Pages

வியாழன், ஆகஸ்ட் 15, 2013

ஆதலால் காதல் செய்வீர்: அற்புதமான திரைக்காவியம்

இது காதலை ஆதரிக்கும் படமென்றோ அல்லது எதிர்க்கும் படமென்றோ வகைப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. இது உண்மைக் காதலைச் சொல்லும் படமா அல்லது நாடகக் காதலைச் சொல்லும் படமா என்றும் தெரியவில்லை. படத்தின் கிளைமாக்ஸ் என்பது சுபமான முடிவா அல்லது டிராஜடி முடிவா என்று கூட தெரியவில்லை.

ஆனால், காதலிக்க நினைப்பவர்கள், காதலிப்பவர்கள், காதலிப்போரின் நண்பர்கள், காதலிப்போரின் பெற்றோர்கள், காதலை ஆதரிப்போர், காதலை எதிர்ப்போர் - என எல்லோரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய திரைப்படம் என்று கட்டாயமாகச் சொல்லலாம்.
படிக்கும் வயதில் இருவர் காதலில் வீழ்கின்றனர், நண்பர்கள் முழு மனதோடு உதவுகின்றனர், அவர்களது காதலை குடும்பத்தினர் எதிர்க்கின்றனர், பின்னர் ஆதரிக்கின்றனர், இவர்களின் காதலில் சாதி தலையிடுகிறது, அரசியல்வாதிகள் தலையிடுகின்றனர் - பின்னர் இவர்களின் காதல் என்ன ஆனது என்பதைச் சுற்றிவளைக்காமல், சுருக்கமாகவேக் கூறி படத்தை முடித்து விடுகின்றனர்.

ஆனால், காதல் என்பது இரண்டு தனி மனிதர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை மட்டுமல்ல, அதில் அவர்களது குடும்பத்தினர், சொந்தக்காரர்கள் என ஏராளமான உயிர்களின் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை பொட்டில் அடித்தாற்போல நன்றாக உறைக்கும்படி சொல்கிறார்கள்.

இது போரடிக்கும் படம் அல்ல. விருவிருப்பான படம்தான். கட்டாயம் பாருங்கள்.

3 கருத்துகள்:

Unknown சொன்னது…

Kadaisiya anda kulandai ninaca pageer nu erukku sir

kamal சொன்னது…

உணர்ச்சியில் உருவெடுத்து
ஆசையில் அடியெடுத்து
வாழயெத்தனித்து
வாழ்வு இழந்து தத்தளிக்கும்
வாழ்கையின் வாசகன்
வசந்தத்தின் யாசகன் அந்தப்பிஞ்சு
இந்த வையகம் யாவுமே
அவனுக்கு நஞ்சு.
-- புனிதன்

rajah சொன்னது…

படம் மிக அருமை,இன்றைய சூழலில் மிக தேவையான படம்