Pages

புதன், பிப்ரவரி 19, 2014

தமிழக அரசின் அதிரடி: முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை!

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 6 பேரை உடனே விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு

"ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் ஆயுள் தண்டனை குறைப்பு பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். மேலும், வேலூர் சிறையில் இருந்த நளினியும் விடுவிக்கப்படுவார்.
நளினியுடன், ஜெயச்சந்திரன், ராபர்ட் பயாஸ் போன்றோரும் விடுதலை செய்யப்படுவார்கள். மேற்குறிப்பிட்ட 6 பேரையும் விரைவில் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும். 3 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்காவிட்டால் அந்த 6 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்யும்" - முதல்வர் ஜெயலலிதா

"வானளாவிய அதிகாரத்தை நிரூபித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி! கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் இது சாத்தியம் இல்லை"

தொடர்புடைய சுட்டி: 

மூன்றுபேர் விடுதலை: முதல்வர் ஜெயலலிதா இப்போது கடவுளுக்கு நிகரானவர்!

3 கருத்துகள்:

viyasan சொன்னது…

அவருக்கு அதிகாரம் இருந்தால், அவர் உண்மையிலேயே "ஈழத்தாய்" ஆக மாறுவார் என்பதை செல்வி. ஜெயலலிதா நிரூபித்து விட்டார். இனி என்ன நாற்பதும் அம்மாவுக்குத் தான். உலகத்தமிழர்கள் அனைவருமே செல்வி. ஜெயலலிதாவுக்கு கடமைப்பட்டுள்ளனர்.

kkk சொன்னது…

Sincere thanks to Jaya for this action.I sincerely appreciate your efforts on this issue but at the same time since you have mentioned about Kalaignar i wish to put this below:
1.2000ல் நளினியின் தூக்கு தண்டனையை கருணையின் அடிப்படையில் ரத்து செய்யவேண்டும் என திமுக அமைச்சரவை பரிந்துரை செய்கிறது.
2.திமுக தீவிரவாதிகளை ஆதரிக்கிறது என ஜெ கடுமையாக தாக்கி பல அறிக்கைகள் கொடுத்தார். நளினி காப்பாற்றப்பட்டபோது வெகுண்டெழுந்த, மூவரையும் காப்பாற்றவேண்டும் என சட்டசபையில் தீர்மானம் போட்டுவிட்டு நீதிமன்றத்தில் பல்டி அடித்த ஜெ.
3.இப்போது உச்சநீதிமன்றம் மூவரையும் நிரபராதிகள் என்ற ரீதியில் தூக்கு தண்டனையை நிறுத்தவில்லை. கருணை மனுவை பரிசீலிக்க ஜனாதிபதி(கள்) தாமதப்படுத்தியதால் நிறுத்தியிருக்கிறது. ஆனால் 2000ல் அவர்களுக்குத் தண்டனை கிடைத்து 2 ஆண்டுகளே ஆன சூழ்நிலையில், திமுக என்ன காரணத்தைச் சொல்லி அவர்களை தூக்கிலிருந்து காப்பாற்ற முடியும்? கருணைக்கு காரணமாக எதைக் காட்ட முடியும்? நளினிக்கு மட்டும் தான் குழந்தை என்ற சரியான காரணம் இருந்தது. அதனால், ஏன் மற்ற மூவரை 2000ல் கலைஞர் காப்பாற்றவில்லை எனக் கேட்பது பைத்தியக்காரத்தனமான கேள்வி, கலைஞரை குற்றம் சாட்டவேண்டும் என்றே முன்வைக்கப்படும் வன்மமான, கேள்வி.

கலியபெருமாள், தியாகு, நளினி இவங்க தூக்கு தண்டனையை எல்லாம் தன் பதவியைப் பயன்படுத்தி நீக்கம் செய்த கலைஞர் அதை மனிதாபிமான செயலாகவும், தன்னுடைய கடமையைச் செய்ததாகவுமே எண்ணி அதை அமைதியாகக் கடந்து தான் சென்றார். திமுகவினரும் அப்படியே நடந்து கொண்டனர்.

பெயரில்லா சொன்னது…

தனக்கு அதிகாரம் இருக்கும்போது நேரடியாக உடனே விடுதலை செய்யவேண்டியதுதானே?எதற்கு மத்திய அரசுக்கு மூன்றுநாட்கள் அவகாசம்?காங்கிரஸ் கட்சி தன் தலைவர் ஒருவரைக் கொன்றதற்காக தண்டனை பெற்றுள்ளவர்களை விடுதலை செய்யாவிட்டால்,அதையே வைத்து காங்கிரஸ்காரர்களுக்கு தமிழர்கள் மேல் அக்கறை இல்லை பாருங்கள் எனக்கூறி அரசியல் பண்ணலாம் என்ற எண்ணமா?நல்லது செய்ய நினைத்தால் உடனே செய்துவிடலாமே!