிர்த்து சிகரெட் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்த போது அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தது அமெரிக்க நீதிமன்றம்.

இதுகுறித்தும் ஒரு பதிவு தமிழ்ப் பதிவுலகில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. (வினவு)

‘இனி பயப்படாமல் தம் அடிக்கலாம்’ – அமெரிக்க நீதிமன்றம்!

ஒரே நாளில், புகையிலைக் குறித்த இரண்டு முற்போக்கான பதிவுகள் தமிழ் பதிவுலகில் வெளியாவது ஒரு மிகச்சிறந்த வரவேற்கத்தக்க மாற்றம் தான். இப்பதிவுகளை எழுதிய "வினவு" "விமரிசனம் – காவிரிமைந்தன்" ஆகியோருக்கு நன்றி.

திங்கள், செப்டம்பர் 10, 2012

இலங்கை பத்திரிகையில் தமிழக முதல்வர் பற்றி கேவலமான கார்டூன்: நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? கண்டனத்தை உடனே பதிவு செய்க.

தமிழக முதல்வரையும் இந்தியப் பிரதமரையும் கற்பனைக்கெட்டாத படுகேவலமான ரசனையுடன் சித்தரித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது, இந்தியாவின் நட்புநாடான (!) இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் நடத்தும், இலங்கை அரசுக்கு ஆதரவான லக்பிமா பத்திரிகை. 

இதற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?
(வக்கிரமான இந்த கார்டூனை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மன்னிக்கவும்...அந்த வக்கிரத்தை நீங்கள் உணரவே இது)
நீங்கள் என்ன செய்யலாம்?

உங்களது கடுமையான கண்டனத்தை பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு உடனே அனுப்புக:

1. இந்திய வெளியுறவுத் துறை, புதுதில்லி மற்றும் இந்திய தூதரகம் கொழும்பு-மின்னஞ்சல் முகவரிகள்:


eam@mea.gov.in ,
adveam@mea.gov.in,
diream@mea.gov.in,
osdeam@mea.gov.in,
useamo@mea.gov.in

hc.colombo@mea.gov.in,
dhc.colombo@mea.gov.in,
minister.colombo@mea.gov.in,
pic.colombo@mea.gov.in,  
pol.colombo@mea.gov.in

2. இலங்கைத் தூதரகம், சென்னை-மின்னஞ்சல் முகவரி:

Sri Lanka Deputy High Commission in Chennai
sldehico@md3.vsnl.net.in 

3. லக்பிமா பத்திரிகை மற்றும் அதனை நடத்தும் சுமதி நிறுவனத்தினரின் மின்னஞ்சல் முகவரிகள்:


info@lakbima.lk,
samantha@sumathi.lk,
samadara@sumathi.lk,
cco@sumathi.lk,
chamind@isplanka.com,
asstdirectorhr@sumathi.lk,
maheshsgc@sumathi.lk,
info@sumathi.lk

4. பத்திரிகை தர்மம் குறித்த ஐ.நா. யுனெஸ்கோ பிரிவினரின் மின்னஞ்சல் முகவரிகள்:


v.jennings@unesco.org,
m.lourenco@unesco.org,
v.nadal@unesco.org,
g.berger@unesco.org,
s.coudray@unesco.org,
t.turtia@unesco.org

5. பத்திரிகை சுதந்திரம் குறித்த பன்னாட்டு பத்திரிகை அமைப்புகளின் மின்னஞ்சல் முகவரிகள்:


ifj@ifj.org,
beth.costa@ifj.org,

ifj@ifj-asia.org,
jacqui.park@ifj-asia.org,
katie.richmond@ifj-asia.org,
josh.bird@ifj-asia.org,

rsf@rsf.org,
asie@rsf.org

6. பத்திரிகை தர்மம் குறித்த பன்னாட்டு அமைப்புகளின் மின்னஞ்சல் முகவரிகள்:


iMediaEthics 
info@imediaethics.org,
editor@mediaethicsmagazine.com
The Center for International Media Ethics
info@cimethics.org
Center for Journalism Ethics
ethics@journalism.wisc.edu,
Society of Professional Journalists
jskeel@spj.org,
cdigangi@spj.org,


மேலே குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் உங்களது கண்டனத்தைப் பதிவு செய்யுங்கள். (அத்தனை மின்னஞ்சல் முகவரிகளையும் COPY/PASTE செய்து ஒன்றாக TO வில் வைத்து ஒரே மின்னஞ்சலாக ஓரிரு வினாடிகளில் எளிதாக அனுப்பிவிடலாம்)

மாதிரிக்கு ஒரு கடிதம்

கீழ்கண்ட கடிதத்தை பயன்படுத்துங்கள், அல்லது நீங்களே உங்களது கண்டனத்தை எழுதுங்கள்.


Dear Madam/Sir,

Sub: Sri Lankan Media carries vulgar, offensive sketch of TamilNadu Chief Minister & Prime Minister of India

I write to protest and condemn in the strongest terms the cartoon, by Hasantha Wijenayake, in the Sunday LAKBIMA News of 9 September 2012, Vol. 06, No.13, under the Politics Page. (Lakbima News is a weekly English newspaper in Sri Lanka. It is published on every Sunday, by Sumathi Newspapers (Pvt) Ltd)

The cartoon violates all ethical principles of journalism and media expression not only in Sri Lanka but globally. There is an accepted form of visual journalism in commenting on current social, economic, cultural and political issues within and between countries. In this cartoon, however, the newspaper has allowed for gross sexism and crudity to override any form of civility in journalistic communication.

I urge the Lakbima newspaper, especially its editor to apologize for the publication of this extreme and totally unacceptable cartoon which is derogatory to women and women politicians.

I urge you, in respect of media ethics and accountability, to act against this intolerable media behavior. 

Thank You,

Yours Sincerely,

Name:
Place:

இந்த கேலிச்சித்திரத்தை வரைந்த கார்டூனிஸ்ட் ஹசந்த விஜேநாயகவின் முகநூல் பக்கம், இதிலும் கண்டனத்தை பதிவு செய்க:
இந்த கேலிச்சித்திரத்தைவெளியிட்ட லக்பிம பத்திரிகை முதலாளியும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபாலாவின் முகநூல் பக்கம், இதிலும் கண்டனத்தை பதிவு செய்க:
info@thilangasumathipala.lk
தமிழக முதல்வரை வெளிநாட்டு பத்திரிகை இழிவுபடுத்துவது, தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்துவதாகும். எனவே, வெறும் கோபம் போதாது. அதனை உலகுக்கு தெரியப்படுத்துங்கள். மேலே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு உடனடியாக ஒரு கண்டனக் கடிதத்தை அனுப்புங்கள்.

புதன், செப்டம்பர் 05, 2012

சுற்றுச்சூழலும் செல்பேசிக் கோபுரமும்:அழிவின் விளிம்பில் தேனீக்கள், சிட்டுக்குருவிகள்!

செல்பேசிக் கோபுரங்களால் மனித உடல் நலனுக்கு ஏற்படும் கேடுகள் முந்தைய பதிவில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன (இங்கே காண்க). செல்பேசிக் கோபுரங்களால் சுற்றுச்சூழலும் உயிரினங்களும் கூட கடுமையாக பாதிக்கப்பட்வது குறித்து இனி பார்க்கலாம்.

செல்பேசிக் கோபுரக் கதிர்வீச்சால் மனிதனைவிட பறவைகள், விலங்குகள் அதிகமாக பாதிப்படைகின்றன. 

பறவைகளுக்கு ஏற்படும் கடும் பாதிப்புகள்

கோடை வெய்யில் தாக்கத்தை மனிதர்கள் வெறுக்கின்றனர். சூரிய வெப்பத்தை மனிதஉடல் உணர்வதால்தான் இந்த வெறுப்பு. ஒருவேளை, சூரிய வெப்பத்தை உணரும் தன்மை இல்லாமல் போயிருந்தால் நாம் கோடை வெய்யிலுக்கு பயப்பட மாட்டோம். அதேபோன்றுதான், செல்பேசிக் கோபுரத்தின் மின்காந்தக் கதிர்வீச்சை நாம் நேரடியாக உணர்வது இல்லை. அதனால், நமக்கு வெளிப்படையான துன்பமும் இல்லை.
ஆனால், பறவைகள் இதிலிருந்து மாறுபட்டவை. அவை, செல்பேசிக் கோபுரத்தின் மின்காந்த அலைகளை நேரடியாக உணர்கின்றன. அதனால்தான், மரங்கள், கோவில்கள், கட்டடங்கள் என எல்லா உயரமான இடத்திலும் உட்காரும் பறவைகள் ஒன்று கூட செல்பேசிக் கோபுரத்தின் மீது உட்காருவது இல்லை.

செல்பேசிக் கோபுரத்தின் மின்காந்த அலைகளைக் கண்டு பறவைகள் அஞ்சி ஓடுகின்றன. அதனால்தான், செல்பேசிக் கோபுரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வானில் ஒரு பறவையைக் கூட பார்க்க முடிவதில்லை.

சிட்டுக்குருவிகளின் அழிவு: 

நகர்ப்புறங்களில் காணப்பட்ட சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை எதனால் குறைந்து போனது என்பது குறித்து உலகின் பலபகுதிகளிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அத்தகைய ஆய்வுகள் எல்லாமும் செல்பேசிக் கோபுரங்களைத் தான் முதன்மையாகக் குற்றம் சாட்டுகின்றன. 1994 ஆம் ஆண்டிற்கு பின்னர் இப்போது வரை லண்டன் மாநகரின் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையில் 75 விழுக்காடு குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறே ஐரோப்பியக் கண்டத்தின் பல பகுதிகளிலும் சிட்டுக்குருவிகள் பெருமளவு குறைந்து போயுள்ளது. இதற்கெல்லாம் செல்பேசிக் கோபுரங்களே காரணம்.
இந்தியாவில் போபால், நாக்பூர், குவாலியர், இந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதை சுட்டிக்காட்டுகின்றன.

செல்பேசிக் கோபுரங்களின் மின்காந்த நுண்ணலைகளில் சிக்காமல் நகர்ப்புற சிட்டுக்குருவிகள் வாழ வேண்டியுள்ளது. மறுபுறம் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் போது, செல்போன் கோபுரக் கதிர்வீச்சால் பெருமளவு முட்டைகள் சேதமடைந்து விடுகின்றன. இந்த புதிய சூழலை எதிர்கொள்ள முடியாமல் சிட்டுக்குருவிகள் அழிகின்றன என்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

இதே போன்ற நிலைதான் மற்ற பறவைகளுக்கும். அதிலும் குறிப்பாக வவ்வால்களின் நிலைமை மிகமோசம். அவை கண்ணால் பார்த்து பறப்பது இல்லை. இயற்கையான மின்காந்த அலையை வைத்துதான் பறக்கின்றன. இப்போது செல்பேசிக் கோபுரத்தின் செயற்கை மின்காந்த அலைகள் வவ்வால்களின் இயக்கத்தை முற்றாக சீரழித்து விட்டன.

தேனீக்களின் அழிவு: 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தேனீக்கள் எண்ணிக்கையில் 2010 ஆம் ஆண்டில் திடீரென 30 விழிக்காடு தேனீக்கள் காணாமல் போனதைக் கண்டறிந்தார்கள். அமெரிக்காவின் சில பகுதிகளில் 80 விழுக்காடு தேனீக்கள் மாயமாகின. 'காலனி கொலாப்ஸ் டிசார்டர்' (CCD) என இதற்கு பெயரிட்டுள்ளனர். இந்த புதிய சிக்கலுக்கு செல்பேசிக் கோபுரங்கள்தான் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனீக்கள் தமது தேன்கூட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுவரை பறந்து சென்று பூக்களில் தேனைச் சேகரித்து கூட்டிற்கு திரும்புகின்றன. இந்த போக்குவரத்து முறைக்கு அவை முழுக்க முழுக்க பூமியின் மின்காந்த அலைகளைத்தான் நம்பியுள்ளன. அதாவது இயற்கையான மின்காந்த அலையை உணர்வதன் மூலமே அவை கூட்டிற்கு திரும்பும் வழியைக் கண்டறிகின்றன.

தேனீக்களின் இந்த இயற்கை வழிகாட்டி முறைக்கு செல்பேசிக் கோபுரங்கள் வேட்டு வைத்து விட்டன. இதனால், கூட்டை விட்டு தேனெடுக்க சென்ற தேனீக்கள் திரும்புவதற்கு வழிதெரியாமல் கூட்டமாக தற்கொலை செய்துகொண்டன. இந்த நிலையைதான் 'காலனி கொலாப்ஸ் டிசார்டர்' என்று அழைக்கின்றனர்.

தேனீக்களின் அழிவு சாதாரணமானது அல்ல. புகழ்பெற்ற விஞ்சானி ஐன்ஸ்டின், "தேனிக்கள் முற்றிலுமாக அழிந்து போனால், அதிலிருந்து ஐந்து ஆண்டுகளில் மனித இனமும் அழிந்து போகும்" என்று குறிப்பிட்டார். ஏனெனில், உலகின் சுமார் இரண்டு லட்சம் பூக்கும் வகைத் தாவரங்களில் உற்பத்தி அயல் மகரந்தசேர்க்கை மூலமாகவே நடக்கிறது. மனித உணவின் பெரும்பகுதி அயல் மகரந்தசேர்க்கை மூலமாகவே கிடைக்கிறது. இந்த அயல் மகரந்தசேர்க்கை பணியில் பெரும்பகுதியை தேனீக்கள்தான் செய்கின்றனர்.
செல்போன் கோபுரங்களால், தேனீக்களும் இதர பூச்சிகளும் அழியும்போது தாவரங்கள் அழியும். இதிலிருந்து மனிதன் மட்டும் தப்பிவிட முடியாது.

- மொத்தத்தில் மனிதனுக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள், இதர உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என மிக மோசமான விளைவுகளை செல்பேசிக் கோபுரங்கள் ஏற்படுத்துகின்றன.
தொடர்புடைய சுட்டிகள்:

1. செல்பேசிக் கோபுரங்கள்: மாபெரும் ஆபத்து! கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்

2. எச்சரிக்கை: செல்பேசி கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி? செல்பேசி நிறுவனங்கள் மறைக்கும் உண்மைகள்.

3. செல்பேசி மாசுபாடு என்றால் என்ன?

திங்கள், செப்டம்பர் 03, 2012

செல்பேசிக் கோபுரங்கள்: மாபெரும் ஆபத்து! கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்


செல்பேசிக் கோபுரங்களால் குழந்தைகள், பொதுமக்களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. கண்களால் பார்க்காமலும் காதால் கேட்காமலும் மனிதனின் புலன்களால் உணரப்படாமலேயே மின்காந்தக் கதிர்வீச்சால் மக்கள் தாக்கப்படுகின்றனர்.

செல்பேசிக் கோபுரத்தின் பாதிப்புகள்

செல்பேசி மின்நச்சுப்புகையை 1. செல்பேசியிலிருந்து வெளிவரும் மின்காந்தக் கதிர்வீச்சு, 2. செல்பேசிக் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்தக் கதிர்வீச்சு என இரண்டாக பிரித்துப் பார்க்கலாம். ஒப்பீட்டளவில், செல்பேசிக் கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்தக் கதிர்வீச்சு மிக மோசமானதாகும்.
செல்பேசி மின்காந்தக் கதிர்வீச்சு

செல்பேசியிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு என்பது செல்பேசி இயக்கநிலையில் இருக்கும்போதும், காதுக்கு அருகில் வைக்கும்போதும், உடலோடு ஒட்டிய நிலையில் இருக்கும் போதும் அதிலிருந்து கதிர்வீச்சு தாக்கும். செல்பேசியை உரிய எச்சரிக்கையுடன் பயன்படுத்தினால் இந்தக் கதிர்வீச்சைத் தடுக்கலாம்.

செல்பேசிக் கோபுர மின்காந்தக் கதிர்வீச்சு

ஆனால், செல்பேசிக் கோபுரத்தின் கதிர்வீச்சு இருபத்துநான்கு மணிநேரமும் அதன் அருகே வசிப்போரைத் தாக்கிக்கொண்டே இருக்கும். இதிலிருந்து சுற்றுப்புறத்தில் வாழ்வோர் தப்ப முடியாது. செல்பேசிக் கோபுரத்திலிருந்து 50 மீட்டர் வரை இருப்பவர்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும் 300 மீட்டர் தூரம் வரை தாக்கம் கூட பாதிப்பு இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மற்றபடி, இரண்டுவகை கதிர்வீச்சும் ஒரே மின்காந்தக் கதிர்வீச்சுதான் (Electromagnetic Radiation).
இந்தியா முழுவதும் சுமார் ஐந்து லட்சத்துக்கும் கூடுதலான செல்பேசிக் கோபுரங்கள் உள்ளன. இதன்மூலம் சுமார் 90 கோடிக்கும் அதிகமான செல்பேசிகளுக்கு செவை அளிக்கப்படுகிறது. உண்மையில், செல்பேசிக் கோபுரங்கள் ஒரு மிகப்பெரிய மின்நச்சுப்புகை சிக்கலாக மாறிவிட்டன. நகரப்பகுதிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

செல்பேசிக் கோபுரத்தின் கதிர்வீச்சினை வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சு (Thermal radiation), வெப்பம் சாராக் கதிர்வீச்சு (Non-thermal radiation) என்று இருவகையாகப் பிரிக்கின்றனர். வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சு என்பது சமைப்பதற்கு பயன்படுத்தும் மைக்ரோ ஓவனில் ஏற்பதும் வெப்பத்திற்கு ஈடானதாகும். செல்பேசியை காதுக்கு அருகே வைத்து நீண்ட நேரம் பேசினால் தலை சூடாவது இந்த வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சினால்தான்.

வெப்பம் சாராக் கதிர்வீச்சு இதைவிட மிக மோசமானதாகும். இது மனித உடலின் மின்காந்தப் புலத்தைப் பாதிக்கிறது. இது உயிரியல் ரீதியிலான (biological) பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் இதுவரை வெப்பம் சார்ந்தக் கதிர்வீச்சுக்கு மட்டுமே ஓரளவுக் கட்டுப்பாடுகள் உள்ளன. வெப்பம் சாராக் கதிர்வீச்சுக்கு கட்டுப்பாடு ஏதும் இல்லை.

செல்பேசிக் கதிர்வீச்சின் உடல்நல பாதிப்புகள்

செல்பேசி மின்காந்தக் கதிர்வீச்சால் கடுமையான உடல்நலக் கோளாறுகள் நேருகின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான பன்னாட்டு முகமை (IARC) 'மனிதனுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள' கதிர்வீச்சாக செல்பேசிக் கதிர்வீச்சினை வகைப்படுத்தியுள்ளது. மூளைப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை செல்பேசிக் கதிர்வீச்சு ஏற்படுத்துவதாக அந்த அமைப்பு கூறுகிறது.

புற்றுநோய், ஆண்மைக் குறைவு, மூளையின் பாதுகாப்புத் தடுப்பில் பாதிப்பு, மரபணு பாதிப்பு, இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்தோருக்கு பாதிப்பு, உயிரணுப் பாதிப்பு, காதுக் கோளாறுகள், பார்வைக் குறைவு, எலும்புகள் வலுவிழத்தல், நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு, தூக்கம் குறைதல், குழந்தைகள் பாதிப்பு, கருவுற்ற தாய்மார்களுக்குப் பாதிப்பு, தூக்கமின்மை என ஏராளமான பாதிப்புகளை செல்பேசிக் கதிர்வீச்சு ஏற்படுத்துகிறது.
மும்பையில் மூளைப் புற்றுநோய்க்கு காரணமான செல்பேசிக் கோபுரம்
புற்றுநோய்: மும்பையின் கார்மிகேல் சாலையில் உள்ள விஜய் அப்பார்ட்மென்ட்ஸ் எனும் கட்டிடத்தின் ஏழாவது தளத்தில் ஏராளமான செல்பேசிக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதற்கு நேர் எதிரிலேயே உஷாகிரண் கட்டடம் எனும் பலமாடி அடுக்குக் குடியிடுப்பு இருந்தது. உஷாகிரண் குடியிருப்பின் 6 முதல் 10 வரையிலான தளங்கள்  விஜய் அப்பார்ட்மென்ட்டின் செல்பேசிக் கோபுரத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் நேரடித் தாக்கத்துக்கு ஆளாகின. மூன்றே ஆண்டுகளில் உஷாகிரண் கட்டடத்தின் 6, 7, 8 மற்றும் 10 ஆவது மாடியில் வசித்தோரில் 6 பேர் புற்றுநோயால் தாக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று கண்டறியப்படாமல் ஏராளமான புற்றுநோயாளிகளை செல்பேசிக் கோபுரங்கள் உருவாக்கிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
செல்பேசிக் கதிர்வீச்சு ஆண்மைக் குறைவை உண்டாக்கும்
ஆண்மைக் குறைவு: செல்பேசிக் கதிர்வீச்சால் அதிக அளவில் ஆண்மைக் குறைவு ஏற்படுகின்றது. எந்த அளவுக்கு அதிகமான நேரம் செல்பேசிகளை ஆண்கள் பயன்படுத்துகின்றனரோ அந்த அளவுக்கு ஆண்மைக் குறைவின் தாக்கம் அதிகரிக்கும். ஆண்களின் விந்தணுவின் தரம் குறைதல், உயிரணு எண்ணிக்கை குறைதல் எனப்பல பாதிப்புகள் செல்பேசிக் கதிர்வீச்சால் ஏற்படுகின்றது.

மூளையின் பாதுகாப்புச் தடுப்பில் பாதிப்பு: மனித மூளையில் இரத்த ஓட்டத்திற்கும் மூளையின் திசுக்களுக்கும் இடையே மெல்லிய தடுப்புச் சுவர் அமைந்துள்ளது. இரத்த மூளைத் தடுப்பு (Blood Brain Barrier) எனப்படும் இந்த அமைப்பு இரத்தத்தில் உள்ள சத்துக்களில் தேவையானவற்றை மட்டுமே மூளைக்குள் அனுமதிக்கின்றன. மிகமுக்கியமான இந்த பாதுகாப்புச் சுவர் செல்பேசிக் கதிர்வீச்சால் பாதிப்படைகிறது. தேவையில்லாத நுண்ணூட்டங்கள் உள்ளே செல்லும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பலவிதமான மூளைப் பாதிப்புகள் தாக்குகின்றன.
செல்பேசிக் கதிர்வீச்சு மூளையைப் பாதிக்கும் 
மரபணு பாதிப்பு: செல்பேசி நுண்ணலைகளால் மனித மரபணு பாதிப்படைகிறது. டி.என்.ஏ சேதமடைதல், தன்னைத்தானே சீரமைத்துக்கொள்ளும் ஆற்றலைக் குறைத்தல் போன்ற பல விளைவுகள் நேருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றன. மனித உயிரணுக்களில் ஏற்படும் சேதம் காலப்போக்கில் புற்றுநோயாகவும் மாற்றமடைகிறது.

இருதய அறுவை சிகிச்சை செய்தோருக்கு பாதிப்பு: விமானங்களின் தகவல் தொடர்பை செல்பேசி பாதிக்கிறது என்பதால் விமானப் பயணங்களின் போது செல்பேசியை அணைத்து வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போன்றுதான் மருத்துவமனைகளில் உள்ள பலவிதமான மின்னணுக் கருவிகளின் செயல்பாட்டை செல்பேசி பாதிக்கிறது. இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற சிக்கலான மருத்துவ இடங்களில் செல்பேசி அணைத்து வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இருதைய அறுவை சிகிச்சையின் போது 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டோருக்கு செல்பேசிகள் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடும். செல்பேசியை இயக்கும் போது அளிக்கப்படும் மின்னணுக் கட்டளைகள் பேஸ் மேக்கர் கருவியின் செயல்பாட்டில் தலையிட்டு தவறான கட்டளைகளைக் கொடுத்து பேஸ் மேக்கர் கருவியை தாறுமாறாக இயக்கச் செய்யும் வாய்ப்பு உள்ளதாக அறிவியளாளர்கள் எச்சரிக்கின்றனர்.

காதுக் கோளாறுகள்: செல்பேசிகளால் காது கேட்கும் திறன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, 'ரிங்சியெட்டி' எனப்படும் ஒன்றுமில்லாமல் இறைச்சல் சத்தம் காதுக்குள் கேட்கும் துன்பத்தால் பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காதின் கேட்கும் திறன் என்பது காதுக்குள் இருக்கும் 16000 இழை உயிரணுக்களின் நலத்தைப் பொருத்ததாகும். இந்த இழை உயிரணுக்கள் செல்பேசிக் கதிர்வீச்சால் சேதமடைகின்றன. இவை மீண்டும் வளருவது நின்றால் கேட்கும் திறன் குறைய ஆரம்பித்துவிடும். தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் செல்பேசியில் பேசுபவர்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் கேட்கும் திறனைக் கணிசமாக இழந்து போவார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
கண்கள் பாதிப்பு: தொடர்ச்சியாக செல்பேசியில் பேசுவது கண்களைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியாதாகும். செல்பேசியை தலைக்கு அருகிலேயே வைத்துப் பேசும்போது அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் தலை சூடாகிறது. எனினும் தலைப்பகுதியில் அதிக இரத்த ஓட்டம் ஏற்பட்டு இந்த வெப்பம் மற்ற பகுதிகளால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இதனால் தலை, காது பகுதிகள் சூட்டிலிருந்து ஓரளவுக்கு தப்புகின்றன. ஆனால், இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடு கண்ணில் இல்லை.

மனித விழியில் சரளமான இரத்த ஓட்டம் இல்லாததால், செல்போன் கதிர்வீச்சால் கண்ணில் ஏற்படும் வெப்பம் கண்ணை சூடாக்குகிறது. வெப்பத்தின் அளவு மிக அதிகமாகும் போது விழித்திரைப் பாதிப்படைகிறது. பார்வைக் குறைபாடுகள் நேருகின்றன.

எலும்பு பாதிப்பு: மனித எலும்பு தேய்வதற்கு செல்பேசிகள் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இடுப்பில் செல்பேசியை அணிந்து செல்வோரை மருத்துவ ஆய்வாளர்கள் ஆராய்ந்து பார்த்ததில், அவ்வாறு அணியாதவர்களை விட அதிகமாக இடுப்பு எலும்புப் பகுதி தேய்ந்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். எனவே, மனித உடலில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தொலைவில் செல்பேசிகளை வைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

தூக்கமின்மை: செல்பேசிகளால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு தூக்கமின்மை. குறிப்பாக நான்காம் கட்ட தூக்கம் எனப்படும், மனித உடலும் மூளையும் தன்னைதானே சீரமைத்துக் கொள்ளும் தூக்கத்தை செல்பேசிகள் கெடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
செல்பேசிக் கதிர்வீச்சு தூக்கத்தைக் கெடுக்கும் 
தூங்குவதற்கு முன்பு செல்பேசியில் பேசுவதால் தூக்கம் கெடுகிறது. தலைவலி, மன அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் தூங்குவதற்கு முன்பு செல்பேசியில் பேசுவதும், செல்பேசியை தலைக்கு அருகில் வைத்துத் தூங்குவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், படிப்பில் கவனமின்மை, ஆளுமையில் மாற்றம் எனப்பலக் கேடுகள் நேருகின்றன.
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் செல்பேசிக் கதிர்வீச்சு
குழந்தைகள் பாதிப்பு: செல்பேசியாலும், செல்போன் கோபுரங்களாலும் சிறுவர்களும் குழந்தைகளும் அதிகமாக பாதிப்படைகின்றனர். குழந்தைகளின் சிறிய தலை, சிறிய அளவில் மூளை, மழுமையாக வளர்ச்சியடையாத எலும்புகள், மென்மையான தோல், மெல்லிய செவி என எல்லாமும் அதிக அளவுக்கு மின்காந்த கதிர்வீச்சால் பாதிப்படைகின்றன.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் - கதிர்வீச்சின் பாதிப்புகள் அவர்களை எளிதில் தாக்குகின்றன. செல்பேசிக் கருவிகளை வைத்து விளையாடும் குழந்தைகள் ஞாபக சக்திக் குறைவு, கவனக் குறைவு, கற்கும் திறன் குறைவு உள்ளிட்ட பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளாவது உறுதி செய்யப்பட்டுள்ளாது.

எனவேதான், பெரும்பாலான மேற்குலக நாடுகள் 16 வயதுக்கு கீழுள்ளவர்கள் செல்பேசியை பயன்படுத்த பயன்படுத்த வேண்டாம் என வெளிப்படையாக அறிவுறுத்துகின்றன.

பெண்கள் பாதிப்பு: கருவுற்ற தாய்மார்கள் செல்பேசியைப் பயன்படுத்துவதும், செல்பேசிக் கோபுரங்களுக்கு அருகில் வசிப்பதும் மிக ஆபத்தானதாகும். கருவுற்ற தாய்மார்கள் செல்பேசி பேசுவதால் கருச்சிதைவு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறே, பிறந்த குழந்தைகளிடம் நடத்தை மாற்றம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இப்படியாக - மனிதர்களுக்கு எண்ணற்ற பாதிப்புகளை செல்பேசி மின்காந்தக் கதிர்வீச்சு ஏற்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், கருவுற்ற தாய்மார்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். 
செல்பேசிக் கோபுரம் =24 மணி நேரக் கதிர்வீச்சு
செல்பேசிகள் சில மணி நேரப் பயன்பாட்டால் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றால், செல்பேசிக் கோபுரங்கள் அதைவிட பலமடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. செல்பேசிக் கோபுரத்திலிருந்து ஒவ்வொரு நாலும் இருபத்தி நான்கு மணி நேரமும் மிக அதிக அளவான கதிர்வீச்சு வீசிக்கொண்டே இருக்கிறது. இதனால் செல்பேசிக் கோபுரங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் எல்லா நேரமும் கதிவீச்சால் தாக்கப்படுகின்றனர்.

தொடர்புடைய சுட்டிகள்:

எச்சரிக்கை: செல்பேசி கதிர்வீச்சை தவிர்ப்பது எப்படி? செல்பேசி நிறுவனங்கள் மறைக்கும் உண்மைகள்.

செல்பேசி மாசுபாடு என்றால் என்ன?