Pages

சனி, ஜூன் 28, 2014

ஐநா விசாரணை: பயத்தில் ராஜபக்சே கும்பல்!

இலங்கையில் நடந்த கொடூரங்கள் தொடர்பான ஐநா விசாரணை, இலங்கையின் சர்வதேச குற்றவாளி ஆட்சியாளர்களுக்கு பயமளிக்கும் வகையில் தொடங்கியுள்ளது. 
மார்ட்டி அடிசாரி, சில்வியா கார்ட்ரைட், அஸ்மா ஜகாங்கீர்
நவநீதம் பிள்ளை அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்களே அந்த பயத்திற்கு காரணம்:

1. மார்ட்டி அடிசாரி: 

பின்லாந்து முன்னாள் அதிபரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான இவர் தலையிட்ட பல பிரச்சினைகளில் புதிய நாடுகளை உருவாக்கியுள்ளார்.

நமீபியா விடுதலை பெறக் காரணமானவர். இந்தோனேசியாவில் ஆச்சே சர்ச்சையில் தலையிட்டு, சுதந்திர மாகாணம் உருவாக வழிவகுத்தவர். செர்பியாவிடமிருந்து கொசாவோ நாட்டைப் பிரித்தவர் இவர்தான். 

இலங்கைச் சிக்கலை சர்வதேச அரங்கில் பிரச்சாரம் செய்துவரும் 'இன்டர்நேஷனல் க்ரைசிஸ் குழுவின்' (ICG) தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.

2. சில்வியா கார்ட்ரைட்:

நியூசிலாந்து முன்னாள் கவர்னர் ஜெனரல் மற்றும் கம்போடிய இனப்பெடுகொலை நீதிமன்ற நீதிபதி.

3. அஸ்மா ஜகாங்கீர்:

பாகிஸ்தான் மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர். மதச்சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமைக்காகப் போராடியவர். மத அடிப்படைவாதிகளின் எதிர்ப்புக்கு ஆளானவர். அரசால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டவர். ஐநா மனித உரிமை ஆணையத்தில் "அரசாங்கத்தின் சட்டவிரோத படுகொலைகள்" மற்றும் "மதச்சுதந்திரம்" தொடர்பான சிறப்பு விசாரணை அதிகாரியாக பணியாற்றியவர் (UN Special Rapporteur on Extrajudicial, Arbitrary and Summary Executions. UN Special Rapporteur on Freedom of Religion and Belief).

(இலங்கை மீதான விசாரணைக் குழுவில் ஆசிய நாட்டவர்கள் யாரும் இடம்பெற ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்கிற இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து, ஐநாவில் இலங்கையைக் காப்பாற்றும் பாகிஸ்தானில் இருந்தே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்).

4. சான்ட்ரா பெய்தாஸ்

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனிதஉரிமை அமைப்பில் பணியாற்றி, பின்னர் ஐநாவில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றும் சான்ட்ரா பெய்தாஸ் இலங்கை மீதான ஐநா விசாரணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த சான்ட்ரா பெய்தாஸ் சூடான் நாட்டின் மீதான விசாரணை ஆணையம், நேபாளத்தின் மீதான ஐநா மனித உரிமைக் கண்காணிப்புக் குழு உள்ளிட்டவற்றிலும் பணியாற்றியவராகும்.

5. இளவரசர் செயித் ராத் செயித் உசேன்.

நவநீதம் பிள்ளைக்கு அடுத்ததாக ஐநா மனித உரிமை ஆணையத்தின் தலைமை பதவிக்கு வரவுள்ளார் ஜோர்டன் இளவரசர் செயித் ராத் செயித் உசேன். இலங்கை மீதான ஐநா விசாரணைக் குழுவின் அறிக்கையை ஐநா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப் போகிறவர் இவர்தான்.
ஜோர்டன் இளவரசர் செயித் ராத் செயித் உசேன்
இவர் ஏற்கனவே இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவர். ராஜபக்சே கும்பலைச் சேர்ந்த போர்க்குற்றவாளி சாவேந்திர டிசில்வா என்பவர் ஒரு ஐநா அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது அதனை இவர் எதிர்த்துள்ளார். இவரைச் சந்திக்க ராஜபக்சே ஜோர்டன் நாட்டுக்கு நேரடியாக சென்ற போதும், ராஜபக்சேவைச் சந்திக்க மறுத்துள்ளார்.

இவர் போர்க்குற்றங்கள் தொடர்பான ரோம் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) நிறுவக் காரணமானவர்களில் ஒருவரும், அதன் முதல் நிருவாகக் குழுத் தலைவராக இருந்தவரும் ஆவார். இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த சர்வதேச நெறிமுறைகள் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய இவர் சர்வதேச சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.

ஐநா படைகளின் பாலியல் குற்றங்கள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த குழுவிற்கும் இவர் தலைமையேற்றிருக்கிறார்.

கடந்த 2000 ஆவது ஆண்டு முதல் இவர் ஐநா அவை நடவடிக்கைகளில் முன்னணியில் பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு யூகோசுலோவியா நாட்டின் இனப்படுகொலை தொடர்பான ஐநா அமைதிப்படையில் பணியாற்றியுள்ளார்.

- மார்ட்டி அடிசாரி, சில்வியா கார்ட்ரைட், அஸ்மா ஜகாங்கீர், சான்ட்ரா பெய்தாஸ், இளவரசர் செயித் ராத் செயித் உசேன் - என்கிற சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட, நம்பிக்கை அளிக்கும் அணியினர், ராஜபக்சேவை தூக்கமில்லாமல் செய்யப்போவது உறுதி.

தாமதம் ஆகலாம், ஆனால், நீதி ஒருநாள் வென்றே தீரும்!

வெள்ளி, ஜூன் 27, 2014

வன்னியர் என்றால் சாதி - கள்ளர் என்றால் சாதி இல்லை: இதுதான் தமிழ்த்தேசியமா?

"தமிழன் முதல்வராக வேண்டும் என்றால், பாமகவினர் வன்னியர் முதல்வராக வேண்டும் என்கிறார்களே" என உணர்ச்சிவசப்பட்டார் - நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் என்கிற சைமன் ஜெபாஸ்டியன்.

"ஒரு வன்னியரை முதல்வராக்குவோம் என்ற முழக்கத்துடன் முன்னெடுக்கும் அரசியல் தமிழினத்தை 500 ஆண்டுக்காலத்திற்கு பின்னால் தள்ளும் பிற்போக்குத்தனமான அரசியலாகும். இப்படிப்பட்ட சாதிய அரசியல், தமிழின உணர்வு எனும் ஒர்மையின் மாபெரும் பலத்தை உடைத்து, தமிழ்த் தேசிய அரசியலை பலவீனப்படுத்தும். மதிப்பிற்குரிய இராமதாஸ் முன்னெடுக்கும் இந்த அரசியலை நாம் தமிழர் கட்சி முழுமையாக எதிர்க்கிறது" அறிக்கை விட்டார் சீமான்.

ஆனால், "பிறமலைக் கள்ளர் - வாழ்வும் வரலாறும்" எனும் 2011 ஆம் ஆண்டில் வெளிவந்த நூலுக்காக இப்போது நடத்தப்படும் "நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வுக் கூட்டத்தில்" நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் காசித்தேவர் அய்யநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
'வன்னியர்' என்பது மட்டும் தமிழ்த் தேசிய அரசியலை பலவீனப்படுத்தும் என்றால் - 'கள்ளர்' என்பது தமிழ்த் தேசிய அரசியலை பலவீனப்படுத்தாதா?

அது எப்படி? முற்போக்குக் கூட்டத்துக்கும் தமிழ்த்தேசியக் கூட்டத்துக்கும் வன்னியர் எனும் போதெல்லாம் அது சாதி வெறியாகத் தெரிகிறது? கள்ளர், தேவர் எனப் பேசினால் - அதுமட்டும் முற்போக்காகவும் தமிழ்த்தேசியமாகவும் மாறிப்போகிறது?

உண்மையில் முற்போக்கு, தமிழ்த்தேசியம் என்பதெல்லாம் வேறொன்றும் இல்லை. வெறும் "வன்னியஃபோபியா" மட்டும்தான். விளக்கமாக இங்கே காண்க: "வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய் VANNIYAPHOBIA

(குறிப்பு: 'பிறமலைக் கள்ளர் - வாழ்வும் வரலாறும்' நூல் வெளிவந்த போதே 2012 ஆம் ஆண்டில் மதுரை நகர் முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் இந்த நூலை வரவேற்று சுவரொட்டி ஒட்டினர். சாதி எதிர்ப்பு பேசும் மார்க்சிஸ்ட் கட்சியின் தமுஎச அமைப்பினர் இந்த நூலைப் போற்றிப் புகழ்ந்தனர். ஆனந்தவிகடன் இந்த நூலைப் போற்றி பேட்டி வெளியிட்டது.)

மிக முக்கிய குறிப்பு: கள்ளர், தேவர், முக்குலத்தோருக்கு எதிராக இந்த பதிவு இல்லை. அனைத்து சாதிகளையும் அவர்களது உண்மை வரலாற்றையும் நாங்கள் போற்றுகிறோம்.

வியாழன், ஜூன் 26, 2014

இலங்கை மீதான ஐநா விசாரணைக்குழுவில் உலகின் புகழ்பெற்ற வல்லுநர்கள்

இலங்கையின் மீது விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. விசாரணைக் குழுவில் 3 புகழ்பெற்ற வல்லுநர்கள் பங்கேற்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
  • பின்லாந்து முன்னாள் அதிபரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி அடிசாரி, 
  • நியூசிலாந்து முன்னாள் கவர்னர் ஜெனரல் மற்றும் கம்போடிய இனப்பெடுகொலை நீதிமன்ற நீதிபதியுமான சில்வியா கார்ட்ரைட்

  • பாகிஸ்தான் மனித உரிமை ஆணைய தலைவர் அஸ்மா ஜகாங்கீர் 
- ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அறிவித்துள்ளார். மிக முக்கியமான மற்றும் சவாலான இந்த விசாரணைக்கு உதவி செய்ய இந்த மூன்று வல்லுநர்களும் ஒப்புதல் அளித்ததை நவநீதம் பிள்ளை வரவேற்றுள்ளார்.

இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இலங்கை போரில் இரு தரப்புகளாலும் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்து இந்த குழு விசாரணை நடத்தும். இந்த குழு 10 மாதங்கள் செயல்படும்.

திங்கள், ஜூன் 23, 2014

9-ஆம் வகுப்பு பாடநூலில் வரலாற்றுப் பிழை: வன்னியர்களுக்கு அநீதி!

தென் ஆப்பிரிக்காவில் ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி படம்
வன்னியர்களின் வரலாற்றை அழிப்பதிலும் மறைப்பதிலும் தமிழ் நாட்டினர் சிலர் எப்போதும் மும்முரமாக இருந்து வருகின்றனர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு சுதந்திரப் போராட்டத்தின் முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சி வரலாறு! (வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய் VANNIYAPHOBIA சிலரைப் பீடித்திருப்பது குறித்து "வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA" பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்)

‘சத்தியாகிரகம்’ - மகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை.  இதனை முதன் முறையாக தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தி அரங்கேற்றிய போது, அதில் முதன்முதலில் களப்பலி ஆனவர் சாமி நாகப்பன் படையாட்சி. 

ஆனால், தமிழ்நாடு அரசின் 9 – ஆம் வகுப்பு படநூலில் இந்த வரலாற்று தகவல் மறைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் சத்தியாகிரக வேள்வியின் முதல் களப்பலி 'தில்லையாடி வள்ளியமை' எனத் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த வரலாற்று தவறு திருத்தப்பட வேண்டும். மேலும், சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறும் தமிழக வரலாற்று பாடநூல்களில் இடம்பெற வேண்டும்.
தமிழ்நாடு அரசின் 9 – ஆம் வகுப்பு படநூல்

மகாத்மாவை உருவாக்கிய தென் ஆப்பிரிக்கா

மகாத்மா காந்தி 1893 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் நேட்டாலில் பணிக்கு சேர்ந்தார். அப்போது தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள்தான், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்கியது.
தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டமே மகாத்மா காந்தியை உருவாக்கியது, அதுவே இந்திய விடுதலைப் போரின் வழிகாட்டி என்பதை காந்தியும் தெளிவாக கூறியிருக்கிறார். "காந்தி இந்தியாவில் பிறந்திருக்கலாம் - ஆனால் தென் ஆப்பிரிக்காதான் காந்தியை 'உருவாக்கியது" என்றார் அவர்.

உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் 

1906 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றுகூறும் சட்டத்தை கொண்டுவந்தது. பெயரையும் கைரேகையையும் பதிவு செய்து கொண்ட ஆவணத்தை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். வேலை, தங்குமிடம் என எல்லா இடத்திலும் இந்தியர்கள் தனியாக பிரித்து வைக்கப்படுவார்கள். புதிதாக இந்தியர்கள் எவரும் டிரான்சுவால் மாகாணத்திற்குள் குடியேறக்கூடாது, மூன்று பவுண்ட் வரி செலுத்த வேண்டும், இந்தியர்களின் திருமணங்கள் சட்டபடி செல்லாது என்று பல விதிமுறைகளை முன்வைத்தது அச்சட்டம்.

இந்திய வம்சாவழியினருக்கு எதிரான இச்சட்டம் இந்தியர்களை துன்புருத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் கூறிய காந்தி, விளைவுகள் எதுவானாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் இந்தியர்கள் இச்சட்டத்தை எதிர்க்க அழைப்புவிடுத்தார்.  அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். அதாவது, இச்சட்டம் செயலுக்கு வந்தால் இந்தியர்கள் தமது பெயரை பதிவு செய்துகொள்ளக்கூடாது. சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.

1907 ஆம் ஆண்டு சூலை மாதம் டிரான்சுவால் காலனி அரசாங்கம் இந்த ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. தனது பெயரை பதிவு செய்யாத இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். 1906 ஆம் ஆண்டு தொடங்கி 1914 ஆம் ஆண்டுவரை எட்டு ஆண்டுகள் இப்போராட்டம் நீடித்து கடைசியில் வெற்றி பெற்றது. அந்தவகையில் காந்தி வெற்றி பெற்ற முதல் போராட்டமும் இதுதான்.

ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் எனப்படும் இதுதான் உலகின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் ஆகும்.  காந்தி முதல் முறையாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். இந்த முதல் சத்தியாகிரக போராட்டமே இந்திய விடுதலைப் போருக்கு வழிகாட்டியாக அமைந்தது. மேலும், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் உள்ளிட்ட பலரது அறப்போராட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கியது ஜொகனஸ்பர்க் சத்தியாகிரகம் என கருதலாம்.

உலகின் முதல் சத்தியாகிரகக் தியாகி

ஜொகனஸ்பர்க் சத்தியாகிரக காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். "இந்தியர்கள் சட்டத்தை மீறவேண்டும், அதற்கு கிடைக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்கவேண்டும்" என்ற காந்தியின் கட்டளைக்கு ஏற்ப "பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்" 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
சாமி நாகப்பன் படையாட்சி
முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார் சாமி நாகப்பன் படையாட்சி. (இதே சிறையில்தான் காந்தியும், பின்னாளில் நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்டனர். 'கான்சிடியூசன் மலை' என்று அழைக்கப்படும் அந்த இடம் இப்போது ஜொகனெஸ்பர்க் நீதிமன்றமாகவும், அருங்காட்சியகமாகவும் இருக்கிறது). அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு கடின வேலைகளில் ஈடுபடுத்துவதற்காக நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார்.   உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.

ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் நிமோனியாவால் இதயம் செயலிழந்து மரணத்தை தழுவினார். 1909 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் அவர் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் (Braamfontein Cemetery) அடக்கம் செய்தனர். சாமி நாகப்பன் படையாட்சி சத்யாகிரகியாக சிறை சென்று உயிர்தியாகம் செய்யும் போது அவரது வயது பதினெட்டு. அந்த இளம் வயதில் சம உரிமைக்காக தனது உயிரை தந்தார் அவர்.

முதல் களப்பலி

சாமி நாகப்பன் படையாட்சிதான் முதல் சத்தியகிரகத் தியாகி என மகாத்மா காந்தி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
Indian Opinion Newspaper 14.8.1909 
THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 404
14.8.1909 ஆம் நாளிட்ட இந்தியன் ஒப்பீனியன் இதழில் - சாமி நாகப்பனின் மரணமே முதல் தியாகம் (FIRST SACRIFICE) என தலைப்பிட்டு எழுதினார் மகாத்மா காந்தி. (THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 404)

15.07.1909 அன்று தென் ஆப்பிரிக்க கேப் காலனி பிரதம மந்திரி J. X. MERRIMAN என்பவருக்கு எழுதிய கடிதத்தில், எங்களது போராட்டம் அதன் முதல் பலியை வாங்கியுள்ளது. ஒரு இளம் சத்தியாகிரகப் போராளி கொடுஞ்சிறையிலிருந்து சாகும் நிலையில் விடுதலையாகி ஆறாம் நாளில் இறந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். (THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 410)
Letter to Prime Minister J. X. MERRIMAN
THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 410
தென் ஆப்பிரிக்க போராட்டத்தில் மிக முதன்மையான ஒரு நிகழ்வு 16.6.1909 ஆண்டு ஜொகனஸ்பர்கில் நடந்த இந்தியர்கள் கூட்டமாகும். 1500 இந்தியர்கள் திரண்ட இக்கூட்டத்தில், தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் தூதுக்குழுவை இங்கிலாந்துக்கு அனுப்புவது என முடிவெடுக்கப்பட்டது. இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இந்தியர்களில் 5 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமிருந்த மகாத்மா காந்தி மற்றும் ஹாஜி ஹபீப் ஆகிய இரண்டு பேர் மட்டுமே இங்கிலாந்து பயணக்குழுவில் இடம்பெற்றனர். அவர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்ட 21.6.1909 அன்றுதான் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட சாமி நாகப்பன் படையாட்சி கைது செய்யப்பட்டார். காந்தி 10.7.1909 அன்று லண்டன் சென்று சேர்ந்தார். அதற்கு முன்பாகவே 6.7.1909 அன்று சாமி நாகப்பன் படையாட்சி மரணமடைந்தார். அந்தத் தகவல் தந்தி மூலம் 12.7.1909 அன்று தெரிவிக்கப்பட்டது. 16.7.1909 அன்று காந்தி வெளியிட்ட தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் புகழ்பெற்ற "டிரான்சுவால் இந்தியர்களின் வழக்கு" எனும் அறிக்கையில், சாமி நாகப்பனின் மரணத்தையும் குறிப்பிட்டுள்ளார் காந்தி. (STATEMENT OF TRANSVAAL INDIAN CASE, PRESENTED BY THE INDIAN DEPUTATION, THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 9: Page: 424)

சாமி நாகப்பனை போற்றிய மகாத்மா காந்தி

தனது சத்தியாகிரகப் போராட்டத்தில் உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் படையாட்சியின் வீரமரணம் காந்தியின் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது பேச்சுகளில் இருந்தும் எழுத்துகளில் இருந்தும் அறியமுடியும்.
Indian Opinion Newspaper 14.12.1909 
THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 10: Page: 217
# தனது மகன் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று முதன்முதலாக சிறை சென்ற போது -  நாகப்பன் தியாகத்தோடு ஒப்பிட்டால், தனது மகனின் சிறைவாசம் பெரிதல்ல என்று 14.12.1909 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.

# தனது சகோதரர் இறந்த போது -   நாகப்பன் உயிரிழப்பு தனக்கு ஏற்படுத்திய மன வலியுடன் ஒப்பிட்டால் தனது சகோதரன் இறப்பால் ஏற்படும் வலி பெரிதல்ல என்று 18.3.1914 அன்று இந்தியன் ஒப்பீனியனில் எழுதினார் காந்தி.
Indian Opinion Newspaper 18.3.1914 
THE COLLECTED WORKS OF MAHATMA GANDHI, VOL. 14: Page: 124
# சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். முதலாவதாக, 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவில்லை.

# நாகப்பன் தியாகத்தை போற்றும் வகையில் ஜொகனஸ்பர்க் நகரில் ஒரு கல்வி உதவித்தொகை நினைவு நிதியை உருவாக்க விரும்பினார். அதற்காக திருமதி.வோகல் என்பவர் நிதிதிரட்ட முன்வந்த போது காந்தி அதனை வரவேற்று ஆதரித்து 9.12.1911 மற்றும் 14.6.1912 தேதிகளில்  இந்தியன் ஒப்பீனியன் பத்திரிகையில் எழுதினார். அதுமட்டுமல்லாமல் சென்னை, மும்பை உள்ளிட்ட இடங்களிலும்  நாகப்பன் நினைவு நிதியை உருவாக்க வேண்டும் என்றார் காந்தி. அதுவும் நடக்கவில்லை.

# காந்தி இந்தியா திரும்பிய பின்னர் - இந்திய சுதந்திரப் போராட்டம் எப்படி அமையவேண்டும் என்பதற்கு - போராட வருவோர் நாகப்பனை முன்னுதாரணமாக கொண்டு அவர் காட்டிய பதையில் பயணிக்க வேண்டும் என்றார் காந்தி. சென்னை (21.4.1915), மதுரை (26.3.1919), தூத்துக்குடி (28.3.1919), நாகப்பட்டினம் (29.3.1919) என தமிழ்நாட்டில் தான் பங்கேற்ற கூட்டங்களில் எல்லாம்  நாகப்பன் தியாகத்தை புகழ்ந்து பேசினார் காந்தி.

# இந்தியாவின் எரவாடா சிறையில் இருந்த காலத்தில் 'தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகிப் போராட்டம்' எனும் விரிவான நூலை எழுதினார். இந்த நூல் 1928 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. அந்த நூலில் நாகப்பன் குறித்து விரிவாகக் கூறியுள்ளார் மகாத்மா காந்தி.

# 1914 ஆம் ஆண்டு சூலை 18 ஆம் நாள், தனது 21 ஆண்டுகால தென் ஆப்பிரிக்க வாழ்வை முடித்துக்கொண்டு, காந்தி லண்டன் வழியாக இந்தியாவுக்கு கிளம்பினார். அதற்கு மூன்று நாள் முன்னதாக, சாமி நாகப்பன் படையாட்சி இறந்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், சூலை 15 அன்று தென் ஆப்பிரிக்காவின் ஜொகனஸ்பர் நகரில் உள்ள பிராம்ஃபோன்டெய்ன் கல்லறைத் தோட்டத்தில் (Braamfontein Cemetery) சாமி நாகப்பன் படையாட்சியின் நினைவிடத்தை திறந்துவைத்தார் மகாத்மா காந்தி.

உலகின் முதல் சத்தியாகிரகமான தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் போராட்டத்தில் மிக முதன்மையான அடையாளமாக உள்ள சாமி நாகப்பன் படையாட்சியின் படம் ஜொகன்ஸ்பர்க் அருங்காட்சியத்தில் திறக்கப்பட்டுள்ளது. அவரது நினைவிடம் ஜொகன்ஸ்பர்க் கல்லரைத் தோட்டத்தில் உள்ளது.

வரலாற்று அநீதி திருத்தப்பட வேண்டும்

மகாத்மா காந்தியால் போற்றிப்புகழப்பட்ட, சத்தியாகிரக வேள்வியின் முதல் களப்பலி சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறு தமிழ் நாட்டில் மறைக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் - மகாத்மா காந்தி குறிப்பிடும் நான்கு தியாகிகளில் மூன்றவதாக இடம்பெற்றுள்ள வள்ளியம்மா முனுசாமி முதலியார் - தமிழ்நாட்டின் பாடநூல்களில் 'முதல் களப்பலி' என்று குறிப்பிடப்படுவது அநீதியாகும்.  

இந்த வரலாற்று அநீதி திருத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் 9 – ஆம் வகுப்பு படநூலில் வரலாற்று பிழை மாற்றப்பட வேண்டும். மேலும், மகாத்மா காந்தியின் சத்தியாகிரக வேள்வியின் முதல் களப்பலி சாமி நாகப்பன் படையாட்சியின் வரலாறும் தமிழக பாடநூல்களில் இடம்பெற வேண்டும். 


ஞாயிறு, ஜூன் 22, 2014

இந்தி எதிர்ப்பும் தமிழ்ப்பற்றும்: தமிழகக் கட்சிகளின் போலி வேடம்!

நடுவண் அரசு ஊழியர்கள் சமூக ஊடகங்களில் இந்தியைக் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்கிற உத்தரவு தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிரான உணர்வுகளை மீண்டும் எழுப்பிவிட்டுள்ளது. இந்தி பேசப்படாத மாநிலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என நடுவண் அரசு பின்வாங்கியுள்ளது.

ஒரு தவளையை கொதிக்கும் நீரில் தூக்கிப்போட்டால், அது துள்ளிக்குதித்து ஓடிவிடும். அதுவே, குளிர்ந்த நீரில் போட்டு கொதிக்க வைத்தால், கொஞ்சம் கொஞ்சமாக வெந்து செத்துப்போகும். அதே நிலையில்தான் தமிழர்களும் இருக்கிறார்கள்.

மூன்றாவதாக ஒரு மொழியை தமிழர்கள் மீது திணிப்பதைக் கண்டு துள்ளிக்குதிக்கும் தமிழக அரசியல் கட்சிகள், முதல் மொழியான தமிழே இங்கு ஒழிக்கப்பட்டது குறித்து எந்தக் கவலையும் கொள்ளவில்லை.

முதல் மொழி ஒழிக்கப்பட்டு, அந்த இடத்தில் இரண்டாம் மொழி திணிக்கப்படுவதுடன் ஒப்பிட்டால் - மூன்றாம் மொழி இந்தித் திணிப்பு ஒரு பெரிய ஆபத்தே அல்ல!

இந்தித் திணிப்பை விட பெரிய ஆபத்து!

கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சி என எல்லாவற்றுக்கும் அடிப்படையானது 'கற்பித்தல் மொழி' (medium of instruction) ஆகும். மொழியியல் அறிஞர்களின் அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் படி - எந்த ஒரு இடத்திலும் 'கற்பித்தல் மொழி' என்பது அந்த இடத்தில் பேசப்படும் முதன்மை மொழியாகவே இருக்க வேண்டும்.
குறிப்பாக, பள்ளிக்குழந்தைகள் 6 முதல் 8 ஆண்டுகள் முதல் மொழியில் நன்றாகக் கற்றுத் தேர வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும், முதல் மொழியை முழுமையாகக் கற்றுத்தரும் முன்பாக இரண்டாவது மொழியைக் கற்றுத்தரக் கூடாது. முதன் மொழியில் கற்றுத்தேர்ந்த ஒரு குழந்தைக்கு அந்த முதல் மொழியின் மூலமாக இரண்டாம் மொழியைக் கற்றுத்தர வேண்டும்.

இதனை தமிழ்நாட்டு சூழலில் பார்த்தால் - தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழை மிகத் தெளிவாக கற்றுத்தந்த பின்னரே, ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்றுத்தர வேண்டும். ஆங்கிலம் தவிர்த்த எல்லா பாடங்களும் தமிழ் வழியிலேயே கற்றுத்தரப்பட வேண்டும்.

அதாவது, 6 ஆம் வகுப்பு அல்லது 8 ஆம் வகுப்பு வரையில், தமிழ் நாட்டில் தமிழ்வழிப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அங்கும் கூட, முதலில் தமிழைக் கற்பிக்கத் தொடங்கி, பின்னர் அந்த தமிழின் மூலமாகவே ஆங்கிலத்தைக் கற்பிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு மரத்தின் படத்தைக் காட்டி அதனை Tree என்று குழந்தைக்கு சொல்லித்தரக் கூடாது. மாறாக, மரத்தின் படத்தைக் காட்டி, முதலில் அது 'மரம்' என தமிழில் சொல்லிக் கொடுத்து. பின்னர் தமிழில் 'மரம்' என்பதுதான் ஆங்கிலத்தில் 'Tree' என்று சொல்வதே - சரியாக இரண்டாம் மொழி கற்பித்தல் முறையாகும்.

ஆனால், இந்தியை எதிர்க்கும் வேலி ஆங்கிலம் என்று சொல்லி - பின்னர் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, தமிழை ஒழித்து ஆங்கிலத்தை புகுத்திவிட்டார்கள். தமிழ்நாட்டு பள்ளிக்கூடங்களில் தமிழ் முதன் மொழியாக இல்லாமல், ஆங்கிலம்தான் முதல் மொழி என்று ஆக்கிவிட்டார்கள்.

முதன் முதலில் எம்ஜிஆர் இந்த அநீதியை 'மெட்ரிகுலேசன் பள்ளிகள்' என்கிற சதி மூலம் செயலாக்கினார். இப்போது, அரசுப் பள்ளிகளிலும் இந்த அநீதியைப் புகுத்திவிட்டனர்.

மூன்றாம் மொழி இந்தித் திணிப்புக்கு எதிராக கொந்தளிக்கும் கட்சிகள், முதல் மொழி தமிழின் அழிவு குறித்து மவுனம் காக்கின்றன.

கட்சிகள் கண்டுகொள்ளாதது ஏன்?

திமுக - அதிமுக கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் நேர்ந்த பெரும் கேடுகளில் முதலாவது கேடு மதுத்திணிப்பு என்றால், இரண்டாவது பெரும் கேடு தமிழ் மொழி அழிப்பாகும்.

தமிழை ஏன் அழித்தார்கள் என்றால் அதற்கும் அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது.

தமிழ் நாட்டில் மூன்றுவிதமான குழந்தைகள் உள்ளனர்:
1. வீட்டில் தமிழ் பேசும் குழந்தைகள்,
2. வீட்டில் ஆங்கிலம் பேசும் குழந்தைகள். 
3. வீட்டில் தமிழோ, ஆங்கிலமோ அல்லாமல் மூன்றாவதாக ஒரு மொழியை (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி) பேசும் குழந்தைகள்.

பள்ளிகளில் தமிழை முதல் மொழியாகக் கொள்வதால் "1. வீட்டில் தமிழ் பேசும் குழந்தைகள்" பலன் அடைவார்கள். அவர்கள் கல்வித்தரத்தில் வேகமாக முன்னேறுவார்கள்.

ஆனால், தமிழை அழித்து ஆங்கிலத்தை முன்னிறுத்தினால் "2. வீட்டில் ஆங்கிலம் பேசும் குழந்தைகள். 3. வீட்டில் தமிழோ, ஆங்கிலமோ அல்லாமல் மூன்றாவதாக ஒரு மொழியைப் பேசும் குழந்தைகள்" பலன் அடைவார்கள். அவர்கள் கல்வித்தரத்தில் வேகமாக முன்னேறுவார்கள். ஆனால், வீட்டில் தமிழ் பேசும் குழந்தைகள் பின் தங்கி விடுவார்கள்.
அதாவது, வீட்டில் தமிழ்பேசும் தமிழ்க் குழந்தைகளுக்கு பள்ளியிலும் தமிழில் கற்பது மிகச்சிறந்த கற்கும் சூழலாக அமையும். அதே நேரத்தில் - வீட்டிற்குள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி பேசும் குழந்தைகளுக்கு பள்ளியில் 'தமிழும் ஆங்கிலமும்' ஒப்பீட்டளவில் ஒன்றாகவே இருக்கும். அதுவே, விட்டில் ஆங்கிலம் பேசும் குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு பள்ளியிலும் ஆங்கிலத்தில் கற்பது மிகச்சிறந்த கற்கும் சூழலாக அமையும்.

ஆக, தமிழ் நாட்டில் தமிழை தாய்மொழியாகக் கொண்டிராத குழந்தைகளில் நலனுக்காகவே ஆங்கிலம் திணிக்கப்படுகிறது. 

சாதி ரீதியில் பார்த்தால் பெரும்பான்மை சாதியினர் வீட்டில் தமிழ் பேசுகிறவர்களாகவும், சிறுபான்மை சாதியினர் வீட்டில் ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளைப் பேசும் நிலையில் இருப்பதாலும் - ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை சாதியினரை ஓரங்கட்டவும் இந்த 'ஆங்கிலவழிக் கல்வி முறை' பயன்படுகிறது.

தமிழ் நாட்டில் "வீட்டில் தமிழ் பேசும் குழந்தைகள்" எண்ணிக்கைதான் அதிகம் என்றாலும், அதிகாரத்தில் இருப்பவர்களில் "வீட்டில் ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி பேசும் குழந்தைகளே அதிகம்". அரசியலிலும் இவர்கள்தான் அதிகம். எனவேதான், தமிழ் பேசாதவர்களின் ஆட்சியில் தமிழ் ஒழிக்கப்பட்டுவிட்டது. 

தமிழ் மக்களுக்கு எதிரான இந்தச் சதியை தமிழர்கள் அறியாமலேயே இருந்துவிட்டார்கள். குளிர்ந்த நீரில் போட்டு கொதிக்க வைத்தால், கொஞ்சம் கொஞ்சமாக வெந்து செத்துப்போகும் தவளையின் கதி தமிழர்களுக்கும் நேர்ந்து விட்டது.

இந்தப் பேராபத்தைக் கண்டு கொந்தளிக்காதவர்கள் - இப்போது இந்தியை எதிர்த்து முழக்கம் இடுகிறார்கள்.
குறிப்பு: பாமகவின் கொள்கை என்ன? 

"தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி முழுவதும் தமிழ்நாட்டின் முதல்மொழியான தமிழ்மொழி மூலமாகவே கற்பிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் ஆங்கிலம் இரண்டாவது மொழியாக சிறந்த முறையில் கற்பிக்கப்பட வேண்டும். மொழிச்சிறுபான்மையினர் அவரவர் தாய்மொழியை மூன்றாவது மொழியாகக் கற்றுக்கொள்ள வழிசெய்யப்பட வேண்டும்" (பாமக கொள்கை ஆவணம் - புதிய அரசியல் புதிய நம்பிக்கை, பக்கம் 82)

சனி, ஜூன் 14, 2014

பெங்களூரில் மாபெரும் வன்னியர் திருவிழா: அறியாத தகவல்கள்!

பெங்களூரு நகரின் தர்மராயா சுவாமி ஆலயத்தில் சித்திரை மாதத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கரகா திருவிழா ஒரு வன்னியர் திருவிழா ஆகும்.

பெங்களூரு நகரிலும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க சமூகமாக வாழும் வன்னியர்கள் இத்திருவிழாவினை ஆண்டுதோரும் மிகச் சிறப்பாக நடத்துகின்றனர்.

கர்நாடக வன்னியர்கள்

கர்நாடக மாநிலத்தில் வன்னியர்கள் 'திகளர்' என்று அழைக்கப்படுகின்றனர். அக்னிகுல சத்திரியர்கள், சம்புகுல சத்திரியர்கள், வன்னிய குல சத்திரியர்கள் என வேறுபட்ட பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

அவர்கள் தமிழ் கலந்த கன்னடம் மற்றும் கன்னட மொழிபேசும் மக்களாக அங்கு வாழ்கின்றனர். கர்நாடக அரசு வன்னிய சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துள்ளது. (கர்நாடக மாநிலத்தில் சுமார் 40 லட்சம் பேர் வரை வன்னியர்கள் வாழக்கூடும் எனக் கருதப்படுகிறது).

கர்நாடக மாநிலத்தில் வாழும் கணிசமான வன்னியர்கள் அம்மாநிலத்திலேயே நெடுங்காலமாக வாழ்கின்றனர். பெரும்பகுதியினர் பிற்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு சென்றவர்கள்.
கர்நாடக திகளர் வன்னியர் அக்னி கலச சின்னம்
பெங்களூரை நகரை நிர்மானித்த கெம்பே கௌடா - காஞ்சிபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட வன்னிய குல சத்திரியர் என்று கருதப்படுகிறது. அவர் முதன்முதல் உருவாக்கிய கோட்டை பகுதியில் இப்போதும் வன்னியர்களே அதிக அளவில் வசிக்கின்றனர். அப்பகுதி திகளர் பேட்டை என்றே அழைக்கப்படுகிறது.

கி.பி. பதினோராம் நூற்றாண்டில் சோழப்பேரரசின் படையெடுப்பு காலத்தில், முதன்முதலில் கன்னடப் பகுதிக்கு சென்ற வன்னியர்கள் அங்கேயே தங்கினர் என்றும், அதற்கு அடுத்ததாக விஜயநகரப் பேரரசு காலத்தின் வன்னியர்கள் கன்னட நாட்டிற்கு சென்றனர் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஹைதர் அலி ஆர்க்காட்டின் மீது படையெடுத்த போது, பகலில் எங்குமே எதிரிப்படையினர் இல்லாத நிலையிலும், இரவுகளில் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஏன் இவ்வாறு நடக்கிறது என ஆராய்ந்த போது - பகலில் விவசாயிகளாக இருந்த வன்னியர்கள் இரவில் போராளிகளாக மாறி தாக்குதல் நடத்துவதைக் கண்டு அவர்களையும் தனது படையில் சேர்த்துக்கொண்டார். இவர்கள் மூன்றாவதாக பெங்களூரில் குடியேறிய பிரிவினர் ஆகும்.

இவ்வாறு பல்வேறு காலங்களில் கன்னட நாட்டில் குடியேறிய வன்னியர்களே இன்று பெங்களூரு கரகத் திருவிழாவை நடத்துகின்றனர் (காங்கிரசுக் கட்சி எம்.எல்.ஏ. நரேந்திர பாபு, பெங்களூர் மாநகரின் முன்னாள் மேயர் ரமேஷ் உள்ளிட்டோர் கர்நாடக வன்னியப் பிரமுகர்கள் ஆகும்)

பெங்களூர் திருவிழா

கரகா திருவிழா என்பது, பெங்களூரு தர்மராயா சுவாமி ஆலயம் எனப்படும் 'திரௌபதி ஆலயத்தில்' சித்திரை மாதத்தில் பதினோரு நாட்கள் நடக்கும் திருவிழா ஆகும். அதில் முக்கிய நாளான பெரிய கரகம் (Pete Karaga) எனும் கரக ஊர்வலம் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கிறது. அதனைக் காண லட்சக் கணக்கான மக்கள் திரளுகிறார்கள்.
'ஆண்டில் ஒருமுறை உங்கள் முன் தோன்றுவேன்' என திரௌபதி வன்னியர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப, திரௌபதி அம்மன் கரகத்தில் எழுந்தருளுகிறார் என்பது இதன் ஐதீகம் ஆகும்.

கடுமையான விரதம் இருந்து இந்த கரகத்தை தூக்கும் கடமையை மூன்று வன்னியக் குடும்பத்தினர் பரம்பரையாக மேற்கொள்கின்றனர். இந்தக் கரகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வீரக் குமாரர்களாக ஒவ்வொரு வன்னியக் குடும்பத்தில் இருந்தும் ஒருவர் வீதம், வீரக்குமாரர்கள் விரவாளுடன் பங்கேற்கின்றனர்.

(இத்திருவிழாவில் வீரக் குமாரர்களாக வன்னியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஒவ்வொரு வன்னியர் குடும்பத்தினரும் வீரக் குமாரர்களின் வீரவாளினை தமது குடும்ப பாரம்பரியமாக கொண்டுள்ளனர். ஆங்கிலேயேர்கள் நூறாண்டுக்கு முன்னரே இந்த வாளுக்கு ஆயுதத் தடைச்சட்டத்திலிருந்து விலக்களித்துள்ளனர்)

திருவிழாவின் முக்கிய நாட்கள்

1. கரகா திருவிழா போதிராஜா பரம்பரையைச் சேர்ந்த வன்னியக் குடும்பத்தினர் கோவிலில் கொடியேற்றுவதில் தொடங்குகிறது. அப்போது விழாவில் தொடர்புடைய வீரக்குமார்கள் உள்ளிட்டோர் காப்பு கட்டிக்கொள்கின்றனர்.

2. அடுதாக 'மடிவந்திகா' எனும் விழா கடைபிடிக்கப்படுகிறது. அன்றுமுதல் திருவிழாக்காலமான ஒன்பது நாட்களுக்கு வன்னியர்கள் வீட்டை தூய்மையாக பராமரிக்க வேண்டும். புது மட்பாண்டங்களில் சமைக்க வேண்டும், இலையில் சாப்பிட வேண்டும் என்பது மரபாகும்.

3. புண்ணிய சேவா என்பது கரகத்தை தூக்குவோர் குறிப்பிட்ட நீர்நிலைகளில் குளிப்பதாகும்.

4. திருவிழாவின் ஆறாம் நாளில், போதிராஜ சிலையும் திரிசூலமும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நாளில் வீரக்கலைகளை வன்னியர்கள் நிகழ்த்திக்காட்ட வேண்டும். தங்களது போர் ஆயுதங்களை கோவிலில் காட்சிக்கு வைக்க வேண்டும் என்பது மரபாகும்.
வீரவாள் காட்சிக்கு வைத்தல்
இதே நாளில் அரிசியும் வெல்லமும் கொண்ட பாத்திரங்களை மல்லிகை கனகாம்பரம் கொண்டு அலங்காரம் செய்து, வன்னியப் பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
5. ஏழாம் நாளில் ஹசி கரகா எனும் திருவிழா கொண்டடப்படுகிறது. பெங்களூருவின் புராதானமான சம்பங்கி குளத்தில் கரகம் பூசை செய்யப்படுகிறது. பின்னர் ஊர்வலமாக கரகம் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வன்னிய வீரக்குமாரர்கள் தங்களது வாளால் நெஞ்சில் அடித்து வழிபடுகின்றனர்.

6. எட்டாம் நாளில் வன்னியப் பெண்கள் கோவிலுக்குள் பொங்கல் அவைத்து வழிபடுகின்றனர். கோபம் கொண்ட திரௌபதி அம்மனுக்கு பொங்கல் வைத்து சாந்தப்படுத்தும் விழா இதுவாகும். இரவில் மகாபாரதக் கதை படிக்கப்படுகிறது.

7. ஒன்பதாம் நாள், சித்திரைப் பௌர்ணமி நாளாகும். இதுதான் திருவிழாவின் முக்கிய நாள். இந்த நாளில் கரகம் ஊருவலமாக பெங்களூரு நகரின் முதன்மைப் பகுதிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது.

பெங்களூருவின் பிரதான பகுதிகளில் நகர்வலமாக செல்லும் இந்த கரக ஊர்வலம், Hazrat Takwal Mastan எனும் இஸ்லாமிய தர்காவில் நின்று, மூன்று முறை சுற்றி, ஒரு எலுமிச்சைப் பழத்தை தர்காவிற்கு அளித்து, அங்கிருந்து ஒரு எழுமிச்சைப் பழத்தை வாங்கிச் செல்வது பாரம்பரிய வழக்கமாகும்.
இஸ்லாமிய தர்காவில் கரகம் 
கரகத்தை சுமப்பவர் இரவு முழுவதும் பல மணி நேரம், கரகத்தை கையால் தொடாமலும், கரகத்தை கீழே வைக்காமலும் நடனம் ஆடியபடி வெறும் தலையில் சுமந்து எடுத்துச் செல்கிறர் (நூறாண்டுகளுக்கு மேலான வரலாற்றில் ஒருமுறைக் கூட கரகம் கீழே வைக்கப்பட்டது இல்லை). கரகத்துக்கு பாதுகாப்பாக நூற்றுக்கணக்கான வன்னிய வீரக்குமாரர்கள் வீரவாளுடன் செல்கின்றனர்.

8. பத்தாம் நாள் காவு சேவை எனும் விழா கடைபிடிக்கப்படுகிறது. அதற்கு முதல் நாள் இரவே போதிராஜாவின் புராண வரலாறு, வீரக்கதையாக படிக்கப்படுகிறது. விடியும் நேரத்தில் போதிராஜா பரம்பரையைச் சேர்ந்த இரண்டு வன்னியர்கள் போதிராஜாவாக வேடமிட்டு - கருப்பு அட்டை பலியிடுகின்றனர்.

9. பதினோராம் நாள் விழாவின் இறுதிநாளாகும். வசந்தவிழா என்கிற பெயரில் இந்த நாளில் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.

போதிராஜாவின் கதை

ஏழு சுத்துக் கோட்டை எனும் கோட்டைக்கட்டி அரசாட்சி செய்யும் போதிராஜா தனது வலிமையை நிரூபிக்க 101 அரசர்களை யாகத்தில் பலியிடத் திட்டமிடுகிறார். 100 அரசர்களை சிறைபிடித்து 101 ஆவது அரசனுக்காக காத்திருக்கும் நிலையில், தலைமறைவாக வாழும் பஞ்ச பாண்டவர்களில் பீமனை 101 ஆவது ஆளாக கைது செய்து சிறையில் அடைக்கிறார்.

இதனை அறிந்த கிருஷணன் - அர்ஜுனனை குறவங்கி எனும் பெண் வேடமிட்டு, போதி ராஜாவிடம் அனுப்புகிறார். அந்தப் பெண்ணின் அழகில் மயங்கும் போதிராஜா, அவளை திருமணம் செய்ய விரும்புகிறார்.
போதிராஜா கதைநாடகத்தில் போதிராஜா பரம்பரையினர் at Mulabagilu
இதற்கு சிவபக்தனும் சைவனும் ஆகிய போதிராஜா, மாமிசம் உண்ண வேண்டும். சிறையில் இருக்கும் அரசர்களை விடுவிக்க வேண்டும் என கிருஷ்ணன் நிபந்தனை விதிக்கிறான். இதனை ஏற்று ஆட்டு மாமிசத்தை புசித்து, சிறைவைக்கப்பட்ட மன்னர்களையும் போதிராஜா விடுவிக்கிறார். இதற்கு மாற்றாக, பஞ்சபாண்டவர்களின் சகோதரியான சங்கவள்ளியை போதிராஜாவுக்கு மணமுடிக்கின்றனர். மகாபாரதப் போரில் போதிராஜா பாண்டவர்களின் படைக்கு தலைமையேற்கிறார். இந்த கதைதான் பத்தாம் நாள் திருவிழா ஆகும்.

ஏழு சுத்தின கோட்டை எனும் ஒரு பழமையான கோட்டை தர்மராயா கோவிலுக்கு அருகில் இருக்கிறது. பெங்களூருவில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் சித்தரதுர்காவிலும் ஒரு ஏழு சுத்தின கோட்டை இருக்கிறது

(வன்னியர்களிடையே பாரதம் படிக்கும் கதையை கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பரப்பிய நரசிம்மவர்ம பல்லவனும், அவரது தந்தை மகேந்திரவர்ம பல்லவனும் - மாமல்லபுரம் கல்வெட்டுகளில் 'நரசிம்மவர்ம பொதிராஜன் , மகேந்திரவர்ம போதிராஜன்' என்று குறிப்பிடப்படுகின்றனர். தமிழ்நாட்டின் எல்லா திரௌபதி அம்மன் ஆலையத் திருவிழாவிலும் போதிராஜன் வம்சத்தை சேர்ந்தோர் என சில வன்னியக் குடும்பங்கள் பரம்பரையாக பங்கேற்க்கின்றனர்) 

கர்நாடக ராஜ்ய திகள க்ஷத்திரிய மகாசபா

'கர்நாடக ராஜ்ய திகள க்ஷத்திரிய மகா சபா' மாநாடு பிப்ரவரி 2014 இல் நடந்தது. கர்நாடக மாநில முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அனைதுக் கட்சி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு விருந்தினராக மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் பங்கேற்றார்.
கர்நாடக ராஜ்ய திகள க்ஷத்திரிய மகாசபா மாநாட்டில் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள்
தர்மராயா சுவாமி ஆலயத்தில் இருந்து மாநாட்டு மேடைக்கு ஊர்வலம் நடத்தப்பட்டது. ஒரு லட்சம் பேர் பங்கேற்ற இம்மாநாட்டில், வன்னியர்களின் பெங்களூர் கரகா விழாவுக்கு கர்நாடக அரசின் சார்பில் ஆண்டுதோரும் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என முதல்வர் சீத்தாராமய்யா தெரிவித்தார்.

மறைக்கப்படாத வன்னியர் வரலாறு

தமிழ் நாட்டில், சாதி அடிப்படையிலான வரலாற்று அடையாளங்களை அழிப்பதன் மூலம், தமிழர்களின் அடையாளத்தையே இல்லாமல் செய்துவிட்டனர். இதற்கு மாறாக, கன்னட தேசியத்தை ஓங்கி உயர்த்தும் கர்நாடக மாநிலத்தவர்கள் - ஒவ்வொரு சாதியின் அடையாளத்தையும் உயர்த்திப் பிடிக்கின்றனர்.

அந்த வகையில், பெங்களூரு நகரின் முதன்மை திருவிழாவாக வன்னியர்களின் திரௌபதி அம்மன் கரகத் திருவிழாவை அங்கீகரித்து, முக்கியத்துவம் அளித்துள்ளனர் (Bangalore's most important and oldest festival called "Karaga Shaktyotsava" or Bengalooru Karaga). மேலும், இதன் எல்லா உரிமைகளும் வன்னியர்களுடையவை என்பதையும் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.
பெங்களூருவின் பெருமை
அதுமட்டுமல்லாம, கர்நாடக ஊடகங்கள், இதனை வன்னியர் திருவிழா என வெளிப்படையாக அறிவித்து, இதனை பெங்களூருவின் முதன்மை விழா என்றும் கொண்டாடுகின்றனர் (இதுவே தமிழ் நாடாக இருந்திருந்தால் - இதனை ஒரேயடியாக மூடி மறைத்திருப்பார்கள்)

கீழே உள்ள பெங்களூரு கரகா காணொலியில், இத்திருவிழா ஒரு வன்னியத் திருவிழா என TV9 தொலைக்காட்சி அறிவித்து, அதனைக் கொண்டாடுவதைக் காண்க:

வன்னியர்கள் குறித்து: 10: 25 / 12: 25 / 17: 10 / 20: 40 / 21: 30 ஆகிய மணித்துளிகளில் காண்க. வீரக்குமாரர்கள் குறித்து: 14: 20 மணித்துளியில் காண்க.

காணொலியில் கரகா திருவிழா
http://youtu.be/WyOXuH1RFRw


குறிப்பு: பெங்களூருவில் மட்டுமின்றி, கர்நாடகத்தின் பல்வேறு நகரங்களிலும் வன்னியர்கள் கரகா திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். குறிப்பாக Hoskote, Shanthinagar, Anaekallu, Maluru, Kolar, Vijaypura, Devanahalli, Yelehanka , Mulabagilu ஆகிய நகரங்களில் வன்னியர்களால் கரகா திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

தொடர்புடைய சுட்டிகள்:

1. வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA

2. வடபழனியில் வன்னியர் வரலாறு மறைப்பு

3. விநாயகர் சதுர்த்தியும் தமிழர்களின் வீரமும் - அறியாத தகவல்கள்!

வியாழன், ஜூன் 12, 2014

மிக முக்கிய செய்தி: இலங்கை மீதான ஐநா விசாரணைக்குழு தலைவர் நியமனம்!

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனிதஉரிமை அமைப்பில் பணியாற்றி, பின்னர் ஐநாவில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றும் Ms. SANDRA BEIDAS எனும் பெண்ணின் தலைமையில் இலங்கை மீதான ஐநா விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இதனை ஐநா மனித உரிமைகள் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று (12.06.2104) அறிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் இதனை அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கையின் கொடூரக் குற்றங்கள் தொடர்பான விசாரணை தொடங்குகிறது. இந்த விசாரணைக் குழுவில் 12 பேர் இடம் பெறுவார்கள். இவர்களுக்கு துணை செய்ய இரண்டாம் நிலைக் குழுவும் அமைக்கப்படும். அடுத்த 10 மாதங்களில் இந்த விசாரணை முடியும்.

பிரிட்டனைச் சேர்ந்த Ms. SANDRA BEIDAS சூடான் நாட்டின் மீதான விசாரணை ஆணையம், நேபாளத்தின் மீதான ஐநா மனித உரிமைக் கண்காணிப்புக் குழு உள்ளிட்டவற்றிலும் பணியாற்றியவராகும்.

ஐநா விசாரணைக் குழுவை இலங்கை அரசு இலங்கைக்குள் அனுமதிக்காது. இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளிடம் விசாரணை நடத்த இந்திய அரசாவது அனுமதிக்குமா? ஐநா விசாரணைக் குழுவுக்கு இந்திய அரசு விசா வழங்குமா?

தமிழ்நாட்டு தமிழர்களின் தன்மானத்துக்கு வரப்போகும் உண்மையான சவால் இதுதான்.

செய்தி:  UN inquiry team on Sri Lanka war crime named"

ஈழத்தில் பாலியல் வன்கொடுமை - கட்டாய விபச்சாரம்: தமிழ்ப் பெண்களைக் காக்க ஐநா வலியுறுத்தல்!

ஈழத்தில் போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் ஆகியவை குறித்த அறிக்கையை ஐ.நாவின் மனித உரிமை மற்றும் இடம்பெயர் மக்களுக்கான சிறப்பு பிரதிநிதி சலோகா பியானி இன்று (12.06.2016) ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ளார். 

இலங்கைக்கு நேரில் பயணம் மேற்கொண்ட சலோகா பியானி (Mr. Chaloka Beyani) இலங்கையில் புலம்பெயர் மக்களின் அவல நிலையையும், குறிப்பாக பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதையும், கட்டாய விபச்சரத்தையும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இக்குற்றச்செயலில் ஈடுபடும் இலங்கைப் படையினர் தண்டிக்கப்படுவது இல்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஐநா அறிக்கை மற்றும் அதற்கு இலங்கை அரசின் மறுப்பினை பின்வரும் இணைப்பில் Download செய்யலாம்:

1. ஐநா அறிக்கை: A/HRC/26/33/Add.4 Mission to Sri  Lanka

2. இலங்கை அரசின் மறுப்பு: A/HRC/26/33/Add.6 Mission to Sri Lanka: comments by the State on the report of the Special Rapporteur

அவரது அறிக்கையின் பரிந்துரைகள் கீழே:
Report of the Special Rapporteur on the human rights of internally displaced persons
- Chaloka Beyani -Mission to Sri Lanka

"Houses built to relocate single women headed households in the north are often isolated and some are incomplete, making women continuously vulnerable to attacks and sexual violence, including reported forced prostitution by elements of the military...The Special Rapporteur acknowledges that the State bears the primary responsibility under international human rights law to ensure that all allegations of acts of violence, including acts of sexual violence and forced prostitution, are investigated, prosecuted and punished (para 52)". 

"Conclusions and recommendations"

54. The Special Rapporteur’s visit to Sri Lanka took place over four and a half years after the end of the armed conflict between the Government and the LTTE. Since the end of the armed conflict, the Government has made significant progress, together with national and international partners, to facilitate the return or relocation of some 760,000 IDPs. It is important to ensure that the tens of thousands for whom durable solutions have not yet been found do not stay in limbo but find solutions to their plight. The Special Rapporteur believes that significant efforts are required by the Government to find durable solutions, ensuring a voluntary and informed process, and invites both humanitarian and development partners to work together with national and local authorities to ensure that the livelihoods of IDPs, relocated persons and returnees are restored. The Special Rapporteur encourages the Government to invite international partners to assist in promoting the protection of IDPs and others in search of durable solutions. The Special Rapporteur also wishes to emphasize the need for reconciliation, justice, healing and in particular, the need to bring the perpetrators of violations of international human rights law and international humanitarian law to justice in order to ensure accountability for wrongs committed to IDPs during and after displacement. 

55. In the spirit of cooperation extended to him during his visit, the Special Rapporteur looks forward to continuing dialogue with the Government of Sri Lanka and offers the following conclusions and recommendations. 

56. Concerning an effective national response, the Special Rapporteur recommends that the Government:

• Implement the recommendations of the LLRC, particularly chapter 5 on human rights generally and with regard to IDPs, and chapter 6 on land issues, return and resettlement;

• Implement the National Action Plan for the Promotion and Protection of Human Rights, particularly the goal of developing a broad-based national policy on internal displacement which takes into account all forms of displacement, conflict, natural disasters and economic development, drawing on the Guiding Principles on Internal Displacement and the IASC Framework on Durable Solutions for Internally Displaced Persons;

• In collaboration with international partners, significantly revise the current draft Framework for Resettlement Policy to make it a comprehensive policy on internal displacement, including on durable solutions, in line with the recommendations of the LLRC, the National Action Plan for the Promotion and Protection of Human Rights, the comprehensive 2008 draft IDP bill, the Guiding Principles on Internal Displacement and the IASC Framework on Durable Solutions for Internally Displaced Persons, with clear benchmarks for durable solutions to ensure a transparent process and reinforce credibility; 

• Undertake a comprehensive needs assessment of all areas that have historically hosted IDPs, that is, the Northern, Eastern, North-Western and North-Central Provinces, and consider the needs of communities hosting IDPs, in partnership with local civil society organizations and international partners;

• Given that the conflict has ended, reassess the role of the military in maintaining national security, in compliance with international human rights law, and balance it with the right of IDPs to enjoy freedom of movement and choice of residence. based on necessity, as prescribed by law in the pursuit of national security as a legitimate aim, and proportionality or reasonable measures to ensure freedom of movement and choice of residence by IDPs;

• Provide IDPs with transparent information on the plans for the phased withdrawal of the military from certain areas, and provide adequate compensation and resettlement to those who may not return to their original lands;

• Resolve issues relating to land property by legislative measures with regard to competing claims over title, ownership, use and occupation; 

• Protect single women headed households, and protect women in the north against sexual violence and enforced prostitution; 

• Ensure that IDPs are not subject to attacks, harassment, intimidation, persecution or any other form of punitive action upon return to their home communities or settlement elsewhere in the country, and ensure that they can enjoy their freedom of movement;

• Ensure that IDPs, returnees and relocated persons enjoy equal and non-discriminatory access to education, health services, livelihoods, land, property rights and equality before the law;

• Establish modalities enabling IDPs, returnees and relocated persons to access their land in the former High Security Zones and to be provided with adequate information on their prospects of regaining access to their land so that they can assess their options and make informed choices;

• Ensure that the commission appointed to investigate reports of missing persons complies with recognized international standards, works in consultation with the families of missing persons, extends its coverage to including missing persons/disappearances since May 2009, and makes its finding and recommendations public;

• Invite the Working Group on Enforced or Involuntary Disappearances to Sri Lanka pursuant to principles 16 and 17 of the Guiding Principles on Internal Displacement;

• Ensure that all human rights violations of a criminal nature committed against IDPs, returnees and relocated persons are subject to criminal investigation and that the alleged perpetrators are brought to justice;

• Enable proper working conditions without intimidation for NGOs and civil society organizations working with IDPs and returnees in the north and the east;

• Address impunity of security personnel in relation to offences against civilians.

57. The Special Rapporteur recommends that, with the support of international donors, international humanitarian and development actors: 

• Support the Joint Needs Assessment and enable the Government to carry out a comprehensive profiling exercise of the numbers of IDPs, relocated persons and returnees, as well as a survey of intention of IDPs and their needs linked to livelihoods, housing, land and property;

• Ensure that development plans include programmes for durable solutions based on the specific needs of IDPs, relocated persons and returnees, using a rights-based approach and ensuring the participation of IDPs in decision-making, and also include IDPs in their general poverty alleviation and other relevant programmes and the monitoring thereof.


போதையில் விபத்து: வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை தேவை

போதையில் விபத்து ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை தேவை - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

"தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சாலை விபத்துக்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களும் மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. இவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படக் கூடியவை என்ற போதிலும், மனிதத் தவறுகளை திருத்திக் கொள்ள வாகன ஓட்டிகள் தயாராக இல்லை எனும்போது இனி பயணங்கள் பாதுகாப்பானவையாக இருக்குமா? என்ற கவலை எழுகிறது.
சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புக்களைப் பொறுத்தவரை கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு தான் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் நிகழ்ந்த சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 67,757 ஆகும். இந்த விபத்துக்களில் சிக்கி 16,175 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 78,000 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தோரில் சுமார் 7,000 பேர் உடல் உறுப்புகளை இழந்து முடமாகியுள்ளனர். இதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் சுமார் 23,000 குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்றன. அந்த வகையில் கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் இரண்டரை லட்சம் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விபத்துக்களுக்கு காரணமானவர்கள் எவரும் தவறுகளை உணர்ந்ததாக தெரியவில்லை.

தேசிய குற்ற ஆவணக் காப்பகமும், தமிழக போக்குவரத்து ஆணையமும் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, கடுமையான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் விபத்துகளுக்கு காரணமாக இருப்பவை சரக்குந்துகள் தான் என்று தெரிய வந்திருக்கிறது.

தமிழகத்தில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிகழ்வுகளில் 9192 விபத்துக்களுக்கு சரக்குந்துகளே காரணம் ஆகும். விபத்துக்களை ஏற்படுத்திய சரக்குந்து ஓட்டுனர்களில் 70 % மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டியதும் கண்டறியப்பட்டது. இந்தியாவிலேயே அதிக ஊர்திகளைக் கொண்ட மாநிலம் மராட்டியம் தான். 1.75 கோடி வாகனங்களைக் கொண்ட அம்மாநிலத்தில் ஆண்டுக்கு 45,000 விபத்துக்களும், 13,963 உயிரிழப்புகளும் மட்டுமே ஏற்படும் நிலையில், 1.5 கோடி ஊர்திகளை மட்டுமே கொண்ட தமிழகத்தில் 68,000 விபத்துக்களும், 16,175 உயிரிழப்புகளும் ஏற்படக் காரணம் பெரும்பாலான ஓட்டுனர்கள் போதையில் வாகனம் ஓட்டுவது தான்.

அண்மையில், அரியலூர் அருகே 15 பேர் உயிரிழக்கக் காரணமான கொடூரமான சாலைவிபத்துக்கு காரணம் சரக்குந்து ஓட்டுனர் அளவுக்கு அதிகமான போதையில் வாகனத்தை ஓட்டி பேரூந்து மீது மோதியது தான் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது கூட பேரூந்துகளையும், மற்ற வாகனங்களையும் உரசிக் கொண்டு சரக்குந்துகள் சீறிப் பாய்வதையும், இதனால் சரக்குந்துகளைப் கண்டாலே மற்ற வாகனங்களின் ஓட்டுனர்கள், குறிப்பாக இருசக்கர ஊர்தி ஓட்டுபவர்கள் பயந்து ஒதுங்குவதையும் பார்க்க முடிகிறது.

புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் தாறுமாறாக பறக்கும் சரக்குந்துகள் மோதி இரு சக்கர ஊர்திகளில் சென்ற கணவன்& மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுகள் ஏராளம். இதேபோல், புதுச்சேரியிலிருந்து கடலூர், விழுப்புரம் செல்லும் சாலைகளிலும் இத்தகைய விபத்துக்கள் அதிக அளவில் நடக்கின்றன. சரக்குந்துகளின் ஓட்டுனர்கள் போதையில் கண்மூடித்தனமாக ஊர்திகளை ஓட்டுவது தான் இதற்கு காரணம் ஆகும்.
சரக்குந்து ஓட்டுனர்களில் பெரும்பாலானவர்கள் கவனத்துடனும், பொறுப்புடனும் வாகனங்களை ஓட்டும் போதிலும், சிலர் குடித்துவிட்டு தாறுமாறாக ஓட்டுவதால் சரக்குந்து என்றாலே அஞ்சி நடுங்க வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் சாலை விபத்துக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் குடித்துவிட்டு ஊர்தி ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

தில்லியில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே உயிரிழக்கக் காரணமான சாலை விபத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி, சாலை விதிகளை 3 முறை மீறும் வாகன ஓட்டிகளின் உரிமம் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும், அதன்பிறகும் விதிகளை மீறினால் அவர்களின் ஓட்டுனர் உரிமம் முற்றிலுமாக இரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்திருந்தார். இந்த நடவடிக்கை வரவேற்கத் தக்கது தான் என்ற போதிலும், விபத்துக்களைத் தடுக்க இது மட்டுமே போதாது.

சரக்குந்து உள்ளிட்ட அனைத்து ஊர்திகளின் ஓட்டுனர்கள் மது அருந்திவிட்டு ஊர்தி ஓட்டியதாக ஒருமுறை பிடிபட்டாலே அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை இரத்து செய்யும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்; தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமின்றி, மாநில நெடுஞ்சாலைகளிலும் மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற விதியை மிகவும் கடுமையாக செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் 50 கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் சோதனைச்சாவடிகளை அமைத்து அனைத்து வகையான சரக்குந்துகளின் ஓட்டுனர்களும் மது அருந்தியிருக்கிறார்களா? என ஆய்வுசெய்ய வேண்டும். அவர்கள் மது அருந்தாமல் இருந்தால் மட்டுமே பயணத்தைத் தொடர அனுமதிக்க வேண்டும். அதேபோல், அனைத்து சரக்குந்துகளிலும் வேகத்தடை கருவி பொருத்தப்படுவதை உறுதி செய்வதுடன், அனுமதிக்கப்பட்டதைவிட அதிக வேகத்தில் செல்லும் ஊர்திகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இதற்காக காவல்துறையில் விபத்துத் தடுப்புப் பிரிவை தனியாக உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"

புதன், ஜூன் 11, 2014

வடபழனியில் வன்னியர் வரலாறு மறைப்பு

ஓர் இனக்குழுவை அழிக்க வேண்டுமானல் அதன் வரலாற்று அடையாளங்களை அழிக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் இனக்குழுவின் வரலாற்றை அழிப்பதை, 'இனவெறியின் ஓர் அங்கம்' என்றும் சொல்லலாம்.

(வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய் VANNIYAPHOBIA சிலரைப் பீடித்திருப்பது குறித்து "வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய்: VANNIYAPHOBIA" பதிவில் விரிவாக எழுதியுள்ளேன்)

வன்னியர்களின் வரலாற்றை அழிப்பதிலும் மறைப்பதிலும் தமிழ் நாட்டினர் சிலர் எப்போதும் மும்முரமாக இருந்து வருகின்றனர். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு காடவராய கோப்பெருஞ்சிங்கன்:

தமிழ்நாட்டின் பாடநூல்களிலும் வரலாற்று நூல்களிலும் எத்தனையோ மன்னர்களைப் படித்திருப்போம். ஆனால், கடலூர் மாவட்டம் சேந்தமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் வடதமிழ் நாட்டை ஆண்ட காடவராய கோப்பெருஞ்சிங்கன் எனும் மாமன்னனைப் பற்றி யாரும் அதிகம் படித்திருக்க மாட்டார்கள்.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள கோப்பெருஞ்சிங்கன் சிலை
தெற்கே தஞ்சை மாவட்டத்தில் தொடங்கி, வடக்கே கோதாவரி ஆறு வரை கல்வெட்டுகள் கொண்ட இந்த மாமன்னன் வரலாற்றுப் பக்கங்களில் மறைக்கப்பட - கோப்பெருஞ்சிங்கன் தன்னை ஒரு வன்னியன் என்று சொல்லிக்கொண்டதுதான்  காரணம்!

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு எதிரான இனவெறி கோலோச்சுகிறது என்பதற்கு கோப்பெருஞ்சிங்கனும் ஒரு உதாரணம் எனலாம்.

இதுபோன்று இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் வடபழனியின் வரலாறு!

வடபழனியில் ஒரு வரலாற்று மறைப்பு

புலியூர்கோட்டம் எனப்படுகிற சென்னை வடபழனியில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் அண்ணாசாமி நாயக்கர். தனது வயிற்றுவலித் தீரவேண்டும் என்று முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடத் தொடங்கினார். நேர்த்திக் கடனாக திருத்தணி கோவிலில் நாக்கை அறுத்துக் கொண்டார். எனினும் அவருக்கு தொடர்ந்து பேச்சு வந்ததாகவும் வயிற்றுவலி தீர்ந்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.

பழனிமலை முருகன் கோவிலுக்கு நடந்தே சென்ற அண்ணாசாமி நாயக்கர், அங்கு ஒரு முருகன் படத்தை வாங்கி, அதனை தலையில் சுமந்து புலியூர்க் கோட்டம் வந்தார். அங்கு சிறு குடிசை அமைத்து முருகன் படத்தை வைத்து வழிபட்டார். அங்கு வந்தவர்களுக்கு குறிசொன்னார். அதனால் அந்த இடம் குறிமேடை ஆனது. (அந்த முருகன் படம் இப்போது வடபழனி ஆலயத்தின் தென்கிழக்கு மண்டபத்தில் உள்ளது)
அண்ணாசாமி நாயக்கர் பழனியிலிருந்து கொண்டுவந்து வழிபட்ட முருகன் படம்
பின்னர் இரத்தினசாமி செட்டியார் என்பவர் அண்ணாசாமி நாயகருக்கு அறிமுகமானார். அவர் அண்ணாசாமி நாயகரின் தொண்டராக ஆனார். இருவரும் சேர்ந்து முருகப்பெருமானுக்கு சிறு கோயில் ஒன்றை கட்டினார்கள். இரத்தினசாமி செட்டியார் தனது தொண்டராக பாக்யலிங்க தம்பிரான் என்பவரை தேர்வு செய்தார்.

இவ்வாறாக, வடபழனி முருகன் கோவிலில் அண்ணாசாமி நாயகர் முதல் சித்தராகவும், இரத்தினசாமி செட்டியார் இரண்டாம் சித்தராகவும், பாக்கியலிங்க தம்பிரான் மூன்றம் சித்தராகவும் கருதப்படுகிறர்கள்.

எங்கே இருக்கிறது வரலாற்று மறைப்பு?

மேற்கண்ட வரலாற்றின் படி தெரியவரும் செய்தி, வடபழனி கோவிலை உருவாக்கியவர் அண்ணாசாமி நாயகர். அவர் ஒரு வன்னியர் என்பதாகும்.

ஆனால், வரலாற்று அடையாளங்களில் இருந்து வன்னியர்களை அப்புறப்படுத்த வேண்டும். வன்னியர்களது அடையாளங்களை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்பது தமிழ்நாட்டில் வழிவழியாக வரும் குணமாக இருப்பதால் - வடபழனி ஆலயத்திலும் அதனை அரங்கேற்றினார்கள்.

வன்னியர் அடையாளம் அழிப்பு

வடபழனி முருகன் கோவிலுக்கு வடமேற்கே, நெற்குன்றம் சாலையில் வடபழனி கோவிலை உருவாக்கிய சித்தர்கள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தை நிர்மானித்து இதற்கான மண்டபத்தை 1997 இல் கட்டினார்கள்.

அவ்வாறு 'வடபழனி முருகன் கோவில் உருவாகக் காரணமான சித்தர்கள் ஆலயம்' அமைக்கப்பட்ட போது அதற்கான கல்வெட்டில் சித்தர்களின் சாதி அடையாளத்தை மாற்றிவிட்டார்கள். அதாவது:

முதலாம் சித்தர்: அண்ணாசாமி நாயகர்
இரண்டாம் சித்தர்: இரத்தினசாமி செட்டியார்
மூன்றாம் சித்தர்: பாக்கியலிங்க தம்பிரான்

- என்பதை:

முதலாம் சித்தர்: அண்ணாசாமி தம்பிரான்
இரண்டாம் சித்தர்: இரத்தினசாமி தம்பிரான்
மூன்றாம் சித்தர்: பாக்கியலிங்க தம்பிரான்

- என்று மாற்றிவிட்டனர்.
சித்தர்கள் ஆலயக் கல்வெட்டில் 'அண்ணாசாமி தம்பிரான்'
அதாவது, வன்னியர், செட்டியார் என்கிற சாதி அடையாளம் மறைக்கப்பட்டது. இந்த மூன்று சித்தர்களும் ஒரே குடும்பத்தை (தம்பிரான்) சேர்ந்தவர்கள் என்பது போன்ற கட்டுக்கதையைக் கட்டிவிட்டார்கள்.

இப்போது தினமலர் பத்திரிகை போன்ற பல இடங்களிலும் வடபழனி முருகன் கோவிலை உருவாக்கியவர் 'அண்ணாசாமி தம்பிரான்' என்கிற கட்டுக்கதைதான் வலம் வருகிறது.

வன்னியர் சங்கத்தின் போராட்டம்

அண்ணாசாமி நாயகர் என்கிற பெயரை அண்ணாசாமி தம்பிரான் என்று மாற்றியதற்கு வன்னியர் சங்கம் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து 'அண்ணாசாமி தம்பிரான்' என்பதை வடபழனி கோவில் தென்கிழக்கு மண்டபப் படத்திலும், கோவில் இணயதளத்திலும் 'நாயக்கர்' என்று மாற்றியுள்ளனர்.

தமிழக அரசு கோவில் இணயதளத்தில் 'அண்ணாசாமி நாயக்கர்' என இருப்பதை இங்கே காண்க: ARULMIGU VADAPALANI ANDAVAR THIRUKOIL 

சித்தர்கள் ஆலயத்தில் உள்ள அண்ணாசாமி நாயக்கர் நினைவிடத்தில் 'தம்பிரான்' என்பதை அழித்துவிட்டு, அதன்மேல் 'நாயக்கர்' என எழுதியுள்ளனர். இப்போது இரண்டு பெயர்களுமே ஒன்றாகி தெரிகிறது!
 தம்பிரான் என்பதை அழித்துவிட்டு 'நாயக்கர்' என திருத்தியுள்ள படம்
சித்தர்கள் ஆலயக் கல்வெட்டில், இன்னமும் 'அண்ணாசாமி தம்பிரான்' என்றே உள்ளது. தினமலர் நாளிதழ் அண்ணாசாமி நாயக்கரை, அண்ணாசாமி தம்பிரான் என்று சொல்வதை இங்கே காண்க: அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் 

வடபழனி ஆலய கோபுர பதாகையில் அண்ணாசாமி நாயக்கர் என்று மாற்றுயுள்ளனர். ஆனால், இராமலிங்க செட்டியார் என்பது இராமலிங்க தமிபிரான் என்றுதான் உள்ளது.
தொடரும் இனவெறி

சுமார் 150 ஆண்டுகால வரலாற்றிலேயே இப்படி அப்பட்டமாக வன்னியர் வரலாற்று அழிப்பை செய்கிறவர்கள், கடந்த 1000 ஆண்டுகளில் எப்படியெல்லாம் இனவெறி வரலாற்று அழிப்பு வேலைகளைச் செய்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் செய்த மாபெரும் சாதனைகள் மறைக்கப்படுவதும், ஒரு சமூக நீதிப் போராளியான மருத்துவர் அய்யா அவர்களின் தியாகங்கள் மறைக்கப்பட்டு சாதி வெறியர் என்று பதிவுசெய்யப்படுவதும் - வன்னியர்கள் எனும் இனக்குழுவின் வரலாற்றை அழிக்கும் இனவெறி (VANNIYAPHOBIA) திட்டத்தின் ஓர் அங்கம்தான்.

அடையாள அழிப்பு இனவெறியர்களையும், அவர்களது தந்திரங்களையும் முறியடிப்பது ஒவ்வொரு வன்னியரின் கடமை என்பதை உணரும் காலம் வரவேண்டும். அப்போதுதான் உண்மை இனவெறியர்கள், நம்மைப் பார்த்து சாதிவெறியர் என்று சொல்லும் அவலத்தை முறியடிக்க முடியும்.

நாம் மீண்டெழுவோம். VANNIYAPHOBIA எனும் இனவெறி மனநோயை முறியடிப்போம்.

மின்வெட்டு: ஐயங்களை தீர்ப்பாரா ஜெயலலிதா?

மின்வெட்டு: ஐயங்களை தீர்ப்பாரா ‘பொதுநலவாதி’ ஜெயலலிதா?  - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
தமிழ்நாட்டில் இதுவரை நடைமுறையில் மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் முழுமையாக நீக்கப்படும் என்று கடந்த மே 27 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், மின்வெட்டு நீக்கப்பட்டதற்கு மூன்றாவது நாளே சென்னை தவிர மற்ற  மாவட்டங்களில் 4  முதல் 6 மணி நேரம்  மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதையும், இதனால் மக்கள் அவதிப்பட்டதையும் கடந்த 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தேன்.

சட்டமன்றத்தில் மற்ற அமைச்சர்களின் துறை சார்ந்த அறிவிப்புகளையும் 110 விதியின் கீழ் தாமே அறிவிக்கும் ‘பெரிய மனம்’ கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, மின்வெட்டு தொடர்பான எனது குற்றச்சாற்றுகளுக்கு மட்டும் பதிலளிக்கும் வாய்ப்பை மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு தாராள மனதுடன் வழங்கியிருக்கிறார்.

அவரும் இட்ட பணியை நிறைவேற்ற வேண்டுமே என்பதற்காக நான்கு பக்கங்களுக்கு ஒரு நீண்ட கட்டுரையை எழுதி, அதில் தமது தலைவியை குளிர்விப்பதற்காக ஆங்காங்கே ‘பச்சை தன்னலவாதி’, ‘அரசியல் ஆதாரம் தேட நினைக்கிறார்’, ‘அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுபவர்’ என முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே பொருந்தும் வார்த்தைகளால் என்னை விமர்சித்து, அதை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், மின்வெட்டை போக்குவதற்காக அ.தி.மு.க. அரசு கடந்த 3 ஆண்டுகளில் ஒரு மின்திட்டத்தைக் கூட உருவாக்கி செயல்படுத்தவில்லை என்ற எனது முதன்மைக் குற்றச்சாற்றுக்கு அறிக்கையின் முதல் பத்தி தொடங்கி கடைசி பத்தி வரை எங்குமே பதிலைக் காண முடியவில்லை.

இப்போது கூடுதலாக உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படும் 2550 மெகாவாட் மின்சாரம் கடந்த காலங்களில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களிலிருந்து தான் கிடைத்தது என்பதையும் அவர் மறுக்க வில்லை. மாறாக, மின்வெட்டை போக்க ஜெயலலிதா பாடுபடுவதாக வெற்று வசனங்களை வீசியுள்ளார்.
மே 27 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,‘‘ நான் ஏற்கனவே உறுதியளித்தவாறு மின்வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை 3 ஆண்டுகளில் கொண்டு வந்ததில் பெருமிதம் அடைகிறேன்’’ என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். இதன் மூலம் 3 ஆண்டுகளில் மின்வெட்டைப் போக்குவதாக அவர் உறுதியளித்திருந்ததைப் போலவும், அதை இப்போது செய்து காட்டியதன் மூலம் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டது போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முனைந்திருக்கிறார். இது பச்சைப் பொய் என்பது தான் எனது குற்றச்சாற்று.

பத்துக்கும் மேற்பட்ட முறை வாய்தா

மின்வெட்டைப் போக்குவதற்காக ஜெயலலிதா பத்துக்கும் மேற்பட்ட முறை வாய்தா கோரியதை மக்கள் மறந்துவிடவில்லை. ஒருவேளை ஜெயலலிதா மறந்திருந்தால் அவர் எந்தெந்த தேதிகளில் வாய்தா கோரினார் என்பதை அவருக்கு நினைவூட்ட நான் தயாராக இருக்கிறேன்.

# தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற ஒரு மாதத்திற்குள் 10.06.2011 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த ஜெயலலிதா,‘‘ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் மின்வெட்டு 2 மணி நேரமாக குறைக்கப்படும்; விரைவில் மின்வெட்டே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்படும்’’ என்றார்.

# பின்னர் 04.02.2012 அன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்த முதலமைச்சர்,‘‘2012 அக்டோபருக்குள் 2550 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும். 2013ஆம் ஆண்டு மத்தியில் மின்வெட்டு அடியோடு நீக்கப்படும்’’ என்று உறுதியளித்தார்.

#தொடர்ந்து 29.03.2012 அன்று 110 விதியின் கீழ் பேரவையில் அறிக்கை வாசித்த போதும் இதே வாக்குறுதியை அளித்தார். ஆனால், இவற்றில் எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை.

# 31.10.2012 அன்று கேள்வி நேரத்திற்குப் பிறகு நடந்த விவாதத்தின் போதும், 08.02.2013 அன்று ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும்போதும், 25.04.2013 அன்று  110விதியின் கீழ் அறிக்கை படித்த போதும் 2013 ஆம் ஆண்டு இறுதிக்குள் மின்வெட்டு நீங்கும் என முதல்வர் கூறினார். அதுமட்டுமின்றி, 2013 இறுதிக்குள் 4385 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். இவையும் நிறைவேற்றப்பட வில்லை.

# 25.10.13 அன்று பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் எங்குமே மின்வெட்டே இல்லை என்று அறிவித்தார். அதற்கு அடுத்த நாளே தமிழகம் இருண்டது. ஆனால், மத்திய அரசின் சதியே இதற்கு காரணம் என பழி போட்டு தப்பிக்க முயன்றார்.

# கடைசியாக 03.02.2014 அன்று சட்டப்பேரவையில் பேசும் போதும், அதன்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதும் மின்வெட்டு விரைவில் விலகும் என்றார்.

இப்படி வாய்தா மேல் வாய்தா வாங்கி விட்டு, வாக்குறுதியை சரியாக நிறைவேற்றி விட்டேன் என்று கூறுவது தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்ற உயர் பதவியில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு அழகா?

மின்வெட்டு: முதலமைச்சர் பதில் அளிப்பாரா?

தமிழ்நாட்டில் மின்வெட்டைப் போக்க முதல்வர் ஜெயலலிதா அல்லும் பகலும் பாடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் விஸ்வநாதன் கூறுகிறார். இது உண்மை என்றால், தமிழக மின்திட்டங்கள் தொடர்பான கீழ்க்கண்ட வினாக்களுக்கு முதலமைச்சர் பதில் அளிப்பாரா?
1) அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் கடந்த 3 ஆண்டுகளில் 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்க அனல் மின் திட்டத்திற்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 26.10.12 அன்று ஒப்பந்தம் கோரப்பட்டு, 31.03.2013க்கு முன்பாக ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டுவிட்ட நிலையில், அதன் பின் ஓராண்டு கழித்து 27.02.2014 அன்று ஒப்பந்தம் வழங்குவது தான் அல்லும்பகலுமாக அரும்பாடுபடும் லட்சனமா?

அடுத்த ஆண்டு இறுதியில்  முடிவடைய வேண்டிய இத்திட்டப்பணிகள், 2 ஆண்டுகள் தாமதமாக 2017 செப்டம்பரில் தான் நிறைவடையும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்திற்கு காரணம் யார்?

2) 1320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல மின் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் 26.07.2013 அன்றும், 1320 மெகாவாட் உடன்குடி மின்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் அதற்கு அடுத்த வாரமும் பிரிக்கப்பட்ட நிலையில், அதன்பின் 11 மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த மின் திட்டங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படாதது ஏன்? மின்வெட்டைத் தீர்ப்பதற்காக  மிகத் தீவிரமாக செயல்படும் அழகு இதுதானா?

3) கடந்த 29.03.2012 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை படித்த ஜெயலலிதா,  எண்ணூரில் இப்போதுள்ள பழைய 450 மெகாவாட் மின்நிலையத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் 660 மெகாவாட் எண்ணூர் மாற்று அனல் மின் நிலையம் அமைக்கப்படும்; அதில் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் உற்பத்தி தொடங்கும் என அறிவித்தார்.  அதன்பின் 2 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், அத்திட்டத்திற்காக சாத்தியக் கூறு அறிக்கை தயாரித்ததைத் தவிர வேறு எந்த பணியும் நடக்கவில்லையே ஏன்?

4) தூத்துக்குடியில் என்.எல்.சி. நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மின்சார வாரியம் அமைக்கும் மின்திட்டத்தின் இரு அலகுகளில் முறையே 2013 ஆம் ஆண்டு ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் உற்பத்தி தொடங்கும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், கெடு முடிந்து ஓராண்டாகியும்  இதுவரை அங்கு மின் உற்பத்தி தொடங்காதது ஏன்?

5) அடுத்த ஆண்டு இறுதியில் மின்னுற்பத்தி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட 1600 மெகாவாட் திறன் கொண்ட இராமநாதபுரம் உப்பூர் மின்திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கூட இதுவரைக் கோரப்படாதது ஏன்?

6) மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றபின் முதன்முறையாக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தித் திறனை பெருக்க திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார். இதை நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவும், அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

7) செய்யூரில் 4000 மெகாவாட் திறன் கொண்ட மின் திட்டத்தை கடந்த 2006 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்தது. அதை செயல்படுத்த முந்தைய தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என முதலமைச்சர் ஜெயலலிதா குற்றஞ்சாற்றியிருந்தார். ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன?

8) 2013 முதல் 2015 வரை ஆண்டுக்கு 1000 மெகாவாட் மீதம் 3 ஆண்டுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று 2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சூரிய ஒளி மின்சாரக் கொள்கையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதுவரை ஒரு மெகாவாட்டாவது சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கப்பட்டிருக்கிறதா?
9) தமிழகம் விரைவில் மின்மிகை மாநிலமாக மாறும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறுகிறார். ஆனால், மின்வெட்டை சமாளிக்க அடுத்த 15 ஆண்டுகளுக்கு 3330 மெகாவாட் மின்சாரத்தை மற்ற மாநிலங்களில் இருந்து வாங்க நீண்ட கால ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக நத்தம் விஸ்வநாதன் கூறுகிறார். தமிழகம் மின்மிகை மாநிலமாகும் என முதல்வர் கூறுவதை நம்புவதா? அல்லது அடுத்த 15 ஆண்டுகளுக்கு அதற்கு வாய்ப்பே இல்லை என அவரது நம்பிக்கைக்குரிய நத்தம் விஸ்வநாதன் கூறுவதை நம்புவதா?

10) 2011 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு பதவியேற்ற போது அறிவிப்பு நிலையில் இருந்த மின் திட்டங்களை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மின்னுற்பத்தியை பெருக்க அ.தி.மு.க. அரசு புதிதாக உருவாக்கிய திட்டங்கள் எவை... அவற்றின் இன்றைய நிலை என்ன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு விவாதிக்க முதலமைச்சர் ஜெயலலிதா தயாரா?

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவதை நான் வாடிக்கையாக கொண்டிருப்பதாக விஸ்வநாதன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க பங்களிப்பு செய்ததில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் எந்த கட்சியும் போட்டியிட முடியாது. இந்தியாவே போற்றும் 108 அவசர ஊர்தி, சேலத்தில் ரூ. 139 கோடியில் அதிஉயர் சிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புத் திட்டங்களைக் கொண்டு வந்தவர் பா.ம.க.வின் மருத்துவர் அன்புமணி இராமதாசு தான் என்பதையும், தமிழகத்திற்கு தொடர்வண்டித் திட்டங்களே எட்டிப் பார்க்காத காலத்தில், தொடர்வண்டித் துறை இணை அமைச்சர்களாக பொறுப்பேற்ற பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் தான் தமிழகத்திலுள்ள அனைத்து மீட்டர்கேஜ் பாதைகளையும் அகல ரயில்பாதைகளாக மாற்றினார்கள்.

அதேநேரத்தில் மதுரவாயல் - சென்னை துறைமுகம் பறக்கும் சாலை, ரூ.10,000 கோடி மதிப்புள்ள மத்திய அரசின் நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு வெளியில் தெரியாத காரணங்களுக்காக  முட்டுக்கட்டைப் போட்டு வருபவர் ஜெயலலிதா தான்.

இதையெல்லாம் வரலாற்று ஏடுகளைப் படித்தோ அல்லது அவற்றைப் படிப்பவர்களிடம் கேட்டோ நத்தம் விஸ்வநாதன் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆட்சிக்கு வந்த முதல் 5 ஆண்டுகளில் மாதம் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் வாங்கி, இன்றைய மதிப்பில் ரூ.6000 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்த ‘சிவப்பு பொதுநலவாதி’ ஜெயலலிதா, மின்வெட்டு தொடர்பாக தமிழக மக்கள் சார்பில் நான் எழுப்பியுள்ள வினாக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவரது விளக்கம் அமைந்தால் மின்வெட்டு பற்றி விமர்சிப்பதை நான் நிறுத்திக் கொள்கிறேன்.

இல்லாவிட்டால், மின்திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க முதலமைச்சர் ஜெயலலிதா தயாரா?

- பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு