Pages

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2013

விகடன் கும்பலின் கொலைவெறி: படுகொலையானது பத்திரிகை தர்மம்!

சென்னையிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் - ஆனந்த விகடன் இதழ்கள் மற்றும் தி இந்து ஆங்கில நாளிதழ் - இந்த இரண்டு பத்திரிகை குழுமங்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு. 

பாமக எதிர்ப்புதான் தமது நிலைபாடு என இந்த இரண்டு பத்திரிகைகளின் நிர்வாகக் கூட்டத்திலும் ஒரே முடிவை எடுத்துள்ளனர். '"தலித் ஆதரவு நிலைபாட்டில் பத்திரிகை நடக்கும். எனவே, பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான கருத்தில்தான் செய்திகள் வெளியிட வேண்டும்" என பொர்டு மீட்டிங்கில் முடிவு எடுத்துவிட்டோம்' என்று அவர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

தி இந்து பத்திரிகையின் நேர்மையும் விகடன் கும்பலின் அயோக்கியத்தனமும்

தி இந்து பத்திரிகையானது 'பாமக எதிர்ப்பு செய்திகளை' தீவிரமாக பதிவு செய்துவருகிறது. அதே நேரத்தில் - பத்திரிகை தர்மத்துக்கு கொஞ்சமாவது முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தவிர்க்க முடியாத முக்கிய செய்திகளை, அவை மறுதரப்பு செய்திகளாக இருந்தாலும், அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. 
தர்மபுரி இளவரசன் விவகாரத்தில் - இளவரசன் தரப்பினருக்கு ஆதரவான செய்திகளையே தி இந்து நாளிதழ் வெளியிட்டது. அவர்கள் தரப்பில் எழுப்பப்பட்ட எல்லா சந்தேகங்களையும் பதிவுசெய்து வந்தது தி இந்து. அந்த வகையில் இளவரன் கொலையா என ஏற்பட்ட சந்தேகம், மறுபிரேத பரிசோதனையின் தேவை, திவ்யாவைக் கடத்தினார்களா? என்கிற கேள்வி - என எல்லாவற்றையும் வெளியிட்டது தி இந்து.

அதே நேரத்தில் - இந்த செய்திகளுக்கு நேர்மாறான வகையில் உண்மைகள் வெளிவந்தபோது அவற்றையும் வெளியிட்டது தி இந்து. குறிப்பாக:

1. இளவரசன் மரணம் தற்கொலைதான் எனும் எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை,
2. திவ்யா 'இனி படிக்க விரும்புகிறேன்' எனக் கூறிய செய்தி,
3. தியாவை யாரும் கடத்தவில்லை என்கிற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு,
4. இளவரசன் கடிதத்தில் உள்ள கையெழுத்து உண்மைதான் என்கிற ஆதாரம்

- இவை அனைத்தையும் வெளியிட்டது தி இந்து நாளிதழ்.

ஆனால், இளவரன் தற்கொலை தொடர்பில் ஒரு தரப்புக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே வெளியிட்டுவந்த ஆனந்த விகடன் - ஜூனியர் விகடன் கும்பல் மேற்கண்ட எந்த உண்மைச் செய்தியையும் வெளியிடவே இல்லை. 

இளவரசன் தரப்பினருக்கு ஆதரவான அனைத்து சந்தேகங்களையும் மீண்டும் மீண்டும் எழுப்பி, வன்னியர்கள் தரப்பின் மீது அவதூறுகளை மட்டுமே வீசி வந்த விகடன் கும்பல் - அத்தனை சந்தேகங்களுக்கும் தெளிவான விடை தெரிந்த போது, அதனை செய்தியாக வெளியிடவே இல்லை.

விகடன் கும்பல் எழுப்பிய கட்டுக்கதைகள்

"தற்கொலை செஞ்சுக்குற அளவுக்கு இளவரசன் கோழை இல்லை." "நிச்சயம் இது கொலைதான். அவனுடன் இருந்த யாரோ பலமான பொருளால் தாக்கி கொலைசெய்து தண்டவாளத்தில் வீசியிருக்காங்க" "கடிதத்தில் இருப்பது யார் கையெழுத்து?" "அரசியல் ஆதாயத்துக்காக இளவரசன் கொல்லப்பட்டிருக்கலாம்" "இளவரசன் வேண்டாம் என்று திவ்யாவின் வாயாலேயே சொல்ல வைத்தார்கள்" "தன் அன்புக் கணவனை பறிகொடுத்த அநியாயத்திற்காக திவ்யா நீதிகேட்க வேண்டும். அப்படி துணிவுடன் திவ்யா களமிறங்கினால் இளைஞர் கூட்டம் அவருக்குப் பின்னால் திரளும்"

- இப்படியெல்லாம் ஜூனியர் விகடனிலும் ஆனந்த விகடனிலும் செய்திகள் வந்தன. ஆனால், இதற்கு மாறான உண்மைகள் வெளிவந்தபோது விகடன் கும்பல் மவுனத்தைக் கடைபிடிக்கிறது.

விகடன் கும்பலால் மறைக்கப்பட்ட முக்கிய செய்திகள்

1. இளவரசனிடமிருந்து திவ்யா பிரிந்தது அவரது சொந்த முடிவு

விகடன் கும்பல் பல மாதங்களுக்கான பரபரப்புச் செய்தியாக "இளவரசனிடமிருந்து திவ்யாவை பாமகவினர் பிரித்தனர்" என்பதை வைத்து ஓட்டியது.

ஆனால், திவ்யா அவரது சொந்த விருப்பத்தின் பேரில்தான் இளவரசனைவிட்டு பிரிந்தார். அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டபோது, அதனை விகடன் கும்பல் வெளியிடவில்லை. இதோ உயர்நீதிமன்றம் தீர்ப்பு:
திவ்யா தாமக விரும்பி அம்மாவிடம் சென்றார். அவரை ஒருவரும் கட்டாயப்படுத்தவில்லை -நீதியரசர் ஜெயச்சந்திரன், நீதியரசன் சுந்தரேஷ் தீர்ப்பு

2. எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை

விகடன் கும்பல் பல வாரங்களுக்கான பரபரப்புச் செய்தியாக "இளவரசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம்" என்பதை வைத்து ஓட்டியது.

ஆனால், அது தற்கொலைதான் என்பதாக 'எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை' வெளிவந்தபோது, அதனை விகடன் கும்பல் வெளியிடவில்லை. இதோ எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை:
எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை'
பத்திரிகை தர்மத்தை குப்பையில் வீசிய விகடன் கும்பல்.

பத்திரிகை கவுன்சில் சொல்லும் பத்திரிகை தர்மத்தை குப்பையில் வீசியுள்ளது விகடன் கும்பல். செய்தி வெளியிடும்போது துல்லியமாகவும் நியாயமாகவும் வெளியிடுவதுதான் அடிப்படையான பத்திரிகை தர்மமாகும். குறிப்பாக, எந்த ஒரு செய்தியிலும் எல்லா தரப்பு நியாயங்களும் வெளியிடப்பட வேண்டும்.

அதே போன்று, வெளியிடப்பட்ட ஒரு செய்தி தவறு என்கிற நிலை வரும்போது, அதற்கு மாறான உண்மையை வெளியிட வேண்டியது பத்திரிகைகளின் கடமை ஆகும்.
பத்திரிகை கவுன்சில் சொல்லும் பத்திரிகை தர்மம்.
ஆனால், தர்மபுரி தற்கொலை விவகாரத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவான செய்தியை மட்டுமே வெளியிட்டு வன்னியர்களை இழிவுபடுத்திய விகடன் கும்பல், அந்த செய்திக்கு மாறான உண்மை வெளியானபோது - அந்த உண்மையை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்துள்ளது.

இப்படி தர்மத்தை கொலைசெய்வதற்கு பதிலாக, விகடன் கும்பல் வேறு எந்த தொழிலிலாவது இறங்கினால் - அதுவே மிக உயர்ந்த செய்கையாக இருக்கும். 

ஏனெனில், பத்திரிகை தர்மத்தைக் கொலைசெய்வதிவிட மிகக் கேவலாமான தொழில் உலகில் எதுவுமே இருக்க முடியாது.

3 கருத்துகள்:

Aruna சொன்னது…

வெட்கங் கெட்டதனத்தின் தமிழ்ப் பத்திரிகை வடிவம்தான் விகடன்

இந்த நேரத்தில் விகடன் உண்மையை வெளியே சொல்லி, தன் மீது விழுந்த களங்கத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

விகடன் அடுத்தவர்களின் ஒழுக்கமின்மையைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் தம்மை ஒழுக்கமானவர்களாகச் சித்தரித்துக் கொள்வது. ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதில்லை.

Vanathi Rayar Senthil Nathan சொன்னது…

கூறியது...
வெட்கங் கெட்டதனத்தின் தமிழ்ப் பத்திரிகை வடிவம்தான் விகடன்

இந்த நேரத்தில் விகடன் உண்மையை வெளியே சொல்லி, தன் மீது விழுந்த களங்கத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

விகடன் அடுத்தவர்களின் ஒழுக்கமின்மையைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் தம்மை ஒழுக்கமானவர்களாகச் சித்தரித்துக் கொள்வது. ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதில்லை.Mutrilum unmai

பெயரில்லா சொன்னது…

விகடன் மட்டுமல்ல இங்கு அனைத்து பத்திரிகைகளும்,ஊடகங்களுமே ஏதேனும் ஒரு சார்புநிலை கொண்டே இயங்குகிறது. கண்முன்னே அருகிலே இருந்து நான் பார்த்த ஒரு சம்பவத்தை தினசரி,வார,மாத பத்திரிகைகள் ஒவ்வொன்றும் ஒருவிதமாக தங்களுடைய கற்பனை கலந்து அக்கிரமமாக பொய் சேர்த்து எழுதியிருந்தார்கள்.அன்றைக்கே நான் மிகவும் மதிப்பாக நினைத்திருந்த பத்திரிகை தர்மம் என்பதின் மீதுள்ள நம்பிக்கை அழிந்து விட்டது எனக்குள்.
சுவாரஷ்யமான தகவல் தருகிறார்களாம்.விற்பனையை அதிகரிக்க வேண்டுமாம்,பலவாறான தொழில்முறை ஜாலங்கள்,போட்டிகள் இருக்கின்றது இவர்களுக்கென.ஆனால் பொதுமக்கள் இவையெல்லாம் நம்பகமான பத்திரிகைகள் என்று நினைத்து படித்துவருவதுதான் பரிதாபம்.இங்கு நடுநிலை என்பது உண்மைக்கு எதிராக புர்ச்சி செய்தலே என்று உணர்ந்து ஒன்று கூடி செயலாற்றுகின்றனர் நமது தமிழக பத்திரிகைகள் மற்றும் செய்தி சேனல்கள்.பொதுவாக அன்றாடம் செய்தி பத்திரிகை படிக்காமல்,பார்க்காமல் இருப்பது உங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்கிறது மனோதத்துவம்.