Pages

புதன், அக்டோபர் 10, 2012

இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்கு இஸ்லாம் காரணமா? 


தான் சொந்தமாக நடத்தி வரும் வலைப்பதிவில் தனது எழுத்துப் படைப்புக்கள் மூலம் பெண் சிறுமிகளின் பள்ளிப்படிப்பை தலிபான்கள் தடுத்து நிறுத்திவருவதை வெளி உலகுக்கு கொண்டுவந்த மலலா யூசப்சாய் தலிபான்கள் என நம்பப்படுவோரால் சுடப்பட்டுள்ளார். (மலலா யூசப்சாயின் கட்டுரைகள்: Diary of a Pakistani schoolgirl)
மலலா யூசப்சாய் 
செவ்வாய்க்கிழமை (9.10.2012) பாகிஸ்தான் ஸ்வாட் வெலி பிரதேசத்தில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவர் மீது இத்துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தினர். படுகாயமடைந்த மாலலா தற்போது சிகிச்சை பெற்று குணமடைந்து வருகின்றார்.

இதுகுறித்த ஒரு பதிவு "முகம்மதுவின் படத்துக்காக ஒன்றுக் கூடிய பாகிஸ்தானிய கும்பல்கள், தாலிபானின் மனித விரோத செயல்களைக் கண்டிக்க ஒன்றுக் கூடுமா என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்" என்று கூறுகிறது. (இங்கே காண்க: இளம்பெண் வலைப்பதிவர் சுடப்பட்டமைக்குக் கடும் கண்டனங்கள்)

இஸ்லாம் - தலிபான்: யாரருடையக் குற்றம்? 

இந்த துப்பாக்கிச்சூடு நிகழ்வுக்காக இஸ்லாமிய மதம் தூற்றப்படும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் தலிபான்களின் செயல் இசுலாமியர்களின் செயலாக வர்ணிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், இஸ்லாம் மதத்தைக் காப்பதற்காக தலிபான்கள் இந்த துப்பாக்கிச்சூட்டினை நடத்தியதாகக் கூறப்படும் அதேநேரத்தில் - இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் அரசுதான் மலலா யூசப்சாய்க்கு அமைத்திக்கான தேசிய விருதினை அளித்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.
காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச்சூடு நிகழ்வுக்காக பாகிஸ்தான் அதிபரும், இராணுவ தளபதியும் மற்ற தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். (Attack on Malala Yousafzai widely condemned)

பாகிஸ்தானின் பெஷாவர், முல்தான், மிங்கோரா எனப் பலநகரங்களில் எதிர்ப்பு ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன.  ஸ்வாட் வெலி பள்ளத்தாக்கில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் எல்லா பள்ளிகளிலும் மலலா யூசப்சாய் குணமடைய வேண்டும் என்று வழிபாடுகள் நடந்து வருகின்றன. (Malala Yousafzai: Pakistan bullet surgery 'successful')
பாகிஸ்தானின் செய்தி ஊடகங்கள் இந்த நிகழ்வைக் கடுமையாக கண்டித்துள்ளன. (Pakistan media condemn attack on Malala Yousafzai)

எனவே, இந்த நிகழ்வுக்காக இஸ்லாமிய மதத்தை யாரேனும் குற்றம் சொல்வார்களேயானால் - அது மிகப்பிழையான கருத்தாகவே இருக்கும்.

மதமும் மனிதனும்

மதம் என்று பார்க்கும் போது - உலகின் எல்லா மதங்களையும் ஏதோ ஒரு காரணத்திற்காக குற்றம் சாட்ட முடியும். அதே நேரத்தில் மிகப் பெரும்பான்மையான மனிதர்களுக்கு மதம் தேவையான ஒன்றாகவும் இருக்கிறது.

ஒருபக்கம் மதம் தேவைதான், மறுபக்கம் அதனால் தொந்தரவும் இருக்கிறது என்று கருதுவோமானால் - அவர்வர் பின்பற்றும் மதத்தின் கேடுகளை அந்தந்த மதத்தினர் எதிர்க்க முற்படுவதுதான் ஒரே வாய்ப்பு.

மதத்தின் பேரால் மேற்கொள்ளப்படும் கொடூரங்களை எல்லோரும் கண்டிக்க வேண்டும். அதாவது கொடூரங்களை கண்டிக்க வேண்டும், மதத்தை அல்ல.

தொடர்புடைய சுட்டி:

24 கருத்துகள்:

suvanappiriyan சொன்னது…

//ஒருபக்கம் மதம் தேவைதான், மறுபக்கம் அதனால் தொந்தரவும் இருக்கிறது என்று கருதுவோமானால் - அவர்வர் பின்பற்றும் மதத்தின் கேடுகளை அந்தந்த மதத்தினர் எதிர்க்க முற்படுவதுதான் ஒரே வாய்ப்பு.

மதத்தின் பேரால் மேற்கொள்ளப்படும் கொடூரங்களை எல்லோரும் கண்டிக்க வேண்டும். அதாவது கொடூரங்களை கண்டிக்க வேண்டும், மதத்தை அல்ல.//

நடுநிலையான பார்வை! இந்த துப்பாக்கிச் சூட்டை யார் செய்திருந்தாலும் அதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

சிராஜ் சொன்னது…

யார் சுட்டது என்று தெரியவில்லை..பட் அந்த பெண்ணிற்க்கு பாகிஸ்தானிய மக்கள் ஆதரவு கொடுத்தது நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்... சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிச்சயம் பல அத்தாட்சிகள் இருக்கின்றன...

பெயரில்லா சொன்னது…

மதத்தின் பேரால் மேற்கொள்ளப்படும் கொடூரங்களை எல்லோரும் கண்டிக்க வேண்டும். அதாவது கொடூரங்களை கண்டிக்க வேண்டும், மதத்தை அல்ல..////

அய்யா, மதம் தானே கொடூரத்தை கற்று கொடுக்கிறது. அது குறித்த புரிதல் இல்லாமல் பொத்தாம் பொதுவாக எழுதுவது வீண்.

ஆத்மா சொன்னது…

சில வேளைகளில் தனிப்பட்ட பிணக்குகளும் காரணமாக இருக்குமோ..

அருள் சொன்னது…

பெயரில்லா சொன்னது…

// //அய்யா, மதம் தானே கொடூரத்தை கற்று கொடுக்கிறது. அது குறித்த புரிதல் இல்லாமல் பொத்தாம் பொதுவாக எழுதுவது வீண்.// //

மதம் மட்டுமா கொடூரங்களைக் கற்றுக்கொடுக்கிறது?

இனம் கொடூரத்தை கற்று கொடுக்கவில்லையா? (சிங்களம்)
மொழி வன்முறையைத் தூண்டவில்லையா? (இந்தி)
நாடு கொடூரத்தை கற்று கொடுக்கவில்லையா? (அமெரிக்கா to ஈராக்)
சாதி கொடூரத்தை கற்று கொடுக்கவில்லையா? (எண்ணிலடங்கா)

இவை எல்லாவற்றையும் எப்படி? எப்போது ஒழிப்பீர்கள்? எல்லா அடையாளங்களையும் ஒழித்த 'வெற்று' உலகம் எப்படி இருக்கும்?

சதீஷ் செல்லதுரை சொன்னது…

யார் சுட்டாலும் கண்டிக்கத்தக்கதே....

G u l a m சொன்னது…

நல்லதோர் இடுகை சகோ

பகிர்ந்தமைக்கு நன்றி!

Aashiq Ahamed சொன்னது…

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

மற்றுமொரு நடுநிலையான பார்வை அருள் சார். மிக்க நன்றி.

@ சகோதரர் பெயரில்லா,

//அய்யா, மதம் தானே கொடூரத்தை கற்று கொடுக்கிறது. அது குறித்த புரிதல் இல்லாமல் பொத்தாம் பொதுவாக எழுதுவது வீண்.//

இங்கே எத்தனையோ பேர் மார்க்கத்தின் அடிப்படையில் தவறை கண்டிக்கின்றோமே, நாங்கள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா? யாரோ சில முட்டாள்கள் செய்யும் செயலை இஸ்லாமுடன் ஒப்பிட தெரிந்த உங்களுக்கு இங்கே பெரும்பான்மை முஸ்லிம் சமூகம் அதே இஸ்லாத்தின் அடிப்படையில் இந்த முட்டாள்தனத்தை எதிர்க்கின்றதே அதனை கணக்கில் கொள்ளாதது ஏன்? அப்போ நாங்கள் முஸ்லிம்கள் இல்லையா? இப்படியாக செய்வது மார்க்கத்திற்கு முரணானது என்று சொல்லும் நாங்கள் மார்க்கத்தின் அடிப்படையில் நடக்கவில்லையா? இல்ல நாங்களெல்லாம் உண்மையான முஸ்லிம்கள் இல்லை என்று சொல்லப்போகின்றீர்களா?

யார் இதை செய்திருந்தாலும் கண்டிக்கத்தக்கதே. வழக்கம் போல இஸ்லாமோபோபியாக்கள் இந்த நிகழ்வை தங்களுக்கு சாதகமாக்க முயற்சித்து கத்தி விட்டு அடங்கிவிடுவார்கள்.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

பெயரில்லா சொன்னது…

மதத்தின் பெயரால் கொடூரங்களை நிகழ்த்துவோர மறைமுகமாக ஆதரிப்பதும், அல்லதுக் கண்டு கொள்ளாமல் விடுவதும் - மதத்தை வளர்த்து எடுப்பதும் ஒன்று தான் ..

பாகிஸ்தான் தாலிபான்களுக்கு மறைமுகமாக அடைக்கலம் கொடுத்து வந்தத்தை ஒசாமாவின் மரணம் நிரூபித்தன. பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் இயல்பாகும் ... !

இஸ்லாமில் இருப்போர் அனைவரும் மோசமானவர்கள் இல்லை என்பது தான் எமதுக் கருத்தும், சொல்லப் போனால் அந்தப் பெண் கூட ஒரு இஸ்லாமியரே. இங்கு பிரச்சனையே புதுமை விரும்பிகள் - பழமை விரும்பிகள் ஆகியோருக்கு இடையில் நடைப்பெறும் முரண்பாடுகள் தான் ...

மாற்றம் ஒன்றே மாறதவை, அதற்கு கடவுளும், மதமும் விதிவிலக்கல்ல.. புதுமை விரும்பி இஸ்லாமியர் ஜனநாயக விழுமியங்கள், தனி மனித சுதந்திரங்கள், மனித உரிமைகள் போன்றவற்றை நிலைநிறுத்தப் போராடுகின்றார்கள்.

ஆனால் பழமைவிரும்பிகளோ மாற்றங்களை எதிர்த்தும், மாற்றங்களை கொண்டுவருவோரை இல்லாமல் செய்தும் தமது பாசிசத்தை வளர்த்து வருகின்றார்கள் ... !

F.NIHAZA சொன்னது…

பதிவு அருமை சகோ.....

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அருள் - கொடூரச் செயல்களைக் கண்டிக்க வேண்டும். அதே நேரத்தில் அச்செயலுக்குப் பின்னால் மதமென்று ஒன்று இருப்பின் அதனையும் கண்டிக்க வேண்டும். நல்வாழ்த்துகள் அருள் - நட்புடன் சீனா

கபிலன் சொன்னது…

கடைசியா என்ன தான் சொல்ல வர்றீங்க ? எனக்கு ஒண்ணுமே புரியல.

சரி அந்த இளம் பெண் சுடப்பட்டதிற்கு உண்மையாகவே என்ன காரணம் ? ஏதாவது தனிப்பட்ட காரணமா? இதுக்கு மட்டும் கொஞ்சம் பதில் சொல்லுங்க ?

UNMAIKAL சொன்னது…

மாணவியை சுட்டவர் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு: பாகிஸ்தான் அறிவிப்பு

Published: வியாழக்கிழமை, அக்டோபர் 11, 2012, 10:07 [IST]

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பள்ளி மாணவியை சுட்ட தலிபான் தீவிரவாதி குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவியான மலாலா யூசுப்சாய்(வயது 14), தீவிரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பி வந்தார்.

இதன் காரணமாக அமைதிக்கான தேசிய விருதை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி பேருந்தில் வந்து கொண்டிருந்த மாணவி மலாலாவை, தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டான்.

இதில் சிறுமியின் தலையில் ஒரு குண்டும், முதுகெலும்பு அருகிலும் ஒரு குண்டும் பாய்ந்தது.

படுகாயமடைந்த அவர், பெஷாவரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலையில் வீக்கத்தை குறைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாணவிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், மலாலா மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ சிகிச்சைக்காக மலாலாவை எந்நேரமும் துபாய்க்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் விமான ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது .

தாலிபான் இயக்கம் ஒப்புதல்
முன்னதாக தெஹ்ரிக்- இ- தலிபான் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் இக்ஷானுல்லா இக்ஸன் கூறுகையில்,

மாணவி மீது தாக்குதல் நடத்தியது நாங்கள்தான்.

தலிபான்களுக்கு எதிராக மலாலா தொடர்ந்து பேசி வந்தார்.

அதனால்தான் தாக்குதல் நடத்தினோம்.

அவர் உயிர் பிழைத்தாலும் மீண்டும் தாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் மலாலாவை சுட்டவன் குறித்து தகவல் தரும் நபர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பெஷாவரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அந்நாட்டு அமைச்சர் இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

http://tamil.oneindia.in/news/2012/10/11/world-pak-announces-rs-1-crore-information-on-malala-attack-162989.html

அருள் சொன்னது…

கபிலன் கூறியது...

// //சரி அந்த இளம் பெண் சுடப்பட்டதிற்கு உண்மையாகவே என்ன காரணம் ? ஏதாவது தனிப்பட்ட காரணமா? இதுக்கு மட்டும் கொஞ்சம் பதில் சொல்லுங்க ?// //

தலிபான்கள் சுட்டதாகவே நம்பப்படுவதாகவே நான் குறிப்பிட்டுள்ளேன். தலிபான் என்பது நமது ஊரில் இருப்பது போன்ற ஒரு அரசியல் கட்சி அல்ல. தலைமறைவு இயக்கம். எனவே, தலிபான்கள் பெயரால் யாராவது அறிக்கை விட்டால் கூட அதனை நம்புவது கடினம்.

மலலா யூசப்சாய் தலிபானுக்கு எதிராக எழுதியதால் அவர்களே சுட்டிருக்கும் வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில் தலிபானுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு ஏற்பட வேண்டுமென்பதற்காக அமெரிக்க உளவுத்துறையினர் கூட செய்திருக்கலாம். யார் சுட்டது? எதற்காக சுட்டார்கள்? என்பதை எல்லாம் விசாரணைதான் முடிவு செய்யும்.

அருள் சொன்னது…

இக்பால் செல்வன் கூறியது...

// //மதத்தின் பெயரால் கொடூரங்களை நிகழ்த்துவோர மறைமுகமாக ஆதரிப்பதும், அல்லதுக் கண்டு கொள்ளாமல் விடுவதும் - மதத்தை வளர்த்து எடுப்பதும் ஒன்று தான்// //

மதத்தின் பெயரால் நடைபெறும் குற்றங்களை எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

மற்றபடி, மதத்தை வளர்ப்பதில் ஒரு குற்றமும் இல்லை எனும்போது அதனை எதற்காக எதிர்க்க வேண்டும்?.

மதத்தை வளர்ப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி ஓர் அடிப்படை உரிமை. குற்றம் அல்ல.

அருள் சொன்னது…

இக்பால் செல்வன் கூறியது...

// //பாகிஸ்தான் தாலிபான்களுக்கு மறைமுகமாக அடைக்கலம் கொடுத்து வந்தத்தை// //

தலிபான்களை இஸ்லாமோ, பாகிஸ்தானோ உருவாக்கவில்லை. அமெரிக்காவுக்கும் இரஷ்யாவுக்கும் இடையேயான புவிஅரசியலின் குழுந்தைதான் தலிபான். இதற்கு இஸ்லாமை எதற்காக குற்றம் சாட்ட வேண்டும்?

அமெரிக்காவும், தலிபானும் தமது அரசியல் சுயநலத்துக்காக இஸ்லாம் மதத்தின் பெயரை பயன்படுத்தி இரஷ்ய ஆதரவு ஆப்கான் மக்கள் ஜனநாயகக் கட்சியை ஒழித்தார்கள். தலிபான் உருவானதன் பின்னணி இதுதான்

அதாவது, தலிபான்கள் இஸ்லாமின் பெயரை தமது தேவைக்காக பயன்படுத்துகிறார்கள். இஸ்லாம் தலிபானை பயன்படுத்தவில்லை

இது மதத்தின் குற்றமா? அமெரிக்க அரசின் வல்லரசு வெறியின் குற்றமா?

அருள் சொன்னது…

இக்பால் செல்வன் கூறியது...

// //இங்கு பிரச்சனையே புதுமை விரும்பிகள் - பழமை விரும்பிகள் ஆகியோருக்கு இடையில் நடைப்பெறும் முரண்பாடுகள் தான் ...// //

நீங்கள் குறிப்பிடுவது ஒரு உட்கட்சி பிரச்சனை. இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள்தான் இதில் தலையிட முடியும்.

இந்த சிக்கல் இஸ்லாம் சாராதவர்களைப் பாதித்தாலோ, அல்லது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டாலோ, அத்தகைய நேரத்தில்தான் மற்றவர்கள் தலையிட முடியும்.

பெயரில்லா சொன்னது…

"நீங்கள் குறிப்பிடுவது ஒரு உட்கட்சி பிரச்சனை. இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள்தான் இதில் தலையிட முடியும்."

அப்போ இந்து மதத்தில் உள்ள பிரச்சனைகளை இந்துகளுக்குள் தான் பேசி தீர்க்க வேண்டும். அதை இஸ்லாமியர்கள் விமர்சிப்பதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா? நியாயம் என்றால் எல்லோருக்கும் ஒன்று தான்

பெயரில்லா சொன்னது…

"இந்த சிக்கல் இஸ்லாம் சாராதவர்களைப் பாதித்தாலோ, அல்லது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டாலோ, அத்தகைய நேரத்தில்தான் மற்றவர்கள் தலையிட முடியும்."

இந்து மதத்தின் ஒரு பிரச்சினை இந்து அல்லாதவர்களுக்கு பாதிப்பு இல்லாத வேளை இந்து மதம் அல்லாதவர்கள் (குறிப்பாக இஸ்லாமியர் ) கடுமையாக விமர்சிப்பதை ஆதரிகின்ரீரா?

(நீங்கள் பதில் தருவர்கள் என்று நான் நினைக்கவில்லை)

பெயரில்லா சொன்னது…

" உலகின் எல்லா மதங்களையும் ஏதோ ஒரு காரணத்திற்காக குற்றம் சாட்ட முடியும். அதே நேரத்தில் மிகப் பெரும்பான்மையான மனிதர்களுக்கு மதம் தேவையான ஒன்றாகவும் இருக்கிறது."

நிச்சயமான உண்மை.

"ஒருபக்கம் மதம் தேவைதான், மறுபக்கம் அதனால் தொந்தரவும் இருக்கிறது என்று கருதுவோமானால் - அவர்வர் பின்பற்றும் மதத்தின் கேடுகளை அந்தந்த மதத்தினர் எதிர்க்க முற்படுவதுதான் ஒரே வாய்ப்பு."

இங்குதான் சிக்கல்கள், முரண்பாடுகள் ஏற்படுகின்றன. ஒரு மதத்தின் பிரச்சினையை இன்னொரு மதத்தை சேர்ந்தவர் விமர்சிக்கும் போதுதான் பிரச்சினை ஏற்படுகின்றது. இதற்க்கு இஸ்லாமோ, இந்துதுவமோ பொறுப்பேற்க முடியாது. ஆனால் மேற்படி மதங்களை பின் பற்றுவோர் தான் பொறுப்பாக முடியும். மற்றைய மதங்களை விமர்சிப்பதை விட்டு விட்டு தன்னுடைய மதத்தின் சிறப்புகளை பதிவுகளாக இட்டு வந்தாலே பிரச்சினை வந்திருக்காது.

இன்னும் சில பதிவர்கள் இருக்கின்றார்கள் அவர்களை பொறுத்தவரை இந்தியா என்பது மனித இனம் வசிக்க முடியாத ஒரு இடம் என்ற வகையில் பின்னோட்டம் இடுவார்கள். ஒவ்வொருவருடைய பதிவுகளிலும் இந்தியாவில் இதுவரை வந்த அனைத்து செய்திகளையும் (குற்ற) தொகுத்து பின்னோட்டம் இடுவார்கள். (தங்கள் எதோ "உண்மை" பேசுபவர்கள் என்பது போல்)

உங்களுக்கு பின்னூட்டம் இட்ட அனைத்து பதிவர்களிடமும் "தான் சாரா மதங்களை விமர்சிக்க மாட்டேன் என்று" வாக்குறுதி உங்களால் பெற முடியுமா?

சிலருக்கு மற்றைய மதங்களை விமர்சிப்பதுதான் முதலிடு.

நீங்கள் ஒரு தரப்பை மட்டும் குற்றம் சாட்டுவது நீங்கள் காட்டி கொள்ள முயற்சிக்கும் (நியாயவான்) முகத்திற்க்கு அழகல்ல.

பெயரில்லா சொன்னது…

"சில வேளைகளில் தனிப்பட்ட பிணக்குகளும் காரணமாக இருக்குமோ."
இதற்க்குள் ஒருவர் அதற்க்கு வேறு காரணம் கற்பித்து விட்டார்.

பெயரில்லா சொன்னது…

"மலலா யூசப்சாய் தலிபானுக்கு எதிராக எழுதியதால் அவர்களே சுட்டிருக்கும் வாய்ப்பு அதிகம். அதே நேரத்தில் தலிபானுக்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு ஏற்பட வேண்டுமென்பதற்காக அமெரிக்க உளவுத்துறையினர் கூட செய்திருக்கலாம். யார் சுட்டது? எதற்காக சுட்டார்கள்? என்பதை எல்லாம் விசாரணைதான் முடிவு செய்யும்."

உங்களின் கற்பனை வளம் தூள் பரத்துகிறது. (பாகிஸ்தானில் எதிர்ப்பு ஏற்பட வேண்டுமென்பதற்காக அமெரிக்க உளவுத்துறையினர் கூட செய்திருக்கலாம். )
பாகிஸ்தானில் எதிர்ப்பு வர வேண்டுமென்றால் அமெரிக்காவுக்கு பல வழிகள் உள்ளன. இந்த மாதிரி சிறு பிள்ளை வேளாண்மையில் ஈடுபடாது.

கபிலன் சொன்னது…

" தலிபான் என்பது நமது ஊரில் இருப்பது போன்ற ஒரு அரசியல் கட்சி அல்ல. தலைமறைவு இயக்கம். "

அந்தப் பகுதியில் அவர்கள் வைத்தது தான் சட்டம். கும்பல் கூடி தலை வெட்டுதல், கல்லால் அடித்து கொல்லுதல், சவுக்கடி செய்தல் என்பது தான் அந்தக் கூட்டத்தின் தொழில். அதுவும் ஷரியா என்ற பெயரில். ஆதலால், தலைமறைவு தீவிரவாத இயக்கம் என்று சொல்லுங்கள் பொருந்தும்.

"அமெரிக்க உளவுத்துறையினர் கூட செய்திருக்கலாம்.."

ஏன் நான் கூட சுட்டிருக்கலாம். ஒசாமாவுக்கும் 9/11 க்கும் சம்பந்தமே இல்லைன்னு வாதம் பண்ற நல்லவங்களுக்கு, இதெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணம்.

ஒரு ஸ்கூல் படிக்குற பொண்ணை சில்லரைப் பசங்க (தாலிபான்) சுட்டு இருக்காங்க. அந்த பொண்ணோட ப்ளாக்ல தாலிபான்கள் பலரை கொலை செய்ததை தெளிவாகச் சொல்லி இருக்காங்க. உங்க கற்பனைக்கு ஏற்றார் போல செய்தி வந்தால் தான் நம்புவேன் என்று சொல்வது இப்போது ஃபேஷன் ஆகிப் போச்சு.

சரி இந்தப் பெண்ணை விடுங்கள், அதுக்கு முன்னாடி பல பத்திரிக்கையாளர்களை தாலிபான் சில்லரைகள் கொடூரமாக சாவடிச்சு இருக்காங்களே...அதுவும் அமெரிக்க சதியா ?

Unknown சொன்னது…

pls visit ...

www.911missinglinks.com