Pages

வெள்ளி, ஆகஸ்ட் 02, 2013

மது ஒழிப்பும் அதிமேதாவி மனுஷ்யப்புத்திரனும்: தலைக்கனத்துக்கு எல்லையே இல்லையா?


எல்லா தொலைக்காட்சியிலும் பேசக்கூப்பிட்டவுடன் மனுஷ்யப் புத்திரன் தன்னைத்தானே எல்லாம் தெரிந்த அதிமேதாவி என நம்பிவிட்டார் போலிருக்கிறது! மதுஒழிப்பு குறித்த மனுஷ்யப் புத்திரனின் கருத்துகள் அவர் ஒரு 'ஒன்னும் தெரியாத அரைவேக்காடு' என்பதை நிரூபிக்கின்றன.

மனுஷ்யப் புத்திரனின் அரைவேக்காட்டு கருத்துகள்

"குடிகாரர்களுக்கும் குடியை முற்றாக எதிர்ப்பவர்களுக்கும் இரண்டு முக்கியமான ஒற்றுமைகள் உள்ளன. முதலாவது ,இருவருக்குமே பிரச்சினை என்னவென்று தெரியவில்லை. இரண்டாவது, இருவருமே நிதானமில்லாமல் நடந்துகொள்கிறார்கள்."

"பூரண மதுவிலக்கை இவர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களிடமேனும் அமுல்படுத்த முடியுமா? மது அருந்துவது தொடர்பான ஒழுக்கவியல் கண்டனங்களால் எந்த உபயோகமும் இல்லை." 

- என்றெல்லாம் நீட்டி முழக்கியுள்ளார் மனுஷ்யப் புத்திரன்.

பிரச்சினை என்னவென்று தெரியாதவர் யார்? இந்த அரைவேக்காடு மனுஷ்யா புத்திரனா? அல்லது மதுவை எதிர்ப்பவர்களா? 
மனுஷ்யப் புத்திரன் அரைவேக்காட்டுத்தனமாக பேசிவிட்டு, "மதுவின் உபயோகத்தை படிப்படியாக குறைப்பதும் மது அருந்திவிட்டு வாகம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டணை அளிப்பதும் மீண்டும் பர்மிட் முறையைக் கொண்டு வருவதும்...பயன் அளிக்கும்" என்று ஏதோ இந்தத் தீர்வுகளை இவர்தான் கண்டுபிடித்துள்ளது போன்று பேசுகிறார்.

சாராயத்தில் தமிழக மக்களை மூழ்கடித்த திமுகவுக்கு மனுஷ்யப் புத்திரன் ஜால்ரா அடிக்க நினைப்பதில் தவறொன்றும் இல்லை. ஆனால், அதற்காக மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்வது முட்டாள்தனம்.

பாமக சொன்னதை கண்ணைத் திறந்து பாருங்கள்

மதுபானத்தால் ஏற்படும் பிரச்சினை என்ன, முழு மதுவிலக்கு சாத்தியப்படாது என்று கருதினால், அத்தகைய சூழலில் சாத்தியமாகக் கூடிய அறிவியல் பூர்வமான மது ஒழிப்புக் நடவடிக்கைகள் என்ன என்று பாட்டாளி மக்கள் கட்சி 2008 ஆம் ஆண்டிலேயே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. 

கீழே உள்ள பாமகவின் "தமிழ்நாடு அரசிற்கான மாற்று மது ஒழிப்புக் கொள்கை 2008" எனும் அறிக்கையை படித்துப் பாருங்கள். அதன் பிறகு மதுவை எதிர்ப்பவர்களுக்கு "பிரச்சினை என்னவென்று தெரியவில்லை" என்று மனுஷ்யப் புத்திரன் கூறுவது உண்மையா என்று முடிவு செய்யுங்கள்.
(அறிக்கை நகலைக் காண படத்தின் மேல் சொடுக்கவும்)
பாமக 'தமிழ்நாடு அரசிற்கான மாற்று மது ஒழிப்புக் கொள்கை 2008' ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தீர்வுகள் (முழு அறிக்கையைப் படிக்க இங்கே சொடுக்கவும்: தமிழ்நாடு அரசிற்கான மாற்று மது ஒழிப்புக் கொள்கை 2008):

1. மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும், அமையும் இடங்களுக்கு கட்டுப்பாடு வேண்டும்.
2. மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்க வேண்டும்.
3. மதுவாங்கும் வயதை 25 ஆக உயர்த்தி, அதனை கட்டாயமாக்க வேண்டும். வயதைக் காட்டும் அடையாள அட்டை இல்லாதவருக்கு மது விற்கக் கூடாது.
4. குடித்துவிட்டு வாகனம் ஓட்ட அனுமதிக் கூடாது.
5. மதுபான விலையை தொடர்ந்து அதிகமாக்க வேண்டும்.
6. குடித்துவிட்டு பொது இடங்களுக்கு வர அனுமத்திக் கூடாது.
7. சினிமா உள்ளிட்ட ஊடகங்களில் மதுப் பழக்கத்தை கவர்ச்சிகரமாகக் காட்டக் கூடாது.
8. விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தேவை.
9. குடி நோயர்களுக்கு சிகிச்சை தேவை
10. கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

- என்பன உள்ளிட்ட திட்டங்களையும் அதற்கான தேவைகளையும் தெளிவாக விளக்கியது பாமக.

பாமகவின் கோரிக்கைகளுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு, உலக சுகாதார நிறுவனம் 2010 ஆம் ஆண்டு மே மாததில் "தீங்கான மதுப்பயன்பாட்டைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தி" எனும் உலகளாவிய திட்டத்தையே அறிவித்துள்ளது. (WHO - Global strategy to reduce harmful use of alcohol)

பேச்சோடு நிற்கவில்லை - செயலிலும் சாதித்தது பாமக

பாமக போராட்டத்தின் விளைவாக திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளின் தினசரி திறந்திருக்கும் நேரத்தில் நான்கு மணி நேரம் குறைக்கப்பட்டது. 

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் நடைபெறும் மாநிலம் என்ற அவப்பெயரை தமிழகம் பெற்றிருப்பதற்கு நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகள் தான் காரணம் என்பதால், அவற்றை மூடும்படி ஆணையிடக் கோரி பாமகவின் 'வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவை' சார்பில் வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
(தீர்ப்பு நகலைக் காண படத்தின் மேல் சொடுக்கவும்)
இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக்கடைகளும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 க்கும் அதிகமான மதுக்கடைகளும் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் இந்த மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது.

பாமக மதுபானத்தை எதிர்ப்பது தவறா?

உலகிலேயே மதுவைத் திணிக்கும் ஒரே அரசாங்கம் தமிழ்நாடு அரசுதான். 2003 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுக்கு மதுவால் கிடைத்த வருமானம் 2,800 கோடி ரூபாய். இப்போது இது 23,000 கோடி கோடி ரூபாய். தமிழ்நாடு அரசின் வருவாயில் மதுபான வருவாய் மட்டும் 30% ஆகும்.

உலகிலேயே அதிக சாலை விபத்து நடக்கும் நாடு இந்தியா. இந்தியாவில் அதிக விபத்து நிகழும் மாநிலம் தமிழ்நாடு. 60% சாலை விபத்திற்கு குடிப்பழக்கம் காரணம். தமிழ்நாட்டில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 66,300 பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் மட்டும் விபத்தில் இறந்துள்ளனர். இதில் குடிக்காதோரும் அடக்கம்.
இந்தியாவிலேயே, விதவைகள் மிக அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. மக்கள் தொகையில் 9% பேர் விதவை அல்லது கணவனால் கைவிடப்பட்டவர்கள். இதற்கும் குடியே முதன்மைக் காரணம். தமிழ்நாட்டில் தந்தையின் குடியால் 5 லட்சம் குழந்தைகள் அனாதைகளாகக் கைவிடப்பட்டுள்ளனர்.

உலகிலேயே அதிக தற்கொலை நடக்கும் நாடு இந்தியா, இந்தியாவில் இரண்டாவது இடம் தமிழ்நாட்டிற்கு. தற்கொலைக்கும் குடிப்பழக்கம் முதன்மைக் காரணமாகும்.

இவ்வாறு தீமைகளின் தாயாக இருக்கும் மதுபானக் கேட்டினை எதிர்த்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார் மருத்துவர் இராமதாசு அய்யா.

மனுஷ்யப் புத்திரன் கூட்டத்தின் உளல்

"பூரண மதுவிலக்கை இவர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களிடமேனும் அமுல்படுத்த முடியுமா? மது அருந்துவது தொடர்பான ஒழுக்கவியல் கண்டனங்களால் எந்த உபயோகமும் இல்லை." என்கிறார் மனுஷ்யப் புத்திரன்.

குடிகாரர்கள் குடியை கைவிடவில்லை என்பதற்காக அவர்களைத் தூற்றுவது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது. குடிக்கு அடிமையானவர்கள் குடி நோயர்கள். ஒரு நோயாளியிடம் போய் இந்த நோயை விட்டுவிடு என்று கூறுவது போலத்தான் குடிநோயர்களைத் தூற்றுவதும்.
குடிநோய் உருவாகாமலேயே தடுப்பதும், அதற்கான ஒரு சமூக சூழ்நிலையை உருவாக்குவதும், அதையும் மீறி குடிக்கு அடிமையானவர்களை அதிலிருந்து விடுதலை செய்ய உதவுவதும்தான் அரசாங்கத்தின் கடமை. குடிப்பவர்களை தீண்டதகாதவர்களாக்குவதோ குற்றம் சாட்டுவதோ இதற்கு தீர்வு அல்ல.

ஒழுக்கவியல் கண்டனம் என்கிற நிலையை உலக சுகாதார அமைப்பு ஏற்கவில்லை. மாறாக, பொதுமக்களின் நலவாழ்வுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் மதுபானத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக முக்கியமான தேவை என்கிற அடிப்படையில் அறிவியல் பூர்வமான வழியில்தான் மது ஒழிப்புக் கொள்கை முன்வைக்கப்படுகிறது.

தனக்கு தெரியாத விடயங்களில் மனுஷ்யப் புத்திரன் அதிமேதாவியாகப் பேசுவதை கைவிடுவது, அவரது முட்டாள்தனமான உளரல்களை கொஞ்சமாவது குறைக்க உதவும்.

தொடர்புடைய சுட்டிகள்:

1. மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு!

2. சாதனை முக்கியமல்ல: சாதிதான் முக்கியம் - தமிழ் பத்திரிகைகளால் மறைக்கப்பட்ட மாபெரும் சாதனை

6 கருத்துகள்:

naan சொன்னது…

ஆறறிவு மனிதபிறவி என்று பெயர் மூலமாக மட்டுமே இவர் தன்னை அடையாளபடுத்திக்கொண்டால் போதும் என்று நிநைக்கிறார்போலும் .இவர் கருத்துக்களை கேட்க்கும்பொது ,இவரை மனிதஜந்துவாக நினைக்கதோன்றுகிறது.

பெயரில்லா சொன்னது…

உளரல் என்பது பிழை, உளறல் என எழுதவும். பூரண மது விலக்கு சாத்தியமற்றது, அது மீண்டும் கள்ளச் சாராய வியாபாரத்துக்கே வழி வகுக்கும். ஆனால் மாற்று மதுக் கொள்கைகளை அமுல்படுத்த வேண்டும், அதுக் குறித்து அரசு கவனம் செலுத்தவும், திட்டக் குழு ஒன்றையும் அமைக்க வேண்டும். மேற்கூறிய பாமக-வின் மதுக் கொள்கைகள் ஏற்கனவே கனடாவில் அமுலில் உள்ளது,..

Siva சொன்னது…

சமூகநீதிப் பணிகளிலும், குடியை ஒழிப்பதற்கான தீவிரப் போராட்டங்களிலும் மருத்துவர் இராமதாசுக்கு நிகராக எவரையும் தமிழகத்தில் முன்னிறுத்த முடியாது. முதுமை நிலையிலும் தொடர்ந்து அதற்காகவே போராடி வரும் மருத்துவரோடு மனுஷ்யபுத்திரன் போன்ற கழிசடைகளையும், தமிழகத்தின் பொறுப்பற்ற சில அரசியல் தலைமைகளையும் ஒப்பிடத் தேவையில்லை. போட்டி போட்டுக் கொண்டு திராவிடக் கட்சிகள் வளர்த்தெடுத்த இக் 'குடி'ப்பண்பாடு, என்றைக்கு வீழ்ச்சியுறப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் அதற்கொரு அதி தீவிரமான செயல்திட்டம் மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன். திமுகவின் இலக்கிய அணிப் பிரிவின் மற்றொரு 'முதுகுசொறி' கவிஞன் மனுஷ்யபுத்திரனை உதாசீனம் செய்வதே சரியான செயலாக இருக்கும்.

- இரா.சிவக்குமார்

அறிவழகன் . இரா சொன்னது…

மனுஷபுத்திரனுக்கு மனநிலை பதிகபட்டு உள்ளது


அறிவழகன்.இரா
கட்டுமன்னர்கோயில்

kamal சொன்னது…

*அதிமேதாவி  இல்லை மனுஷ்யப்புத்திரனும் ஆகவே அந்த இளம் பிள்ளையின் வாதப் பிரதி வாதங்களை கணக்கிள் கொல்லாது மதுவுக்கெதிராய் உங்கள் பணி தொடரட்டும் வழ்த்துக்கள் !

kamal சொன்னது…

" மெய்பொருள் காண்பது அறிவு " வாழும் காலத்திள் ஐம்புலன் வழி கிடைக்கும் அனைத்து தகவல்கலையும் திரட்டியே ஒரு கருத்தாகட்டும், தினச்செய்தியாகட்டும் வெளியிடுகிரோம் அதுதவறும்போது கிடைக்கப்பெற்ற தகவலோ தகவல் தொகுப்பிலோ நேர்ந்த குறைபாடு அதை அறிந்தகனம் தன் தவறுகளுக்கு தானே முன்வந்து தார்மீகமாய் பொருப்பு ஏர்கவேண்டும் அதுவே மனித பண்பு . தவறி சொல்லிவிட்டாலும் மூள நோயாளிபோள் ரப்பர் வலையத்தின் மீதே கிடந்து சாமியாடுவது சொன்ன கருத்துக்கு நாம் அடிமை...! சொல்லாத கர்த்துக்கே நாம் எசமான்.,! அப்படி மாறுபவனே மனுஷ்யபுத்திரன் இல்லையேள் எவனும் மிருகச்சித்திரமே...!