Pages

புதன், செப்டம்பர் 18, 2013

மகளின் காதலை எதிர்ப்பது மனித இயற்கை: முற்போக்கு முகமூடியைக் கிழிக்கும் ஆய்வறிக்கை!

மருத்துவர் இராமதாசு அவர்களால்தான் தமிழ்நாட்டில் காதலுக்கு எதிர்ப்பு தோன்றியுள்ளது என்கிற கட்டுக்கதையை நொறுக்கும் விதமாக - "மகளின் காதலை பெற்றோர் எதிர்ப்பது என்பது மனித இயற்கை" எனும் ஆய்வு முடிவினை இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து பல்கலைக் கழகங்கள் வெளியிட்டுள்ளன.

முற்போக்கு வேடதாரிக் கூட்டத்தின் பித்தலாட்டம்.

தமிழ்நாட்டில் 'பெண்களின் காதலுக்கு' எதிர்ப்புதெரிவிக்கும் கலாச்சாரத்தை வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு அவர்கள்தான் மாமல்லபுரத்தில் தொடங்கி வைத்தார். தர்மபுரி நிகழ்வுக்கு பின்னர் அதனை மருத்துவர் இராமதாசு அவர்கள்தான் ஊர் ஊராக கூட்டம் நடத்தி 'காதலுக்கு எதிர்ப்பை' உருவாக்கினார் - என்று முற்போக்கு வேடாதாரிக் கூட்டம் தமிழ்நாட்டில் பினாத்திக்கொண்டு திரிகின்றனர்.
தொலைக்காட்சி, பத்திரிகைகள் என எல்லாவற்றிலும் இந்த முற்போக்கு வேடதாரிக் கூட்டம் மாறிமாறி ஒப்பாரிவைத்து கத்திக் கதறினர். மனுஷ்யபுத்திரன், சுப.வீரபாண்டியன், பெரியாரிய இயக்கம், இடதுசாரிகள், தமிழ்தேசியர்கள் எனப் பலரும் 'சாதிக்காக காதலை எதிர்க்கிறார்களே' என்கிற போர்வையில் 'வன்னியர்களைத் தாறுமாறாக' பேசினர்.

அதிலும் ஒருபடி மேலே போய், 'உலகில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்குமே மகளின் காதலை பெற்றோர் எதிர்ப்பது இல்லை. குறிப்பாக மேலை நாடுகளில் காதலுக்கு எதிர்ப்பே இல்லை' என கட்டுக்கதைகளைக் கட்டினர் முற்போக்கு வேடதாரிகள். ஆனால், மகளின் காதலை பெற்றோர் எதிர்ப்பது என்பது மனிதனின் பரிணாமத்தில் உள்ள இயல்பான செயல்தான் என்றும், இது உலக நடைமுறை என்றும், இதுதான் பெற்றோரின் இயற்கை என்று அறிவியல் ஆய்வுகள் இப்போது நிரூபித்துள்ளன.

"மகளின் காதலை பெற்றோர் எதிர்ப்பது மனித இயற்கை"

இளம்பெண்கள் 'தான் தேர்வு செய்யும் காதலர் தனக்கு பொருத்தமானவர்தான்' என் நம்புகின்றனர். ஆனால், பெற்றோர்கள் அதனை நம்புவது இல்லை. இந்த முரண்பாடு மனிதனின் பரிணாம வளர்ச்சியில் ஆழமாக பதிந்துள்ள ஒரு தன்னிச்சையான இயற்கை செயல் எனக் கண்டறிந்துள்ளனர் இங்கிலாந்தின் பிரிஸ்டோல் பல்கலைக் கழகம் மற்றும் நெதர்லாந்தின் Groningen பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்.

(The belief stems from a deep evolutionary instinct to see her settle with someone who will look after her and provide for her every need. The research, conducted by British and Dutch scientists, suggests that parents are pre-programmed to make sure their children end up with love, support and money.)

இளம்பெண்கள் காதலனை தேர்வு செய்யும்போது உடல் அழகு, மணம், நகைச்சுவை உணர்வு போன்றவற்றையே முக்கியமாகக் கருதுகின்றனர். 


ஆனால், பெற்றோரோ, காதலனாக வருகிறவரின் சமுதாய வகுப்பு, குடும்பப் பின்னணி, இனம், கல்வித்தகுதி ஆகியவற்றை முதன்மையாக நினைக்கின்றனர். அதாவது மகள் விரும்புகிறவனை விட இன்னும் தகுதியான, பொறுப்பான கணவன் அவளுக்கு வரவேண்டும் என்பதே பெற்றோரின் இயல்பான இயற்கை மனநிலை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

(Parents also show a stronger preference than their offspring for attributes such as social class, family background, ethnic background and educational level. Daughters meanwhile show a fondness for qualities such as physical attractiveness, smell, sense of humour and creativity.)
பெற்றோர் அல்லது சாதியின் குற்றமல்ல - இது இயற்கை

பெற்றோர் தனது மகளுக்கு 'அவளை நன்றாக வைத்துக்கொள்ளும் பொறுப்புள்ள கணவன்' வேண்டும் என்று நினைப்பதும், 'கணவன் அழகாகவும் பிடித்தவனாகவும் இருந்தாலும் போதும் - அவனுக்கு இருக்கும் குறைகளை தனது பெற்றோரின் ஆதரவை வைத்து சரி செய்துகொள்ளலாம்' என மகள்கள் நினைப்பதும் - பெற்றோரின் சொத்தின், வளத்தின் மீதுள்ள போட்டியின் காரணத்தால் பரிணாம ரீதியாக அமைவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆக, பெற்றோர் தனது மகளின் காதலை தன்னிச்சையாகவே மறுப்பது மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியிலேயே இருக்கிறது. மனித இனம் அப்படித்தான் உருவாகியுள்ளது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். 

எனவே, இதில் அரசியல்வாதிகளின் குற்றம், சாதியின் குற்றம் என்றேல்லாம் கூறுவதும் போலிப்பிரச்சாரம் செய்வதும் முற்போக்கு வேடதாரிகளின் தனிப்பட்ட சாதிவெறியே தவற வேறெதுவும் இல்லை.

இதுகுறித்த பத்திரிகை செய்திகள் இதோ:

Daily Mail: Why parents will never approve of your partner: They instinctively want someone who will tend to their daughter's every need

The Telegraph: Sorry daughters, your parents will never approve of your partner

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

சமூகநீதிப் போராளிகளின் வீரத் தியாகம் 17.09.1987

தன்னலமற்ற தியாகம்

1987 ஆம் ஆண்டு - வன்னியர் உட்பட அனைத்து சாதியினருக்கும் சாதிவாரி மக்கள்தொகைக்கேற்ப இடஒதுக்கீடு கேட்டு செபடம்பர் 17, தந்தை பெரியார் பிறந்த நாள் முதல், ஒருவார கால சாலமறியலை அறிவித்தது, மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் நிறுவப்பட்ட வன்னியர் சங்கம்.

இந்த சமூகநீதிப் போரில் 21 பேர் உயிரிழந்தனர், ஒரு லட்சம் பேர் சிறைக்கு சென்றனர், பல்லாயிரக் கணக்கானோரின் வீடுகளும், உடைமைகளும் காவல்துறை வெறியாட்டத்தில் பாழாக்கப்பட்டன.
சமூகநீதிப் போராளிகளுக்கு நினைவஞ்சலி 17.09.2013
சமூகநீதிக்கான போராட்டத்தில் உயிர்நீத்தவர்கள் அதிகம் படிப்பறிவில்லாத ஏழைகள். அவர்களது குடும்பத்தினரும் கூட குறிப்பிடத்தக்க அளவுக்கு கல்வித்தகுதி பெற்றவர்கள் இல்லை. 20 சதவீத இட ஒதுக்கீட்டால் உயர்க்கல்வியையோ, அரசு வேலை வாய்ப்பையோ பெரும் அளவுக்கு இவர்களது குடும்பங்களில் தகுதிபெற்றவர்கள் பெரிதாக இருக்கவில்லை. 

ஆனாலும், தம்மைப்போன்று எதிர்கால தலைமுறை வன்னியர்கள் வாழ்விழந்து போய்விடக் கூடாது என்கிற நோக்கில்தான் - கண்காணாத, இன்னும் பிறக்காத எதிர்காலத் தலைமுறையினருக்காக இவர்கள் சாலைமறியல் போரில் பங்கேற்றனர், உயிர்த்தியாகம் செய்தனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் - கல்வி அல்லது வேலை வாய்ப்புகளைப் பெற்று இன்று பல பதவிகளிலும் பலநாடுகளிலும் நல்ல நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வளித்தது இந்த தன்னலமற்ற தியாகம்தான்.

திமுகவின் சதி

சாலை மறியல் நடத்துவதாக மூன்று மாத காலத்திற்கு முன்னறே அறிவிப்பு செய்து, நாடெங்கும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால், செப்டம்பர் 16 அன்று அண்ணா அறிவாலயம் திறக்கப்படும் என தாமதமாக அறிவித்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி.

அதாவது, செபடம்பர் 17 அதிகாலை 12 மணி முதல் மறியல் நடத்துவதாக வன்னியர் சங்கம் முன்பே கூறியிருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதே செபடம்பர் 16 இரவு சென்னையில் அறிவாலயம் திறப்புவிழா நடத்தி, செபடம்பர் 17 அதிகாலை 12 மணிக்கு மேல் தென்மாவட்ட திமுகவினர் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை கடக்கும் வகையில் - சதி செய்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி.

வன்முறையில் ஈடுபடுவதற்கு அணியமாக ஆயுதங்களுடன் வந்த குண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த வன்னியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதான் இட ஒதுக்கீட்டு போரில் 21 பேர் உயிரிழக்கவும், ஒரு லட்சம் பேர் சிறைக்கு செல்லவும், பல்லாயிரக் கணக்கானோரின் வீடுகளும், உடைமைகளும் காவல்துறை வெறியாட்டத்தில் பாழாக்கப்படவும் காரணமான முதல் நடவடிக்கையாகும்.

வன்னியர் சங்கத்தின் நியாயமான போராட்டத்தில் - வன்னியர்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 21 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் படுகாயம், லட்சம் பேர் சிறை, பல ஆண்டுகள் வழக்கு, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் உடமை இழப்பு - என ஏராளமான இழப்புகளை வன்னியர்கள் சந்தித்தார்கள். இந்தத் தியாகத்தால் இன்று தமிழ்நாட்டில் 107 சாதியினர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பெறுகின்றனர்.
தியாகிகள் குடும்பத்தினருடன் மருத்துவர் அய்யா 17.09.2013

திமுக குண்டர்கள், காவல்துறை வன்முறையாளர்களின் கொலைவெறியாட்டங்கள் தமிழ் மக்களின் நினைவலைகளில் இருந்து மறைந்து விட்டன. ஆனால், தமது உயிரைக் காப்பாற்ற வேண்டும், உடமைகளைப் பாதுகாக்க வேண்டும், காவல்துறையினர் துப்பாக்கிகளோடு ஊருக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, சிலநூறு மரங்களை வெட்டி, சாலையில் தடுப்பை ஏற்படுத்தியதற்காக - வன்னியர்கள் இன்றும் 'மரம் வெட்டிகள்' என்று ஆதிக்கச் சாதிக் கூட்டத்தினரால் தூற்றப்படுகின்றனர்.

வன்னியப் போராளிகளின் அந்த மாபெரும் தியாகம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த 21 தியாகிகளை நினைவு கூறுவோம்.

வீரவணக்கப்பாடல் - காணொலி 1 : http://youtu.be/y-LWf2wBcR8
1. தியாகி பார்ப்பனப்பட்டு ரங்கநாதக் கவுண்டர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டிக்கு அருகில் உள்ள பார்ப்பனப்பட்டுக் கிராமத்தை சேர்ந்த தியாகி. சாலை மறியலுக்காக வீட்டைவிட்டுக் கிளம்பும் போதே காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அப்போது அவரின் வயது 55.

2. தியாகி சித்தணி ஏழுமலை
விழுப்புரம் மாவட்டம் சித்தணி கிராமத்தை சேர்ந்தவர். விழுப்புரம் மாவட்டம்  வீடூர் அணை அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25 க்கும் கீழ். காலவல் துறையினர் உரிய சிகிச்சை அளிக்காமல் அலைகழித்ததால் அடுத்த நாள், செப்டம்பர் 18 அன்று வீரமரணம் அடைந்தார். திருமணமானவர்.

3. தியாகி ஒரத்தூர் செகநாதன்
விழுப்புரம் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவர். திருமணமானவர். சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

4. தியாகி முண்டியம்பாக்கம் சிங்காரவேலு

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் பணிபுரிந்தவர். திருமணாமானவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 43.

5. தியாகி கயத்தூர் முனியன்
விழுப்புரம் மாவட்டம் கயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். திருமணமானவர். பார்ப்பனப்பட்டு துப்பாக்கிச்சூடு நிகழ்வைக் கேள்விப்பட்டு, ஊர்வலமாக தலைமையேற்று சென்றவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 27. அவரது மனைவி வேதவல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

6. தியாகி கயத்தூர் முத்து

விழுப்புரம் மாவட்டம் கயத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். திருமணமாகாதவர். விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அருகே காவல்துறையினரால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

7. தியாகி கொழப்பலூர் முனுசாமிக் கவுண்டர்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர்.சாலைமறியலில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். சென்னை மத்திய சிறையிலேயே வீரமரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 45. திருமணமானவர்.

8. தியாகி கோலியனூர் விநாயகம்.
விழுப்புரம் மாவட்டம் மிளகாய்க் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர். செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் வேலு ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர்.

9. தியாகி கோலியனூர் கோவிந்தன்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் கிராமத்தை சேர்ந்தவர். செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் விநாயகம், கோலியனூர் வேலு ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர். திருமணமானவர். அப்போது அவருக்கு வயது 35.

10. தியாகி தொடர்ந்தனூர்  வேலு.

செப்டம்பர் 17 அன்று கும்பகோணம் - சென்னை, பாண்டி - விழுப்புரம் நான்குமுனை சந்திப்பான கோலியனூர் கூட்டுச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம் ஆகிய மூன்று பேரும் வீரமரணம் அடைந்தனர்.  திருமணமானவர்.

11. சிறுதொண்டமாதேவி தேசிங்குராஜன்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள சிறுதொண்டமாதேவி ஊரில் 13.4.1967 இல் பிறந்தவர் தேசிங்குராஜன். அப்பா துரைசாமி படையாட்சி, அம்மா கருப்பாயி.
1987 சாலைமறியல் போராட்டத்தின்போது செப்டம்பர் 18 முதல் 21 வரை முந்திரிக்காட்டில் இருந்து சாலைகளில் தடைகளை ஏற்படுத்தினார். 22 ஆம் நாளன்று காவல்துறை பாதுகாப்புடன் பண்ருட்டியில் இருந்து நெய்வேலிக்கு வாகனங்கள் செல்வதாக செய்தி வந்தது. இதனால், நெய்வேலி கொள்ளுக்காரன்குட்டை கிராமத்தின் அருகே 'டாக்டர் அய்யா சொல்லும் வரை நாங்கள் உயிரே போனாலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்க மாட்டோம்' எனக்கூறி காவல்துறை பாதுகாப்புடன் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினார் தேசிங்குராஜன்.

முன்று மனிநேரம் போராடிப் பார்த்த காவல்துறையினர் சுட்டுவிடுவோம் என துப்பாக்கியை நீட்டி குறிபார்த்தபோது - மார்பை திறந்துகாட்டி வயிற்றில் சுடப்பட்டு உயிரிழந்தார் மாவீரன் தேசிங்குராஜன்.

12. பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர்
திருவெண்ணை நல்லூர் கிராமத்தின் அண்ணாமலைக் கவுண்டர் 60 வயது முதியவர். சாலைமறியல் போராட்டத்தில் பேரங்கியூர் மக்கள் தீவிரமாக ஈடுபட்டதால் - காவல்துறை ஐஜி ஸ்ரீபால் தலைமையில் காவல்துறையினர் ஊருக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் முதியவர் அண்ணாமலைக் கவுண்டர் உயிர்த்தியாகம் செய்தார்.

13. மேச்சேரி அமரத்தானூர் மயில்சாமி
சேலம் மாவட்டம் மேச்சேர் அமரத்தானூர் ஊரைச் சேர்ந்தவர் மயில்சாமி. குஞ்சாண்டியூர் டிசிஎம் மில்லில் வேலைசெய்தார். 18.9.1987 அன்று மேட்டூர் - மேச்சேரி சாலையில் நடந்த சாலைமறியலில் பங்கேற்று சாலையை மறித்தபோது காவல்துறையினரால் சுடப்பட்டார். தலையில் குண்டுக்காயம பட்ட மயில்சாமியை காவல்துறையினர் பொட்டனேரி கிராமத்தில் உள்ள கிணற்றில் தூக்கி வீசினர். மறுநாள் இவரது உடைலைக் கைப்பற்றிய காவல்துறையினர் அவர்களாகவே அடக்கம் செய்தனர். உறவினர்கள் கூட இவரது உடைலைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

14. வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன்
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் உள்ள வெளியம்பாக்கம் எனும் ஊரைச் சேர்ந்தவர் 25 வயதான இராமகிருஷ்ணன். தொழுப்பேடு எனுமிடத்தில் சாலைமறியலில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டார். விடுதலையான சிறிது காலத்தில் சிறைக் கொடுமை பாதிப்புகளால் இறந்துபோனார்.

15. சிவதாபுரம் குப்புசாமி

சேலம் மாவட்டம் சிவதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி, வயது 46. தொடக்க காலம் முதலே வன்னியர் சங்கத்தில் ஈடுபாட்டுடன் இருந்தவர். சாலைமறியலில் ஈடுபட்டதால் 21 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான சிறிது காலத்தில் சிறைக்கொடுமை பாதிப்புகளால் இறந்துபோனார்.

16. முரசவாக்கம் கோவிந்தசாமி 

காஞ்சிபுரம் மாவட்டம்.

17. குருவிமலை முனுசாமி நாயக்கர்

காஞ்சிபுரம் மாவட்டம்.

18. காயிரம்பேடு மருதசாமி  

காஞ்சிபுரம் மாவட்டம்.

19. நத்தமேடு சுப்பிரமணி 

தருமபுரி மாவட்டம்

20. விளம்பூர் பன்னீர்செல்வம்

காஞ்சிபுரம் மாவட்டம்.

21. பாப்பனம்பட்டு வீரப்பன்

விழுப்புரம் மாவட்டம்

22. பாப்பனம்பட்டு பரமசிவம்

விழுப்புரம் மாவட்டம்

23. கயத்தூர் தாண்டவராயன்

விழுப்புரம் மாவட்டம்

வீரவணக்கப்பாடல் - காணொலி 2: http://youtu.be/u2T29VxTGT0
குறிப்பு: 

1. முதலில் 21 பேர் வீரமரணம் அடைந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், உண்மையில் 23 பேர் வீரமரணம் எய்தியதாக பின்னர் தெரிய வந்தது.

திங்கள், செப்டம்பர் 16, 2013

ஓணம் பண்டிகை - இந்து மதத்தின் மாபெரும் முரண்பாடு!

ஓணம் பண்டிகை மலையாள நாட்டின் தேசியப் பண்டிகை. இப்பண்டிகைக்கு அடிப்படையாக உள்ள கதை ஒன்றுதான். ஆனால், ஓணம் எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதற்கான காரணம் வேறுபட்டதாகும்

அடிப்படைக் கதை: 

மகாபலி என்ற மன்னர் கேரளத்தை ஆண்டு வந்தார். ஒருமுறை திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையேக் கொடுத்தார் பலி மகாராஜா. 
காரணம் 1. பார்ப்பனர் அல்லாத மக்கள் கூறும் காரணம்.

"மகாபலி ஒரு மிகச்சிறந்த மன்னன். மக்களை நேசித்தவன். மகாபலியின் ஆட்சிக்காலம் ஒரு பொற்காலம். அப்போது சாதி இல்லை. எல்லா மக்களும் ஒன்றாகவே இருந்தனர். சண்டை இல்லை, சச்சரவுகள் இல்லை, ஏமாற்று வேலைகள் இல்லை, திருட்டு இல்லை. மக்கள் தங்களின் எல்லா தேவைகளையும் பெற்றனர். மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். மகாபலி மன்னன் ஒரு மிகச்சிறந்த நீதிமானாக ஆட்சி செய்தான்.

தேவர்கள் இதைப் பார்த்து அஞ்சினர். "இந்த அசுரனை அழிக்க ஏதாவது செய்" என்று விஷ்ணுவிடம் வேண்டினர். அவரும் வாமணன் எனும் குள்ள பார்ப்பனனாக அவதாரமெடுத்து வாமனனை அழித்தார்.
பாதாளத்தில் புதைக்கப்படும் முன்பு ஆண்டிற்கு ஒருமுறை என்னுடைய மக்கள் இப்போது போல எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? என்பதை நான் பார்க்க வேண்டும் என்று மகாபலி கேட்டார். அவ்வாறு ஆண்டுக்கு ஒருமுறை அந்த மாமன்னன் தன் மக்களைப் பார்க்க வரும் நாளே ஓணம். ஓணம் நாளில் மக்கள் வாசலில் அத்தப்பூக் கோலம் போட்டு மகாபலியை வரவேற்கிரார்கள். "

காரணம் 2. பார்ப்பனர்கள் கூறும் காரணம்

"மகாபலி ஒரு அசுரன். அவனது அதர்ம ஆட்சியை விஷ்ணு அழித்தார். மகாபலி திரும்பி வருவதற்காக இந்த நாள் கொண்டாடப்படவில்லை. மாறாக, வாமணன் மகாபலியை பாதாளத்தில் புதைத்த நாள் இதுவாதும்.

ஓணம் நாளில் மக்கள் வாசலில் அத்தப்பூக் கோலம் போட்டு அதன் நடுவில் விஷ்ணுவை வைப்பார்கள். அப்போது வரும் மகாபலி தன்னுடைய மக்கள் விஷ்ணுவை வழிபடுவதையும், நாட்டில் தர்மம் நிலைநாட்டப் பட்டிருப்பதையும் பார்த்து ஏமாற்றத்துடன் மீண்டும் பாதாளத்திற்கு போய்விடுவார்."

- ஆக, ஒரே பண்டிகைக்கு இரண்டு விளக்கங்கள் உள்ளன. ஓணம் பண்டிகையின் வரலாற்றில் "தர்மம்" மற்றும் "நீதி" என்கிற வார்த்தைகள் எதிர்எதிர் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் சாதியற்ற, தீமையற்ற பழைய பொற்காலத்தை நினைத்து - இந்த ஒரு நாளாவது அந்த நாளாக இருக்கட்டும் என்று ஏக்கத்தில் கொண்டாடுகிறார்கள். பெரும்பான்மை நம்பிக்கையின் படி - மகாபலி மன்னனின் காலமே பொற்காலம். "நீதி" தவறாத அந்த  மன்னனை "தர்மம்" காப்பதற்காக வாமணன் அழித்தான்.

ஆனால், மற்றொருக் கூட்டத்தினர் - தர்மம் நிலை நாட்டப்பட்ட நாளே நல்ல நாள். இந்த அநீதியான காலம் நீடிக்க வேண்டும் என்று அதே நாளைக் கொண்டாடுகின்றனர்.

வாசலில் போடப்படும் ஒரே அத்தப்பூக்கோலம் - மகாபலியை வரவேற்கிறது என்று ஒருசாரார் கூறுகின்றனர். அதுவே அவரை விரட்டவே போடப்பட்டுள்ளதாக ம்ற்றொரு சாரார் கூறுகின்றனர்.
ஓணம் பண்டிகையின் மய்யமாகக் கருதப்படும் திரிக்ககரா ஆலயம் வாமணனின் கோவிலாக இருக்கிறது. அந்த கோவிலுக்கு அடியில் மகாபலியின் அரண்மனை இருப்பதாக நம்பப்படுகிறது. மகாபலியின் அரண்மனையை இடித்து அதன் மீது வாமணனுக்கு கோவில் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர்.

எது தர்மம்?

பிரதான இந்துமதம் - "வாமன அவதாரம் என்பது விஷ்ணு நில உலகில் தோன்றிய ஐந்தாம் அவதாரம். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும். இந்த அவதாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார். இவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார்." என்கிறது.

ஆனால், "மகாபலி மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழ ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக" கேரள மக்கள் நம்புகிறார்கள்.

ஓணம் பண்டிகையின் போது பாடப்படும் மலையாளப் பாடலின் ஆங்கில வடிவம்:

When Maveli ruled the land,
All the people were equal.
And people were joyful and merry;
They were all free from harm.
There was neither anxiety nor sickness,
Deaths of children were unheard of,
There were no lies,
There was neither theft nor deceit,
And no one was false in speech either.
Measures and weights were right;
No one cheated or wronged his neighbor.
When Maveli ruled the land,
All the people formed one casteless races

கேரள மக்கள் நீதியைப் பேசுகிறார்கள். சாதியற்ற சமூகத்தை கனவு காண்கிறார்கள். ஆனால், இந்து மதம் தர்மத்தை நிலை நாட்ட விரும்புகிறது. 

மொத்தத்தில் - இந்து மதத்தில் "தர்மம்" என்றால் அது சாதியைக் காப்பாற்றுதல், அநீதியை நிலைநாட்டுதல் என்று பொருளாகும். அதற்கு ஓணமே சாட்சி.

அனைவருக்கும் மகாபலி மன்னனை வரவேற்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள்

(ஆகஸ்ட் 29, 2012 அன்று எழுதப்பட்டது)

ஆதாரம்:

THE RETURN OF KING MAHABALI: THE POLITICS OF MORALITY IN KERALA Filippo Osella and Caroline Osella, THE EVERYDAY STATE AND SOCIETY IN MODERN INDIA By Fuller C. J. & Benei Véronique (eds.)

சனி, செப்டம்பர் 14, 2013

சிவகாமி ஐஏஎஸ் - ராஜபக்சேவை விட கொடூரமானவர்: வீடியோ காண்க! அபாண்டத்தின் உச்சக்கட்டம்!!

சிவகாமி ஐ.ஏ.எஸ்., புதியதலைமுறை தொலைக்காட்சியில் பேசும்போது 'விடுதலைப்புலிகள் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய பெண் போராளிகளைப் பயன்படுத்தினர்' எனக்கூறிய கொடூரமான குற்றச்சாட்டுகளின் காணொலிக் காட்சி இதோ (படத்தின் மீது சொடுக்கவும்)http://youtu.be/lVpSJUF6ixQ

சிவகாமி ஐ.ஏ.எஸ்:"ஒரு சின்ன விஷயத்தைப் பதிவு பண்ண விரும்புகிறேன். விடுதலைப் புலிகள் ஈழத்தமிழருக்காக போராட்டம் நடத்தும்போது அந்த ஈழப்புலிகளுடைய இராணுவத்தில் சில பெண்கள் இருந்தார்கள். ஈழப்புலி இராணுவத்தினுடைய பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள், என்ற ஒரு குற்றச்சாட்டு வந்தபோது அதற்கு என்ன பதில் சொன்னார்கள் என்றால் - உயிரையே ஒருத்தன் பணயம் வைத்து நாட்டுக்கு உழைக்கும்போது - இதுவந்து (பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வது) அதோடு ஒப்பிடக்கூடிய ஒரு சாதாரண விஷயம்தான் என்று நான் செய்திகளில் படித்தேன்....நான் கேள்விப்பட்டுள்ளேன். நான் ஆதாரம் (வைத்துள்ளேன்)."

விடுதலைப்புலிகள் பெண்களை இச்சைக்கு பயன்படுத்தினர் - சிவகாமி ஐஏஎஸ்! அபாண்டத்துக்கு அளவே இல்லையா?

"சிங்களனும் கூட சொல்லாத அளவிற்கு பெண் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்திய சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி ஐஏஎஸ். தலித் கவசத்தை பயன்படுத்துகிறாரா சிவகாமி.

நேற்று (13.9.13) புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்த நால்வருக்கு மரண தண்டனை பற்றிய விவாதத்தில் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசும்போது ஈழத்தில் புலிப்படைகளில் இருந்த பெண்களைப் பற்றியும், புலிகள் மீதும் பாலியல் அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார்

(வீடியோ காட்சிக்கு இங்கே சொடுக்கவும்).

இதுவரை விடுதலைப்புலிகள் மீது பெண்களை கற்பழித்தார்கள் என்றோ, பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார்கள் என்றோ சிங்களன பேரினவாதிகள் கூட குற்றம் சாட்டியதில்லை, இந்நிலையில் நேற்று டிவியில் பேசிய சிவகாமி ஐஏஎஸ் பெண் புலிகளை ஆண்களின் இச்சைக்காகவே படைகளில் பயன்படுத்தினார்கள் என்று வெளிப்படையாக குற்றம் சுமத்தினார் இது குறித்து மேலும் பேசிய அவர்  இது பத்திரிகை செய்திகளில் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார், ஆனால் எந்த பத்திரிக்கை எப்போது என்று கூறவில்லை, மேலும் பாரீசில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் என்னிடம் கூறிய ஒளிப்பட பதிவு இருக்கிறது என்றெல்லாம் உளறியுள்ளார் சிவகாமி ஐ.ஏ.எஸ்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேட்டியெடுத்த பிரபல ஊடகவியலார் அனிதா பிரதாப் குறிப்பிட்டது 'தான் ஒரு இரவு முழுவதும் 20க்குமே மேற்பட்ட விடுதலை புலிகளுடன் தங்கியிருந்ததாகவும் ஒரு நொடிகூட தான் ஒரு பெண் என்ற அச்சமேற்படாதாவாறு அவர்கள் பார்த்துக்கொண்டார்கள்' என்றும் வியந்து போற்றிய ஒரு இயக்கம் பற்றி தான், எதிரியான சிங்களனே வைக்காத ஒரு குற்றச்சாட்டை சிவகாமி ஐஏஎஸ் வைத்துள்ளார்.

இன்று வரை பல நாடுகளின் ராணுவங்களில் பெண்கள் உதவியாளர்களாகவும், நர்ஸ், டாக்டர் போன்ற பணிகளையும் மட்டுமே செய்து வருகிறார்கள், ஆனால் புலிகள் இயக்கம் தான் பெண்களை போர்களத்திற்கு அனுப்பியது, மாலதி படையணி, சோதியா படையணி போன்ற அணிகள் ஆண் போராளிகளுக்கு இணையாக பல போர்களில் பங்கேற்றனர்.

ஈழப்போரின் கடைசி நாட்களான 2009 ஏப்ரல் மாதம் 1,2,3ம் நாட்களில் நடந்த போரில் புலிகளின் பெண்கள் அணி சிங்கள ராணுவத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியது என்று சிங்கள ராணுவதளபதிகளே குறிப்பிட்டனர். இப்படி போர்களத்தில் பங்கேற்று போராடிய ஒரு இயக்கத்தை பற்றி தான் சிவகாமி ஐஏஎஸ் இந்த கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
தலித் என்ற பெயரை பயன்படுத்தி ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அதன் தலைவராக இருந்து வந்தால் எதுவும் உளறலாம்  தமிழகத்தின் முற்போக்கு சக்திகளிடமிருந்து எந்த எதிர்ப்பு எதுவும் வராது, அப்படியே  மீறி வந்தாலும் கூட தாங்கள் தலித் என்பதால் தான் எதிர்க்கிறார்கள் என்று சொல்லிவிடலாம் என்ற நினைப்பில் சிவகாமி போன்றோர் பொது இடங்களில் இப்படி உளறுவதை  பொதுமக்கள் பலரும் வெறுப்பாகவே காண்கிறார்கள்.

சிவகாமியின் இந்த பேச்சு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தொண்டர்களிடமும் மேலும் பல தமிழ் உணர்வாளர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகளின் தொண்டர்கள் ஃபேஸ்புக்கி பல இடங்களில் சிவகாமியின் இந்த பேச்சிற்கு தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

மேலும் பல புலம்பெயர் வாழ் தமிழர்கள் சிவகாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள்"

(நான் எழுதியது அல்ல. இது சற்றுமுன் செய்திகள் எனும் இணையத்தில் வெளிவந்த கட்டுரை.)

நன்றி: சற்றுமுன் செய்திகள் (பெண் விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்திய சிவகாமி ஐஏஎஸ். தலித் கவசத்தை பயன்படுத்துகிறாரா?)

அலை செய்திகள் எனும் இணையத்தில் வெளியான அறிக்கை:

விடுதலைப் புலிகள் பெண்களை இச்சைக்கு பயன்படுத்தினர் என்று கூறிய சிவகாமி. தமிழர்கள் கண்டனம்.  

பெண் புலிகளை இழிவுபடுத்திய சிவகாமி ஐ.ஏ.எஸ்: விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலரான சிவகாமி (சமூக சமத்துவப்படை தலைவர்) 13.09.2013 அன்று இரவு 9 மணியளவில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்த நால்வருக்கு மரண தண்டனை பற்றிய விவாதத்தில் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசும்போது ஈழத்தில் புலிப்படைகளில் இருந்த பெண்களைப் பற்றியும், புலிகள் மீதும் பாலியல் அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் குணசேகரன் ஆதாரமற்ற தகவல்களை இதுபோன்ற நேரலை நிகழ்ச்சிகளில் சொல்லக் கூடாது என்கிறார். உடன் விவாதத்தில் பங்கு கொண்ட வழக்குரைஞர் அருள்மொழி, திலகவதி ஐ.பி.எஸ், ஆகியோரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பெண் புலிகளை ஆண்களின் இச்சைக்காகவே படைகளில் பயன்படுத்தினார்கள். இது பத்திரிகை செய்திகளில் வந்துள்ளது. பாரீசில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் என்னிடம் கூறிய ஒளிப்பட பதிவு இருக்கிறது என்றெல்லாம் கூறியுள்ளார் திரு.சிவகாமி ஐ.ஏ.எஸ்.

”நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், ஞான நல்லறம் பேணு நற்குடி பெண்களின் குணங்களாம்" என்பதை அர்த்தமுள்ளதாக்கியது புலிப்படை.

சமையல்காரியாகவும், துணி துவைப்போராகவும், ஆண்கள் கிண்டல் செய்கையில் தலை குனிந்தவளாகவும், பிள்ளை பெறும் மெசினாகவும், கணவன் விரும்பிய போது சுகமளிக்கும் பாலியல் இயந்திரமாகவும் இருந்த பெண்களின் வரலாற்றில் புரட்சியினை உண்டாக்கிய பெருமை புலிபடைக்கே உரியது.

ஈழத்தில் மாலையானதும் பெண்கள் வீட்டிற்கு வெளியே போக கூடாது என்றும், "வீட்டிற்கு விலக்கு" எனும் அடை மொழியால் பெண்களை மாதவிடாய் காலத்தில் வீட்டின் ஓரத்தில் விலக்கி வைத்திருந்த சமூகத்தில், பெண்களும் துப்பாக்கி ஏந்திக் களமாடும் வல்லமையை உருவாக்கியது புலிப்படை.

இலங்கையின் மணலாறு இராணுவ முகாம் மீது 1995ம் ஆண்டு ஜூலை மாதம் பெண் புலிகளால் தனித்து நின்று நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றி உங்களுக்கு தெரியாதா..?  மன்னகுளம் முகாம் மீதான தாக்குதல், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் பற்றி அறியாதவரா..?

ஒரு பெண் காவல் அதிகாரிக்கு துணையாக ஐந்து ஆண் காவலர்கள் காவல் காக்கின்ற இந்திய நாட்டின் அரசு அதிகாரியாக பணியாற்றியவர்தானே நீங்கள்..? எப்படி அறிய முடியும் ஈழவிடுதலைக்காக கடலுக்கடியில், பறக்கும் வானில், அடர் வனத்தில் களமாடிய பெண் போராளிகளைப் பற்றி…. உலகத்திலேயே பெண்களை மதிக்கின்ற, மரியாதை செலுத்துக்கின்ற ஒரே ராணுவம் புலிகளின் ராணுவம். பல அப்பாவி தமிழ் பெண்களும், பெண் புலிகளும் பாலியல் வன் பு/னர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டு, சிங்கள ராணுவத்தால் சூறையாடப்பட்டது உலகம் அறிந்த செய்தி.

இதுவரை சிங்களவர்கள் கூட சொல்லத் துணியாத, சொல்ல முடியாத ஒரு அவதூறை பரப்புகின்ற சிவகாமி ஐ.ஏ.எஸ்., உலகத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.இதுபோன்ற போலி விளம்பரம் தேடிக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நன்றி:  அலை செய்திகள்  எனும் இணையம் (விடுதலைப் புலிகள் பெண்களை இச்சைக்கு பயன்படுத்தினர் என்று கூறிய சிவகாமி. தமிழர்கள் கண்டனம்)

வியாழன், செப்டம்பர் 12, 2013

பதிவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள்: ஆனந்த விகடனுக்கு ஒரு நீதி, கிஷோர்சாமிக்கு வேறொரு நீதியா?

கருத்துரிமைக்கு எதிரான கருத்துரிமைப் போராளிகள் சங்கம்!

முகநூலிலும் வலைப்பூவிலும் இன்னபிற சமூக ஊடகங்களிலும் எழுதும் சாதாரண மனிதர்களுக்கு எதிராக தமிழ்நாட்டின் பத்திரிகையாளர்கள் அணிதிரளும் கொடுமை நடக்கிறதோ என்கிற அய்யம் எழுகிறது. கருத்துரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய பத்திரிகையாளர்களே கருத்துரிமைக்கு எதிராக அணி திரள்வது என்னவிதமான நியாயம் என்று தெரியவில்லை.

இப்போது எழுந்துள்ள சர்ச்சை 'கிஷோர் கே சாமி' எனும் முகநூல் பதிவரை தலைவனாக்கியுள்ளது. அவர் ஏதோ ஒரு நடிகையையும் ஒரு அமைச்சரையும் தொடர்புபடுத்தி எழுதினாராம். (இங்கே காண்க: அமைச்சர் நீக்கத்துக்கும் நடிகைக்கும் என்ன சம்மந்தம்...?) அதனையும் வேறு ஏதோதோ தனிமனித விமர்சனங்களையும் காரணம் காட்டி பத்திரிகையாளர்கள் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார்களாம்.
கருத்துரிமைக்கு எதிரான கருத்துரிமைப் போராளிகள் சங்கம்!
எந்த ஒரு பெண்ணையும் கொச்சைப்படுத்தி எழுதுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால், இதில் வலைப்பூ எழுத்தாளர்களுக்கு ஒரு நீதியும் பெரும் பத்திரிகைகளுக்கு வேறொரு நீதியும் இருப்பதை ஏற்க முடியாது. 

அஞ்சலிக்கு கல்யாணம்! ஆனந்த விகடனின் கருத்துரிமை!

"அஞ்சலிக்கு கல்யாணம்! அதிர்ச்சியில் கோடம்பாக்கம்" என்றொரு கவர் ஸ்டோரியை ஆனந்த விகடன் வெளியிட்டது. "நடிகை அஞ்சலி தமிழக அரசியல் அதிரடிப் புள்ளியின் மருமகனை இரண்டாந்தாரமாக திருமணம் முடித்து அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்....அதிரடிப் புள்ளி இந்தியா அறிந்த அரசியல் பிரபலம். அவரின் மகன் சினிமா தயாரிப்பிலும் இருக்கிறார். மகனின் சினிமா தயாரிப்புக்கு உதவியாக இருக்க அனுப்பப்பட்டவர்தான் அவரின் மருமகன்" என்று எழுதியது ஆனந்த விகடன்.

அதற்கான பின்னூட்டத்தில் ஒரு வாசகர் "என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?" என்று எழுதினார். (இங்கே காண்க:அஞ்சலிக்கு கல்யாணம்!)
(ஆனந்த விகடனின் இந்த செய்தியை நடிகை அஞ்சலி மறுத்துள்ளார். இங்கே காண்க: ரகசிய திருமணம் நடந்ததா? நடிகை அஞ்சலி விளக்கம்)

'ஒரு அமைச்சருக்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருந்ததாக' கிஷோர் சாமி எழுதியது மாபெரும் அவதூறு என்றால், 'ஒரு முன்னாள் அமைச்சரின் மருமகனுடன் நடிகை அஞ்சலி ஓடிவிட்டார், இரண்டாம் தாரமாக/சின்ன வீடாக செட்டில் ஆகிவிட்டார்' என்று எழுதுவதை எந்த விதத்தில் சேர்ப்பது?

சிறிய விளம்பரம் தவறு - பெரிய விளம்பரம் சரியா?

வெறும் 6880 பேர் படிக்கும் வலைப்பூ பக்கத்தில், அதுவும் அவரது நண்பர்களுக்காக மட்டுமே கிஷோர் கே சாமி எழுதுகிறார். 'ஒரு அமைச்சருக்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருந்ததாக' அவர் தெருத்தெருவாக போஸ்டர் அடித்து ஒட்டவில்லை. தெருவில் போகிற வருகிறவர்களிடம் எல்லாம் இதனைக் கூறவில்லை. அவருடைய 6880 நண்பர்களிடம் மட்டுமே தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார். (அதுவும் அவர்கள் எல்லோரும் தாமாக விரும்பி அவருடைய பக்கத்தில் இணைந்தவர்கள்தான். எனவே, பொதுவெளியில் கிஷோர் கே சாமி அவதூறாக பேசினார் என்று கூற வழியில்லை)

ஆனால், ஆனந்த விகடனோ பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் பத்திரிகை. கோடிக்கணக்கானோர் படிக்கும் பத்திரிகையில் 'அமைச்சரின் மருமகனுடன் நடிகை அஞ்சலி சின்ன வீடாக செட்டில் ஆகிவிட்டார்' என்று எழுதியுள்ளது. இதனை பல ஆயிரம் சுவரொட்டிகள் மூலம் விளம்பரப்படுத்தியது. ஜூனியர் விகடனில் ஒரு பக்கம் விளம்பரம் வெளியிட்டது.

இப்படி கோடிக்கணக்கான மக்களிடன் 'நடிகை அஞ்சலியைக் கொச்சைப்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டதை எதிர்த்துப் பேச துப்பில்லாத கூட்டம்' - இப்போது கிஷோர் சாமிக்கு எதிராக கொடிபிடிப்பது ஏன்?

"மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்." - (மத்தேயு 7:3- 5) புனித பைபிள்.

பதிவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அணிதிரண்டது குறித்த தொலைக்காட்சி செய்தி:
பதிவர்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அணிதிரண்டது குறித்த ஒரு பதிவு: கிஷோர் கே ஸ்வாமி vs பத்திரிக்கைகள்

தொடர்புடைய சுட்டிகள்:

அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்.

இனவெறிப் போக்கை கைவிடுமா இந்தியா டுடே: கவின்மலரின் வன்னியர் எதிர்ப்பு சாதிவெறி!

இந்தியா டுடேவின் பெண் உடல் வியாபாரமும் கவின்மலரின் இரட்டை வேடமும்: பல துணைகள், உறவுச்சுமை இல்லாத செக்ஸ் புரட்சி!

கௌரவக்கொலை தடுப்புச்சட்டமும் இளவரசனும்: மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் பித்தலாட்டக் கூட்டம்!


விகடன் கும்பலின் கொலைவெறி: படுகொலையானது பத்திரிகை தர்மம்!

திங்கள், செப்டம்பர் 09, 2013

விநாயகர் சதுர்த்தியும் தமிழர்களின் வீரமும் - அறியாத தகவல்கள்!

விநாயகர் சதுர்த்தி தமிழர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகை அல்ல. விநாயகர் தமிழ்நாட்டின் முதல் கடவுளும் அல்ல. கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் விநாயகர் தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு முந்தைய தமிழ் இலக்கியங்களில் அப்படி ஒருவர் குறிக்கப்படவில்லை. எனினும் விநாயகர் தமிழ்நாட்டிற்கு வந்ததின் பின்னணியில் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.

பல்லவ - சாளுக்கிய போர்

தமிழ்நாட்டின் மக்கள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு நிகழ்வு சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போராகும். 
 புலிகேசிக்கும் பல்லவர்களுக்கும் நடந்த போர் - கற்பனைப் படம்
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் புலிகேசியால் தோற்கடிக்கப்பட்டு காஞ்சியிலிருந்து துரத்தப்பட்டான். இதற்கு பழிவாங்க சபதமேற்ற அவனது மகன் நரசிம்மவர்ம்மன், இதற்காக மக்களுக்கு போர்க்குணம் ஏற்படச் செய்யவேண்டும் என்பதற்காக பாரதம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினான் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இதன் பலனாக கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகர் தாக்கப்பட்டு அவன் தோற்கடிக்கப்பட்டான் (கருநாடக மாநிலத்தில் உள்ள நகரம் - தமிழில் வாதாபி).
பாதாமி
இந்த போரின் தொடர்ச்சியாகவே தமிழ்நாட்டில் மிக முக்கியமான நிகழ்வுகள் அமைந்துள்ளன. தமிழ்நாடெங்கும் உள்ள திரௌபதி அம்மன் கோவில்கள் இதனால் ஏற்பட்டவைதான். கூவாகம் கூத்தாண்டவர் இந்த நிகழ்வோடு தொடர்புடைய சாமிதான். இன்றும் பெங்களூரு நகரின் முதன்மை திருவிழாவாக இருக்கும் 'கரகா' திருவிழா இதன் தொடர்ச்சியே. தமிழ்நாடெங்கும் கோவில் திருவிழாக்களில் நடக்கும் பாரதம் படிக்கும் பழக்கம் இதனால் ஏற்பட்டதுதான். அவ்வாறே, புலிகேசியின் பாதாமி நகரைத் தாக்கி அழித்து அதன் நினைவாகக் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டவர்தான் விநாயகரும்.

சாளுக்கிய மன்னன் புலிகேசி - வன்னிய புராணம் - கூத்தாண்டவர்

நரசிம்மவர்மனது படைவீரர்களாக இருந்தவர்கள் வன்னியர்கள். வன்னியர்கள் வாழும்பகுதிகளில் இப்போதும் பாரதம் படிக்கும் பழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. பாரதம் படிக்கும் பழக்கத்திலிருந்து பாரதக்கூத்து வந்துள்ளது. இத்தகைய தெருக்கூத்து முறைகள் வளர்ந்ததும் வன்னியர் சமூகத்தினரிடையேதான். பாரதக்கதையின் பாதிப்பால் வன்னியர்கள் வாழும் பகுதிகளில் திரௌபதி அம்மன் கோவில்கள் உருவாயின.
திரௌபதி அம்மன்
சாளுக்கிய மன்னன் புலிகேசியை வாதாபி சூரனாக சித்தரித்து, அவனை அழிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட வன்னிய புராணம் வன்னியர்களிடையே கதையாக பரவியிருந்தது. வன்னியர்களின் தலைவன் வீரவன்னிய ராசன்.

வாதாபி அரக்கனை அழிக்கப்புறப்படும் போது வீரவன்னியராசனின் மனைவி மந்திரமாலா போரின் விளைவு என்னவாகுமோ என கவலைப்படுகிறாள். அதற்கு வன்னியராசன் "என்னுடன் நாய் வருகிறது. நான் போரில் இறந்தால் நாய் திரும்பிவரும், வீட்டில் ஏற்றப்பட்ட காமாட்சி விளக்கு அணையும், மல்லிகைப் பூ வாடும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார். வன்னியராசன் செல்லும் வழியில் ஆறு குறுக்கிடுகிறது. அவர் ஆற்றைக் கடந்து சென்றுவிடுகிறார். ஆனால் நாய் கடக்க முடியாமல் திரும்பி விடுகிறது. நாயைப் பார்த்த மந்திரமாலா கணவர் இறந்துவிட்டதாகக் கருதி தாலியை அறுத்துவிடுகிறாள். வீட்டில் விளக்கு அணையாததையும், மலர் வாடாதைதையும் அவள் கவனிக்கவில்லை.
போரில் வெற்றிபெற்று திரும்பும் வீரவன்னிய ராசன் தன் மனைவி விதவைக் கோலத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். நடந்ததை அறிந்து மீண்டும் தாலி கட்டுகிறான். இதுதான் வன்னியக் கூத்து ஆகும்.

இப்படி தாலியை அறுத்துக்கட்டக்கூடிய பழக்கம் வன்னியர்களிடையே இருக்கிறது. இன்றைக்கும் ஆடி 18 அன்று தாலியை அறுத்துக்கட்டும் சடங்கை பல வன்னியர்கள் செய்கின்றனர். இப்படியாக வன்னியர் புராணத்தில் உள்ள ஒரு கதை - பாரதக் கதையில் உட்புகுத்தப்பட்டு கடைசியில் அரவாணிகள் கதை ஆகிவிட்டது.
கூவாகம் கூத்தாண்டவர்
கூவாகம், கொத்தட்டை, அண்ணாமைலை நகர், தேவனாம் பட்டினம், தைலாபுரம், பிள்ளையார் குப்பம் ஆகிய கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. கோவை சிங்காநல்லூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. அனைத்து கூத்தாண்டவர் கோவில்களும் வன்னியர்களின் கோவிலாக உள்ளன. அவற்றில் பூசாரிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். இக்கோவிலுக்கு வழிபட வரும் சுற்றுக்கிராம மக்கள் அரவாணிகள் அல்ல. அவர்கள் சாதாரண மக்கள். தமது வேண்டுதலுக்காக தாலி கட்டிக்கொள்கின்றனர்.
மாமல்லபுரம் திரௌபதியம்மன் 
வன்னிய புராணம், பாரதக் கதை - இவை இரண்டுமே வன்னிய மக்களுக்கு போர்க்குணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பல்லவ மன்னனால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டவை. பாரதம் படிப்பதற்கென்று பல மானியங்களை மன்னர்கள் அளித்துள்ளதை கல்வெட்டுகள் காட்டுகின்றன. பாரதக் கதையின் பாதிப்பால் திரௌபதை அம்மன் கோவில்கள் உருவாயின. பல்லவர்களின் மாமல்லபுர கோவில்களில் திரௌபதிக்கும் கோவில் உள்ளது. எல்லா திரௌபதியம்மன் ஆலயங்களும் வன்னியர் கோவில்களாக நீடிக்கின்றன. வன்னியர்களே பூசாரிகளாக உள்ளனர். பெங்களூரின் முக்கிய விழாவான தர்மராஜா கோவிலின் கரகா திருவிழா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
திருச்செங்காட்டன்குடி வாதாபி கணபதி
நரசிம்மவர்ம்மனின் படை கி.பி.642 ஆம் ஆண்டில் புலிகேசியின் பாதாமி நகரைத் தாக்கி அழித்தது என்பதற்கான கல்வெட்டு இப்போதும் பாதாமி நகரில் இருக்கிறது. அங்கிருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் சிலை திருவாரூர் அருகே திருச்செங்காட்டன்குடி எனும் ஊரில் இருக்கிறது. தமிழ்நாட்டி விநாயகரை வாதாபி கணபதி என்றும் அழைக்கின்றனர்.

இப்போது இந்துத்வா அமைப்புகளால் ஊக்குவிக்கப்படும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கும் - வாதாபி கணபதியின் வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

(செப்டம்பர் 19, 2012 அன்று எழுதப்பட்டது)

ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை: ஐ.நா.வில் பசுமைத் தாயகம் கோரிக்கை

இலங்கை மீது விசாரணை நடத்தக்கோரி ஐ.நா.வில் பசுமைத் தாயகம் கோரிக்கை வைத்துள்ளது குறித்து மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
இனப்படுகொலை - போர்க்குற்றம்

"இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு படுகொலை செய்தது. மிகப்பெரிய இந்த இனப்படுகொலைக்கு காரணமான இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்சேவும், அவனது கூட்டாளிகளும்  இன்றுவரை தண்டிக்கப்படவில்லை.

இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு  நீதி பெற்றுத் தரவும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மூலமாக என்னால் ஏற்படுத்தப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் அவையால்  சிறப்பு ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்ட பசுமைத்தாயகத்திற்கு ஐ.நா. அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்று  கருத்து தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி கடந்த 2009-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டங்களில் பங்கேற்று ஈழத் தமிழர்களுக்காக பசுமைத்தாயகம் குரல் கொடுத்து வருகிறது. இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் விசாரணை நடத்தப்படுவதற்கு பசுமைத் தாயகம் அமைப்பும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

மனித உரிமை ஆணையத்தின் கூட்டம்

இலங்கை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 24-ஆவது கூட்டம் ஜெனிவாவில் நாளை (09.09.2013) தொடங்குகிறது.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து கடந்த மாதம் இலங்கைக்கு சென்று விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, அது குறித்த அறிக்கையை இந்தக் கூட்டத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இம்மாதம் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் சிங்களர்களாலும், இராணுவத்தினராலும் திட்டமிட்டு பறிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பசுமைத்தாயகம் அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழர் நிலம் - பசுமைத்தாயகம் ஐநாவில் கோரிக்கை

வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழர்களின் பெரும்பான்மையை குறைக்க வேண்டும் என்பதற்காக சிங்களர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால், கிழக்கு மாநிலங்களில் சிங்களர்களின் எண்ணிக்கை 1901-ஆம் ஆண்டில் இருந்ததைவிட இப்போது 41 மடங்கு அதிகரித்துள்ளது. இதன்விளைவாக கிழக்கு மாநிலத்தில் தமிழர்களின் எண்ணிக்கை 55.8 விழுக்காட்டிலிருந்து 39.7 விழுக்காடாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் சிங்களர்களின் எண்ணிக்கை5.1 விழுக்காட்டிலிருந்து 23.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

2009-ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பிறகு சிங்கள மயமாக்கல் அதிகரித்து வருகிறது. இலங்கையின் ஒட்டுமொத்த நிலப்பரப்பான 65,619 சதுர கிலோமீட்டரில், 18,880 சதுர கிலோமீட்டர் பரப்பு தமிழர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 7 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை தமிழர்களிடமிருந்து சிங்கள ராணுவம் பறித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பல்லாயிரம் தமிழர்கள் வாழ இடமின்றி தவிக்கின்றனர்; வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதால் உணவுக்கு கூட வழியின்றி ஈழத் தமிழர்கள் வாடுகின்றனர். இதுபற்றியெல்லாம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் விளக்கியுள்ள பசுமைத்தாயகம் அமைப்பு, இதுபற்றி விசாரணை நடத்த சிறப்பு ஆணையர் ஒருவரை அமர்த்தும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில்  பசுமைத் தாயகம் அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். அங்கு நடைபெறும் விவாதங்களின்போது  இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரையிலும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரையிலும் பசுமைத் தாயகம் தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்".இவ்வாறு மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ:

தொடர்புடைய சுட்டிகள்:

1. ஈழ இனப்படுகொலைக்கு நீதி: சென்னையில் நடந்த முன்முயற்சி கூட்டம்! ஒரு நம்பிக்கை அளிக்கும் தொடக்கம்

2. இலங்கை: நவநீதம் பிள்ளையின் அறிக்கை போர்க்குற்ற விசாரணைக்கு போதுமானது!

3. வரலாறு முக்கியம் அமைச்சரே! கலைஞரின் தந்திரம்: ஏற்கனவே ஐநா நிகழ்ச்சி நிரலில் உள்ளதை புதிய கோரிக்கையாக வைக்கும் விநோதம்!

4. ஜெனீவா: ஐநாவில் பசுமைத்தாயகம் சாதனை - இலங்கை மீது நேரடியாக சரமாரிக் குற்றச்சாட்டு!

5. ஜெனீவா ஐநா கூட்டத்தில் பசுமைத் தாயகம் பேச்சு: இலங்கை மீது சர்வதேச விசாரணை ஆணையம் - நேரடியாக வலியுறுத்தல்.

6. இலங்கை - போர்க்குற்ற விசாரணை: ஐ.நாவில் பசுமைத் தாயகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

7. இலங்கை இனப்படுகொலை, போர்க்குற்றம்: ஐநாவில் தொடரும் நீதிக்கான போராட்டம்.

சனி, செப்டம்பர் 07, 2013

தர்மபுரி தலித்தும் மரக்காணம் வன்னியரும்: படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோவென்று போவான்!

சம்பவம் 1: தலித் தற்கொலை

தர்மபுரியில் ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞரின் மரணம் நேர்ந்தது. அது வன்னியர்கள் செய்த படுகொலை என பத்திரிகைகளும், நடுநிலையாளர்கள் என்று கூறிக்கொள்வோரும் பெரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அந்த செய்தி நாடே அறியும் வகையில் விளம்பரம் ஆனது. (ஆனால், 'அந்த மரணம் ஒரு தற்கொலை. அதற்கு யாரும் காரணமல்ல' என்றும் காவல்துறை நிரூபித்தபோது, அது பெரிதாக வெளிவரவில்லை)

ஒருவேளை, அது கொலைதான் என்று கூறி இப்போது வன்னியர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் இன்று தமிழ்நாடே அல்லோல கல்லோலமாக ஆகியிருக்கும்.

சம்பவம் 2: வன்னியர் படுகொலை.

மரக்காணத்தில் இரண்டு வன்னிய நபர்களின் மரணம் நேர்ந்தது. அது கொலைதான் என்று சொல்லி வன்னியர்கள் நடத்திய போராட்டத்தால் மருத்துவர் அய்யா சிறையில் அடைக்கப்பட்டார். 125 வன்னியர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மரக்காணத்தில் வன்னியர் செல்வராஜ் என்பவர் கொலைதான் செய்யப்பட்டார் என்பதை உறுதி செய்து, அதற்கு காரணமான 6 பேர், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர் (இங்கே காண்க: 6 held for killing PMK man during Marakkanam clash). அவர்களின் பின்னணி விவரங்கள் வெளிப்பட்டால், மரக்காணம் கலவரத்தை நடத்திய கட்சி எது என்பது தெரியவரும்.

ஆனால், இந்த சம்பவம் குறித்து தமிழக ஊடகங்கள் பெரிதாக எழுதவில்லை (சில ஆங்கில நாளேடுகள் செய்தியாக வெளியிட்டுள்ளன), நடுநிலைவியாதிகளோ கண்டுகொள்ளவே இல்லை.
மரக்காணத்தில் கொலை செய்யப்பட்ட செல்வராஜ் வன்னியர் அவர்களின் குழந்தை!
மரக்காணத்தில் வன்னியர்கள்தான் கலவரத்தில் ஈடுபட்டனர் என எட்டுக் காலத்தில் செய்தி வெளியிட்டவர்கள், தொலைக்காட்சியில் எட்டுக்கட்டையில் இரவுபகலாகக் கச்சேரி நடத்தியவர்கள் இப்போது எங்கே ஓடி ஒளிந்துள்ளனர்?

தாழ்த்தப்பட்டவர் ஒருவர் வன்னியர்களால் சிறு பாதிப்புக்கு ஆளானால்கூட அது உங்களுக்கு முதல்பக்க தலைப்புச் செய்தி. ஆனால், அப்பாவி வன்னியர் ஒருவர் தாழ்த்தப்பட்டவர்களால் வெட்டிக்கொல்லப்பட்டால் அதற்கு செய்தியில் இடம் இல்லையா?

இதுதான் உங்கள் ஊடகத் தர்மமா? இதுதான் நடுநிலையின் நியாயமா? 

""படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்!"" - மகாகவி பாரதி
தொடர்புடைய சுட்டிகள்:

இளவரசன் மரணம் கொலை அல்ல என்கிறது பொலிஸ்: மன்னிப்பு கேட்குமா சாதிவெறிக் கூட்டம்?

மரக்காணம் படுகொலை: இந்தியா டுடேவுக்கும் கவின்மலருக்கும் கோடான கோடி நன்றிகள்!


அ.மார்க்ஸ் கும்பலின் பித்தலாட்டம்: கட்டுக்கதையை உண்மையாக அறிவிக்கும் சதி!


1. விகடன் கும்பலின் கொலைவெறி: படுகொலையானது பத்திரிகை தர்மம்!


2. தர்மபுரி தற்கொலை: பித்தலாட்டக்காரர்கள் முகத்தில் கரிபூசிய எய்ம்ஸ் மருத்துவர்கள்!


3. கௌரவக்கொலை தடுப்புச்சட்டமும் இளவரசனும்: மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப்போடும் பித்தலாட்டக் கூட்டம்!


4. ஆடிட்டர் ரமேசும் தர்மபுரி இளவரசனும்: அன்று வன்னியர்கள், இன்று ரியல் எஸ்டேட் - கோயபல்சின் மறுவடிவமாகும் புர்ஜியாளர்கள்


5. இளவரசன் தற்கொலை: பா.ம.க.வை சிலுவையில் அறைந்தவர்கள் பாவங்களைச் சுமப்பார்களா? மருத்துவர் இராமதாசு வினா


6. தர்மபுரி இளவரசன் மரணம் தற்கொலையே: அதிர்ச்சியளிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை!


7. அம்பலமாகிப் போன கவின்மலரின் அண்டப்புளுகு: தற்கொலைக் கடிதம் இளவரசன் எழுதியதுதான்.


8. தருமபுரி: முற்போக்கு வேடதாரிகளே! இதையும் கொஞ்சம் படிச்சுப்பாருங்க: மூன்று லட்சம் கேட்டதே கலவரத்துக்கு காரணமா?


9. தர்மபுரி தற்கொலையும் வன்னியர்களுக்கு எதிரான சதிச்செயலும்.


10. சமூக மோதலாக மாற்றியது விடுதலை சிறுத்தைகள்தான்! - வன்னியர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு


11. போராட்டம் நடத்தும் உரிமை: முஸ்லிம்களுக்கு உண்டு, வன்னியர்களுக்கு இல்லை - தமிழ்நாட்டின் இன்றைய நிதர்சனம்!


12. தருமபுரி காதல்: வினவு முகத்தில் கரி பூசிய செல்வி. திவ்யா! அம்பலமாகும் புரட்சி பித்தலாட்டம்!


13. தர்மபுரி காதலும் பழிக்குப்பழி சாதிஒழிப்பும்: அடடா...இதுவல்லவோ தலித் புரட்சி!


14. தருமபுரி கலவரம்: சட்டவிரோத குழந்தைத் திருமணத்திற்கு இத்தனை பேர் வக்காலத்தா?


15. நாடகக் காதல் இருக்கிறது என்கிறார்கள் சேரனும் அமீரும்: உண்மைக் காதல் ஆதரவாளர்கள் எங்கே?

வியாழன், செப்டம்பர் 05, 2013

மனுஷ்யபுத்திரன் கோரிக்கை: அமைச்சர் வைகைச்செல்வன் நீக்கம்!

செய்தி 1: 'நூல்களைப் பாதுகாக்க ஒரு கொள்கை உருவாக்கப்பட வேண்டும்' என மனுஷ்யபுத்திரன் வேண்டிக் கொண்டார். 'அதன்படி, அரசு விரைவில் புத்தகக் கொள்கை வெளியிட உள்ளது' என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன்.

இங்கே காண்க: தமிழக அரசு விரைவில் புத்தகக் கொள்கை வெளியிடும் - தினமணி செய்தி
மனுஷ்யபுத்திரனின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்
மனுஷ்யபுத்திரனின் முகநூல் தகவல்: "நேற்று புத்தகத் திருவிழாவின் முதல் தினம். அதிமுக அமைச்சர் வைகைச்செல்வன் தன் பேச்சில் பலமுறை மனுஷ்யபுத்திரன் மனுஷ்யபுத்திரன் சொன்னாற்போல் மனுஷ்யபுத்திரன் எழுதினாற்போல் என்றெல்லாம் குறிப்பிட்டது இன்னொரு சுவை".

செய்தி 2: தமிழகத்தின் பள்ளி கல்விக்கு பொறுப்பான அமைச்சர் வைகைச்செல்வன் இன்று அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இங்கே காண்க: ஆசிரியர் தினத்தில் பள்ளிக் கல்வி அமைச்சர் நீக்கம் - பிபிசி செய்தி

(இன்று இந்தியாவில் ஆசிரியர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல பணி செய்த ஆசிரியர்கள் அரசாங்கத்தால் இன்று கௌரவிக்கப்படுவது வழக்கம்) 

"சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா"

ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

இலங்கை: நவநீதம் பிள்ளையின் அறிக்கை போர்க்குற்ற விசாரணைக்கு போதுமானது!

"நவநீதம் பிள்ளையின் குற்றப்பத்திரிகை போர் குற்ற விசாரணைக்கு போதுமானது. எனவே, இலங்கை அரசை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதை இந்தியா கைவிட்டு, இலங்கை மீது பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியாவே கொண்டுவர வேண்டும்" என மருத்துவர் இராமதாசு அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.:

"இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து கடந்த ஒரு வாரமாக அந்நாட்டில் விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, அங்கு நிலவும் சூழல் குறித்து அதிர்ச்சி நிறைந்த உண்மைகளை கூறியுள்ளார். அதன் மூலம் இலங்கையின் கோர முகம் அம்பலமாகியுள்ளது.

இலங்கயில் போர் வேண்டுமானால் முடிவடைந்திருக்கலாம், ஆனால் அங்கு ஜனநாயகம் தொடர்ந்து நசுக்கப்படுகிறது; சட்டத்தின் ஆட்சி அழிந்து வருகிறது என்று நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். இலங்கை சர்வாதிகார ஆட்சி முறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது; இலங்கையின் நிலை குறித்து என்னிடம் புகார் கூறிய மனித உரிமை ஆர்வலர்களும், பொதுமக்களும் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டிருக்கிறார்கள்; இலங்கையில் நான் இருக்கும்போதே இந்த அளவுக்கு மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குற்றப்பத்திரிகை வாசித்திருக்கிறார்.

மேலும்,  இலங்கைப் போரின் போது  அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டது, விடுதலைப்புலிகளுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் விசாரணையின்றி மரண தண்டனை அளிக்கப்பட்டது, வெள்ளை வேனில் ஆட்கள் கடத்தப்பட்டது, இராணுவமயமாக்கலால் தமிழ் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறை ஆகிய மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் போர் முடிவடைந்து  4 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அங்கு நிலைமை  சீரடைவதற்கு மாறாக சீரழிந்து வருகிறது என்பது நவநீதம் பிள்ளையின் அறிக்கையின் மூலமாக உறுதியாகியிருக்கிறது.

இலங்கையில் நிலவும் மிக மோசமான மனித உரிமைச் சூழல் குறித்து சான்றளிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையரை விட சிறந்த ஒருவர் இருக்க முடியாது. போருக்குப் பிறகு இலங்கையில் நிலைமை மேம்பட்டு வருவதாக கூறி வந்த இந்திய வெளியுறவுத் துறையினரின் முகமூடி இதன் மூலம் கிழிக்கப்பட்டிருக்கிறது.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது நவநீதம் பிள்ளை முன்வைத்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள குற்றச்சாற்றுகள் மிகவும் கடுமையானவை.

இதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு இவற்றைவிட வலிமையான ஆதாரங்கள் தேவையில்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து அந்நாட்டு அரசே விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மூலம் இரண்டு ஆண்டுகள் காலக்கெடு கொடுத்த பிறகும் இராஜபக்சே அரசு இன்றுவரை ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை.

எனவே, இலங்கை அரசை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதை இந்தியா கைவிட வேண்டும்.  மாறாக, இலங்கை மீது பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச் மாதங்களில் கூடும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும்.

அதுமட்டுமின்றி, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராஜபக்சே  அரசை கண்டிக்கும் வகையில் காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும், கொழும்பில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் ஆட்சித் தலைவர்கள் மாநாட்டை வேறு  நாட்டிற்கு மாற்றவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மருத்துவர் இராமதாசு அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளையின் அறிக்கை: Opening remarks by UN High Commissioner for Human Rights Navi Pillay at a press conference during her mission to Sri Lanka
தொடர்புடைய சுட்டி:

ஈழ இனப்படுகொலைக்கு நீதி: சென்னையில் நடந்த முன்முயற்சி கூட்டம்! ஒரு நம்பிக்கை அளிக்கும் தொடக்கம்