'அதே சென்னை உயர்நீதி மன்றம், அதே வழக்கறிஞர் சங்கரசுப்பு' எல்லாம் ஏற்கனவே பார்த்த கதையாகவே இருக்கிறதே!
"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தாமினி நீதிபதிகளைப் பார்த்து தெரிவித்தார். இதற்கு சந்துருவின் வக்கீல் சங்கரசுப்பு எதிர்ப்பு தெரிவித்தார். தாமினி மன அழுத்தத்தில் இருக்கிறார். முன்பு காதலனுடன் செல்ல சம்மதித்தவர் இப்போது மாற்றிச் சொல்கிறார். இதற்கு பெற்றோர் நிர்ப்பந்தமே காரணம். 2 வார காலத்தில் அவரது மனதை மாற்றி விட்டார்கள் என்றார்.
உடனே நீதிபதிகள் குறுக்கிட்டு, "தாமினி மேஜர் பெண். அவர் பெற்றோருடன் செல்ல சம்மதித்து இருக்கிறார். அவர் சொல்வதைத்தான் எங்களால் ஏற்க முடியும்'' என்றனர். தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், தாமினிக்கு இன்னும் திருமணம் நடை பெறவில்லை. அதற்கு முன் அவர் மீது உரிமை கொண்டாட முடியாது. திருமணம் முடிந்து இருந்தால் கணவருடன் செல்வது பற்றி முடிவு எடுக்கலாம். திருமணம் ஆகாத பெண் பெற்றோருடன் செல்ல முடிவு எடுக்கும் போது அதைத்தான் கோர்ட்டு ஏற்க முடியும் என்றனர்.
வக்கீல் சங்கரசுப்பு வாதாடுகையில், தாமினி மனக்குழப்பத்தில் இருக்கிறார். அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்பலாம். 2 வாரமாக அவரை சட்ட விரோதமாக காவலில் வைத்து இருந்தனர். சினிமா பிரமுகர்கள் போய்பார்த்து அவர் மனதை மாற்றி விட்டார்கள் என்றார். உடனே நீதிபதிகள், எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ட பின்புதான் தலைமை ஆசிரியையுடன் அனுப்ப உத்தரவிட்டோம். இப்போது எங்கள் மீதே குற்றம் சுமத்துகிறீர்களா? என்று வக்கீலைப் பார்த்து கேட்டனர்."
நாடகக் காதல் - பகுதி 2
மனதை மாற்றி விட்டார்கள், திருமணம் ஆகாத பெண், மனநல பரிசோதனைக்கு அனுப்பலாம் - இந்த வாதங்களை எல்லாம் ஏற்கனவே ஒருமுறை இதே நீதிமன்றத்தில் பார்த்திருக்கிறோம்.
மகாபாரதக் கதைகளையும் இராமாயணக் கதைகளையும் சலிக்காமல் பலமுறைக் கேட்டிருக்கிறோம். இனி நாடகக் காதல் கதைகளையும் மீண்டும் மீண்டும் கேட்க நேரிடும் போலிருக்கிறது.
(மாலைமலர் செய்தி) "இயக்குனர் சேரன் மகள் தாமினி பெற்றோருடன் செல்ல சம்மதம்"
பின் இணைப்பு: சந்துரு தாயாரின் மனு தள்ளுபடி
"நீதிபதிகள் தாமினியை அருகில் அழைத்து அவரது விருப்பத்தை கேட்டறிந்தனர். அப்போது தனது தந்தை சேரன், தாய் செல்வராணியிடம் செல்வதாக அவர் விருப்பம் தெரிவித்தார். அவரது விருப்பத்தை நீதிபதிகள் வெளிப்படையாக தெரிவித்தனர். இதற்கு சந்துருவின் வழக்கறிஞர் சங்கரசுப்பு எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்.
இரண்டு முறை நடந்த வழக்கு விசாரணையின் போது காதலன் சந்துருவிடன் தான் செல்வேன் என கூறிய தாமினி, தற்போது பெற்றோரிடம் செல்ல விருப்பம் தெரிவித்து இருப்பதில் ஏதோ சதி நடந்துள்ளது. அவரை யாரோ மூளைச்சலவை செய்துள்ளனர் என்று வாதாடினார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், தாமனி மைனர் பெண் கிடையாது. அவர் மேஜரானவர், யாரிடம் செல்ல வேண்டும் என முடிவு எடுக்க அவருக்கு முழு உரிமை உண்டு. அதில் யாரும் தலையிட முடியாது. இருப்பினும் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கிறோம் என்று தெரிவித்தனர்.
ஆனால் சேரன் மகள் பிற்பகலுக்குப் பிறகு நடந்த விசாரணையிலும் தந்தையுடன் செல்லவே விருப்பம் தெரிவித்தார். இதனை வாக்குமூலமாகவும் அளித்தார். எனவே சந்துரு தாயாரின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்."
இதுதானே இதற்கு முன்பு 'திவ்யா' வழக்கிலும் நடந்தது.
அன்று போராடியவர்கள் இன்று எங்கே?
தொடர்புடைய சுட்டிகள்:
1. நாடகக் காதல் இருக்கிறது என்கிறார்கள் சேரனும் அமீரும்: உண்மைக் காதல் ஆதரவாளர்கள் எங்கே?
2. மகளின் காதலை சேரன் தடுக்கலாமா? முற்போக்கு வேடதாரிகள் மவுனம் சாதிப்பது ஏன்?
3. சேரன் மகள் காதலும் புதிய தலைமுறையும்: அதிமேதாவி மனுஷ்யப்புத்திரன் அரைவேக்காடு என நிரூபித்தார்!
4. சேரன் மகள் தாமினி: காதல் திருமணங்களுக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும்
5. ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம்

"இன்று என் பொக்கிஷம் திரும்பி வரும் நாள்.... அவள் இந்த உலகிற்கு வந்த நாளில் எவ்வளவு பயமும் பதட்டமும் இருந்ததோ அதைவிட 100 மடங்கு இன்று.... இன்று நான் காணப்போகும் வெற்றி எனக்கானது மட்டும் அல்ல... இவ்வுலகில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்குமானது...."
- சேரன் அளித்த பேட்டி (21.08.2013 நீதிமன்ற நிகழ்வுக்கு முன்பு)
1. நாடகக் காதல் இருக்கிறது என்கிறார்கள் சேரனும் அமீரும்: உண்மைக் காதல் ஆதரவாளர்கள் எங்கே?
2. மகளின் காதலை சேரன் தடுக்கலாமா? முற்போக்கு வேடதாரிகள் மவுனம் சாதிப்பது ஏன்?
3. சேரன் மகள் காதலும் புதிய தலைமுறையும்: அதிமேதாவி மனுஷ்யப்புத்திரன் அரைவேக்காடு என நிரூபித்தார்!
4. சேரன் மகள் தாமினி: காதல் திருமணங்களுக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும்
5. ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம்
2 கருத்துகள்:
//*வக்கீல் சங்கரசுப்பு வாதாடுகையில், தாமினி மனக்குழப்பத்தில் இருக்கிறார். அவரை மனநல பரிசோதனைக்கு அனுப்பலாம்.* 2 வாரமாக அவரை சட்ட விரோதமாக காவலில் வைத்து இருந்தனர். சினிமா பிரமுகர்கள் போய்பார்த்து அவர் மனதை மாற்றி விட்டார்கள் என்றார். உடனே நீதிபதிகள், எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ட பின்புதான் தலைமை ஆசிரியையுடன் அனுப்ப உத்தரவிட்டோம். இப்போது எங்கள் மீதே குற்றம் சுமத்துகிறீர்களா? என்று வக்கீலைப் பார்த்து கேட்டனர்."// மாப்பிள்ள செத்தாலென்ன பொண்னு செத்தாலென்ன நமக்கு வரவேன்டியது பூமாலைக்கான காசுதன் எனும் பழமொழி இங்கு எப்படி பொருந்துதுனு தெரியள!
மொக்க கட்டுரை,
ஒரு பெண்ணை பெற்று பார், அதன் வலி தெரியும்.. சும்மா எங்கோ ஒரு இடத்தில இருந்து சொல்வது சரி இல்லை என்று நினைக்கிறேன்..
யாரு இந்த சேவ் தமிழ்சு...? :( பேசாம கட்சியை கலைசிடுங்க..,
(ஒரு வேலை சந்துருவின் ஆட்களாக இருப்பார்களோ...,!!!)
கருத்துரையிடுக