Pages

புதன், ஜூன் 05, 2013

சாதிவெறி தலைக்கேறிய தி இந்து நாளிதழ்: பிடிக்காதவர்கள் மீது அபாண்டமாக பழிசுமத்தும் அவலம்!

தி இந்து நாளிதழுக்கு சாதிப்பித்து தலைக்கேறியுள்ளது. பத்திரிகை தர்மத்தை குழுதோண்டி புதைத்து தனக்கு பிடிக்காதவர்கள் மீது, சாதிவெறியுடன் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுகிறது. பழைய பார்ப்பனர்களும், புதிய பார்ப்பனராக உருவாகியுள்ள சாதியினரும் சேர்ந்து, தி இந்து நாளிதழின் மூலம் வன்னியர்களுக்கு எதிரான வன்மத்தை பரப்பிவருகின்றனர்.

தருமபுரி கலவரம், மரக்காணம் படுகொலை என சாதிதொடர்புடைய நிகழ்வுகள் குறித்த செய்திகள் மற்றும் கட்டுரைகளை வெளியிடும்போது, நடுநிலைத்தவறி ஒருதலைப்பட்சமாகவே தி இந்து நாளிதழ் எழுதி வருகிறது.

தி இந்து நாளிதழின் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறிக்கு தற்போது புதிதாக செய்தி எதுவும் கிடைக்காத நிலையில், பொதுவான குற்ற நிகழ்வுகளிலும் சாதிவெறியை புகுத்தும் தந்திரத்தை கையாண்டுள்ளது. அதற்கு ஒரு உதாரணம்தான் தற்போது வந்துள்ள "இலங்கைத் தமிழர் கடத்தல்" செய்தி. 
இந்தக் கடத்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டுவரும் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் - தி இந்து நாளிதழ் மட்டும் சம்பந்தமே இல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியை இக்கடத்தலில் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.

ரூ. 2.4 கோடி கேட்டு மனைவியுடன் இலங்கைத் தமிழர் கடத்தல்!

"லண்டனைச் சேர்ந்தவர் கணபதி பிள்ளை தவராஜா. இவரது மனைவி ஜலஜா. இலங்கைத் தமிழரான இவர்கள் இருவரும் சென்னை விமான நிலையத்தில் வைத்து கடத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பத்தில் ஒரு வீட்டில், கடத்தல் கும்பல் பிடியிலிருந்த இலங்கைத் தமிழ் தம்பதியை, தனிப்படையினர் மீட்டனர். மேலும் தம்பதியினரை கடத்தி, பணம் கேட்டு மிரட்டியதாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்".

- இதுதான் செய்தி. இதில் "முக்கியக் குற்றவாளியாக தேடப்படுபவர் சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளார்" என பத்திரிகைகள் கூறியுள்ளன.

நக்கீரன் செய்தி:
தினகரன் செய்தி:
 
"இந்த வழக்கில் தொடர்புடைய மந்தாரகுப்பத்தை சேர்ந்த சத்யா தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறோம். இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர். இவ்வாறு கமிஷனர் ஜார்ஜ் கூறினார்." (செய்தியை இங்கே காண்க: இலங்கை தொழிலதிபர், மனைவி மீட்கப்பட்டது எப்படி?)

தினமலர் செய்தி: 

"சென்னை வந்த, இங்கிலாந்து வாழ், இலங்கை தமிழ் தம்பதியை கடத்திய, எட்டுபேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய, தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகரை தேடி வருகின்றனர். 

"... தவராஜா தம்பதியினர் விமான நிலையத்தில் இறங்கி, வெளியில் வந்த போது, அவர்களை, அழைத்துச் செல்ல வந்தவர் போல், பெயர் எழுதப்பட்ட பலகையுடன், சத்யா நின்றார். சத்யாவை ஓட்டலில் இருந்து வந்தவர் என நம்பிய, தவராஜா தம்பதியினர், அவருடன் சென்று, காரில் ஏறினர். ...தொடர்ந்து, கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு சென்ற கடத்தல்காரர்கள், மந்தார குப்பத்தில் உள்ள சத்யாவின் வீட்டில் தங்க வைத்திருந்தனர்." (செய்தியை இங்கே காண்க:ரூ.2.47 கோடி கேட்டு, சென்னையில் இருந்து கடத்தப்பட்ட பிரிட்டன் தம்பதி நெய்வேலியில் மீட்பு)

தினமணி செய்தி:
"வழக்கின் முக்கிய குற்றவாளியான சத்யாவை போலீஸார் தேடி வருகின்றனர். சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவர் மீது மேலும் பல வழக்குகள் உள்ளனவாம்." (செய்தியை இங்கே காண்க: ரூ. 2.4 கோடி கேட்டு மனைவியுடன் இலங்கைத் தமிழர் கடத்தல்)

- இப்படி மற்ற எல்லா பத்திரிகைகளும், இலங்கைத் தமிழ் தம்பதிகளை கடத்தியவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள சத்யா என்றும், நெய்வேலி அருகே அவரது வீட்டில்தான் கடத்தப்பட்டவர்கள் வைக்கப்பட்டிருந்தனர் என்றும் கூறியுள்ள நிலையில்,

...தி இந்து நாளிதழ் மட்டும் "கடத்தப்பட்டவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தனர்" என்று எழுதியுள்ளது. (They were taken to Mandharakuppam, a village near Neyvelli and held hostage in a house allegedly belonging to a PMK member. The HINDU செய்தியை இங்கே காண்க: Kidnapped man’s employee behind plot)
தி இந்துவுக்கு ஏன் இந்த வன்னியர் எதிர்ப்பு சாதிவெறி?

வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டுவரும் கட்சி என்பதும், அந்தக் கட்சியினர் தம்மை சாதியைக் கடந்த கட்சியினர் என்று கூறிக்கொள்வதும் - அந்தக் கட்சியின் முக்கிய கொள்கையாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இருப்பதும் பலரும் அறிந்த செய்திதான்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான ஒரு அமைப்பை சேர்ந்த குற்றவாளியை, பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர் என்றும் சொல்லும் அளவுக்கு தி இந்துவுக்கு வன்னியர் எதிர்ப்பு சாதிவெறி தலைக்கேறி இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட பிழைப்பு இந்த 'மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவுக்கு' தேவைதானா? 

வாழ்க பத்திரிகை தர்மம்!

4 கருத்துகள்:

thiyagarajan.s சொன்னது…

அந்த பத்திரிகை மிக கேவலமான பத்திரிகைதான்...

Unknown சொன்னது…

இன்னும் இது போன்ற கட்டுரைகள் நிறைய நாம் எளுத வேண்டும். இந்து பத்திரிகை மேல் வழக்கு போட்டால் மிகவும் நன்றாக இருக்கும்..

முத்துராமன்.இரா

Unknown சொன்னது…

இது போன்ற கட்டுரைகள் இன்னும் வர வேண்டும்...

முத்துராமன்.இரா

pspandy சொன்னது…

file a case against Hindu magazine