Pages

வியாழன், ஆகஸ்ட் 08, 2013

நாடகக் காதல் இருக்கிறது என்கிறார்கள் சேரனும் அமீரும்: உண்மைக் காதல் ஆதரவாளர்கள் எங்கே?

சந்துரு - தாமினி காதல் விவகாரம் ஒரு 'நாடகக் காதல்' என்கிறார் இயக்குநர் அமீர். இந்தக் கருத்தை ஒத்துக்கொள்கிறார்களா? என்று 'சுப. வீரபாண்டியன், ஞானி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், தமிழருவி மணியன், அ. மார்கஸ், மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், அறிவுமதி, ஷாநவாஸ், மே 17 இயக்கம், சேவ் தமிழ்ள்சு இயக்கம், பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள்' ஆகியோர் நேர்மையாக தெளிவுபடுத்த வேண்டும்.

இயக்குநர் அமீர் கூறும் நாடகக் காதல்

"காதலில் புது டெக்னிக்: ஒரு பெண் இருக்கும் வீட்டில், சந்துரு காதல் வலை விரிப்பதில்லை. இரண்டு பெண்கள் உள்ள வீட்டில், இரண்டாவது பெண்ணிற்கு காதல் வலை விரிப்பது, நூதனமாக பிரச்னை ஏற்படுத்துவது, பெண்ணின் வீட்டாருக்கு காதல் விவகாரம் தெரிய வைப்பது, அவர்கள், முதல் பெண் இருக்கும் போது, இரண்டாவது பெண்ணிற்கு எப்படி திருமணம் செய்து வைப்பது என, தவிப்பது. இந்த தவிப்பை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி, சந்துரு, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதும் நடந்துள்ளது. சென்னையில் ஒரு பெண்ணை, இரண்டு வருடங்களுக்கு முன் காதல் வலையில் வீழ்த்தி, விலகிச் செல்ல, டீல் பேசி, 3 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளான்.
அமீர் காட்டிய ஆதாரம்
பணம் பறிப்பு: சந்துருவை வைத்து அவனது குடும்பத்தினர், ஐந்து வீடுகளில் பணம் பறிக்கும் முயற்சிகளும் நடந்துள்ளன. காதலிப்பதாக நடித்து, சென்னையில் ஒரு பெண்ணிடம் பணம் பறிக்கப்பட்டுள்ளது. சந்துருவின் சகோதரி பத்மா, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில், முகமது இலியாஸ் என்பவரை காதலிப்பதாக நடித்து, அவரது மனைவி இருக்கும்போது, அவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவரிடம் பணம் பறிப்பதற்காக, மதம் மாறி, பத்மாவும், சந்துருவும், பாத்திமா, அப்துல் என பெயர் மாற்றிக் கொண்டுள்ளனர். இவரது குடும்பத்தினரும் மதம் மாறியுள்ளதாக, பெயர்களை மாற்றியுள்ளனர். இலியாசை ஏமாற்றி, 300 சவரன் நகை, 30 லட்சம் ரூபாய் பணத்தையும் அபகரித்துள்ளனர்.

சந்துரு, முஸ்லிமாக மாறிய பின், மானாமதுரையில் வசதியான முஸ்லிம் வீட்டு பெண்ணை காதலித்து, பணம் பறிக்க முயன்றதால், அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டான்." - என்கிறார் இயக்குநர் அமீர். (இங்கே காண்க: தாமினியின் காதலன் சந்துருவின் குடும்பம் ஒரு மோசடி கும்பல்: இயக்குனர் அமீர் ஆத்திரம்)

இந்நிலையில், இளவரசன் - திவ்யா காதல் விவகாரத்தில் விஸ்வரூபம் எடுத்தவர்கள், இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாத அளவுக்கு தலைமறைவாக இருக்கின்றனர். 
'காதலைக் கொண்டாடுவோம்' என ஞானி, மனுஷ்யப்புத்திரன், கவின்மலர் ஒருங்கிணைத்த 'வன்மத்தில் சிறைபடுமோ காதல்' கவியரங்க அழைப்பிதழில்.

சுப. வீரபாண்டியன், ஞானி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், தமிழருவி மணியன், அ. மார்கஸ், மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், அறிவுமதி, ஷாநவாஸ், மே 17 இயக்கம், சேவ் தமிழ்ள்சு இயக்கம், பெரியாரிய இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள் என "இளவரசன் - திவ்யா" விவகாரத்தில் 'சம்மனே இல்லாமல் ஆஜரான' எல்லோரும் சந்துரு - தாமினிக்காகவும் வெளியே வந்து போராடுவதுதான் நியாயமாக இருக்கும்.

இதுவும் ஒரு சாதி மறுப்பு காதல் திருமணம்தான்! 

சந்துரு - தாமினி: இதுவும் ஒரு காதல் திருமணம்தான், இதுவும் ஒரு சாதி மறுப்புத் திருமணம்தான், இங்கேயும் தந்தையும் தாயும் வயது வந்த பெண்ணின் காதலுக்கு குறுக்கே நிற்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், திருமண வயது இல்லாததால் இளவரசன் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய முடியவில்லை. சந்துருவுக்கு அந்தத் தடையும் இல்லை. 

இளவரசனுக்கு சுய வருமானம் இல்லை, ஆனால், சந்துரு சம்பாதிக்கிறார். இளவரசனின் வழக்குரைஞர் சங்கர சுப்புதான் சந்துருவுக்காகவும் வழக்காடுகிறார்.

காதல் பஞ்சாயத்துக்கு தடைக் கேட்டவர்கள் எங்கே?

'கௌரவக் கொலையைத் தடுக்க சட்டம் இயற்று' என்கிற பெயரில் முற்போக்குக் கூட்டத்தினர் ஒரு கருத்தரங்கம் நடத்தினர். மனுஷ்யப்புத்திரன், கவின்மலர், சுப. வீரபாண்டியன், ஞானி, இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பெரியாரிய இயக்கங்கள் பங்கேற்பதாகக் கூறப்பட்ட இக்கூட்டத்தில் 'கௌரவக் கொலை தடைச் சட்டம் இயற்றப்பட வேண்டும்' எனப்பேசினர்.
இந்திய அரசின் சட்ட ஆணையம் 'கௌரவக் கொலை தடைச் சட்டம்' இயற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை வைத்துள்ளது. இச்சட்டத்தினை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியே மேற்கண்ட கூட்டம் நடத்தப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே, திருமண வயது வந்தவர்களின் திருமணத்தில் மற்றவர்கள் யாரும் பஞ்சாயத்து செய்யக் கூடாது. அவ்வாறு பஞ்சாயத்து செய்யும் நோக்கில் யாரும் ஒன்று கூடக் கூடாது' என்பதுதான்.  

ஆனால், இந்த சட்ட முன்வரைவில் கூறப்பட்டுள்ளதற்கு நேர்மாறாக, சந்துரு - தாமினி காதல் விவகாரத்தில் பஞ்சாயத்து செய்ய திரையுலகினர் ஒன்று கூடியுள்ளனர்.
'அடுத்தவர்கள் காதலிலோ, கல்யாணத்திலோ யாரும் பஞ்சாயத்து செய்யக் கூடாது' என்பதற்காக சட்டம் வேண்டும் என்று போராடிய அதே முற்போக்குக் கூட்டம் - இப்போது சந்துரு - தாமினி காதல் விவகாரத்தில் திரையுலகினர் ஒன்று கூடி பஞ்சாயத்து செய்வதைக் கள்ள மவுனத்துடன் வேடிக்கைப் பார்ப்பது ஏன்?

தர்மபுரிக்கு ஒரு நியாயம் - சென்னைக்கு வேறொரு நியாயமா?

சென்னையில் மிக வலிமை வாய்ந்த இரண்டு சாதிகள் இருக்கின்றன. ஒன்று சினிமா சாதி, இன்னொன்று பத்திரிகை சாதி. இந்த இரண்டு சாதிகளும் இப்போது இயக்குநர் சேரனுக்கு பின்னால் அணிதிரண்டு நிற்கின்றன. இதைக் கண்டுதான் முற்போக்கு வேடதாரிக் கூட்டம் மிரண்டுபோய் தலைமறைவாக நிற்கிறது.
தர்மபுரி மாவட்டத்தின் அப்பாவிக் கிராம மக்கள், படிக்காதவர்கள் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் மோதலில் ஈடுபட்டல் - அதனை உலகமகாக் கலவரமாக இட்டுக்கட்டிப் பேசலாம், மாபெரும் சதி என வர்ணிக்கலாம், சாதிவெறி என்று சாடலாம். 

அதுவே, சென்னை நகரத்தின் நவநாகரீக சினிமாக் கூட்டத்தினர் என்றால், அதை எதிர்த்து வாய்த்திறக்க முடியுமா? எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு மௌன விரதம் இருந்துதானே ஆகவேண்டும்!

தொடர்புடைய சுட்டிகள்:

1. மகளின் காதலை சேரன் தடுக்கலாமா? முற்போக்கு வேடதாரிகள் மவுனம் சாதிப்பது ஏன்?

2. சேரன் மகள் காதலும் புதிய தலைமுறையும்: அதிமேதாவி மனுஷ்யப்புத்திரன் அரைவேக்காடு என நிரூபித்தார்!

3. சேரன்  மகள் தாமினி: காதல் திருமணங்களுக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண்டும் 

4. கனிமொழியின் சாதிஒழிப்பு நாடகமும் அம்மணமான புர்ச்சியாளர்களும்: வன்னியர் ஒழிப்பு மட்டும்தான் சாதிஒழிப்பா? 

5. கௌரவக்கொலை தடுப்புச்சட்டமும் இளவரசனும்: மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் பித்தலாட்டக் கூட்டம்!

9 கருத்துகள்:

Karthi Keyan R சொன்னது…

super.......

குலசேகரன் சொன்னது…

//நேர்மையாக தெளிவுபடுத்த வேண்டும்.//

I shall.

நான் ஒரு பாமரன். அப்பிரபலங்களில் ஒருவனnறு. என்னை உங்களுக்குக் கூடத் தெரியாது. ஆனால் என் கருத்துக்க்ளில் பல அவர்கள் கருத்துக்களோடு ஒத்து வருவதால் பதில் சொல்ல முடியும். அதாவது நீங்கள் விரும்பிய தெளிவைச் சொல்ல முடியும்.

1. இளவரசனுக்கு வாதாடிய வக்கீல்தான் சந்துவுவுக்கு என்று நீங்கள் சொன்னதைப்பற்றி..

வக்கீல்கள் யாருக்காகவும் வாதாடலாம். இஃது அவர்கள் தொழில் தருமம. எப்படி மருத்துவர்கள் ஒரு கொடியவனுக்கு சிகிச்சையளித்து அவனுயிரைக்காப்பாற்றுவதுதான் அவரின் முதல் தருமமமோ அப்படி.

வக்கீல் தொழிலில் அருள் இருப்பதாக நினைவு. வக்கீல் ஒருவர் இன்னொரு வக்கீலை ஒரு குறிப்பிட்ட வழக்கைக் கையாள்வதை விமர்சித்தல் நான் எங்குமே காணாத செயல்.

2. நான் ஏற்கனவே சொன்னதுதான். இதுவரை நாம் கேட்டது சேரன், அவர் மனைவி, மற்றும் அவர் சஹாக்களான அமீர் போன்றவர்களின் வாக்குமூலங்களே. சந்துரு என்ன சொன்னார்? அவர் அக்காள் என்ன சொன்னார்? என்று இதுவரை நாமறியோம்.

அடுத்த கட்சிக்காரர் என்ன சொல்லவிருக்கிறார் என்பது தெரியுமுன்பே அவரை தூக்கிலிடமுடியுமா அல்லது அவர் தவறென தீர்ப்பு வழங்க முடியுமா என வக்கீல் தொழில் புரியும் அருளைக்கேட்கிறென். ஒருவேளை சந்துருவின் பக்கத்தைக்கேட்டபின்னர் தீர்ப்பு சேரனுக்கோ அமீருக்கோ சாதகமாக வரின் நான் வரவேற்பேன்.

Principles of natural justice demand, dear Mr Arul, that both sides should be given a fair hearing first and foremost. Have they been given ? at least in your blog? Have you given your readers an opportunity to know the other side? But you have embarked upon a mission of vilifiying the other side before knowing whether they are innocent or guilty? Has your legal education taught you to do that? If it is, then, please tear off your law degree and go back to law college to read again? Your education is defective if you pronounce people guilty hearing their enemies only!

3. காதலைப்பற்றி. நாடகக்காதலா உண்மைக்காதலா என தெளிவுபடுத்த வேண்டுமில்லையா?

சொல்கிறேன்.

காதல் என்ற தமிழ்ச்சொல் குறிப்பது யாதெனில் -

தாய‌மையடையும் உடல் பக்குவம‌டைந்த ஒரு பெண்ணிற்கும் தந்தை பருவத்தை அடையும் உடல் பக்குவமடைந்த‌ ஆணுக்குமிடையேதான்.

மண வயதென்பது இங்கு வேறே. அதாவது மணவயது பெண்ணுக்கு 21 என்றால் அவள் காதல் வயப்படுவது 18லேகூட தொடங்கலாம். மணத்தை 21ல் செய்து கொள்ளலாம்.

அதன்படி, இருபாலாருக்குமிடையே நடக்கும் அல்லது மலரும் ஒரு செயலை உண்மைக்காதலா நாடகக்காதலா என்று நானோ அருளோ ஞானியோ சேரனோ மனுஷயபுத்திரனோ அமீரோ சொல்லமுடியுமா? அறிய முடியுமா?

எனக்கும் என் மனைவிக்குமிடையே உள்ள காதல் உண்மைக்காதலா போலிக்காதலா என்பதை எங்களிருவர் அல்லது எங்களில் ஒருவரைத்தவிர மாற்றாருக்கு எப்படித்தெரியும்/ எப்படிச்சொல்ல முடியும்?

இப்போது அருள் தெளிவுபடுத்தலாம். நன்றி.

gnani சொன்னது…

தற்போது நான் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தில் ஜெனிவாவில் உள்ளேன். செப்டம்பர் 16தான் திரும்புவேன். எனவே விரிவாகக் கருத்து எழுத இயலவில்லை. ஏற்கனவே பேஸ்புக்கில் இரு நாட்கள் முன்பு சொன்னது இதோ: 1. தமிழ்ச் சமூகம் முதலில் குடும்பம் எனற அமைப்பு, அதன் அன்பு, அதிகாரம் அனைத்தையும் விவாதித்து மறுபரிசீலனைக்கு உட்படுத்தினாலொழிய காதல், பாசம்,செக்ஸ்,எதையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பே இல்லையென்றே தோன்றுகிறது .2'தமிழ்ச் சூழலில் காதல் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் எல்லா அணிகளிலும் எல்லா வயதினரிலும் இருக்கிறார்கள் என்பது மட்டுமே ஜெனிவாவில் இருக்கும் எனக்கு இப்போதைக்குப் புரிகிறது !3' No comments as of now. Will have to study the issue on coming there in septr. Looks like both are wrong as a first impression.

kamal சொன்னது…

அருள் உங்கள் ஊசி மிகமிக மெல்லியது .வாழைபழத்தில் ஊசிமாதிரியே உங்களின் புர்ஜிகளின் இதயம்வரை இரங்கிவிட்டது. உங்கள் கவளையெல்லாம் பந்திக்கு முந்துவதுபோல் எந்த முண்ணனியும் சந்திக்கு வந்து சத்தம் ஏதும் போடவில்லையே என்ற வருத்தம் நல்ல வருத்தம்....! (வேண்டும் நல்லதோர் திருத்தம்) இருதிசையிலிருந்தும்

விஜய் சொன்னது…

நீங்கள் நாடகக் காதலை மட்டும் எதிர்த்திருந்தால் கண்டிப்பாக எல்லா மக்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைத்திருக்கும். நாடகக் காதல் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு எதிராக மற்ற சாதி சங்கங்களை எல்லாம் அணி திரட்டியது தான் உங்கள் மேல் வெறுப்பை வரவழைக்கிறது. இந்த நாடகக் காதலும் அந்த குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் செய்ததா?

kamal சொன்னது…

அருள் சொல்லுகிரதொனிகூட நாடகக்காதலல்லாத...! உண்மை காதலுக் ஏன் திரைக்கதை, வசனம், இயக்கமெல்லாம் ஏன்னென்று வியக்கிரார். (அப்படியா அருள்)

kamal சொன்னது…

// 1. இளவரசனுக்கு வாதாடிய வக்கீல்தான் சந்துவுவுக்கு என்று நீங்கள் சொன்னதைப்பற்றி..

வக்கீல்கள் யாருக்காகவும் வாதாடலாம். இஃது அவர்கள் தொழில் தருமம. எப்படி மருத்துவர்கள் ஒரு கொடியவனுக்கு சிகிச்சையளித்து அவனுயிரைக்காப்பாற்றுவதுதான் அவரின் முதல் தருமமமோ அப்படி.

வக்கீல் தொழிலில் அருள் இருப்பதாக நினைவு. வக்கீல் ஒருவர் இன்னொரு வக்கீலை ஒரு குறிப்பிட்ட வழக்கைக் கையாள்வதை விமர்சித்தல் நான் எங்குமே காணாத செயல். //

குலசேகரன் சந்ரு - தாமினி திருமணம் ஏன் தாமதிக்கிரது? ஒருவேலை சேரன் அஃனிகுலத்தோன்றலாய்யில்லாதுபோனதோ?

பெயரில்லா சொன்னது…

உண்மையில் காதல் என்ற பெயரில் ஒரு சிறு பெண்ணை கோர்ட் வரை படியேற வைத்திருக்கின்றனர்.சேரன் அப்பா என்ற பாத்திரத்திற்கு சிறந்தவர்தான்.தவமாய் தவமிருந்து எடுத்தவர்தான்.சேரன் போன்ற இனிமையான தந்தைக்கு இந்த வலி அவசியமில்லை.நம்பிக்கெட்டுள்ளார்.பெண்ணுரிமை சுதந்திரம் என்பது தவறாக அறிவாளிகளால் உணரப்பட்டு ஆணாதிக்கவாதி என்று பெயர் சூட்டுவார்களே என்று எண்ணி தனது பெண்ணிற்கு சொல்லித்தர வேண்டிய ஒழுக்க நெறி வரையறைகளை போதிக்கக் கூட தவறுவதே இது போன்ற துன்பங்களுக்கு காரணம்.பெண்கள் விசயத்தில் இஸ்லாமியர்கள் பின்பற்றும் ஒழுக்க நெறிகளை அனைவரும் பின்பற்றினால் மட்டுமே அறியாமல் காதல்,புத்திக்கு அறிந்து காதல் என்று பலவாறாக விசஜந்துகளால் பெண்கள் வஞ்சிக்கப்படுவதும்,பெற்றோர் குமுறி துடிப்பதும் நிற்கும்.பள்ளிக்குப் போகும் பெண் பிள்ளைகளுக்கு செல்போன் தேவையா?இதன் மூலமாகவே அநேக வில்லங்கங்கள் பெண்பிள்ளைகளுக்கு வருகின்றன.இனி தேவையானது பெற்றோரின் விழிப்புணர்வே.நாடகக் காதல் இருக்கின்றது உண்மை தான்.
தமிழகமெங்கும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகிறது.பணம் பறிக்கவும்,வன்மம் தீர்த்துக் கொள்ளவும் வேண்டி அங்கங்கு அன்றாடம் நடந்துதான் வருகிறது.வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று நினைக்கும் பெற்றோர் சட்டத்தின் உதவியை நாடுவதில்லை.அதுவே நாடகக் காதல் பட்டறை நடத்துவோருக்கு வசதியாகப் போய் விட்டது.

Unknown சொன்னது…

Vijay stupid your Commands is foolishness dhivya father also a father of a girl and charan also a father of a girl. here how the cast came do you know about it. why you people need to pull ramadass and PMK in this. if every vanniyar people listen to ramadass since 60 years tamil nadu will ruled by vanniyar people only. try to know about fraud ilavarasan full love story and then speek or commands dont read fraud news papers and TV channels because all news are fake for example they announced acteress kanaga was died due to cancer after few days without any shame they are taking interview with kanaga.