Pages

புதன், செப்டம்பர் 28, 2016

தலித் பெண் பாலியல் வன்கொடுமை: முற்போக்கு கும்பல் மவுனமாக இருப்பது ஏன்?

சாதி வெறியின் காரணமாக பண்ரூட்டி அருகே ஒரு தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரைக் கூட காவல்துறை ஏற்க மறுத்த நிலையில் - தலித் அமைப்பு பிரமுகர்கள் சிலர் தலையிட்டு முறையிட்டதால் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளின் போது துள்ளிக்குதிக்கும் முற்போக்கு கூட்டத்தினர் - இப்போது அமைதியாக இருக்கிறார்களே என்று நீங்கள் அதிசயிக்கலாம். ஆனாலும், முற்போக்கு கும்பலின் இந்த கள்ள மவுனத்துக்கும் காரணம் இருக்கிறது.

பண்ரூட்டியில் நடந்தது என்ன?

பண்ரூட்டியை அடுத்துள்ள ஏரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் அருந்ததியர் இனத்தை சேர்ந்தவர். இவரை தலித்துகளில் ஒரு பிரிவான பறையர் இனத்தை சேர்ந்த உத்ரகுமார் என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். இதற்கு ஜெயந்தி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஜெயந்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் உள்ளே புகுந்து, உத்ரகுமார் பாலியல் பலாத்காரப்படுத்திவிட்டார்.
சாதிவெறி காரணமாக, அருந்ததிய பெண்ணை பறையர் இனத்தை சேர்ந்தவர் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. ஆனாலும் காவல்துறை வழக்கு பதிவு செய்ய மறுத்த நிலையில், ஆதித்தமிழர் பேரவையின் நிர்வாகிகள் முறையிட்டு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. உதரகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

அருந்ததியருக்கு எதிரான சாதிவெறி

அருந்ததியருக்காக போராடிவரும் ஆதித்தமிழர் பேரவையின் அதியமான் இது குறித்து கருத்து தெரிவித்த போது:

"ஒரு பகுதியில் ஐம்பது பறையர் இன குடும்பங்களும், ஐந்து அருந்ததி இன குடும்பங்களும் வசித்தால், அங்கு பறையர் இன ஆதிக்கம் நிலவவே செய்கிறது. பாலியல் பலாத்கார விவகாரங்களில் ஆணாதிக்கதோடு, சாதிவெறியும் சேர்ந்தே இருக்கிறது.

உயர்சாதி என சொல்லிக்கொள்பவர்கள் பள்ளர், பறையர் இன பெண்களுக்கு சாதி ஆணவத்தோடு பாலியல் சீண்டல்களை செய்கிறார்கள். பள்ளர், பறையர் இனத்தவர், அதே சாதி ஆணவத்தோடு அருந்ததி இன பெண்களை சீண்டுகிறார்கள். இதைச் சொன்னால், தலித் சமுதாயத்திற்குள் பிரிவினை ஏற்படும் என்கிறார்கள் சிலர். ஆனால், ஏற்கனவே இச்சமுதாயத்திற்குள் பிரிவினை நிலவுகிறது என்பதுதான் உண்மை.
உதாரணமாகச் சொன்னால் அருந்ததி இனத்தவருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீட்டை பள்ளர், பறையர் இன தலைவர்கள் எதிர்க்கிறார்கள். ஒட்டுமொத்த தலித் இன 76 சாதிகளுக்கு 18 விழுக்காடு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களில் அருந்ததியின சமுதாயத்தினருக்கு மட்டும் நீண்ட நாட்களாக பங்கு கிடைக்காத காரணத்தால் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களிலும் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆகவே , சமூக நீதியின் அடிப்படையில் அவர்களுக்கு மூன்று விழுக்காடு உள் இடஒதுக்கீடு கிடைத்தது.

ஆனால், இந்த உள் ஒதுக்கீட்டை மீறி, அருந்ததி இன மக்களுக்கான பணியிடங்களை பிற தலித் இனத்தவர் பெற்று வருகிறார்கள். இந்த நிலை மாற, பள்ளர் பறையர் இன மக்களின் தலைவர்களாக இருப்பவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். தலித் தலைவர்கள் அருந்ததியின மக்களின் அடிமட்ட சூழலைப் புரிந்து உள் இடஒதுக்கீட்டை ஆதரிக்க வேண்டும். அருந்ததியின மக்களிடம் இணக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என தன் இன மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

ஆனால், இந்த தலித் தலைவர்கள்.. அருந்ததி இன மக்களின் பிரதிநிதிகளை மதிப்பதே இல்லை. தங்களது போன் எண் கூட எங்களுக்கு கிடைக்கக் கூடாது என நினைக்கிறார்கள். அப்படி எங்களுக்கு கிடைத்தாலும் அவர்களிடம் பேச முடியாது என்பதே வருத்தமான உண்மை." என்கிறார் ஆதித்தமிழர் பேரவையின் அதியமான்.

அனைத்து சாதி வன்முறைகளும் தவறுதான்

சாதி அடக்குமுறைகள் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த படிநிலையில் நிகழ்ந்தாலும் அவை அனைத்தும் சம அளவிலான மனித உரிமை மீறல்களே! சாதி இந்துக்களின் வன்முறை என்று கொதித்து எழும் முற்போக்கு கும்பல், பறையர் இனத்தினரின் சாதி வன்முறைக்கு எதிராகவும் கொஞ்சமாவது குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

செவ்வாய், செப்டம்பர் 27, 2016

பாரிஸ் நகரின் சாலையில் கார்களுக்கு தடை!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரின் பிரதான சீன் (Seine) ஆற்றின் ஓரத்தில் இருக்கும் முதன்மையான சாலையில் கார்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்றே கால் கிலோமீட்டர் தொலைவுள்ள இந்த சாலையில் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 2700 கார்கள் ஓடுகின்றன. பரபரப்பான இந்த சாலையில் கார்களுக்கு தடை விதிப்பதாகவும், இனி அந்த சாலை முழுவதும் நடைபாதையாக மட்டுமே இருக்கும் என்றும் பாரிஸ் நகரசபை நேற்று (26.09.2016) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இப்போது இருக்கும் சீன் ஆற்று சாலை
இனிமேல் வர இருக்கும் மாற்றம் குறித்த கற்பனைக் காட்சி

கார் பயன்படுத்துவோர் இந்த தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் கூட, மக்களின் உடல்நலம் கருதி கார்களுக்கு தடை விதிப்பதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். இந்த புதிய தீர்மானத்தின் மூலம் - இனி சீன் ஆற்றின் இரண்டு கரைகளும், மக்கள் நடப்பதற்கும், பொழுது போக்குவதற்கும் மட்டுமே பயன்படும்.

கார்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். பேருந்து உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தையும் நடைபாதைகளையும் அதிகமாக்க வேண்டும். இது மட்டும்தான் போக்குவரத்து நெரிசலுக்கும், மாசுபாட்டுக்கும் தீர்வாகும் - என்பதை உலகின் முன்னணி நகரங்கள் உணர்ந்துவிட்டதன் வெளிப்பாடே, பாரிஸ் நகரின் இந்த மாற்றம் ஆகும்.

இதுபோன்ற நல்ல திட்டங்களை சென்னை எப்போது கண்டு கொள்ளுமோ!

ஐநாவில் இந்தி: இந்திய வெளியுறவு அமைச்சரின் இனவெறி பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஐநா பொதுச்சபையில் நேற்று (26.09.2016) இந்தி மொழியில் பேசியிருக்கிறார். இந்தியாவின் மொழி பன்முகத்தன்மை மீதான தாக்குதலாகவே இந்த நிகழ்வு பார்க்கப்பட வேண்டும்.  

இந்தி - தேசிய மொழி அல்ல 

இந்தியாவில் 41% மக்கள் இந்தி பேசுகிறார்கள். 69% மக்களின் மொழி இந்தி அல்ல. எனவே, இந்தி பேசாத மக்கள் அதிகமாக உள்ள இந்திய நாட்டில் - அதிகாரப்பூர்வ இணைப்பு மொழியாக ஆங்கிலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்களுடன், நடுவண் அரசு இந்தி அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளலாம் என்பதும், தமிழ்நாட்டுடன் ஆங்கிலத்தில் மட்டும்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது சட்டம் ஆகும். மேலும் இந்திய நாட்டின் உச்சநீதி மன்றத்தின் மொழி ஆங்கிலம் மட்டும்தான். இந்தி அல்ல.

இந்தியாவில் 'தேசிய மொழி' என்று எதுவும் இல்லை. இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் 22 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆகும்.

இந்தி - ஐநாவின் மொழியும் அல்ல

ஐநாவில் ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபிக், ரஷ்யன், சீன மொழி - ஆகிய ஆறு மொழிகள்தான் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆகும். இந்த மொழிகளுக்கு மட்டும்தான் நிரந்தரமான மொழிபெயர்ப்பாளர்கள் ஐநாவில் உள்ளனர். குறிப்பாக ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபிக் ஆகிய மொழிகள்தான் அதிகமான நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.

ஐநாவில் ஆங்கிலத்தில் பேசும் போது, அங்கு பெரும்பாலானோர் அதனை நேரடியாக புரிந்துகொள்வார்கள். பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபிக், ரஷ்யன், சீன மொழி ஆகிய மொழிகளில் உடனுக்குடன் மொழிபெயர்த்து காதொலிப்பான் (headphone) மூலம் ஒலிபரப்புவார்கள்.

ஐநாவின் மொழி அல்லாத மொழியில் பேச, முன் அனுமதி பெற்று மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும். அந்த மொழிபெயர்ப்பாளர், ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதை - அதிலிருந்து பிரஞ்சு, ஸ்பானிஷ், அரபிக் உள்ளிட்ட ஐநா மொழிகளுக்கு மாற்றுவார்கள். இப்படி தலையை சுற்றி மூக்கைத் தொடுவதால், பேசும் கருத்து முழுமையாக உணரப்படாத நிலைமை ஏற்படுகிறது.

ஐநா அவையின் 193 நாடுகளில், இந்தி மொழியை பயன்படுத்தும் நாடு எதுவுமே இல்லை. அப்படிப்பட்ட இடத்தில் சென்று வம்படியாக இந்தியில் பேசுவதன் நோக்கம் என்ன? உலக நாடுகளுக்கும் இந்தி மொழிக்கும் என்ன தொடர்பு?

இந்தி - இனவெறியின் வெளிப்பாடு

1971 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், இந்தியாவில் இந்தி பேசுவோர் அளவு 36.99% இதுவே 2001 இல் 41.03% ஆக அதிகரித்துள்ளது. ஆனால் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை இதே காலக்கட்டத்தில் 6.88 அளவில் இருந்து 5.91 ஆக குறைந்துள்ளது. இதுபோன்று பெங்காலி, மராத்தி, தெலுங்கு, உருது பேசுவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில் குறைந்துள்ளது.

சுஷ்மா சுவராஜ் - உலகநாடுகளுக்காக இந்தியில் பேசவில்லை. மாறாக, இந்தியாவில் இந்தி பேசாத மக்களை எச்சரிப்பதற்காகவே இந்தியில் பேசியுள்ளார். இந்தியாவின் ஒரே மொழி இந்தி மட்டும்தான். இதனை இந்தி பேசாத மாநில மக்கள் ஏற்றுக்கொண்டு, இந்திக்கு மாற வேண்டும் என்பதுதான் இதன் உண்மை பொருள் ஆகும்.
இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழிகள்தான். இவை அனைத்தையும் சமமாக நடத்த வேண்டும் என 2010 ஆம் ஆண்டு குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த முறை ஐநாவில் இந்தியில் பேசிய சுஷ்மா சுவராஜ், அடுத்தமுறை தமிழிலோ, தெலுங்கிலோ அல்லது அவருக்கு நன்கு பேசத்தெரிந்த கன்னடத்திலோ, பேச முன்வருவாரா? (சுஷ்மா சுவராஜ் ஆங்கிலம் பேசத் தெரியாதவர் அல்ல)

பன்னாட்டு அரங்கிலும், விளம்பரங்கள் மூலமும், அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் வாயிலாகவும் இந்திய அரசு வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது ஆபாத்தான போக்கு ஆகும். இந்த இனவெறி போக்கு தடுக்கப்பட வேண்டும்.

திங்கள், செப்டம்பர் 26, 2016

தலித் கொடுமைக்கு எதிர்ப்பு: புனே நகரில் 25 லட்சம் பேர் பேரணி

மராத்தா சாதியினர் நேற்று (26.09.2016) புனே நகரில் நடத்திய பேரணியில் 25 லட்சம் பேர் திரண்டுள்ளனர். அரசியல் கட்சிகள் ஆதரவு இல்லாமல், தன்னிச்சையாக லட்சக்கணக்கில் மராத்தா சாதியினர் ஒன்று திரண்டு அமைதி பேரணி நடத்துவதால் மராட்டிய மாநிலத்தின் அனைத்து கட்சிகளும் கதிகலங்கி போயுள்ளன.

பின்னணி என்ன?

2016 ஏப்ரல் மாதத்தில், 'சைரத்' (Sairat) எனும் மராத்தி மொழி திரைப்படம் வெளியானது. தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனும், மராத்தா சாதி இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்வது போலவும் - அவர்களை மராத்தா சாதியினர் கௌரவக் கொலை செய்வதாகவும் இப்படம் காட்டியது.
Sairat Movie

'சாதி வெறியர்களாகவும், சாதிமாறி காதலிப்பவர்களை கொலை செய்யும் கூட்டமாகவும்' மராத்தா சாதியினர் காட்டப்பட்டதற்கு - அப்போதே மராத்தா சாதி அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதையும் மீறி, அந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது. இந்த நிகழ்வு மராத்தா சாதியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பின்னர், 2016 ஜூலை மாதத்தில் தலித் இளைஞர்கள் மூன்றுபேர், புதிதாக மோட்டார் பைக் வாங்கியதை குடித்துக் கொண்டாடும் போது, 15 வயது மராத்தா சாதி பெண்ணை கற்பழித்து கொடூரமான முறையில் கொலையும் செய்தார்கள். இந்த நிகழ்வுதான் பெரும் போராட்டமாக மாறியது.

பேரணிகளின் கோரிக்கை

"மராத்தா சாதி பெண்ணை கற்பழித்து கொலை செய்த மூன்று தலித் இளைஞர்களை தூக்கில் போட வேண்டும். SC/ST வன்கொடுமை சட்டத்தை ஒழிக்க வேண்டும், மராத்தா சாதியினருக்கு இடஒதுக்கீடு வேண்டும்" - என்கிற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணிகளை மராத்தா சாதியினர் நடத்தி வருகின்றனர்.

சிவாஜி மகராஜ், சாகு மகராஜ் என்கிற மாபெரும் மன்னர் பரம்பரையை அடையாளப்படுத்தும் மராத்தா சாதியினர் "இதுவரை மண்ணைக் காக்க போராடினோம், இனி நம் சாதியை காக்கப் போராடுவோம்" என்கிற முழக்கத்தை முன்வைத்து அணிதிரளுகின்றனர். (Till now we have fought for the soil, let’s once fight for our caste.)

முதலில் அவுரங்காபத்தில் 5 லட்சம் பேர் பேரணியில் திரண்டனர். அடுத்ததாக முறையே ஒஸ்மனாபாத் 4 லட்சம் பேர், ஜல்கான் 4.5 லட்சம் பேர், பீட் 4 லட்சம் பேர், அகோலா 5 லட்சம் பேர், லாத்தூர் 4.5 லட்சம் பேர், பல்தான் 2 லட்சம் பேர், பர்பானி 4 லட்சம் பேர், ஹிங்கோலி 4 லட்சம் பேர், நான்தேட் 10 லட்சம் பேர், ஜல்னா 3 லட்சம் பேர், சோலாப்பூர் 10 லட்சம் பேர், நவிமும்பை 4 லட்சம் பேர், அகமத்நகர் 11 லட்சம் பேர், நாசிக் 7 லட்சம் பேர் - என பெரும் கூட்டம் திரண்டனர்.
இந்த வரிசையில் நேற்று புனே நகரில் நடத்தப்பட்ட பேரணியில் - 25 லட்சம் பேர் திரண்டு மராட்டிய மாநிலத்தை திகைக்க வைத்துள்ளனர். (20 லட்சம் பேர் திரண்டதாக, காவல்துறையினர் கூறுவதாக - தி இந்து ஆங்கில நாளிதழ் கூறுகிறது - Over 20 lakh turn up at Maratha rally in Pune). இன்னும் நான்கு நகரங்களில் பேரணி நடத்தி, அதன் பின்னர் மிகப்பெரிய பேரணியை மும்பை நகரில் நடத்த உள்ளனர்.

அரசியல் கட்சிகளின் கருத்து என்ன? 

மராட்டிய மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த பேரணியை ஆதரிக்கின்றன. ஆனால், எந்தக் கட்சித்தலைவரையும் கட்சி அடையாளத்துடன் போராட்டத்தில் பங்கேற்க மராத்தா சாதினர் அனுமதிக்கவில்லை. பாஜக, சரத் பவார் கட்சி (NCP), காங்கிரஸ் கட்சி, சிவசேனா, மராட்டியா நவநிர்மாண் ஆகிய முதன்மையான கட்சிகள், தங்களது கட்சி மராத்தா சாதி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை இப்பேரணியில் சாதாரண தொண்டர்களாக பங்கேற்க செய்துள்ளன.
பேரணிகளில் மராத்தா சாதி இளம் பெண்கள்தான் முன்னணி வகிக்கின்றனர். பேரணிகளின் முடிவில் மனு அளிப்பதும் அவர்கள்தான்.

தலித் அமைப்புகளின் கருத்து என்ன?

மராட்டிய மாநிலத்தின் முதன்மை தலித் கட்சியான இந்திய குடியரசு கட்சி (அத்வாலே), மராத்தா சாதியினரின் போராட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது. வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், அதில் திருத்தம் தேவை என்றும் அக்கட்சி ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, மராத்தா சாதியினரின் போராட்டத்தை ஆதரித்து 'தலித்துகளின் பேரணியை' நடத்த இருப்பதாகக் அக்கட்சி கூறுகிறது.

எனினும் வேறு சில தலித் அமைப்புகள், மராத்தா சாதி பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இது குறித்து எச்சரித்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், "மராத்தா சாதி பேரணிக்கு எதிராக தலித் மக்களை உசுப்பி விடும் வேலையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செய்கிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சதிக்கு பலியாகி, தலித்துகள் எதிர்ப்பு பேரணி நடத்த வேண்டாம்" என்று கேட்டுள்ளார்.

இது காலத்தின் கோலம்

தலித் உரிமையின் அடையாளம் மராட்டிய மாநிலம் ஆகும். மகாத்மா ஜோதிபா புலேவும், அண்ணல் அம்பேத்கரும் பெரும் ஆதரவு பெற்றிருந்த அதே புனே நகரில் - தலித்துகளால் நேரும் கொடுமைக்கு முடிவுகட்டக் கோரி, 25 லட்சம் பெர் திரள்வது - மாபெரும் மாற்றத்தின் அடையாளமே ஆகும்.

தலித்துகள் உரிமைக்காக அகில இந்தியாவும் குரல் கொடுத்தது. அதிலும் மராட்டிய மண்தான் மிக அதிகம் பாடுபட்டது.  மகாத்மா ஜோதிபா புலேவும் அண்ணல் அம்பேத்கரும் மராட்டிய மாநிலத்தவர்கள்தான். ஆனால், அந்த தலித் ஆதரவு என்பது அவர்களின் உரிமைக்கும், மேம்பாட்டுக்கும் தானே தவிர, மற்ற சாதியினருக்கு எதிரான தலித்துகளின் 'எதிர்க்கலகத்துக்கு அல்ல'.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பதை வரலாறு மீண்டும் மெய்ப்பிக்கிறது.

மராத்தா பேரணியில் குடிநீர் அளிக்கும் முஸ்லிம் அமைப்பினர்

(குறிப்பு: மராத்தா சாதி போராட்டத்தில் பயன்படுத்தப்படும் காவிக் கொடி, இந்துமத அமைப்புகளின் கொடி அல்ல. அது மாமன்னர் வீர சிவாஜியின் அடையாளம்)

ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

தலித்துகளால் கொடுமை: மராட்டியத்தில் மாபெரும் போராட்டம்!

வரலாறு திரும்புகிறது போலிருக்கிறது! தலித்துகள் பாதிக்கப்பட்டார்கள் என்கிற காலம் போய், தலித்துகளால் பாதிக்கப்படுவதாகக் கூறி, மராட்டிய மாநிலத்தில் லட்சக்கணக்கான மராத்தா சாதியினர் பெரும் போரில் இறங்கியுள்ளனர்.

மராத்தா சாதிப் போரின் பின்னணி

தலித் இளைஞர்கள் மூன்றுபேர், புதிதாக மோட்டார் பைக் வாங்கியதை குடித்துக் கொண்டாடும் போது, 15 வயது மராத்தா சாதி பெண்ணை கற்பழித்து கொடூரமான முறையில் கொலையும் செய்திருக்கிறார்கள். அகமத்நகர் மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்வு மாநிலம் முழுவதும் மராத்தா சாதியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கண்டித்து, - "கற்பழித்த தலித் இளைஞர்களை தூக்கில் போட வேண்டும், எஸ்சி.எஸ்டி வன்கொடுமை சட்டத்தை ஒழிக்க வேண்டும், மராத்தா சாதியினருக்கு இடஒதுக்கீடு வேண்டும்" - என்கிற கோரிக்கைகளை வைத்து, மராத்தா சாதி பெண்கள் 'மௌனப் பேரணிக்கு' அழைப்பு விடுத்தனர்.

எந்த கட்சியும் ஆதரிக்காத இந்தப் பேரணிக்கு 5000 பேர் வருவார்கள் என்று முதலில் எதிர்பார்த்தனர். ஆனால், அகமத் நகரில் இரண்டு லட்சம் பேர் திரண்டனர். இது மராட்டிய மாநிலம் முழுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அகமத் நகரில் எழுந்த இந்த புரட்சித் தீ - இப்போது மராட்டிய மாநிலம் முழுவதும் பரவி வருகிறது. உஸ்மனாபாத், ஜல்காவ்ன், பீட், பர்பானி, ஹிங்கோலி, நான்தேட், ஜல்னா, அகோலா, லாத்தூர், நவி மும்பை, சோலாப்பூர், நாசிக், புனே என பல பகுதிகளிலும் தன்னிச்சையாக பெரும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.


ஒவ்வொரு பேரணியிலும் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, பெண்களும் இளைஞர்களும் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர். மீதமுள்ள மராட்டிய நகரங்கள் அனைத்திலும் இந்த பேரணிகள் நடத்த இருக்கிறார்கள். இறுதியாக மும்பையில் நடக்கவுள்ள பேரணிக்கு 25 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் முன்னின்று நடத்தும் இந்த மாபெரும் பேரணிகளில் - எஸ்சி.எஸ்டி வன்கொடுமை சட்டத்தை ஒழிக்க வேண்டும், மராத்தா இளம்பெண்ணை கற்பழித்த தலித் இளைஞர்களை தூக்கிலட வேண்டும் - என்பதே முழக்கமாக முன் வைக்கப்படுகிறது.

மராட்டிய மாநில மக்கள்தொகையில் மராத்தா சாதியினர் 33% ஆகும். இவர்களின் எழுச்சியைக் கண்டு, அரசும் அரசியல் கட்சிகளும் அரண்டுபோயுள்ளனர்.

எஸ்சி.எஸ்டி வன்கொடுமை சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்கிற இந்தப் போராட்டத்தை சரத் பவார் கட்சி (NCP), காங்கிரஸ் கட்சி, சிவசேனா, மராட்டியா நவநிர்மாண் ஆகிய முதன்மையான கட்சிகள் ஆதரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால், எந்தக் கட்சித்தலைவரையும் கட்சி அடையாளத்துடன் போராட்டத்தில் பங்கேற்க மராத்தா சாதினர் அனுமதிக்கவில்லை. இதனால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சாதாரண போராட்டக்காரர்களாக பங்கேற்றுள்ளனர்.

அளவுக்கு மிஞ்சினால்...!

தலித்துகள் உரிமைக்காக அகில இந்தியாவும் குரல் கொடுத்தது. அந்த தலித் ஆதரவு என்பது அவர்களின் உரிமைக்கும், மேம்பாட்டுக்கும் தானே தவிர, மற்ற சாதியினருக்கு எதிரான தலித்துகளின் 'எதிர்க்கலகத்துக்கு அல்ல'.

இந்த உண்மை புரியாமல் - "ஏற்கனவே நீங்கள் எங்களை அடித்தீர்கள், சுரண்டினீர்கள். இப்போது உங்களை நாங்கள் அடிக்க வேண்டும். உங்கள் வீட்டு பெண்களை எங்களுக்கு கொடுங்கள்" - என்று 'எதிர்க்கலகத்தை' ஒருசில தலித் அரசியல் தலைவர்கள் ஊக்குவித்தார்கள். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பதை வரலாறு மீண்டும் மெய்ப்பிக்கிறது.

ஒருசில தலித்துகளிடமிருந்தும், தலித்துகளின் எதிர்க்கலகத்தில் இருந்தும். தலித்துகளின் வன்முறை ஆயுதமாக உள்ள SC/ST வன்கொடுமை சட்டத்திடமிருந்தும் - பெரும்பான்மை சமூகங்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள போராடும் நிலை - அகில இந்திய சிக்கலாக மாறியுள்ளது

புதன், செப்டம்பர் 21, 2016

ஈழத்தில் தொடரும் இனப்படுகொலை: ஐநாவில் தமிழர்களின் சிறப்புக் கூட்டம்

இலங்கை அரசு திருந்தி விட்டதாக ஐநா அவையில் நாடகமாடுகிறது. ஆனால், ஈழத்தில் தொடர்ந்து இனப்படுகொலையை அரங்கேற்றுகிறது. குறிப்பாக நிலத்தை பறித்தும் பண்பாட்டை அழித்தும் இன அழிப்பினை தொடர்கிறது மைத்ரிபால சிறிசேன அரசு.

இதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்டும் வகையில் - "இலங்கையில் இராணுவமயமாக்கலும் நில அபகரிப்பும்" (MILITARISATION AND LAND GRAB IN SRI LANKA) என்கிற சிறப்புக் கூட்டம் ஒன்றினை ஜெனீவா ஐநா மனித உரிமைப் பேரவையில் நாளை (22.09.2016) நடத்துகிறது பசுமைத் தாயகம் அமைப்பு.

தற்போது நடைபெற்று வரும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடரின் இணைக் கூட்டமாக இந்த நிகழ்வு ஜெனீவாவில் உள்ள ஐநா அரங்கில் நடக்கிறது.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை (British Tamils Forum - BTF), அமெரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை (United States Tamil Political Action Council- USTPAC) ஆகிய அமைப்புகள் கூட்டாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.
ஐநா மனித உரிமைகள் பேரவை (UNHRC)
அமெரிக்க ஓக்லாந்து நிறுவனத்தின் (The Oakland Institute, USA) அனுராதா மிட்டல், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் Wes Streeting MP மற்றும் Paul Scully MP ஆகியோர் இக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.

அம்பலமாக்கப்படும் இலங்கை அரசின் பொய்கள்

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பின்னர், தமிழர்களிடம் இராணுவம் பறித்த நிலத்தை திருப்பி அளித்து வருவதாக ஐநாவில் அறிக்கை வாசித்தது இலங்கை அரசு. ஆனால், மகிந்த ராஜபக்சே அரசு 70,000 ஏக்கர் நிலத்தை பறித்துக்கொண்ட நிலையில், இன்றைய நிலையிலும் 67,500 ஏக்கர் தமிழரின் நிலம் இராணுவத்திடம் இருக்கிறது.
தமிழர்களின் தாயகத்தில் புத்தமத கோவில்கள்
அதுமட்டுமல்லாமல், தமிழர்களின் தாயகம் முழுவதும் ஏராளமான புத்தர் சிலைகளையும் புத்தமத கோவில்களையும் அமைத்து வருகிறது இலங்கை அரசு. ஊருக்கு ஊர் இத்தகைய புத்தர் கோவில்கள் தமிழர் பகுதிகளில் தொடந்து அமைக்கப்படுகிறது.

தொடரும் இலங்கை அரசின் அக்கிரமங்கள் இக்கூட்டத்தின் மூலம் - ஐநா மனித உரிமைப் பேரவையில் எடுத்துவைக்கப்படும். இலங்கையில் தொடரும் இராணுவமயமாக்கல்,நில அபகரிப்பு, புத்தமத கோவில்கள் குறித்த ஆவணம் ஒன்றும் இக்கூட்டத்தில் வெளியிடப்பட உள்ளது. 

தலித்துகளுக்கு பாதுகாப்பில்லையா...ஒரு சில தலித்துகளால் பாதுகாப்பு இல்லையா?

தமிழகத்தில் அமைதியையும், பாதுகாப்பையும் அருள வந்த மாமுனிவரான திருமாவளவன், தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று முத்துக்களை இப்போது அடிக்கடி உதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்வாறு கூறிய அவர், நேற்று முன்நாள் கடலூரிலும் அதே குற்றச்சாற்றை முன்வைத்திருக்கிறார்.

திருமாவளவனின் பேச்சைக் கேட்கும் போது ‘‘தான் திருடி பிறரை நம்ப மாட்டாளாம்’’ என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. கூடவே சிரிப்பும் வருகிறது.

தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களுக்கும், கொலைகளுக்கும் திருமாவளவனும், அவரது அடிப்பொடிகளும் தான் காரணம் எனும் போது அவர்களே தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வதைக் கேட்டதும் சிரிப்பு தானே வரும்.

ஒருவேளை இவர்கள் செய்யும் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, நாடகக் காதல், பெண் கடத்தல் உள்ளிட்ட அனைத்து குற்றச்செயல்களுக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது. அவ்வாறு செய்தால் தான் தலித்துகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று உத்தமர் திருமாவளவன் சான்றிதழ் தருவார் போலிருக்கிறது.

உண்மையில் திருமாவளவனும், அவரது அடிப்பொடிகளும் செய்யும் அக்கிரமங்களால் தமிழகத்திலுள்ள அனைத்து தரப்பினரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நீதி வழங்கும் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல். சில மாதங்களுக்கு முன் இரவு நேரத்தில் தலைமை நீதிபதி கவுலின் இல்லத்திற்கு சென்ற சுமார் 100 தலித் வழக்கறிஞர்கள் அங்கேயே மது அருந்தி, பிரியாணி தின்று வாந்தி எடுத்து, ஒன்று, இரண்டு என இயற்கை அழைப்புகளையும் அங்கேயே முடித்தனர்.

சில மணி நேரங்களுக்கு முன்பு வரை வாசம் வீசும் வளாகமாக இருந்த அந்த இடம், திருவிழாக் காலங்களில் ஒதுங்கும் இடத்தை விட மோசமாக நாற்றம் வீசத் தொடங்கியது.

இவர்களின் மிரட்டல்களுக்கு தலைமை நீதிபதி அஞ்சமாட்டார் என்றாலும், இவர்களால் ஏற்படும் நாகரீகக் கேடுகளுக்கும், மானக் கேடுகளுக்கும் அஞ்சிக் கொண்டிருக்கிறார். இத்தகைய இழிவானத் தாக்குதல்களில் இருந்து தலைமை நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லை.

கடந்த ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சுவாதியை இராம்குமார் என்ற மிருகம் கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றது. காரணம்.... சுவாதியை காதலிக்க விரும்பினாராம் ராம்குமார் என்ற தலித். அதை ஏற்க சுவாதி மறுத்துவிட்டாராம்.

அதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் சுவாதியை வெட்டிக் கொன்றானாம். என்னடா கொடுமை இது? உங்களுக்கு பார்த்த உடனேயே பத்திக்கிட்டால், அந்த தீயில் மற்றவர்கள் கருக வேண்டுமாடா?

அடுத்த சில வாரங்களில், அதாவது ஜூலை 30 ஆம் தேதி விழுப்புரத்தில் நவீனா என்ற சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்த செந்தில் என்ற மிருகம் நவீனாவை உயிருடன் எரித்துக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது. அந்த மிருகமும் தலித்து தான். அந்த மிருகத்துக்கு ஏற்பட்டதும் ராம்குமாருக்கு ஏற்பட்ட அதே நோய் தான்.

இந்த அதிர்ச்சி விலகும் முன்பே கரூர் பொறியியல் கல்லூரியில் சோனாலி என்ற அப்பாவி மாணவி ஒரு மிருகத்தால் வகுப்பறையிலேயே கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

இவர்கள் தவிர விருத்தாசலத்தை அடுத்த பூதாமூரில் தனசேகரன் என்ற மிருகம் காதல் தொல்லை கொடுத்து பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதால் ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் புஷ்பலதா என்ற செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று முன்நாள் திங்கட்கிழமை கோவையில் காதல் செய்ய மறுத்ததால் கொன்று விடுவேன் என்று பிரபு என்ற மிருகம் மிரட்டியதால் அக்ஷயா என்ற 15 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்வுகளில் கொலையாளிகள் அல்லது தற்கொலையை தூண்டியவர்கள் அனைவருமே தலித்துகள். இத்தகைய நிகழ்வுகளால் சாலைகளில் நடக்கவும், பள்ளிகளுக்கு செல்லவும் மாணவிகளும், பெண்களும் அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.

பணக்கார வீட்டு பெண்களை நாடகக் காதல் என்ற பெயரில் கடத்திச் சென்று திருமணம் செய்வார்கள். அந்த பெண்களை திருப்பி அனுப்ப கோடிகளில் பேரம் பேசுவார்கள். அதனால் அந்த தலித்துகளை நினைத்து பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு அச்சம்.

ஊரில் எந்த தவறை வேண்டுமானாலும் செய்வார்கள். அதைத் தட்டிக் கேட்டால் வன்கொடுமை சட்டத்தைக் காட்டி மிரட்டுவார்கள். வங்கிகளில் கடன் வாங்குவார்கள். அதைத் திரும்பக் கேட்டால் மேலாளர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குத் தொடுப்பார்கள். வேலை செய்யும் கடைகளில் முறைகேடு செய்வார்கள்.... ஏன் என்று கேட்டால் சாதி பெயரை சொல்லி திட்டியதாக வழக்கு தொடுப்பர். இதனால் அனைத்துத் தரப்பினரும் அத்தகைய ஒரு சில தலித்துகளை நினைத்து அஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.

இதையே தெனாலி படத்து கதாநாயகன் நடிகர் கமலஹாசன் பாணியில் சொல்வதாக இருந்தால்....

ஒரு சில தலித்துகளை நினைத்து
பள்ளி என்றால் பயம்
படிப்பென்றால் பயம்
பாடம் என்றால் பயம்
பக்கம் என்றால் பயம்
துக்கம் என்றால் பயம்
தூக்கம் என்றால் பயம்
நட்பு என்றால் பயம்
நடப்பு என்றால் பயம்
நின்றால் பயம்
நடந்தால் பயம்
தும்மினால் பயம்
எங்கும் பயம் எதிலும் பயம்!

-என மற்ற சமுதாயத்தினர் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் தலித்துகளுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்று காமெடி செய்கிறார் திருமாவளவன்.

இராம்குமார் தற்கொலை விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள்... கொலைக் குற்றவாளியான அவனது உடலை பரிசோதனை செய்ய அண்டார்டிக்காவிலிருந்து டாக்டர் வர வேண்டும், ஆர்டிக்கிலிருந்து விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும். வழக்கில் வாதாட செவ்வாய் கிரகத்திலிருந்து வழக்கறிஞர் வர வேண்டும். புதன் கிரகத்திலிருந்து நீதிபதி வர வேண்டும் என்று கோரி வழக்குப் போட்டு அனைவரையும் அச்சப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தலித்துகள் தான்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, அதற்கு சம்பந்தமே இல்லாத திருமாவளவனும் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதன்நோக்கம் நீதிபதிகளையே அச்சுறுத்துவது தானே! இவர் தான் தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார்.

வியாழன், செப்டம்பர் 15, 2016

காவிரி கலவரம்: கர்நாடகம் மட்டும்தான் குற்றவாளியா?

காவிரி நீர் பங்கீடும், அது தொடர்பான பெங்களூரு கலவரமும் தமிழ்நாட்டில் ஓரளவுக்கு அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. அதே நேரத்தில், இந்த சிக்கல் குறித்த தெளிவான புரிதல் தேவை.

இன்றைய சூழலில் - "காவிரி நீர் பங்கீடு" என்பது ஒரு சிக்கலாகவும், "தமிழர்கள் மீதான கொடும் தாக்குதல்" இன்னொரு சிக்கலாகவும் உள்ளது.
இவற்றில், 1. தமிழர்கள் மீதான தாக்குதலில் மட்டுமே கர்நாடகம் குற்றவாளி மாநிலம் ஆகும். 2. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டை ஆண்ட, ஆளூம் கட்சிகளும் - இந்தியாவை ஆண்ட, ஆளூம் கட்சிகளும் தான் குற்றவாளிகள் ஆகும்!'

திராவிடக் கட்சிகளின் பெரும் குற்றம்

1971 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில், காவிரிப் பாசனத்தின் கீழிருந்த நிலப்பரப்பு 4 லட்சத்து 42 ஆயிரம் ஏக்கர் ஆகும். இது 1990 ஆம் ஆண்டில் 21 லட்சத்து 38 ஆயிரம் ஏக்கராக அதிகரித்தது.

அதாவது, திராவிடக் கட்சிகளின் முதல் இருபதாண்டு கால ஆட்சியில் - காவிரி பாசனப்பரப்பில் 17 லட்சம் ஏக்கரை கர்நாடக மாநிலம் அதிகமாக்கியது. இதனால், கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்த்தேவை 110 டி.எம்.சி அளிவில் இருந்து 323 டி.எம்.சி ஆக அதிகரித்தது (தமிழ்நாட்டில் பாசனப்பரப்போ, நீர்த்தேவையோ அதிகமாகவில்லை. அதற்கான தேவையும் இல்லை).

கர்நாடக மாநிலத்தில் காவிரிப் பாசனப்பரப்பை அதிகமாக்கிக் கொண்டே சென்றதை கருணாநிதியோ எம்ஜியாரோ தடுக்கவில்லை. அன்றே அவர்கள் செயல்பட்டிருந்தால் - இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

தேசியக் கட்சிகளின் பெரும் குற்றம்

இந்திய உச்சநீதிமன்றம் தலையிட்டு, இப்போது தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதையே சாக்காக வைத்து, நீதிமன்றம் தீர்வு காணும் என மத்திய அரசு மழுப்புகிறது.

ஆனால், மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் சிக்கலை தீர்க்கும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் இருக்கிறது. மத்திய அரசு எடுக்கும் முடிவில் உச்சநீதிமன்றம் கூட தலையிட முடியாது என அரசியல் சாசனத்தின் 262 ஆவது பிரிவு குறிப்பிடுகிறது.
அதே போன்று, மாநில அரசு நீர்வளங்களை கையாளும் அதிகாரத்தை, மாநிலப் பட்டியலின் 17 ஆம் பிரிவின் கீழ் பெற்றிருந்தாலும் - மத்திய பட்டியலின் 56 ஆவது பிரிவின் படி, மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகளை முறைப்படுத்தும் சட்டத்தை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது.

அதாவது, மாநிலங்களுக்கு இடையே ஓடும் ஆறுகளை நிர்வகிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றினால், அதன் பின்னர் மாநில அரசுகள் எதுவும் செய்ய முடியாது! (இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவரலாம் என ஏற்கனவே சர்க்காரியா கமிஷன் கூறியுள்ளது).

மேலும், மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் மோதல் சட்டம் 1956 (Inter - State River Water Disputes Act 1956), ஆறுகள் வாரியச் சட்டம் 1956 (River Boards Act 1956) - ஆகிய சட்டங்களின் படி - இந்திய நாட்டின் இரு மாநில ஆறுகளின் நிர்வாகத்தில் மத்திய அரசு எளிதாக தலையிட முடியும்.

இத்தனை வழிகள் இருந்தும் - வேண்டுமென்றே காவிரி நீர் சிக்கலுக்கு தீர்வு காணாமல், மத்தியில் ஆண்ட, ஆளும் கட்சிகள் - குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் காலம் கடத்தி வந்துள்ளன.

விவசாயிகளின் முயற்சியும் அரசுகளின் சதியும்

மத்திய அரசும் மாநில அரசும் தங்கள் கடமையை செய்யாது காலம் கடத்திய நிலையில் - தமிழக விவசாயிகள் 1983 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் சென்று வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் கீழ், 1990 ஆம் ஆண்டில், காவிரி நடுவர் மன்றம் (Cauvery Water Disputes tribunal - CWDT) அமைக்கப்பட்டது.

அதன் இறுதித் தீர்ப்பு 2007 ஆம் ஆண்டில் வெளியான பின்னர், அந்தத் தீர்ப்பு 2013 ஆம் ஆண்டில் அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னர் - இன்னமும் கூட தீர்ப்பை செயலாக்கும் வகையில் - காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board), காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு (Cauvery Water Regulation Committee) ஆகிய அமைப்புகளை ஏற்படுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர்.

என்ன தான் தீர்வு?

கர்நாடகம் தமிழ்நாட்டின் எதிரி அல்ல. கர்நாடகத்துடன் தமிழக மக்கள் சண்டை போடத் தேவையும் இல்லை. மாறாக, திராவிடக் கட்சிகளும், தேசியக் கட்சிகளும் தான் இன்றைய சிக்கலுக்கு முழு காரணம் ஆகும். இந்த கட்சிகளை பொறுப்பாக்குவதும், தண்டிப்பதுமே தீர்வாக அமையும்.

மிகவும் காலதாமதம் செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பு 05.02.2007 இல் வெளியானது. அதன் பின்னரும் காலம் தாழ்த்தி 19.02.2013 இல் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்டது.

ஆனால், அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board), காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு (Cauvery Water Regulation Committee) ஆகிய சட்டபூர்வ அமைப்புகளை இன்னமும் அமைக்காமல் நீதியை தள்ளிப் போடுகிறது. இந்த நீதியை இன்னும் எத்தனைக் காலம் பொறுப்பது?

ஒற்றுமையே தீர்வு

இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே தண்ணீர் தகராறுகளை தீர்க்கும் சட்டம் உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஓடிவிட்டன. விவசாயிகளின் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து 33 ஆண்டுகள் ஓடிவிட்டன. இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் காவிரியில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் - தமிழர்கள் அதற்காக விடாமுயற்சியுடன் ஒன்றுபட்டு பாடுபடவில்லை என்பதே காரணம்.

உரிமைக்காக போராடாத எந்த இனமும் நீடித்திருக்காது. இனியும் பொருமை காக்காமல், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கவும், அதன் மூலம் காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிமையான பங்கினை ஆண்டுதோரும் முறைப்படி வழங்கவும் - மாநில அரசும், கட்சிகளும், இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

(தமிழர்கள் மீது தாக்குதல்: கர்நாடக அரசு அங்கு நடந்த கலவரத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் முழு இழப்பீடு அளிக்க வேண்டும். குற்றம் செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்)

புதன், செப்டம்பர் 14, 2016

வன்னிய மாமன்னன் கோப்பெருஞ்சிங்கன்: 767 ஆவது பிறந்தநாள் இன்று

ஓர் இனக்குழுவை அழிக்க வேண்டுமானல் அதன் வரலாற்று அடையாளங்களை அழிக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் இனக்குழுவின் வரலாற்றை அழிப்பதை, 'இனவெறியின் ஓர் அங்கம்' என்றும் சொல்லலாம்.
சிதம்பரம் கோவிலில் உள்ள கோப்பெருஞ்சிங்கன் சிலை (சிலை முன்பு நான்)
தமிழர்களின் வரலாற்றை அழிப்பதிலும் மறைப்பதிலும் தமிழ் நாட்டிற்குள் சிலர் எப்போதும் மும்முரமாக இருந்து வருகின்றனர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு மறைக்கப்பட்ட காடவராய கோப்பெருஞ்சிங்கன் வரலாறு ஆகும்.

காடவராயர்கள்

பல்லவப் பேரரசின் முடிவுக்குப் பின்னர், சிதறுண்ட பல்லவர்கள் சம்புவராயர்கள் மற்றும் காடவராயர்கள் எனப் பிரிந்து தனக்கென தனித்தனி சிற்றரசுகளை உருவாக்கினர். சம்புவராயர்கள் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனர். காடவராயர்கள் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்.

காடவராயர்கள் கி.பி 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 13 ஆம் நூற்றாண்டுவரை (கி.பி.1076 - கி.பி. 1279) வடதமிழ் நாட்டை ஆண்டனர். வடக்கே ஆந்திர மாநில கிருஷ்ணா நதி, தெற்கே நன்னிலம், கிழக்கே வங்கக்கடல், மேற்கே சேலம், தருமபுரி மாவட்டங்கள் வரை காடவராயர்கள் ஆட்சி செய்தனர்.

சிதம்பரம் நடராசர் ஆலயத்தின் தெற்கு கோபுரத்தை புதுப்பித்தும், கிழக்கு கோபுரத்தை புதிதாக அமைத்தும், தில்லைக் காளிக்கோவில், கடலூர் மாவட்டத்தில் பெருமாள் ஏரி ஆகியவற்றைக் அமைத்தும் பல சாதனைகளைச் செய்தவர்கள் காடவராயர்கள்.

புதுச்சேரி திருபுனை ஏரி, ஒழுகரை ஏரி என பல இடங்களிலும் நீர்மேலாண்மை பணிகளை காடவராயர்கள் செய்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன.

கோப்பெருஞ்சிங்கன்

காடவ அரசன் மணவாளப் பெருமான் விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு தனி அரசை உருவாக்கினார். கி.பி 1195 ல் சேந்தமங்கலத்தை தலை நகராகத் தோற்றுவித்தார் என்று அவரது 5ம் ஆண்டு ஆட்சிக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
சேந்தமங்கலத்தில் உள்ள இசைக்குதிரை சிலைகள்
சேந்தமங்கலத்தில் வாணிலைக் கண்டேசுவரம் என்ற சிவன் கோவிலைக் கட்டினார் (இக்கோவில் குளத்தருகில் உள்ள கருங்கல் குதிரை சிலைகள், ஒவ்வொரு இடத்தில் தட்டும் போதும் வெவ்வேறு ஒலியை எழுப்பும் இசைக் குதிரைகள் ஆகும். காண்க படம்). இவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் இவரது மகன் கோப்பெருஞ்சிங்க காடவராயன்.

காடவராய மன்னர்களில் புகழ்பெற்றவர் கோப்பெருஞ்சிங்கன் ஆகும். கோப்பெருஞ்சிங்கன் சோழ இளவரசியை தில்லையில் வைத்து மணம் புரிந்தார். அதே கோப்பெருஞ்சிங்க காடவராயன், கி.பி. 1216 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தனது மைத்துனனான சோழ அரசன் மூன்றாம் இராசராச சோழனை கைது செய்து சேந்தமங்கலத்தில் சிறை வைத்தார்.
"காடவராய கோப்பெருஞ்சிங்கன், பல்லவர் வம்ச சிற்றரசனான சம்புவராயனுக்கும் உறவினனாக இருந்தான். மலையமான் சிற்றரசன் இராசராச சேதிராயனுக்கு தனது மகளை மணம் செய்து கொடுத்தான். சோழப்பேரரசின் இறுதிக்காலத்தில் சம்புவராயன், காடவராயன், வானகோவரையன், சேதிராயன் எல்லோரும் சோழப்பேரரசின் கீழே வலிமைபெற்ற தனி அரசர்கள் ஆகினர்" என்கிறார் வரலாற்று பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் (பிற்கால சோழர் சரித்திரம் II - பக்கம் 177)
இதனை உறுதி செய்யும் விதமாக தமிழகம் குறித்த ஆய்வுகளை வெளியிட்டுள்ள நோபுரு கரஷிமா, கி.பி. 1100 ஆம் ஆண்டுகளில் தொடங்கி, 1250 ஆம் ஆண்டுகளுக்குள் சம்புவராயர்கள், காடவராயர்கள், வானகோவரையர்கள், சேதிராயர்கள், கச்சிராயர்கள், நீலங்கரையர்கள் உள்ளிட்ட சிற்றரசர்கள் வலிமை படைத்தவர்களாக மாறியதை Ancient to Medieval: South Indian Society in Transition எனும் நூலில் உறுதி செய்கிறார். கூடவே, இவர்களில் பலரும் தம்மை 'பள்ளிகள்' என்று கூறிக்கொண்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

வரலாறு மறைக்கப்பட்டவர்கள்

வன்னியர்கள் என்று தம்மை வெளிப்படையாக அழைத்துக் கொண்டக் காரணத்தால் - தமிழ்நாட்டு வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டவர்கள் காடவராயர்கள்.

அவர்களது சந்ததியினரான கச்சிராயர்கள் இப்போதும் விருத்தாசலம் அருகில் உள்ள முகாசாபரூரிலும் கடலூரின் அருகில் உள்ள தியாகவல்லியிலும் வாழ்கின்றனர்.

இன்றைய நாள், 14.09.2016 ஆவணி திருவோண நட்சத்திரம், காடவராய மாமன்னன் கோப்பெருஞ்சிங்கனின் 767 ஆவது பிறந்தநாள் ஆகும்.

செவ்வாய், செப்டம்பர் 13, 2016

காவிரி: மாநிலங்களின் மோதல் அல்ல - தமிழ்நாட்டின் மீதான போர்!

முகநூலில் கருத்து தெரிவித்ததற்காக பெங்களூருவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்டார். இதனை ஊடகங்கள் நேரடியாக ஒளிப்பதிவு செய்து தமிழ்நாட்டில் ஒலிபரப்பின. இராமேஸ்வரத்தில் கன்னடர் ஒருவரை சிலர் மிரட்டினர். இதையும் ஊடகங்கள் நேரடியாக ஒலிப்பதிவு செய்து பெங்களூருவில் ஒளிபரப்பின.

இப்போது - 'இரு மாநிலங்களுக்குள் மோதல் வேண்டாம்' என்றும், 'இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும்' என்றும் கலைஞர் கருணாநிதியும் சிபிஎம் ராமகிருஷ்ணனும் கருத்து கூறியுள்ளனர்.

'கன்னடர்களை தாக்க வேண்டாம்' என்று சித்தாராமையாவும், 'தமிழக மக்களை தாக்க வேண்டாம்' என்று ஜெயலலிதாவும் பரஸ்பரம் கடிதங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கர்நாடக, தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் - என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளார். (அமைதியாக இருக்கும் தமிழக மக்கள் - அமைதி காக்க வேண்டும் - என்பது என்ன மாதிரியான கோரிக்கையோ!).

இதையே சாக்காக வைத்து - ஊடகங்கள் எல்லாம் 'இரு மாநிலங்களும் மோதுகின்றன' என்கிற செய்தியை பரப்புகின்றன.
'இரு மாநிலங்களும் மோதுகின்றன'  Times of India
'இரு மாநிலங்களும் மோதுகின்றன' The Hindu

 உண்மை என்ன? 

பெங்களூருவில் ஏராளமான தமிழர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 60 -க்கு மேற்பட்ட தமிழக பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன, 100 -க்கு மேற்பட்ட லாரிகள் கொளுத்தப்பட்டுள்ளன.

சாலைகளில் செல்வோர் ஒவ்வொருவரும் நிறுத்தப்பட்டு - கன்னடத்தில் பேச வேண்டும், கன்னட நாளிதழை படித்துக்காட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனை செய்ய முடியாதவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் The ‘speak Kannada’ test . இந்த நிமிடத்திலும் பெங்களூரு போர்க்களமாகவே உள்ளது.
தற்போதைய நிலை படம் 13.9.2016
கர்நாடகத்தில் நடக்கும் கலவரத்துக்கு ஆளும் அரசாங்கம் முழு ஆதரவை அளித்து வருகிறது. கலவரம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, சிறைகளில் இருந்து 600 ரவுடிகள் வெளியே விடப்பட்டுள்ளனர்.

ஆனால், தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் எந்தக் கலவரமும் இல்லை. கன்னடர்களின் உடமைகளுக்கு தமிழக அரசு முழு பாதுகாப்பு அளித்துள்ளது. உண்மையில், கன்னடர்கள் மீதான எந்த தாக்குதலையும் தமிழக மக்கள் ஆதரிக்கவும் இல்லை.

இது எப்படி இரு மாநில மோதல் ஆகும்?

தமிழ்நாட்டின் மீதான போர்

கர்நாடகம் தமிழ்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. இதுதான் உண்மை. ஆனால், இந்த போரினை எதிர்கொள்ளும் இடத்தில் தமிழ்நாட்டு மக்கள் இல்லை. (தமிழக மக்கள் தமது தன்மானத்தை 200 ரூபாய்க்கு விற்றதோடு எல்லாம் போய் விட்டது.)

தமிழ்நாட்டின் மீதான கன்னட தேசத்தின் போரினை தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் இந்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இந்திய அரசுதான் முதல் குற்றவாளி என்பது தமிழக மக்களுக்கு புரியவில்லை.

இந்த தக்குதலை முன் கூட்டியே தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் தமிழக அரசு - கன்னட மக்களை காப்பாற்றும் வேலையை மட்டுமே செய்து வருகிறது. 'பெங்களூருவில் இருக்கும் தமிழர்களின் பாதுகாப்பை ஏன் உறுதி செய்யவில்லை?' என்று யாரும் தமிழக அரசைக் கேட்கவில்லை.

இந்த சிக்கல் எல்லாவற்றுக்கும் காரணமாக உள்ளவை திராவிடக் கட்சிகள் தான் என்கிற உண்மையை உணரும் நிலையில் கூட தமிழக மக்கள் இல்லை.

எனவே 'தமிழகம் கர்நாடகத்தோடு மோதுகிறது' என்பது முட்டாள் தனமான கருத்து. அப்படிப்பட்ட சூழலோ, நிலையோ தமிழ்நாட்டில் இல்லை.

தொடர்புடைய சுட்டி:

பெங்களூரு: இன்னொரு முள்ளிவாய்க்காலா?

திங்கள், செப்டம்பர் 12, 2016

பெங்களூரு: இன்னொரு முள்ளிவாய்க்காலா?

தமிழர்களுக்கு எதிரான நாடகம் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நடக்கும் கொலைவெறி தாக்குதலை விட - தமிழ்நாட்டில் நடக்கும் அடையாள போராட்டங்கள் பெரிய வன்முறையாக சித்தரிக்கப்படுகின்றன.
கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினரால் நடத்தப்படும் கன்னட உதயா தொலைக்காட்சி - தமிழ்நாட்டில் கன்னடர்கள் மீது நடக்கும் தாக்குதலுக்கு பதிலடியாகத்தான், பெங்களூருவில் கலவரம் நடப்பதாகக் கூறுகிறது.

'தமிழ்நாட்டில் கன்னடர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் சித்தாரமையா தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

'கன்னடர்கள் மீது தமிழகத்தில் நடக்கும் தாக்குதல்களுக்கு பதிலடியாக தமிழர்களை தாக்க வேண்டாம்' என பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எட்டியூரப்பா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உதயா தொலைக்காட்சி
காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் சித்தாரமையா
பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எட்டியூரப்பா

ஊடகங்கள் வன்முறைய விரும்புகின்றன. எனவே, தமிழ்நாட்டில் கன்னடர்களின் உடைமைகள் தாக்கப்படுவது போன்ற காட்சிகள் கர்நாடகத்தில் காட்டப்படுகின்றன. இங்கு நடத்தப்படும் அடையாள போராட்டங்களும் - பெங்களூருவில் நடக்கும் கொலை வெறித்தாக்குதலும் இணையாக காட்டப்படுகிறது.

போர்க்களமாக மாறிய பெங்களூரு 

தமிழகத்தின் 60 பேருந்துகள் வரிசையாக வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. தமிழர்கள் தாக்கப்படுகின்றனர். கன்னட காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் எல்லா கன்னடர் கடைகளுக்கும் கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையின் பாதுகாப்பை பார்த்த பின்னர்தான், அவை கன்னடர் கடைகள் என்றே மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

பெங்களூரு போர்க்களமாக மாறியுள்ளது. போலிஸ் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருக்கும் அமெரிக்கர்கள் பத்திரமாக இருக்கவும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது எப்படி இந்தியப் பேரரசு கைக்கட்டி வேடிக்கைப் பார்த்ததோ - அதே போன்று இப்போது இந்தியத் தமிழன் இந்திய நாட்டில் தாக்கப்படும் போதும் வேடிக்கைப் பார்க்கிறது.

தமிழன் தன் மானம் இல்லை

சிக்கல் பெரிதாகும் போது மட்டும் விழித்தெழுந்து பார்ப்பதுதான் தமிழனின் குணம். ஆனால், இதுவும் கடந்து போகும் என்று - எதுவுமே நடக்காதது போல சென்றுவிடும் பண்பு நமக்கு மட்டுமே உண்டு. முள்ளிவாய்க்காலுக்கு நீதி கேட்கவே ஆள் இல்லை. இனி பெங்களூருக்கு யார் நீதி கேட்கப் போகிறார்கள்?

# தமிழ்நாட்டின் "தேசிய" + "திராவிட" அரசியல்தான் பிரச்சினையின் அடிப்படை என்கிற புரிதல் ஏற்படாதவரை, 

# 'உரிமைப் பிரச்சினைகளில் கடைசிவரை நின்று போராட வேண்டும்' என்கிற உண்மையை நாம் உணராத வரை - தீர்வுக்கு வாய்ப்பே இல்லை.

தமிழன் தன் மானத்தை இழந்து ஐம்பது ஆண்டுகள் ஓடிவிட்டன. ஓட்டுக்கு இருநூறு ரூபாய் பணமும் சாராயக் கடைகளும் இலவசமும் தமிழனுக்கு போதுமானவை.

குறிப்பு: "அரசியல் சட்டத்தில் 365 ஆம் பிரிவை பயன்படுத்தி, பெங்களூருவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்" என மருத்துவர் அய்யா அறிக்கை மூலம் கோரியுள்ளார்.

சனி, செப்டம்பர் 10, 2016

அம்மா! நான் தமிழ் பேசி 3 ஆண்டுகள் ஓடிவிட்டன: வெள்ளை மாளிகையை அதிர வைத்த கவிதை!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் மொழி குறித்த உணர்ச்சிகரமான கவிதையால் ஒரு தமிழ்ப் பெண் பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளார்.

அமெரிக்காவில் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக பள்ளி மாணவர்களில் இருந்து இளம் கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் தேசத்தின் இலக்கிய தூதுவர்களாக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மாயா ஈஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வெள்ளை மாளிகையில் 8.9.2016 வியாழக்கிழமை கவிதை வாசித்தனர்.

கவிதை வாசிப்பையை இந்த YUOUTBE காணொலியில் பார்க்கலாம்: (இங்கே சொடுக்கவும்) 

மாயா ஈஸ்வரன் தனது ஆங்கிலக் கவிதையில்:

’கடந்த 16 ஆண்டுகளாக நான் இழந்த பலவற்றைவிட மிக முக்கியமான ஒன்றை நான் தொலைத்து விட்டேன். தலைமுடி உதிர்வதைப்போல் எனது இனத்தின் அடையாளத்தை நான் உதிர்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் எனது தாய்மொழியான தமிழைப்பேசி மூன்றாண்டுகள் ஆகின்றன. தாயே!, வெகுவிரைவில் நான் வழுக்கைத் தலையாகி விடுவேனோ? என்று அஞ்சுகிறேன்’ என்று வாசித்தார்.
தாய்மொழியான தமிழ்ப்பற்று தொடர்பான தனது கவிதையை மாயா வாசித்து முடிப்பதற்குள் அந்த கவியரங்கத்தில் இருந்த அனைவரும் உணர்ச்சிப்பெருக்கில் நெகிழ்ச்சியடைந்து, பலத்த கரவொலி எழுப்பி பாராட்டினர்.

அமெரிக்க அதிபரின் மனைவி மிஷேல் ஒபாமாவும், மேடையில் இருந்தபடியே மாயாவின் கவிதையைப் பாராட்டும் விதமாக உரத்தக் குரல் எழுப்பினார். பின்னர் அவர், ‘‘மாயா, எங்கே மாயா? சிறந்த கவிதை வாசித்துள்ளாய். மேடையில் உள்ள அத்தனைப் பேரையும் கவர்ந்து விட்டாய்’’ எனப் புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சிக்குப்பின் மாயா தனது பேட்டியில், ‘‘நான் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனால் பிறந்தது அமெரிக்காவில். எனது கலாச்சாரம், தொன்மை, பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு கவிதைகளை எழுதியிருக்கிறேன். எனது தாய்மொழியை எப்படி இழந்தேன் என்ற அனுபவத்தைத் தான் வெள்ளை மாளிகையில் கவிதையாக மொழிபெயர்த்துக் கூறினேன். தாய்மொழியை மறந்து விட்டு, பிறமொழியை மாற்றாக ஏற்றுக் கொள்வது என்பது மிகுந்த வலி நிறைந்தது’’ என்றார்.

வெள்ளை மாளிகையில் மாயா ஈஸ்வரனின் கவிதை வாசிப்பையை இந்த YOUTUBE காணொலியில் பார்க்கலாம்: (இங்கே சொடுக்கவும்) 
மேற்கு மத்திய பகுதி (Midwest), தென்கிழக்கு (Southeast), தென்மேற்கு (Southwest), வட கிழக்கு (Northeast), மேற்கு (West) - என  அமெரிக்காவின் ஐந்து பகுதிகளின் பிரதிநிதிகளாக ஐந்து இளம் கவிஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், மாயா ஈஸ்வரன் (தென்கிழக்கு), கோபால் ராமன் (தென்மேற்கு) ஆகிய இருவரும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மொழி: தமிழ்நாட்டில் மாபெரும் இனஅழிப்பு சதி

திராவிட ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டுக்கு செய்த கேடுகளில் உச்சமானது, தமிழ் குழந்தைகள் மீது "ஆங்கில வழிக் கல்வியை" திணித்ததுதான். இதனை தொடங்கியவர் எம்ஜிஆர். தொடர்ந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்.

ஆங்கில மொழியை கற்பதற்கும் ஆங்கில வழியில் கற்பதற்கும் உள்ள வேறுபாடு புரியாதவாறு குழப்பி - தமிழ்நாட்டிலிருந்து தமிழை ஒழிக்கும் வேலையை திராவிட ஆட்சியாளர்கள் மிகத்திறமையாக செய்துவிட்டனர். மொழியறிவு குறித்த அடிப்படை புரிதல் இல்லாத தமிழக நடுத்தர வகுப்பு மக்கள் இக்குற்றத்திற்கு ஆதரவு அளிக்கின்றனர்.

இது ஒரு இன அழிப்பு சதி ஆகும். இந்த பேரழிவின் பாதிப்புகள் எதிர்காலத்தில்தான் தெரியவரும்!

திங்கள், செப்டம்பர் 05, 2016

திருட்டுப் பிள்ளையாரும் வன்னியர் வரலாறும்: வியக்க வைக்கும் பின்னணி!

வீட்டிலோ, கோவிலிலோ பிள்ளையாரை வைத்து வழிபட விரும்புகிறவர்கள் - அதனை வேறொரு இடத்திலிருந்து திருடிக் கொண்டுவர வேண்டும் என்பது மக்களின் விநோதமான நம்பிக்கை. ஆனால், இந்த நம்பிக்கைக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. அதில் வன்னியர்களின் வீர வரலாறும் இணைத்திருக்கிறது. வியப்பாக இருந்தாலும் இது உண்மை.

திருட்டுப் பிள்ளையார்

"புதிதாகப் பிள்ளையார் கோயில் கட்டி மூர்த்திப் பிரதிஷ்டை செய்வதில் வேடிக்கையாக ஒரு உலக வழக்கு இருக்கிறது. அதாவது புதிதாகப் பிள்ளையார் விக்கிரஹம் அடிக்கக் கொடுக்காமல், ஏற்கனவே ஒரு கோயிலில் இருக்கிற பிள்ளையாரைத் திருடிக் கொண்டு வந்துதான் புதுக்கோயில் வைக்கவேண்டும் என்பார்கள்" - என்று சொல்கிறார் காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராசாரியார்.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான "கிரீடம்" படத்தில் பிள்ளையாரை திருடுவது ஒரு முதன்மையான காட்சியாக அமைக்கப்பட்டிருக்கும்.

பிள்ளையார் திருட்டும் தமிழ் மன்னர்களின் போரும்

பிள்ளையார் சிலையை திருடுவதின் பின்னணியில் உள்ள வரலாற்று நிகழ்வு, சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த பெரும் போராகும். கல்கி எழுதிய 'சிவகாமியின் சபதம்' நாவலும், எம்ஜிஆர் நடித்த 'காஞ்சித் தலைவன்' திரைப்படமும் இந்த போரின் கதைதான்.
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்மன், மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

மக்கள் எல்லோரையும் போர்க்குணம் மிக்கவர்களாக மாற்றியதன் பலனாக, பெரும் படைத் திரட்டி புலிகேசி மீது போர்த்தொடுத்தான் நரசிம்மவர்மன். கி.பி.642 ஆம் ஆண்டில் பல்லவப் பெரும்படையால் புலிகேசியின் 'பாதாமி நகர்' தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் 'வாதாபி'). 

ஒரு மன்னன் எதிரி நாட்டை வெற்றி கொள்ளும் போது, அவனது தலைநகரை அழித்து, கோட்டைகளை இடித்து, ஊரை எரிப்பது வழக்கமாகும். அவ்வாறு, பாதாமி நகரை அழித்து நிர்மூலமாக்கும் நிகழ்வை "வாதாபி சூரனின் இரத்தினாபுரி நகரை அழிப்பதாக" வன்னிய புராணம் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.
திருச்செங்காட்டன் குடி உத்திராபதீஸ்வரர் கோவில்
புலிகேசியின் பாதாமி நகரைத் தாக்கி அழித்து அதன் நினைவாகக் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டவர்தான் பிள்ளையார். நரசிம்மவர்மனின் படைக்கு தலைமையேற்று சென்ற பரஞ்சோதி, பாதாமி நகரில் இருந்த பிள்ளையார் சிலையை கொண்டுவந்து, அவரது சொந்த ஊரான திருச்செங்காட்டன் குடியில் வைத்தார்.

பல்லவர்களின் படைத்தளபதியாக இருந்த பரஞ்சோதிதான் பிற்காலத்தில் சைவ சமயத்தின் "சிறுத்தொண்ட நாயனார்" ஆக மாறினார். சிறுத்தொண்டர் தான் பிள்ளையாரை கொண்டுவந்தார் என்பதை -

"பொடி நுகரும் சிறுத் தொண்டர்க்கருள் செய்யும் பொருட் டாக 
கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே"

- என்று திருஞ்சானசம்பந்தர் பாடுகிறார்.

வாதாபியில் - கணபதி இல்லாத கோவில்

தமிழ்நாட்டில் இப்போதும் பிள்ளையாரை வாதாபி கணபதி என்று அழைக்கிறார்கள். முத்துச்சாமி தீட்சிதர் "வாதாபி கணபதிம் பஜே" என்கிற புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலாகவும் இதனை அமைத்துள்ளார்.

இவ்வாறாக, வாதாபி கணபதி என்றும், திருட்டுப்பிள்ளையார் என்பதாகவும் சுமார் 1400 ஆண்டுகளாக, நரசிம்மவர்மன் வெற்றி பெற்றதன் தாக்கம் இன்னமும் தமிழ்நாட்டில் நீடிக்கிறது.
திருச்செங்காட்டன் குடியில் வாதாபி கணபதி சிலை

திருவாரூர் அருகே திருசெங்காட்டன்குடியில் இப்போதும் வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்ட அதே சிலை உள்ளது. 
பாதாமியில் சிலை இல்லாமல் இருக்கும் கணபதி கோவில்.

ஆனால், உண்மையான வாதாபியில் உள்ள கணபதி கோவிலில் இப்போது கணபதி சிலை இல்லை. பாதாமி நகரில் எந்தக் கோவிலில் இருந்து சிலையை எடுத்தார்களோ - அதே கோவில் இப்போதும் சிலை இல்லாத கோவிலாகவே இருக்கிறது. (அக்கோவில் இப்போது கீழ் சிவாலயம் -Lower Shivalaya- என்று அழைக்கப்படுகிறது)

தொடரும் பாரத மரபு

பல்லவ மன்னர்கள் உருவாக்கிய பாரதம் படிக்கும் பழக்கத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாடெங்கும் திரௌபதி அம்மன் கோவில்கள் ஏற்பட்டன. கூத்துக் கலை உருவானது. கூத்தாண்டவர் வழிபாடு வந்தது. கோவில் திருவிழாக்களில் இப்போதும் நடக்கும், பாரதம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

தமிழ் மன்னர்களின் போர்களின் தொகுப்பாக உள்ள வன்னிய புராணம், சாளுக்கிய மன்னன் புலிகேசியை வாதாபி சூரனாக சித்தரித்து, அவனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட கதையாக பரவியிருந்தது. இப்போதும் பல ஊர்களில் வன்னிய புராணம் நாடகமாக நடத்தப்படுகிறது. வீரவன்னிய ராஜனின் கோவில்களும் உள்ளன.

தமிழர் வீரத்தின் அடையாளம்

கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் விநாயகர் தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு முந்தைய தமிழ் இலக்கியங்களில் அப்படி ஒருவர் குறிக்கப்படவில்லை.
சிலை இல்லாமல் இருக்கும் கணபதி கோவிலின் பின்னணியில் பாதாமி நகரம்

தமிழகத்தின் பிள்ளையார் வழிபாடு என்பது வட இந்திய பழக்கம் இல்லை. மாறாக, வட இந்திய மன்னர்களை தமிழ் மன்னர்கள் வெற்றி கொண்டதன் அடையாளம். அது இந்துக்களின் வீரத்தையோ இந்தியர்களின் வீரத்தையோ கொண்டாடுவது அல்ல. மாறாக, தமிழர்களின் வீர அடையாளம் ஆகும்

இதனை இந்து மதவெறிக் கருத்தாகவோ, மாற்று மதத்தினருக்கு எதிரான பிரச்சாரமாகவோ மாற்ற அனுமதிப்பது - தமிழர்களின் வீரத்துக்கும் மானத்திற்கும் இழுக்காகும்.