Pages

புதன், ஜூலை 31, 2013

கனிமொழியின் சாதிஒழிப்பு நாடகமும் அம்மணமான புர்ச்சியாளர்களும்: வன்னியர் ஒழிப்பு மட்டும்தான் சாதிஒழிப்பா? 

சாதியத்துக்கு எதிரான இளைஞர்கள் கருத்தரங்கம் என்கிற ஒரு கருத்தரங்கம் சென்னையில் 29.7.2013 அன்று நடந்துள்ளது. மனுஷ்யப் புத்திரன், கவின்மலர் உள்ளிட்ட வன்னிய எதிர்ப்பு கும்பலால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராகக் கலந்துகொண்டுள்ளார் கனிமொழி கருணாநிதி எம்.பி.

சாதியத்துக்கு எதிரான கருத்தரங்கம் என்றால் அதில் கலந்துகொள்பவர்கள் எல்லா சாதியையும் எதிர்ப்பவர்களாக இருப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தால் நீங்கள் இருக்க வேண்டிய இடம் தமிழ்நாடு அல்ல. ஏனெனில், தமிழ்நாட்டில் சாதிய எதிர்ப்பு என்றாலே அதற்கு 'வன்னிய எதிர்ப்பு' என்பதுதான் பொருள்.

கனிமொழியின் நாடார் சாதிப்பற்று!

'சாதியத்துக்கு எதிரான இளைஞர்கள் கருத்தரங்கில்' பங்கேற்ற கனிமொழியின் கடந்த காலத்தை நீங்களே பாருங்கள். அவர் ஒரு தீவிரமான நாடார் சாதிப் பற்றாளர். 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற "நாடார் மகாஜன சங்க நூற்றாண்டு விழா" நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நாடார் மகாஜன சங்க நூற்றாண்டு விழா மாநாட்டில் பேசுகிறார் கனிமொழி
அந்த மாநாட்டில் பேசிய கனிமொழி, 'நாடார்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் கருணாநிதிதான்' என்றார். கூடவே, நாடார் சாதியைச் சேர்ந்த "எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பொன்னிலன், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்" போன்றோரை நாடார் மாநாட்டுக்கு அழைத்திருக்க வேண்டும் என்றும் கோரினார். (ஆனால் பிரபஞ்சன், பொன்னிலன், ஹாரிஸ் ஜெயராஜ் எல்லாம் தங்களை நாடார்கள் என்று கூறிக்கொண்டதாகத் தெரியவில்லை)

கனிமொழி நாடார்தான் - கருணாநிதி கருத்து

கனிமொழி மீது 2ஜி வழக்கு விவகாரம் கிளம்பிய போது, மாலை நாளிதழ்களில் பெரிய அளவில் அந்த செய்தி வெளியானது. அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலைஞர் ''மாலை மலர், மாலை முரசு போன்ற நாடார் பத்திரிகைகள், கனிமொழி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த அளவிற்கு சாதிப் பற்றோடு அந்தச் செய்திக்கு முக்கியத்துவம், ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்." என்று வஞ்சப் புகழ்ச்சியாகக் கூறினார். அதாவது ஒரு நாடாரைப் பற்றி நாடார் பத்திரிகைகளே எதிர்மறையான செய்திகளை வெளியிடலாமா? என்று கேட்டார் கருணாநிதி.  (இங்கே காண்க: கனிமொழிக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று செய்தி போடாதவரை மகிழ்ச்சி - கருணாநிதி!)

இத்தனைக்கும் கருணாநிதி இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள்தான் நாடார் வகுப்பை சேர்ந்தவர். 

ஆக, கனிமொழி தன்னை நாடார் சாதிப் பற்றாளர் என்று வெளிப்படுத்தியுள்ளார். கருணாநிதியும் கூட 'கனிமொழி நாடார் சாதியைச் சேர்ந்தவர்' என்று விவரித்திருக்கிறார். இப்படி ஒரு சாதியை ஆதரிப்பவரைக் கொண்டுவந்து, வன்னியர்களுக்கு எதிராகக் கூத்தடித்திருக்கிறார்கள் கவின்மலரும், மனுஷ்ய புத்திரனும். இந்த மானங்கெட்ட பிழைப்பு இவர்களுக்கு தேவையா?

சாதியத்துக்கு எதிரான இளைஞர்கள் கருத்தரங்கின் பின்னணி 

தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்துகொண்ட உடன், தமிழச்சி என்பவர் 'தேசியத் தலைவர் பிரபாகரனின் தியாகமும், தர்மபுரி இளவரசனின் தியாகமும் ஒன்றுதான்' என்றார். இதையே பின்பற்றி பலரும் "முத்துக்குமார் - பாலச்சந்திரன் - இளவரசன்" என மாபெரும் தியாகங்களை வரிசைப்படுத்தினர். அதை வழிமொழியும் வகையில் மே 17 இயக்கம், சேவ் தமிள்சு இயக்கம் ஆகியன களம் இறங்கின.
மாபெரும் தியாகம்: முத்துக்குமார் - பாலச்சந்திரன் - இளவரசன் (இது புர்ச்சியாளர்களின் தயாரிப்பு)
உடனே மனுஷ்ய புத்திரன் என்பவர்  "இளவரசனின் படுகொலைக்கு நியாயம் வேண்டி மாணவர் சமூகம் போராட வேண்டும். அல்லாவிட்டால் (பிரபாகரன் மகன்) பாலசந்திரனின் மரணத்தை ஒட்டி நீங்கள் நடத்திய போராட்டங்கள் அர்த்தமற்று போகும்" என்கிற தகவலை பகிர்ந்து பொங்கி எழுந்தார்.

இதன்படி, மனுஷ்ய புத்திரனின் தோழரான கவின்மலர் இந்த அனைத்துக் கல்லூரி மாணவர் சங்கத்தை கட்டி எழுப்பினார். இதே பிரச்சனைக்காக கவின்மலர் ஏற்கனவே "சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்" என்கிற கடையை திறந்து மூடியவர் என்பதால் - அதே கும்பலை வைத்து புதிய அமைப்பை தொடங்கினார்.

இவர்கள்தான் மேடையில் 'பல' தலைவர்களும் கீழே 'சில' தொண்டர்களுமாக கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் மு.க. கனிமொழி எம்.பி, இரா. நல்லக்கண்ணு, ஜி. இராமகிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், மனுஷ்ய புத்திரன், சங்கர சுப்பு, கவின்மலர் உள்ளிட்டவர்கள் பேசியதாகத் தெரிகிறது.

இவர்களில் 'சுப. வீரபாண்டியன்' கதையை இந்த இணைப்பில் காணலாம்: சுகவீரபாண்டியனின்... அம்மண அரசியல்..

'மனுஷ்ய புத்திரனின்' கதையை இந்த இணைப்பில் காணலாம்: ஒரு கவிஞர் சித்தரான கதை…

கனிமொழியின் நாடார் மாநாட்டு பேச்சு:

சிவகாசி, 2010 டிசம்பர்: "தி.மு.க. அரசைப் பொறுத்தமட்டில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் அமைச்சர்களாக உள்ளனர். பொதுவாக பெண்களுக்கு அமைச்சரவையில் பதவி தரப்படுவது இல்லை. அவ்வாறு கொடுக்கப்பட்டாலும் மிக சாதாரண துறைகள் தான் அவர்களுக்கு ஒதுக்கப்படும். ஆனால் தி.மு.க. அரசு உலக அளவில் பேசப்படும் துறையான தகவல் தொழில்நுட்பத்துறையை நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வழங்கி கவுரவித்துள்ளது. 
1957ம் ஆண்டு தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி எம்.எல்.ஏ.வாக சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, காமராஜர் முதல் அமைச்சராக இருந்தார். அப்போது சாதி பட்டியலை அரசு வெளியிட்டது. அந்த சாதி பட்டியலை பார்த்த முதல் அமைச்சர் கருணாநிதி காமராஜரிடம் ஒரு கேள்வியை எழுப்பினார். நான் சார்ந்த இசை வேளாளர் சமுதாயத்தை மரியாதையுடன் சாதி பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய சாதியான நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களை நாடான், சாணான் என்று மரியாதை குறைவாக குறிப்பிடப்பட்டிருக்கிறதே? இது எந்த வகையில் நியாயம் என்று கேட்டார். அப்போது காமராஜர், கக்கனை பார்த்து என்னவென்று கேட்டார். அப்போது கக்கன் தவறு நேர்ந்து விட்டது. திருத்திக்கொள்கிறோம் என்று சபையிலே தெரிவித்தார். அந்த அளவுக்கு நாடார் சமுதாயத்துக்காக முதன் முதலாக குரல் கொடுத்தவர் முதல் அமைச்சர் கருணாநிதி என்பதை யாரும் மறுக்க முடியாது. 

இந்த சமுதாயத்தில் கலைஞர்கள், எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பொன்னிலன், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் போன்றோரை அழைத்திருக்கலாம். அவர்களது கருத்துகள் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமையும். 
தி.மு.க. அரசு நாடார் சமுதாயத்தினருக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவங்களை அளித்து வருகிறது. தொடர்ந்து இந்த சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவங்களை அளிக்க தி.மு.க. அரசு பாடுபடும்." இவ்வாறு நாடார் மகாஜன சங்க நூற்றாண்டு விழாவில் பேசினார் கனிமொழி (இங்கே காண்க: நாடார் சமுதாயத்துக்காக முதன் முதலில் குரல் கொடுத்தவர் கருணாநிதி-கனிமொழி)

வன்னியர் ஒழிப்பு என்று வெளிப்படையாக பேசுங்கள்

முற்போக்கு வேடதாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்.  கூத்தடிக்கிற நீங்களும், உங்களை தூண்டிவிடுகிற மதவாத பண முதலைகளும் வன்னியர்களை மட்டும்தான் எதிர்க்கிறீர்கள். வன்னியர்களை மட்டும்தான் ஒழிக்க நினைக்கிறீர்கள். 

அப்புறம் எதற்காக, 'சாதிய ஒழிப்பு' என்று பொத்தாம் பொதுவாக பேசுகிறீர்கள்? நேரடியாக 'வன்னியர்கள்க்கு எதிரான இளைஞர்கள் கருத்தரங்கம்' என்று நடத்துங்கள். உங்கள் நேர்மையை பாராட்டுகிறோம்.

குறிப்பு: நாடார்கள் சாதி ரீதியாக அணி திரள்வதை நாம் ஆதரிக்கிறோம். சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வு இருக்கும் வரை இந்த நாட்டில் சாதி அமைப்புகளும் இருக்கும். அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. எந்த ஒரு சாதியும் சாதி அடிப்படையில் ஒன்று திரண்டு உரிமைக் கேட்பதில் எந்த தவரும் இருக்க முடியாது. சாதி ரீதியில் ஒன்று திரண்டு ஒட்டுமொத்த சமூகமும் முன்னுக்கு வருவதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் நாடார்கள். அந்த வகையில் நாடார்கள் மாநாடு மிகவும் நியாயமானதே. அந்த மாநாடு ஒரு ஒப்பீட்டுக்காக மட்டுமே இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய சுட்டிகள்:

1. கௌரவக்கொலை தடுப்புச்சட்டமும் இளவரசனும்: மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் பித்தலாட்டக் கூட்டம்!

2. அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்.

3. இனவெறிப் போக்கை கைவிடுமா இந்தியா டுடே: கவின்மலரின் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறி!

4. இந்தியா டுடேவின் பெண் உடல் வியாபாரமும் கவின்மலரின் இரட்டை வேடமும்: பல துணைகள், உறவுச்சுமை இல்லாத செக்ஸ் புரட்சி!

5. மனுஷ்ய புத்திரன் - இஸ்லாமியர்களை இந்துக்களாக மாற்ற விரும்புகிறாரா?

ஞாயிறு, ஜூலை 28, 2013

பத்திரிகைகள் மூடி மறைக்கும் செய்தி: பொதுச் சொத்துக்களுக்கு சேதம்- 5 அமைச்சர்கள் மீது வழக்கு!

பத்திரிகை தர்மம் செத்துவிட்டது

தமிழ்நாட்டின் ஐந்து அமைச்சர்கள், 11 எம்.எல்.ஏக்கள் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் செய்ததாக ஒரு தகவல் நேற்று மருத்துவர் இராமதாசு அவர்களால் அறிக்கையாக வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை ஒரு நாளிதழில் கூட வெளிவந்ததாகத் தெரியவில்லை. 

அந்த செய்தி பத்திரிகைகளால் புறக்கணிக்கப்படுவதற்கு, அது மருத்துவர் இராமதாசு அவர்களின் அறிக்கை என்பது காரணம் அல்ல.  மாறாக, ஆளுங்கட்சிக்கு எதிரான ஒரு வலுவான ஆதாரத்தை முன்வைத்த காரணத்தாலேயே வெளியிடப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

இந்த செய்தியை வெகுசில இணைய ஊடகங்கள் மட்டுமே வெளியிட்டன. (இங்கே காண்க: நக்கீரன், ஒன்இந்தியா, NewIndiaNews)
ஆனால், தமிழ்நாட்டு அச்சு ஊடகங்கள் எதுவும் இந்த அறிக்கையை வெளியிடவே இல்லை. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என 'பாமக' மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளையும் அதற்காக சம்மன்கள் அனுப்புவதையும் வரிந்துக்கட்டிக்கொண்டு எழுதும் நாளிதழ்கள் இந்த செய்தியை மட்டும் வெட்கம் கெட்டத்தனமாக மறைத்துவிட்டன.

சுமார் 10 ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் தினசரி பத்திரிகை வெறும் மூன்று ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பத்திரிகைகளின் உண்மையான வருமானமும் இலாபமும் விளம்பரங்கள் மூலமே கிடைக்கின்றன. விளம்பரத்தை நம்பி மட்டுமே பத்திரிகைகள் நடத்தபடுகின்றன. எனவே, விளம்பரம் தருகிறவர்களை பாதிக்காத செய்திகள் மட்டுமே தமிழ்நாட்டு வாசகனுக்கு தரப்படும். அந்த வகையில், நாளிதழிகளின் முதன்மை விளம்பரதாரராக அரசாங்கமே இருக்கும் நிலையில், ஆள்பவர்களுக்கு எதிரான வலுவான செய்திகளை பத்திரிக்கைகளில் எதிபார்ப்பது முட்டாள்தனம்தான்.

தமிழ்நாட்டு பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்கிற தகுதியை எப்போதோ இழந்துவிட்டன. தமிழ்நாட்டில் பத்திரிகை தர்மம் செத்துப்போய்விட்டது என்பதையே இது காட்டுகிறது.

மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கை

"பொதுச் சொத்துக்களுக்கு சேதம்: அமைச்சர்களை நீக்குவாரா முதல்வர்?" என தனது அறிக்கையில் கேட்டுள்ளார் மருத்துவர் இராமதாசு அவர்கள். அவரது அறிக்கை கீழே:

"கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 151 பேரில் 16 பேர் மீது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

தேனி மாவட்டம் போடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வம், மேலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.சாமி, ஆண்டிப்பட்டி தங்கத் தமிழ்ச்செல்வன், சென்னை இராதாகிருஷ்ணன் நகர் வெற்றிவேல், கரூர் செந்தில் பாலாஜி, கோபிச் செட்டிபாளையம் கே.ஏ. செங்கோட்டையன், அரியலூர் துரை. மணிவேல், நன்னிலம் ஆர். காமராஜ், கிருஷ்ணராயபுரம் எஸ். காமராஜ், மதுரை தெற்கு செல்லூர் ராஜு, ஸ்ரீவைகுண்டம் எஸ்.பி. சண்முக நாதன், நெய்வேலி எம்.பி.எஸ். சுப்பிரமணியன், மானாமதுரை எம்.குணசேகரன், நாகர்கோவில் நாஞ்சில் முருகேசன், மணப்பாறை சந்திரசேகரன், சாத்தூர் ஆர்.பி. உதயக்குமார் ஆகியோர் மீது பல்வேறு கால கட்டங்களில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த 16 பேரில் 5 பேர் அமைச்சர்களாக உள்ளனர். இரண்டு முன்னாள் அமைச்சர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த மே 15-ஆம் தேதி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு  பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, ‘‘ஏதேனும் ஒரு பொருள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமானால், ஜனநாயக ரீதியில், அறவழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும்; வன்முறை மூலம் எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்கமுடியாது.  கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன், சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்சித் தலைவர்களின் கடமை ஆகும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற இலக்கணத்தையெல்லாம் கூறிய முதலமைச்சர் அதை தாமும் பின்பற்றியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யயாததுடன், பொதுச் சொத்துக்களை சேதப் படுத்தியவர்களையும், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியவர்களையும் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக்கி அழகு பார்த்திருக்கிறார். இதன்மூலம் பேரூந்துகளை எரித்தவர்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கும் தான் அ.தி.மு.க.வில் பதவி வழங்கப்படும் என்று மறைமுகமாக கூறுகிறாரா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்காக வழக்கு தொடரப்பட்டவர்களை மக்கள் பிரதிநிதிகளாக்கி, பொதுச் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பில் அவர்களையே அமர்த்துவதைவிட ஜனநாயகத்தை இழிவுபடுத்தும் செயல் எதுவும் இருக்க முடியாது. தாம் வகிக்கும் முதலமைச்சர் பதவி மீது ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே மரியாதை இருக்குமானால், சட்டப்பேரவையில் கூறியவாறு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாற்றுக்கு ஆளாகியிருக்கும் 5 அமைச்சர்களையும், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பதவி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, அ.தி.மு.க.வினரால் சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துக்களுக்காக இழப்பீட்டை கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவே செலுத்த வேண்டும். இதற்கெல்லாம் மேலாக பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சக்திகளுக்கு அமைச்சர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி வழங்கி ஊக்குவித்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என மருத்துவர் இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்.

சனி, ஜூலை 27, 2013

தர்மபுரி தற்கொலை: பித்தலாட்டக்காரர்கள் முகத்தில் கரிபூசிய எய்ம்ஸ் மருத்துவர்கள்!

நாட்டில் ஒரு கும்பல் 'அடக்கமுடியாத வன்னியர் எதிர்ப்பு வெறியோடு' கிளம்பியிருக்கிறது. 

"தர்மபுரியில் மரணமடைந்த இளவரசன் - பாட்டாளி மக்கள் கட்சியினரால் தலையில் வெட்டிக் கொல்லப்பட்டார். இவ்வாறு வெட்டிக் கொல்ல வேண்டும் என ஆணையிட்டவர் மருத்துவர் இராமதாசு அவர்கள்தான். எனவே, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த வன்னியர்களையும் கொலை வழக்கில் கைது செய்து, ஒரு விரைவு நீதிமன்றம் அமைத்து - நாளை மறுநாளுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கி - அதற்கு அடுத்த நாள் எல்லோரையும் தூக்கில் போட வேண்டும்."

- இதுதான் அந்த வன்னியர் எதிர்ப்பு வெறிக்கூட்டத்தின் பேராசை. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக 'இளவரசன் தலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்' என்று நிரூபித்தாக வேண்டும். 

எனவே, உள்ளூர் மருத்துவர்கள் தற்கொலை என்று சொன்னால், சென்னை மருத்துவர்கள். அவர்களும் தற்கொலை என்றால், புது தில்லி மருத்துவர்கள், அவர்களும் தற்கொலைதான் என்று சொன்னால் அப்புறம் அமெரிக்க மருத்துவர்கள் வந்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் - ஆக, 'இது கொலைதான்' என்று சொல்கிறவரை பிரேத பரிசோதனை தொடர வேண்டும்.
அவ்வாறே, 'இளவரசன் தலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்' என்று உள்ளூர் பொலிஸ் ஒப்புக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிபிசிஐடி. அவர்களும் ஒப்புக்கொள்ளாவிட்டால் சிபிஐ. அவர்களும் ஒப்புக்கொள்ளாவிட்டால் அமெரிக்காவின் சிஐஏ வந்து விசாரித்து 'இது தற்கொலை அல்ல, பாமக செய்த படுகொலைதான்' என்று சொல்ல வேண்டும்.

இந்த கூட்டத்தினருக்கு பிரச்சினை இல்லாத ஒரே இடம் நீதிமன்றம்தான். பிரேத பரிசோதனை மருத்துவர்களும் காவல்துறையும் 'பாமக செய்த படுகொலைதான்' என்று ஒத்துக்கொண்டால் - 'உண்மையை ஏற்றுக்கொள்ள' நீதிமன்றத்திற்கு தடையேதும் இருக்காது.

இளவரசன் தற்கொலை - இன்னும் என்னதான் ஆதாரம் வேண்டும்?

தர்மபுரி இளவரசன் பிரேத பரிசோதனை வழக்கில், பிரேத பரிசோதனை வீடியோ காட்சியை நீதிபதிகளும் மருத்துவர்கள் குழுவினர் 7 பேரும் பார்த்தனர். தனித்தனியாக அறிக்கை அளித்தனர். இதில் மனுதாரர் தரப்பு மருத்துவர் தவிர மற்ற 6 பேரும் மறுபரிசோதனை தேவையில்லை என்றனர்.

இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை. "உடற்கூறு சோதனை தவறாக நடந்தது என்று நாங்கள் சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை. எனினும், இது ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களில் ஒருவருடைய நீதிக்கான அழுகுரல் என்பதால், நீதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக, இந்த மனு குறித்து, ஒரு வரையறை வரைக்கும் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டியுள்ளது' என்று நீதிமன்றம் கூறியது.

எனவே, மேலும் 2 தனியார் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை நடந்த விவரம் தொடர்பாக நேரில் பார்த்து அறிக்கை தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த 2 மருத்துவர்கள் தர்மபுரி சென்று இளவரசன் உடலை பார்த்து, முரண்பட்ட கருத்தை தெரிவித்திருந்தனர்.(இதற்கு பதில் 3 மருத்துவர்கள் குழுவை நீதிமன்றம் அனுப்பியிருந்தால் அப்போதே பிரிச்சினை தீர்ந்திருக்கும்)

இரண்டு மருத்துவர்களின் முரண்பட்ட கருத்தால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேரை அனுப்பி தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள இளவரசன் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர் தர்மபுரி சென்று இளவரசனின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தினர்.
எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவின் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கையில் 'இளவரசன் டார்ச்சர் செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கணமான இரும்பு பொருள் மண்டையில் தாக்கியதால் இறந்துள்ளார் என்றும் உடலில் கைமுறிவு தவிர வேறு காயங்கள் இல்லையென்றும் கூறப்பட்டுள்ளது. ஓடும் இரயில் தாக்கியதால் இவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது."

(இங்கே காண்க:  Ilavarasan died of head injury, confirm AIIMS doctors)

“After thorough post-mortem examination of the body, the board is of the unanimous opinion that the cause of death in this case is extensive cranio-cerebral damage (head injury) caused by impact of heavy blunt object. The head injury as well as other injuries are antemortem in nature and will result in instantaneous death. The injuries mentioned inlcuding fatal injury could be caused by the impact of a running train,’’ Dr DN Bhardwaj, Dr Sudhir Kumar Gupta and Dr Millo Tabin have said.
- அதாவது, இரயில் மோதியே இளவரசன் மரணம் அடைந்திருக்க வேண்டும் என்று  டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்றுபேரும் ஒருமனதாக தெரிவித்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கையையும் மறுக்கிறது பித்தலாட்ட புரச்சிக் கும்பல்!

"இளவரசன் - பாட்டாளி மக்கள் கட்சியினரால் தலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்" என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் தெளிவாக ஏன் கூறவில்லை? இது அநீதி இல்லையா? விளிம்புநிலை மக்களின் நீதிக்கான அழுகுரல் கேட்கவில்லையா? நீதி காப்பாற்றப்பட வேண்டாமா? என்று கொந்தளித்து மீண்டும் கிளப்பியுள்ளனர் முற்போக்கு வேடதாரிக் கூட்டத்தினர்!

எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவின் இரண்டாவது பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த ஒரு செய்தியை பின்வருமாறு பகிர்ந்து கொண்டுள்ளார் கவின்மலர், அதனைக் கீழே காண்க:

"அறிக்கையில் எந்த இடத்திலும் இளவரசன் தற்கொலை செய்துக் கொண்டதாக சொல்லப்படவில்லை. மொக்கையான அதே நேரத்தில் உறுதியாக கருவியால் உருவாக்கப்பட்ட தலைக் காயத்தினால் அவர் இறந்தார் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. மேலும் பின் இணைப்பாக அந்த மொக்கையான வலுவான பொருள் ஓடும் ரயிலாக இருக்கலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

சட்டம் தெரிந்தவர்கள் இந்த அறிக்கையின் பின்புலத்தை எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்.ஏனெனில் எந்தக் கருவியால் ஒருவன் தாக்கப்பட்டு உயிரிழந்தான் என்று கண்டுபிடித்து சொல்லும் வேலை உடற்கூறு மருத்துவர்களின் பணியல்ல. அவர்களால் அப்படி சொல்லவும் முடியாது என்பது மிகச் சாதாரணமான நடைமுறை. ஆனால் அதையும் தாண்டி மருத்துவர்கள் ரயிலில் அடிபட்டிருக்கலாம் என்று சொல்லியிருப்பது வழக்கிற்கு கடைசியாக மருத்துவர்களே தீர்ப்பு எழுதியதற்கு சமம் என்பதை அவர்கள் உணரவில்லை.. போலிசுகாரர்களின் வலையில் அவர்களும் விழுந்துவிட்டார்கள்..." என்கிற கருத்தை பகிர்ந்துள்ளார் கவின் மலர்.

ஆனால், எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் 'இளவரசன் இரயில் மோதி இறந்திருக்கலாம்' என்று மனம்போன போக்கில் சொல்லவில்லை. அதிக அளவு மது அருந்தி போதையில் இருந்தமைக்கான இரசாயன ஆய்வு ஆதாரங்கள், இறந்து கிடந்த தன்மை குறித்த 16 புகைப்படங்கள், மற்றும் சம்பவ இடமான இரயில்வே தண்டவாளப் பகுதியைப் பார்வையிட்டு - அதன் அடிப்படையிலேயே 'இரயில் மோதி இறந்தார்' என உறுதி செய்துள்ளனர்.

The report said toxicological analysis of viscera had established consumption of alcohol in sufficient quantity to place him under its influence. The team perused 16 photographs and visited the scene of crime to arrive at a logical conclusion.  (இங்கே காண்க: Friends reveal details of Ilavarasan’s last calls)

ஆனாலும், எய்ம்ஸ் மருத்துவர்கள் சொல்வதையும் கேட்க மாட்டோம். இது பாமகவினர் நேரடியாக தாக்கி செய்த கொலைதான் என அடம்பிடிக்கின்றனர் போலிப் புரச்சிக் கூட்டத்தினர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவாக தமிழ்நாட்டு பொலிஸ் செயல்படுகிறது என்று பித்தலாட்ட புரச்சிக் கும்பல் சொல்வதுதான். உலகத்தில் எங்குமில்லா அதிசயமாக பாமக'வினர் 123 பேரை தடுப்புக்காவலில் வைத்துள்ள தமிழ்நாடு பொலிஸ் பாமகவுக்கு ஆதரவாம்! கேப்பையில் நெய் வடிகிறதென்றால், கேட்பாருக்கு அறிவில்லாமல் போகுமா?

தற்கொலைதான் என்று தெளிவாக நிரூபிக்கும் ஆதாரங்கள்

1. தற்கொலை முயற்சி

இளவரசன் தற்கொலை மனநிலையில் இருந்தார் என்பதை பலப்பல ஆதாரங்கள் மூலம் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

ஜூன் முதல் வாரத்தில், சென்னை தி.நகரில் ஒரு தங்கும் விடுதியில் கையை அறுத்துக் கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றார். அப்போது அந்த லாட்ஜின் ரூம்பாய் சிகிச்சைக்கு உதவியுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அந்த ரூம்பாய் சந்தோஷ் என்பவரை அரூருக்கு அழைத்து வந்து நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தற்கொலை முயற்சி விவரத்தை இந்தியா டுடே பத்திரிகையாளர் கவின் மலர் நன்கு அறிந்திருந்தார். இளவரசன் கையில் கட்டுடன் உள்ள புகைப்படம் இந்தியா டுடே இதழ் அட்டையில் வெளியாகியுள்ளது (ஜூலை 17 இதழ்) : (இங்கே காண்க: அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்)

2. தற்கொலை மனநிலை

தற்கொலை செய்து கொள்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இளவரசன் சென்னையில் இருக்கும் ஒரு நண்பரிடமும் சித்தூரில் இருக்கும் ஒரு நண்பரிடம் செல்பேசியில் பேசி உள்ளார். இவர்கள் இருவரிடமும் 'தனியாக விடப்பட்டது குறித்து ஆற்றாமையையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருந்திய அவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக இருவரிடமும் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சித்தூர் நண்பர் கார்த்திக் மற்றும் சென்னை நண்பர் மனோஜ் குமார் இருவரும் இது குறித்து நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் 'திவ்யாவை தாலி இல்லாமல் கோர்ட்டில் பார்த்ததும் திவ்யா தனது சகோதரருடன் சிரித்து பேசிக்கொண்டு கோர்ட்டிலிருந்து சென்றதும் தன்னை மிகவும் பாதித்ததாக' இளவரசன் கூறியதாக மனோஜ்குமார் கூறியுள்ளார்.

அதே போன்று, ஜூன் 27 ஆம் நாளன்று திவ்யாவை செல்பேசி மூலம் தொடர்புகொண்டு - தற்கொலை செய்துகொள்ளப் போவதாக இளவரசன் கூறிய தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

3. மது போதை

இளவரசன் உடலுக்கு அருகே, சில மதுபாட்டில்கள் கிடந்தன. இந்நிலையில் தனது மகனுக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை என சந்தேகம் தெரிவித்தார் இளவரசனின் அப்பா. ஆனால், இளவரசனின் சித்தூர் நண்பர் கார்த்திக் இது குறித்து நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில், "இளவர்சன் தர்மபுரி அரசுக் க்ல்லூரிக்கு பின்பு தனியாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருப்பதாக செல்பேசியில் தெரிவித்தார்" என்று குறிப்பிட்டுள்ளர்.

மேலும் இளவரசனது உடல் உறுப்புக்களை ஆய்வு செய்த நிபுணர்கள் அளித்துள்ள அறிக்கையில் மரணமடைவதற்கு முன்பு இளவரசன் மிக அதிக அளவு மது அருந்தியிருப்பது நிரூபிக்கப்பட்டது.

4. இளவரசன் எழுதிய தற்கொலைக் கடிதம் உண்மை:

இளவரசன் பையிலிருந்து 4 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் இளவரசன், தனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை என கூறியிருந்தார். அந்த கடிதம் சென்னையில் தடயவியல் சோதனை செய்யப்பட்டது. இந்த கடிதம் இளவரசன் எழுதியது தான் என தடயவியல் மையம் கூறியது.

இன்னும் என்னதான் வேண்டும்?

இளவரசன் தற்கொலைதான் செய்துகொண்டார் என்பது பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முற்போக்கு வேடதாரிகள் கூறிய எல்லாமே பொய்ப்பிரச்சாரம் என்று தெள்ளத்தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

திவ்யா கடத்தப்பட்டார், மிரட்டப்பட்டார் என்று நீட்டி முழக்கினார்கள். 'அய்யோ, அந்த பெண்ணுக்கு என்ன ஆகுமோ' என்று நீலிக்கண்ணீர் வடித்தார்கள். ஆனால், திவ்யாவுக்கு கவுன்சிலிங் வழங்கிய மருத்துவர்கள் "திவ்யா ஏற்கெனவே படித்து வந்த தனது படிப்பை தொடர அவர் விருப்பம் தெரிவித்தார். தனது எதிர்காலம் குறித்து அவர் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார். கவலைகளை மறந்து வாழ்க்கையை எதிர்கொள்வது குறித்த மன ரீதியான பயிற்சியினை அவருக்கு அளித்தோம்." என்று கூறினார்கள் (இங்கே காண்க: படிப்பைத் தொடர தருமபுரி திவ்யா விருப்பம்)
'எஸ்ம்ஸ் மருத்துவர்கள்தான் பிரேதபரிசோதனை செய்ய வேண்டும்', அவர்கள்தான் உண்மையை வெளிக்கொணருவார்கள் என்கிற புதிய வழிகாட்டுதலில் (இங்கே காண்க: விபரீதங்களுக்கு அச்சாரம்!) மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் "ஓடும் இரயில் தாக்கியதால் அவர் இறந்திருக்கலாம். யாரும் அவரை தாக்கியிருக்கவில்லை" என்று தெளிவாகக் கூறிவிட்டார்கள்.

ஆனாலும், இந்த எஸ்ம்ஸ் அறிக்கையையும் ஏற்க முடியாது. எங்களுக்கு சிபிஐ விசாரணைதான் வேண்டும் என்று மீண்டும் கிளம்பியுள்ளது புர்ச்சிக் கும்பல். "ஜாதிய மோதல்கள் ஏதாவது ஏற்பட்டு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தமிழக அரசு இதனை தற்கொலை என்று கூறி வருகிறது" என்கிறார்கள். (இங்கே காண்க: இளவரசன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை)

ஆக,

"தற்கொலை" என்று காவல் துறை கூறுவது 'சாதிமோதல் கலை தடுத்து, சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் முயற்சி' என்றால், 

முற்போக்கு வேடதாரிகள் 'தற்கொலையை, படுகொலை' என்று கூறுவதன் பின்னணி என்ன? இது சாதிமோதல்கள் ஏற்படுத்தி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சி இல்லையா?

சதிகாரர்களின் உண்மை நோக்கம் என்ன?

தமிழ்நாட்டில், சாதிமோதல்கள் ஏற்படுத்தி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் நோக்கிலும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடையே சண்டையை மூட்டிவிடும் நோக்கிலும் ஒரு கூட்டம் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. இக்கூட்டத்தினருக்கு மாற்று மதம் சார்ந்த சில அமைப்புகள் பணமும் இடமும் அளிப்பதாகத் தெரிகிறது.

எனவே, இதற்கு பின்னால் உள்ள சதிகளை முன்கூட்டியே கண்டறிந்து உண்மையை வெளிக்கொணர்வதே தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நன்மையாக இருக்கும்.

வியாழன், ஜூலை 25, 2013

கௌரவக்கொலை தடுப்புச்சட்டமும் இளவரசனும்: மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் பித்தலாட்டக் கூட்டம்!

முற்போக்கு வேடதாரிகள் தர்மபுரி நிகழ்வுக்கு தொடர்பே இல்லாத 'கௌரவக்கொலை தடுப்புச்சட்டத்தை' இளவரசன் தற்கொலையுடன் இணைத்து புதிய கச்சேரியை தொடங்கியுள்ளனர்.
இளவரசன் தற்கொலையை கொலையாக மாற்றிக்காட்டி - தமிழ்நாட்டில் சாதிக கலவரத்தை தூண்டிவிடலாம். வன்னியர்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் அடித்துக்கொண்டால், எரிகிற தீயில் தாம் குளிர் காயலாம் என்கிற கெட்ட எண்ணத்துடன் இவர்கள் தீட்டிய கொடூரமான சதித்திட்டத்தினை, தர்மபுரி எஸ்.பி. அஸ்ரா கார்க் திறமையாக செயல்பட்டு முறியடித்துவிட்டார். இளவரசன் மரணம் தற்கொலைதான் என்பதை நிரூபித்து இந்த போலிப் புர்ஜியாளர்கள் முகத்தில் கரி பூசிவிட்டார். இப்போது இந்த சதிகாரர்களுக்கு வேறு முழக்கம் தேவைப்படுகிறது!

முற்போக்கு வேடதாரிகளின் புர்ஜிக் கூட்டத்தினர் இதுபோல இன்னும் எத்தனை கடைகளைத்தான் திறந்து மூடுவார்களோ தெரியவில்லை. கிறித்தவ மிஷனரி அமைப்புகள், லயோலா கல்லூரி போன்ற மாற்று மத நிறுவனங்கள் என பணமும் இடமும் கொடுக்க ஆட்கள் இருக்கும் துணிச்சலில் தொடர்ந்து புதியபுதிய இயக்கங்களை தொடங்கிக் கொண்டிருக்கின்றனர்.

புற்றீசலாக தோன்றி மறையும் புர்ச்சி அமைப்புகள்

2012 நவம்பர் 7ஆம் தேதி தர்மபுரி நிகழ்வுக்கு பின்னர் 'மழை பெய்தால் முளைக்கும் காளான் போல' பல அமைப்புகள் புற்றீசல்களாக கிளம்பி அடங்கிவிட்டன. 'சாதி ஆதிக்க எதிர்ப்பு கூட்டியக்கம்' என்கிற ஒரு அமைப்பு வீராவேசமாக தொடங்கப்பட்டு - பாமக'வை ஒழிக்காமல் ஓயமாட்டோம் என்றனர். பின்னர் 'எப்போது நீதி கிடைக்குமோ அப்போது வரை தொடர் உண்ணாவிரதம் நடத்துவோம்' என்றனர். இப்போது அந்த இயக்கம் இருக்கும் இடமே தெரியவில்லை.

'சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்' என்கிற பெயரில் கவின்மலரும் மனுஷ்ய புத்திரனும் பல கூத்துகளை அறங்கேற்றினர். ஓவிய முகாம், உண்ணாநிலைப் போராட்டம், மு.க. கனிமொழியை வைத்து 'வன்மத்தில் சிறைபடுமோ காதல்' எனும் கவியரங்கம் எனப்பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த இயக்கம் தொடங்கிய வேகத்திலேயே காணாமல் போய்விட்டது. இதற்காக ஆர்ப்பாட்டமாக தொடங்கப்பட்ட இணையதளம் கூட இப்போது மூடப்பட்டுவிட்டது.
இதுபோன்ற அமைப்புகள் தோன்றிய வேகத்தில் மறைவதில் வியப்பதற்கு எதுவும் இல்லை. மதம் சார்ந்த சில அமைப்புகள் பணம் அளிக்கும்வரைதான் இந்த அமைப்புகள் இயங்கும்.

ஒரே ஆள் வெவ்வேறு இடங்களுக்கு வேலைக்கு போவது தவறல்ல. ஆனால், ஒரே கும்பல் ஒரே நோக்கத்தில், அதாவது - வன்னியர்களை ஒழிக்க வேண்டும். அதற்கு தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடையே கலவரத்தை தூண்ட வேண்டும் - என்கிற நோக்கத்தில் புதிய புதிய அமைப்புகளை தொடங்கி கலவரத்தை தூண்ட சதி செய்துவருகின்றனர். அந்த வகையில் அவர்கள் தொடங்கியுள்ள புதிய அமைப்பின் பெயர் அனைத்துக் கல்லூரி மாணவர் சங்கமாம்.

புதிய அமைப்பின் பின்னணி என்ன?

தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்துகொண்ட உடன், தமிழச்சி என்பவர் 'தேசியத் தலைவர் பிரபாகரனின் தியாகமும், தர்மபுரி இளவரசனின் தியாகமும் ஒன்றுதான்' என்றார். இதையே பின்பற்றி பலரும் "முத்துக்குமார் - பாலச்சந்திரன் - இளவரசன்" என மாபெரும் தியாகங்களை வரிசைப்படுத்தினர். அதை வழிமொழியும் வகையில் மே 17 இயக்கம், சேவ் தமிள்சு இயக்கம் ஆகியன களம் இறங்கின.

உடனே மனுஷ்ய புத்திரன் என்பவர்  "இளவரசனின் படுகொலைக்கு நியாயம் வேண்டி மாணவர் சமூகம் போராட வேண்டும். அல்லாவிட்டால் (பிரபாகரன் மகன்) பாலசந்திரனின் மரணத்தை ஒட்டி நீங்கள் நடத்திய போராட்டங்கள் அர்த்தமற்று போகும்." என்று பொங்கி எழுந்தார்.

இதன்படி, மனுஷ்ய புத்திரனின் தோழரான கவின்மலர் இந்த புதிய அனைத்துக் கல்லூரி மாணவர் சங்கத்தை கட்டி எழுப்பியுள்ளார். இதே பிரச்சனைக்காக கவின்மலர் ஏற்கனவே "சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்" என்கிற கடையை திறந்து மூடியவர் என்பதால் - அதே கும்பலை வைத்து புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.
மேலே உள்ள படத்தில் மண்டை உடைந்த நிலையில் - பிரபாகரன், இளவரசன் படங்கள் ஒப்பிடப்பட்டிருந்தன. (கோரத்தன்மைக் காரணமாக படங்கள் மறைக்கப்பட்டுள்ளன)
மாபெரும் தியாகம்: முத்துக்குமார் - பாலச்சந்திரன் - இளவரசன் (இது புர்ச்சியாளர்களின் தயாரிப்பு)

கௌரவக்கொலை தடுப்புச்சட்டமும் இளவரசனும்

அனைத்துக் கல்லூரி மாணவர் சங்கம் என்கிற பெயரில் கச்சேரி நடத்த இவர்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு 'கௌரவக்கொலை தடுப்புச்சட்டமும் இளவரசனும்'.  இவர்கள் முன்வைக்கும் கோரிக்கை 'கௌரவக் கொலையைத் தடுக்க அவசரச் சட்டம் இயற்று' என்பதாகும். (சிறப்பு பேச்சாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி) .

இதில் வேடிக்கை என்னவென்றால் - இளவரசன் மரணம், அல்லது தர்மபுரி நிகழ்வு தொடர்பான சம்பவங்களுக்கும் கௌரவக் கொலை தடைச் சட்டத்துக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதுதான்!

இந்திய அரசின் சட்ட ஆணையம் 'கௌரவக் கொலை தடைச் சட்டம்' இயற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை வைத்துள்ளது. இந்திய அரசு அந்தச் சட்டத்தை இயற்ற முன்வரவில்லை. எனவே, இச்சட்டத்தினை மாநில அரசுகளாவது நிறைவேற்ற வேண்டும் என சிலர் கோரி வருகின்றனர். இதே அடிப்படையில்தான் - இந்த முற்போக்கு வேடதாரிகளும் கூச்சலிருகின்றனர். கௌரவக் கொலை தடைச் சட்டம் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒரு நியாயமான சட்டம்தான்.

ஆனால், அந்த சட்ட முன்வரைவில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது கூட தெரியாமல் கௌரவக்கொலை தடுப்புச்சட்டத்தை இளவரசன் மரணத்துடன் இணைத்து குழப்புகின்றனர் இந்த பித்தலாட்ட புர்ஜியாளர்கள்.

கௌரவக் கொலை தடைச் சட்டம் சொல்வது என்ன?

திருமண சுதந்திரத்தில் தலையிடும் நோக்கில் சட்டவிரோதமாக ஒன்று கூடுவதை தடுக்கும் சட்டத்தில் - இந்த சட்டமானது 'சட்டத்தால் தடுக்கப்படாத' திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. (இங்கே காண்க: The Prohibition of Unlawful Assembly (Interference with Freedom of Matrimonial Alliances) Bill 2011)

No person or any group of persons shall gather, assemble or congregate at any time with the view or intention to deliberate on, or condemn any marriage, not prohibited by law, on the basis that such marriage has dishonoured the caste or community tradition or brought disrepute to all or any of the persons forming part of the assembly or the family or the people of the locality concerned.

அதாவது, கௌரவக் கொலை தடைச் சட்டம் எனப்படுகிற சட்டமானது, சட்டப்படி செல்லத்தக்க திருமணங்களை மட்டுமே குறிப்பிடுகிறது. ஆனால், தர்மபுரியில் நடந்தது சட்டப்படி செல்லுபடியாகாத ஒரு திருமணம். இன்றுவரை 'இளவரசனுக்கும் திவ்யாவுக்கும் திருமணம் நடந்தது' என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரம் எதுவும் இல்லை. அப்படி ஒரு திருமணம் இந்தியாவின் எந்த ஒரு பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யப்படவே இல்லை.
இளவரசன் பிறந்த நாள் 1993 மார்ச் (கண்ணீர் அஞ்சலி பதாகையில் மார்ச் 13 என்றும் சான்றிதழ்களில் மார்ச் 3 என்றும் உள்ளது)
இளவரசன் சட்டப்படியான திருமண வயதை (21) எட்டவே இல்லை. இந்நிலையில் 'சட்டப்படியான திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய' கௌரவக் கொலை தடைச் சட்டத்தை - இளவரசன மரணத்துடன் இணைத்துப் பேசுவது ஏன்? 

மதவெறி, சாதிவெறி சதி

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் இந்த பித்தலாட்டக் கூட்டம், இதுவும் செய்யும், இன்னமும் செய்யும். ஏனெனில், வன்னியர்களை ஒழிக்க வேண்டும் என்பது முற்போக்கு வேடதாரிகளின் நோக்கம். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களிடையே கலவரத்தை தூண்ட வேண்டும் என்பது மாற்று மதவெறி அமைப்புகளின் நோக்கம். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

தொடர்புடைய சுட்டிகள்:

1. ஆடிட்டர் ரமேசும் தர்மபுரி இளவரசனும்: அன்று வன்னியர்கள், இன்று ரியல் எஸ்டேட் - கோயபல்சின் மறுவடிவமாகும் புர்ஜியாளர்கள்

2. அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்.

3. தருமபுரி: முற்போக்கு வேடதாரிகளே! இதையும் கொஞ்சம் படிச்சுப்பாருங்க: மூன்று லட்சம் கேட்டதே கலவரத்துக்கு காரணமா?

4. தர்மபுரி தற்கொலையும் வன்னியர்களுக்கு எதிரான சதிச்செயலும்.

5. தர்மபுரி காதலும் பழிக்குப்பழி சாதிஒழிப்பும்: அடடா...இதுவல்லவோ தலித் புரட்சி!

6. தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?

புதன், ஜூலை 24, 2013

ஆடிட்டர் ரமேசும் தர்மபுரி இளவரசனும்: அன்று வன்னியர்கள், இன்று ரியல் எஸ்டேட் - கோயபல்சின் மறுவடிவமாகும் புர்ஜியாளர்கள்

சேலத்தில் நேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் மரணம், தர்மபுரியில் நிகழ்ந்த இளவரசன் மரணம் - இந்த இரண்டு மரணங்களுமே வருத்தப்பட வேண்டிய உயிரிழப்புகள். இரண்டு இழப்புகளும் தவிர்த்திருக்கப்பட வேண்டியவை.

இதுபோன்ற சோக நிகழ்வுகள் நடக்கும்போது அரசும், ஊடகங்களும், அரசியல் அறிவுஜீவிகளும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டியது அவசியம். உண்மை என்ன என்று கண்டறிந்து அதனை மக்களுக்கு அறிவிப்பதும், அந்த உண்மைக்கு ஏற்ப உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.

ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு பயங்கரவாதமோ, மதவெறியோ காரணமாக இருக்குமா? இருக்காதா? என்கிற விவாதம் இப்போதைக்கு தேவையில்லாதது. காவல்துறை விசாரணையில் உண்மை வெளிவரும் வரைக் காத்திருப்பதுதான் நியாயம். (எப்போதோ 2011 ஆம் ஆண்டின் குற்றத்தில் தொடர்புடையவர்களை இப்போது பார்த்து "சதிகாரர்கள் மூன்று பேர் பற்றி துப்புக் கொடுத்தால் பரிசு" என இந்த நேரத்தில் காவல்துறை அறித்துள்ளதும் தேவையில்லாதது.)

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட உடனேயே, 'காந்தியை சுட்டது ஒரு இந்து' என்று பகிரங்கமாக அறிவித்தார் ஜவகர்லால் நேரு. அன்றைய தினத்தில் அந்த ஒரு உண்மை மறைக்கப்பட்டிருந்தால், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரம் வெடித்திருக்கும். அந்த பேராபத்து ஓர் உண்மை அறிவிப்பால் தடுக்கப்பட்டது.
ஆனால், இன்றைய தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள இழப்புகளை, தமிழ்நாட்டின் முற்போக்கு வேடதாரிகள் எப்படி வர்ணிக்கின்றனர் என்பதை பார்க்கும்போது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. 

இளவரசன் பாமகவால் கொல்லப்பட்டார்!

தர்மபுரியில் இளவரசன் தற்கொலை செய்துகொண்டார் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களின் மூலம் இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அந்த தற்கொலை நேர்ந்த தருணத்தில் முற்போக்கு வேடதாரிகள் என்ன சொன்னார்கள் என்பதை பாருங்கள்:

மனுஷ்ய புத்திரன் (முகநூலில்): "ராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு முதலான அனைத்து சாதிவெறியர்களையும் வன்கொடுமைக் கொலையைத் தூண்டியதற்காகவும், அதற்கு சதித் திட்டம் தீட்டிக் கொடுத்ததற்காகவும் கைது செய்ய வேண்டும்!" "இளவரசனின் படுகொலைக்கு நியாயம் வேண்டி மாணவர் சமூகம் போராட வேண்டும். அல்லாவிட்டால் (பிரபாகரன் மகன்) பாலசந்திரனின் மரணத்தை ஒட்டி நீங்கள் நடத்திய போராட்டங்கள் அர்த்தமற்று போகும்."
கவின்மலர் (இந்தியா டுடேவில்): இளவரசனை கடைசியாக எம்.பி.சி பையன் (வன்னியர்) ஒருத்தன் கூட்டீட்டு போனான். இளவரசன் மரணத்தில் பாமகவின் பங்கு உள்ளது.

புதுவை சுகுமாரன் (முகநூலில்): பாமகவின் சாதி வெறி அரசியலுக்கு பலியாகியுள்ளது ஒரு அழகிய, மென்மையான காதல்.

- இதே போன்று, தமிழருவி மணியன், ஞானி, ஆளூர் ஷாநவாஸ், பாலாஜி சக்திவேல், கவிஞர் அருள்மொழி, சுப. வீரபாண்டியன் என்று ஒரு மிகப்பெரிய கூட்டம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இளவரசன் கொலை செய்யப்பட்டார் எனவும் அதற்கு பாமக தான் காரணம் எனவும் நீட்டி முழக்கினர்.

அதாவது, காவல்துறையினர் உண்மை என்ன என்று விசாரித்து கண்டறிவதற்கு முன்பாகவே - இளவரசன் படுகொலைதான் செய்யப்பட்டார். இதனைச் செய்தவர்கள் மருத்துவர் இராமதாசு அவர்களும் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களும்தான் என்று 'இவர்களே நீதிபதிகளாக மாறி' தீர்ப்பினை வாசித்தார்கள்.

ரமேஷ் ரியல் எஸ்டேட்டால் கொல்லப்பட்டிருக்கலாம்!

இப்போது பாரதீய ஜனதா கட்சியின் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைக்கு 'என்ன காரணம், யார் காரணம்' என எந்த ஒரு துப்பினையும் காவல்துறை இதுவரை கண்டறிந்ததாகத் தெரியவில்லை. அதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

ஆனால், அதற்குள் தாமாகவே முந்திக்கொண்டு தீர்ப்பினை வாசிக்க முன்வந்துள்ளனர் முற்போக்கு வேடதாரிகள். இவர்களின் அதீத ஆர்வத்தினை கீழே காண்க:

மனுஷ்ய புத்திரன் முகநூலில்): பா.ஜ.க பிரமுகர் படுகொலையை மதவாத வன்முறையாக சித்தரிக்க சில ஊடகங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. இது நல்லதல்ல. இதன் மூலம் இந்து-முஸ்லீம் இரண்டு தரப்பிலும் உள்ள அடிப்படைவாத சக்திகள் மிகுந்த ஊக்கமடையும். சாதிய வன்முறையைவிட கொடூரமானது மத வாத வன்முறை.
கவின்மலர் முகநூலில்): கொள்கைக்காக நடந்ததோ அல்லது தனிப்பட்ட காரணங்களால் நடந்ததோ அல்லது வேறு உள் முரண்பாடுகளால் நடந்ததோ... படுகொலைகள் வெறுக்கத்தக்கவை. ஆபத்தானவை. கண்டிக்கத்தக்கவை. ஆனால், நடந்துமுடிந்தவுடன், காரணங்களை ஆராயாமல், உரிய ஆதாரங்கள் ஏதுமில்லாமல், முஸ்லிம்கள் மீது வெறுப்பை வளர்ப்பதற்கு இவற்றை பயன்படுத்த முனையும் இந்துத்துவ அமைப்புகளின் அவசரம் துணுக்குற வைக்கிறது. எச்சரிக்கையைக் கோருகிறது.

புதுவை சுகுமாரன் (முகநூலில்): அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலைத் தாண்டி ரியல் எஸ்டேட் என பல வேலைகளில் ஈடுபடுவது இதுபோன்ற கொலைகளுக்குக் காரணம்.

- ஆக, இது தனிப்பட்ட காரணத்துக்கான கொலையாக இருக்கலாம் என்பதுதான் இவர்களின் புதிய தீர்ப்பு. இந்தக்கொலையை மதத்தோடு தொடர்புபடுத்தக் கூடாது என தாமாக முன்வந்து "அப்பன் குதிருக்குள் இல்லை" என்கின்றனர். அதிலும் ஒருபடி மேலே போய் ரியல் எஸ்டேட் கொலையாக இருக்கலாம் என எடுத்துக் கொடுக்கின்றனர்.

முற்போக்கு வேடதாரிகளின் உண்மை நோக்கம் என்ன?

'ஒரு தற்கொலை, ஒரு படுகொலை' இந்த இரண்டுமே ஒரே காலகட்டத்தில் நடந்துள்ள, தமிழ்நாட்டின் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள நிகழ்வுகள். இந்த இரண்டு நிகழ்வுகளை இருவேறு கோணத்தில் முற்போக்கு வேடதாரிகள் பார்ப்பதும், கட்டுக்கதையைக் கட்டுவதும் ஏன்?

தர்மபுரி தற்கொலையை 'அவசரம் அவசரமாக' படுகொலையாக மாற்றிய இந்த கோயபல்சு கூட்டம், சேலம் படுகொலைக்கு பயங்கரவாதம் காரணமல்ல என்று அவசரப்பட்டு கூறுவது ஏன்? ஆடிட்டர் ரமேஷ் கொலையில் அவசரப்பட்டு மதத்தை தொடர்புபடுத்த வேண்டாம் என பொங்கியெழும் முற்போக்கு புர்ஜியாளர்கள் கூட்டம் - இளவரசன் தற்கொலையில் மட்டும் அவசரப்பட்டு பாமகவை இழுத்து விட்டு குளிர்காய்ந்தது ஏன்?

தமிழ்நாட்டில் மத அடிப்படையிலான மோதல் ஏற்படக்கூடாது. ஆனால், சாதி ரீதியாக பிரிந்து எல்லோரும் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் புர்ஜியாளர்கள் கூட்டத்தின் உள்ளார்ந்த விருப்பமா? அதிலும் குறிப்பாக, இந்து மதத்திற்குள் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் அடித்துக்கொண்டு சாகட்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா?

இதன் மூலம், வன்னியர்களை எப்பாடுபட்டாவது தனிமைப்படுத்தி, பொது எதிரிகளாக்கி அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதுதான் உங்களுடைய பேராசையா?

சாதிக் கலவரத்தை தூண்டுவதுதான் உங்கள் மதவாத நோக்கமா?

மனுஷ்ய புத்திரன், ஆளூர் ஷாநவாஸ், கவின் மலர் போன்ற வேறொரு மதம் சார்ந்த கூட்டத்தினரும், லயோலா கல்லூரி போன்ற வேறொரு மதம் சார்ந்த அமைப்புகளும் - இந்து மதத்தின் சாதிப்பிரச்சினையை ஊதிப்பெரிதாக்குவதன் பின்னால் உள்ள சதித்திட்டம் என்ன?

இந்து மதத்திற்குள் இருப்பவர்கள் சாதியால் அடித்துக் கொண்டு சாகட்டும் என்றுதான் மாற்று மதத்தை சேர்ந்த கூட்டத்தினர் சதித்திட்டம் தீட்டி 'தர்மபுரியையும் மரக்காணத்தையும்' ஊதிப் பெரிதாக்குகின்றீர்களா? சாதியால் பிரிந்து அடித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சாதிக்கலவரங்களை திட்டமிட்டு தூண்டுகிறீர்களா?
'சாதி, மொழி என்கிற வேறுபாடுகளை அந்நியசக்திகள்தான் தூண்டிவிடுகின்றன' என்கிற இந்துத்வ கருத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், 'தர்மபுரியிலும் மரக்காணத்திலும்' ஆட்டம்போடும் முற்போக்கு வேடதாரிகளை மதம் சார்ந்த அமைப்புகள் பின்னால் இருந்து தூண்டிவிடுவதை பார்க்கும்போது சந்தேகம் வருகிறது. இவர்களிடம் இனியாவது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிற உள்ளுணர்வை தருகிறது.

மதவெறி, சாதிவெறியில் ஊறித் திளைத்திருக்கும் முற்போக்கு வேடதாரி ஓநாய்க் கூட்டமே - உங்களது இரத்த வெறிக்கு எங்களது மக்களை பலியாக்காதீர்.

திங்கள், ஜூலை 22, 2013

கலைஞரும் ஆஸ்திரியா ஸ்டாம்பும்: போலிப் புகழுக்கு பலியாகும் தமிழகத் தலைவர்கள்!

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி, கிறித்தவ மதபோதனை அமைப்பிடம் ஏமாந்த விஜயகாந்த் - இப்படிப்பட்ட தலைவர்களைத்தான் தமிழக மக்கள் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்!

ஸ்டாம்பிடம் ஏமாந்த கலைஞர் கருணாநிதி

"தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிட்டது.
கலைஞரிடம் அளிக்கப்படும் போலி ஸ்டாம்ப்
"என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று 21.7.2013 அன்று இதுகுறித்த ஒரு படத்தையும் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

காசுகொடுத்து வாங்கிய ஸ்டாம்ப் புகழ்

ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இது ஒரு மிகச் சாதாரணமான காரியம் ஆகும். 

ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் துறையிடம் பணம் செலுத்தி நாம் எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் அஞ்சல் தலையாக வெளியிட முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை அல்லது ஒரு கார்ட்டூன் போன்ற எதை வேண்டுமானாலும் வெளியிட முடியும். (அதற்கான இணையதளம் இதோ: MEINE MARKE Personalized Stamps)
ஆஸ்திரிய கார்ட்டூன் ஸ்டாம்ப்
இதே போன்று நான் என்னுடைய புகைப்படத்தை ஸ்டாம்பாக வெளிட ஆன்லைன் மூலம் முயன்ற போது, சுமார் 222 யூரோ (சுமார் 17 ஆயிரம் ரூபாய்) கட்டினால் - ஸ்டாம்ப் ரெடி என பதில் வந்தது. ஆஸ்திரிய அஞசல்துறையின் இணையத்தில் தானாகவே எனது ஸ்டாம்ப் மாதிரியையும் அளித்தார்கள். 
ஆஸ்திரிய ஸ்டாம்ப்பில் எனது படம்
அதாவது, நானே ஒரு படத்தை வடிவமைத்து நானே ஸ்டாம்பை உருவாக்க முடியும். அதனை ஆஸ்திரிய அஞ்சல் துறை வெளியிடும். இதே போன்றுதான் டான் அசோக் என்கிற இளவரசன் கருணாநிதியின் நினைவாக தாபால் தலையை வடிவமைத்து அதை வெளியிட்டுள்ளனர்.

இன்னொரு 23-ஆம் புலிகேசி: வரலாறு முக்கியம் அமைச்சரே

ஆஸ்திரியா நாட்டு அஞ்சல் துறையிடம்பணம் கொடுத்து ஸ்டாம்ப் வெளியிட்டதை யாரும் தவறாக சொல்ல முடியாது. 

ஆனால், "ஆஸ்திரிய தபால் துறைக்கு தலைவர் கலைஞர் குறித்த தகவல்களை திரட்டி அனுப்பியதாகவும், அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள் கலைஞரின் 75 ஆண்டுகால சமுதாயப்பணிகளையும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக சட்டசபை உறுப்பினராக பணியாற்றும் அவரது ஆளுமையையும் வியந்து போற்றியதாகவும் டான் அசோக் தெரிவித்தார்" என்று விடுதலை நாளிதழ் சொல்வதும், (இங்கே காண்க: ஆஸ்திரியாவில் கலைஞருக்குத் தபால் தலை!)

தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி "கலைஞர் 90" அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி" என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிடுவதும் (இங்கே காண்க: தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி கலைஞர் 90’’ அஞ்சல் தலை!)
போலி ஸ்டாம்ப்பை புகழும் முரசொலி
"என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று 21.7.2013 அன்று இதுகுறித்த ஒரு படத்தையும் வெளியிட்டு கலைஞர் கருணாநிதி முகநூலில் தனக்குத்தானே புகழ்ந்துகொள்வதும்தான் புல்லரிக்க வைக்கிறது. (இங்கே காண்க: முகநூல் பக்கம்)

காசு கொடுத்தால் ஸ்டாம்ப் ரெடி எனும்போது, சமுதாயப்பணி, தமிழ்ப் பணி, சட்டசபை உறுப்பினராக பணியாற்றும் ஆளுமையை வியந்து போற்ற என்ன இருக்கிறது? இதற்காக உலகத் தமிழர்கள் ஏன் மகிழ்ச்சியடைய வேண்டும்?

இத்தனைக்கும், "தமிழக மக்களை யாரும் ஒரு போதும் ஏமாற்ற முடியாது! தமிழக மக்கள் யாரிடமும் நிச்சயம் ஏமாற மாட்டார்கள். வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்திருப்பவர்கள் தான் தமிழக மக்கள்!" என்று  சனிக்கிழமை (20.7.2013) அன்று கூறியுள்ளார் கருணாநிதி. ஆனால், அதற்கு அடுத்த நாளே "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட "கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது" என்று புகைப்படத்தை வெளியிடுகிறார்.
வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் இடையே உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறிவது இருக்கட்டும், உங்களால் அறியமுடிகிறதா கலைஞரே?

இத்தனை முறை தமிழ்நாட்டின் முதலைமைச்சராக இருந்தவர், தனது 90 ஆவது வயதிலும், ஒரு அற்ப புகழுக்காக, கேவலமான முறையில் தமிழக மக்களை ஏமாற்றுகிறார் என்பது மனவேதனை அளிக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:

1. 'டாக்டர்' விஜயகாந்த் - பணம் கொடுத்து வாங்கிய பட்டம்?

2. விஜயகாந்த் ஒரு கிறித்தவ மதபோதகரா? டாக்டர் பட்டத்தின் அதிர்ச்சியளிக்கும் பின்னணி!

ஞாயிறு, ஜூலை 21, 2013

அரசியல் கொலைகளுக்கு கண்டனம்: பாஜக முழு அடைப்புக்கு பாமக ஆதரவு

"தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அதன் வெளிப்பாடு தான் சேலத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளரும், தணிக்கையாளருமான ரமேஷ் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த ஓராண்டில் மட்டும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சார்பு அமைப்புக்களைச் சேர்ந்த 6 பேர் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, இதுதொடர்பான வழக்குகளில் சொல்லிக் கொள்ளும் படியாக எந்த முன்னேற்றமுமே ஏற்படவில்லை என்பது தான் வேதனை அளிக்கும் உண்மையாகும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதற்கும், காவல்துறையினரின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பதற்கும் இவை தான் உதாரணம் ஆகும். திருச்சி மற்றும் மதுரையில் நடைபெற்ற அரசியல் படுகொலைகளில் கடந்த பல மாதங்களாக குற்றவாளிகளை காவல்துறையினரால் நெருங்கக் கூட முடியவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய விசயமாகும்.

தமிழக காவல்துறையினரின் அலட்சியம் மற்றும் திறமையின்மையால் கொலைகாரர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் அச்சம் போய்விட்டது. பொதுமக்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை எவருமே சுதந்திரமாக நடமாட முடியவில்லை என்பது தான் தமிழகத்தின் இன்றைய நிலை ஆகும்.

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறையிடமும், அரசிடமும் முறையிட்டும் எந்த பயனும் ஏற்படுவதில்லை. தமிழக அரசின் இந்த அலட்சியம் தான் அரசியல் படுகொலைகளுக்கு அடிப்படையாக அமைகிறது.

பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷின் படுகொலை உட்பட தமிழகத்தில்  தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் படுகொலைகளை கண்டித்தும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் நாளை(22.07.2013) திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் முழு அடைப்பு போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." - இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சனி, ஜூலை 20, 2013

பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் சிபிஎம் கட்சி!

"இளவரசன் சாவு: மார்க்சிஸ்ட் கட்சியின் அருவருக்கத்தக்க அரசியலுக்கு கண்டனம்" எனும் அறிக்கையை பாமக தலைவர் கோ.க.மணி வெளியிட்டுள்ளார்:
"மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி. இராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், திவ்யாவின் தந்தை நாகராஜன் மரணமும், இளவரசனின் மரணமும் இயற்கை மரணம்  அல்ல என்றும், அவை கவுரவக் கொலைகள் என்றும் கூறியிருக்கிறார்.

நாகராஜன் தற்கொலைக்கு சிபிஎம் இரங்கல் தெரிவிக்காதது ஏன்?

அவரது அறிக்கையைப் படித்த பின்னர், பொதுவுடைமை சித்தாந்தம் பேச வேண்டியவர்கள் பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்களே என்ற கவலை தான் எனக்கு ஏற்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திவ்யாவும், இளவரசனும் திருமணம் செய்து கொண்ட நிலையில், அப்போதே தற்கொலை செய்து கொள்ளாத திவ்யாவின் தந்தை நாகராஜன் நவம்பர் மாதத்தில்  தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று வினா எழுப்பியிருக்கிறார் இராமகிருஷ்ணன்.

நாகராஜன் தற்கொலை செய்து கொண்ட போது அதற்காக இரங்கல் தெரிவிக்கக் கூட முன்வராத மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை, இப்போது நாகராஜனின் சாவு கவுரவக் கொலை என்று கூறி சர்ச்சை எழுப்பப் பார்க்கிறது. இதன் நோக்கம் யாரையோ திருப்திப் படுத்தி, ஏதோ லாபம் பார்க்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

கடந்த ஆண்டு திவ்யாவை இளவரசன் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று திருமணம் கொண்டார். தனது மகள் தவறான ஒருவரிடம் சிக்கி வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது என்று கவலைப்பட்ட நாகராஜன் தமது மகளை மீட்கப் போராடினார். ஆனால், அதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்ட நிலையில், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தக் காவல் நிலையத்தில் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர், அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தார். மேலும், நாகராஜனை கடுமையாக திட்டியதுடன்,இதற்குப் பிறகும் நீயெல்லாம் ஏன் உயிருடன் இருக்கிறாய்? என்று கேட்டதைத் தாங்க முடியாமல் தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த உண்மை அனைவருக்கும் தெரியும். அப்போது நாகராஜனின் தற்கொலைக்கு காரணமான காவல் அதிகாரியை கண்டிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வரவில்லை.

இப்போது தடையை மீறிச் சென்று இளவரசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை, அப்போது நாகராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட முன்வரவில்லை. இவற்றையெல்லாம் செய்தால், தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்காமல் போய்விடுமோ? என மார்க்சிஸ்ட்  தலைமை அஞ்சியது தான் இதற்கெல்லாம் காரணம் ஆகும். வாக்குகளை இழந்துவிடக்கூடாது என்பதற்காக, இப்படியெல்லாம் நடந்து கொள்வதும், தங்களின் தவறை மறைப்பதற்காக வருந்தத்தக்க ஓர் உயிரிழப்பை கவுரவக் கொலை என்று முத்திரை குத்தி கொச்சைப் படுத்துவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் அருவருக்கத்தக்க அரசியல் ஆகும்.

சிபிஎம் கட்சியின் ‘ஒரு சாதி ஆதரவு வெறி’ 

இளவரசனிடமிருந்து திவ்யா பிரிந்து வந்ததற்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று எங்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதற்குப் பிறகும் இதனுடன் பா.ம.க.வை சம்பந்தப்படுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. மார்க்சிஸ்ட் தலைமை உட்பட, இளவரசனுக்காக இன்று கண்ணீர் வடிப்பதைப் போல நடிப்பவர்கள் எவருமே அவர் உயிருடன் இருந்த போது வேலை வாங்கித்தரவோ அல்லது தற்கொலை மனநிலையுடன் இருந்த போது கவுன்சலிங் வழங்கவோ முன்வரவில்லை. இளவரசன் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தை சில தாழ்த்தப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பதுக்கி வைத்துக் கொண்டு, இளவரசன் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பி கலவரத்தை ஏற்படுத்த முயன்றபோது அதைக் கண்டிக்க மார்க்சிஸ்ட் முன்வரவில்லை.

இதற்காகவெல்லாம் வெட்கப்படாமல் இளவரசனின் தற்கொலைக்கு  புதுப்புது பெயர்களைச் சூட்ட இராமகிருஷ்ணன் முயல்கிறார். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனைத் தவறு செய்தாலும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கைப் பார்ப்போம்- மற்ற சமுதாயத்தினர் தவறே செய்யாவிட்டாலும் விமர்சிப்போம் என்பது தான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்றால் அதை ‘ஒரு சாதி ஆதரவு வெறி’ என்று அழைக்காமல் எப்படி அழைப்பது?  மார்க்சிஸ்ட் அகராதியில் இதற்குப் பெயர் தான் பொதுவுடைமையா? என்பதை இராமகிருஷ்ணன் தான் விளக்கவேண்டும்.

டபிள்யூ. ஆர். வரதராஜன் 'கௌவரவக் கொலைக்கு' யார் காரணம்?

மரணங்கள் இயற்கையாக நிகழாத போது அதற்கு காரணமானவர்கள் தான் குற்றவாளிகள் என்று ‘நீதிபதி’ இராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அது உண்மை தான். அதன்படி பார்த்தால், மக்களால் மதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில்  ஒருவரான டபிள்யூ. ஆர். வரதராஜன் மீது, உட்கட்சி பதவிச் சண்டை காரணமாக அவதூறான பழியை சுமத்தி, விசாரணை அறிக்கை என்ற பெயரில்  அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றப்பத்திரிகையை தயாரித்து, அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்த குற்றவாளிகள் யார் யார் என்பதை இராமகிருஷ்ணன் அடையாளம் காட்டுவாரா?

மார்க்சிஸ்ட் கட்சியினர் கார்ல் மார்க்சின் கொள்கைகளை வைத்தும், எல்லோருக்கும் எல்லாமும்  கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தை முன் வைத்தும் அரசியல் நடத்தட்டும். ‘ஒரு சாதி ஆதரவு வெறி’யுடன் மற்ற சமுதாயத்தினர் மீது அவதூறு பரப்பும் அரசியலை நடத்த வேண்டாம். இத்தகைய அரசியலை கார்ல் மார்க்ஸ், ஜோதிபாசு, ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஆகியோரின் ஆன்மாக்கள் கூட ஏற்றுக் கொள்ளாது என்பதை ஒரு பாட்டாளி என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கோ.க.மணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வியாழன், ஜூலை 18, 2013

ஆனந்த விகடனின் அட்டகாசம்: இளவரசன் இல்லாத திவ்யா - ஹன்சிகா இல்லாத சிம்பு!

ஆனந்த விகடன் கடந்த இரண்டு இதழ்களாக 'காதல் பிரிவு' என்பதை கவர் ஸ்டோரியாக வெளியிட்டுள்ளது.

17.7.2013 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் "இளவரசன் இல்லாத திவ்யா, இனி...?" என்பது கவர் ஸ்டோரி. அதற்கு அடுத்த, 24.7.2013 தேதியிட்ட  ஆனந்த விகடன் இதழில் "சிம்புவும் நானும் பிரிஞ்சுட்டோம்! ஸீ யூ ஹன்சிகா" என்பது கவர் ஸ்டோரி.
17.7.2013 தேதியிட்ட ஆனந்த விகடன் 
24.7.2013 தேதியிட்ட  ஆனந்த விகடன் 
இந்த இரண்டு இதழ்களுக்கு இடையே - குறைந்தபட்சம் ஒரே ஒரு இதழிலாவது 'வேறு எந்த கருமாந்திரத்தையாவது' கவர் ஸ்டோரியாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

திவ்யாவிடம் கேள்வி, ஹன்சிகாவிடம்  பதில்!

சென்ற இதழ் கவர் ஸ்டோரியில் "திவ்யா இப்போது பேச வேண்டும். தன் அன்புக் காதலனை பாசத்துக்குரிய அப்பாவைப் பறிகொடுத்த அநியாயத்துக்கு நீதி கேட்க வேண்டும். அப்படி திவ்யா  துணிவுடன் களமிறங்கினால், அவருக்குப் பின்னால் இளைஞர் கூட்டம் திரண்டு நிற்கும்!" என உசுப்பி விட்டது ஆனந்த விகடன்.

இந்த இதழ் கவர் ஸ்டோரியில் திவ்யாவுக்கு பதிலாக பதில் அளித்துள்ளார் ஹன்சிகா: "நானும் சிம்புவும் பிரிஞ்சுட்டோம்னு பெருசா எழுதிடுங்க. இந்தக் கதைக்கு ஒரு டிராஜடி க்ளைமாக்ஸ் கிடைச்சுடும். என்னப் பத்தி இப்படித் தப்பு தப்பா கிளப்பி விடறவங்களை அந்தக் கடவுள் நிச்சயம் பார்த்துப்பார். அவ்வளவுதான்." என்றிருக்கிறார்  ஹன்சிகா.

நடிகைகளின் தொடை, தொப்புள், மார்பு இல்லாத ஆனந்த விகடன் சாத்தியமா?

நீதி, நியாயம், தர்மம், வெங்காயம், புண்ணாக்கு என்று வக்கணையாகப் பேசும் ஆனந்த விகடன் - பலரின் அபிமானத்துக்குரிய தலைவர்களை அநாகரீக கேலிப்படமாக சித்தரித்து, தனது குரூரமான அரிப்பைத் தீர்த்துக்கொள்ளும் ஆனந்த விகடன் - இந்த தமிழ் சமூகத்தின் மீது கொஞ்சமாவது அக்கறையுள்ள பத்திரிகையாக இருக்குமானால், ஒரு ஆறுமாத காலத்திற்காவது, நடிகைகளின் தொடை, தொப்புள், மார்பை அட்டையில் வெளியிடாமல் பத்திரிகையை நடத்திக்காட்டட்டும்.

இளவரசன் தற்கொலை: பா.ம.க.வை சிலுவையில் அறைந்தவர்கள் பாவங்களைச் சுமப்பார்களா? மருத்துவர் இராமதாசு வினா

"தருமபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின் இரண்டாவது உடற்கூறு ஆய்வறிக்கையை தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இளவரசன் கொலை செய்யப்படவில்லை என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றும், அவரது உடலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஆல்கஹால் கலந்திருப்பதால், அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருக்கலாம் என்றும்  உடற்கூறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது"

சர்ச்சைக்குரிய ஒரு மரணம் குறித்த உண்மை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இளவரசனின் மரணம் கொலை அல்ல என்பது எங்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தெளிவாகவே தெரிந்திருந்தது. அதேபோல், இளவரசனின் தற்கொலைக்கு அவரது திடமற்ற மனநிலையும், அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று நினைத்த தலித் அமைப்புகளின் செயல்பாடுகளால் ஏற்பட்ட மன உளைச்சலும் தான் காரணம் என்பதையும் அனைவரும் நன்றாக அறிந்திருந்தனர்.

ஆனால், அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்ற எண்ணத்தில், இளவரசன் தற்கொலை குறித்த செய்தி வெளியானதுமே, அதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பதைப் பற்றியெல்லாம் ஆராயாமல், இதற்கெல்லாம் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான் என்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் குற்றஞ்சாற்றி சிலுவையில் அறைந்தன. இளவரசன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஒரு தரப்பினரும், இளவரசனையும், திவ்யாவையும் பாட்டாளி மக்கள் கட்சியினர்  பிரித்ததால் தான் இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக இன்னொரு தரப்பினரும்  வதந்திகளை பரப்பினர்.

ஆனால், உண்மை இப்போது அம்பலத்திற்கு வந்துவிட்டது. தொடர் வண்டியில் மோதியதால் தான் இளவரசன் உயிரிழந்திருக்கிறார் என்றும், அவர் மீது வேறு எத்தகைய தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தாக்கல் செய்துள்ள உடற்கூறு ஆய்வு அறிக்கையிலும், வேறு சில ஆதாரங்களிலும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

இளவரசனிடம் இருந்து திவ்யாவை பிரித்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக சில அமைப்புகள் திட்டமிட்டு பரப்பிய செய்திகளும் பொய்யானவை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இளவரசனும், திவ்யாவும் பிரிந்தது தனிப்பட்ட இருவரின் பிரச்சினை ஆகும். இதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை. இன்னும் கேட்டால், திவ்யாவை இளவரசன் திருமணம் செய்து கொண்ட பின்னர் செலவுக்கு பணம் இல்லை என்றும், இளவரசனுக்கு வேலை கிடைக்காத நிலையில், வேறு சில பிரச்சினைகளும் ஏற்பட்டதால் தான்  அவருடன் தொடர்ந்து வாழ முடியாமல் திவ்யா தாயாரிடம் சென்றார். அதன்பின்னர், நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த ஆணையின்படி தான், திவ்யா அவரது தாயாருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார்.

தற்கொலை மனநிலை

மேலும், இளவரசன் ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்தே தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில்  இருந்திருக்கிறார் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கடந்த மாதம் சென்னை வந்த இளவரசன், ஒரு அரசியல் கட்சித் தலைவரை சந்தித்து தமக்கு வேலை பெற்றுத் தருமாறு கேட்ட போது, அந்தத் தலைவர் வேலை வாங்கித் தர மறுத்துவிட்டதுடன், மனம் நோகும்படியும் பேசியிருக்கிறார். இதனால், மனம் வெறுத்த இளவரசன், அங்கிருந்து தாம் தங்கியிருந்த விடுதியின் அறைக்கு வந்து தமது இடது கை மணிக்கட்டை பிளேடால் கீறிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில் தான் இளவரசன் கடந்த 4-ஆம் தேதியன்று மது அருந்திவிட்டு, தொடர்வண்டியில் மோதி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவரிடமிருந்து சிலரால் திருடிச் செல்லப்பட்டு, பின்னர் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் இருப்பது இளவரசனின் கையெழுத்து தான் என்பது தடய அறிவியல் துறை ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

திடமான மனநிலை இல்லாததும், மது போதையும் தான் இளவரசனின் தற்கொலைக்கு காரணம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. மனித உயிர்கள் மதிக்கப்பட வேண்டியவை என்ற அடிப்படையில், இளவரசனின் மரணம் மிகுந்த வருத்தமளிக்கும் ஒன்று தான் என்ற போதிலும், அவரது தற்கொலைக்கு காரணம் இதுதான் என்பது மறுக்க முடியாதது ஆகும். உண்மை இவ்வாறு இருக்க, இளவரசனின் மரணத்தில், அரசியல் உள்நோக்கத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியை சிலுவையில் அறைந்தவர்கள் அதற்கான பாவத்தை சுமப்பார்களா? என்பது தான் நான் எழுப்ப விரும்பும் வினா ஆகும்.

தொடர்வண்டியில் மோதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த இளவரசன், தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறத்தில் உள்ள தொடர்வண்டி பாதை அருகே அமர்ந்தபடி தமது முடிவு குறித்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார். தற்கொலை திட்டத்தைக் கைவிட்டு விட்டு வீடு திரும்பும்படி, அறிவழகன் என்ற உறவினர் தொலைப்பேசியில் கேட்டுக் கொண்ட போது, தாம் அளவுக்கு அதிகமாக குடித்திருப்பதாகவும், இந்த நிலையில் தம்மால் வீட்டுக்கு வர இயலாது என்றும் கூறியிருக்கிறார்.

அதன்பின்னர், சில மணி நேரங்கள் கழித்து தான், அவர் தொடர்வண்டியில் மோதி தற்கொலை செய்து கொண்டார் என்ற போதிலும், அவரை காப்பாற்ற அவரது உறவினர்களோ, நண்பர்களோ முயற்சி செய்யவில்லை. இளவரசன் ஏற்கனவே ஒருமுறை தற்கொலை செய்ய முயன்றதும், அவர் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருந்ததும் சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் உட்பட பலருக்கு தெரிந்து இருந்திருக்கிறது. இளவரசனையும், அவரது மரணத்தையும் வைத்து ஆதாயம் தேட முயன்றவர்கள், மனசாட்சியுடன் செயல்பட்டு, அவருக்கு கவுன்சலிங் வழங்க ஏற்பாடு செய்திருந்தால், இளவரசனின் மரணத்தை தடுத்திருக்க முடியும். அவ்வாறு செய்யத் தவறியவர்கள் தான் இளவரசனின் சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

விடை காணப்பட வேண்டிய வினாக்கள்

இளவரசன் தற்கொலை தொடர்பான சர்ச்சைகள் இன்னும் தீரவில்லை. இளவரசன் தற்கொலை செய்து கொள்ளப் போவது அவருடன் சம்பந்தப்பட்ட பலருக்கும் முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. இளவரசன் தற்கொலை செய்து கொண்ட பின்னர், அவரது உடல் கிடந்த இடத்திற்குச் சென்ற அவரது உறவினர்கள் சிலர், இளவரசனின் முழுக்கால் சட்டை பையில் இருந்த தற்கொலைக் கடிதத்தை எடுத்துள்ளனர்.

அதை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கைப்பற்றி வைத்துக் கொண்டு, இதுபற்றி யாரிடமும் தகவல் தெரிவிக்கக் கூடாது என்று கட்டளையிட்டிருக்கிறார். அக்கடிதத்தை அவர் பதுக்கி வைத்துக் கொண்டு, இளவரசன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தொடர்ந்து வதந்தி பரப்பி வந்திருக்கிறார். இளவரசன் தற்கொலை செய்து கொண்டதை நன்றாக அறிந்திருந்தவர்களும், அந்த உண்மையை வெளியில் சொல்ல முன்வரவில்லை.

இதன்மூலம் இளவரசனை யாரோ சிலர் படுகொலை செய்து விட்டார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் & சட்டம் ஒழுங்கையும், சமூக நல்லிணக்கத்தை சிதைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. இளவரசனுக்காக குரல் கொடுப்பதாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்டவர்கள், எத்தகைய கொடூரமான எண்ணத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்; இத்தகைய சக்திகளை அடையாளம் கண்டு ஒதுக்கி வைக்க வேண்டும்.

இளவரசன் தற்கொலை தொடர்பான விவகாரத்தில் மருத்துவ ஆய்வு கேலிக் கூத்தாக்கப்பட்டிருப்பதும் மிகவும் வருத்தமளிக்கிறது. இளவரசனின் உடல் முதல்முறையாக தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வுக்கு உள்ளாக்கப்படும் போதே பல்வேறு அத்துமீறல்கள் அறங்கேற்றப்பட்டன. மருத்துவர்கள் மட்டுமே இருக்க வேண்டிய உடற்கூறு அரங்கில், சில அரசியல்கட்சிகளையும், ஜாதி அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் நுழைந்து, உடற்கூறு ஆய்வை செல்பேசியில் படம் பிடித்திருக்கிறார்கள்.

உடற்கூறு ஆய்வின் போது , மருத்துவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அவர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடமாடியதும் காவல்துறையின் வீடியோவில் பதிவாகியிருக்கிறது. மருத்துவம் பற்றியும், உடற்கூறு பற்றியும் எதுவுமே தெரியாதவர்கள் உடற்கூறு அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டதன் மூலம் அங்கு வைக்கப்பட்டிருந்த உடல் காட்சிப் பொருளாக்கப்பட்டிருக்கிறது. மருத்துவத் துறையின் எந்த மரபும் இதை அனுமதிக்காது.

தமிழக அரசின் இரட்டை நிலை

இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடந்துகொண்ட விதத்தைப் பார்க்கும்போது, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயம் தான் ஏற்படுகிறது. மரக்காணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், சில தலித் அமைப்புகளும் திட்டமிட்டு நடத்திய கலவரத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் இருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட போது, அது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், அதை ஏற்காத தமிழக அரசு, நீதி கேட்டு போராடிய என்னையும், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. வன்னியர் சங்கத்தலைவர் ஜெ.குரு உள்ளிட்ட 122 பேரை குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தது.

ஆனால், இளவரசன் தற்கொலை செய்து கொண்டது தெளிவாகத் தெரிந்த பிறகும், அதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய அரசு, தலித்துகளின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் ஆட்டுவிக்கும்படியெல்லாம் ஆடிக்கொண்டிருக்கிறது. வன்னியர்கள் படுகொலை செய்யப்பட்டால் அதை கண்டு கொள்ள மாட்டோம்; தலித்துகள் தற்கொலை செய்துகொண்டால் கூட நீதிவிசாரணை நடத்துவோம் என்ற இரட்டை நிலையை  அரசு கடைப்பிடிப்பது கண்டிக்கத்தக்கது.

நீதியரசர் சிங்காரவேலு தலைமையிலான விசாரணை ஆணையம் அடுத்த மாத தொடக்கத்தில் விசாரணையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இளவரசனின் தற்கொலை முடிவை  தெரிந்து கொண்டவர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்யாதது ஏன்?

இளவரசனின் தற்கொலைக் கடிதத்தை கைப்பற்றியவர்கள் யார்? அவர்கள் மீது காவல் துறை இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? இளவரசன் தற்கொலை செய்து கொண்ட இடத்திற்கு காவல்துறையினர் செல்வதற்கு முன்பாகவே இவர்கள் சென்றது எப்படி? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் சதி ஒளிந்திருக்கிறதா? என்பது குறித்தும் விசாரித்து உண்மைகளை வெளிக் கொண்டுவர வேண்டும்; கலவரத்தை தூண்ட முயன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" -  இவ்வாறு மருத்துவர் இராமதாசு அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No evidence of torture on Ilavarasan’s body - The Hindu
Mobile conversations reveal Ilavarasan’s intention to end life - The Hindu

தொடர்புடைய சுட்டிகள்:

1. தர்மபுரி இளவரசன் மரணம் தற்கொலையே: அதிர்ச்சியளிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை!

2. அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்.

3. தருமபுரி: முற்போக்கு வேடதாரிகளே! இதையும் கொஞ்சம் படிச்சுப்பாருங்க: மூன்று லட்சம் கேட்டதே கலவரத்துக்கு காரணமா?


4. தர்மபுரி தற்கொலையும் வன்னியர்களுக்கு எதிரான சதிச்செயலும்.