Pages

சனி, செப்டம்பர் 14, 2013

விடுதலைப்புலிகள் பெண்களை இச்சைக்கு பயன்படுத்தினர் - சிவகாமி ஐஏஎஸ்! அபாண்டத்துக்கு அளவே இல்லையா?

"சிங்களனும் கூட சொல்லாத அளவிற்கு பெண் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்திய சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி ஐஏஎஸ். தலித் கவசத்தை பயன்படுத்துகிறாரா சிவகாமி.

நேற்று (13.9.13) புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்த நால்வருக்கு மரண தண்டனை பற்றிய விவாதத்தில் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசும்போது ஈழத்தில் புலிப்படைகளில் இருந்த பெண்களைப் பற்றியும், புலிகள் மீதும் பாலியல் அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார்

(வீடியோ காட்சிக்கு இங்கே சொடுக்கவும்).

இதுவரை விடுதலைப்புலிகள் மீது பெண்களை கற்பழித்தார்கள் என்றோ, பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார்கள் என்றோ சிங்களன பேரினவாதிகள் கூட குற்றம் சாட்டியதில்லை, இந்நிலையில் நேற்று டிவியில் பேசிய சிவகாமி ஐஏஎஸ் பெண் புலிகளை ஆண்களின் இச்சைக்காகவே படைகளில் பயன்படுத்தினார்கள் என்று வெளிப்படையாக குற்றம் சுமத்தினார் இது குறித்து மேலும் பேசிய அவர்  இது பத்திரிகை செய்திகளில் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார், ஆனால் எந்த பத்திரிக்கை எப்போது என்று கூறவில்லை, மேலும் பாரீசில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் என்னிடம் கூறிய ஒளிப்பட பதிவு இருக்கிறது என்றெல்லாம் உளறியுள்ளார் சிவகாமி ஐ.ஏ.எஸ்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேட்டியெடுத்த பிரபல ஊடகவியலார் அனிதா பிரதாப் குறிப்பிட்டது 'தான் ஒரு இரவு முழுவதும் 20க்குமே மேற்பட்ட விடுதலை புலிகளுடன் தங்கியிருந்ததாகவும் ஒரு நொடிகூட தான் ஒரு பெண் என்ற அச்சமேற்படாதாவாறு அவர்கள் பார்த்துக்கொண்டார்கள்' என்றும் வியந்து போற்றிய ஒரு இயக்கம் பற்றி தான், எதிரியான சிங்களனே வைக்காத ஒரு குற்றச்சாட்டை சிவகாமி ஐஏஎஸ் வைத்துள்ளார்.

இன்று வரை பல நாடுகளின் ராணுவங்களில் பெண்கள் உதவியாளர்களாகவும், நர்ஸ், டாக்டர் போன்ற பணிகளையும் மட்டுமே செய்து வருகிறார்கள், ஆனால் புலிகள் இயக்கம் தான் பெண்களை போர்களத்திற்கு அனுப்பியது, மாலதி படையணி, சோதியா படையணி போன்ற அணிகள் ஆண் போராளிகளுக்கு இணையாக பல போர்களில் பங்கேற்றனர்.

ஈழப்போரின் கடைசி நாட்களான 2009 ஏப்ரல் மாதம் 1,2,3ம் நாட்களில் நடந்த போரில் புலிகளின் பெண்கள் அணி சிங்கள ராணுவத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியது என்று சிங்கள ராணுவதளபதிகளே குறிப்பிட்டனர். இப்படி போர்களத்தில் பங்கேற்று போராடிய ஒரு இயக்கத்தை பற்றி தான் சிவகாமி ஐஏஎஸ் இந்த கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
தலித் என்ற பெயரை பயன்படுத்தி ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராக இருந்து வந்தால் எதுவும் உளறலாம்  தமிழகத்தின் முற்போக்கு சக்திகளிடமிருந்து எந்த எதிர்ப்பு எதுவும் வராது, அப்படியே  மீறி வந்தாலும் கூட தாங்கள் தலித் என்பதால் தான் எதிர்க்கிறார்கள் என்று சொல்லிவிடலாம் என்ற நினைப்பில் சிவகாமி போன்றோர் பொது இடங்களில் இப்படி உளறுவதை  பொதுமக்கள் பலரும் வெறுப்பாகவே காண்கிறார்கள்.

சிவகாமியின் இந்த பேச்சு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தொண்டர்களிடமும் மேலும் பல தமிழ் உணர்வாளர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகளின் தொண்டர்கள் ஃபேஸ்புக்கி பல இடங்களில் சிவகாமியின் இந்த பேச்சிற்கு தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

மேலும் பல புலம்பெயர் வாழ் தமிழர்கள் சிவகாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள்"

(நான் எழுதியது அல்ல. இது சற்றுமுன் செய்திகள் எனும் இணையத்தில் வெளிவந்த கட்டுரை.)

நன்றி: சற்றுமுன் செய்திகள் (பெண் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்திய சிவகாமி ஐஏஎஸ். தலித் கவசத்தை பயன்படுத்துகிறாரா?)

அலை செய்திகள் எனும் இணையத்தில் வெளியான அறிக்கை:

விடுதலைப் புலிகள் பெண்களை இச்சைக்கு பயன்படுத்தினர் என்று கூறிய சிவகாமி. தமிழர்கள் கண்டனம்.  

பெண் புலிகளை இழிவுபடுத்திய சிவகாமி ஐ.ஏ.எஸ்: விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலரான சிவகாமி (சமூக சமத்துவப்படை தலைவர்) 13.09.2013 அன்று இரவு 9 மணியளவில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்த நால்வருக்கு மரண தண்டனை பற்றிய விவாதத்தில் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசும்போது ஈழத்தில் புலிப்படைகளில் இருந்த பெண்களைப் பற்றியும், புலிகள் மீதும் பாலியல் அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் குணசேகரன் ஆதாரமற்ற தகவல்களை இதுபோன்ற நேரலை நிகழ்ச்சிகளில் சொல்லக் கூடாது என்கிறார். உடன் விவாதத்தில் பங்கு கொண்ட வழக்குரைஞர் அருள்மொழி, திலகவதி ஐ.பி.எஸ், ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பெண் புலிகளை ஆண்களின் இச்சைக்காகவே படைகளில் பயன்படுத்தினார்கள். இது பத்திரிகை செய்திகளில் வந்துள்ளது. பாரீசில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் என்னிடம் கூறிய ஒளிப்பட பதிவு இருக்கிறது என்றெல்லாம் கூறியுள்ளார் திரு.சிவகாமி ஐ.ஏ.எஸ்.

”நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், ஞான நல்லறம் பேணு நற்குடி பெண்களின் குணங்களாம்" என்பதை அர்த்தமுள்ளதாக்கியது புலிப்படை.

சமையல்காரியாகவும், துணி துவைப்போராகவும், ஆண்கள் கிண்டல் செய்கையில் தலை குனிந்தவளாகவும், பிள்ளை பெறும் மெசினாகவும், கணவன் விரும்பிய போது சுகமளிக்கும் பாலியல் இயந்திரமாகவும் இருந்த பெண்களின் வரலாற்றில் புரட்சியினை உண்டாக்கிய பெருமை புலிபடைக்கே உரியது.

ஈழத்தில் மாலையானதும் பெண்கள் வீட்டிற்கு வெளியே போக கூடாது என்றும், "வீட்டிற்கு விலக்கு" எனும் அடை மொழியால் பெண்களை மாதவிடாய் காலத்தில் வீட்டின் ஓரத்தில் விலக்கி வைத்திருந்த சமூகத்தில், பெண்களும் துப்பாக்கி ஏந்திக் களமாடும் வல்லமையை உருவாக்கியது புலிப்படை.

இலங்கையின் மணலாறு இராணுவ முகாம் மீது 1995ம் ஆண்டு ஜூலை மாதம் பெண் புலிகளால் தனித்து நின்று நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி உங்களுக்கு தெரியாதா..?  மன்னகுளம் முகாம் மீதான தாக்குதல், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் பற்றி அறியாதவரா..?

ஒரு பெண் காவல் அதிகாரிக்கு துணையாக ஐந்து ஆண் காவலர்கள் காவல் காக்கின்ற இந்திய நாட்டின் அரசு அதிகாரியாக பணியாற்றியவர்தானே நீங்கள்..? எப்படி அறிய முடியும் ஈழவிடுதலைக்காக கடலுக்கடியில், பறக்கும் வானில், அடர் வனத்தில் களமாடிய பெண் போராளிகளைப் பற்றி…. உலகத்திலேயே பெண்களை மதிக்கின்ற, மரியாதை செலுத்துக்கின்ற ஒரே ராணுவம் புலிகளின் ராணுவம். பல அப்பாவி தமிழ் பெண்களும், பெண் புலிகளும் பாலியல் வன் பு/னர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு, சிங்கள ராணுவத்தால் சூறையாடப்பட்டது உலகம் அறிந்த செய்தி.

இதுவரை சிங்களவர்கள் கூட சொல்லத் துணியாத, சொல்ல முடியாத ஒரு அவதூறை பரப்புகின்ற சிவகாமி ஐ.ஏ.எஸ்., உலகத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.இதுபோன்ற போலி விளம்பரம் தேடிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நன்றி:  அலை செய்திகள்  எனும் இணையம் (விடுதலைப் புலிகள் பெண்களை இச்சைக்கு பயன்படுத்தினர் என்று கூறிய சிவகாமி. தமிழர்கள் கண்டனம்)

9 கருத்துகள்:

காமக்கிழத்தன் சொன்னது…

’தலித்’ கவசம் தன்னைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கைதான். வேறென்ன?

பெயரில்லா சொன்னது…

தமிழ் புலிகள் பெண்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தியதாய் நானறிந்தது இல்லை. பல முன்னாள் போராளிகளை சந்தித்தும் பேசி உள்ளேன், யாரும் இவ்வாறு கூறியதும் இல்லை. மற்றபடி புலிகள் பெண் படையை உருவாக்கியமை முக்கியமான காரணம் ஆட் பற்றாகுறை மற்றும் குடும்பத்தில் பெண்கள் விடபட்டால் உணர்வுப் பூர்வமாய் ஆண்களையும் போர்க் குழுக்களில் இருந்து பிரித்து கலியாணம், குடும்பம் எனப் போய் விடுவார்கள் என்ற அச்சத்தினால் தான். அப்புறம் தலித் அடையாளத்தை திணித்து பதிவு எழுதியமை தம் சாதிய வெறித்தனத்தையே காட்டுகின்றது.

viyasan சொன்னது…

//சிவகாமி ஐ.ஏ.எஸ்., உலகத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.இதுபோன்ற போலி விளம்பரம் தேடிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.//

உங்களின் பதிவுக்கு நன்றி. இவரையும் மகிந்த ராஜபக்ச விலை பேசி விட்டார் போல் தெரிகிறது.. இந்தியர்கள் இலகுவாக விலைப் போகக் கூடியவர்கள் என்பது தெரிந்த விடயம். உயர் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை இதே நிலை தான்.

சிலர் என்னை புலி ஆதரவாளர் என நினைக்கலாம் ஆனால் புலிகள் காலத்தில் நான் அவர்களை ஆதரித்ததில்லை,. அதிலும் அவர்களின் தனிமனித துதி, கொடிவணக்கப்பாடலில் கடைசி வரியில் பிரபாகரனை இணைத்தது தவறு என்றும் கருத்து தெரிவித்து, வாங்கிக் கட்டிக் கொண்டேன். எந்தவிதமான புலி ஆதரவு போராட்டங்கள், பிரபாகரனை புகழ்ந்து தள்ளும் போராட்டங்களில் நான் கலந்து கொண்டதில்லை, அதை விட தனிநாட்டுக்குப் பதிலாக, தனிமாநிலம் கிடைத்தால் தமிழர்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்தாகும். எனக்கு யாரும் புலி முத்திரை குத்தினால் அவர்கள் முட்டாள்கள். ஆனால் போருக்குப் பின்னால் ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கதியைப் பார்த்த பின்பு பிரபாகரனை நினைத்துப் பெருமைப்படும் ஈழத் தமிழர்களில் நானும் ஒருவன்.

இருந்தாலும் பெண்களை புலிகள் தமது இச்சைக்கு பயன்படுத்தியதாக LTTE விடயங்களை பெரிதும் படுத்தி பிரச்சாரப் போருக்கு பயன்படுத்திய இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகள் கூட இதுவரை கூறியதில்லை. விடுதலைப்புலிகளின் தலைவர்கள் எல்லாம் சாமியார்கள் அல்ல, அங்கும் காதல், பாலுறவு எனபன நடந்திருக்கின்றன, பெண் வீரர்களையே அவர்களில் பலர் மணந்துமிருக்கிரார்கள். ஆனால் புலிகள் பாலியல் exploitation இருந்ததில்லை. அந்த விடயத்தில் பிரபாகரன் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார் என அவருடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த பலரும் கூறியிருக்கிரார்கள்.

ஆனால் இலங்கை அரசுடன் சார்ந்துள்ள உதவிக்குழுக்கள் எப்படி தமிழ்ப்பெண்களை பிரச்சாரத்துக்கு விற்றார்கள் என்பதை WikiLeaks கூட அண்மையில் வெளிப்படுத்தியுள்ளது (கீழேயுள்ள Link ஐப் பார்க்கவும். . அந்த பரபரப்பு ஓயமுன்பு, அது வந்து சில நாட்களிலேயே இப்படி புலிகளுக்கு எதிராக சிவகாமி அதே பழியைப் பரப்புகிறார் என்றால் அதில் புலி எதிர்ப்பு ஈழத்தமிழர் எதிர்ப்பு சக்திகளின் பின்னணி நிச்சயமாக இருக்க வேண்டும். அதானால், புலம்பெயர்ந்த அரச சார்பு புலி எதிர்ப்பாள்ர்களின் தொடர்பினால் தான் சிவகாமி இப்படி உளறுகிறார் போல் தேர்கிறது, விடுதலைப்புலிகளை மோசமான முறையில் எதிர்த்தவர்கள் கூட பெண்கள் விடயத்தில் இப்படி அபாண்டமான பழியைச் சுமத்தியதில்லை. இவரைப் போன்ற மலிவான சுய விளம்பரம் தேடும் தலைவர்கள் அவர்களிடையே இருப்பதால் தான் தமிழ்நாட்டில் தலித்துக்களால் முன்னேற முடியவில்லை.

viyasan சொன்னது…

இலங்கை அரசுடன் சார்ந்துள்ள புலி எதிர்ப்பு தமிழ்க்குழுக்கள் எப்படி தமிழ்ப்பெண்களை பிரச்சாரத்துக்கு விற்றார்கள் என்பதை WikiLeaks கூட அண்மையில் வெளிப்படுத்தியுள்ளது (கீழேயுள்ள Link ஐப் பார்க்கவும்.

WikiLeaks: EPDP Sold Jaffna Children: Girls To Prostitution Rings And Boys To Slavery

The children are sold into slavery, usually boys to work camps and girls to prostitution rings, through EPDP’s networks in India and Malaysia. Sunthararaj maintains that children are often smuggled out of the country with the help of a corrupt Customs and Immigration official at Bandaranaike International Airport in Colombo.” the US Embassy Colombo informed Washington.

The Colombo Telegraph found the related leaked cable from the WikiLeaks database. The cable is classified as “SECRET” and discuses Sri Lanka’s paramilitary operations. The cable was written by the Ambassador Robert O. Blake on May 18, 2007.
“Sunthararaj’s story was partially verified by Government Agent Ganesh, who stated that the EPDP works in concert with the Sri Lanka Army (SLA) to operate Tamil prostitution rings for the soldiers. Ganesh stated that young women were taken and forced to have sex with between five and ten soldiers a night. Sometimes they are paid approximately a dollar for each “service.” The young women’s parents are unable to complain to authorities for fear of retribution and because doing so would ruin the girls’ reputation, making it impossible for them ever to marry.” the ambassador further wrote.
We publish below the relevant part of the cable;

https://www.colombotelegraph.com/index.php/wikileaks-epdp-sold-jaffna-children-girls-to-prostitution-rings-and-boys-to-slavery/

அருள் சொன்னது…

//அப்புறம் தலித் அடையாளத்தை திணித்து பதிவு எழுதியமை தம் சாதிய வெறித்தனத்தையே காட்டுகின்றது.//

நான் எழுதிய பதிவு அல்ல. இணையத்தில் வெளிவந்ததை copy & paste செய்துள்ளேன்.

குட்டிபிசாசு சொன்னது…

நான் கேள்விப்பட்டவரை இயக்கத்தில் இருக்கும்போது புலிகள் அப்படி நடந்ததில்லை. சிவகாமி தனக்கு புகழ் கிடைப்பதற்காக வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சுகிறார். என்னத்துக்கு ஐ.ஏ.எஸ் படிச்சதோ மூதேவி.

Unknown சொன்னது…

இனபெருக்க காலத்தில் பெண் நாய்களுக்கு பின்னால் பல ஆண் நாய்கள் சுற்றும் .அதை செய்தி ஆக்கி சில ஊடகங்கள் பிழைக்கும் .கலவியின்போது தெருவில் நடக்கின்ற எந்த நிகழ்வும் அவற்றின் உணர்வுகளை பாதிக்காது என்று நாய்களை பற்றி படித்ததாக நினைவு

ttpian சொன்னது…

who is behind of Sivakami?

மர்மயோகி சொன்னது…

டேய் என்னங்கடா நடக்குது... விடுதலைப்புலிகள் எல்லாம் என்ன ஒம்போதா? ஏதோ புத்தனுக்கு பிறந்த புண்ணியவான் மாதரி பேசுறீங்க.....
தமிழன் அதுவும் விடுதலைப்புலிகளைப்பற்றி சொன்னால் மட்டும் இந்த தேச துரோகிகளுக்கு இப்படி சூ....து எரிவது ஏன்?
டாஸ்மாக் தமிழர்களின் இந்த கேவலமான பிழைப்பை விட்டுட்டு உண்மையை உண்மையாய் பாருங்கடா