Pages

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

இந்தியா டுடேவின் சாபக்கேடு: மருத்துவர் அய்யாவின் காலைக்கழுவி குடிக்காவிட்டால் கவின்மலருக்கு தூக்கம் வராதா?

சூரியனைப் பார்த்து நாய் குரைத்த கதையாக - இந்தியா டுடேவில் எப்போது எழுதினாலும் அதில் மருத்துவர் அய்யா அவர்களைத் தூற்றி ஒரு வார்த்தையாவது எழுதாவிட்டால் கவின் மலருக்கு தூக்கம் வராது போலிருக்கிறது! 

'இந்தியா டுடேவின் சாபக்கேடு' எனப்படும் கவின் மலர் இப்போது "எங்குதான் செல்லும் இந்தக் காதல்?" என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார் (இந்தியா டுடே ஆகஸ்ட் 21).

கட்டற்ற பாலியல் உறவுப் புரட்சி

'பதினெட்டு வயதுக்கு உட்பட்ட காதலர்கள் தொடர்பான வழக்குகளை மட்டுமே நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும், பதினெட்டு வயது கடந்தோரின் காதலைக் காதலர்கள் விருப்பப்படியே விட்டுவிட வேண்டும்' என்கிற புரட்சிகரமான கருத்துடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
"ஒருவனை மட்டும்தான் காதலிக்க வேண்டும், கற்போடு இருக்க வேண்டும் என்கிற அடிப்படையிலேயே பெண் காதலித்தால் பதறுகிறார்கள். அவளுக்கு ஒரு காதலுக்கு மேல் வர வாய்ப்பில்லை என்று முடிவு செய்கிறார்கள். பிரச்சினை இதிலிருந்துதான் துவங்குகின்றன" என்கிறது இந்தக் கட்டுரை.

உண்மையில் கவின் மலரின் எழுத்துக்கள் வியப்பைத் தருகின்றன. பல காதல், பலருடன் உடலுறவு, பலமுறைக் கல்யாணம், பலருடன் பல குழந்தைகள், முதல் குழந்தைக்கு தகப்பன் ஒருவன், இரண்டாவது குழந்தையின் தந்தை வேறொருவன், அவ்வாறே முதல் குழந்தைக்கு தாய் ஒருத்தி, இரண்டாவது குழந்தையின் தாய் வேறொருத்தி என்கிற நடைமுறை நம் நாட்டில் இயல்பாகிவிட்டதா? 
திருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தை பெற்று வாழ்கிற நிலைமை இங்கு உள்ளதா? இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பது எனது கருத்தல்ல. இருக்க வேண்டும் என்பதும் எனது விருப்பம் அல்ல. ஆனால், தமிழர் சமூகம் கட்டற்ற பாலியல் உறவுப் புரட்சிக்கு தயாராகாத நிலையில் - 'பதினெட்டு வயது கடந்தோரின் காதலில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது' என்பது எந்த அளவுக்கு நியாயமாக இருக்கும்?

கவின் மலரின் பித்தலாட்டம்.

ஒரு நிகழ்வை தனது விருப்பம் போல மாற்றி எழுதுவது கவின் மலருக்கு கை வந்தக் கலை. இளவரசன் தற்கொலைக்கு பின்னர் பல கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி எழுதினார் கவின் மலர். ஆனால், அவர் எழுதியவை அத்தனையும் பித்தலாட்டம் என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்ட பின்பு - தனது தவறான் எழுத்துக்காக அவர் வருத்தமோ மறுப்போ தெரிவிக்கவில்லை.
தவறான ஒரு கட்டுரை வெளியிடப்பட்டால் அதுகுறித்த உண்மைச் செய்தியையும் கட்டுரையாக வெளியிடும் குறைந்த பட்ச நேர்மைக் கூட கவின்மலரிடமோ இந்தியா டுடேவிடமோ இல்லை. (இங்கே காண்க: அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்)

அதே போன்று "எங்குதான் செல்லும் இந்தக் காதல்?" கட்டுரையிலும் நீதிமன்றத்தையோ காவல்துறையையோ பாதுகாப்புக் கேட்டு தஞ்சமடைந்த ஜோடியைப் பட்டியலிட்டுள்ளார். அதில் சோமியா - அம்பேத்ராஜன் எனும் ஒரு கலப்புத் திருமண ஜோடி நீதிமன்றத்தின் மூலம் சேரவில்லை - நீதி மன்றத்தின் மூலம் பிரிந்துள்ளனர் (இங்கே காண்க: நீ வேண்டாம்... பெற்றோரே போதும்: கலப்பு மணம் செய்த இளம்பெண் கூறியதால் கணவன் கதறல்)

 - இவ்வாறு காதல் வேண்டாம் என்று சொன்ன ஒரு நிகழ்வையும் தனது 'காதல் ஆதரவுப் பட்டியலில்' சேர்த்துள்ளார் கவின் மலர்.

மருத்துவர் அய்யாவின் காலைக்கழுவி குடிக்காவிட்டால் கவின்மலருக்கு தூக்கம் வராதா?

கவின் மலர் எழுதிய "எங்குதான் செல்லும் இந்தக் காதல்?" கட்டுரையில் சேரன் மகள் காதல், கட்டற்ற பாலுறவு புரட்சி, நீதிமன்ற தலையீடு எனும் அநீதி - என்று பல விவகாரங்கள் இருந்தாலும், இதில் எந்த தொடர்பும் இல்லாமல் - திடீரென "சாதிய உணர்வு கொண்டவர்கள் முன்பு அடக்கி வாசித்தார்கள். இப்போது ராமதாஸ் போன்றவர்கள் கொடுத்த தைரியத்தில் மிக வெளிப்படையாக தாங்கள் சாதிய உணர்வை முன்னிருத்துகிறார்கள்" என்று வருகிறது. இந்த காதல் - பாலியல் புரட்சிக் கட்டுரையில் மருத்துவர் அய்யா அவர்களை இழுக்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?

ஆக, எங்கே எதைப் பற்றி எழுதினாலும், அதில் மருத்துவர் இராமதாசு அவர்களையும் தொடர்புபடுத்தி, அவர் மீது ஒரு குற்றத்தை சுமத்திவிட வேண்டும் என்கிற நமைச்சலுடன் எழுதிக் கொண்டிருக்கிறார் கவின் மலர்.

'தெருவில் போகிற நாய் காரணமில்லாமல் வானத்தில் இருக்கிற சூரியனைப் பார்த்து குரைக்கும்' என்பது போல - எப்போதும் மருத்துவர் அய்யா அவர்களைப் பார்த்து குரைக்க வேண்டும் என்பது ஒருவிதமான தமிழ்நாட்டு முற்போக்கு வியாதி.

வெள்ளி, ஆகஸ்ட் 09, 2013

தலைவா: மனித உரிமைக்கு எதிரியான மனுஷ்யபுத்திரன்! விஜய் ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்!

விஜய், அமலாபால் ஜோடியாக நடித்த ‘தலைவா’ படம் ரமலான் தினத்தன்று (9.8.2013) வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், திட்டமிட்டபடி திரையிடப்படவில்லை. இத்தனைக்கும் 'விஸ்வரூபம்', 'டேம் 999' போன்ற படங்களுக்கு இருந்ததுபோன்று இந்த படத்துக்கு எந்த எதிர்ப்பும் யாரிடமிருந்தும் வந்ததாகத் தெரியவில்லை.

விஸ்வரூபம் படம் தொடர்பான சர்ச்சையில் 'படைப்புச் சுதந்திரம்' 'கருத்துச் சுதந்திரம்' என நீட்டி முழக்கினார் மனுஷ்யபுத்திரன். ஆனால், அவரே இப்போது விஜய் படம் வெளிவராததைக் கேலி செய்துகொண்டிருக்கிறார்.

எதற்காக இந்தப் படம் வெளியிடப்படவில்லை என்பது குறித்து யாரும் வெளிப்படையாக பேசவில்லை. திரையரங்குகளுக்கு மிரட்டல் விடப்பட்டது, பொலிஸ் பாதுகாப்பு அளிக்க மறுத்தது, தமிழ்நாடு அரசு சார்பானவர்கள் படத்தைப் பார்த்த பின்னரும் தீர்வு இல்லை, கொடநாடு சென்று முதலமைச்சரைச் சந்திக்க முயன்ற நடிகர் விஜயை முதலமைச்சர் சந்திக்கவில்லை - என்று தகவல்கள் நீள்கின்றன. (இங்கே காண்க: தலைவா படத்திற்கு அரசு தரப்பிலும் நெருக்கடி? பேனர்களை அகற்ற கலெக்டர்கள் உத்தரவு)

விஜய் ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்

இந்த படம் குறித்து ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் வியப்பளிக்கின்றன. (ஆனாலும், இந்த படத்தையே வெளியிடுவோரின் ஊடக நிறுவனமான புதிய தலைமுறை இது குறித்து மவுனம் சாதிக்கிறது).

 "இந்த சிக்கலுக்கு மிக முக்கிய காரணம் தலைவா படம் ஒரு அரசியல் படம் என்றும், படத்தில் இடம் பெற்றுள்ள “உங்க ‘அம்மா’வை பாருடா, அப்புறமா மத்த ‘அம்மா’வ பாக்கலாம்”, “எல்லாருக்கும் ஒட்டு போட்டீங்க, எனக்கு ஒட்டு போடுங்க, நான் நல்லது செய்யறேன்” என்று விஜய் பேசும் இரண்டு அரசியல் டயாலாக்குகள் தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ்த்திரையுலக பிரபலங்களும் கடுப்பாகியுள்ளனர். இதுகுறித்து பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது :

‘தலைவா’ படத்தை கடைசி நிமிடத்தில் ‘ப்ளாக்மெயில்’ வருத்தப்பட வைக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு சம்பந்தப்பட்டவர்கள் தான் தக்க நீதி வழங்க வேண்டும், அவர்கள் வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன். அதுவரை விஜய் ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்." இவ்வாறு நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

- என்று யாழ் மின்னல் எனும் செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. (இங்கே காண்க: விஸ்வரூபம்’ எடுக்கும் ‘தலைவா’ படப்பிரச்சனை : பிளாக்மெயில் செய்வதாக பிரகாஷ்ராஜ் கடுப்பு)

இப்படியெல்லாம் பிரச்சினை வரும் என்று எதிர்பார்த்து ஏற்கனவே விஜய் ரசிகர்கள் இயக்கம் சார்பில் தலைவா படம் தொடர்பான ரசிகர்களின் போஸ்டர், பேனர் விளம்பரங்களில் "விஜய்யை நாளைய, வருங்கால, எதிர்கால... போன்ற அரசியலைக் குறிப்பிடும் வார்த்தைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.மேலும் சட்டமன்றம், பாராளுமன்றம், அரசியல் தலைவர்களின் படங்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது" என்றும் கூறியுள்ளனர்.

மனித உரிமைக்கு எதிரியான மனுஷ்யப்புத்திரன்!

விஸ்வரூபம் படம் தொடர்பான சர்ச்சையில் படைப்புச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் என நீட்டி முழக்கினார் மனுஷ்ய புத்திரன். இஸ்லாமியர்கள் மனுஷ்யப்புத்திரனை எதிர்த்தவுடன், அவருக்காக வக்காலத்து வாங்கினார் கவின்மலர்.

"கமல்ஹாசன் அவர்களின் படைப்புச் சுதந்திரத்தை காக்கவும் கருத்துச் சுதந்திரத்தைக் காக்கவும் அறிவுதளத்தில் இயங்குபவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். இதை கமலுக்கு ஆதரவான குரலாக் கருதிக்கொண்டு தமது கருத்தை முன்வைத்த எழுத்தாளர்கள் மீது நாகரீகமற்றத் தாக்குதல்களை தொடுத்தனர் சிலர் என்பது வருத்தத்திற்குரியது. முக்கியமாக எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் விசயத்தில் சில இசுலாமிய தோழர்கள் நடந்துக் கொண்ட முறையானது வன்மையாக கண்டிக்கத்தக்க விதத்தில் அமைந்திருந்தது." என்று கவின் மலரின் 'சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்' கூறியது.

நடிகர் விஜயை கேலி பேசுகிறார் மனுஷ்யப்புத்திரன்.

விஸ்வரூபம் பட விவகாரத்தில் வீர வசனம் பேசிய அதே 'படைப்புச் சுதந்திர கருத்துச் சுதந்திர' புலிகள் - விஜய் பட விவகாரத்தில் மட்டும் வாய்மூடி மவுனம் காக்கின்றனர். அதிலும் ஒருபடி மேலே போய் - விஸ்வரூபம் படம் சர்ச்சையில் மனித உரிமை பேசிய மனுஷ்ய புத்திரன், தலைவா பட விவகாரத்தில் மனித உரிமையை கேலி செய்கிறர்.
"கூடங்குளம் போராட்டம், கரண்டு பிரசிச்னை, விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, சாராய கலாச்சாரம் என மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து அரசுக்கு எதிராக படம் எடுத்த தலைவன் விஜய்க்கு ஆதரவாக திரள்வோம் வாரீர்..." என்று கருத்து கூறியுள்ளர்.

ஆனால் மனித உரிமை என்பது ஆளுக்கேற்ப வேறுபடுவது அல்ல. படைப்புச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் என்றால் அதில் கமலஹாசனுக்கும் விஜய்க்கும் ஒரே அளவுகோள்தான் இருக்க முடியும். 

Article 19.
UNIVERSAL DECLARATION OF HUMAN RIGHTS

Everyone has the right to freedom of opinion and expression; this right includes freedom to hold opinions without interference and to seek, receive and impart information and ideas through any media and regardless of frontiers.

படைப்புச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல. சட்டத்துக்கு உடபட்டும், பொது அமைதியைக் கருத்தில் கொண்டும், நாட்டு நலனுக்காகவும் படைப்பு சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் சட்டத்தின் வழியே அரசாங்கம் முடக்க முடியும். ஆனால், விஜய் திரைப்படம் சட்டத்துக்கு உட்பட்ட வழிகளில், சட்டத்தின் மூலமாக முடக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

மனுஷ்யப்புத்திரனின் அயோக்கியத்தனமான கருத்து

'கூடங்குளம் போராட்டம், கரண்டு பிரசிச்னை, விலைவாசி உயர்வு, மணல் கொள்ளை, சாராய கலாச்சாரம் என மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து படம் எடுப்பவர்களுக்கு மட்டும்தான் படைப்புச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் இருக்க முடியும்' என்று மனுஷ்ய புத்திரன் பேசுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான வாதம்.
கருத்து சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஒரு மனிதனின் இனம், மொழி, சாதி, மதம், பாலினம், அவரது அரசியல் நம்பிக்கை போன்ற எதன் அடிப்படையிலும் அந்த உரிமை மறுக்கப்படக் கூடாது. 

ஒருவர் எதற்காகவெல்லாம் போராடினார், அவரது கடந்த கால வரலாறு என்ன என்கிற அடிப்படையில் மனித உரிமைகளைப் பார்க்க முடியாது. மனித உரிமைகள் எல்லா மனிதர்களுக்கும் சமமானது.

ஆனால், திமுக தலைமைக்கு நடிகர் விஜய் வேண்டப்படாதவர். எனவே, கலைஞருக்கு ஜால்ரா அடிக்கவேண்டும் என்பதற்காக நடிகர் விஜயின் படைப்புச் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் இழிவுபடுத்தியுள்ளார் மனுஷ்யபுத்திரன்.

இவரெல்லாம் ஒரு நடுநிலைவாதி, அறிவுஜீவி, கருத்து கந்தசாமி, உரிமைக்கு குரல்கொடுப்பவர் என தமிழ்நாட்டு ஊடகங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறார். 

இவருக்கெல்லாம் ஜனநாயவாதி, அறிவுதளத்தில் இயங்குபவர் என்கிற பட்டம் வேறு. 

வெட்கக்கேடு.

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

நாடகக் காதல் இருக்கிறது என்கிறார்கள் சேரனும் அமீரும்: உண்மைக் காதல் ஆதரவாளர்கள் எங்கே?

சந்துரு - தாமினி காதல் விவகாரம் ஒரு 'நாடகக் காதல்' என்கிறார் இயக்குநர் அமீர். இந்தக் கருத்தை ஒத்துக்கொள்கிறார்களா? என்று 'சுப. வீரபாண்டியன், ஞானி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், தமிழருவி மணியன், அ. மார்கஸ், மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், அறிவுமதி, ஷாநவாஸ், மே 17 இயக்கம், சேவ் தமிழ்ள்சு இயக்கம், பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள்' ஆகியோர் நேர்மையாக தெளிவுபடுத்த வேண்டும்.

இயக்குநர் அமீர் கூறும் நாடகக் காதல்

"காதலில் புது டெக்னிக்: ஒரு பெண் இருக்கும் வீட்டில், சந்துரு காதல் வலை விரிப்பதில்லை. இரண்டு பெண்கள் உள்ள வீட்டில், இரண்டாவது பெண்ணிற்கு காதல் வலை விரிப்பது, நூதனமாக பிரச்னை ஏற்படுத்துவது, பெண்ணின் வீட்டாருக்கு காதல் விவகாரம் தெரிய வைப்பது, அவர்கள், முதல் பெண் இருக்கும் போது, இரண்டாவது பெண்ணிற்கு எப்படி திருமணம் செய்து வைப்பது என, தவிப்பது. இந்த தவிப்பை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி, சந்துரு, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதும் நடந்துள்ளது. சென்னையில் ஒரு பெண்ணை, இரண்டு வருடங்களுக்கு முன் காதல் வலையில் வீழ்த்தி, விலகிச் செல்ல, டீல் பேசி, 3 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளான்.
அமீர் காட்டிய ஆதாரம்
பணம் பறிப்பு: சந்துருவை வைத்து அவனது குடும்பத்தினர், ஐந்து வீடுகளில் பணம் பறிக்கும் முயற்சிகளும் நடந்துள்ளன. காதலிப்பதாக நடித்து, சென்னையில் ஒரு பெண்ணிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. சந்துருவின் சகோதரி பத்மா, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில், முகமது இலியாஸ் என்பவரை காதலிப்பதாக நடித்து, அவரது மனைவி இருக்கும்போது, அவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவரிடம் பணம் பறிப்பதற்காக, மதம் மாறி, பத்மாவும், சந்துருவும், பாத்திமா, அப்துல் என பெயர் மாற்றிக் கொண்டுள்ளனர். இவரது குடும்பத்தினரும் மதம் மாறியுள்ளதாக, பெயர்களை மாற்றியுள்ளனர். இலியாசை ஏமாற்றி, 300 சவரன் நகை, 30 லட்சம் ரூபாய் பணத்தையும் அபகரித்துள்ளனர்.

சந்துரு, முஸ்லிமாக மாறிய பின், மானாமதுரையில் வசதியான முஸ்லிம் வீட்டு பெண்ணை காதலித்து, பணம் பறிக்க முயன்றதால், அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டான்." - என்கிறார் இயக்குநர் அமீர். (இங்கே காண்க: தாமினியின் காதலன் சந்துருவின் குடும்பம் ஒரு மோசடி கும்பல்: இயக்குனர் அமீர் ஆத்திரம்)

இந்நிலையில், இளவரசன் - திவ்யா காதல் விவகாரத்தில் விஸ்வரூபம் எடுத்தவர்கள், இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாத அளவுக்கு தலைமறைவாக இருக்கின்றனர். 
'காதலைக் கொண்டாடுவோம்' என ஞானி, மனுஷ்யப்புத்திரன், கவின்மலர் ஒருங்கிணைத்த 'வன்மத்தில் சிறைபடுமோ காதல்' கவியரங்க அழைப்பிதழில்.

சுப. வீரபாண்டியன், ஞானி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், தமிழருவி மணியன், அ. மார்கஸ், மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், அறிவுமதி, ஷாநவாஸ், மே 17 இயக்கம், சேவ் தமிழ்ள்சு இயக்கம், பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் என "இளவரசன் - திவ்யா" விவகாரத்தில் 'சம்மனே இல்லாமல் ஆஜரான' எல்லோரும் சந்துரு - தாமினிக்காகவும் வெளியே வந்து போராடுவதுதான் நியாயமாக இருக்கும்.

இதுவும் ஒரு சாதி மறுப்பு காதல் திருமணம்தான்! 

சந்துரு - தாமினி: இதுவும் ஒரு காதல் திருமணம்தான், இதுவும் ஒரு சாதி மறுப்புத் திருமணம்தான், இங்கேயும் தந்தையும் தாயும் வயது வந்த பெண்ணின் காதலுக்கு குறுக்கே நிற்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், திருமண வயது இல்லாததால் இளவரசன் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய முடியவில்லை. சந்துருவுக்கு அந்தத் தடையும் இல்லை. 

இளவரசனுக்கு சுய வருமானம் இல்லை, ஆனால், சந்துரு சம்பாதிக்கிறார். இளவரசனின் வழக்குரைஞர் சங்கர சுப்புதான் சந்துருவுக்காகவும் வழக்காடுகிறார்.

காதல் பஞ்சாயத்துக்கு தடைக் கேட்டவர்கள் எங்கே?

'கௌரவக் கொலையைத் தடுக்க சட்டம் இயற்று' என்கிற பெயரில் முற்போக்குக் கூட்டத்தினர் ஒரு கருத்தரங்கம் நடத்தினர். மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், சுப. வீரபாண்டியன், ஞானி, இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பெரியாரிய இயக்கங்கள் பங்கேற்பதாகக் கூறப்பட்ட இக்கூட்டத்தில் 'கௌரவக் கொலை தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும்' எனப்பேசினர்.
இந்திய அரசின் சட்ட ஆணையம் 'கௌரவக் கொலை தடைச் சட்டம்' இயற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை வைத்துள்ளது. இச்சட்டத்தினை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியே மேற்கண்ட கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே, திருமண வயது வந்தவர்களின் திருமணத்தில் மற்றவர்கள் யாரும் பஞ்சாயத்து செய்யக் கூடாது. அவ்வாறு பஞ்சாயத்து செய்யும் நோக்கில் யாரும் ஒன்று கூடக் கூடாது' என்பதுதான்.  

ஆனால், இந்த சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளதற்கு நேர்மாறாக, சந்துரு - தாமினி காதல் விவகாரத்தில் பஞ்சாயத்து செய்ய திரையுலகினர் ஒன்று கூடியுள்ளனர்.
'அடுத்தவர்கள் காதலிலோ, கல்யாணத்திலோ யாரும் பஞ்சாயத்து செய்யக் கூடாது' என்பதற்காக சட்டம் வேண்டும் என்று போராடிய அதே முற்போக்குக் கூட்டம் - இப்போது சந்துரு - தாமினி காதல் விவகாரத்தில் திரையுலகினர் ஒன்று கூடி பஞ்சாயத்து செய்வதைக் கள்ள மவுனத்துடன் வேடிக்கைப் பார்ப்பது ஏன்?

தர்மபுரிக்கு ஒரு நியாயம் - சென்னைக்கு வேறொரு நியாயமா?

சென்னையில் மிக வலிமை வாய்ந்த இரண்டு சாதிகள் இருக்கின்றன. ஒன்று சினிமா சாதி, இன்னொன்று பத்திரிகை சாதி. இந்த இரண்டு சாதிகளும் இப்போது இயக்குநர் சேரனுக்கு பின்னால் அணிதிரண்டு நிற்கின்றன. இதைக் கண்டுதான் முற்போக்கு வேடதாரிக் கூட்டம் மிரண்டுபோய் தலைமறைவாக நிற்கிறது.
தர்மபுரி மாவட்டத்தின் அப்பாவிக் கிராம மக்கள், படிக்காதவர்கள் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் மோதலில் ஈடுபட்டல் - அதனை உலகமகாக் கலவரமாக இட்டுக்கட்டிப் பேசலாம், மாபெரும் சதி என வர்ணிக்கலாம், சாதிவெறி என்று சாடலாம். 

அதுவே, சென்னை நகரத்தின் நவநாகரீக சினிமாக் கூட்டத்தினர் என்றால், அதை எதிர்த்து வாய்த்திறக்க முடியுமா? எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு மௌன விரதம் இருந்துதானே ஆகவேண்டும்!

தொடர்புடைய சுட்டிகள்:

1. மகளின் காதலை சேரன் தடுக்கலாமா? முற்போக்கு வேடதாரிகள் மவுனம் சாதிப்பது ஏன்?

2. சேரன் மகள் காதலும் புதிய தலைமுறையும்: அதிமேதாவி மனுஷ்யப்புத்திரன் அரைவேக்காடு என நிரூபித்தார்!

3. சேரன்  மகள் தாமினி: காதல் திருமணங்களுக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும் 

4. கனிமொழியின் சாதிஒழிப்பு நாடகமும் அம்மணமான புர்ச்சியாளர்களும்: வன்னியர் ஒழிப்பு மட்டும்தான் சாதிஒழிப்பா? 

5. கௌரவக்கொலை தடுப்புச்சட்டமும் இளவரசனும்: மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் பித்தலாட்டக் கூட்டம்!

புதன், ஆகஸ்ட் 07, 2013

சட்டத்தை மீறும் வேந்தர் மூவிஸ் தலைவா திரைப்படம்: பதில் சொல்வாரா விஜய்?

அரசின் சட்டங்கள், விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை விஜய் நடித்த தலைவா திரைப்படம் அப்பட்டமாக மீறியுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் திரைப்படத்தை புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தும் பாரிவேந்தரின்  'வேந்தர் மூவிஸ்' வெளியிடுகிறது.
விஜய் நடித்த தலைவா திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஆக.9)வெளியாக உள்ளது. ஆனால் அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர். 

இந்நிலையில் சென்னை நகரில் உள்ள திரையரங்குகள் தலைவா பட நுழைவுச் சீட்டு முன்பதிவை திடீர் என்று இன்று நிறுத்தியுள்ளன என்றும் செய்திகள் வந்தன. மறுபுறம் சென்னையில் உள்ள திரையரங்குகளுக்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப்படை என்ற அமைப்பினர் பெயரில் வெடிகுண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சட்டத்தை மீறும் தலைவா திரைப்படம்

விஜய் நடிப்பில், புதிய தலைமுறை தொலைக்காட்சியை நடத்தும் பாரிவேந்தரின்  'வேந்தர் மூவிஸ்' வெளியீட்டில் வெளியாகும் தலைவா திரைப்படத்துக்கான விளம்பர பதாகைகள் சட்டத்துக்கு புறம்பான வகையில் சென்னை நகரில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஒற்றன்செய்தி எனும் இணையச் செய்தியில் வெளியாகியுள்ள தகவல்:
"சில வருடங்களுக்கு முன்பு அதாவது 2007-ல் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் பிரமாண்ட பேனர்கள் சென்னை மாநகரை அலங்கரித்து. அதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு சினிமா மற்றும் வணிக ரீதியான பேனர்கள் மற்றும் பிரமாண்ட விளம்பர பலகைகளை பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் வைக்க கூடாது என்றும், வைத்தாலும் அதிகபட்சம் மூன்று நாட்கள் மட்டுமே வைத்து, பின் அகற்றிவிட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதற்கு அரசிடமிருந்து எழுத்துபூர்வமாக அனுமதி கடிதம்  பெறவேண்டும். அரசியல் கட்சிகள் கூட இரண்டு மூன்று நாட்களில் பேனர்களை அகற்றி விடுகிறது. இந்த மாதிரி பேனர்கள் வாகன ஓட்டிகள் கவனத்தை சிதறடித்து, விபத்துகள் உருவாவதற்கு காரணமாகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் மிஸ்ரி ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் தலைவா படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பிரமாண்டமான, அகலமான பேனர்கள் சென்னை நகரின் முக்கிய சாலைகளிலும், பெரிய கட்டிடங்களின் மேலும் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி சட்ட அதிகாரியிடம், பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்று கேட்டதற்கு அவர் ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள சொன்னார். சென்னை மாநகரில் பேனர்கள் வைப்பதற்கு தயாரிப்பாளர்கள் சார்பில் எந்த அனுமதியும் கோரப்படவும் இல்லை, நாங்கள் அனுமதியும் கொடுக்கவில்லை என்று ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றவும், சட்டத்தை மீறியவர்கள் மீது தகுந்த நடவடிக்கையும் எடுப்பார்களா சம்பந்தபட்ட அதிகாரிகள்?" - என்று கேட்கிறது ஒற்றன்செய்தி!

ஒற்றன்செய்தி: சென்னை நகரை அனுமதியின்றி ஆக்கிரமித்திருக்கும் விஜய்’யின் “தலைவா” விளம்பர பலகைகள்

மகளின் காதலை சேரன் தடுக்கலாமா? முற்போக்கு வேடதாரிகள் மவுனம் சாதிப்பது ஏன்?

திருமண வயதை அடைந்த ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். கல்யாணம் செய்ய விரும்புகின்றனர். இதற்கு தடைபோடும் அதிகாரத்தை இயக்குநர் சேரனுக்கு அளித்தது யார்? - இந்தக் கேள்விய எழுப்பாமல் தமிழ்நாட்டின் முற்போக்கு வேடதாரிகள் மவுனம் காப்பாது வியப்பளிக்கிறது.

'முற்போக்கு' கூட்டத்தினர் கேட்க மறந்த கேள்விகள்!

உண்மையில் 'முற்போக்கு' கூட்டத்தினர் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்க வேண்டும்:

"'சந்துரு உண்மையான காதலனா இருந்தா நானே சேர்த்து வைப்பேன்' என்கிறார் இயக்குநர் சேரன். சந்துரு - தாமினியைச் சேர்த்துவைக்க இவர் யார்? இவரிடம் யார் அனுமதி கேட்டது? பதினெட்டு வயது நிரம்பிய பெண் யாரிடமும் அனுமதி கேட்கவே தேவையில்லை.

"சந்துரு கெட்டவன், சந்துருவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கு, என்னோட பெரிய பொண்ணுக்கே 'ஐ லவ் யூ' மெசேஜ் அனுப்பினார்" என்கிறார் சேரன். இந்த தகவல்கள் உண்மைதான் என்று வைத்துக் கொண்டால் கூட, சந்துரு செய்ததில் என்ன குற்றம் இருக்கிறது?
\
சந்துரு - தாமினி சந்தித்த நிகழ்ச்சி
கெட்டவன் என்பதற்காக அவரைக் காதலிக்கக் கூடாது என்றோ, கெட்டவர்கள் காதலிக்கக் கூடாது என்றோ ஏதாவது சட்டம் இருக்கிறதா? ஒரு ஆணுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தாலும் - ஒரு பெண்ணுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தாலும் அதையெல்லாம் குற்றம் என்று சொல்லும் உரிமை அவரவர் மனைவிக்கும் கணவனுக்கும்தான் உண்டு.

இன்று சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட துணைகள் இல்லையா? அதையெல்லாம் அவரவர் வீட்டு பெண்கள் ஏற்பது போல - இந்தப் பெண்ணும் ஏற்றுக்கொண்டால் அதை மற்றவர்கள் கேள்விக் கேட்கமுடியுமா?

'ஒரு பெண்ணைக் காதலித்து அவரது அக்காவுக்கே 'ஐ லவ் யூ' மெசேஜ் அனுப்பினார்' என்றால் - அந்த மெசேஜை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் சொந்த விருப்பம். இதில் சேரன் எதற்காகத் தலையிட வேண்டும்?

ஒருவரது மனைவி மட்டுமே தனது கணவன் இன்னொருப் பெண்ணுக்கு 'ஐ லவ் யூ' மெசேஜ் அனுப்புகிறார் என்பதைக் குற்றமாகக் கூற முடியும். அல்லது அந்த மெசேஜை பெறுகிறவர் குற்றம் சாட்டலாம். மற்றவர்கள் எதற்காக இதைக் கேள்விக் கேட்க வேண்டும்?

எனவே, சந்துரு மீது இயக்குநர் சேரன் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சட்டப்படி அடிப்படை ஏதுமற்றவை என்பதுதானே உண்மை?"

- இந்தக் கேள்விகளை 'முற்போக்கு' கூட்டத்தினர்  கேட்டிருக்க வேண்டும்.

முற்போக்கு வேடதாரிகள் மவுனம் ஏன்?


சுமார் பத்து நாட்களுக்கு முன்பு 'கௌரவக் கொலையைத் தடுக்க சட்டம் இயற்று' என்கிற பெயரில் முற்போக்குக் கூட்டத்தினர் ஒரு கருத்தரங்கம் நடத்தினர். மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், சுப. வீரபாண்டியன், ஞானி, இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பெரியாரிய இயக்கங்கள் பங்கேற்பதாகக் கூறப்பட்ட இக்கூட்டத்தில் 'கௌரவக் கொலை தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும்' எனப்பேசினர்.

இந்திய அரசின் சட்ட ஆணையம் 'கௌரவக் கொலை தடைச் சட்டம்' இயற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை வைத்துள்ளது. இச்சட்டத்தினை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியே மேற்கண்ட கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே, திருமண வயது வந்தவர்களின் திருமணத்தில் மற்றவர்கள் யாரும் பஞ்சாயத்து செய்யக் கூடாது. அவ்வாறு பஞ்சாயத்து செய்யும் நோக்கில் யாரும் ஒன்று கூடக் கூடாது' என்பதுதான்.  
கௌரவக் கொலை தடைச் சட்டம் வரைவு
ஆனால், இந்த சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளதற்கு நேர்மாறாக, சந்துரு - தாமினி காதல் விவகாரத்தில் பஞ்சாயத்து செய்ய திரையுலகினர் ஒன்று கூடியுள்ளனர்.

'அடுத்தவர்கள் காதலிலோ, கல்யாணத்திலோ யாரும் பஞ்சாயத்து செய்யக் கூடாது' என்பதற்காக சட்டம் வேண்டும் என்று போராடிய அதே முற்போக்குக் கூட்டம் - இப்போது சந்துரு - தாமினி காதல் விவகாரத்தில் திரையுலகினர் ஒன்று கூடி பஞ்சாயத்து செய்வதைக் கள்ளமவுனத்துடன் வேடிக்கைப் பார்க்கின்றனர். ஏன் இந்த இரட்டை வேடம்?

'முற்போக்கு' கூட்டத்தின் இரட்டை வேடம்

சென்னையில் மிக வலிமை வாய்ந்த இரண்டு சாதிகள் இருக்கின்றன. ஒன்று சினிமா சாதி, இன்னொன்று பத்திரிகை சாதி. இந்த இரண்டு சாதிகளும் இப்போது இயக்குநர் சேரனுக்கு பின்னால் அணிதிரண்டு நிற்கின்றன.

இதைக் கண்டுதான் முற்போக்கு வேடதாரிக் கூட்டம் மிரண்டுபோய் தலைமறைவாக நிற்கிறது.

அதுதானே, தர்மபுரி மாவட்டத்தின் அப்பாவிக் கிராம மக்கள், படிக்காதவர்கள் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் மோதலில் ஈடுபட்டல் - அதனை உலகமகாக் கலவரமாக இட்டுக்கட்டிப் பேசலாம், மாபெரும் சதி என வர்ணிக்கலாம், சாதிவெறி என்று சாடலாம். 

அதுவே, சென்னை நகரத்தின் நவநாகரீக சினிமாக் கூட்டத்தினர் என்றால், அதை எதிர்த்து வாய்த்திறக்க முடியுமா? எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு மௌன விரதம் இருந்துதானே ஆகவேண்டும்!

இதுவும் ஒரு சாதி மறுப்பு காதல் திருமணம்தான்! 

"இளவரசன் - திவ்யாவோடு சந்துரு - தாமினியை ஒப்பிடாதீர்கள்" என்று ஜூனியர் விகடன் அழுகுணி ஆட்டம் ஆடுவது போன்று, முற்போக்காளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்கிறவர்கள் இனியும் ஓடி ஒளியக் கூடாது.

சுப. வீரபாண்டியன், ஞானி, தமிழருவி மணியன், அ. மார்கஸ், மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், மே 17 இயக்கம், சேவ் தமிழ்ள்சு இயக்கம், பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் என "இளவரசன் - திவ்யா" விவகாரத்தில் 'சம்மனே இல்லாமல் ஆஜரான' எல்லோரும் சந்துரு - தாமினிக்காகவும் வெளியே வரவேண்டும், இயக்கம் கட்ட வேண்டும், போராட வேண்டும், கருத்தரங்குகள், வெளியீடுகள் என 'தாரைத் தப்பட்டை கிழியும் வரை' முழங்க வேண்டும். அதுதான் நியாயமாக இருக்க முடியும்.
 
இதுவும் ஒரு காதல் திருமணம்தான், இதுவும் ஒரு சாதி மறுப்புத் திருமணம்தான், இங்கேயும் தந்தையும் தாயும் வயது வந்த பெண்ணின் காதலுக்கு குறுக்கே நிற்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், திருமண வயது இல்லாததால் இளவரசன் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய முடியவில்லை. சந்துருவுக்கு அந்தத் தடையும் இல்லை.

முற்போக்காளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்களே, உங்கள் அறிவு நாணயத்தை நிரூபியுங்கள்.

"நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி,
நாட்டத்தில் கொள்ளாரடீ! - கிளியே! நாளில் மறப்பாரடீ

மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலந்தனில்-கிளியே! இருக்க நிலைமையுண்டோ?"

குறிப்பு: இளவரசனின் வழக்குரைஞர் சங்கர சுப்புதான் சந்துருவுக்காகவும் வழக்காடுகிறார்.

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

விகடன் கும்பலின் கொலைவெறி: படுகொலையானது பத்திரிகை தர்மம்!

சென்னையிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் - ஆனந்த விகடன் இதழ்கள் மற்றும் தி இந்து ஆங்கில நாளிதழ் - இந்த இரண்டு பத்திரிகை குழுமங்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு. 

பாமக எதிர்ப்புதான் தமது நிலைபாடு என இந்த இரண்டு பத்திரிகைகளின் நிர்வாகக் கூட்டத்திலும் ஒரே முடிவை எடுத்துள்ளனர். '"தலித் ஆதரவு நிலைபாட்டில் பத்திரிகை நடக்கும். எனவே, பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான கருத்தில்தான் செய்திகள் வெளியிட வேண்டும்" என பொர்டு மீட்டிங்கில் முடிவு எடுத்துவிட்டோம்' என்று அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

தி இந்து பத்திரிகையின் நேர்மையும் விகடன் கும்பலின் அயோக்கியத்தனமும்

தி இந்து பத்திரிகையானது 'பாமக எதிர்ப்பு செய்திகளை' தீவிரமாக பதிவு செய்துவருகிறது. அதே நேரத்தில் - பத்திரிகை தர்மத்துக்கு கொஞ்சமாவது முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தவிர்க்க முடியாத முக்கிய செய்திகளை, அவை மறுதரப்பு செய்திகளாக இருந்தாலும், அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. 
தர்மபுரி இளவரசன் விவகாரத்தில் - இளவரசன் தரப்பினருக்கு ஆதரவான செய்திகளையே தி இந்து நாளிதழ் வெளியிட்டது. அவர்கள் தரப்பில் எழுப்பப்பட்ட எல்லா சந்தேகங்களையும் பதிவுசெய்து வந்தது தி இந்து. அந்த வகையில் இளவரன் கொலையா என ஏற்பட்ட சந்தேகம், மறுபிரேத பரிசோதனையின் தேவை, திவ்யாவைக் கடத்தினார்களா? என்கிற கேள்வி - என எல்லாவற்றையும் வெளியிட்டது தி இந்து.

அதே நேரத்தில் - இந்த செய்திகளுக்கு நேர்மாறான வகையில் உண்மைகள் வெளிவந்தபோது அவற்றையும் வெளியிட்டது தி இந்து. குறிப்பாக:

1. இளவரசன் மரணம் தற்கொலைதான் எனும் எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை,
2. திவ்யா 'இனி படிக்க விரும்புகிறேன்' எனக் கூறிய செய்தி,
3. தியாவை யாரும் கடத்தவில்லை என்கிற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு,
4. இளவரசன் கடிதத்தில் உள்ள கையெழுத்து உண்மைதான் என்கிற ஆதாரம்

- இவை அனைத்தையும் வெளியிட்டது தி இந்து நாளிதழ்.

ஆனால், இளவரன் தற்கொலை தொடர்பில் ஒரு தரப்புக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே வெளியிட்டுவந்த ஆனந்த விகடன் - ஜூனியர் விகடன் கும்பல் மேற்கண்ட எந்த உண்மைச் செய்தியையும் வெளியிடவே இல்லை. 

இளவரசன் தரப்பினருக்கு ஆதரவான அனைத்து சந்தேகங்களையும் மீண்டும் மீண்டும் எழுப்பி, வன்னியர்கள் தரப்பின் மீது அவதூறுகளை மட்டுமே வீசி வந்த விகடன் கும்பல் - அத்தனை சந்தேகங்களுக்கும் தெளிவான விடை தெரிந்த போது, அதனை செய்தியாக வெளியிடவே இல்லை.

விகடன் கும்பல் எழுப்பிய கட்டுக்கதைகள்

"தற்கொலை செஞ்சுக்குற அளவுக்கு இளவரசன் கோழை இல்லை." "நிச்சயம் இது கொலைதான். அவனுடன் இருந்த யாரோ பலமான பொருளால் தாக்கி கொலைசெய்து தண்டவாளத்தில் வீசியிருக்காங்க" "கடிதத்தில் இருப்பது யார் கையெழுத்து?" "அரசியல் ஆதாயத்துக்காக இளவரசன் கொல்லப்பட்டிருக்கலாம்" "இளவரசன் வேண்டாம் என்று திவ்யாவின் வாயாலேயே சொல்ல வைத்தார்கள்" "தன் அன்புக் கணவனை பறிகொடுத்த அநியாயத்திற்காக திவ்யா நீதிகேட்க வேண்டும். அப்படி துணிவுடன் திவ்யா களமிறங்கினால் இளைஞர் கூட்டம் அவருக்குப் பின்னால் திரளும்"

- இப்படியெல்லாம் ஜூனியர் விகடனிலும் ஆனந்த விகடனிலும் செய்திகள் வந்தன. ஆனால், இதற்கு மாறான உண்மைகள் வெளிவந்தபோது விகடன் கும்பல் மவுனத்தைக் கடைபிடிக்கிறது.

விகடன் கும்பலால் மறைக்கப்பட்ட முக்கிய செய்திகள்

1. இளவரசனிடமிருந்து திவ்யா பிரிந்தது அவரது சொந்த முடிவு

விகடன் கும்பல் பல மாதங்களுக்கான பரபரப்புச் செய்தியாக "இளவரசனிடமிருந்து திவ்யாவை பாமகவினர் பிரித்தனர்" என்பதை வைத்து ஓட்டியது.

ஆனால், திவ்யா அவரது சொந்த விருப்பத்தின் பேரில்தான் இளவரசனைவிட்டு பிரிந்தார். அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டபோது, அதனை விகடன் கும்பல் வெளியிடவில்லை. இதோ உயர்நீதிமன்றம் தீர்ப்பு:
திவ்யா தாமக விரும்பி அம்மாவிடம் சென்றார். அவரை ஒருவரும் கட்டாயப்படுத்தவில்லை -நீதியரசர் ஜெயச்சந்திரன், நீதியரசன் சுந்தரேஷ் தீர்ப்பு

2. எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை

விகடன் கும்பல் பல வாரங்களுக்கான பரபரப்புச் செய்தியாக "இளவரசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம்" என்பதை வைத்து ஓட்டியது.

ஆனால், அது தற்கொலைதான் என்பதாக 'எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை' வெளிவந்தபோது, அதனை விகடன் கும்பல் வெளியிடவில்லை. இதோ எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை:
எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை'
பத்திரிகை தர்மத்தை குப்பையில் வீசிய விகடன் கும்பல்.

பத்திரிகை கவுன்சில் சொல்லும் பத்திரிகை தர்மத்தை குப்பையில் வீசியுள்ளது விகடன் கும்பல். செய்தி வெளியிடும்போது துல்லியமாகவும் நியாயமாகவும் வெளியிடுவதுதான் அடிப்படையான பத்திரிகை தர்மமாகும். குறிப்பாக, எந்த ஒரு செய்தியிலும் எல்லா தரப்பு நியாயங்களும் வெளியிடப்பட வேண்டும்.

அதே போன்று, வெளியிடப்பட்ட ஒரு செய்தி தவறு என்கிற நிலை வரும்போது, அதற்கு மாறான உண்மையை வெளியிட வேண்டியது பத்திரிகைகளின் கடமை ஆகும்.
பத்திரிகை கவுன்சில் சொல்லும் பத்திரிகை தர்மம்.
ஆனால், தர்மபுரி தற்கொலை விவகாரத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவான செய்தியை மட்டுமே வெளியிட்டு வன்னியர்களை இழிவுபடுத்திய விகடன் கும்பல், அந்த செய்திக்கு மாறான உண்மை வெளியானபோது - அந்த உண்மையை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துள்ளது.

இப்படி தர்மத்தை கொலைசெய்வதற்கு பதிலாக, விகடன் கும்பல் வேறு எந்த தொழிலிலாவது இறங்கினால் - அதுவே மிக உயர்ந்த செய்கையாக இருக்கும். 

ஏனெனில், பத்திரிகை தர்மத்தைக் கொலைசெய்வதிவிட மிகக் கேவலாமான தொழில் உலகில் எதுவுமே இருக்க முடியாது.

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

சேரன் மகள் காதலும் புதிய தலைமுறையும்: அதிமேதாவி மனுஷ்யப்புத்திரன் அரைவேக்காடு என நிரூபித்தார்!

புதியதலைமுறை தொலைகாட்சியில் இன்று (5.8.2013) காலை புது புது அர்த்தங்கள் எனும் நிகழ்ச்சியில் மனுஷ்யப்புத்திரனும் பாஜகவைச் சேர்ந்த வானதி சீனுவாசனும் - சேரன் மகள் காதல் மற்றும் 21 வயதுக்கு முன் நடைபெரும் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் தேவை எனும் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் கோரிக்கை - குறித்து பேசினர்.

இந்த நிகழ்ச்சியின் போது, 2006 ஆம் ஆண்டுமுதலே இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஒரு சட்டத்தை, மீண்டும் ஒருமுறை சட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்று மருத்துவர் இராமதாசு ஏன் கேட்கவில்லை? இது பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா? என்கிற வகையில் பொங்கி எழுந்துள்ளார் மனுஷ்யப்புத்திரன்!

'ஏற்கனவே இருக்கும் சட்டத்தையே மீண்டும் கேட்கிறோமே' என்கிற அடிப்படை பொது அறிவுக்கூட தனக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தினார் மனுஷ்யப்புத்திரன்

பேய் ஆட்ட மனநிலையில் மனுஷ்யப்புத்திரன்

பாஜகவைச் சார்ந்த வானுதி சீனுவாசன் 'காதல் தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து' தெளிவாக பேசிய போதும், மனுஷ்யப்புத்திரன் ஒருவிதமான பேய் ஆட்ட மனநிலையில், வானதி சீனுவாசன் பேசுவதைக் காதில் வாங்காமல் கத்திக்கொண்டிருந்தார். 'மனுஷ்யப்புத்திரனை மட்டுமே பேச விட்டுவிடுங்கள், அவர் மற்றவர் சொல்வதைக் காதில் வாங்கும் நிலையில் இல்லை' என்று வானுதி சீனுவாசன் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார். ஆனாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் 'குழாயடிச் சண்டை' போலவே பேசிக்கொண்டிருந்தார் மனுஷ்யப்புத்திரன்.
'சேரன் மகள் சட்டப்படியான திருமண வயதை அடைந்துவிட்டார், எனவே அவரைக் காதலனுடன் உடனடியாக அனுப்பி வைத்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, காவல்துறையினர் எதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தினர்?' என மனுஷ்யப்புத்திரன் கொந்தளித்து எழுந்தார். 

எனினும் எதிரில் பேசிய வானதி சீனுவாசன் 'மனுஷ்யப்புத்திரனுடைய உலகம் வேறொரு உலகம், ஆனால், நம்முடைய சமூகம் வேறு வகையில் உள்ளது' என்பதை எடுத்துச் சொல்லி, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதுதான் நியாயம் என்றார்.

தான் ஒரு அரைவேக்காடு என்பதை நிரூபித்தார் மனுஷ்யப்புத்திரன்

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஜென்ராம், "21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும்போது பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்று மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சொன்ன உடனேயே வானுக்கும் பூமிக்கும் துள்ளிக்குதிக்கும் விதமாக கொந்தளித்தார் மனுஷ்யப்புத்திரன்.

"அது எப்படி, பெண்கள் அறிவாளிகள் இல்லையா? அவர்களுக்கு யோசித்து முடிவெடுக்கத் தெரியாதா? அப்படியானால் பெண்களை மருத்துவர் இராமதாசு இழிவுபடுத்துகிறாரா?" என்றெல்லாம் நீட்டி முழக்கி, தான் ஒரு அரைவேக்காடு என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதி செய்தார்.
மனுஷ்யப்புத்திரனுக்கு கொஞ்சமாவது அடிப்படை அறிவு என்கிற ஒன்று இருந்திருந்தால் - அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்து என்ன என்று பார்த்திருப்பார். இன்னும் கொஞ்சம் பொது அறிவு உள்ளவராக இருந்திருந்தால் அந்த கருத்தின் பின்னணி என்ன என்றாவது தெரிந்திருக்கும். அடிப்படை அறிவு, பொது அறிவு - இந்த இரண்டுமே மனுஷ்யப்புத்திரனுக்கு இல்லை.

 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை - என்பதில் என்ன தவறு?

"21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதல் தேவை" என்று மத்திய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம்  பரிந்துரைத்திருக்கிறது - என்று மருத்துவர் இராமதாசு அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.  (இங்கே காண்க: 21 வயது திருமணம் குறித்து இராமதாஸ் கருத்து)

மருத்துவர் அய்யா அவர்கள் தனது கோரிக்கையாக "21 வயதுக்கு முன்பாக நடைபெறும் திருமணங்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்கும் வகையில் உடனடியாக சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி வலியுறுத்துகிறேன்" என்று கேட்டுள்ளார்.
"21 வயதுக்குட்பட்ட ஆணின் திருமணத்துக்கு மட்டும் பெற்றோரின் ஒப்புதல் தேவையில்லையா? அப்படியானால் ஆணுக்கு ஒரு நீதியா? பெண்ணுக்கு வேறொரு நீதியா?" என்றெல்லாம் கேட்பதற்கு முன்பாக ஏற்கனவே இருக்கிற சட்டம் என்ன சொல்கிறது என்கிற பொதுஅறிவு மனுஷ்யப்புத்திரனுக்கு இருந்திருக்க வேண்டும்.

21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு திருமணம் செய்யவே சட்டத்தில் இடமில்லை.

 21 வயதுக்குள் திருமணம் செய்துகொள்ளும் உரிமையே பெண்களுக்கு மட்டும்தான் உண்டு. ஆண்களுக்கு அந்த உரிமை சட்டப்படி இல்லை.

THE PROHIBITION OF CHILD MARRIAGE ACT, 2006

Section 2 (a): "child" means a person who, if a male, has not completed twenty-one years of age, and if a female, has not completed eighteen years of age

2006 ஆம் ஆண்டின் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 21 வயது முடிவடையாத ஆண்களும் 18 வயது முடிவடையாத பெண்களும் குழந்தைகள் என்று கருதப்படுகிறார்கள். எனவே, சட்டப்படியே 21 வயது நிரம்பாத ஆண் திருமணம் செய்ய முடியாது.


ஆகவே,"21 வயதுக்கு முன்பாக நடைபெறும் திருமணங்கள்" என்று சொன்னாலே, அது பெண்களின் திருமணத்தை மட்டும்தான் குறிக்கிறது. 

ஆண்களுக்கு 21 வயதுக்கு முன்பாக திருமணம் செய்ய சட்டப்படி அனுமதியே இல்லாத போது, அதற்கு 'பெற்றோரின் ஒப்புதல் தேவை' என்று எதற்காக கேட்கவேண்டும்?

ஏற்கனவே சட்டமாக உள்ள ஒரு சட்டத்தை, மீண்டும் சட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்று மருத்துவர் அய்யா ஏன் கேட்க வேண்டும்? அப்படி கேட்க அவர் என்ன மனுஷ்யப்புத்திரன் போன்று அரைவேக்காடா?
மேலே உள்ள படத்துக்கும் இந்தக்கட்டுரைக்கும் தொடர்பேதும் இல்லை

தொடர்புடைய சுட்டிகள்: