Pages

புதன், பிப்ரவரி 24, 2016

விஜயகாந்த் பேச்சு: 001 = 100 தமிழக ஊடகங்களின் அழிச்சாட்டியம்!

உலகை மாற்றிய பேச்சுகள் சில உள்ளன. மார்ட்டின் லூதர் கிங்கின் "எனக்கொரு கனவு இருக்கிறது", சாக்கரட்டீசின் "விடைபெரும் நேரம் வந்துவிட்டது", ஜவகர்லால் நேருவின் "உலகமே உறங்கும் நள்ளிரவு வேளையில் இந்தியா விழித்துள்ளது" சுதந்திரநாள் பேச்சு - என்பன வரலாற்று சிறப்பு மிக்கவை. 

உலகை மாற்றிய பேச்சுகளுக்கு இணையாக - தமிழக அரசியல் வரலாற்றை மாற்றிய பேச்சாக - காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த பேசிய பேச்சினை, தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டன. அப்படி அந்த 'வரலாற்று சிறப்பு மிக்க பேச்சில் என்னதான் இருக்கிறது என்பதை கீழே உள்ள - ஜூனியர் விகடன் கட்டுரையில் காண்க:

குறிப்பு: விஜயகாந்த் தனது பேச்சின் இடையே, புதிய தலைமுறை தொலைக்காட்சி, தந்தி தொலைக்காட்சி, தினமலர் நாளிதழ், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை ஆகியவற்றை விமர்சித்தார். அந்தப் பெயர்கள் ஜூனியர் விகடனின் கட்டுரையில் தவிர்க்கப்பட்டுள்ளன.

இனி ஜூனியர் விகடனின் கட்டுரை (படங்கள்: ராவணன் கார்ட்டூன்ஸ்):

டிக்கு… டிக்கு… டிக்குனு… டக்கு… டக்கு… டக்குனு!

எச்சரிக்கை: காஞ்சிபுரம் மாநாட்டில் தே.மு.தி.க-வின் தேர்தல் பாதையை அறிவிக்கப்போவதாகச் சொன்னார் விஜயகாந்த். அவர் பேச்சு அப்படியே… அவர் பேசிய மாதிரியே எழுதினால் இப்படித்தான் வருகிறது. வாசகர்கள் அவசர சூழ்நிலையில் படிக்க வேண்டாம். கவனமாகப் படிக்கவும்.

டக்கு… டக்கு… டக்குனு!

‘‘பேரன்பு கொண்ட பெரியோர்களே… தாய்​மார்களே! அன்புகொண்ட சகோதர, சகோதரிகளே! என் உயிரினும் மேலோன அன்பு நெஞ்சங்களே! காஞ்சி குலுங்கட்டும் காலம் கனியட்டும்! ஆட்சி மலரட்டும்! காஞ்சி குலுங்கிருச்சு. அதனாலதான்… எந்தப் பக்கம் திரும்பினாலும் ஜெயலலிதா. காஞ்சி மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன் அவர்களுக்கும் இந்த மாநாட்டை குறைந்த நாட்களில் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், அனகை முருகேசன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வர்ற வழியெல்லாம் மக்கள் தரையில உட்கார்ந்து சாப்பிடுறாங்க. அவங்க எதுக்காக தரையில உட்காரணும்? விதியா? இல்லை விதிதான். ஏனென்றால், விஜயகாந்த்தைப் பார்க்க வேண்டுமே! விஜயகாந்த்தைப் பார்த்திருக்கோம்.

தலைவர் விஜயகாந்த்தைக் கேட்டிருக்கோம். எதற்காகச் செல்கிறீர்கள்? செல்வோம்யா உனக்கென்னயா அப்படின்னு நம்ம பாட்டுக்கு வந்துகிட்டு இருப்போம். அதைப் பார்த்துப் பார்த்து என் மனசெல்லாம் எங்கு தெரியுமா பறந்துச்சு? எங்கோ பறந்துச்சு. ஏனென்றால், நான் உங்களையெல்லாம் பார்க்க வர்றேன்னு நினைக்கல. ஏன் அப்படி என்ன நடந்தது? அவங்கள பார்த்து கையெல்லாம் ஆட்டுனேன். அதை நீங்க கவனிக்கல. ஏன்னா நான் வருவேன்னு உங்களுக்குத் தெரியாது. எந்த வண்டியில வருவேன்னு உங்களுக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா நீங்களும் கையாட்டி இருப்பீங்க பதிலுக்கு. நீங்க கையை ஆட்டி இருப்பீங்க… பதிலுக்கு டங்கு… டக்கு, டங்கு… டக்கு, டங்கு… டக்குன்னு ஒவ்வொருத்​தரும் கொட்டு அடிச்சிகிட்டிருந்தீங்களே. அதை​யெல்லாம் பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்திச்சு. அவங்கல்லாம் என்னை விட்டுருப்​பீங்களா? நீங்களும் டங்கு… டக்கு… டங்கு… டக்குன்னு, நானும் உங்களோட சேர்ந்து ஆடிக்கிட்டுதான் வந்திருப்பேன். ஆடிகிட்டு இவ்வளவு தூரமா வந்துகிட்டு இருக்க முடியும்? இவ்வளவு தூரம் வந்துகிட்டு இருக்கணும். என்ன பண்றது?

என்னோட தொண்டர்க்கு விஜயகாந்த் தலைவன். தலைவன் எவ்வழியோ அவ்வழி தொண்டன். தொண்டன் எவ்வழியோ அவ்வழியே தலைவன். ஏன் வரக் கூடாது என்பதை நீங்கள்தான் மாற்றி இருக்கிறீர்கள். மாற்றிக்காட்டி காஞ்சி குலுங்கட்டும்ன்னு சொன்னா… காஞ்சி குலுங்கிடுச்சே! இதற்கு மேல என்ன வேணும்? ஏன்னா…. என் தொண்டர்களைப் பற்றி எனக்குத் தெரியும்.

பார்த்தசாரதி அவர்கள் சொன்னபடி, தலைமை கழகச் செயலாளர் பார்த்தசாரதி இங்க உட்கார்ந்திருக்கார். சொன்னார் இல்ல. வெட்டிவா என்று சொன்னால், தலையைக் கொண்டுவந்து விடுவார்கள் என் தொண்டர்கள். அப்படிப்பட்ட தொண்டர்களைப் படைத்த நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? நாங்க அப்படிப்பட்ட தொண்டர்கள். ஆனா, ராணுவம்… ராணுவம் மாதிரி இருக்கக்கூடிய என் தொண்டர்கள், நான் சொல்றது அனைத்தையும் கேட்பான்… கட்டுப்படுவான். உட்காருன்னா உட்காருவான். எழுந்திருன்னா எழுந்திருப்பான். அடின்னு சொன்னா அடிப்பாங்க. உதைன்னு சொன்னா உதைப்பாங்க. யாரு சாப்பிட கூப்பிட்​டாலும் சாப்பிட மாட்டாங்க. அப்படி​பட்டவங்கதான் என்னுடைய தொண்டர்கள். ஏன் இதைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்!
‘‘என் குடும்பத்தைப் பத்திச் சொல்றேன்!”

என்னுடைய தொண்டர்களைப் பத்தி நான் அடிக்கடி பெருமையா என் மனைவிகிட்ட சொல்லு​வேன். என் பசங்ககிட்டயும் சொல்லுவேன். தெரியாது… தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்… என் மனைவிக்கு நன்றாகத் தெரியும். என் பசங்களுக்கு சொல்லிச் சொல்லி வளர்க்கறதுதானே?

பசங்க உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லிடுறேன். ஒருத்தன் விஜயபிரபாகரன். இப்பதான் பி.ஆர்க். டெல்லிக்குப் போய்ட்டு இப்பதான் வந்தான். டெல்லியில பி.ஆர்க் படிச்சிட்டு சர்ட்டிபிகேட் வாங்கணும்னு இங்கயும் சர்ட்டிபிகேட் கொடுத்​துட்டாங்க. அங்க போய் எழுதிக் கொடுக்கணும்னு இப்ப எழுதியும் கொடுத்திட்டு வந்திட்டான். இப்பதான் லட்டர் வந்திடுச்சு, அதனால போய் குடுத்தேன்னான்.

அடுத்தது சண்முகப்பாண்டியன். அவன்தான் நடிகர். அந்த சண்முகப்பாண்டியன் ‘தமிழர்’ என்று சொல்லுகின்ற படத்தின் கதாநாயகன். இதற்கு முன்னாடி ‘சகாப்தம்’னு ஒரு படம் வந்துச்சு. அதுல அவன்தான் கதாநாயகன். இதையெல்லாம் ஏன் நான் இங்க சொல்றேன்னு… சொல்லாததுல என் மனைவியின் பெயர் பிரேமலதா. ஏன் இதையெல்லாம் சொல்லணுங்கறதுல, என்னை ஒருத்தரும் சொல்லல. எனக்குக் குடும்பமே உலகம். நான் வாழ்ந்து பணம் சம்பாதிக்கணும்ங்கறதுல எனக்கு ஆசையே கிடையாது. என் ரெண்டு பசங்களும் என்னைக் கண்ணுலயே வச்சு என்னைக் காப்பாத்துவாங்களே. என் பொண்டாட்டி கவலைப்பட. நானும் என்மனைவியும்,  இவ்வளவு கூட்டம் இருக்கே, ஒரு நேரம் நீங்க சோறு… எனக்கு ரொம்ப வேணாம். கொஞ்சம் பழைய சோறும், ஒரு வெங்காயத்தையும் நான் கடிச்சிகிட்டு, நானும் பிரேமலதாவும் போய்கிட்டே இருந்தா போட மாட்டீங்களா சாப்பாடு.

இதைதான்…. இதுதான்… பாருங்க எப்படி கத்துறீங்க. இதுதான் வேணும் உற்சாகத்துக்​காக. ஆனால், பேப்பர்ல எழுதுவாங்க உற்சாகத்துக்கான உண்மையை. என் மனைவி சொல்லிச்சே. ஏன்னா இங்க ஜால்ரா அடிக்​கறாங்க. ஜால்ரா அடிக்கிற பத்திரிகையும், ஊடகங்களும் அதிகம்.

‘‘என்னோட கேள்வி வேற மாதிரி இருக்கும்?”

என்னய்யா ஜெயலலிதா? ஜெயலலிதா ஆட்சியில போன 13 தேர்தலை சந்திச்சுதா இந்த அம்மா?

இதைவிட இவங்க பர்கூர்னு ஒரு தொகுதி. இதுல இவங்க ஜெயிச்சாங்களா? ஏன் தோத்தீங்க. நத்தம்… நத்தம் (சத்தமாகச் சொல்கிறார்). சொல்ல முடியுமா? நீ வந்து எங்களை ஜீரோங்கற. ஆண்ணா அப்படிங்கறதுதான் ஏன் வாயில வருது. ஏன்யான்னு மந்திரி வயசுல அதிகமா இருந்தாலும், என்னைவிட வயசுல அதிகமா இருந்தவர் சொன்னாரு. ஜீரோ சட்டசபைங்கறதால நீங்க தப்பிச்சீங்க. நான் போயிருந்தா நிகழ்ச்சியில, யாரு ஜீரோ? உங்க அம்மா ஜீரோவா? நீ ஜீரோவா? உங்க தலைவி ஜீரோவான்னு நான் கேட்டிருப்பேன்.

நான் சட்டசபைக்குப் போகல. போயிருந்தா என்னுடைய கேள்வி வேறமாதிரி இருக்கும். நீதான் ஜீரோ. 2004 தேர்தல்ல 40 சீட்டுல தி.மு.க வந்துச்சே. அப்ப நீங்கதான் ஜீரோ. யாரை ஜீரோன்னு எங்களைப் பார்த்து ஜீரோங்கறீங்க. போனதடவை 13 இடைத்தேர்தல்ல நீங்க தோத்தீங்களே அது ஜீரோ.

உங்ககிட்ட இருப்பது ஜீரோ பன்னீர்செல்வம்தான். அதே ஜீரோ பன்னீர் செல்வம் இருக்குற வரைக்கும் இந்த நாடும் உருப்படாது. அந்தக் கட்சியும் உருப்படாது. ஏனென்றால் சைபர் ஓ.பன்னீர்செல்வம். ஓ என்பது என்ன? சைபர் என்பது என்ன? ஜீரோ என்பதுதான் சைபர். ‘ஓ’ங்கறது நாம என்ன சொல்வோம்? என்னடா இப்படி போட்டா… முட்டைய வாங்கி வந்திருக்குறன்னு சொல்வோம் இல்லை. கோழி முட்டையிலும் இவங்க லஞ்சம் வாங்கி இருக்காங்க. கொள்ளையடிக்கணும்னா கொள்ளையடி! மக்களைத் திருத்தணும்ங்கண்ணே!”

‘‘டிக்கு… டிக்கு… டிக்குன்னு ஆடுது!”

இதுல வேற சாலை பாதுகாப்பு விழா என்னங்கறது? தெருவுல போற இவர் வண்டியெல்லாம் டிக்கு டிக்கு… டிக்கு… டிக்குன்னு ஆடுது. இந்த வண்டியே வேணாம்னு பழைய வண்டியில போனா, டயர்ல காத்து இருக்குதா? காத்து கரெக்டாதானே வச்சிருக்கேன். ஏன்டா ஆடுதுன்னா ரோடு சரியில்ல. இதுல சாலை பாதுகாப்பு வாரம்னு இந்த அம்மா வச்சிருக்கா? என்னய்யா பாதுகாப்புங்குற… இங்கிருக்குற செல்போன் டிக்கு… டிக்குன்னு குதிச்சு பக்கத்து பாக்கெட்ல போய் செல் விழுதாம். அந்த அளவுக்கு மோசமான சாலையை வச்சுகிட்டு சாலை பாதுகாப்பு விழா.

சரி 20 லட்சம் லிட்டரு, அதாவது 20 லிட்டர் தண்ணி ஃப்ரியா இப்ப குடுக்கறேன்னு ஏழை மக்கள்கிட்ட சொல்றாங்க. இப்ப சுத்திகரிக்கப்பட்ட தண்ணீன்னு, அப்ப நீங்க எங்க போனீங்க. அதை கடைசியிலதான் அறிவிக்க வேண்டுமா? அடுத்த தடவை யார் ஆட்சிக்கு வந்தாலும், இல்ல விஜயகாந்த் அவர்களேன்னு வச்சிக்குவமே? நாங்க ஏற்கெனவே கொண்டுவந்த திட்டம்னு சொல்றதுக்கா? இதுலதான் போன திட்டங்கள்.
‘‘எதுக்காகத் திரும்பணும்?”

ஊழல் செய்த கை நிற்காது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த ஆட்சி. ஏன் இதெல்லாம் சொல்றேன்னு நீங்க எல்லாம் நினைக்கணும். உண்மையைச் சொல்லுகிறேன். நான் அதிகபட்சமா பேசல. அப்ப சட்டசபைக்குள்ள வரல. இனிமே சட்டசபைக்குள்ள வரலன்னு சொல்லிட்டு நான் வந்துட்டேன். எல்லாரும் என்ன சொன்னாங்க? நீங்களும் சட்டசபைக்கு வராதீங்க. வந்துட்டா அவ்வளவுதான் நீங்க வரவே வராதீங்க. எத்தனை பேரு எம்.எல்.ஏ இல்லன்னு சொல்றாங்க. நீங்க வரவே வராதீங்கன்னாங்க. நான் போகல. சட்டசபை ஏன்னா சட்டசபை செத்துடுச்சேன்னு சொன்னாங்க. சட்டசபை செத்தா நான் எப்படி போக முடியும்?

சட்டசபையில பழ.கருப்பையா சொன்னமாதிரி ஒருத்தன் தூங்கிகிட்டு இருந்தான். ஏங்கண்ணே எனக்குக்கூட கைதட்டணும், எதுக்குன்னான். நீ இப்படி கையை வச்சிக்க. அப்புறம் டேபிளைத் தட்றான்னேன். எல்லாம் டேபிளைத் தட்டினா இவங்களும் டேபிளைத் தட்டிக்கிட்டே இருப்பாங்க. எதுக்கு தட்றாங்கன்னே தெரியாது.

(கூட்டத்தினைப் பார்த்து கைகளை ஆட்டிக்கொண்டே) கையை ஆட்டணும் அவ்வளதுதானே. ஒரு நிமிசம்… ஒரு நிமிசம்… நான் வந்து நேரா… அதான் இவங்க இப்படி இப்படி திரும்பனா எப்படி பேச முடியும்? எப்பவுமே மேடைப்​பேச்சு இருக்கறவங்க பக்கத்துல இருக்கறவங்கள பார்க்காதீங்க. நீங்க உங்க கண்பார்வையை தூரமா வச்சிக்கங்கன்னுவாங்க.

எனக்கு நடிக்க வராது. எனக்கு நடிக்கத் தெரியாது. மக்களை ஏமாற்றத் தெரியாது. எதுக்காகத் திரும்பணும். பேச்சு மாறணும். மாறாது அது பத்தியெல்லாம் பத்திச் சொல்லாதே. என்ன பேச்சு மாறப்போது? அவங்க எத்தனை தடவ டாட்டா காட்டினாலும் இங்கிட்டு அவ்வளவுதானே? அதுக்கு மேல யாரும் கைய ஆட்ட மாட்டாங்க. நீங்க பேசுனாலும் கேட்க மாட்டான். எனக்குப் பார்க்கத் தெரியாது. நடிக்கத் தெரியாது. சினிமாவுல வேணும்னா விஜயகாந்த் நடிக்க முடியும். மக்கள்கிட்ட நடிக்கணும்னா…. (நாக்கு குழைய ஏதோ சொல்கிறார்!) உங்கம்மா எதுக்கு நடிக்கணும்? நான் ஒரு லட்சம் தொண்டர்களை வச்சிகிட்டு என்ன பண்றது?

‘‘அடகு வைக்கச் சொல்றியா?”

சரி தேர்தலில் என்ன… ஒரு குறிப்பிட்ட அறிக்கைதான். இவங்க விஜயகாந்த் என்னன்னு சொல்வார்? விஜயகாந்த் ரேட்டை கூட்டிவிடுவாரா? விஜயகாந்த் இடத்தைக் கூட்டிவிடுவாரா? விஜயகாந்த்துக்கு பயமா? ஏன் மெளனம். இதெல்லாம் நீங்க பத்திரிகைகாரங்க செய்யுறது. விஜயகாந்த் தெளிவாக, அமைதியாக, அற்புதமாக யோசிச்சு கொண்டுதான் இருக்கிறேன். ஊழலற்ற மக்களை எங்கு கொண்டுபோய் விடச்சொல்றீங்க? யார்கிட்டயாவது அடகு வைக்க சொல்றீயா? அடகு வச்சதெல்லாம் எனக்குப் போதும். என் தொண்டர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டான்ங்​கறது எனக்குத் தெரியும். அவங்களை எப்படியெல்லாம் விலைக்கு வாங்கலாம்னு நினைச்சீங்கன்னு தெரியும். அதை நீங்க சொல்லணும் சொல்லணும்ங்கறீங்க. நான் சொல்றேன்னு என்னைக்​காவது சொல்லியிருக்கேனா பார்த்துக்​கங்க. நான் சொல்றேன்னு சொல்லியிருக்கேனா? இல்லை… இல்லை!

‘‘பத்திரிகைகாரங்க திரும்பிப் பாருங்க!”

சரி உங்ககிட்டயே கேட்குறேன். நான் கூட்டணிக்குப் போவோமா, வேண்டாமா? அதைச் சொல்லுங்க பார்ப்போம். என்னய்யா வேண்டாம் வேண்டாம்ங்கறீங்க. வேண்டாம்ங்கறாங்க, பத்திரிகை​காரங்க வேணும்னா திரும்பிப் பார்த்துக்கங்க. அப்ப நான் என்ன சொல்றது. இதுவந்து ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதுக்கு பேர் என்ன? எல்லாப் பக்கமும் கை காட்றாங்க. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்ன்னு எல்லா மாவட்டச் செயலாளரை அழைத்துப் பேசுகிறேன். நாளையில இருந்து விருப்பமனு நேர்காணல். அதை நான் பார்த்து கேட்டுக்குறேன். நீங்க ஊருக்குப் போய்ச் சொல்லுங்க. அந்த மாவட்டச் செயலாளர்கிட்ட நான் எப்ப வேணுமோ கேட்டுக்குறேன்.

என் கட்சிக்காரங்கள அடகா வைக்கச் சொல்றீங்க? நான் விரும்பல. ஆனா அவங்க கண்ணை மூடிகிட்டு கிணத்துக்குள்ள விழணும்னா விழுந்துடுவாங்க. அதுலயெல்லாம் என் தொண்டர்கள் கிட்ட யார்கிட்டேயும் மாற்றம் கிடையாது. விழு… தலைவர் சொல்லிட்டார். போடான்னு விழுந்துடுவாங்க. ஏன்னா தலைவரை பற்றித் தொண்டர்களுக்குத் தெரியாதா? அடுத்த தலைவர் மாதிரி இல்ல விஜயகாந்த். உங்களுடைய தொண்டர்களை அழுக விட்டுக்கிட்டு போகவிட மாட்டான். விஜயகாந்த் நல்லமனிதர் எங்களைக் காப்பாத்துவார்னு நினைக்கிறீங்க. அதை என்னைக்கும் காப்பாத்துவேன். (பின்பு பிரேமலதா சொல்வதைத் திரும்பிக் கேட்கிறார்)
‘‘கேரளா ஜால்ரா அடிக்கிறாங்க!”

விஜயகாந்த் எப்பவுமே, இப்பகூட தனி ஒருவன்னு ஒரு படத்தைப் போட்டான். நானும் பிரேமலதாவும் பார்த்துக்கிட்டிருந்தோம். இவன்லாம் ஒரு முதலமைச்சரான்னு எனக்குக் கோவம் வந்துச்சு. தலைவர் தலைவர்னு சொல்கிறானே. அந்தப் பிரசவ வலியில துடிச்சிகிட்டு இருந்த அந்த அம்மாவை ஹாஸ்பிட்டல் கொண்டு போற நேரத்துல என் தொண்டர்கள் சாகக் கூடாது. அப்படி இப்படிங்​கறாரு. எல்லாருமே தலைவருக்காகத்தான் இருக்கும். தலைவர் நல்லா இருந்தா தொண்டர்களும் நல்லா இருக்க வேண்டும்.

விஜயகாந்த் வாழ்ந்தான்… வாழ்ந்தான்… வாழ்ந்தானே தவிர, விஜயகாந்த் ஏழை மக்களுக்காக வாழ்ந்தான்னுதான் இருக்கணும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஏன் இதைச் சொல்கிறேன். பத்திரிகைகாரங்க நேரடியா சொல்ல முடியாது. ஏன்னா பயம். ஜெயலலிதா எங்கயாவது அடிச்சிடுமா? ஜெயலலிதா போலீஸ், பத்திரிகை, ஓபிஎஸ். ஓ.பி.எஸ்ன்னா ஜீரோ. இந்த மூன்று பேரும் நம்மளை ஏன்னா நான் டி.வி-யைப் பார்ப்பேன். டி.வி-யில விழுந்து விழுந்து ஜெயலலிதாவைத்தான் காட்டுவாங்க. டி.வி-யில பாருங்க சம்பந்தப்பட்ட எந்த அதிகாரியும் வரமாட்டான். பத்திரிகை முழுக்க ஜால்ரா அடிக்குது. என்ன ஜால்ரா? கேரளா ஜால்ரா அடிக்குது. டி.வி-யில விழுந்து விழுந்து அந்த ரெண்டு சேனலும் ஜெயலலிதாவைக் காட்டுவாங்க. எங்களைப் போட்டு காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சுவாங்க. ஒரு அளவு வேண்டாம்.

ஒருசில பத்திரிகை தி.மு.க-வுக்கு ஜால்ரா அடிக்குது. நமக்கும் ஒரு பத்திரிகை ஜால்ரா அடிக்கணும்னு நினைக்கிறேன். அது தே.மு.தி.க-வுக்கு ஜால்ரா அடிக்கும். எந்தப் பத்திரிகை அடிக்கணும்னு தெரியல. பார்ப்போம். இல்லைன்னா அடிக்க வைக்கணும். இல்ல டி.வி-யை அடிக்க வைக்கணும்.

‘‘கிச்சன் கேபினெட்டுல பார்த்தேன்!”

நெல்லு தஞ்சாவூர்ல அளக்கறதுக்கு லஞ்சம் கேட்கறாங்களாம். இவங்க 100 கிலோ அளக்கறதுக்கு ரெண்டு கிலோ எக்ஸ்ட்ரா போடுங்கறாங்களாம். 100 கிலோ போட்டு ஏதோ 10 ரூபாய் வாங்குறாங்களாம். கிலோ 5 ரூபாய் மூட்டைக்கு ரெண்டு கிலோ ஐந்தும் ஐந்தும் 10. மூட்டைக்கு என்னாச்சு. இது ஒரு பத்து… இது ஒரு பத்து மூட்டைக்கு மட்டும் 20 ரூபாய் கிடைக்குது. ஒரு ஆயிரம் மூட்டை வாங்கினா எவ்வளவு ஆச்சு? 2,000 ரூபாய்… தேவையா? தேவைதான். இல்ல 20,000 ரூபாயா? 2,000 இல்ல 20,000. நாம சொல்றோம் இல்ல நாலும் நாலும் எவ்வளவு?… எட்டு. அதுதான் கரெக்ட். ஆனால் குமாரசாமி கணக்குல, நாலும் நாலும் என்ன சொல்லுவான்? மூணுன்னு சொல்லுவான். அதான் பெங்களூர் குமாரசாமியின் கணக்கு. நாம எட்டுங்கறமே… அவர் மூணுன்னு சொல்றாறேன்னா… என்னடா கணக்குன்னா அதான் குமாரசாமியோட கணக்கு. இதை நான் சொல்லல. வாட்ஸ் அப்பில் சொல்றாங்கோ. இதை கிச்சன் கேபினேட்டில் பார்த்தேன். எனக்குத் தெரியாதுங்க “சொல்லிட்டாங்கோ..” அப்படீங்கறங்கோ, நானும் சொல்றேங்கோ, அப்படின்னா நீங்க நம்பணும்கோ, இதெல்லாம் உங்களுக்குத் தெரியும். ரேட்டை கூட்டணும்னு நெனைக்கறாங்க. என்ன பண்றது? மக்களுக்குப் பொழுதுபோகணும். சினிமா நடிகர்தானே அதனால நான் கே டி.வி பார்க்குறேன். அடுத்து இவங்க வாங்குறாங்க நீங்க பாருங்க. ரெண்டு டி.வி படாத பாடுபடும், நாலு டிவி படாத பாடுபடும், ரெண்டு, நாலு, எட்டு இல்ல. எத்தனை டி.வி இவங்களை சப்போர்ட் பண்ணுச்சோ, அது படாதபாடுபடும். அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் படாத பாடுபடும் என்பதை தெளிவாகச் சொல்றேன்.
‘‘இப்ப மணி என்ன?”

இப்ப நம்மள பத்திரிகைகாரங்க சொல்றாங்க விஜயகாந்த் கூட்டணி போயிடுவாரா? இல்ல போயிடுவார்… போயிடுவார்னு சொல்றாங்க. தலைவன் வேண்டாங்குறேன்… நீ ஏன் (திடீரென சுதாரித்துக் கொண்டவரைப்போல்) இல்ல சரிதான்… சரிதான்பா. கேட்குறாங்க பத்திரிகை நண்பர்கள்… நீங்க கேட்டீங்களா வேணாம்… வேணாம்… வேணாம்னு சொல்றாங்க. நீங்க எழுதுங்க தொண்டர்கள் வேண்டாங்கறாங்க. தொண்டர்களும் அந்த வழிதான் போவார்னு தலைவர்ன்றாங்க. தலைவர் எங்க இருக்கார்னு நீங்களே சொல்லுங்க. ஏன் இத்தனை பேரும்… நீங்க இப்ப வந்து மணி என்ன? ஏன்னா நீங்க வந்து பக்குவமா போகணும்? எல்லா ஊர் வண்டிக்கும் ஒரு சீஃப் இருப்பாங்க. அவங்ககிட்ட போய்ட்டு சண்ட இல்லாம சச்சரவு இல்லாம போகணும். தேசிய முற்போக்கு திராவிட கழகம்ன்னாலே கடையில தகராறு பண்ணாம ஒழுங்கா சாப்பிட்டமா வந்தமான்னு இருப்பாங்க. மத்த கட்சி மாநாடுன்னா கடையை இழுத்து மூடிடுவாங்க. யார்ரா இவன் சண்டையை போட்டுக்கிட்டே இருப்பான். அவன்கிட்ட போய் கடையைத் தொறந்து வச்சிகிட்டு இருக்கணும்? அதுக்கு சும்மா இருந்துகிட்டு போயிடலாம். வியாபாரமும் வேணாம் ஒண்ணும் வேணாம். ஆக, எதை எதை நாம் எப்படி வைக்கிறது?

‘கிங்’… ‘கிங்மேக்கர்’!

பிரேமா கிட்டயே நான் கேக்குறேன். ‘கிங் மேக்கரா’ இருக்கணுமா? ‘கிங்’கா இருக்கணுமா? சொல்லுங்க பார்க்கலாம். ‘கிங்’…  சரி ஒரு தடவை சொல்லீட்டீங்க. ரெண்டு தடவை கேட்பேன். ‘கிங் மேக்கரா’ இருக்கணுமா? ‘கிங்’கா இருக்கணுமா? காது கேட்கலையே… பத்திரிகைகாரங்களைப் பார்த்துச் சொல்லுங்க… ‘கிங்’கா இருக்கணுமா? சரி. நீங்களும் ‘கிங்’காதான் இருப்பீங்க. கவலையே படாதீங்க. நான் ‘கிங்’குன்னா நீங்களும் ‘கிங்’குதான். யாரும் இங்கே சர்வாதிகாரி கிடையாது. ஆக, எல்லோரும் நேரத்துக்குப் போகணும்… வீட்டுக்குப் போகணும்ங்கறதால. நாளைக்கு லீவு நாளா? மணி என்ன? ஒன்பதா? ஒன்பதாச்சா… எல்லோரும் பத்திரமா வீட்டுக்குப் போய்ச் சேர்ற வரைக்கும் எனக்குத் தூக்கம் வராது நண்பர்களே… தொண்டர்களே… நான் அதிக நேரம் பேசலேன்னு யாரும் வருத்தப்பட்டுக்காதீங்க. எனக்கு சில பிரச்னை இருந்தது. அதனால வண்டில உட்கார்ந்து அவங்ககிட்ட பேசி அனுப்பிட்டு வந்திருக்கேன். இந்த ஏவி எல்லாம் பார்த்திருப்பீங்க. இது வந்து முதல்தடவை. இதைப் பார்த்து காப்பியடிச்சு திருடத்தானே செய்யறாங்க. திருட திருட. என் மனைவி இதைப் பார்த்து வேற என்ன பொருள்ள என்ன பேரு வச்சி கூப்பிட்டாலும் திருடித்தான் அவங்க சொல்றாங்கன்னுதான் வரும். செஞ்சுபார்க்கட்டுமே. ஜெயலலிதா இன்னும் ரெண்டுமாசம். ரெண்டுமாசத்துல எதையும் செய்யமாட்டாங்க. குறைஞ்சது 5 வருஷம் ஆகும். 5 வருஷத்துல நிச்சயமாக நான் முடிக்கிறேன்னு சொல்லி முடிக்கிறேன். மக்களே வணக்கம்! நன்றி… நன்றி… நன்றி… வணக்கம்… வணக்கம்… வணக்கம்!”

– தெளிவா புரிஞ்சு போச்சுங்க! 

ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

விஜயகாந்த்: இனவெறி, சாதிவெறி ஊடகங்கள் காட்டும் பூச்சாண்டி!

அரசியல் கட்சி நடத்த எந்த அருகதையும் இல்லாத குழப்பவாதிதான் விஜயகாந்த் என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டியது தேமுதிகவின் காஞ்சிபுரம் மாநாடு. ஆனால், இனவெறி, சாதிவெறியின் காரணமாக அவரை தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றன கேடுகெட்ட ஊடகங்கள்.

இந்த மானம்கெட்ட Presstitute கும்பல் ஒழியாத வரை தமிழ் நாடு உருப்படாது.

ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் கட்டுரை

ஊடகங்களின் அவலநிலைகுறித்த, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர், மருத்துவர் செந்தில் அவர்களின் சுவாரசியமான கட்டுரை இதோ:
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதுகளில் சோ அவர்கள் எழுதிய ஒரு கதை. எனக்கு கொஞ்சம் கொஞ்சம் நினைவு இருக்கிறது. ஏறத்தாழ இதுப் போலத் தான் இருக்கும்:

ஒரு கல்லூரியில் தமிழ் மன்ற நிகழ்ச்சிக்காக கவிதைப் போட்டி நடத்துவார்கள். அந்தக் கல்லூரி மாணவன் ஒருவன் மனம் வெறுத்துப் போய் ஒரு காகித்தில்

`நீ பெண்ணா, ஆணா? பேயா? என்னை ஏன் இப்படித் தொந்தரவு செய்கிறாய். வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது` - என்று எழுதி கசக்கி எறிந்து விடுவான். அதனை அவன் தோழன் ஒருவன் கொண்டு போய் கவிதைப் போட்டிக்குக் கொடுத்து விடுவான். தமிழ் பேராசிரியர் அந்தக் கவிதைக்கு முதல் பரிசு கொடுத்து விடுவார்.

கொடுத்து அந்தக் கவிதைக்கு விளக்கமும் தருவார் `ஆண் பாதியாகவும், பெண் பாதியாகவும் விளங்கி, சுடுகாட்டில் பேயாகத் திரியும் சிவனே! இந்த மனித வாழ்வெனும் துன்பத்தில் இருந்து விடுவித்து ஆட்கொள்வாய்` எனப் பொருள் படும் அருமையான கவிதை எனப் பாராட்டிப் பேசுவார்.

பின்னர் அந்த மாணவனை அழைத்து `எவனுமே கவிதை எழுதவில்லையே. நீயும் சும்மா இருக்க வேண்டியது தானே? இனிமேல் கவிதை எழுதினால் தெரியும் சேதி` என்று மிரட்டி அனுப்பி விடுவார்.

அந்தக் கல்லூரி மாணவி ஒருத்தி அவன் கவிதையில் மயங்கி அவனிடம் அவளைப் பற்றி ஒரு கவிதை எழுதித் தரச் சொல்லித் தொல்லை செய்வாள். அந்த மாணவன் மீண்டும்

`சண்டையென்ன உனக்கு ஜோலியா? மண்டையென்ன காலியா`- என்று எழுதிக் கொடுப்பான்.

அதை வீட்டுக்குச் சென்று படித்து விட்டு அந்தப் பெண் அடுத்த நாள் மிகுந்த மகிழ்ச்சியோடு `ஞாயிற்றுக்கிழமை உனக்கு வேலையில்லாமல் இருந்தால் சந்திக்கலாமா அல்லது திங்கள் கிழமை நேரமிருந்தால் சந்திக்கலாமா என்பதை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்' என்று மயங்குவாள்.

இந்தக் கதையை சோ தன் நடையில் நகைச்சுவையோடு சொல்லியிருப்பார். அதைப் படித்த காலத்தில் நான் நினைத்துப் பார்த்தது கூட இல்லை. நடைமுறை வாழ்க்கையிலே கூட இதுவெல்லாம் நடக்கும் என்று.

விஜய்காந்த் மேடையிலே உளரும் உளரல்களுக்கு தெளிவான விளக்கம் எழுதும் பத்திரிக்கையாளர்களுக்கும், மேலே சொன்ன கதையில் வரும் அந்தப் பைத்தியக்கார மாணவனின் கவிதைக்கு விளக்கம் தரும் தமிழ் பேராசிரியருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. 

அந்தத் தமிழ் பேராசிரியருக்கு முதல் பரிசு தந்த காரணத்தை விளக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. தமிழ் நாட்டுப் பத்திரிக்கைகளுக்கு என்ன நிர்பந்தம் இருக்க முடியும்?

சாதியாக இருக்குமோ?
மொழியாக இருக்குமோ?

தமிழ் நாட்டில் தமிழ் மக்கள் அரசியல் ஆளுமை பெற்றுவிடவே கூடாது என்ற உறுதியான நோக்கமாக இருக்குமோ?

இந்தப் பேத்தல்காரன் தான் எங்களுக்கு விடிவெள்ளி என்று உறுதியாக நம்பும் கம்யூனிஸ்டுகள் மனதில் இருப்பது அரசியலா? சாதியா? நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கம் என்று மார்தட்டும் கருணாநிதியின் உள்ளம் முழுவதும் கள்ளம் மட்டும் தானா? சுயமரியாதை சொல்லில் மட்டும் தானா?

எதுவாக இருந்தாலும்.....

வெட்கக் கேடு
வெட்கக் கேடு
வெட்கக் கேடு

`தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா`

என்றுச் சொல்லி, பேசிப் பேசியே தமிழனை ஏமாற்றிய திராவிடக் கூட்டத்தின் வெற்றியே தமிழனை முட்டாளாகவும், சிந்திக்கவே தெரியாத, முதுகெலும்பில்லாத பிண்டமாகவும் வைத்திருப்பது தான்.

விஜயகாந்த் போன்றவர்களைத் தலைவர்களாக, தமிழ் நாட்டு அரசியலின் மையப்புள்ளியாகப் பார்க்க வைக்கிற ஊடகச் சதிகாரர்களிடமிருந்து தமிழ் சமுதாயம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுமா?

விழித்தெழுமா?

விடியுமா?’

செவ்வாய், பிப்ரவரி 16, 2016

சென்னை ஆரிய கௌடா சாலை: ஒரு மாபெரும் வரலாற்று மோசடி!

சென்னை மாம்பலம் பகுதியில் ஆரிய கௌடா சாலை என்கிற பெயரில் ஒரு சாலை அமைந்துள்ளது. சென்னையில் பார்ப்பனர்கள் ஆன்மீக மற்றும் சமுதாய ரீதியில் ஒன்று கூடும் 'அயோத்தியா மண்டபம்' எனும் அரங்கம் இங்குதான் இருக்கிறது.
ஆரிய கௌடா சாலை
பார்ப்பனர்கள் முக்கியமாக கருதும் பகுதியில், 'ஆரிய' என்கிற பெயருடன் சாலை இருந்தால், அது ஆரிய இனத்துடன் தொடர்புபடுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால், உண்மை அதுவல்ல.

திராவிட இயக்கத்தின் உயர்சாதி ஆதிக்கம் 

தமிழ்நாட்டின் அரசியலில் திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆங்கிலேயர்களின் தேவைக்காகவும், பார்ப்பனரல்லாத உயர்சாதியினரின் நலனுக்காகவும் உருவான இயக்கம் அதுவாகும். 1912 - 17 ஆம் ஆண்டுகளில் மாவட்ட துணை ஆட்சியர்களில் 55% பேர், துணை நீதிபதிகளில் 83% பேர், மாவட்ட முன்சீஃப் பதவிகளில் 73%, உயர் அரசாங்க பதவிகளில் 65% பேர் என ஆங்கிலேயர்களுக்கு அடுத்த இடத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே இருந்தனர்.  ஒரு சாதியை மட்டுமே நம்பி ஆங்கிலேய ஆரசாங்கம் நடப்பதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.

இந்நிலையில், பார்ப்பனர்கள் பெற்றிருந்த அதிகார நிலையை தாம் பிடிக்க வேண்டும் என பார்ப்பனரல்லாத உயர்சாதிகளில் இருந்து புதிதாக படிக்கத் தொடங்கியவர்கள் விரும்பினார்கள். 1916 ஆம் ஆண்டில் தெலுங்கு, தமிழ், மலையாளம் பேசும் பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் ஒன்றிணைந்து பார்ப்பனர் அல்லாதார் அறிக்கையை சென்னையில் வெளியிட்டனர். இப்படியாக பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனரல்லாத உயர் சாதியினருக்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் காரணமாகவே தமிழ்நாட்டில் திராவிட இயக்க அரசியல் உருவானது. 

திராவிட இயக்கத்தின் ஆட்சியில் கம்யூனல் ஜீஓ எனும் இடஒதுக்கீடு அரசாணை 1927 ஆம் ஆண்டில் நடைமுறைப் படுத்தப்பட்டது. இது பார்ப்பனர் அல்லாத உயர் சாதிகளின் வெற்றியாக பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டின் 72% மக்களை பார்ப்பனர் அல்லாதோர் என்கிற ஒற்றை குழுவாக வகைப்படுத்தி, பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினருக்கு சாதகமாக திராவிட இயக்கம் இடஒதுக்கீட்டை செயலாக்கியது. 

பிற்பட்டோர் வகுப்பின் உதயம்

பார்ப்பனரல்லாத உயர் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து பிற்பட்டோர் பேரவை Madras Provincial Backward Classes League எனும் அமைப்பு 1934 ஆம் ஆண்டில் உருவானது. எம்.ஏ. மாணிக்கவேல் நாயகர், எஸ்.ஏ. நஞ்சப்பா, பி.கே. ராமச்சந்திர படையாட்சி, எச். ஆரி கௌடர் ஆகியோர் சேர்ந்து இந்த அமைப்பை உருவாக்கினார்கள் (முதல் மூவரும் வன்னியர்கள், மற்றவர் படுகர் இனத்தவர்). இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு என்று தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று கோரினர். எச். ஆரி கௌடர் Madras Provincial Backward Classes League அமைப்புக்கு  தலைமை வகித்தார்.
எச். ஆரி கௌடர்
பார்ப்பனர்கள் அரசுப் பதவிகளில் பார்ப்பனரல்லாத உயர் சாதியினர் அதிக இடங்களை எடுத்துக்கொள்கிறார்கள் என்று இடஒதுக்கீட்டை கொண்டுவந்த நீதிக்கட்சி ஆட்சியில், பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினரே பலனடைந்திருப்பதை இவர்கள் சுட்டிக்காட்டினர். 

1944 ஆம் ஆண்டில், மக்கள் தொகையில் 50% ஆக உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு, அரசின் 2100 கெசட் அலுவலர் பதவிகளில் 2% மட்டுமே கிடைத்திருப்பதையும்; அதே நேரத்தில் 22% மட்டுமே இருக்கும் பார்ப்பனரல்லாத உயர்சாதியினருக்கு 27% இடம் கிடைத்திருப்பதையும் இவர்கள் ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டினர்.

இந்த போராட்டங்களின் விளைவாக 1947 ஆம் ஆண்டில், பார்ப்பனர் அல்லாதவர்கள் தனிப்பிரிவு என்றும், பிற்படுத்தப்பட்டவர்கள் தனிப்பிரிவு என்றும் உருவானது. இவ்வாறாக, இன்று இந்தியா முழுவதும் பேசப்படும் 'இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்' Other Backward Classes (OBC) எனும் வகுப்பு உருவாகக் காரணமாக இருந்த நால்வரில் ஒருவர்தான் ஆரி கௌடர். 

ஆரி கௌடர்

நீலகிரி மலை ரெயில் என்று இன்று போற்றப்படும் புகழ்பெற்ற ரயில் பாதையை அமைத்த, படுகர் இனத்தைச் சேர்ந்த பெல்லி கௌடர் என்பவரின் மகனாக 1893 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஆரி கௌடர்.

சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில்தான் எம்.ஏ. மாணிக்கவேல் நாயகர், எஸ்.ஏ. நஞ்சப்பா, பி.கே. ராமச்சந்திர படையாட்சி ஆகிய சக சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து Madras Provincial Backward Classes League அமைப்பை ஏற்படுத்தினார். இவர் 1971 ஆம் ஆண்டில் மறைந்தார்.
ஆரி கௌடர் பாலம்
நீலகிரி பகுதி வளர்ச்சிக்கு பாடுபட்ட இவரது பெயரில்தான், தமிழ்நாட்டையும் கர்நாடகாவையும் இணைக்கும் மசினக்குடி பாலம் அமைந்துள்ளது.

சென்னை மாம்பலம் பகுதியில் இவருக்கு சொந்தமாக இருந்த ஏராளமான நிலத்தை தியாகராய நகருக்காக அரசிடம் இலவசமாக அளித்தார். இதற்காக அதே பகுதியில் உள்ள சாலைக்கு ஆரி கௌடர் சாலை என்று பெயர் வைத்தார்கள். இப்போது ஆரிய கௌடா சாலை ஆக்கிவிட்டார்கள்.

எதிர்காலத்தில், அங்குதான் ஆரியர்கள் வந்து குடியேரினார்கள் என்று கதைக்கட்டி, ஆரி கௌடர் பெயரையே மறைத்துவிடுவார்கள்.

வரலாற்று மோசடி தடுக்கப்பட வேண்டும்

இந்திய வரலாற்றில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) எழுச்சி மிக முதன்மையான அரசியல் நிகழ்வாகும். மண்டல் குழுவில் தொடங்கி, இன்று தமிழ்நாட்டில் உள்ள பாமகவும், வட இந்தியாவில் உள்ள லாலு, நிதீஷ், முலாயம் சிங் போன்ற அரசியல் எழுச்சிகளும் - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சமூக நீதி அரசியலின் வடிவம் ஆகும்.

இந்த மாபெரும் வரலாற்றின் தொடக்கமாக இருக்கும் - Madras Provincial Backward Classes League அமைப்பையும் எம்.ஏ. மாணிக்கவேல் நாயகர், எஸ்.ஏ. நஞ்சப்பா, பி.கே. ராமச்சந்திர படையாட்சி, (மூவரும் வன்னியர்கள்), எச். ஆரி கௌடர்  (படுகர்) ஆகியோரை வரலாற்றில் இருந்து மறைப்பதை ஏற்க முடியாது.

'ஆரிய கௌடா' சாலை என்பது 'ஆரி கௌடர்' சாலை ஆக வேண்டும்.

திங்கள், பிப்ரவரி 15, 2016

திமுகவிடம் மண்டியிட்டு மானம் இழந்தும் வாய்க்கொழுப்பு அடங்காத இளங்கோவன்

முனிவர்கள் கோபத்தில் வாய் திறந்தால் சாபம் வரும்... சில அரசியல் கட்சித் தலைவர்கள் வாயைத் திறந்தால் கூவம் தான் வரும். அத்தகையத் தலைவர்களில் முதன்மையானவர் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன். வாய் மட்டும் இல்லை என்றால் நாய் தூக்கிச் சென்று விடும் என்று சிலரைப் பார்த்து வேடிக்கையாகக் கூறுவது உண்டு. ஆனால், இன்னும் சிலர் வாய் பேசுவதைப் பார்த்தால் நாய்கள் கூட திரும்பிப் பார்க்காது. அத்தகையவர்களிலும் இவருக்கு இடம் உண்டு.
இத்தகைய பெருமைகளுக்கு உரிய இளங்கோவனிடம் நேற்று செய்தியாளர்கள் ஒரு வினா எழுப்பினார். ‘‘பலம் இல்லாத கட்சிகள் தான் கூட்டணி அமைக்கும். பா.ம.க. பலம் உள்ள கட்சி. 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறியிருக்கிறாரே? இதுபற்றிய உங்கள் கருத்து என்ன?’’ என்று கேட்டார். பா.ம.க.வின் நிலைப்பாடு பற்றிய மருத்துவர் அய்யாவின் கருத்துக்கு இளங்கோவன் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. அது அவர்கள் கட்சியின் கருத்து என்று கூறி ஒதுங்கியிருக்கலாம்.

உண்மையாகவே தமிழக நலனில் அக்கறை இருந்திருந்தால், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தனித்து போட்டியிடும் பா.ம.க.வின் நிலைப்பாட்டை பாராட்டியிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யாமல், ‘‘ரொம்ப சந்தோஷம்... அடுத்து வரும் மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் போட்டியிடட்டும்’’ என்று நக்கல் செய்திருக்கிறார். வாய்க்கொழுப்புக்காரர்களிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

ஆனால், இந்த இளங்கோவன் கடந்த காலங்களில் பேசிய பேச்சுக்கள் என்ன தெரியுமா? 

சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் பற்றி கலைஞர் ஏதோ கூற, அதற்கு பதிலளித்த இளங்கோவன், ‘‘எதையும் ஊதி ஊதிப் பெரிதாக்குவது தான் கலைஞரின் தொழில்’’ என்று அவரது குலத்தொழிலை இழுத்து கொச்சைப்படுத்தினார்.

2013 ஆம் ஆண்டில் தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணி உடைந்த போது,‘‘கூட்டணி கிடையாது என்ற, கருணாநிதியின் அறிவிப்பால், பெரிய சுமை நீங்கி விட்டதாகக் கருதுகிறோம்; அவர்களால், எங்களுக்கு ஏற்பட்ட கறை நீக்கப்பட்டதாக உணருகிறோம். மறுபடி சமரசம் கிடையாது. காங்கிரசுக்கு சுயமரியாதை இருக்கிறது. தி.மு.க., தான் எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் மைனாரிட்டி தி.மு.க., அரசு, ஐந்து ஆண்டு காலம் ஆட்சி நடத்தியது.  சி.பி.ஐ.,யை தவறாக பயன்படுத்தவில்லை. சி.பி.ஐ., என்பது தனி ஆளுமை நிறுவனம். காங்கிரசை குற்றம் சொல்வது, பா.ஜ.,வுக்கு ஒத்து ஊதுவது போல் உள்ளது. இந்த அழுக்கு மூட்டையை, முதுகில் சுமக்க, பா.ஜ., தயாராக இருக்காது. ஊழல் கறை படிந்த, தி.மு.க.,வை, பா.ஜ., சேர்ப்பது சந்தேகம் தான்’’ என்று இளங்கோவன் கூறினார். இப்போது அதே அழுக்கு மூட்டையான திமுகவைத் தான் கோபாலபுரத்துக்குச் சென்று தோளில் சுமந்து கொண்டிருக்கிறார் இவர்.
நடிகர் தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் ஆந்திர தாதா சுமனும், தமிழகத்திலிருந்து சென்று தாதா போல நடிக்கும் விவேக்கும் பேசிக் கொள்வது போல ஒரு டயலாக் வரும்.‘‘ ஹைதராபாத்  உன்னுது... செகந்திராபாத் என்னுது. குண்டூர் உன்னுது... நெல்லூர் என்னுது. கடப்பா உன்னுது... மடப்பா என்னுது. காக்கிநாடா உன்னுது... பாவாடை நாடா என்னுது. ஓ.கேன்னா டீலு. இல்லன்னா  பிரியாணி சாப்பிட்டு பெட்ரோல் கன்வேயன்ஸ் வாங்கிட்டு போய்க்கிட்டே இருப்பான் இந்த கேங் லீடர்’’ என்று வீர வசனம் பேசுவார் விவேக். இறுதியில் தன்நிலை உணர்ந்து ஆந்திர தாதாவின் கால்களை அமுக்கி விடுவார்.

கிட்டத்தட்ட அதே பாணியில் தான் இளங்கோவனும் பேசினார். ‘தமிழகத்தில் ஆட்சியில் பங்கு தந்தால் மட்டும் தான் திமுகவுடன் கூட்டணி அமைப்போம். திமுகவுக்கு முதலமைச்சர் பதவி என்றால் எங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டும். அவர்களுக்கு பொதுப்பணித்துறை என்றால் எங்களுக்கு போக்குவரத்துத் துறை... அவர்களுக்கு உள்துறை என்றால் எங்களுக்கு உள்ளாட்சித் துறை. இதற்கு ஒப்புக்கொண்டால் திமுகவுடன் கூட்டணி.. இல்லாவிட்டால் தனித்து போட்டி’’ என்று  வீர வசனம் பேசினார் இளங்கோவன்.
ஆனால், நடிகர் விவேக் செய்வதைப் போலவே கலைஞரின் கால்களை அமுக்கி விட்டு  கூட்டணி ஆட்சியும் வேண்டாம்... ஒன்றும் வேண்டாம். நீங்க கொடுக்கும் சீட்டுகளைக் கொடுங்க வாங்கிக் கொள்கிறோம் என்று சரணாகதி அடைந்திருக்கிறார் இளங்கோவன். இரு மாதங்களுக்கு முன்பு வரை பெரியாரின் பேரனாக இருந்த இளங்கோவன் இப்போது ஓ.பி.எஸ் நண்பராக மாறி முழங்கால் வரை குனிந்து கலைஞருக்கு வணக்கம் வைக்கிறார்.

இவ்வளவு நாள் காமராஜர் ஆட்சி என்று பேசி வந்த இளங்கோவனும் அவரது கூட்டாளிகளும் இப்போது கலைஞர் ஆட்சி என்று முழங்குகிறார். ஏன் என்று கேட்டால் ‘‘குஷ்புவின் உருவத்தில் அன்னை இந்திராவை காண்கிறேன்" என்று கூறியதைப் போல கலைஞரின் வடிவில் காமராஜரை காண்பதாக கூறினாலும் கூறக்கூடும். 

எனவே, நமது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் இது போன்ற இழிபிறவிகளிடம் எல்லாம் வைத்துக் கொள்ளக்கூடாது. தொடரட்டும் இளங்கோவனின் உளறல்கள். அவற்றுக்கு சரியான பதிலடி தருவார்கள் தமிழ்நாட்டு வாக்காள பெருமக்கள்!

ஞாயிறு, பிப்ரவரி 14, 2016

தமிழக கட்சிகளின் 'சாதி எதிர்ப்பு' போலி வேடம்!

அதிமுக - திமுக கட்சிகள் தற்போது போட்டிப்போட்டுக் கொண்டு சாதிச் சங்க மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், திருச்சியில் திமுக முத்தரையர் மாநாடு & அதிமுக முத்தரையர் மாநாடு நடக்கப்போகிறதாம்.
தினமலர் 14.2.2016: திமுக & அதிமுக முத்தரையர் மாநாடு செய்தி
தமிழ்நாட்டில் சாதி ஒரு முக்கிய அடையாளமாக இருக்கிறது. எப்படி இனம், மதம், மொழி அடையாளங்களை ஒழிக்க முடியாதோ, அதேபோன்று - சாதி அடையாளமும் அழிக்கப்படக் கூடியது அல்ல.

சாதிகளுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளும், ஒடுக்குமுறைகளும் ஒழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் அதற்கான விகிதாச்சார உரிமையும் அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சாதியினரின் மனித உரிமைகளுக்கு முழு மதிப்பளிக்க வேண்டும் - என நேரடியாக சமத்துவத்தையும் அமைதியையும் நாம் பேசுகிறோம்.

ஆனால், சாதி என்கிற சொல்லே பாவமானது என்று போலி வேடம் போடும் கட்சிகள் - இப்போது தேர்தல் வந்ததும் ஆளுக்கொரு சாதி மாநாடு நடத்துகிறார்கள். 

கடந்த டிசம்பர் மாதம், மதுரையிலும் திண்டுக்கல்லிலும் அதிமுக - திமுக கட்சிகள் ஆளுக்கொரு 'தெலுங்கு செட்டியார்' மாநாடு நடத்தினர். அடுத்ததாக, பாமக உட்பட எல்லா கட்சிகளும் திண்டிவனத்தில் ரெட்டியார் மாநாட்டில் பங்கேற்றனர். இப்போது திமுக - அதிமுக கட்சிகள் முத்தரையர் மாநாட்டை நடத்தப் போகின்றனர்.
24 மனை தெலுங்கு செட்டியார் சங்க மாநாட்டுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் 
திமுக MLA கே.சி. பழனிச்சாமி நடத்திய 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சாதிச்சங்க மாநாடு
சாதிகளின் உரிமையை எப்போதும் அங்கீகரிக்கும் பா.ம.க., மேலான கட்சியா? 

அல்லது 

தேர்தலுக்காக மட்டுமே சாதிகளிடம் மண்டியிடும் தி.மு.க., & அ.தி.மு.க., கட்சிகள் மேலானவையா?

பாமக மட்டும்தான் சாதிக்கட்சி என்று 'வாலறுந்த நாய்' போன்று கத்தும் முற்போக்கு வேடதாரிகள் - திமுக, அதிமுக சாதிச் சங்க மாநாட்டு குறித்தெல்லாம் கருத்து கூறாமல் மவுனம் காப்பது ஏன்?

தொடர்புடைய சுட்டி: 

சாதி மாநாட்டுக்கு ஜெயலலிதா வாழ்த்து: திராவிடக் கட்சிகளின் சாதி அரசியல்!

சனி, பிப்ரவரி 13, 2016

காதலர் தினம்: தமிழகப் பெண்களுக்கு எதிரான சதி!

காதல் திருமணங்களை நாம் ஆதிரிக்கிறோமா என்று கேட்டால் - ஆம், நிச்சயமாக ஆதரிக்கிறோம். ஆனால், காதல் என்பது கட்டுப்பாடற்றது, நிபந்தனையற்றது என்கிற கருத்துகளை நாம் ஏற்கவில்லை. 

'இனக்கவர்ச்சி அடிப்படையில் ஆண் பெண் இருவரிடையே ஏற்படும் அன்பு, நேசம் தான் காதல்' என்கிறது க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி. அதற்காக, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனும் மாணவியும் காதலிப்பதாகக் கூறினால், அதனை இந்தச் சமூகம் ஏற்காது.

ஒவ்வொரு உடன்பாட்டுக்கும் அதற்கென்று சில தகுதிகள் இருக்கின்றன. சீதையை மணமுடிக்கும் முன்பு இராமன்  சிவனது வில்லை உடைக்க வேண்டும் என்கிற நிபந்தனையை நிறைவேற்ற வேண்டியிருந்தது. அதுபோல - இன்றைய நவீன யுகத்திலும் காதலுக்கு என்று சில கட்டுப்பாடுகள் உள்ளன.

கட்டற்ற காதல் எனும் சதி

காதலுக்கு கட்டுப்பாடுகள் இல்லை, யாரையும் யாரும் காதலிக்கலாம், யாரும் எந்த வயதிலும் காதலிக்கலாம் என்கிற மோசடியான கருத்துகளை சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர். அதற்கான ஆயுதமாக காதலர் தினக் கொண்டாட்டங்களை பயன்படுத்துகின்றனர். இந்த தவறான பிரச்சாரத்தில் தமிழ் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்பட அனுமதிக்கக் கூடாது.

சினிமா, தொலைக்காட்சி, ஊடகம் எனும் பொழுதுபோக்கு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், நகை, முகப்பூச்சு, வாசனைத் திரவியங்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களை மக்கள் மீது திணிக்கும் நிறுவனங்களும் காதலர் தினக் கொண்டாட்டங்களை ஊக்குவிக்கின்றனர். அதே போன்று, காதல் திருமணங்களால் சாதி ஒழியும் என்கிற பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மோசடிக் கும்பலும் காதலர் தினத்தை கொண்டாடுகிறது.
நியாயமான காதல் ஏற்கத்தக்கதே. ஆனால், பொழுதுபோக்கு, ஆடம்பரம், சாதி ஒழிப்பு போர்வையில் முன்வைக்கப்படும் காதல் அயோக்கியத்தனமானது. அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்கால நலனுக்கு தீங்கானது. இந்த சதிகள் முறியடிக்கப்பட வேண்டும்.

நியாயமான காதல் என்பது எது?

1. காதல் என்பது திருமணத்தை நோக்கியது.

வெறும் இனக்கவர்ச்சிக்காக மட்டுமே காதல் இல்லை. தமிழர் பண்பாட்டில் காதல் என்பது திருமணத்தை நோக்கியது. ஆணோ, பெண்ணோ திருமணத்திற்கு முன்பாகவே சேர்ந்து வாழ்ந்து, பின்னர் பிரிந்து செல்வதை நமது பண்பாடு ஏற்கவில்லை (தமிழர் இலக்கியங்களில் களவு என்பது பின்னர் திருமணத்தில் முடிவதாகவே கொள்ளப்பட்டுள்ளது). எனவே, காதல் என்பது திருமணத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். 

2. திருமணம் என்பது வயது வந்தவர்களுக்கானது.

திருமணம் கட்டுப்பாடற்றது அல்ல. அது மிகத் தெளிவான சூழ்நிலையில், சரியான மனநிலையில், அனைத்தும் அறிந்து செய்துகொள்ளப்படும் உடன்படிக்கை ஆகும். வயது குறைவானவர்களின் காதலோ, திருமணமோ ஏற்புடையது அல்ல. 

'எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்' என்கிற கேள்வி எழும் நிலையில், பெண்களுக்கு எதிரான ஒதுக்குதல்களை ஒழிப்பதற்கான ஐநா குழு (CEDAW Committee) அதற்கு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

"திருமணம் செய்துகொள்ளும் ஆணும் பெண்ணும் மிக முக்கியமான பொறுப்புகளை ஏற்கிறார்கள். எனவே, அவர்கள் முழுமையாக பக்குவம் அடையாத நிலையிலும், செயல்திறனை அடையாத நிலையிலும் திருமணங்கள் அனுமதிக்கப்படக் கூடாது.

பெண்கள் உரிய வயதை அடையாது திருமணம் செய்துகொள்ளும் போது குழந்தை பெற்றுக்கொள்ள நேருதல், உடல்நலம் பாதிக்கப்படுதல், கல்வியை தவற விடுதல் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களது பொருளாதார சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.
உரிய வயதை அடையாமல் நடக்கும் திருமணங்கள் பெண்களை மட்டும் பாதிப்பதில்லை. அதனால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது. பெண்களின் திறன் மேம்பாடு தடைபடுகிறது, பெண்களின் தற்சார்பு பாதிக்கப்படுகிறது, வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைகிறது. இவற்றால், குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன, சமுதாயமும் பாதிப்படைகிறது" - என்கிறது ஐக்கிய நாடுகள் அவை.

(When men and women marry, they assume important responsibilities. Consequently, marriage should not be permitted before they have attained full maturity and capacity to act. According to the World Health Organization, when minors, particularly girls, marry and have children, their health can be adversely affected and their education is impeded. As a result their economic autonomy is restricted.

This not only affects women personally but also limits the development of their skills and independence and reduces access to employment, thereby detrimentally affecting their families and communities.

- CEDAW General Recommendations 21 on marriage and family)
ஐநா பெண்கள் உரிமை உடன்படிக்கை The Convention on the Elimination of All Forms of Discrimination against Women (CEDAW) பிரிவு 16-ன் கீழ், திருமணத்திற்கு பெண்களின் முழுமையான, சுதந்திரமான, விபரமறிந்து இசைவு தெரிவித்தல் கட்டாயம் ஆகும். அதாவது, திருமணத்திற்கு பின்னாலான பொறுப்புகள் குறித்த முழுமையான புரிதலும், யாரை திருமணம் செய்கிறோம், அவரது குணநலன்கள், பின்னணிகள் குறித்து புரிந்துகொள்ளும் திறனும் அவசியம் ஆகும்.

எனவே, முழுமையான புரிதலுக்கு ஏற்ற வயதை அடையாத பெண்களின் காதலோ, திருமணமோ சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

3. திருமண வயது வந்தவர்கள் யார்?

திருமணம் குறித்த முடிவை எடுப்பதற்கான குறைந்த பட்ச வயது 18 வயதாக இருக்க வேண்டும் என்பது ஐநா பெண்கள் உடன்படிக்கை (CEDAW) மற்றும் ஐநா குழந்தைகள் உடன்படிக்கை (CRC) ஆகியவற்றின் இலக்கு ஆகும். எனினும் அந்தந்த நாடுகளின் சூழலுக்கு ஏற்ப இதில் சிறிதளவு மாறுபாடுகள் உள்ளன.

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர், பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில், 21 வயதுக்கு முன்பு - மணமக்கள் தாமாக திருமணம் செய்ய அனுமதிப்பது இல்லை. 18 முதல் 21 வயது வரையிலான மணமக்களின் திருமணத்துக்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் ஆகும்.(இந்தியாவில் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் சட்டப்பூர்வமான வயதாக உள்ளது. இந்திய அரசின் ஆளுக்கொரு வயந்து வரம்பு, ஆண் பெண் சமத்துவத்துக்கு எதிரான விதியாக உள்ளது.)

இந்தியாவில் திருமணம் குறித்த தன்னிச்சையான முடிவை எட்டும் வயது 21 வயதாக இருக்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏனெனில், இந்தியாவில் வயதுக்கு வந்தோர் என்பது 21 ஆக உள்ளதால் (Indian Majority Act, 1875), திருமணத்திற்கும் அதுவே சரியானதாக இருக்கும் என்று தீர்ப்பளித்தது.

(ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 18 வயது என்பது போதுமானது. ஏனெனில், அந்த நாடுகளில், கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, குழந்தை வளர்ப்பு, மாத வருமானம், சமூகப் பாதுகாப்பு என அனைத்து தேவைகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்கிறது. இந்தியாவில் குடும்பத்தினரின் பொறுப்பாக உள்ள பெரும்பாலான கடமைகளை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அரசாங்கமே எடுத்துக்கொள்வதால், அங்கு திருமணத்துக்கு பின்னாலான தனி மனித பொறுப்புகள் குறைவாகும்.)

பெண் கல்வி, வேலை, உடல்நலம் - காதலை விட மேலானது

ஐநா குழந்தைகள் உடன்படிக்கை மற்றும் ஐநா பெண்கள் உடன்படிக்கை ஆகியவற்றின் படி, கல்வி மிக முக்கியமான உரிமை ஆகும். பதின்வயதில் திருமணம் நடந்தால், அதனால் பெண்களின் கல்வி வாய்ப்புகளும் திறன்மேம்பாடும் கடுமையாக பாதிப்படைகிறது 

(Many studies have shown that early marriage is universally associated with low levels of schooling and thus in violation of girls’ right to education as guaranteed by the CRC and CEDAW. A lack of education further denies girls’ their right to personal development as guaranteed in the CRC, which is crucial for them to prepare for adulthood and effectively contribute to the future wellbeing of their families and society - UNICEF 2008)

அவ்வாறே, வேலையும் பெண்களின் உரிமையாகக் கருதப்படுகிறது. முழுமையாக கல்வியை முடித்தல், வேலையை அடையும் அளவிற்கான திறன் மேம்பாடு - ஆகியவற்றுக்கான வயதை அடையும் முன்பாக திருமணம் நடைபெற அனுமதிக்கக் கூடாது.

சிறு வயது திருமணங்களினால், பெண்களின் உடல் நலன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, 21 வயதுக்கு முன்பாக குழந்தை பெறுவது பெண்களையும் பாதிக்கிறது, பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது.
எனவே, கல்வி, வேலை, உடல்நலம் ஆகியவை காதலை விட மேலானது என்பதை உணர்ந்து - திருமண வயதை 21 வயதாக நிருணயிப்பதே சரியானதாகும்.

காதல் - சாதியை ஒழிக்கும் என்பது பித்தலாட்டம்.

காதல் திருமணங்கள் அகமண முறையை ஒழிக்கும். இதனால், சாதி ஒழியும் என்று ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இது முட்டாள்தனமான, ஆபத்தான பிரச்சாரம் ஆகும். ஏனெனில், காதல் திருமணங்களால் சாதி ஒழிவது இல்லை.

சாதி மறுப்புத் திருமணங்கள் என்பவை,  ஒடுக்கப்பட்ட சாதிகளில் பொருளாதார நிலையில் முன்னேறிய தனி நபர்களை திசை திருப்புவதற்காக - கம்யூனிச பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சாரம் என்கிறார் தலித் வாய்ஸ் பத்திரிகை ஆசிரியரும், மூத்த தலித் சிந்தனையாளருமான வி.டி. ராஜ்சேகர். 
Dalit Voice விடி ராஜ்சேகர் அவர்களின் கலப்பு திருமணக் கருத்து 
(Caste - a nation with in the nation, VT Rajshekar, Editor, Dalit Voice)
ஒடுக்கப்பட்ட சாதி ஆண்கள் - அவர்களுக்கு மேலாக கருதப்படும் சாதி பெண்களை மணமுடிக்கும் வகையிலேயே இந்த பிரச்சாரம் இருப்பதையும், இதற்கு மாறாக, ஒடுக்கப்பட்ட சாதி பெண்கள் - அவர்களுக்கு மேலாக கருதப்படும் சாதி ஆண்களை மணமுடிக்கும் வகையில் இந்த பிரச்சாரம் இல்லாததையும் - வி.டி. ராஜ்சேகர் சுட்டிக்காட்டுகிறார். எனவே, சாதி கலப்புத் திருமணம் என்கிற பிரச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார் அவர். (Caste - a nation with in the nation, VT Rajshekar, Editor, Dalit Voice)

காதல் திருமணங்களால் சாதி ஒழிவது இல்லை. இதற்கு மாறாக, இளம் வயது திருமணங்களை இந்தப் பிரச்சாரம் ஊக்குவிப்பதால் - பெண் கல்வி பாதிக்கப்படுதல், பொருளாதார தற்சார்பு பாதிக்கப்படுதல், இளம்வயது திருமணத்தால், உடல்நலம் கெடுதல் என ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் நிலையையே இந்த பிரச்சாரம் ஏற்படுத்துகிறது.

21 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்ய 'சாதி ஒழிப்பு காதல் பிரச்சாரம்' தூண்டுகிறது. இது பெண்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டை தடுக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

பதின்வயது எனப்படுகிற 20 வயதுக்கு கீழான காலம் மனித வாழ்வில் மிக முக்கியமான காலம் ஆகும். ஐநா குழந்தைகள் அமைப்பு யூனிசெப் இதனை 'வாய்ப்புகளின் காலம்' என அழைக்கிறது. இந்த வயதுதான் கல்வி, தொழில்திறமைகள் உள்ளிட்ட எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அடித்தளத்தை அமைக்கும் வயதாகும்.

காதல் திருமணங்கள் குறித்த குழப்பமான, திசை திருப்பும் பிரச்சாரங்கள் தடுக்கப்பட வேண்டும். கல்வி, வேலை, உடல்நலம் ஆகிய பெண்களின் உரிமைகளே முதன்மையானவை. இவற்றுக்கு பின்னரே திருமணம் முன்னிறுத்தப்பட வேண்டும்.

இந்த நிலையை அடைய ஆணுக்கு இணையாக பெண்களின் திருமண வயதையும் 21 வயது என மாற்ற வேண்டும். அல்லது, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ளது போன்று, 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வேண்டும்.

ஐநா அவை 2015 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டுள்ள 2015 - 2030 நீடித்திருக்கும் வளர்ச்சிக்கான லட்சியங்களில் (UN Sustainable development goals) 'குறைந்த வயது திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும்' என்பதும் ஒன்றாகும். அந்த லட்சியம் தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட பதின்வயது திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும்.
பொழுதுபோக்கு, ஆடம்பரம், சாதி ஒழிப்பு போர்வையில் முன்வைக்கப்படும் - அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான, ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்கால நலனுக்கு தீங்கான, கட்டற்ற காதல் பிரச்சாரம் முறியடிக்கப்பட வேண்டும்.

வியாழன், பிப்ரவரி 11, 2016

தி இந்து: ஊடகத்தில் ஒரு பலான தொழில்!

பாமகவை மட்டம் தட்ட வேண்டும் என்கிற படுகேவலமான நோக்கத்தில் தொழிலில் இறங்கியுள்ளது தி இந்து பத்திரிகை. ஒரு நாளிலேயே 7500 வாக்க்குகள் மட்டுமே பதிவாகும் தி இந்து தமிழ் இணையத்தில், ஒரு மணி நேரத்தில் 8000 வாக்குகளை தேமுதிகவிற்கு அளித்து பாமகவிற்கு மக்கள் ஆதரவு குறைவு என இட்டுக்கட்டியுள்ளது இந்த மோசடி பத்திரிகை.
தி இந்து presstitute

கேவலமான புத்தி கொண்ட சில ஊடகத்தினரை, presstitutes என்று முன்னாள் இராணுவ தளபதி வி.கே.சிங் அவர்களும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜுவும் அழைத்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுவோருக்கு இணையாக ஊடகத்தினை விலைக்கு விற்கும் மட்டமான ஊடகங்களை இந்த வார்த்தைக் குறிக்கும்.
தமிழ் ஊடகத்தில் presstitute தொழில்!

தமிழ்நாட்டில் தி இந்து பத்திரிகையும் விகடன் குழுமமும் # தொழிலை செய்து வருகின்றனர். ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் பத்திரிகை தர்மத்தை வீலை பேசி விற்கின்றனர். குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராகவும், தரம் தாழ்த்தியும் செய்தி வெளியிடுவது இந்த கும்பலின் 'பலான தொழில்' ஆகும்.

இந்த வரிசையில், "கருத்துக்கணிப்பு" என்கிற பெயரில் presstitute வேலையை செய்துள்ளது இந்து தமிழ் நாளிதழ்.

கருத்துக்கணிப்பு மோசடி

"அதிமுக, திமுக நீங்கலாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இம்முறை அரசியல் ரீதியில் மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்திருப்பது..." 1. தேமுதிக, 2. மக்கள் நலக் கூட்டணி, 3. பாமக - என்று ஒரு கருத்துக்கணிப்பை 9.2.2016 செவ்வாய் மாலை 5 மணிக்கு அறிவித்தது.
12.19 மணிக்கு, மொத்த வாக்குகள் 12126


இந்தக் கணிப்பில் தொடக்கம் முதலே பாமக முதலிடத்தில் இருந்தது. 10.2.2016 புதன் மதியம் 12.19 மணிக்கு, மொத்த வாக்குகள் 12126 எனவும் - பாமக - 43% தேமுதிக 31% என்றும் இருந்தது. அதாவது, கருத்துக் கணிப்பு தொடங்கி 19 மணி நேரம் கடந்து 12126 வாக்குகள் இருந்தன.
மதியம் 1.34 மணிக்கு 20363 வாக்குகள் 

இதே நேரத்தில் - பாமகவுக்கு ஆதரவு என்கிற கணிப்பை மாற்ற, செயற்கையாக தேமுதிகவுக்கு வாக்குகளை சேர்த்தது தி இந்து தமிழ் கும்பல். மதியம் 1.34 மணிக்கு 20363 வாக்குகள் எனவும் பாமக - 28% தேமுதிக 54% எனவும் மாற்றப்பட்டது.
மாலை 5 மணிக்கு  25357 வாக்குகள்
கடைசியில் மாலை 5 மணிக்கு  25357 வாக்குகள் எனவும் பாமக - 38% தேமுதிக 44% எனவும் முடிக்கப்பட்டது.

வாக்கு: ஒரு நாளில் 7500, ஒரு மணி நேரத்தில் 8000 

இந்தக் கணிப்பில், சுமார் ஒரு மணி நேரத்தில் 8000 வாக்குகளை தேமுதிகவுக்கு செயற்கையாக அளித்து, பாமகவை குறைத்துக் காட்டியது தி இந்து. 

இந்த பத்திரிகை நடத்தும் கருத்துக்கணிப்புகளின் மொத்த வாக்குகளே 8000 என்ற அளவை 24 மணி நேரத்தில் கூட எட்டுவதில்லை. 11.2.2016 வியாழக்கிழமை, ஜெயலலிதா குறித்த வேறு ஒரு கருத்துக்கணிப்பில் 24 மணி நேரத்தில் மொத்தமே 7418 பேர்தான் வாக்களித்துள்ளனர்.
24 மணி நேரத்தில் மொத்தமே 7418 வாக்குகள்


ஒரு நாளிலேயே 7500 வாக்க்குகள் மட்டுமே பதிவாகும் தி இந்து இணையத்தில், ஒரு மணி நேரத்தில் 8000 வாக்கு விஜயகாந்திற்காக மாற்றப்பட்டது எப்படி?

"அதிமுக, திமுக நீங்கலாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இம்முறை அரசியல் ரீதியில் மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்திருப்பது..." என்ற கேள்விக்கு மக்களின் பதில் "பாமக" என்று வெளிவரக்கூடாது என்பதற்காகவே இந்த வெட்கம் கெட்ட presstitute வேலையை செய்துள்ளது தி இந்து தமிழ்.

ஞாயிறு, பிப்ரவரி 07, 2016

கலவர கொலைகாரனுக்கு அரசு பண உதவி: தமிழ் நாட்டில் நடக்கும் சாதிவெறி அட்டூழியம்!

மரக்காணம் கலவரம் தொடர்பில், திட்டமிட்டு கொலை செய்த கொலைகாரனுக்கே நிவாரண உதவி வழங்கி சாதனைப் படைத்துள்ளது தமிழ்நாடு அரசு. 

மரக்காணம் கலவர வழக்கில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது திண்டிவனம் நீதிமன்றம். ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளில் ஒருவர் அரசு நிவாரண பண உதவியும் பெற்றுள்ளார்.
மரக்காணம் வன்முறை: அநீதியின் உச்சம்

2013 ஏப்ரல் 25 ஆம் நாள் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கு சென்ற வன்னியர் சங்கத்தினர் மீது கிழக்குக் கடற்கரை சாலையில் திட்டமிட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. செல்வராஜ், விவேக் எனும் வன்னியர் சங்கத் தொண்டர்கள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

வன்னியர்களை படுகொலை செய்துவிட்டு, வன்னியர்கள் மீதே கலவரப் பழியை சுமத்தினர். இந்த அநீதிக்கு தமிழ்நாட்டின் அத்தனை ஊடகங்களும், பாமக தவிர மீதமுள்ள அத்தனை கட்சிகளும், தமிழக அரசும் துணை போனது. மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார். பாமகவின் அத்தனை தலைவர்களும் சிறையில் தள்ளப்பட்டனர். இந்திய வரலாற்றில் முதல் முறையாக 134 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டமும் குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டது.
எரிந்த கொட்டகையின் உள்ளே எரியாத மாடு (The Hindu)
தலித் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், 'வழக்கம் போல' பன்மடங்காக மிகைப்படுத்திக் காட்டப்பட்டன. சில குடிசைகள் எரிந்த நிகழ்வு பல குடிசைகளாக மாற்றப்பட்டது. எரிந்த கொட்டகையின் உள்ளே எரியாதை மாட்டை படுக்க வைத்து படம் காட்டியது தி இந்து. கடைசியில் 'வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்' நிவாரண உதவிகள் அளித்தார்கள்.

அரசு நிவாரண உதவி பெற்ற கொலைகாரன்

அரசின் நிவாரண உதவிகளைப் பெற்றவர்கள் பட்டியலில் ஒருவர் 'மரக்காணம், கழிக்குப்பத்தை சேர்ந்த சேகர்' என்பவராகும். இவரது மாட்டிறைச்சிக்கடை தீயினால் சேதமடைந்தத்தாகக் கூறி, நிவாரண உதவிக்கு  2.6.2013 ஆம் நாள் பரிந்துரை செய்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

ஆனால், 'கழிக்குப்பம் சேகர்' எனும் இதே நபர்தான் 'வன்னியர் சங்கத்தை சேர்ந்த அரியலூர் செல்வராஜ்' எனும் பாமக தொண்டரை வெட்டிக்கொன்றார் என குற்றம் உறுதி செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

ஆக, கொலை செய்த கொலைக்காரனுக்கே அரசு நிவாரண உதவியை அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. அரசு நிவாரணத்துக்காக கொலை செய்தவர் பெயரே பரிந்துரைக்கப்பட்டுள்ள தகவல் திண்டிவனம் நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது (படம் காண்க).

திண்டிவனம் நீதிமன்ற தீர்ப்பு

கலவரம் செய் - அரசு நிவாரணம் வாங்கு

திட்டமிட்டு கலவரம் செய்து பழியை பாதிக்கப்பட்டவர்கள் மீதே போடுவது அல்லது எதேச்சையாக நடக்கும் மோதல்களை, மாபெரும் கலவரங்களாக சித்தரிப்பது - ஆகிய நடவடிக்கைகள் மூலம் அரசிடம் பெருமளவு பணம் கறக்கும் புதிய போக்கு தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது.

தருமபுரியில் முதல்நாள் முப்பது குடிசைகள் எரிந்த நிகழ்வு, அடுத்த நாள் 300 வீடுகள் எரிந்ததாக மாற்றப்பட்டது. பத்து கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது. மரக்காணத்தில், கொலை செய்துவிட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் நிவாரண உதவி வாங்கும் கொடுமை நடந்துள்ளது.

(கலவரங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு முழு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்பதிலோ, கலவரத்துக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலோ நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், போலியான இழப்புகளுக்கு நிவாரணமும், செய்யாத குற்றங்களுக்கு பழி சுமப்பதும் சகிக்ககூடியவை அல்ல).

சாதிக்கு ஒரு நீதி கிடையாது. சாதிக்கு ஒரு நியாயம் இருக்க முடியாது. அரசும், ஊடகங்களும், நடுநிலையாளர்களும் இனியாவது நியாயமாக நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். 

எது நடந்தாலும் வன்னியர்கள் மீது மட்டுமே குற்றம் சாட்டும் போக்கு தொடர்ந்தால் - அது அடக்கப்படும் சமூகம் வெடித்து கிளம்பும் சூழ் நிலையை நிச்சயம் ஏற்படுத்தும்!

சனி, பிப்ரவரி 06, 2016

விகடன் குழுமத்தின் வன்மம்: தனது பழியை பிறர் மீது சுமத்தும் அநியாயம்!

பேராசிரியர் ராஜநாயகம் என்பவரின்  கருத்துக் கணிப்பினை, "லயோலா கருத்துக் கணிப்பு" என்று மோசடியாக பிரச்சாரம் செய்தது விகடன் குழுமம். 

இப்போது, அதே விகடன் குழுமத்தினர், மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்தான் 'லயோலா கருத்துக்கணிப்பு' என்று சொன்னது போலவும், விகடன் கும்பல் அதனை மறுப்பது போலவும் 'தலைகீழாக' செய்தி வெளியிட்டுள்ளனர். 
விகடன் மோசடி டிவிட்டர் செய்தி 23.1.2016
ஜூனியர் விகடன் கேள்வி பதில்
பின்னணி என்ன?

ஜனவரி 23 பகல் 11.30 மணியளவில் இராஜநாயகம் வெளியிட்ட அறிக்கையில் 'லயோலா' என்கிற வார்த்தையே இல்லாத நிலையில் - பகல் 12.30 மணிக்கு  'லயோலா கருத்து கணிப்பு' என்று டிவிட்டரில் செய்தி வெளியிட்டது விகடன். உடனடியாக இதனை விகடன் இணைய தளத்திலும் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, பகல் 1.11 மணியளவில் "லயோலா - கல்லூரி வெளியிடும் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் - சரியாக இருக்குமா?" என்கிற ஒரு கருத்துக் கணிப்பை டிவிட்டரில் வெளியிட்டனர்.
விகடன் மோசடி முகநூல் செய்தி 23.1.2016

விகடன் மோசடி டிவிட்டர் செய்தி 23.1.2016

இதன் மூலம் - தமிழ்நாட்டு மக்களை குழப்பி, "திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு" என லயோலா கல்லூரியே சொன்னதாக நடகமாடியது விகடன். இதுகுறித்து விரிவாக இந்த இணைப்பில் காணலாம்: http://arulgreen.blogspot.com/2016/01/Paid-News-in-Vikatan.html

ஜூனியர் விகடனின் புதிய பித்தலாட்டம்

இப்போது "மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்தான் 'லயோலா கருத்துக்கணிப்பு' என்று சொன்னது போலவும், அதற்கு அது லயோலா கருத்துக்கணிப்பு அல்ல" என்று விகடன் குழுமம் விளக்கம் அளிப்பதாகவும் - ஜூனியர் விகடனில் 'கேள்வியும் நானே - பதிலும் நானே' வெளியிட்டுள்ளனர்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் 23.1.2016 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் "லயோலா கல்லூரியில் பணியாற்றிய போது மக்கள் ஆய்வகம் என்ற அமைப்பை தொடங்கி கருத்துக் கணிப்புகளை நடத்திவந்த பேராசிரியர் இராஜநாயகம், கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதே அமைப்பின் சார்பில் கருத்துக்கணிப்பு கடைவிரித்து நடத்தி வருகிறார்" என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், 'லயோலா கருத்துக்கணிப்பு' என்று மருத்துவர் அய்யா அவர்கள் சொன்னதாக அப்பட்டமாக பொய் சொல்கிறது ஜூனியர் விகடன். 

தவறாக செய்தி வெளியிட்ட விகடன் குழுமம் அதற்காக மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால், விகடன் குழும மோசடியை அம்பலப்படுத்தியவர்கள் மீதே இப்போது பழியைப் போடுகின்றனர்.

விகடன் குழுமத்துக்கு எதுக்கு இந்த மானம் கெட்ட பிழைப்பு?

தொடர்புடைய செய்திகள்:

1. விகடன் பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டும்: பணத்துக்காக செய்தி வெளியிடுவதை நிறுத்து! 

2. மாணவிகள் தற்கொலை: SVS கல்லூரிக்கு விளம்பரம் செய்த ஜூனியர் விகடனுக்கு என்ன தண்டனை? 

3. 'விலைபோன' தி இந்து + விகடன்: விழுப்புரம் SVS கல்லூரி விவகாரத்தில் உண்மையை மறைப்பது ஏன்? 

செவ்வாய், பிப்ரவரி 02, 2016

தலித் முதல்வர்: மக்கள் நலக் கூட்டணி ஏற்காதது அதிர்ச்சியளிக்கிறது

தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே. தமிழகத்தில் ஜனநாயகம் மேம்பட வேண்டும் என்கிற நோக்கில், அனைத்து சமூகங்களும் அதிகாரத்தில் பங்குபெற வேண்டும் என்கிற கோரிக்கையை 1991, 96 தேர்தல்களில் பா.ம.க., முன் வைத்தது.
தலித், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், இதர பிரிவினர் என ஐந்தாண்டுகளுக்கும் ஆண்டிற்கொருவர் முதலமைச்சராக சுழற்சி முறையில் பதவி வகிக்க வேண்டும். அதன்படி, முதலில் தலித் ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்கிற நிலைப்பாட்டை வைத்து பாமக தேர்தலை சந்தித்தது.

அப்போதைய சூழலில், இந்தக் கோரிக்கைக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்பதால், பின்னர் மத்திய அரசின் 1998 ஆம் ஆண்டில் பங்கேற்ற போது, பா.ம.க.,வின் முதல் மத்திய அமைச்சராக தலித் ஒருவரை பதவியில் அமர்த்தியது பா.ம.க. 

(அதன் பின்னர் கூட்டணிகளில் இடம் பெற்றதால் முதல்வர் கோரிக்கையை பாமக முன்னெடுக்கவில்லை. தற்போது ஒரு தகுதியான முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை பா.ம.க., முன் நிறுத்துவதால் இப்போதும் தலித் முதல்வர் என்கிற முழக்கத்தை முன்வைக்கும் சூழலில் பா.ம.க., இல்லை.)

முதலமைச்சர் வேட்பாளர் - இப்போது சாதிக்க முடியும்

மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு பிரதான  கட்சியாக இருக்கிறது. இடது சாரிகளுக்கோ, வைகோவுக்கோ முதல்வர் கோரிக்கை பெரிதாக இருப்பதாக தெரியவில்லை. மத்திய அமைச்சர் பதவிகளே வேண்டாம் என்று துறந்தவர்கள் அவர்கள்.

இந்நிலையில், திருமாவளவன் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று மக்கள் நலக் கூட்டணியினர் அறிவிப்பது ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும். இதனைச் சொல்வதில் அவர்களுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை?

மக்கள் நலக் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் யாருமே நம்பவில்லை. எனவே, இப்போதைய சூழலில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து ஒரு முதலமைச்சர் வருவார் என்பதை உறுதியாக கூற வாய்ப்பே இல்லை.

ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ஒரு முதலமைச்சர் வேட்பாளர் வர முடியும். இதற்கு எந்தத் தடையும் இல்லை.

எனவே, தமிழ்நாட்டின் முதலமைச்சராக தலித் ஒருவர் பதவியேற்கும் காலம் வருவதற்கு தாமதம் ஆனால் கூட, தலித் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார் என்கிற வரலாற்றையாவது இந்த தேர்தலில் சாத்தியமாக்க முடியும்.
அதிமுக கூட்டணியில் - செல்வி ஜெயலலிதா, திமுக கூட்டணியில் - கலைஞர் கருணாநிதி (அல்லது) மு.க. ஸ்டாலின், பாமகவில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பாஜக கூட்டணியில் விஜயகாந்த் - என்று நான்கு முதலமைச்சர் வேட்பாளர்கள் களத்தில் இறங்க வாய்ப்புக் கூடியுள்ளது.

இதன்மூலம், இரண்டு முன்னேறிய வகுப்பு முதலமைச்சர் வேட்பாளர்கள், இரண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முதலமைச்சர் வேட்பாளர்கள் களத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் - தாழ்த்தப்பட்ட வகுப்பு வேட்பாளர் ஒருவரும் தமிழக தேர்தல் கலத்தில் நிற்பது தமிழக அரசியல் சூழலை மேம்படுத்தவே செய்யும்.

தலித் முதலமைச்சர் வேட்பாளர் - ஒரு வரலாற்று வாய்ப்பு

தலித் முதலமைச்சர் வேட்பாளர் எனும் இந்த வரலாற்று வாய்ப்பை மக்கள் நலக்கூட்டணி பயன்படுத்த வேண்டும். 2016 ஆம் ஆண்டின் தேர்தலில், தலித் ஒருவர் தமிழகத்தின் பிரதான கூட்டணிகளில் ஒன்றின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார் என்கிற வரலாற்றை மக்கள் நலக் கூட்டாணியால் மட்டுமே ஏற்படுத்த முடியும்.

இந்த வரலாற்றின் படிப்பினைகள் - எதிர்காலத்தில் தலித் ஒருவர் உண்மையாகவே தமிழக முதலமைச்சர் ஆக படிக்கல்லாக அமையும்.