Pages

திங்கள், செப்டம்பர் 16, 2013

ஓணம் பண்டிகை - இந்து மதத்தின் மாபெரும் முரண்பாடு!

ஓணம் பண்டிகை மலையாள நாட்டின் தேசியப் பண்டிகை. இப்பண்டிகைக்கு அடிப்படையாக உள்ள கதை ஒன்றுதான். ஆனால், ஓணம் எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதற்கான காரணம் வேறுபட்டதாகும்

அடிப்படைக் கதை: 

மகாபலி என்ற மன்னர் கேரளத்தை ஆண்டு வந்தார். ஒருமுறை திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையேக் கொடுத்தார் பலி மகாராஜா. 
காரணம் 1. பார்ப்பனர் அல்லாத மக்கள் கூறும் காரணம்.

"மகாபலி ஒரு மிகச்சிறந்த மன்னன். மக்களை நேசித்தவன். மகாபலியின் ஆட்சிக்காலம் ஒரு பொற்காலம். அப்போது சாதி இல்லை. எல்லா மக்களும் ஒன்றாகவே இருந்தனர். சண்டை இல்லை, சச்சரவுகள் இல்லை, ஏமாற்று வேலைகள் இல்லை, திருட்டு இல்லை. மக்கள் தங்களின் எல்லா தேவைகளையும் பெற்றனர். மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். மகாபலி மன்னன் ஒரு மிகச்சிறந்த நீதிமானாக ஆட்சி செய்தான்.

தேவர்கள் இதைப் பார்த்து அஞ்சினர். "இந்த அசுரனை அழிக்க ஏதாவது செய்" என்று விஷ்ணுவிடம் வேண்டினர். அவரும் வாமணன் எனும் குள்ள பார்ப்பனனாக அவதாரமெடுத்து வாமனனை அழித்தார்.
பாதாளத்தில் புதைக்கப்படும் முன்பு ஆண்டிற்கு ஒருமுறை என்னுடைய மக்கள் இப்போது போல எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? என்பதை நான் பார்க்க வேண்டும் என்று மகாபலி கேட்டார். அவ்வாறு ஆண்டுக்கு ஒருமுறை அந்த மாமன்னன் தன் மக்களைப் பார்க்க வரும் நாளே ஓணம். ஓணம் நாளில் மக்கள் வாசலில் அத்தப்பூக் கோலம் போட்டு மகாபலியை வரவேற்கிரார்கள். "

காரணம் 2. பார்ப்பனர்கள் கூறும் காரணம்

"மகாபலி ஒரு அசுரன். அவனது அதர்ம ஆட்சியை விஷ்ணு அழித்தார். மகாபலி திரும்பி வருவதற்காக இந்த நாள் கொண்டாடப்படவில்லை. மாறாக, வாமணன் மகாபலியை பாதாளத்தில் புதைத்த நாள் இதுவாதும்.

ஓணம் நாளில் மக்கள் வாசலில் அத்தப்பூக் கோலம் போட்டு அதன் நடுவில் விஷ்ணுவை வைப்பார்கள். அப்போது வரும் மகாபலி தன்னுடைய மக்கள் விஷ்ணுவை வழிபடுவதையும், நாட்டில் தர்மம் நிலைநாட்டப் பட்டிருப்பதையும் பார்த்து ஏமாற்றத்துடன் மீண்டும் பாதாளத்திற்கு போய்விடுவார்."

- ஆக, ஒரே பண்டிகைக்கு இரண்டு விளக்கங்கள் உள்ளன. ஓணம் பண்டிகையின் வரலாற்றில் "தர்மம்" மற்றும் "நீதி" என்கிற வார்த்தைகள் எதிர்எதிர் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் சாதியற்ற, தீமையற்ற பழைய பொற்காலத்தை நினைத்து - இந்த ஒரு நாளாவது அந்த நாளாக இருக்கட்டும் என்று ஏக்கத்தில் கொண்டாடுகிறார்கள். பெரும்பான்மை நம்பிக்கையின் படி - மகாபலி மன்னனின் காலமே பொற்காலம். "நீதி" தவறாத அந்த  மன்னனை "தர்மம்" காப்பதற்காக வாமணன் அழித்தான்.

ஆனால், மற்றொருக் கூட்டத்தினர் - தர்மம் நிலை நாட்டப்பட்ட நாளே நல்ல நாள். இந்த அநீதியான காலம் நீடிக்க வேண்டும் என்று அதே நாளைக் கொண்டாடுகின்றனர்.

வாசலில் போடப்படும் ஒரே அத்தப்பூக்கோலம் - மகாபலியை வரவேற்கிறது என்று ஒருசாரார் கூறுகின்றனர். அதுவே அவரை விரட்டவே போடப்பட்டுள்ளதாக ம்ற்றொரு சாரார் கூறுகின்றனர்.
ஓணம் பண்டிகையின் மய்யமாகக் கருதப்படும் திரிக்ககரா ஆலயம் வாமணனின் கோவிலாக இருக்கிறது. அந்த கோவிலுக்கு அடியில் மகாபலியின் அரண்மனை இருப்பதாக நம்பப்படுகிறது. மகாபலியின் அரண்மனையை இடித்து அதன் மீது வாமணனுக்கு கோவில் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர்.

எது தர்மம்?

பிரதான இந்துமதம் - "வாமன அவதாரம் என்பது விஷ்ணு நில உலகில் தோன்றிய ஐந்தாம் அவதாரம். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும். இந்த அவதாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார். இவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார்." என்கிறது.

ஆனால், "மகாபலி மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழ ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக" கேரள மக்கள் நம்புகிறார்கள்.

ஓணம் பண்டிகையின் போது பாடப்படும் மலையாளப் பாடலின் ஆங்கில வடிவம்:

When Maveli ruled the land,
All the people were equal.
And people were joyful and merry;
They were all free from harm.
There was neither anxiety nor sickness,
Deaths of children were unheard of,
There were no lies,
There was neither theft nor deceit,
And no one was false in speech either.
Measures and weights were right;
No one cheated or wronged his neighbor.
When Maveli ruled the land,
All the people formed one casteless races

கேரள மக்கள் நீதியைப் பேசுகிறார்கள். சாதியற்ற சமூகத்தை கனவு காண்கிறார்கள். ஆனால், இந்து மதம் தர்மத்தை நிலை நாட்ட விரும்புகிறது. 

மொத்தத்தில் - இந்து மதத்தில் "தர்மம்" என்றால் அது சாதியைக் காப்பாற்றுதல், அநீதியை நிலைநாட்டுதல் என்று பொருளாகும். அதற்கு ஓணமே சாட்சி.

அனைவருக்கும் மகாபலி மன்னனை வரவேற்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள்

(ஆகஸ்ட் 29, 2012 அன்று எழுதப்பட்டது)

ஆதாரம்:

THE RETURN OF KING MAHABALI: THE POLITICS OF MORALITY IN KERALA Filippo Osella and Caroline Osella, THE EVERYDAY STATE AND SOCIETY IN MODERN INDIA By Fuller C. J. & Benei Véronique (eds.)

2 கருத்துகள்:

raghs99 சொன்னது…

Hindusim accepts all sorts of difference of opinions and evolved as a one of the matured religion

viyasan சொன்னது…

மலையாளிகள் சேரநாட்டுத் தமிழர்கள் என்பதை மறைக்க, அவர்களுக்கும் தமிழர்களுக்குமுள்ள தொடர்பை இல்லாமல் செய்ய, அவர்களுக்கு தனித்துவமான ஒரு வரலாற்றை உருவாக்க, வந்தேறி நம்பூதிரி பார்ப்பனர்கள் எத்தனையோ கட்டுக் கதைகளை இயற்றி, சேரநாட்டுத் தமிழர்களை நம்பச் செய்து அவர்களை தமிழர்களை வெறுப்பவர்களாக மாற்றினார்கள், ஆனால் அவர்களுக்கிடையிலும் இந்தக் கதைகளில் வேறுபாடுண்டு என்பதைப் பார்க்க சிரிப்பு தான் வருகிறது.