'இந்தியா டுடேவின் சாபக்கேடு' எனப்படும் கவின் மலர் இப்போது "எங்குதான் செல்லும் இந்தக் காதல்?" என்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார் (இந்தியா டுடே ஆகஸ்ட் 21).
கட்டற்ற பாலியல் உறவுப் புரட்சி
'பதினெட்டு வயதுக்கு உட்பட்ட காதலர்கள் தொடர்பான வழக்குகளை மட்டுமே நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும், பதினெட்டு வயது கடந்தோரின் காதலைக் காதலர்கள் விருப்பப்படியே விட்டுவிட வேண்டும்' என்கிற புரட்சிகரமான கருத்துடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
"ஒருவனை மட்டும்தான் காதலிக்க வேண்டும், கற்போடு இருக்க வேண்டும் என்கிற அடிப்படையிலேயே பெண் காதலித்தால் பதறுகிறார்கள். அவளுக்கு ஒரு காதலுக்கு மேல் வர வாய்ப்பில்லை என்று முடிவு செய்கிறார்கள். பிரச்சினை இதிலிருந்துதான் துவங்குகின்றன" என்கிறது இந்தக் கட்டுரை.
திருமணம் செய்துகொள்ளாமலேயே குழந்தை பெற்று வாழ்கிற நிலைமை இங்கு உள்ளதா? இப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பது எனது கருத்தல்ல. இருக்க வேண்டும் என்பதும் எனது விருப்பம் அல்ல. ஆனால், தமிழர் சமூகம் கட்டற்ற பாலியல் உறவுப் புரட்சிக்கு தயாராகாத நிலையில் - 'பதினெட்டு வயது கடந்தோரின் காதலில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது' என்பது எந்த அளவுக்கு நியாயமாக இருக்கும்?
கவின் மலரின் பித்தலாட்டம்.
ஒரு நிகழ்வை தனது விருப்பம் போல மாற்றி எழுதுவது கவின் மலருக்கு கை வந்தக் கலை. இளவரசன் தற்கொலைக்கு பின்னர் பல கட்டுக்கதைகளை இட்டுக்கட்டி எழுதினார் கவின் மலர். ஆனால், அவர் எழுதியவை அத்தனையும் பித்தலாட்டம் என்பது வெளிப்படையாக நிரூபிக்கப்பட்ட பின்பு - தனது தவறான் எழுத்துக்காக அவர் வருத்தமோ மறுப்போ தெரிவிக்கவில்லை.
தவறான ஒரு கட்டுரை வெளியிடப்பட்டால் அதுகுறித்த உண்மைச் செய்தியையும் கட்டுரையாக வெளியிடும் குறைந்த பட்ச நேர்மைக் கூட கவின்மலரிடமோ இந்தியா டுடேவிடமோ இல்லை. (இங்கே காண்க: அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்)
அதே போன்று "எங்குதான் செல்லும் இந்தக் காதல்?" கட்டுரையிலும் நீதிமன்றத்தையோ காவல்துறையையோ பாதுகாப்புக் கேட்டு தஞ்சமடைந்த ஜோடியைப் பட்டியலிட்டுள்ளார். அதில் சோமியா - அம்பேத்ராஜன் எனும் ஒரு கலப்புத் திருமண ஜோடி நீதிமன்றத்தின் மூலம் சேரவில்லை - நீதி மன்றத்தின் மூலம் பிரிந்துள்ளனர் (இங்கே காண்க: நீ வேண்டாம்... பெற்றோரே போதும்: கலப்பு மணம் செய்த இளம்பெண் கூறியதால் கணவன் கதறல்)
- இவ்வாறு காதல் வேண்டாம் என்று சொன்ன ஒரு நிகழ்வையும் தனது 'காதல் ஆதரவுப் பட்டியலில்' சேர்த்துள்ளார் கவின் மலர்.
மருத்துவர் அய்யாவின் காலைக்கழுவி குடிக்காவிட்டால் கவின்மலருக்கு தூக்கம் வராதா?
கவின் மலர் எழுதிய "எங்குதான் செல்லும் இந்தக் காதல்?" கட்டுரையில் சேரன் மகள் காதல், கட்டற்ற பாலுறவு புரட்சி, நீதிமன்ற தலையீடு எனும் அநீதி - என்று பல விவகாரங்கள் இருந்தாலும், இதில் எந்த தொடர்பும் இல்லாமல் - திடீரென "சாதிய உணர்வு கொண்டவர்கள் முன்பு அடக்கி வாசித்தார்கள். இப்போது ராமதாஸ் போன்றவர்கள் கொடுத்த தைரியத்தில் மிக வெளிப்படையாக தாங்கள் சாதிய உணர்வை முன்னிருத்துகிறார்கள்" என்று வருகிறது. இந்த காதல் - பாலியல் புரட்சிக் கட்டுரையில் மருத்துவர் அய்யா அவர்களை இழுக்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?
ஆக, எங்கே எதைப் பற்றி எழுதினாலும், அதில் மருத்துவர் இராமதாசு அவர்களையும் தொடர்புபடுத்தி, அவர் மீது ஒரு குற்றத்தை சுமத்திவிட வேண்டும் என்கிற நமைச்சலுடன் எழுதிக் கொண்டிருக்கிறார் கவின் மலர்.
'தெருவில் போகிற நாய் காரணமில்லாமல் வானத்தில் இருக்கிற சூரியனைப் பார்த்து குரைக்கும்' என்பது போல - எப்போதும் மருத்துவர் அய்யா அவர்களைப் பார்த்து குரைக்க வேண்டும் என்பது ஒருவிதமான தமிழ்நாட்டு முற்போக்கு வியாதி.
4 கருத்துகள்:
"நான் முதலில் விவசாயி, அடுத்து மருத்துவர், 3வது போராளி, அதற்கு அடுத்தது தான் அரசியல்வாதி : டாக்டர் ராமதாஸ்."
அருள் ராமதாசை மருத்துவர் அய்யா என்று அழைப்பதுக்கு பதிலாக விவசாயி அய்யா என்று அழைக்கலாம்.
அதுதான் பொருத்தமாக இருக்கும்
ஆமாம் அருள் நீங்கள் கூட அம்படியே அழையுங்கள்...! இராமதாசு அவர்களும் விவசாயியாகவே ஆகட்டும்...! உழுது உண்டு அவர் முன் செல்ல தொழுது உண்டு அவர்பின்வர Ethicalist.E போன்றவர்கள் தயார்...!
உண்மையான புரட்சிக்காரன் என்பவன் மற்ற உயிர்களையும் தன்னுயிராய் நினைத்து உள்ளார்ந்த அன்பின், ஒழுக்கத்தின் பிரதிநிதியாக இருப்பான்! அதேவேலையிள் அறிஞர், மேதை, மகாத்மா, பெருந்தகை என்ற அடைமொழி கொண்டு அழைக்கப்படுபவராயினும் அவர்களிடத்தும் ஒரு சில தவறுகள் இருக்கலாம். குணம்நாடி அவர் குற்றம்நாடி அவற்றுள் மிகைநாடி அவர்களை ஏற்றுக்கொல்வதா அல்லது விட்டுச்செல்வதா என்பதும் கால சூழ்நில பொருத்தவிசயம். அப்படி பார்த்தால் "சே" வின் வாயில் சுருட்டுவைத்த படத்தை சுருட்டிவைத்துவிட்டு அவரின் வேறு படத்தை பயன்படுத்தலாம்தானே தோழர்களே! இந்தகாலத்தில்.
Ethicalist.E நீங்கள் இராமதாசுவை கின்டல் செய்கின்றீரா அல்லது விவசாயத்தொழிலை கின்டல் செய்கின்றீரா. இப்படி ஏதாவது சொல்லவேண்டியது அம்பறம் அவங்க தாரையை கின்டல் பன்றாங்க, தப்பை கின்டல் பன்றாங்க என்றும் வண்மையான கொடுமை பன்னிட்டானு கூப்பாடு போடுவது. இரண்டு பக்கத்திலுத் உணர்சிவயப்படுபவர்கள் இருக்கிரார்கள் அல்லவா?
கருத்துரையிடுக