Pages

வியாழன், ஜனவரி 10, 2013

பாவத்தைக் கழுவியதா ஆனந்த விகடன்: சமந்தாவுக்கு சிறந்த நடிகை விருது!

நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் குறித்து அநியாயமாக எதிர்ப்பு விமர்சனத்தை பத்திரிகைகளும் வலைப்பூ விமர்சகர்களும் எழுதினர். கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று வள்ளலார் சொன்னது போல, கௌதம் மேனனின் படத்தை உள்வாங்கும் திறன் விமர்சர்களுக்கு இல்லை என்பதை இப்படம் மெய்ப்பித்தது. 

ஆனால், தாமதமாக வந்த பல வலைப்பூ விமர்சனங்கள் நீதானே என் பொன்வசந்தம் மிகச்சிறந்த திரைப்படம் என எடுத்துக்கூறின. (1. வீடு திரும்பல்,  2. யுவகிருஷ்ணா, 3. நீதானே என் பொன்வசந்தம்: 2012-ன் மிகச்சிறந்த காவியம்!)
மிகச்சிறந்த இப்படத்திற்கு 40 மதிப்பெண்கள் மட்டுமே கொடுத்து பாவம் தேடிக்கொண்டது ஆனந்த விகடன். ஆனால், நல்ல வேலையாக 2012 ஆம் ஆண்டின் சிறந்த நடிகை என்று "நீதானே என் பொன்வசந்தம்" கதாநாயகி சமந்தாவிற்கு விருது வழங்கியுள்ளது ஆனந்த விகடன்.

"வீடு திரும்பல்" வலைப்பூவிலிருந்து ஒரு பின்னூட்டம்:

"வெளியேதெரியாமல் அமுங்கிப்போன சில நல்ல படங்களை தேடிப்பிடித்து பார்க்கவைத்தவர்கள் நம் இணையதள விமர்சகர்கள் இவர்கள் விமர்சனம் தரமானது, உண்மையானது. ஆனந்தவிகடன் போன்ற பத்திரிக்கைகள் தரமான படங்களுக்கு 45 மதிப்பெண்னும், குப்பை படங்களுக்கு 42 மதிப்பெண்னும் வாரி வழங்கும் வருமான விசுவாசம் இங்கே இருக்காது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருந்த நீதானே என் பொன் வசந்தத்திற்கு இவர்களின் எதிர்மறையான விமர்சனம் படத்தின் மீதான எனது ஆர்வத்தை குறைத்துவிட்டது. 
"அம் மனநிலையிலேயே படத்தை பார்த்தேன். ஆனால் படம் ஓட ஓட என்னை முழுதும் ஆக்ரமித்துவிட்டது. படம் முடிந்தும் அதில் இருந்து வெளிவர முடியவில்லை. சமந்தா- சமகால நடிகைகளிடம் இல்லாத ஒரு ஈர்ப்பு. கணகள் முழுவதும் காதல். காதலை வெளிப்படுத்தும் பொழுதும், பிரியும்பொழுதும் அவரின் துடிப்பு அழகு. கடைசி 30 நிமிடம் fentastic. 
ஜீவாவின் திருமண வரவேர்ப்பிற்கு சென்று அங்கு அவரின் துடிப்பு மனதை பிசைகிறது. இங்கே இளையராஜா வேறு... ஐயோ...பூங்காவில் ஜீவா திருமணத்தை பற்றி பேசும்போது...அது உன்னை பத்தி பேசுனது, கல்யாணத்த பத்தி இல்ல என்று கூறும் காட்சி...இன்னும் திரும்ப திரும்ப இப்படத்தை பார்த்துகொண்டே இருக்கின்றேன். கௌதமின் படைப்புகளில் மிகத்தரமான படைப்பும் இதுதான் என்பது என் இரசனையின் முடிவு, விண்ணைதாண்டி வருவாயாவை விட. I hate web reviewers. என்ன ஆச்சி உங்களுக்கு. சறுக்கியது கௌதம் அல்ல.- ரசிகர்கள்தான்." என்று அந்த வலைப்பூவில் கூறப்பட்டிருந்தது.

கொஞ்சமாவது பாவத்தைக் கழுவிய ஆனந்த விகடனுக்கு நன்றி.

9 கருத்துகள்:

Hari சொன்னது…

Samantha nalla nadigai nu dhana vikatan solli iruku. Avar naan ee film la kuda nalla act Panni irundhar. adhuvum 2012 la dhan vandhadhu. Adhukaga andha virudhu nee dhane enpon vasantham film ku vikatan ezhudhiyadharkaga pavathai kazhuviyadhu enrallam illai. Nee.po.va. 2012 la vandha miga periya mokkai film. But samantha nalla nadigai dhan . Vikatan solliyadhai neengal epadi edutthukondal adharku vikatan ena seiyyum.

Raja சொன்னது…

சமந்தா வன்னியரா? ஒரு சின்ன சந்தேகம்

அருள் சொன்னது…

@Raja

ஒரு 'தமிழ்நாட்டு' நடிகைக்காக பேசக்கூடாதா?

சம்பூகன் சொன்னது…

எனக்கும் அந்த சந்தேகம்தான்(சமந்தா வன்னியரா?)ஆனாலும் சமந்தாவைப பாராட்டிய இந்தப் பதிவை நிச்சயம் பாராட்டவேண்டும்.படம் பார்க்கும் போது ஈர்த்தவை 3.ஒன்று இளையராஜாவின் பின்னணி,இரண்டு கௌதமின் இயக்கம்,காட்சி அமைக்கும் விதம்,மூன்று சமந்தாவின் அற்புதமான நடிப்பு.விகடனில் 45 மார்க் எடுக்கவேண்டுமானால் சில செயல்களைச் செய்ய வேண்டுமாம்.இது கோடம்பாக்கம் ரகசியம்.

அருள் சொன்னது…

@சம்பூகன்

சந்தேகம் எதற்கு? சமந்தா வன்னியர் அல்ல. அவர் ஒரு சென்னைப் பெண்.

mani சொன்னது…

ithula engaya vanthuchu unga jathi

kumudini சொன்னது…

முக்கிய பிரச்சினை நமது வலைத்தள விமர்சகர்கள் எதைத்தான் தமிழ் திரைப்படத்தில் எதிர்பார்க்கின்றார்கள் என்பதுதான். தமிழ் பதிவர்களை பொருத்தவரை ஒரு எதிர்பார்ப்போடு படத்துக்கு செல்வார்கள் அங்கு அவர்கள் எதிர்பார்த்தபடி கதை இல்லாது வேறு வடிவில் இருந்தால் அந்த படத்தை ஈவு இஇரக்கம் இல்லாமல் விமர்சித்து தள்ளி விடுவார்கள்.

கெளதம் மேனனின் சிறப்புகளில் ஒன்று தனது படங்களில் பெற்றோரை கொடூர வில்லன்களாக காட்ட மாட்டார். நீஎபொ இலும் அவ்வாறு இல்லை. வாரணம் ஆயிரம் படத்திலும் இல்லை.
"கதாநாயகி தனது காதலை சொல்லும் போது தனது அப்பாவுக்கும் உன்னை பிடிக்கும் என்றே சொல்கிறாள்"
http://www.youtube.com/watch?v=Hb8S-MFpPSM

VTV லும் ஜென்னி யின் பெற்றோரின் எதிர்ப்பு இருந்தாலும் அவர்களை கொடூர வில்லன்களாக காட்டவில்லை. ஆனால் பெற்றோரின் விருப்பின்மை அவர்கள் பார்வையில் நியாயமானதாக தோன்றும்.

"அவர் ஒரு சென்னைப் பெண்." அவர் தமிழ் பெண் அல்ல. தெலுங்கு மலையாள பெற்றோருக்கு பிறந்த பெண்.

அருள் சொன்னது…

kumudini சொன்னது…

// //அவர் தமிழ் பெண் அல்ல// //

அடையாளச் சிக்கலுக்கு என்னால் விளக்கம் சொல்ல முடியாது. அது தேவையும் இல்லை. ஏனெனில், 'தமிழ் பெண்' என்கிற வார்த்தை மிகவும் குழப்பமானது. அதற்கு விடைதேட நம்மால் முடியாது என்றே நினைக்கிறேன். (இதற்கு மேல் பேசினால் யாராவது அடிக்க வருவார்கள்).

இந்த வம்பு எனக்கு வேண்டாம் என்பதால் தான், சமந்தா ஒரு 'தமிழ்நாட்டுப் பெண்' 'சென்னைப் பெண்' என்று கூறினேன்.சமந்தா ஒரு தெலுங்குப் பட நடிகை என்று சொல்வது எளிது.

'தமிழ் பெண்' என்பது ஒரு தேசிய இன அடையாளம் என்று எடுத்துக்கொண்டால், 'தேசிய இன அடையாளத்தை தேர்வு செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு' என்கிற அடிப்படையில், சமந்தா ஒரு தமிழ்ப் பெண் என்று கூறலாம்.

ஏனெனில், அவரை அவரே அப்படித்தான் கூறிக்கொள்கிறார்.

"Samantha is from Chennai; her mother is a Malayali, her father speaks Telugu, and she insists she's a Tamilian." (The Hindu, 1.3.2010) http://www.thehindu.com/arts/cinema/article124253.ece

சரி, எதற்கு இந்த வெட்டி ஆராய்ச்சி!

அருள் சொன்னது…

கருத்துகளுக்கு நன்றி

@kumudini
@mani
@சம்பூகன்
@Raja
@Hari