Pages

திங்கள், டிசம்பர் 30, 2013

காரைக்காலில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

"காரைக்காலில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
"தில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப் பட்டதன் முதலாம் ஆண்டுநினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்ட நிலையில், அதைவிட பலமடங்கு கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு தமிழ்நாட்டு இளம் பெண் ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதைக் கண்டித்து குரல் கொடுக்க வேண்டிய அரசியல் கட்சிகள் அமைதி காப்பதுடன், இப்பிரச்சினையை திசை திருப்ப முயல்வது மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காரைக்காலில் உள்ள மதன் என்ற நண்பரை பார்க்க கடந்த 24 ஆம் தேதி காரைக்கால் சென்றுள்ளார். அவருக்கு துணையாக அவரது தோழியும் சென்றிருக்கிறார். அங்கு இளம்பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவம் பெற அப்பெண்ணும், அவரது தோழரும் நண்பரின் வீட்டுக்குச் சென்றனர். அந்த நேரத்தில் அப்பெண்ணின் தோழி தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது.

பின்னர் அந்த கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட அப்பெண்ணை, 7 பேர் கொண்ட இன்னொரு கும்பல் கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. நன்னிலம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கற்பனை செய்து பார்க்கக் கூட முடியாத கொடூரமாகும்.

இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. காரைக்கால் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நாஜீமின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் அப்துல் நாசர் தலைமையிலான கும்பலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஜெயகாந்தன் தலைமையிலான கும்பலும் தான் இக்கொடூரத்தை அரங்கேற்றியுள்ளன. காரைக்காலுக்கு வரும் பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்வதையே இந்த கும்பல்கள் தொழிலாக கொண்டுள்ளன.

இவர்களில் ஜெயகாந்தன் மீது 2 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன; அப்துல் நாசர் ஏற்கனவே பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.

நன்னிலத்தைச் சேர்ந்த இளம்பெண்களை காரைக்காலுக்கு அழைத்துவந்த மதன் என்பவர் காரைக்கால் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளரின் தம்பி என்றும், இவர் தான் அந்த இரு பெண்களையும் காதல் நாடகமாடி அழைத்து வந்து, அதுபற்றி தமது நண்பர்களுக்குத் தெரிவித்து பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. இவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் இந்த சம்பவத்தையே காவல்துறை உதவியுடன் மூடி மறைக்க சில அரசியல் தலைவர்கள் முயன்றுள்ளனர். 

முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் நேரடியாக தலையிட்டு விசாரித்ததால் தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அந்த பெண்ணின் புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் காரைக்காலில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உலகெங்கும் உள்ள ஊடகங்கள் பத்திபத்தியாக செய்தி வெளியிட்டுள்ளன. கலாச்சார பெருமைக்கு பெயர் போன இந்தியா ‘கூட்டுக் கற்பழிப்பின்’ தலைநகராக மாறி வருவதாக உலக ஊடகங்கள் காறி உமிழ்கின்றன.

ஆனால், தமிழகத்தின் முற்போக்கு சிந்தனையாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காக்கின்றனர். ஏன் இந்த கள்ள மவுனம்? மது அருந்திவிட்டு ரயிலில் பாய்ந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்ட போதும், ஆதிக்க சாதி வன்னியர்கள் தான் இதற்கு காரணம் என்று கொதித்து எழுந்து குற்றஞ்சாற்றியோரும், உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி பொய் அறிக்கை தாக்கல் செய்தோரும் இப்போது எங்கு போனார்கள்?

வன்னியர்கள் தவறு செய்யாதபோதும் அவர்களை சிலுவையில் அறைந்தவர்கள் இப்போது இஸ்லாமிய மற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தவறு செய்தது உறுதிசெய்யப்பட்ட பிறகும் வாய் திறக்க மறுப்பது ஏன்? தலித்துகள் பாதிக்கப்படாத போதே அவர்களுக்காக குரல் கொடுக்கும் போலி முற்போக்குவாதிகள் இப்போது முதலியார் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுக்கு பெருங்கொடுமை இழைக்கப்பட்டிருக்கும் நிலையில் அமைதிகாப்பது ஏன்? இது எந்த வகையான முற்போக்கு வாதம்?

என்னைப் பொறுத்தவரை யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவு காட்ட வேண்டும்; யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் இளம்பெண்களும் நிம்மதியாக நடமாட முடியாத நிலை காணப்படுகிறது. காதல் நாடகமாடி இளம் பெண்களை கடத்திச் செல்வதும் தொடர்கிறது. 

இதையெல்லாம் ஒரு தொழிலாகவே செய்துவருவது தலித் மக்களை காப்பதாக கூறி ஏமாற்றிவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்திய போதெல்லாம் சாதி உணர்வுடன் பேசுவதாக கூறி என்னை விமர்சித்த போலி முற்போக்குவாதிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டிக்கவில்லை. அதன்விளைவு தான் ஒரு இளம்பெண்ணை இரு குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகும்.

எனவே, முற்போக்கு வாதம் பேசுபவர்கள் தங்களின் வேடங்களை கலைத்து விட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களை கண்டிக்க முன்வர வேண்டும். அதேபோல், காரைக்கால் பாலியல் வன்கொடுமையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு காப்பாற்ற முயன்ற அரசியல்வாதிகள் யார், யார்? என்பதை காவல்துறை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை மற்றும் நிதி உதவியை புதுவை அரசு வழங்க வேண்டும்."

சனி, டிசம்பர் 28, 2013

காரைக்காலில் கற்பழிப்பு கூட்டணி: திமுக + விசிக கூட்டு? தலித் + இஸ்லாமியர் கூட்டு?

காரைக்காலில் தமிழ்நாட்டு இளம்பெண் 15 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் பலர் 'தலித் மற்றும் இஸ்லாமிய சமுதாயத்தவர்கள்' என்று செய்திகள் கூறுகின்றன (கற்பழிக்கப்பட்ட பெண் முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவராம்). 

குற்றுவாளிகளில் ஒருவரான 'நாசர்' என்பவர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு நெருக்கமாம். கைது செய்யப்பட்டுள்ள 'மதன்' என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளரின் தம்பி என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் புரட்சி செய்ய வந்தவர்கள் "தலித் + இஸ்லாமியர் கூட்டு" என்று அவ்வப்போது முழங்கி வந்ததற்கு இப்படி ஒரு கொடூரமான பொருள் இருக்கும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

பெண்ணுரிமைப் போராளிகளும், காதல் தூதர்களும் இப்போது எங்கே ஓடி ஒளிந்தனர்? உண்மை அறியும் குழுக்களுக்கு காரைக்காலுக்கு போக மட்டும் இன்னும் வழி தெரியவில்லையா?

(இந்தக் கொடுங்குற்றம் நடந்த பின்பும் இரண்டு நாட்களுக்கு வழக்கு பதிவு செய்யப்படாமல், காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது. இதற்காக சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, ஏட்டு சபாபதி ஆகியோர் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டனர்.)

குறிப்பு: 'குற்றவாளிகளை அவர்களது சாதி, மதத்தை வைத்து பார்க்கக் கூடாது' என்பதுதான் நியாயமாகும். ஆனால், தருமபுரி, திண்டுக்கல் நிகழ்வுகளில் வன்னியர்கள் மீது குற்றம் சாட்டும்போது, இதனை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.

மாலை மலர் செய்தி: "காரைக்கால் பெண் கற்பழிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது: வேளாங்கண்ணியில் பிடிபட்டார்"

The Hindu செய்தி:  "12 held in gang rape case"

வியாழன், டிசம்பர் 19, 2013

வெளியுறவுக் கொள்கை: இலங்கைக்கு ஒரு நீதி, அமெரிக்காவுக்கு ஒரு நீதியா?

"வெளியுறவுக் கொள்கை: இலங்கைக்கு ஒரு நீதி, அமெரிக்காவுக்கு ஒரு நீதியா?" - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

"அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயாணி கேப்ரகடே கைது செய்யப்பட்டதற்காக அந்நாட்டு அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில், இந்தியாவில் அமெரிக்க தூதரகத்துக்கும், தூதரகப் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் சலுகைகளையும் மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்திருக்கிறது.

வெளிநாட்டில் இந்தியத் தூதர் ஒருவர் கைது செய்யப்பட்டதும், அவரது தகுதிக்கு குறைவான முறையில் நடத்தப்பட்டதும் இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்ற முறையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. இந்தியாவின் இறையாண்மைக்கு எங்கிருந்து, எப்போது சவால் விடப்பட்டாலும் அதற்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

பெண் என்றும் பாராமல் இந்தியத் தூதரை அமெரிக்க காவல்துறையினர் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதற்கு பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அமெரிக்காவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர். வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் ஒருபடி மேலே போய், தேவயாணியை மீட்டு வரும்வரை ஓயமாட்டேன் என மாநிலங்கவையில் சபதம் மேற்கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் இந்திய அமைச்சர்கள் பலமுறை அவமதிக்கப்பட்ட போதெல்லாம் அமைதியாக இருந்த மத்திய அரசு, இப்போதாவது இறையாண்மையை காப்பதற்காக அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதி அளித்த மத்திய அரசு, இலங்கை கடற்படையினரால் இந்தியத் தமிழர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதி குறித்து பேச அனுமதி மறுத்திருக்கிறது. 

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்களக் கடற்படையினருக்கு, தமிழகத்தின் எதிர்ப்பை மீறி இந்தியாவில் பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் அல்லாத உறுப்பினர்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க மக்களவைத் தலைவர் மறுத்திருக்கிறார்.

இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்றும், அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது இருதரப்பு உறவை பாதிக்கும் என்பதால் அது பற்றிய விவாதத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் மக்களவைச் செயலகத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் கடிதம் எழுதியிருக்கிறது. அதன்பேரில் தான்  சிங்களப்படையினருக்கு பயிற்சி தருவது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கச்சத்தீவு பகுதியில் சிங்களப்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது குறித்தும், தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது குறித்தும் மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக உறுப்பினர்கள் கோரினர். அப்போதும், நட்பு நாடான இலங்கை குறித்து விவாதிக்கக் கூடாது என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதால் அனுமதி மறுக்கப்பட்டது. 

அதேபோல் எல்லையில் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய மத்தியஅரசு, இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. 

வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் அவமதிக்கப்பட்டதற்காக அமெரிக்காவின் உறவையே துண்டித்துக் கொள்ள துணிந்த இந்திய அரசு, ஓர் இனத்தையே அழித்த இலங்கை அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கூட மறுப்பது கண்டிக்கத்தக்கது.

அமெரிக்காவையும், பாகிஸ்தானையும் எச்சரிக்கத் துணிந்த இந்தியா, இலங்கையிடம் மட்டும் பணிந்து போவது ஏன்? பாதிக்கப்படுபவர்கள் தமிழர்கள் என்ற அலட்சியம் தான் இதற்குக் காரணமா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். 

இலங்கைப் பிரச்சினையில் இனியும் இரட்டை நிலையை மேற்கொள்ளாமல், அமெரிக்காவிடம் காட்டிய அதே அணுகுமுறையை, தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கையிடமும் இந்தியா காட்ட வேண்டும். இல்லாவிட்டால், இதற்குக் காரணமானவர்களுக்கு தமிழக மக்கள் சரியான நேரத்தில், சரியான பதிலடி தருவார்கள்."

வியாழன், டிசம்பர் 12, 2013

பணம் பெற்றுக்கொண்டு அதிமுக எம்.பி.க்கள் சிபாரிசு கடிதமா? வீடியோ ஆதாரம் வெளியீடு

பணம் பெற்றுக் கொண்டு இல்லாத ஒரு எண்ணெய் நிறுவனத்துக்கு சிபாரிசு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் ஒப்புக் கொண்டதாக கோப்ரா போஸ்ட் என்ற இணையதளம் இன்று வீடியோவுடன் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் அதிமுக எம்.பிக்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அதிமுக எம்.பிக்கள் மறுத்துள்ளனர். எனினும் கோப்ரா போஸ்ட் வெளியிட்டுள்ள வீடியோவைக் கீழே காணலாம்.

காணொலி காண்க:

அ.தி.மு.க., எம்.பி. பொள்ளாச்சி சுகுமார் - காணொலி
http://youtu.be/EuxXIokX3kk

அ.தி.மு.க., எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் - காணொலி
http://youtu.be/5cKuHo55AVA


செய்தி: OPERATION FALCON CLAW: COVER STORY

வெள்ளி, டிசம்பர் 06, 2013

பெண் பத்திரிகையாளர்கள் மீது மனுஷ்யபுத்திரன் அபாண்டம்: பாலியல் தொல்லையை சகிப்பது குறுக்குவழியில் முன்னேறும் தந்திரமா?

 
'நடிகையின் ரகசிய வாழ்க்கை - அந்தரங்கம் அம்பலம்!' என்கிற தலைப்புடன் வெளியாகியுள்ள ஒரு வாரம்இருமுறை பத்திரிகையில் பெண் பத்திரிகையாளர்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக மனுஷ்யபுத்திரன் கட்டுரை எழுதியுள்ளார்.

தெகல்கா ஆசிரியரின் பாலியல் வன்கொடுமைக்கு மறைமுக ஆதரவாக எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில் ஒரு சில பெண் பத்திரிகையாளர்கள் மீது அபாண்டமாக கூறப்பட்டுள்ளது.

"ஊடகங்களுக்குள் பெண்கள்...தங்களுடைய வேலையைத் தக்க வைத்துக்கொள்வதற்காக...தங்கள் மேல் இழைக்கப்பட்ட வன்முறைகளை சகித்துக்கொண்டு மௌனமாக இருந்துவிடுகின்றனர். ஒரு சில பெண்கள் குறுக்கு வழியில் முன்னேறிச் செல்வதற்கு தங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தவும் செய்கிறார்கள்" - என்று மனுஷ்யபுத்திரன் கூறியுள்ளார்.
  • இவரும் ஒரு பத்திரிகையாளர் என்பதால், அவருக்கு தெரிந்த உண்மையைத்தான் அவர் எழுதியுள்ளார் என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா? ஒவ்வொரு தொலைக்காட்சியாக 'தலையை ஆட்டி ஆட்டி பேசும்' இவருக்கு சில உண்மைகள் தெரிந்திருக்குமா?
  • பெண் பத்திரிகையாளர்கள் மீது அபாண்டமாக குற்றம்சாட்டும் இந்தக் கருத்தை பத்திரிகையாளர்கள் வேடிக்கைப் பார்ப்பது ஏன்? மௌனம் சம்மதத்துக்கு அடையாளமா?
எனினும், மனுஷ்யபுத்திரன் வாதத்தை நாம் நம்ப முடியாது, நம்பவும் கூடாது. பத்திரிகைகளின் பணியாற்றும் பெண்கள் அநீதியை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்கிறார்கள். அலுவலகத்தில் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டால், அதனை அவர்கள் பகிரங்கமாக எதிர்த்து போராடுவார்கள். மாறாக, அதையே ஒரு சாக்காக பயன்படுத்தி முன்னேற்றமடைய ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். அப்படி யாரும் இங்கு இல்லை,.

திங்கள், டிசம்பர் 02, 2013

ஏற்காடு தேர்தலில் வன்னிய சாதி பிரச்சாரம்: போலிப்போராளிகள் ஓடி ஒளிந்தது எங்கே?

தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஒன்றுதான் சாதிக் கட்சி. மற்ற எல்லா கட்சிகளும் சாதிகளுக்கு அப்பாற்பட்ட புனிதர்களின் கட்சி என்கிற ஒரு பிரச்சாரம் நடந்து வருகிறது. குறிப்பாக, மனுஷ்யபுத்திரன், சுப.வீரபாண்டியன், அ. மார்க்ஸ் போன்றவர்கள் இந்த பிரச்சாரத்தை முன்னின்று நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், ஏற்காடு இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது. எனவே, அந்த தொகுதியில் சாதிக்கு அப்பாற்பட்ட தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்ப்பதுதானே சரியாக இருக்கும். ஆனால், அங்கு இதற்கு நேர்மாறாக நடந்து கொண்டிருக்கிறது.

வன்னியர் எதிர்ப்பு அரசியலுக்கு இடைவேளையா?

'தர்மபுரி சம்பவம், மருத்துவர் அய்யா அவர்களின் அனைத்து சமுதாயப் பேரியக்கம்' குறித்து எல்லா தொலைக்காட்சிகளிலும் வெறிகொண்டு பாய்ந்து பிடுங்கும் திமுக அடிவருடிகளான சுப. வீரபாண்டியனும் மனுஷ்யபுத்திரனும் ஏற்காடு தேர்தல் குறித்து பேசவும் இல்லை, அங்கு பிரச்சாரம் செய்யவும் இல்லை. வன்னிய சாதிவெறி குறித்த பிரச்சாரத்தை கவனமாக தவிர்த்து மௌனமாக இருக்கின்றனர்.
திமுகவுக்கு ஆதரவாக தனித்து பிரச்சாரம் மேற்கொண்ட திருமாவளவன மிகச்சில கூட்டங்களை நடத்தி, அங்கும் கூட தர்மபுரி நிகழ்வு, வன்னிய ஆதிக்க சாதிவெறி என்றெல்லாம் பேசாமல் திரும்பியிருக்கிறார்.

(தர்மபுரி நாயக்கன் கொட்டாய் நிகழ்வுக்கு எல்லோருக்கும் முன்னதாக உண்மை அறியும் குழுவை அனுப்பிய திமுக, இப்போது திண்டுக்கல் கரியாம்பட்டி நிகழ்வுக்கு உண்மை அறியும் குழுவை அனுப்பாமல் தவிர்த்திருக்கிறது. இங்கே காண்க: தர்மபுரிக்கு அடுத்தது திண்டுக்கல்லா? வன்னியர்கள் இரத்தம் குடிக்கத் துடிக்கும் முற்போக்கு வேடதாரி ஓநாய்கள்!)

ஸ்டாலின் - கனிமொழி வன்னியர் ஆதரவு பிரச்சாரம்

ஏற்காடு தேர்தலில் வன்னியர் பகுதிகளில் திமுக வன்னியர்களுக்கு ஆதரவான கட்சி என்று ஸ்டாலின் - கனிமொழி ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

"ஏற்காடு தொகுதி வெள்ளாகுண்டம் பிரிவு ரோட்டில், ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, வன்னியர் சமுதாய மக்களுக்கான, 20 சதவீத ஒதுக்கீட்டை பெற, போராடிய வன்னியருக்கு, 3 லட்சம் ரூபாய் வீதம், நிவாரண உதவி வழங்கியது, வன்னியர் சமூகத்தினரை, பல்வேறு உயர் பதவிகளில் நியமித்தது, பொது நலவாரியம் அமைத்தது என, பல்வேறு சலுகைகளை வழங்கியது தி.மு.க., தான், என்றார்.

வாழப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், வன்னியர் ஓட்டுகள் அதிகம் உள்ளதால், அங்கு, ஓட்டுகளை கைப்பற்ற, தி.மு.க., நிறைவேற்றிய திட்டங்கள் பற்றி, ஸ்டாலின் பேசினார்" (இங்கே காண்க: சமுதாய ஓட்டுகளை கைப்பற்ற ஸ்டாலின் திட்டம்: ஏற்காடு பிரசாரத்தில் தலைவர்களுக்கு புகழாரம்).

"1980ம் ஆண்டு வன்னியர் சங்கம் இட ஒதுக்கீட்டுக்காக போராடியது. அவர்களின் கோரிக்கைக்கு அதிமுக செவிசாய்க்கவில்லை. 1989ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்றபிறகு, வன்னியர் சங்க தலைவர்களை அழைத்து பேசி வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை தந்தார். பல்வேறு பிரச்னைகளுக்காக வன்னியர்கள் போராடி சிறை சென்றார்கள். பலர் உயிர் தியாகம் செய்தனர். 1996ம் ஆண்டு கருணாநிதி ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், 42 ஆயிரம் வன்னியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்து கையெழுத்து போட்டார். வன்னியர்களுக்காக பென்ஷன், நல வாரியம் அமைத்து தந்தது திமுக அரசு. ஆனால், ஜெயலலிதா அந்த நலவாரியத்தை முடக்கினார்" என்று ஸ்டாலின் பேசினார்  (இங்கே காண்க: வீரபாண்டி ஆறுமுகம் மரணத்துக்கு அதிமுக பதில் சொல்லும் காலம் விரைவில் வரும் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு).

ஏற்காடு தொகுதி தும்பல் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கனிமொழி பேசும்போது, "பா.ம.க., மீது பல வழக்குகள், தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அக்கட்சியினர் மீது தொடுக்கப்பட்டுள்ளன. ராமதாசுக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என கோரினால், அதை வழங்க மறுக்கும் அரசாக இந்த அரசு இருக்கிறது" என்றார் (இங்கே காண்க: கனிமொழி பிரசாரத்தில் வன்னியர் கோஷம்: லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமா?). 

(இதே கனிமொழி தான், வன்னியர்களுக்கு எதிராக இந்தியா டுடே கவின்மலர் நடத்திய கூட்டத்தில் சிறப்புறை ஆற்றினார். இங்கே காண்க: கனிமொழியின் சாதிஒழிப்பு நாடகமும் அம்மணமான புர்ச்சியாளர்களும்: வன்னியர் ஒழிப்பு மட்டும்தான் சாதிஒழிப்பா?)

அதிமுகவின் வன்னியர் ஆதரவு பிரச்சாரம்

அதிமுக அக்கட்சியில் உள்ள வன்னிய அமைச்சர்களை வைத்து வன்னியர் பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறது.

மேலும், சிதம்பரத்தில் உள்ள ஒரு நபரின் மூலம் 'மறுமலர்ச்சி வன்னியர் சங்கம்' என்கிற ஒரு போலிப்பெயரை வைத்து சுவரொட்ட அடித்து ஏற்காடு தொகுதியில் ஒட்டியுள்ளனர். பாவம் சேலம் மாவட்டத்தில் ஆள் கிடைக்கவில்லை என்று கடலூர் மாவட்டத்திலிருந்து வன்னிய துரோகிகளை பிடித்து வந்துள்ளனர்.
திமுக - அதிமுக ஆதரவு பிரச்சாரம் குறித்த 'தி இந்து' செய்தி


The AIADMK and the DMK are concentrating their efforts on wooing the Vanniyars, a caste-Hindu community, in Yercaud, which goes to polls on December 4.

Reason: they constitute between 41 and 46 per cent in the constituency. The constituency has been reserved for ST candidates ever since it was formed in 1957. The large Vanniyar population is because the Vanniyar-majority Panamarathupatti Assembly constituency was largely merged with Yercaud after the last delimitation exercise.

With the Pattali Makkal Katchi, identified with the Vanniyars, not contesting the by-election, a major part of the campaign by the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) candidate P. Saroja and her rival from the Dravida Munetra Kazhagam (DMK) V. Maran, is not on the hills that make up Yercaud; it’s in the Vanniyar belts of Ayothiyapattinam and Vazhapadi.

“The DMK and the AIADMK are after the Vanniyar vote-bank, on the belief that they will decide the next MLA of Yercaud. They are neglecting more than 83,000 SC and ST voters who constitute 35 per cent of the total voters in the constituency. They will have to give due importance to SC and ST voters,” says Viduthalai Chiruthaigal Katchi’s district secretary R. Navarasan.

போலிப்போராளிகள் ஓடி ஒளிந்தது எங்கே?

சென்னையில் அமர்ந்து வன்னியர் எதிர்ப்பு சாதிவெறியில் பேசித்திரியும் திமுக - அதிமுக ஆதரவு போலிப் புரட்சிக் கும்பல், ஏற்காடு தேர்தலில் வன்னியர் எதிர்ப்பு பேசாது 'கள்ள மவுனம்' காப்பது ஏன்?

திமுக - அதிமுக கட்சிகள் வன்னியர் ஆதரவு பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதை இவர்கள் எதற்காக  மவுனமாக வேடிக்கைப் பார்க்கின்றனர்?

பாட்டாளி மக்கள் கட்சி சாதி ஆதரவு பேசினால் அது சாதிவெறி என்கிறவர்கள், திமுக - அதிமுகவினர் அதைச் செய்யும்போது ஏன் ஓடி ஒளிகின்றனர்? 

அறிவு நாணய நேர்மை மயிரிழை அளவுக்காவது இருக்குமானால், திமுக - அதிமுக வன்னியர் ஆதரவு பிரச்சாரத்தைக் கண்டிக்க சுப. வீரபாண்டியன், மனுஷ்யபுத்திரன், அ. மார்க்ஸ், கம்யூனிஸ்டுகள், திக கட்சிக்காரர்கள் முன்வர வேண்டும்.

போலிப்போராளிகள் ஒன்றைமட்டும் புரிந்துகொள்ள வேண்டும்: ஓட்டு பிச்சைக்காக வன்னியர் ஆதரவு வேடமிட்டு சாதி பேசும் திமுக - அதிமுகவை விட, வன்னியர்களின் உரிமை மீட்க சாதி பேசும் பாமக மிகமிக மேலானது, புனிதமானது.