Pages

புதன், ஜனவரி 23, 2013

வன்னியப் பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டால் மருத்துவர் அய்யாவுக்குத் தடையா? மானம் காக்க கடைசிவரைப் போராடுவோம்.

"வன்னியப் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அனைத்து சமுதாயப் பெண்களும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று சொல்வது ஜனநாயக நாட்டில் ஒரு குற்றமா? இதற்காக கடலூர் மாவட்டத்தில் நுழைய மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களும் வன்னியர்களும் அண்ணன் தம்பிகள் ஆகலாம், மாமன் மச்சான் ஆகக் கூடாதா? என்கிறார்கள். கலப்புத் திருமணம்தான் சாதியை ஒழிக்க ஒரே வழி. எனவே, திட்டமிட்டு மாற்று சாதிப் பெண்களை கலப்புத் திருமணம் செய்யுங்கள் என்று பிரச்சாரம் செய்கின்றனர் (மாற்று சாதி ஆண்களைத் திருமணம் செய்யுங்கள் என்கிற பிரச்சாரம் இல்லை).

இந்த கோஷங்கள் தீவிரமாக்கப்பட்டு, "மாற்று சாதிப் பெண்களின் வயிற்றில் உனது கரு வளர வேண்டும்". "கவுண்டனக் கண்டா வெட்டு, கவுண்டன் பெண்ணைக் கட்டு". "வன்னியன் பொண்டாட்டி எங்களுக்கு வைப்பாட்டி" என்று நீள்கிறது.
பண்ருட்டியை அடுத்த முத்தண்டிக்குப்பம் -காவல் நிலைய சுற்றுசுவர்:" வன்னியரின் பொண்டாட்டி எங்கள் வப்பாட்டி " 


"கவுண்டனக் கண்டா வெட்டு, கவுண்டன் பெண்ணைக் கட்டு"

"கவுண்டனக் கண்டா வெட்டு, கவுண்டன் பெண்ணைக் கட்டு"

இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்து, 'வாங்க மாப்பிள்ளை' என்று அழைத்து விருந்து வைக்க வேண்டுமா?

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு உண்டா?

தமிழகம் இன்றைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சமூகமாகத்தான் இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் ஆண் நண்பர்கள் இரவுக் காட்சி இரண்டாம் ஆட்டம் சினிமாவுக்கு சென்று வருவது சாதாரணமான செயல். ஆனால், பெண்கள் தனியாக இரவுக் காட்சி சினிமாவுக்கு போக முடிகிறதா?
இதைச் சொன்னால், இதற்கு முன்பு மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததா? எல்லா காலங்களிலும் இளம்பெண்கள் மீதான வன்முறைகள் நடந்துகொண்டுதானே இருக்கிறது என்கின்றனர்.

ஆம். எல்லா காலங்களிலும் பெண்கள் மீதான வன்முறைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், சாதி ஒழிப்புக்காக குறிப்பிட்ட சமூகத்துப் பெண்களை ஏமாற்றுங்கள், கடத்துங்கள், பணப்பறிப்பு நடத்துங்கள் - என சீரழிவு நோக்கத்துடன் முன்பெல்லாம் பிரச்சாரம் எதுவும் நடக்கவில்லை. 

தன்னிச்சையாக சிலர் சமூக விரோத செயலில் ஈடுபடுவதற்கும் - சமூக விரோதச் செயல்களைத் திட்டமிட்டு ஒரு இயக்கமாக செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது.

'நாம் பள்ளி செல்லும் மாணவிகளை கேலி செய்யலாம், சடையைப் பிடித்து இழுக்கலாம். மார்பில் முட்டையை மோதி உடைக்கலாம். அதனை தட்டிக்கேட்க யாராவது வந்தால் நமக்கு பாதுகாப்பாக ஒரு இயக்கம் இருக்கிறது, சட்டம் இருக்கிறது' என்கிற துணிச்சல் முன்பெல்லாம் இருந்ததில்லை. இப்போது இருக்கிறது. இத்தகைய அத்து மீறலகள் எங்கெங்கும் நடக்கின்றன.

பள்ளி, கல்லூரி மாணவிகளை காதல் நாடகம் நடத்திக் கடத்திச் சென்றால் - அந்தக் கடத்தல்காரர்களுக்கு ஆதரவு அளிக்க, ஆலோசனை அளிக்க, ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு மூளைச் சலவைச் செய்ய, காவல் நிலையத்தில் கட்டைப் பஞ்சாயத்து நடத்த, பணபேரம் பேச என்று தமிழ் நாட்டில் ஒரு தொழில்முறைக் கூட்டம் உருவாகியுள்ளது. 

'இதுதான் சாதி மறுப்புத் திருமணப் புரட்சி' என்று மருத்துவர் அய்யா இதனை வரவேற்று 'வாழ்த்துப் பா' பாட வேண்டுமா?

காதல் நாடகம் நடத்துகிறார்கள். கட்டைப் பஞ்சாயத்து நடத்துகிறார்கள். தட்டிக் கேட்டால் வன்கொடுமை சட்டத்தைக் காட்டி மிரட்டுகிறார்கள். இதையெல்லாம் எதிர்த்துக் கேட்டால் எங்கள் மண்ணில் நாங்கள் நடமாடக் கூடாதா?

வன்னியர்களும் பெண்களின் மானமும்

மனிதன் உணவில்லாமல் இருப்பான், ஆடையில்லாமல் இருக்க மாட்டான். மானம் பெரிதென போராடிச் சாவதைப் பெருமையாக நினைப்பவர்கள் வன்னியர்கள். இதற்கு வரலாற்று ரீதியிலான காரணங்கள் உள்ளன.
துரியோதனன் தன்னை அவமானப்படுத்தினான் என்பதற்காக திரௌபதி தனது கூந்தலை முடிய மறுத்து "துரியோதனன் கொல்லப்பட்ட பின்பு அவனது குருதியை எடுத்து எண்ணெயாகப் பூசி, எலும்பை சீப்பாக்கி தலைவாரி, குடலைப் பூவாகச் சூடி குழல் முடிப்பேன்" என்று சபதம் செய்ததை ஆயிரம் வருடங்களாகப் படித்தும் கேட்டும் நாடகமாக நடித்தும் வருபவர்கள் வன்னியர்கள். நெருப்பிலே தோன்றிய தெய்வம் திரௌபதி என்று இந்தியாவிலேயே ஊருக்கு ஊர் கோவில் அமைத்து வழிபட்டு வரும் ஒரே சமூகம் வன்னியர்கள்தான்.

திரௌபதியின் கதையை ஆண்டுதோரும் பாரதமாகப் படிக்கவும் பாரதக் கூத்தாக நடத்தவும் நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கி, பல்லவர்களும், சோழர்களும், காடவராயர்களும் இதற்காகவே பல மானியங்களை வன்னியர் பகுதிகளில் வழங்கி வைத்துள்ளார்கள். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற வில்லிபுத்தூரார் பாரதம் வன்னியர்களுக்காக எழுதப்பட்டதுதான். இன்றைக்கும் பாரதம் படிப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. (இங்கே காண்க)
மாமல்லபுரம் சிற்பங்களில் திரௌபதி
மருத்துவர் அய்யா அவர்கள் காதல் நாடக ஏமாற்றுக் கூட்டத்துக்கு எதிராக ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கிறார்? என்று பலருக்கும் வியப்பு இருக்கலாம். ஆனால், அதுதான் அவர் இயல்பு. அதுதான் அவர் மரபு. 

இந்த சிக்கலுக்கு தீர்வு என்ன?

மருத்துவர் அய்யா பேசுவது அபாண்டம் என்று சொல்லி, இந்த சிக்கலை மூடிவிட ஒருவராலும் முடியாது. உண்மையிலேயே சமூக அமைதியின் மீது அக்கறை இருந்தால் -
  • சாதிமறுப்புத் திருமணம் என்கிற கட்டுக்கதைகளை நிறுத்துங்கள். சாதிமறுப்பு திருமணங்களால் எந்த ஊரில், எந்த தெருவில், எந்த வீட்டில் சாதி ஒழிந்தது? திருணங்கள் மூலம் ஒரு காலத்திலும் சாதி ஒழியாது. இல்லாத ஒரு தீர்வை கற்பனையாகத் திணிக்காதீர்.
  • பள்ளி, கல்லூரி செல்லும் பெண்களின் படிப்பையும், வாழ்வையும் தன் மூலம் அவர்கள் குடும்பத்தையும் சீரழிக்கும் காதல் நாடகச் சதிக்கு முடிவுகட்ட முன்வாருங்கள் (படித்து முடித்து வேலைக்கு போன பின்பு காதலர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாதா? கல்லூரியிலிருந்து கடத்திப்போய் தான் காதல் திருமணம் நடக்க வேண்டுமா?)
  • வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தினை முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதற்கு முடிவு கட்டுங்கள்.
  • பிரேசில், சிங்கப்பூர், ஜப்பானில் இருப்பது போன்று 21 வயதுக்குள் திருமணம் என்றால் அதற்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயம் ஆக்குங்கள்.
- இதையெல்லாம் விட்டுவிட்டு 'சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும்' என்கிற நினைப்பில் மருத்துவர் அய்யாவுக்கு தடை விதிக்காதீர். (தடையைத் தூளாக்க சில நிமிடங்கள் ஆகாது. ஆனால், நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், அதனை சட்டப்படியே எதிர்கொள்வோம்).

4 கருத்துகள்:

Subramanian Lokesh சொன்னது…

இந்த மாதிரி கிறுக்கு தனமாக செய்பவர்களை, நடுநிலையாளர்கள் என்னும் திருட்டு கபோதிகள் மறைமுகமாக வளர்த்து லாபமடைகின்றனர். கருஞ்சட்டை சுப.வீ, கீ.வீ, இன்னும் தமிழ் நல்லுல்லகம் போற்றும் வீணர்கள் இதை கண்டும் காணாமலும், கண்டாலும் முக்காடு போட்டு ஓடுவார்கள். யாரிடம் பொருள் இருக்கிறதோ அவர்களை அடித்து பிடுங்க வேண்டும் அல்லது ஏமாற்றி வஞ்சனை செய்து பிடுங்க வேண்டும் என்று தனுஷ் போன்ற அதி முற்போக்கு சிந்தனையுடன் படம் எடுத்து பாடம் நடத்த சொல்வார்கள். சாக்கடை சங்கராச்சாரியார் போன்ற இன்ன பிற பக்கிகளும் குழம்புன குட்டையில் இருந்து மீன் பிடித்து சந்தோஷப்பட்டுக்கொள்ளும். கொலைஞர் தனது தோல்விக்கு பழி தீர்த்து கொண்டிருக்கிறார், அவர் உசுப்பிவிட்டு இன்னும் எத்தனை பேர் வாழ்கையை பாழாகிக்க போகிறார்களோ!

இவங்களுக்கு எதுக்கு கவுண்டர்களை வெட்டு என்றுசொல்லிகொடுகிரார்கள் என்று புரியவில்லை. ஒரு வேலை எடுப்பார் கை பிள்ளையாக இந்த கூட்டம் இருக்குமோ??? ஓ இந்த இரண்டு சமூகங்களும் மோதி கொள்ளும் போது பஞ்சாயத்து செய்து பணம் பறிக்க நினைகிரார்களோ???

Subramanian Lokesh சொன்னது…

இதற்க்கு ஒரு நல்ல வழி திமுகவை நாடாளுமன்ற தேர்தலிலும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் கொலைஞர் தாம் செய்தது தவறு என்று இந்த தள்ளாத தொன்னூற்று ஒரு வயதில் அறிந்து புரிந்து கொண்டு நடந்து கொள்வார். அல்லது நடுவில் மருத்துவர் அய்யாவிடம் மூக்குடைந்தது அன்று தமது உடல் நலத்தை பற்றி தாமே ஒரு புரளியை கிளப்பி, திசை திருப்ப முயற்சி செய்ததை போல், வேறு ஏதாவது நாடகம் நடத்துவார்!

Unknown சொன்னது…

இதற்க்கு ஒரு நல்ல வழி திமுகவை நாடாளுமன்ற தேர்தலிலும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் கொலைஞர் தாம் செய்தது தவறு என்று இந்த தள்ளாத தொன்னூற்று ஒரு வயதில் அறிந்து புரிந்து கொண்டு நடந்து கொள்வார். அல்லது நடுவில் மருத்துவர் அய்யாவிடம் மூக்குடைந்தது அன்று தமது உடல் நலத்தை பற்றி தாமே ஒரு புரளியை கிளப்பி, திசை திருப்ப முயற்சி செய்ததை போல், வேறு ஏதாவது நாடகம் நடத்துவார்!

JK சொன்னது…

இது போன்ற ஈன செயல்கள் 2000 களின் தொடக்கத்திலிருந்தே திட்டமிடப்பட்ட பணியாக , வலை அமைப்பினை ஏற்படுத்தி seசெய்து வருகிறார்கள். தொண்டு நிறுவனங்கள் பெண்களிடம் நாடக காதல் குறித்த விழிப்புணர்வை erpaduthஏற்படுத்த முன் வர வேண்டும்