ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை ஆகஸ்ட் 25 முதல் சுமார் ஒரு வாரகாலம் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், ஏதோ திமுகவின் வற்புறுத்தலுக்கு ஏற்ப அவர் அங்கு செல்கிறார் என்கிற அளவுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு, அதில் "இலங்கையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நவநீதம் பிள்ளை, ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்பாக ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். (இங்கே காண்க: நவநீதம் பிள்ளை ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க கருணாநிதி வலியுறுத்தல்)
ஐநா நிகழ்ச்சி நிரலில் உள்ளதையே கோரிக்கையாக வைக்கும் விநோதம்!
அமெரிக்காவின் முன்முயற்சியால் 2013 மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22 ஆம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலேயே, "2013 செப்டம்பர் மாதம் நடக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்தில் வாய்வழியாக ஒரு தகவல் அறிக்கையையும், அடுத்த ஆண்டு 2014 மார்ச் மாதவாக்கில் நடக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 25 ஆம் கூட்டத்தில் முழுமையான அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. (இங்கே காண்க: 2013 Resolution on Promoting reconciliation and accountability in Sri Lanka)
அதன்படி, இப்போது ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், "ஐநா மனித உரிமைகள் பேரவையின் 24 ஆம் கூட்டத்தில் வாய்வழியாக ஒரு தகவல் அறிக்கையை மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை அளிப்பார்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஐநா மனித உரிமைகள் அவையின் நிகழ்ச்சி நிரல் 2013 ஜூலை 24 ஆம் நாளே வெளியிடப்பட்டுள்ளது. (இங்கே காண்க: Agenda for the twenty-fourth session of the Human Rights Council)
In its resolution 22/1 on promoting reconciliation and accountability in Sri Lanka, the Human Rights Council requested OHCHR, with input from relevant special procedures mandate holders, as appropriate, to present an oral update to the Council on the implementation of that resolution. The Council will hear an oral update
ஆனால், இப்போது திடீரென கலைஞர் தனது அறிக்கையில் "நவநீதம் பிள்ளை அவர்கள் ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" என்று கேட்டுள்ளார். அதாவது 'ஐநாவில் நவநீதம் பிள்ளை அறிக்கை அளிப்பார்' என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதையே மீண்டும் கோரிக்கையாக வைத்துள்ளார் கலைஞர்
"டெசோ சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு 2012 ஆகஸ்ட் 12-ல் சென்னையில் நடைபெற்றது.இதில் ஈழ விவகாரம் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இந்த தீர்மானங்களை ஜெனீவாவுக்கு நேரில் சென்று நவநீதம் பிள்ளையிடம் திமுகவின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சென்று கொடுத்தனர்.மேலும் நவநீதிமபிள்ளை இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சார்பில் அப்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இலங்கை செல்லும் நவநீதம் பிள்ளை ஈழத் தமிழர்களின் துன்பங்களையெல்லாம் நேரில் அறிந்து, ஐ.நா.முன்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று கருணாநிதி கோரியுள்ளார்.
தவறான தகவலைத் தரும் கலைஞர்
தனது அறிக்கையில் "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாகவே ஐநா மனித உரிமைகள் ஆணையமே 38 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையை தயாரித்து, அதன் தலைவர் நவநீதம் பிள்ளை சமர்ப்பித்தார்." என்று குறிப்பிடுகிறார் கலைஞர்.
ஆனால், அந்த அறிக்கை, ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தின் அடிப்படையில்தான் நவநீதம் பிள்ளை அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. (2012 Resolution on Promoting Reconciliation and Accountability in Sri Lanka) அதாவது, 'அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பாகவே அல்ல', மாறாக, 'அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததன் காரணமாகத்தான்' அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையின் முதல் வரியிலேயே '2012 ஆம் ஆண்டு மார்ச் தீர்மானத்தின் காரணமாக அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது' (இங்கே காண்க: Report of the Office of the United Nations High Commissioner for Human Rights on advice and technical assistance for the Government of Sri Lanka on promoting reconciliation and accountability in Sri Lanka)
The present report is submitted pursuant to Human Rights Council resolution 19/2,The present report is submitted pursuant to Human Rights Council resolution 19/2, in which the Council called upon the Government of Sri Lanka to implement the constructive recommendations made in the report of the Lessons Learnt and Reconciliation Commission and to take all necessary additional steps to fulfil its relevant legal obligations and commitment to initiate credible and independent actions to ensure justice, equity, accountability and reconciliation for all Sri Lankans.
வரலாறு முக்கியம் அமைச்சரே - அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா!
என்னவோ போங்கள்!
ஐநாவில் என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப அறிக்கை விடுகிறார் கலைஞர், நாளை அவர் சொல்லிதான் எல்லாம் நடந்தது என்பார். தமிழ்நாட்டு மக்களும் நம்பித்தானே ஆகவேண்டும்.
அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா!
குறிப்பு: ஐநா மனித உரிமை ஆணையத்தில் இதே பிரச்சினையை பலமுறை எழுப்பியுள்ளது மருத்துவர் அய்யா அவர்களை நிறுவனராகக் கொண்ட பசுமைத்தாயகம்.
அவற்றை இங்கே காண்க:
1. ஜெனீவா: ஐநாவில் பசுமைத்தாயகம் சாதனை - இலங்கை மீது நேரடியாக சரமாரிக் குற்றச்சாட்டு!
2. ஜெனீவா ஐநா கூட்டத்தில் பசுமைத் தாயகம் பேச்சு: இலங்கை மீது சர்வதேச விசாரணை ஆணையம் - நேரடியாக வலியுறுத்தல்.
3. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!
4. இலங்கை இனப்படுகொலை, போர்க்குற்றம்: ஐநாவில் தொடரும் நீதிக்கான போராட்டம்.

3 கருத்துகள்:
//ஏதோ திமுகவின் வற்புறுத்தலுக்கு ஏற்ப அவர் அங்கு செல்கிறார் என்கிற அளவுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டு, அதில் "இலங்கையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ள நவநீதம் பிள்ளை, ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்பாக ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" //
இந்த மனுஷன் இந்த வயதில இப்படி தனது நரிப்புத்தியைக் காட்டுவதால் தான் ஈழத்தமிழர்கள் எவரும் இந்த ஆள் என்ன சொன்னாலும், செய்தாலும் கணக்கெடுப்பதில்லை. :)))
ஈழத்தாய் என்ன செய்தார் அல்லது என்ன செய்துக்கொண்டிருக்கிறார்.
இலங்கை தமிழர்களுக்கு விடிவு பிறக்கிறதா இல்லையா என்பதைவிட ,அதை வைத்து இங்கே நல்லா அரசியல் பண்றாங்கப்பா !
கருத்துரையிடுக