Pages

ஞாயிறு, ஜூன் 02, 2013

திருமா திமுக கூட்டணியில் தொடர்வார்: உறுதிசெய்த கலைஞருக்கு நன்றி.

"திமுக கூட்டணியில் பாமக சேரப்போகிறது, திருமாவின் விசிக அக்கூட்டணியில் இருந்து வெளியேரும்" என்று தமிழ்நாட்டின் அரசியல் போக்கினை தமது விருப்பம்போல திரித்து பத்திரிகைகள் லாவணி பாடிக்கொண்டிருந்தன.

ஒருபக்கம் என்னதான் பாமக தலைமையின் சார்பில் 'திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை' என பலமுறை தெளிவு படுத்தப்பட்டிருந்தாலும் - மறுபக்கம் சாதரண தொண்டனின் மனதில் 'ஒருவேளை பாமக திமுக கூட்டணியில் சேருமோ' என்கிற ஐயம் இருக்கவே செய்தது.

லண்டனில் கடந்த ஆண்டு நடந்த ஈழத்தமிழர்கள் கூட்டத்தில் - "எந்தக் கூட்டணியில் இருப்பீர்கள்?" என்று தொல். திருமாவளவனிடம் ஈழத்தமிழர்கள் கேட்டார்கள். அதற்கு "கூட்டணியை தீர்மானிக்கும் நிலையில் நாங்கள் இல்லை. திமுகவும் அதிமுகவும்தான் அதனை முடிவுசெய்கின்றன. எந்த கட்சி எங்களை சேர்த்துக் கொள்ளுமோ அந்தக் கூட்டணியில் விசிக இருக்கும்" என்று அவர் பதில் அளித்தார். அப்போது நானும் அந்தக் கூட்டத்தில் இருந்தேன்.

என்னைப்பொருத்தவரை, பாமக திமுக கூட்டணியில் சேருமா? என்பது ஒரு கேள்வியே அல்ல. அதற்கான தேவையும் இல்லை. பாமக அடுத்துவரும் தேர்தல்களை தனி அணியாகவோ அல்லது தனித்தோ சந்திக்கும். ஜூலை மாதம் ராஜ்யசபா தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கும் நிலை வந்தால் பாமகவின் மூன்று உறுப்பினர்களும் அந்த வாக்குப்பதிவைப் புறக்கணிப்பார்கள்.

எனவே, எதிர்கால அரசியல் கூட்டணிகள் குறித்து என்னுடைய ஆசை விருப்பம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் தொல். திருமாவளவன் அவர்களின் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தொடரவேண்டும். அது நடக்காமல் போய்விடுமோ என்கிற பயம் மனதின் ஒரு ஓரத்தில் இருந்தது.

ஆனால், கலைஞரின் 90 ஆவது பிறந்தநாள் கூட்டத்தில் பேச தொல். திருமாவளவன் அழைக்கப்பட்டுள்ளார். எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தொடரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இருக்கும்.

இந்த நிகழ்வு உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

மிக்க மகிழ்ச்சி

Unknown சொன்னது…

தலைக்கு தெரியாததா