Pages

வியாழன், மார்ச் 31, 2016

விடுதலைப்புலிகள் பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர் - என்றவருக்கு திமுகவில் எம்.எல்.ஏ சீட்!

"விடுதலைப்புலிகள் மீது "பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்" என்று அபாண்டமாக குற்றம் சாட்டியவருக்கு திமுக கூட்டணியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்கப்பட்டுள்ளது!

இதுவரை விடுதலைப்புலிகள் மீது, 'பெண்களை கற்பழித்தார்கள் என்றோ, பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தினார்கள்' என்றோ சிங்கள பேரினவாதிகள் கூட குற்றம் சாட்டியதில்லை. 

ஆனால், பெண் புலிகளை ஆண்களின் இச்சைக்காகவே படைகளில் பயன்படுத்தினார்கள் என்று வெளிப்படையாக குற்றம் சுமத்தினார் சிவகாமி ஐஏஎஸ். புதியதலைமுறை டிவியில் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்த சிவகாமிக்கு திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
"விடுதலைப்புலிகள் பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்" அபாண்ட பேச்சு  https://youtu.be/lVpSJUF6ixQ
சிவகாமிக்கு ஒரு சீட்: கலைஞரின் வஞ்சம் தீர்க்கும் முயற்சி!

விடுதலைப் புலிகள் அமைப்பினர் எம்ஜிஆருடன் இணக்கமாக இருந்தனர் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்களை பழி தீர்க்க அலைந்தார் கலைஞர் என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட வன்மத்தின் காரணமாக ஈழ இனப்படுகொலையில் காங்கிரசுக் கட்சி ஈடுபட்ட போது; அதற்கு துணை போனார் கலைஞர் என்கிற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

இத்தனைக்கு பிறகும் மனம் ஆறாத கலைஞர், இப்போது "விடுதலைப்புலிகள் பெண் போராளிகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினர்" என்று சொன்ன சிவகாமி என்பவருக்கு திமுகவில் எம்.எல்.ஏ சீட் கொடுத்துள்ளார். (செய்தி: DMK gives seat to party led by ex-IAS officer http://goo.gl/L6wpgW  )

உன்னதமான இயக்கத்தின் மீது அபாண்டமான புகார்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேட்டியெடுத்த பிரபல ஊடகவியலார் அனிதா பிரதாப் குறிப்பிட்டது 'தான் ஒரு இரவு முழுவதும் 20க்குமே மேற்பட்ட விடுதலை புலிகளுடன் தங்கியிருந்ததாகவும் ஒரு நொடிகூட தான் ஒரு பெண் என்ற அச்சமேற்படாதாவாறு அவர்கள் பார்த்துக்கொண்டார்கள்' என்றும் வியந்து போற்றிய ஒரு இயக்கம் பற்றி தான், எதிரியான சிங்களனே வைக்காத ஒரு குற்றச்சாட்டை சிவகாமி ஐஏஎஸ் வைத்துள்ளார்.

இன்று வரை பல நாடுகளின் ராணுவங்களில் பெண்கள் உதவியாளர்களாகவும், நர்ஸ், டாக்டர் போன்ற பணிகளையும் மட்டுமே செய்து வருகிறார்கள், ஆனால் புலிகள் இயக்கம் தான் பெண்களை போர்களத்திற்கு அனுப்பியது, மாலதி படையணி, சோதியா படையணி போன்ற அணிகள் ஆண் போராளிகளுக்கு இணையாக பல போர்களில் பங்கேற்றனர்.

ஈழப்போரின் கடைசி நாட்களான 2009 ஏப்ரல் மாதம் 1,2,3ம் நாட்களில் நடந்த போரில் புலிகளின் பெண்கள் அணி சிங்கள ராணுவத்துக்கு பேரழிவை ஏற்படுத்தியது என்று சிங்கள ராணுவதளபதிகளே குறிப்பிட்டனர். இப்படி போர்களத்தில் பங்கேற்று போராடிய ஒரு இயக்கத்தை பற்றி தான் சிவகாமி ஐஏஎஸ், 'பாலியல் இச்சை' எனும் கடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். அவருக்கு திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழினத்தை இகழ்ந்த திமுகவை மன்னிக்கலாமா?

"தமிழை இகழ்ந்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்" என்றார் பாவேந்தர் பாரதிதாசன்

தமிழினத்தை பழித்தவருக்கு சட்டமன்ற தேர்தலில் இடம் கொடுத்த திமுகவை யார் தடுத்தாலும் விடக்கூடாது என உறுதி ஏற்பதே மானமுள்ள தமிழர்களின் கடமை ஆகும்.

பிச்சை போடும் பிரேமலதா குடும்பம்; கை ஏந்தி நிற்கும் வைகோ, கொம்யூனிஸ்ட் கும்பல்!

ம.ந.கூட்டணி என்று துவக்கப்பட்டதும், தேதிமுக – ம.ந.கூட்டணி என ஒப்பந்தம் செய்யப்பட்டதும், விஜயகாந்த் துணைவியார் அறிவித்தது போல், கிராம மக்களுக்கு புரியும் வகையில் கே.கூ. அதாவது கேப்டன் விஜயகாந்த் அணி என்றும், அந்த அணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் என்றும், கே.கூ.அணியின் ஒட்டு மொத்த அமைப்பாளர் வைகோ பத்திரிக்கையாளர் முன்னிலையில் தெளிவுபடுத்தினார்.
தற்போது, இந்த அணியின் துணை முதல்வர் வைகோ என்றும், நிதி அமைச்சர் திருமா என்றும், மற்றும் காம்ரேட்கள் ராமகிருஷ்ணன், முத்தரசனுக்கும் அமைச்சர் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற ஜன நாயகத்தில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு என்பதே அதிகப்பட்ச செயல் என்று பலராலும் சொல்லப்பட்ட நிலையில், இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யாமலேயே, முதல்வர் வேட்பாளர் என்பதையும் தாண்டி, அடுத்து உள்ள அமைச்சர் பதவிகளுக்கும் பெயர்களை அறிவித்து இருப்பது உலக அரசியல் வரலாற்றில் கே.கூ.அணியாகத்தான் இருக்கும். இதுவும் பெரிய மாற்றம்தான்.

சரி. இந்த அறிவிப்பை செய்தவர் யார்? முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தா? இல்லை. அவர் வீட்டில் அமர்ந்து முதல்வர் பதவியில் என்ன என்ன சாதிக்கலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்.

பிறகு, அமைப்பாளர் வைகோவா என்றால் பாவம் அவர் மேடைக்கு மேடை வீரவசனம் பேசுகிறார்; தற்போது ஊடகம் என்றால் சற்று கலக்கமாக இருக்கிறது என்கிறார்; அவர்களுக்கு எப்படி பாடம் நடத்துவது என்று தனக்குத் தெரியும் என்றும், ஆனால் சொல்லமாட்டேன் என்று சஸ்பென்ஸ் படம் காட்டுகிறார்.

பிறகு யார் தான் இந்த அமைச்சர் பட்டியலை வெளியிடுவது? கே.கூ.அணியின் முதல்வர் வேட்பாளரின் மனைவியின் தம்பி வெளியிடுகிறார்.
இதை யாரும் குடும்ப அரசியல் என்று கொச்சைப்படுத்த வேண்டாம். கே.கூ.அணியின் அடுத்தக் கட்ட தலைவருக்கு, முதல்வருடன் யார் யாரெல்லாம் அமைச்சர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதுவும் பெரிய புரட்சிகர மாற்றம்தான்.

இன்னும் தேர்தலுக்கு ஐம்பது நாட்களுக்கு மேல் உள்ளது. பல புரட்சிகர அறிவிப்புகள் கே.கூ.அணியின் சார்பில் வரக்கூடும். ஆவலுடன் காத்திருப்போம்.
தொடர்புடைய இடுகைகள்:




திங்கள், மார்ச் 28, 2016

விஜயகாந்த் அணி: பெயருக்காக அடித்துக் கொள்ளும் கூட்டம்!

கூட்டணி கட்சிகள் இடையே கொள்கை இழுபறி இருப்பது நியாயம்தான். ஆனால், கூட்டணியின் பெயருக்காக அடித்துக்கொள்ளும் கூத்து இப்போதுதான் நடக்கிறது.

புதிய கூட்டணிக்கு பெயர் "கேப்டன் விஜயகாந்த அணி" என்று திட்டவட்டமாக அறிவித்தார் வைகோ. அதனை மீண்டும் மீண்டும் வழிமொழிந்தார் பிரேமலதா. "விஜயகாந்த அணி"  என்பதுதான் சரி என்றார் திருமாவளவன்.

ஆனால், இதனை வன்மையாக மறுத்துள்ளன கொம்யூனிஸ்ட் கட்சிகள். CPI தலைவர் நல்லக்கண்ணு, CPI முன்னாள் செயலாளர் தா. பாண்டியன், CPM செயலாளர் இராமகிருஷ்ணன் ஆகியோர் இதனை எதிர்த்துள்ளனர்.

இந்த உள்குத்து கோமாளிக் காட்சிகளை இங்கே காண்க:

விஜயகாந்த அணி தான்

கேப்டன் விஜயகாந்த் அணிதான்: பிரேமலதா கருத்து: காணொலி

இது விஜயகாந்த் அணிதான் - திருமாவளவன் கருத்து: காணொலி


விஜயகாந்த் அணி அல்ல

இது விஜயகாந்த் அணி அல்ல - தா. பாண்டியன் ஆவேச மறுப்பு!

இது விஜயகாந்த் அணி அல்ல - எதிர்த்துப் பேசும் நல்லக்கண்ணு
இது விஜயகாந்த் அணி அல்ல - இராமகிருஷ்ணன் மறுப்பு!

இதெல்லாம் பார்த்து ரொம்ப தலை சுத்துதா?
அப்போ இதப் பாருங்க...!

சனி, மார்ச் 26, 2016

விஜயகாந்த் அணியின் பல கோடி பண பேரம்: முழு உண்மையும் வெளிவருமா?

விஜயகாந்த் கட்சியை திமுகவிடம் சேர்க்க 80 இடங்கள், 500 கோடி பணம் பேரம் பேசப்பட்டதாக வைகோ கூறினார். ஆனால், விஜயகாந்த் கட்சி திமுகவுடன் சேராமல் தடுக்க அதிமுகவிடம் 1500 கோடி ரூபாய் பணம் வாங்கினார்கள் என்று இப்போது தகவல் பரவுகிறது. இதனை எதிர்கொள்ள முடியாமல் வைகோ 'அவரது அலுவலகத்திலேயே வெளிநடப்பு' செய்துள்ளார்.

தமிழக அரசியலில் என்ன தான் நடக்கிறது? விஜயகாந்த் அணியின் பணபேரம் குறித்து அறிய பின்வரும் காணொலிகளைக் காண்க:

அதிமுகவிடம் 1500 கோடி

விஜயகாந்த் கட்சி திமுகவுடன் சேராமல் தடுக்க அதிமுகவிடம் 1500 கோடி ரூபாய் பணம் வாங்கினார்கள் 
பாலிமர் தொலைக்காட்சி:

YOUTUBE: https://youtu.be/E3S0QPJYctw

திமுகவிடம் 500 கோடி 

விஜயகாந்த் கட்சியை திமுகவிடம் சேர்க்க 80 இடங்கள், 500 கோடி பணம் பேரம் பேசப்பட்டது. இதனை கலைஞர் கருணாநிதியே துண்டுச்சீட்டில் எழுதிக் கொடுத்தார்.
புதிய தலைமுறை செய்தி:

தந்தி தொலைக்காட்சி செய்தி - பிரேமலதா மறுப்பு:
விஜயகாந்த் - வைகோ - திமுக - அதிமுக: பண பேர உண்மைகள் உலகிற்கு தெரிய வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

கூட்டணி பேரம்: தேர்தல் ஆணையத்திடம் பாமக புகார்

'பணத்தைப் பெற்றுக்கொண்டு கூட்டணி பேரம் நடந்தது' என்கிற செய்தி குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என பாமக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். அதன் காணொலி:

செவ்வாய், மார்ச் 22, 2016

விகடன் கும்பலின் ஊடக விபச்சாரம்: அன்று விடுதலைப் புலிகள் - இன்று பாட்டாளி மக்கள் கட்சி!

காசுக்காக வேசித்தனத்தில் ஈடுபடும் இழிவானோர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது விகடன் கும்பல். முன்பு சிங்கள இனப் படுகொலையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டது போன்று, இப்போது திமுகவினரிடம் பணம் பெற்றுக்கொண்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன விகடன் குழும பத்திரிகைகள். இந்த Presstitute விகடன் கும்பல் தமிழக ஊடகத் துறையின் சாபக்கேடு. பத்திரிகை தர்மத்தின் அவமானச் சின்னம்.

ஈழப்போரை இழிவு படுத்திய விகடன் கும்பல்

ஈழ இனப்படுகொலைக் காலத்தில், காசுக்காக இவர்கள் செய்த கொடுமைகள் ஒரு மாபெரும் துரோக வரலாறு ஆகும். 2008 - 2012 வரையிலான காலத்தில் இலங்கை அரசின் தூதர்களுடன் கொஞ்சிக் குலாவி, ஈழத்தமிழர்களுக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தது விகடன் கும்பல்.
இனப்படுகொலை செய்திக்கு கவர்ச்சிப்படம்: விகடனின் வன்மம்
இலங்கை அரசு தனது பொய்ப்பிரச்சாரத்திற்காக உலகெங்கும் பெரும்தொகைப் பணத்தைச் செலவழித்தது. அதில் ஒரு பெரும் தொகை விகடன் கும்பலுக்கு கொடுக்கப்பட்டது. இலங்கைத் தூதர் அம்சா சென்னையில் இருக்கும்போது விகடன் கும்பலுடன் உறவைப் பேணினார். விகடன் கும்பலைச் சேர்ந்த ஒரு நிர்வாக ஆசிரியருக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடுகளை இலங்கைத் தூதர் வாங்கிக்கொடுத்தார் என்பது ஊடகவியலாளர்கள் அறிந்த வரலாறு.

போர் முடிந்த பின்னரும் 2012 நவம்பர் மாதத்தில், புலிகளை இழிவுபடுத்தியும், பெண் போராளிகளை மிக மோசமாக காட்சிப் படுத்தியும் "நேற்று நான் விடுதலைப் போராளி. இன்று நான் பாலியல் தொழிலாளி. ஒரு பெண் போராளியின் வாக்குமூலம்" எனும் ஆறு பக்க நச்சுக்கட்டுரையை வெளியிட்டது விகடன் கும்பல். இக்கட்டுரையில் விடுதலைப் புலிகள் அமைப்பை குற்றம் சாட்டியது விகடன்.
தங்கள் இனத்துக்காக உயிரைத் துச்சமெனத் துறக்கத் துணிந்த பெண் போராளிகளைப் பாலியல் தொழில் செய்கிறார்கள் என்று எழுதுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

அன்று ராஜபக்சே பணம் - இன்று திமுக பணம்

ஈழப்போரின் காலத்தில் ராஜபக்சே பணத்துக்காக வேசித்தனம் செய்த விகடன் கும்பல், இப்போது திமுக பணத்துக்காக, பாமகவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. 

சூரியக் கட்சியின் மருமகனுக்கு ஆலோசகராக செயல்படுவதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார் விகடன் கும்பலின் ஆசிரியர் ஒருவர் என்று சொல்லப்படுகிறது. மேலும், விகடன் குழுமத்தின் பங்குகளை மருமகன் சார்பிலான ஒருவர் பலகோடி கொடுத்து வாங்கியிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இந்த பேரங்கள் ஹாங்காங்க் நாட்டில் வைத்து முடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
விகடன் கும்பலிடம் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகள் இவைதான்: 

1. அதிமுகவுக்கு எதிராக அரசியல் ரீதியிலான கருத்துகளை பரப்ப வேண்டும்.

2. பா.ம.க'வை தொடர்ந்து இழிவுபடுத்தும் விதமாக கருத்துகளை பரப்ப வேண்டும்.

3. திமுகவினை உயர்த்தி புகழ் பாட வேண்டும்.

4. தேமுதிக போன்ற கட்சிகள் திமுகவுக்கு ஆதரவாக போகவில்லை என்றால் அவற்றை இழிவுபடுத்த வேண்டும்.

- இவைதான் விகடன் கும்பலுக்கு திமுக தரப்பிலிருந்து அளிக்கப்பட்டிருக்கும் வேலைகள் என்று சொல்கிறார்கள்.  ஜூனியர் விகடன் மற்றும் ஆனந்த விகடன் வெளியிடும் செய்திகளை படிக்கும் எவரும், இதைத்தான் இந்த கும்பல் செய்கிறது என்பதை மிக எளிதாக கண்டறிய முடியும்.

விகடன் கும்பலின் விபச்சாரத் தொழில்

பணத்துக்காக உடலை விற்பது விபச்சாரம். இது ஒரு கேவலமான தொழில் என்று கருதப்படுகிறது. இதைவிட மிகமோசமான, கேவலமானத் தொழில் - பணத்துக்காக பத்திரிகை தர்மத்தை விற்பதாகும். இதனை முன்னாள் இராணுவ தளபதி விகே சிங் அவர்களும், உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு அவர்களும் Presstitute என்று குறிப்பிட்டுள்ளனர். (Presstitute = blend of press and prostitute = misleadingly tailoring news to fit a particular partisan, financial or business agenda)
விகடன் கும்பலின் ஒரு பத்திரிகை - டைம் பாஸ்
பாமகவை இழிவுபடுத்த வேண்டும் என்கிற திமுக எஜமானரின் உத்தரவுப்படி, விதம் விதமான கழிசடை வேலைகளை செய்துவருகிறது விகடன் கும்பல். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டு இளைய தலைமுறையினருக்கு 'அன்புமணி' என்றால் யாரென்றே தெரியவில்லை - என்கிற ஒரு 'செட்-அப்' வீடியோவை வெளியிட்டனர். அதேபோன்று, பாமகவின் முதலமைச்சர் வேட்பாளராக ஜி.கே. மணியை அறிவித்தால் இளைஞர் வாக்களிப்பார்கள் என்று மற்றொரு 'செட்-அப்' வீடியோவை வெளியிட்டனர். இப்படி தினமும் ஒரு வேசித்தன வேலையை செய்கிறது விகடன் கும்பல்.

ஊடக விபச்சாரம் எனும் பேராபத்து

ஜனநாயகத்தின் அடிப்படை 'அதிகாரப்பகிர்வு' ஆகும் (Separation of powers). சட்டம் இயற்ற சட்டமன்றம் (Legislature), அரசு நிருவாகத்திற்கு நிருவாகத்துறை (Executive), சட்டத்தை நிலைநாட்ட நீதித்துறை (Judiciary) ஆகிய மூன்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்கள் ஆகும். இவற்றுக்கு இணையாக நான்காவது தூண் (Fourth Estate) என்று அழைக்கப்படுவது செய்தி ஊடகம் (News Media) ஆகும். இந்த நான்கு தூண்களும் ஒன்றை சார்ந்து மற்றொன்று இயங்கக் கூடாது.

ஜனநாயகத்தின் முதல் மூன்று தூண்களுடன் 'நேரடியாகவோ - மறைமுகமாகவோ' ஊடகங்கள் பயன்சார்ந்த தொடர்பில் இருக்கக் கூடாது. குறிப்பாக - அரசியல் கட்சிகளுடன் ஊடகங்களுக்கு பயன்சார்ந்த தொடர்பு இருப்பது அடிப்படை ஊடக நெறிகளுக்கு எதிரானதாகும்.

ஆனால், தமிழ்நாட்டில் பல ஊடகங்களை அரசியல் கட்சிகளே நடத்துகின்றன. இது ஒரு மிகப்பெரிய ஜனநாயகக் கேடு. எனினும், அரசியல் கட்சிகள் நடத்தும் ஊடகங்கள் குறித்து மக்கள் அறிந்திருப்பதால், அதன் செய்திப் பின்புலம் மக்கள் அறிந்ததாக இருக்கிறது. ஜெயா தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சியில் எத்தகைய செய்திகள் வரும் என்று மக்கள் அறிந்தே இருப்பதால் - அவற்றின் நம்பகத்தன்மை ஒரு சிக்கலாக இல்லை.

ஆனால், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் பத்திரிகைகள் நடுநிலை வேடம் போடுகின்றனர். பெரும்பாலான மக்கள் இவற்றை பக்க சார்பற்ற ஊடகம் என்று நம்புகின்றனர். மக்களின் இந்த நம்பிக்கையை பல கோடிகளுக்கு திமுகவிடம் விற்றுள்ளது விகடன் கும்பல். முரசொலியில் வர வேண்டிய ஒரு கட்டுரை ஜூனியர் விகடனில் வெளியாகும் போது - அது ஒரு மாபெரும் நம்பிக்கை மோசடியாகிறது.

விகடன்: முரசொலியின் இன்னொரு பதிப்பு

ஊடக விபச்சாரம் செய்யும் விகடன் கும்பல் திருந்த வாய்ப்பே இல்லை. ஆனால், விகடன் கும்பலும் முரசொலியின் இன்னொரு பதிப்புதான் என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது ஊடக தர்மத்தை நம்புவோரின் கடமை ஆகும். 

தமிழ்நாட்டில் ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் எனில் விகடன் கும்பலின் வேசித்தனத்தை அம்பலப்படுத்தியாக வேண்டும்.


தொடர்புடைய இடுகைகள்:

1. விகடன் குழுமத்தின் வன்மம்: தனது பழியை பிறர் மீது சுமத்தும் அநியாயம்!

2. விகடன் பத்திரிகை மன்னிப்பு கேட்க வேண்டும்: பணத்துக்காக செய்தி வெளியிடுவதை நிறுத்து! 

3. மாணவிகள் தற்கொலை: SVS கல்லூரிக்கு விளம்பரம் செய்த ஜூனியர் விகடனுக்கு என்ன தண்டனை? 

4. 'விலைபோன' தி இந்து + விகடன்: விழுப்புரம் SVS கல்லூரி விவகாரத்தில் உண்மையை மறைப்பது ஏன்? 

ஞாயிறு, மார்ச் 20, 2016

பெண்கள் மீதான வன்முறை: தூண்டிவிடும் சாதி ஒழிப்பு போராளிகள்!

சாதி ஒழிப்புக்காக காதலித்து திருமணம் செய்யுங்கள் என்று சிறுவர்களை தூண்டிவிடும் சமூக விரோதக் கும்பலால் தமிழ்நாட்டின் இளம்பெண்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. குறிப்பாக, பெண்களின் கல்வி வாய்ப்புகள் முடக்கப்பட்டு அவர்களது எதிர்காலமே அழிக்கப்படுகிறது.

இந்த கொடூரம் குறித்து, தினகரன் நாட்டில் வெளிவந்துள்ள செய்தி:

பள்ளி மாணவிகளை துரத்தும் நவீன வில்லன்கள் ... போலீஸ் மெத்தனம், பெற்றோர் கதறல் 

வேலூர் மற்றும் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளிகளுக்கு அனுப்பிய தங்களது மகள்கள் மீண்டும் நல்லபடியாக மாலை வீடு திரும்ப வேண்டுமே என்ற பரிதவிப்பில் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர். ஏனெனில், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 13 முதல் 17 வயது வரையிலான ஏராளமான பள்ளி மாணவிகளை, அந்தந்த பகுதியில் வேலைவெட்டி இல்லாமல் நண்பர்களின் வாகனங்களில் சுற்றித் திரியும் ‘ரோடு சைடு ரோமியோ’க்கள், ‘காதல்’ என்ற போர்வையில் நவீன வில்லன்களாக மடக்கி வருகின்றனர்.
அவர்களின் ஆசைவார்த்தைகளை நம்பி, காலையில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு யூனிபார்முடன் பள்ளிக்கு கிளம்பும் மாணவிகளை, இந்த நவீன வில்லன்கள் பள்ளி அருகே அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாள்தோறும் வாகனங்களில் நின்றுகொண்டு, அம்மாணவிகளுக்கு பல்வேறு பரிசுகளை வழங்கி அசத்துகின்றனர். இதனால் அந்த மாணவிகள் அந்நபர்கள் மீது ‘ஈர்ப்பு’ கொள்கின்றனர். அவ்வாறு ஈர்ப்பு கொண்ட பள்ளி மாணவிகளை, அதே சீருடையுடன் தங்களது மோட்டார் பைக்கில் ஏற்றிக்கொண்டு, பகல் நேரங்களில் வேலூர் கோட்டை பூங்கா, அமிர்தி வனப்பகுதி, ஏலகிரி மலை, மற்றும் பாலாறு உள்ளிட்ட ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு கொண்டு சென்று, சில்மிஷங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒருசில வில்லன்கள், சில்மிஷங்களை மாணவிகளுக்குத் தெரியாமலே தங்களது செல்போனில் படம்பிடித்து விடுகின்றனர்.

பின்னர், செல்போனில் பதிவான படங்களை வைத்து அம்மாணவிகளை நவீன வில்லன்கள் பயமுறுத்தி, நாள்தோறும் தாங்கள் சொல்லும் இடங்களுக்கு வரவழைத்து, மாணவிகளிடம் பல்வேறு பாலியல் அத்துமீறல்களை செய்து வருகின்றனர்.இதை கண்காணிக்க போலீசாரின் ரோந்து பணி இருப்பதில்லை. இதேபோல் வேலூர் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளிலும் போலீசாரின் ரோந்து பணி முக்கிய சாலைகளில் மட்டுமே உள்ளது. அப்பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் தங்களிடம் சிக்கும் பள்ளி மாணவிகளை அந்த நவீன வில்லன்கள் சாலையிலேயே நடத்தும் பாலியல் அத்துமீறல்கள் நம் கண்களை கலங்க வைக்கின்றன.

இதுகுறித்து ஒருசில பெண் மனோதத்துவ நிபுணர்களிடம் விளக்கம் கேட்டோம்.

‘பொதுவாக 13 முதல் 17 வயது வரையுள்ள பெண்கள், தாங்கள் விரும்பும் நவீன செல்போன் உட்பட அனைத்து பொருட்களையும் வாங்க வேண்டும் என்ற ஒருவித ஈர்ப்பு இருக்கும். அதை பெற்றோர் வாங்கிக் கொடுக்க மறுக்கும்போது, தனக்கு அப்பொருளை வாங்கிக் கொடுக்கும் ஏதோ ஒரு வாலிபர்மேல் ‘ஈர்ப்பு’ வரும். அந்த வாலிபர் எப்படிப்பட்டவர், அவர் படிக்கிறாரா அல்லது வேலை செய்கிறாரா, இப்பொருளை எப்படி வாங்கி தந்தார் என்பதை எல்லாம் அப்பெண்கள் யோசிப்பதில்லை. விரைவில் அந்த வாலிபரின் காதல் வலையில் சிக்குகின்றனர். அவர்களுடன் பூங்கா, சினிமா என பல்வேறு இடங்களுக்கு சுற்றுகின்றனர்.

இதேபோல், பள்ளி படிப்பை பாதியில் விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் இளஞ்சிறுமிகளும் இத்தகைய வாலிபர்களிடம் சிக்கி சீரழிந்து வருகிறார்கள். அவர்களை வைத்து, மற்ற பள்ளி மாணவிகளையும் அந்த நபர்கள் மடக்கி, தங்களது ஆசைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர்.

இதனால் பல இளஞ்சிறுமிகளும் பள்ளி மாணவிகளும் தங்கள் படிப்பையும் வாழ்வையும் இழந்து வருகின்றனர். தங்களிடம் சிக்கிய பள்ளி மாணவிகள், தன்னுடன் சேர்ந்திருக்கும் காட்சிகளை அந்த வாலிபர் ரகசியமாகப் படம்பிடித்து, அதை காட்டி பயமுறுத்தும்போதுதான் இப்பிரச்னை சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு தெரியவருகிறது. அதன்பின் அவர்கள் அலறி பிடித்து காவல்துறையிடம் கூறி நடவடிக்கை எடுப்பார்கள். அல்லது, தங்கள் குடும்பத்தோடு வேறிடங்களுக்கு இடம் மாறி செல்வார்கள். இன்னும் பல கொடுமைகளும் நடந்தேறும்.

இப்பிரச்னைகளைத் தீர்க்க, ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசவேண்டும். அவர்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். அவர்களுக்கு இந்த வயதில் ஏற்படும் ஈர்ப்பினால் நிகழும் அபாயங்கள் குறித்தும் விளக்க வேண்டும்.பள்ளி மாணவிகளை பல்வேறுறு வகைகளில் மிரட்டி பலாத்கார முயற்சிகளில் ஈடுபடும் கொடூரர்கள் மீது, ஹீரோவைப் போல் காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே சமயம், அம்மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை பாழாகாத வகையில் போலீசார் செயல்பட வேண்டும்’ என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்கள் மாவட்டத்தில் மட்டுமல்ல மாநிலம் முழுவதும் பரவலாக நடந்து கொண்டிருக்கிறது. இதை தடுக்க காவல்துறையினர் உடனடியாகசெயல்பட்டு இதுபோன்ற ரோடு சைடு ரோமியோக்களை பிடிக்க கடும் நடவடிக்கை எடுக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகள், முக்கிய வீதிகளுடன் அந்தந்தப் பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லாத தெருக்களிலும் உடனடியாக தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினகரன்: 18.3.2016

ஐநா மனித உரிமைகள் பேரவை தீர்மானமும் இளம் பெண்களின் பாதுகாப்பும்

"குழந்தைகள் திருமணம், முன்னதாகவே  நடைபெறும் திருமணம், கட்டாயத் திருமணம்" ஆகியவற்றை தடுக்க வேண்டும் என்கிற தீர்மானத்தினை ஐநா மனித உரிமைகள் பேரவை (UNHRC)  கடந்த ஆண்டு ஜூலை 2015 இல் நிறைவேற்றியது.
'குழந்தைகள் திருமணம்' (child marriage) என்பது 18 வயதுக்கு முன்னதாக நடைபெறும் திருமணங்கள் ஆகும். 'முன்னதாக நடைபெறும் திருமணம்' (early marriage) என்பது ஆணோ, பெண்ணோ திருமணத்துக்கு முழுவதுமாக தயாராகாத நிலையில் நடக்கும் திருமணங்கள் ஆகும். கட்டாயத் திருமணம் (forced marriage) என்பது மணமக்கள் சம்மதம் இல்லாது நடக்கும் திருமணங்கள் ஆகும்.

கல்வி வாய்ப்புகள், உடல்நலம் ஆகியவற்றுக்கு எதிராக இத்தகைய கேடான திருமணங்கள்  இருப்பதை சுட்டிக்காட்டும் இத்தீர்மானம் - இவற்றை தடுப்பதற்கு முழுமையான, ஒருங்கிணைந்த கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

கேடான திருமணங்களை தடுக்கும் வகையில், இளம்பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுவாக்க வேண்டும் என்பது இந்த தீர்மானத்தின் ஒரு முக்கியமான பிரிவு ஆகும். குறிப்பாக இளம்பெண்கள் பள்ளிகளுக்கு போகும் போதும் வரும்போது பாதுகாப்பளிக்க வேண்டும், போக்குவரத்து வசதிகள், கழிவறைகள், விளையாடும் இடங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை அமைக்க வேண்டும் என்கிறது இத்தீர்மானம்.

Human Rights Council Resolution

Strengthening efforts to prevent and eliminate child, early and forced marriage

(HRC/RES/29/8: Resolution adopted by the Human Rights Council on 2 July 2015)

Urges States to prevent and eliminate child, early and forced marriage by improving safety of girls at, and on the way to and from school, including by establishing a safe and violence-free environment by improving infrastructure, such as transportation, and providing separate and adequate sanitation facilities, improved lighting, playgrounds and safe environments, and adopting policies to prohibit, prevent and address violence against children, especially girls, including sexual harassment and bullying and other forms of violence, through measures such as conducting violence prevention activities in schools and communities and establishing and enforcing penalties for violence against girls.

தீர்வு என்ன?

ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் என்பது ஒரு பன்னாட்டு சட்டம். இதே கொள்கையை, இந்திய அரசும் தமிழக அரசும் பின்பற்ற வேண்டும். சாதி ஒழிப்புக்காக காதலித்து திருமணம் செய்யுங்கள் என்று சிறுவர்களை தூண்டிவிட்டு சமூகத்தை கெடுக்கும் அக்கிரமத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பள்ளிக் கல்லூரி செல்லும் பெண் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

வியாழன், மார்ச் 17, 2016

பெண்களுக்கு எச்சரிக்கை: தினமலரின் நாடகக் காதல் கட்டுரை

அவசரம் வேண்டாம் பெண்களே!
சமீபத்தில், காவல் துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, தமிழ்நாட்டில் நடக்கும், 'விவகாரக் கொலை'கள் பற்றிக் கூறினார்.

அதில் ஒன்று இதோ: இரண்டே அறைகள். ஒன்று ஹால்; மற்றொன்று சமையலறை. அந்த இரண்டும் கூட, குண்டும், குழியுமாக. அதைச் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம் அல்லவா! அந்தப் பழக்கத்தை ஏனோ கைகொள்ள வரவில்லை. ஹாலின் ஒரு மூலையில், 'டிரங்க்' பெட்டி, அதன் மேலே, இன்னது தான் என்று சொல்ல முடியாத வகையில், ஒரு மூட்டை. அதன் மீது, சாற்றி வைக்கப்பட்ட பாய்; இந்த கும்பலினுாடே, உறை அற்ற, தலையழுக்கு ஏற, இனியும் இடமில்லை என்ற வகையில், முழு நாற்றத்துடன் தலையணைகள், நான்கைந்து!

'இப்படியே எத்தனை காலம் வாழ்வது? நமக்கு மட்டும், இப்படி தான் வாழ வேண்டும் என விதிக்கப்பட்டிருக்கிறதா? அப்பா கூலி வேலைக்குப் போயி மாரடிக்கிறாரு; அம்மா கல்லுடைக்கிறாங்க; இதிலிருந்து இவங்க மாறணும்... இல்லேன்னா, நான் மாத்தணும்... ஏய்... எனக்கு யாராச்சும் ஐடியா சொல்லுங்கடா...'

- இப்படியான பேச்சுடன் படியிறங்கும் மகன், 'தலைவரிடம்' அழைத்துச் செல்லப்படுகிறான்; அவர், அவன் காதில் கிசுகிசுக்கிறார்.

தினமும் ஒரு கூலிங் கிளாஸ்; நவீன வடிவமைப்பில் ஷர்ட்; ஜீன்ஸ் பேன்ட்; பஜார் கடையில் வாங்கிய, மனதை மயக்கும் சென்ட். அனைத்தும் வாரத்திற்கு ஒரு, 'ரவுண்டு' வரும். இதையெல்லாம் தாண்டி, தனியார் வங்கியில் தவணை முறையில் வாங்கிய, 'பவர் பிரேக்' உள்ள ஒரு, 'பைக்!' இந்த இத்யாதிகளுடன், 'குறிப்பெடுக்கப்பட்ட' பெண்ணின் கல்லுாரி வாசலுக்குச் செல்கிறான்; தவம் கிடக்கிறான்.

'மற்றவர்களை விட வித்தியாசமாய் இருக்கிறாய் நீ; உன் உடையிலேயே உன் அடக்கம் தெரிகிறது; ஏன் முகம் வாட்டமாய் இருக்கு? பசிக்கிறதா... வா ஓட்டலுக்குப் போவோம்...'

- மெத்தையில் படுத்துறங்கி, வேளைக்கு ஒரு ஆள் வேலை செய்ய என வசதியாய் வாழ்ந்தாலும், தன் சின்ன சின்ன சோகங்களையும், உடல் உபாதைகளையும் பகிர்ந்தபடி தோள் சாய, தாயோ, தந்தையோ முன் வராத நிலையில், மந்திரம் ஓதுவது போல், தினமும் இப்படி ஒரு, 'சரக்கை' இவளிடம் அவிழ்த்து விட்டால், மயங்காமல் இருப்பாளா; அதுவும் மேற்படி, 'விஷுவல் குவாலிபிகேஷன்'களோடு திரியும் ஆணிடம்! மயங்குகிறாள்; 'எல்லாம்' முடிகிறது.

'கல்யாணம் கட்டிக்கலாமா?' - இவன்.
'காத்திருக்கிறேன்! ஆனால் பேரன்ட்ஸ்...' - இழுக்கிறாள் இவள்.
'கட்டிய துணியோடு கிளம்பி வா...' - தைரியம் கொடுக்கக் கொடுக்க, இவனை நம்பி, தாய் - தந்தைக்கு கம்பி.மணக்கோலத்தில் நுழைகிறாள், இரண்டறை கொண்ட வீட்டில்! சுற்றி முற்றி பார்க்கிறாள்; தலை சுற்றுகிறது. ஊண் உறக்கம் எல்லாமே, அந்த ஹாலில் தான் என்பதற்கு சாட்சியாய், அவளின் இள வயது மைத்துனர், ஒரு ஓரத்தில் படுத்துக் கிடக்கிறான்.

சோறு சாப்பிட அமர்கிறாள்; ரேஷன் அரிசி. நேற்று வைத்த கருவாட்டுக் குழம்பு நெஞ்சை இழுத்தாலும், அதைத் தாண்டி ஏதோ பிசைகிறது மனதை... அம்மா வைக்கும் மீன் குழம்பும், நெத்திலி வறுவலும் நினைவிற்கு வந்து செல்கின்றன! கண் கிறுகிறுக்க, அரை வயிற்றுணவுடன் அன்றைய பொழுதைக் கழிக்கிறாள். 'எங்கேங்க துாங்குறது?' எனக் கேட்ட இவளுக்கு, மற்றொரு மூலையில் பாய் விரிகிறது; தலையணையும் விழுகிறது!

அதில் தலை சாய்க்க மனமில்லாமல், கையை முட்டுக் கொடுத்து, கண் மூடுகிறாள்...
இப்போது தான் உணர்கிறாள் அம்மா வீட்டின் சொர்க்க வாழ்க்கையை... இனி வாய் பேச முடியாது. பல குடித்தனங்களுக்கும் பொதுவாக ஒரு குளியலறை; கழிப்பறையும் அப்படியே! கண்களில் நீர் முட்டுகிறது; வாய் பேச முடியவில்லை! இரண்டு நாள், மூன்று நாள் செல்ல, வீட்டு வாயிலில் ஆரவாரம். 'வெளியில் செல்லாதே...' என, புகுந்த வீட்டினரும், கணவரும் எச்சரிக்கின்றனர். எட்டிப் பார்த்தால், ஏழெட்டு ஆட்கள், வெட்டுக் கத்தியுடன்; அரவமற்று, தலையை உள்ளிழுத்துக் கொள்கிறாள். 'ஏய்... வௌில வராம போயிருவீங்களா ரெண்டு பேரும்...' என எச்சரித்துச் செல்கின்றனர்.

'வீட்டைச் சுத்தம் செய்ய, துடைப்பம் இல்லை, துணி சோப்பு இல்லை, பாத்ரூமுல இருக்கும், கொழ கொழ பக்கெட்டை துாக்கிப் போட்டுட்டு வேற ஒண்ணு வாங்கணும்... என்னங்க, நைட்டு கடைக்கு போவம்... பகல்ல தானே மிரட்டுறாங்க...' என்கிறாள்.கணவன், 'ஓகே' சொல்ல, படியிறங்குகிறாள். ஐந்து நிமிடம், ஐந்தே நிமிடம்... அப்பகுதியைத் தாண்டுவதற்குள், கணவனின் தலை தனியே, உடல் தனியே விழுகின்றன. தமிழகமே அரண்டு போகிறது. 'ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் செஞ்சா இப்படி தான்; கவுரவக் கொலை; கொலை செய்யிறவங்களை போலீசும் கண்டுக்கறதில்லே...' - அரற்றுகின்றனர் மக்கள்.

மற்றொன்று சம்பவம் இதோ:

கிட்டத்தட்ட இதே போல் திருமணம். இது முடிவதற்கு முன்பே, 'மற்ற எல்லாம்' முடிந்து போவதால், புகுந்த வீடு வந்த சில நாட்களிலேயே, மசக்கை. 'அம்மாடி... நிறைய செலவாகும் போலிருக்குமா... நீ என்ன செய்யிறே... விஷயத்தை உங்கப்பாகிட்டே பக்குவமா சொல்லி, கொஞ்சம் பணம் கேட்டு வாங்கிட்டு வா...'கணவனின், 'அன்பான' உத்தரவுக்கு அடிபணிகிறாள் அவள். அப்பாவைத் தேடிச் செல்கிறாள். சமயம் பார்க்கும் அப்பா, 'ரெண்டு கோடி கொடுக்குறேன்... என் மகளை விட்டுடு...' என, பேரம் பேசுகிறார்; பணம் கை மாறுகிறது; மகளுக்கு வீட்டு சிறை.தப்பிக்கும் மகள், கணவனைத் தேடி ஓடி வருகிறாள். 'மீனு மறுபடி, தானா மாட்டுது பா நம்மகிட்டே...' என்றெண்ணி, மனைவியிடம் மீண்டும் துாண்டில் போடுகிறான் கணவன். மீண்டும் பணப் பரிமாற்றம் நடக்கிறது. இம்முறை ஐந்து கோடி. அவ்ளோ தான்... விடு ஜூட் வேறு கண்டத்துக்கு!குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றிய மிதப்பில், பெண்ணின் தந்தை!

இறுதியில் அந்தப் பெண்கள், தன் சுயத்தை இழந்து, சுய கவுரவத்தை இழந்து, இரண்டாம் தாரமாய், யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் நிலை ஏற்படுகிறது.இப்படி ஏராளமான கோணங்களில், சம்பவங்கள் நடக்கின்றன.

- இப்படி சொல்கிறார், அந்த காவல் துறை அதிகாரி.

ஜாதிகளைப் பழி வாங்க, 'ஏற்பாடு' செய்யப்படும் திருமணங்களா, குறுக்கு வழியில் பணக்காரன் ஆக ஆசைப்பட்டு செய்யப்படும் திருமணங்களா என்பது பற்றி எல்லாம் இங்கே விவாதம் செய்ய விருப்பமில்லை. 'ஏட்டுப் படிப்பில் எட்டுக் கணக்குப் போடும் சாதுர்யத்தை மட்டும் வளர்த்துக் கொள்கின்றனரே; எதிர்காலத்தை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள, சற்றே முன்னோக்கிப் பார்த்து, சுற்றி இருக்கும் ஆபத்தை உணர்வதில்லையே...' என, மனம் வேதனை கொள்கிறது!

அவசரப்படாதீர்கள் பெண்களே!

தொடர்புக்கு: chennaicity@dinamalar.in

தினமலர் 16.03.2016

http://www.dinamalar.com/news_detail.asp?id=1479325

தினமலர் கட்டுரையில் நாம் முரண்படும் கருத்துகள்:

ஏழை பையன் - பணக்கார பெண் என்பதாக, பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலையை குற்றம் சாட்டுவது போல, இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் ஏற்கக் கூடியவை அல்ல. 

குறிப்பிட்ட சாதி, மதம் அல்லது குறிப்பிட்ட பொருளாதார நிலையில் உள்ள பெண்களை வீழ்த்த வேண்டும், பணம் பறிக்க வேண்டும் என்பதான நோக்கங்களே தவறானவை. மேலும், திருமணத்துக்கு முன்பாக கல்வியை முடிப்பதும், பொருளாதார தற்சார்பை ஏற்படுத்திக்கொள்வதும் மிக அடிப்படையான தேவைகள் ஆகும்.

கல்வி, வேலையுடன் தற்சார்பான நிலையில், விபரம் அறிந்த வயதில் நடக்கும் காதல் திருமணங்கள் எதற்காகவும் தடுக்கப்படவோ, கண்டிக்கப்படவோ கூடாது. இத்தகைய நியாயமான திருமணங்களை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் எதிர்ப்பதை அனுமதிக்கக் கூடாது.

செவ்வாய், மார்ச் 15, 2016

ஊடகம், அரசியலில் சாதி வெறியர்கள்: தமிழ்நாட்டின் சாபக்கேடு!

சாதிக் கலவரங்கள், சாதி வன்முறைகள் தமிழ்நாட்டில் எந்த மூலையில், எதற்காக நடந்தாலும் - அது குறித்த அவதூறுகள் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் மீது மட்டுமே வீசப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி மீதும், மருத்துவர் அய்யா அவர்கள் மீதும் பழி சுமத்துவோர் அத்தனை பேரின் மனதிலும் இருப்பது - அவர்களின் சாதிவெறி மட்டுமே! இதில் மருத்துவர் அய்யா அவர்களைப் பின்பற்றும் நண்பர்கள் யாருக்கும் ஒரு துளிக்கூட சந்தேகம் வேண்டாம்.
பத்திரிகையாளர்களாக, ஊடகவியலாளர்களாக, நடுநிலை வேடதாரிகளாக, முற்போக்கு கும்பலாக நாடகம் போடும் அத்தனைப் பேரின் மனதிலும் சாதிவெறி மட்டுமே கோலோச்சுகிறது. அதனால்தான் அவர்கள் மருத்துவர் அய்யா அவர்கள் மீது, வெறிகொண்ட நாய் போல பாய்ந்து விழுகின்றனர்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் சமூகநீதிச் சாதனை மகத்தானது. அந்த சமூகநீதிச் சாதனை மீதுள்ள கோபத்தால்தான் இவர்கள் புழுதிவாரித் தூற்றுகிறார்கள்!

தமிழ்நாட்டின் சாதி அரசியல் பின்னணி

ஆங்கிலேய ஆட்சியிலும் அதற்கு பின்னால் வந்த திராவிட இயக்க ஆட்சியிலும் மிகச்சில உயர் சாதியினரே அதிகாரத்தின் எல்லா இடத்திலும் கோலோச்சினர். ஆட்சி அதிகாரம், பணம், நிருவாகம் என அனைத்திலும் இந்த மிகச்சில சாதிகளே நாட்டின் வளங்களை கைப்பற்றினர். இன்றுவரை இவர்களின் கைதான் எல்லாவற்றிலும் மேலோங்கி இருக்கிறது.

இன்னொரு பக்கம் அண்ணல் அம்பேத்கரின் முயற்சியால், இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (SC) அவர்களுக்கான விகிதாச்சார பங்கினைப் பெற்றனர். கடந்த 69 ஆண்டுகளில் இவர்கள் கணிசமாக எல்லா இடங்களிலும் இடம்பிடித்துள்ளனர் (அது நியாயமானதும் கூட). இவ்வாறு, அதிகார மட்டத்திலும் ஊடகங்களிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உரிய இடத்தை அடைந்துள்ளனர்.

ஆனால், இப்படி விகிதாச்சார அளவில் உரிய இடத்தை அடையாதவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC). அதிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC). அதிகார மட்டத்திலும் ஊடகங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களின் பங்களிப்பு மிகக் குறைவு. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சுத்தமாக இல்லை.

இவ்வாறு, அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், முற்போக்கு மற்றும் நடுநிலை வேடம் போடுகிறவர்கள் யார் என்று பார்த்தால் - அதில் முன்னேறிய சாதியினரே மிக அதிகமாக உள்ளனர். தாழ்த்தப்பட்டோரும் கணிசமாக இடம் பிடித்துள்ளனர். 

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக முன்னேறிய சாதியினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் ஒன்றிணைந்து செயல்படுவதுதான் தமிழ்நாட்டின் உண்மையாக அரசியல் சூழல் ஆகும்.

பொதுக் கருத்தை வடிவமைக்கும் ஊடகங்களில் பிற்படுத்தப்பட்டோர் அதிகம் இல்ல. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சுத்தமாக இல்லை. இந்தப் பின்னணியில்தான் மருத்துவர் அய்யா அவர்களுக்கு எதிராக ஊடகங்கள் மேற்கொள்ளும் பிரச்சாரத்தை பார்க்க வேண்டும்.

மருத்துவர் அய்யாவின் சாதனை: ஆதிக்க கும்பலின் வயிற்றெரிச்சல்!

தமிழ்நாட்டில் உண்மையாக இடஒதுக்கீடு தேவைப்படும் பிரிவாக இருப்பவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் (MBC). தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு 1927 ஆம் ஆண்டில் வந்தது. பின்னர் 1947 ஆம் ஆண்டில் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த இரண்டிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இல்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குதான் உண்மையாக இடஒதுக்கீடு தேவை என 1970 ஆம் ஆண்டில் சட்டநாதன் குழுவும், 1985 ஆம் ஆண்டில் அம்பாசங்கர் குழுவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனை கருணாநிதியும் எம்ஜிஆரும் ஏற்கவில்லை.

இந்நிலையில், மருத்துவர் அய்யா அவர்கள்தான் மாபெரும் தியாகம் செய்து 1989 ஆம் ஆண்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் MBC இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார்.
அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு (OBC) 1993 ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், கல்வி இடங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க. இதனை கோரிக்கையாக வைத்து அரசாங்கத்தின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் (CMP) புகுத்தியது. பின்னர் தொடர் போராட்டங்களை நடத்தி, 2008 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு OBC இடஒதுக்கீட்டை சாதித்தார் மருத்துவர் அய்யா. இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்துக்கு போனபோது, அங்கும் வாதாடி வெற்றி பெற்றது பா.ம.க.

இவ்வாறாக தமிழ்நாட்டில் MBC இடஒதுக்கீடு. இந்தியாவில் OBC இடஒதுக்கீடு என்பது மருத்துவர் அய்யா அவர்கள் செய்த மாபெரும் சாதனை ஆகும்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக முன்னேறிய சாதியினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் இருப்பதால், அவர்களால் மருத்துவர் அய்யா அவர்களின் சமூகநீதி சாதனையை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. மருத்துவர் அய்யா அவர்களுக்கு எதிராக ஊடகங்கள் மேற்கொள்ளும் நச்சுப் பிரச்சாரத்துக்கான உண்மைக் காரணம் இதுதான்.

ஊடகங்களின் சாதிவெறிப் பின்னணி

இந்தியாவின் ஊடகங்களில் 71% உயர் சாதியினரே ஆக்கிரமித்துள்ளனர். அதே நேரத்தில் இந்திய மக்கள் தொகையில் பாதியளவுக்கு மேலாக இருக்கும் OBC பிரிவினரின் பங்கு ஊடகங்களில் வெறும் 4% மட்டுமே. (Upper castes dominate media: Survey)

தமிழ்நாட்டின் நிலை இதை விட மேலானது அல்ல. இங்கும் ஊடகங்களின் உயர் பதவிகள் அனைத்திலும் உயர்சாதியினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். கணிசமான அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் ஊடகங்களில் இடம்பிடித்துள்ளனர்.  MBC பிரிவினர் தமிழக ஊடகங்களில் சுத்தமாக இல்லை.
பல பிரிவினராக மக்கள் வசிக்கும் மேலை நாடுகளில், ஒவ்வொரு பிரிவினரும் ஊடகங்களில் எத்தனை சதவீதம் இடம்பெற்றுள்ளனர் என்பதை அவ்வப்போது அறிவிப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ஒரே ஒரு முறைக்கூட - ஊடகங்களில் BC, MBC, SC, ST பிரிவினரின் விகிதாச்சார பங்களிப்பு எவ்வளவு என்று ஊடகங்கள் தகவலை வெளியிட்டதே இல்லை. (அப்படி வெளியிட்டால், இவர்களின் செய்தியின் பின்னணி அம்பலமாகிப்போகும்)

கட்சிகளின் சாதிவெறிப் பின்னணி

இந்தியக் கட்சிகள் அனைத்தும் மேல்சாதி ஆதிக்கத்தில் உள்ள கட்சிகள்தான். பாஜகவில் 100% , காங்கிரசுக் கட்சியில் 68%, சிபிஎம் கட்சியில் 81%, சிபிஐ கட்சியில் 78% - உயர் சாதியினரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். (இருப்பதிலேயே மிக மோசமான சாதிவெறிக்கட்சி சி.பி.எம். அதன் உயர்மட்ட நிருவாகக் குழுவான பொலிட்பீரோவில் ஒரே ஒரு தலித்தோ, பிற்படுத்தப்பட்டவரோ 52 ஆண்டுகளாக இல்லை) (Diversity deficit across apex bodies of parties)
தமிழ்நாட்டிலும் இதுதான் நிலை. கட்சிகளின் உயர்பதவிகள் அனைத்திலும் ஒருசில சாதியினரே ஆகிக்கம் செலுத்தும் நிலையே தமிழக கட்சிகளில் உள்ளது. இங்கும் கூட உயர்சாதியினரே பெரும்பாலான கட்சிகளை ஆக்கிரமித்துள்ளனர். நடுநிலை வேடதாரிகளாக, முற்போக்கு கும்பலாக நாடகம் போடுவோர் பெரும்பாலானோர் உயர் சாதியினரே!

சாதி வெறியர்களின் அவதூறுகளுக்கு காரணம் இதுதான்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக முன்னேறிய சாதியினரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் இருப்பதால், மருத்துவர் அய்யா அவர்களின் சமூகநீதி சாதனையை அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. 

அரசியல் அரங்கிலும், ஊடகங்களிலும் முன்னேறிய சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதாலும், தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் கணிசமாக அவற்றில் இடம் பிடித்துள்ளதாலும் - மருத்துவர் அய்யா அவர்கள் மீது இருதரப்பும் சேர்ந்து அவதூறு பரப்புகிறார்கள். ஊடகங்களிலும் அரசியல் அதிகாரத்திலும் BC, MBC பிரிவினர் மக்கள் தொகை விகிதாச்சார அளவில் பங்கெடுக்காத வரை, இதுபோன்ற அபாண்ட அவதூறு பிரச்சாரங்கள் கிளம்புவது இயல்புதான்.

எனவே, மருத்துவர் அய்யா அவர்களின் தொண்டர்கள் யாரும் - சாதி வெறியர்களின் அவதூறுகளைக் கண்டு கலக்கம் அடைய வேண்டாம். நாம் நீதியின் பக்கம் நிற்கிறோம். நம்மிடமே நியாயம் இருக்கிறது. ஆனால், நீதியை நிலை நாட்ட அதிகாரம் வேண்டும். அதற்காக பாடுபடுவோம்.

குறிப்பு: சராசரி உயர்சாதி மக்களோ அல்லது தாழ்த்தப்பட்ட மக்களோ, சக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான மன நிலையில் இல்லை. மாறாக, ஊடகம் மற்றும் அரசியல் அரங்கில் உள்ள கும்பல் மட்டுமே சாதிவெறியுடன் அலைகிறது!

பிணம் கிடைத்தால் பெரும் மகிழ்ச்சி: வைகோ + கம்யூனிஸ்ட் கும்பலின் கொடூர புத்தி!

உடுமலைப் பேட்டையில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இதனை திமுக - அதிமுக தவிர முழு தமிழ்நாடும் கண்டிக்கிறது. இதனை வன்மையாகக் கண்டித்து பேட்டியளித்தார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்:

ஆனால், இதே கொலையை தமக்கு கிடைத்த அற்புதமான அரசியல் வாய்ப்பாக நினைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது, வைகோ மற்றும் கம்யூனிஸ்ட் கும்பல் அடங்கிய மக்கள் விரோதக் கூட்டணி. எங்கே பிணம் கிடைக்கும் என பிணவெறி பிடித்து அலைகிறது இந்த ம.ந.கூ கும்பல். இதுகுறித்த காணொலிகளை கீழே காண்க:

கொலையை உண்மையாக கண்டிக்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்


கொலையை சிரிப்புடன் கொண்டாடும் வைகோ + கம்யூனிஸ்ட் கும்பல்
இந்த இணைப்பை சொடுக்குக.

திங்கள், மார்ச் 14, 2016

கலப்புத் திருமணத்தின் மூலம் அடையாள அழிப்பு: ஒரு கொடூரச் சதி!

பொதுவாக மனிதர்கள் தமது அடையாளத்துக்கு உள்ளேயே திருமணம் செய்துகொள்கின்றனர். ஒரே மதம், ஒரே இனம், ஒரே மொழி, ஒரே சாதி, ஒரே வாழிடம் - என்கிற அடிப்படையில் திருமணம் செய்துகொள்வது தான் மிக அதிகமாக நிகழ்கிறது. 

பன்னாட்டு மனித உரிமைச் சட்டம் 'யாரும் யாரையும் திருமணம் செய்யலாம். அதற்கு மணமக்களின் பரஸ்பர சம்மதம் போதுமானது' (Right to Marriage and Family) என்று கூறினாலும் - மிக முன்னேறிய நாடுகளில் கூட, பெரும்பாலான திருமணங்கள் மத, இன அடையாளங்களைத் தாண்டி நடப்பது இல்லை.
உலகின் மிக புரட்சிகரமான நாடான அமெரிக்காவில், 2008 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, 60% மக்கள் தமது அடையாளத்துக்கு வெளியே  கலப்புத் திருமணத்தை ஏற்பதாகக் கூறியுள்ளனர். ஆனால், உண்மையில் வெறும் 8% அமெரிக்கர்கள் மட்டுமே கலப்புத் திருமணம் செய்திருந்தனர் (கலப்புத் திருமணம் என தமது அடையாளத்துக்கு வெளியே நடக்கும் திருமணங்களை குறிப்பிடுகிறார்கள்).

தமது அடையாளத்துக்கு வெளியே திருமணம் செய்யும் உரிமை இன்றைய நாகரீக உலகின் ஏற்கப்பட்ட விதி. இந்த விதியை மறுப்பது மனித உரிமைக்கு எதிரானது. எந்த ஒரு நபரும் தாமாக மனம் விரும்பி, தனது அடையாளத்துக்கு வெளியே, வேறொரு அடையாளத்தைச் சேர்ந்த வாழ்க்கைத் துணையை அவரது சம்மதத்தின் பேரில் திருமணம் செய்யலாம்.

ஆனால், தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக அல்லாமல், வேறு ஏதேனும் வெளித் தூண்டுதல் காரணமாக வாழ்க்கைத் துணையை வலுக்கட்டாயமாக ஏற்பது மனித உரிமைகளுக்கு எதிரானது ஆகும். குறிப்பாக, அரசோ அல்லது இயக்கங்களோ, அடையாளத்துக்கு வெளியே திருமணம் செய்யுமாறு ஊக்கப்படுத்துவது மனித உரிமைகளுக்கு எதிரானது. இவ்வாறு திட்டமிட்டு கலப்புத் திருமணம் செய்வது அப்பட்டமான இனவெறிக் கொள்கை ஆகும்.

கலப்புத் திருமணக் கொலைகள்

இனம் மாறி திருமணம் செய்வதற்கு எதிரான கொடூரமான இயக்கமாக ஹிட்லரின் நாஜி ஜெர்மனி இருந்தது. அங்கு 1941 ஆம் ஆண்டு வாக்கில்  ஆரியர் - ஆரியரல்லாத இனத்துக்கு இடையே திருமணம் செய்தவர்கள் - கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டனர். தாய், தந்தை, குழந்தைகள் என எல்லோரையும் கொன்றொழித்தனர். ஆரிய இனத் தூய்மையைக் காப்பதற்காக இந்தப் படுகொலை நடத்தப்பட்டது.

இன்றைய உலகில், இந்தியாவின் பல மாநிலங்களிலும், மதத்தீவிரவாத நாடுகளிலும் கலப்புத் திருமணம் செய்வோரைக் கொலை செய்யும் கொடூரம் கணிசமாக இருந்து வருகிறது.

கலப்புத் திருமணத்தை எதிர்க்காத நாடாக இருந்தது யுகோசுலோவியா. ஆனால், 1992 - 95 இனப்படுகொலைக்கு பின்னர், அந்த நாடு பல துண்டுகளாக உடைந்து. இப்போது அந்த நாடுகளில் வாழும் செர்பியர்கள், முஸ்லிம்கள், குரோசியர்கள் இடையே கலப்புத் திருமணம் விரும்பத்தகாகததாக மாறிவிட்டது. கலப்புத் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் இப்போது ஒதுக்கப்படும் நிலையில் உள்ளனர் (Bosnia War Legacy Reduces Number of Mixed Marriages)  

இன அழிப்பு கலப்புத் திருமணங்கள்

இனத்தூய்மைக்காக கலப்புத் திருமணம் செய்தோரைக் கொல்வது அல்லது ஒதுக்குவது எப்படி ஒரு இனவெறிக் கொள்கையோ, அதே போன்று 'அடையாளத்தை அழிப்பதற்காக திட்டமிட்டு திருமணம் செய்வதும்' மற்றொரு இனவெறிக் கொள்கை ஆகும். இந்தப் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது.

ஜப்பான் நாட்டின் இன அழிப்பு கலப்புத் திருமணம்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தைவான் நாட்டினை ஆக்கிரமித்த ஜப்பானிய அரசாங்கம், ஜப்பானிய இராணுவத்தினர் தைவான் பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தியது. இதற்காக, ஜப்பானியர்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என உற்சாகப்படுத்தியது (Intercultural Marriage in Colonial Taiwan) 

கம்யூனிச சீனாவின் இன அழிப்பு கலப்புத் திருமணம்

தனிப்பட்ட தேசிய இனங்களை அழிக்கும் நோக்கில் கலப்புத் திருமணங்களை நடத்துகிறது கம்யூனிச சீன அரசாங்கம். ஹான் சீன இன மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடு சீனா. இதன் ஒற்றைக் கலாச்சார தேச முயற்சிக்கு தடையாக இருப்பது திபெத் பகுதியும், உய்குர் முஸ்லிம்களின் ஹுய்ஜியாங் பகுதியும் ஆகும். அடக்குமுறை சட்டங்கள், மரண தண்டனைகள் மூலம் திபெத்தியர்களையும் முஸ்லிம்களையும் அடக்க முடியாத கம்யூனிச சீன அரசு, இப்போது திருமணம் எனும் ஆயுதத்தை எடுத்துள்ளது. 

முஸ்லிம்களை மணமுடிக்கும் சீனர்களுக்கு வீடு, மருத்துவ வசதி, கல்வி ஊக்கத்தொகை தருவதுடன், முதல் ஐந்தாண்டுகளுக்கு ஆண்டுதோரும் பத்தாயிரம் யுவான் (ஒரு லட்சம் ரூபாய்) தருவதாக அறிவித்துள்ளது சீன அரசு. இது உய்குர் இனத்தை அழிக்கும் முயற்சி என முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். (Chinese authorities offer cash to promote interethnic marriages) 
அதுமட்டுமல்லாமல், 16 வயது முதல் 25 வயது வரையுள்ள இரண்டரை லட்சம் முஸ்லிம் பெண்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து பிரித்து, ஹான் இன மக்கள் வாழும் பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாக வேலைக்கு அனுப்பியுள்ளது கம்யூனிச சீன அரசாங்கம் (China's other ethnic cleansing) 

இதே போன்று திபெத்திய பகுதிகளில், திபெதியர்களை ஹான் சீன இனத்தினர் திருமணம் முடிக்க ஊக்கப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறு கலப்புத் திருமணம் செய்தவர்களை வைத்து விளம்பரம் செய்து வருகின்றனர். இது திபெத்திய தேசிய இனத்தை அழிக்க நடக்கும் சதி என திபெத் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். (China promotes mixed marriages in Tibet as way to achieve ‘unity’) 

சிங்களர் - தமிழர்: இனக்கலப்பு சதி

இலங்கையில் வடமாகாணத்தின் புதிய ஆளுனராக அண்மையில் பொறுப்பேற்ற ரெஜினோல்ட் குரே, "சாதி, சமயம், இனம் என்ற தனித்துவம் பாராமல், கலப்பு வாழ்க்கை மூலமாக நாட்டில் உண்மையான சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியும். கலவை என்பது சிறந்த பலன்களை அளிக்கவல்லது என்பது எனது கருத்தாகும்' என்றார். ('கலப்புத் திருமணம் மூலம் சமாதானம் மலரும்': வடக்கின் புதிய ஆளுநர்) 

இதற்கு பதில் அளித்த வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் "வடகிழக்கு தமிழ் மக்களுக்கு கிடைக்காமல் இருக்கின்ற கிடைக்கவேண்டிய அவர்களுடைய உரிமைகளை வழங்குங்கள் அதற்குப் பின்னர் நாங்கள் கலப்பு திருமணங்களைக் குறித்து பேசிக் கொள்ளலாம்" - என்று பதில் அளித்தார்.

உண்மையில் சிங்கள இராணுவத்தினர் தமிழ்ப் பெண்களை மனமுடிப்பதை ஏற்கனவே ஊக்கப்படுத்தி வருகிறது சிங்கள இராணுவம். இவ்வாறு சிங்களர்கள் தமிழ்ப் பெண்களை திருமணம் செய்வது நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் என்று பிரச்சாரமும் செய்கிறது இலங்கை அரசு. (Northern Tamil girl weds Sinhala soldier)
This marriage signifies the reconciliation that is taking place between the two communities - Sri Lanka Army

தமிழர் - சிங்களர் இனக்கலப்பு சதி குறித்து அச்சம் தெரிவித்துள்ள தமிழர்கள் "இனக் கலப்பு இனவாக்கத்தில் காலப்போக்கில் அரசு அல்லது அரசாங்கத்தின் ஊக்குவிப்புக்குகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிலவுமாயின் அது திட்டமிட்ட இன மாற்றமாக அமைந்து விடும் என்பதே பிரச்சினை. காலப்போக்கில் இவ் விடயம் சனத்தொகை அடிப்படையில் குறைவாக உள்ள தமிழ்த் தேசியத்தினை சனத்தொகை அடிப்படையில் பெரும்பான்மையாகவுள்ள சிங்கள தேசியம் உள்வாங்கும் அபாய பொறிமுறையாக மாறிவிடும்" என்று கூறியுள்ளனர். (இனக்கலப்பு நல்லிணக்கத்திற்கானதா?) 

கலப்புத் திருமணமும் மனித உரிமையும்

யாரும் யாரையும் திருமணம் செய்ய உரிமை உண்டு. ஆனால், அந்த உரிமை தனியாக இல்லை. பெண்களின் கல்வி உரிமை, பெண்களின் பொருளாதார சுதந்திரம், பெண்களின் ஆரோக்கியமான நலவாழ்வுக்கான உரிமை ஆகியவற்றுடன் இணைத்துதான் திருமணம் அல்லது காதலுக்கான உரிமையையும் பார்க்க வேண்டும். இதுதான் ஐநா மனித உரிமைப் பிரகடனங்களின் அடிப்படை ஆகும்.


ஐநா மனித உரிமைப் பிரகடனம் (1948 Universal Declaration of Human rights) சுயமான திருமணத்தை உறுதி செய்கிறது. ஆனால், இதனை தனித்து பார்க்கக் கூடாது. கூடவே, ஐநா குழந்தைகள் பிரகடனத்தில் (1989 Convention on the Rights of the Child - CRC) கூறப்பட்டுள்ள குழந்தைகள் உரிமை, ஐநா பெண்கள் உடன்படிக்கையில் (1979 Convention on the Elimination of All Forms of Discrimination against Women - CEDAW) கூறப்பட்டுள்ள பெண்களின் உரிமைகள் ஆகியவற்றுடன் இணைத்துதான் பார்க்க வேண்டும்.

சுயமாக முடிவெடுக்கு நிலையில் இல்லாத, அல்லது, தனது சொந்தக் காலில் நிற்கும் அளவிற்கு கல்வியோ, வேலையோ இல்லாத நிலையில் இருக்கும் இளம் வயதினரின் 'திருமண உரிமையை மட்டும்' தனியாக எடுத்துக் கொண்டு வியாக்கியானம் பேசுவது மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு எதிரானது.

என்ன செய்ய வேண்டும்?

சுயமாகவும், தற்சார்பாகவும், உரிய வயதுடையவர்களாகவும் இருக்கும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள அவர்களுக்கு முழு உரிமை உண்டு. சாதி, மதம், இனம், இருப்பிடம், நாடு போன்ற எதுவும் இந்த உரிமைக்கு தடையாக இருக்கக் கூடாது. அத்தகைய தடைகளை அரசாங்கம் அனுமதிக்கவும் கூடாது.

கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எதிரான எல்லாவிதமான வன்முறைகளும், அடக்குமுறைகளும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். தடுக்கப்பட வேண்டும். (இப்போது உடுமலைப் பேட்டையில் ஒரு கொடூரக் கொலையை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.)

அதே போன்று, கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் வகையிலான பிரச்சரங்களும் தடுக்கப்பட வேண்டும். அரசாங்கமோ, தனி நபர்களோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ - கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கக் கூடாது. 

இந்தியாவில் திருமணம் என்பது இரண்டு தனி நபர்கள் மற்றும் இரண்டு குடும்பங்களின் உறவாக பார்க்கப்படுகிறது. இதில் வெளியாரின் தலையீடு முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.

காதல் திருமணங்களால் சாதி ஒழியுமா?

காதல் திருமணங்களை நாம் ஆதரிக்கிறோம். ஆனால், கட்டாயக் காதல் என்பது ஏற்புடையது அல்ல. திருமண வயதை அடைந்த ஆண் - பெண் திருமணம் செய்துகொள்வது ஒரு அடிப்படை மனித உரிமை. இதற்கு மதமோ, இனமோ, சாதியோ, தேசமோ எதுவும் தடையாக இருக்கக் கூடாது. அதே நேரத்தில், திருமணத்திற்கு மணமக்களின் முழுமையான, அனைத்தும் அறிந்த நிலையிலான ஒப்புதல் (free and full consent) தேவை. எக்காரணத்திற்காகவும் திருமணம் நிர்பந்திக்கப்படக் கூடாது. 

Men and women of full age, without any limitation due to race, nationality or religion, have the right to marry and to found a family. Marriage shall be entered into only with the free and full consent of the intending spouses. The family is the natural and fundamental group unit of society and is entitled to protection by society and the State

- Article 16 - Universal Declaration of Human Rights

அதாவது, இரண்டு வெவ்வேறு பிரிவுகளை சேர்ந்த மணமக்களின் திருமணம் தடுக்கப்பட்டால் அது மனித உரிமைக்கு எதிரானது. அதே போன்று, இரண்டு வெவ்வேறு பிரிவினர் இடையே திருமணம் நடக்க வேண்டும் என்று தூண்டுவதும் மனித உரிமைக்கு எதிரானது. 
திருமணத்திற்கான முன் நிபந்தனைகள்

திருமணம் என்பது ஒரு குடும்பத்தை அமைப்பது (the right to marry and to found a family). எனவே, திருமணத்தால் ஏற்படக்கூடிய பொறுப்புகள், அதற்கான தகுதிகள், வருமானம் உள்ளிட்ட முன் தேவைகளை அறிந்துதான் திருமணம் நடக்க வேண்டும். குடும்பத்தை அமைக்கும் நிலையில் இல்லாத அறியாத வயது திருமணங்கள் ஏற்புடையவை அல்லை.

'எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்' என்கிற கேள்வி எழும் நிலையில், பெண்களுக்கு எதிரான ஒதுக்குதல்களை ஒழிப்பதற்கான ஐநா குழு (UN CEDAW Committee) அதற்கு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

"திருமணம் செய்துகொள்ளும் ஆணும் பெண்ணும் மிக முக்கியமான பொறுப்புகளை ஏற்கிறார்கள். எனவே, அவர்கள் முழுமையாக பக்குவம் அடையாத நிலையிலும், செயல்திறனை அடையாத நிலையிலும் திருமணங்கள் அனுமதிக்கப்படக் கூடாது.

பெண்கள் உரிய வயதை அடையாது திருமணம் செய்துகொள்ளும் போது குழந்தை பெற்றுக்கொள்ள நேருதல், உடல்நலம் பாதிக்கப்படுதல், கல்வியை தவற விடுதல் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களது பொருளாதார சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.

உரிய வயதை அடையாமல் நடக்கும் திருமணங்கள் பெண்களை மட்டும் பாதிப்பதில்லை. அதனால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுகிறது. பெண்களின் திறன் மேம்பாடு தடைபடுகிறது, பெண்களின் தற்சார்பு பாதிக்கப்படுகிறது, வேலை கிடைக்கும் வாய்ப்பு குறைகிறது. இவற்றால், குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன, சமுதாயமும் பாதிப்படைகிறது" - என்கிறது ஐக்கிய நாடுகள் அவை.

(When men and women marry, they assume important responsibilities. Consequently, marriage should not be permitted before they have attained full maturity and capacity to act. According to the World Health Organization, when minors, particularly girls, marry and have children, their health can be adversely affected and their education is impeded. As a result their economic autonomy is restricted.

This not only affects women personally but also limits the development of their skills and independence and reduces access to employment, thereby detrimentally affecting their families and communities.

- CEDAW General Recommendations 21 on marriage and family)

ஐநா பெண்கள் உரிமை உடன்படிக்கை The Convention on the Elimination of All Forms of Discrimination against Women (CEDAW) பிரிவு 16-ன் கீழ், திருமணத்திற்கு பெண்களின் முழுமையான, சுதந்திரமான, விபரமறிந்து இசைவு தெரிவித்தல் கட்டாயம் ஆகும். அதாவது, திருமணத்திற்கு பின்னாலான பொறுப்புகள் குறித்த முழுமையான புரிதலும், யாரை திருமணம் செய்கிறோம், அவரது குணநலன்கள், பின்னணிகள் குறித்து புரிந்துகொள்ளும் திறனும் அவசியம் ஆகும்.

எனவே, முழுமையான புரிதலுக்கு ஏற்ற வயதை அடையாத பெண்களின் காதலோ, திருமணமோ சமூகத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

முன்கூட்டி மற்றும் கட்டாயப்படுத்தி திருமணம் (early and forced marriage)

திருமணம் குறித்த புரிதல் இல்லாத நிலையில் பெண்களை மனம் மயக்கி திருமணத்திற்கு நிர்பந்திப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை முன்கூட்டியே மற்றும் கட்டாயப்படுத்தும் திருமணம் எனக் கூறுகின்றனர் பன்னாட்டு மனித உரிமை வல்லுநர்கள்.

In fact, the term ‘early marriage’ does not refer solely to age. It refers to an individual’s level of physical, emotional, sexual and psychosocial development that that would make a person unready to consent to marriage. Other factors that should be taken into consideration are the individual’s educational and other aspirations, and lack of information regarding the person’s life options. This is connected to the concept of forced marriage and the importance of free and full consent. 

‘early and forced marriage’ encompasses 'a situation in which a 23-year-old woman is physically or psychologically compelled into marriage', this situation embody “discriminatory and harmful acts and practices that are violent towards women.” 

Early and forced marriage impacts various human rights of young women and girls, including their sexual and reproductive rights, as well as their rights to health, equality and non-discrimination, education, live free from all forms of violence and participate in public and political life. 

(Women for Women’s Human Rights - WWHR) 

பெண் கல்வி, வேலை, உடல்நலம் - காதலை விட மேலானது

ஐநா குழந்தைகள் உடன்படிக்கை மற்றும் ஐநா பெண்கள் உடன்படிக்கை ஆகியவற்றின் படி, கல்வி மிக முக்கியமான உரிமை ஆகும். பதின்வயதில் திருமணம் நடந்தால், அதனால் பெண்களின் கல்வி வாய்ப்புகளும் திறன்மேம்பாடும் கடுமையாக பாதிப்படைகிறது

(Many studies have shown that early marriage is universally associated with low levels of schooling and thus in violation of girls’ right to education as guaranteed by the CRC and CEDAW. A lack of education further denies girls’ their right to personal development as guaranteed in the CRC, which is crucial for them to prepare for adulthood and effectively contribute to the future wellbeing of their families and society - UNICEF 2008)

அவ்வாறே, வேலையும் பெண்களின் உரிமையாகக் கருதப்படுகிறது. முழுமையாக கல்வியை முடித்தல், வேலையை அடையும் அளவிற்கான திறன் மேம்பாடு - ஆகியவற்றுக்கான வயதை அடையும் முன்பாக திருமணம் நடைபெற அனுமதிக்கக் கூடாது.

சிறு வயது திருமணங்களினால், பெண்களின் உடல் நலன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, 21 வயதுக்கு முன்பாக குழந்தை பெறுவது பெண்களையும் பாதிக்கிறது, பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கிறது.

எனவே, கல்வி, வேலை, உடல்நலம் ஆகியவை காதலை விட மேலானது என்பதை உணர்ந்து - திருமண வயதை 21 வயதாக நிருணயிப்பதே சரியானதாகும்.

காதல் - சாதியை ஒழிக்கும் என்பது பித்தலாட்டம்.

காதல் திருமணங்கள் அகமண முறையை ஒழிக்கும். இதனால், சாதி ஒழியும் என்று ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. இது முட்டாள்தனமான, ஆபத்தான பிரச்சாரம் ஆகும். ஏனெனில், காதல் திருமணங்களால் சாதி ஒழிவது இல்லை.

சாதி மறுப்புத் திருமணங்கள் என்பவை,  ஒடுக்கப்பட்ட சாதிகளில் பொருளாதார நிலையில் முன்னேறிய தனி நபர்களை திசை திருப்புவதற்காக - கம்யூனிச பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சாரம் என்கிறார் தலித் வாய்ஸ் பத்திரிகை ஆசிரியரும், மூத்த தலித் சிந்தனையாளருமான வி.டி. ராஜ்சேகர். 
ஒடுக்கப்பட்ட சாதி ஆண்கள் - அவர்களுக்கு மேலாக கருதப்படும் சாதி பெண்களை மணமுடிக்கும் வகையிலேயே இந்த பிரச்சாரம் இருப்பதையும், இதற்கு மாறாக, ஒடுக்கப்பட்ட சாதி பெண்கள் - அவர்களுக்கு மேலாக கருதப்படும் சாதி ஆண்களை மணமுடிக்கும் வகையில் இந்த பிரச்சாரம் இல்லாததையும் - வி.டி. ராஜ்சேகர் சுட்டிக்காட்டுகிறார். எனவே, சாதி கலப்புத் திருமணம் என்கிற பிரச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறார் அவர். (Caste - a nation with in the nation, VT Rajshekar, Editor, Dalit Voice)

காதல் திருமணங்களால் சாதி ஒழிவது இல்லை. இதற்கு மாறாக, இளம் வயது திருமணங்களை இந்தப் பிரச்சாரம் ஊக்குவிப்பதால் - பெண் கல்வி பாதிக்கப்படுதல், பொருளாதார தற்சார்பு பாதிக்கப்படுதல், இளம்வயது திருமணத்தால், உடல்நலம் கெடுதல் என ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் நிலையையே இந்த பிரச்சாரம் ஏற்படுத்துகிறது.

21 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்ய 'சாதி ஒழிப்பு காதல் பிரச்சாரம்' தூண்டுகிறது. இது பெண்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டை தடுக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

பதின்வயது எனப்படுகிற 20 வயதுக்கு கீழான காலம் மனித வாழ்வில் மிக முக்கியமான காலம் ஆகும். ஐநா குழந்தைகள் அமைப்பு யூனிசெப் இதனை 'வாய்ப்புகளின் காலம்' என அழைக்கிறது (Adolescence: An Age of Opportunity). இந்த வயதுதான் கல்வி, தொழில்திறமைகள் உள்ளிட்ட எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அடித்தளத்தை அமைக்கும் வயதாகும்.
காதல் திருமணங்கள் குறித்த குழப்பமான, திசை திருப்பும் பிரச்சாரங்கள் தடுக்கப்பட வேண்டும். கல்வி, வேலை, உடல்நலம் ஆகிய பெண்களின் உரிமைகளே முதன்மையானவை. இவற்றுக்கு பின்னரே திருமணம் முன்னிறுத்தப்பட வேண்டும்.

இந்த நிலையை அடைய ஆணுக்கு இணையாக பெண்களின் திருமண வயதையும் 21 வயது என மாற்ற வேண்டும். அல்லது, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ளது போன்று, 21 வயதுக்கு முன்பு திருமணம் செய்ய பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வேண்டும்.

ஐநா அவை 2015 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டுள்ள 2015 - 2030 நீடித்திருக்கும் வளர்ச்சிக்கான லட்சியங்களில் (UN Sustainable development goals) 'குறைந்த வயது திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும்' என்பதும் ஒன்றாகும். அந்த லட்சியம் தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட பதின்வயது திருமணங்கள் தடுக்கப்பட வேண்டும்.

பொழுதுபோக்கு, ஆடம்பரம், சாதி ஒழிப்பு போர்வையில் முன்வைக்கப்படும் - அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான, ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்கால நலனுக்கு தீங்கான, கட்டற்ற காதல் பிரச்சாரம் முறியடிக்கப்பட வேண்டும்.

புதன், மார்ச் 02, 2016

சமூகநீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் தினமணி: கோயபல்ஸ் தலையங்கத்துக்கு மறுப்பு!

தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு 1987 சமூகநீதிப் போராட்டம் ஆகும். பல உயிர்களை தியாகம் செய்து, பல ஆயிரம் குடும்பங்களில் விளக்கேற்றிய அந்த உன்னதமான போராட்டம் குறித்து கொச்சையாக தலையங்கம் தீட்டியுள்ளது தினமணி நாளிதழ். இந்த அக்கிரமம் சகித்துக்கொள்ளக் கூடியது அல்ல.

ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் அது உண்மையாக்கப்படும் என்பது ஹிட்லரின் தந்திர வியூகம் ஆகும். கடந்த நூற்றாண்டின் சோக நிகழ்வான யூத இனப்படுகொலையின் அடிப்படையே பொய்ப்பிரச்சாரம் தான். இதற்காக கோயபல்ஸ் எனும் தனி அமைச்சரையே நியமித்தார் ஹிட்லர். ஜெர்மனியில் ஹிட்லர் மேற்கொண்ட இனவெறி பிரச்சாரத்துக்கு இணையாக தமிழ்நாட்டிலும்  பொய்ப்பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை குறிவைத்து, குறிப்பாக மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை குறிவைத்து அந்த பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. அதில் ஒரு பங்குதான் கீழே உள்ள தினமணி தலையங்கம்:
தினமணியின் "உண்மை சுடுகிறது!" தலையங்கம் 2.3.2016:

"ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கம் இடஒதுக்கீட்டிற்காகப் போராடியபோது, சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டு, சென்னைக்கு வரும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தியது நினைவிருக்கும். சுமார் ஒரு வார காலத்திற்கு சென்னை மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. பால் இல்லை; உணவுப் பொருள்களுக்கும், காய்கறிகளுக்கும் தட்டுப்பாடு. வெளியூர் பயணிகள் சென்னையிலும், சென்னைவாசிகள் வெளியூரிலும் பயணிக்க வழியில்லாமல் தவித்தனர்... அன்றைய எம்.ஜி.ஆர். அரசும் சரி, போராட்டக்காரர்களின் மிரட்டலுக்குப் பணியாமல் மிகவும் சாதுர்யமாக அந்தப் போராட்டத்தைக் கையாண்டது" - என்று போராட்டத்தின் ஒரு பகுதியை மட்டும் தனது தேவைக்கேற்ப இட்டுக்கட்டியுள்ளார் தினமணி வைத்தியநாதன். தினமணி தலையங்கம்: http://goo.gl/KEIE4b

தினமணி வைத்தியநாதனின் கட்டுக்கதைகளுக்கு மறுப்பு:

1.  மருத்துவர் அய்யா நடத்திய போராட்டத்தின் நியாயத்தை தினமணி வைத்தியநாதன் மறைக்கலாமா?

சாலை மறியல் போராட்டத்தால் ஏற்பட்ட சில இடைஞ்சல்களை மட்டுமே குறிப்பிட்டுள்ள தினமணி வைத்தியநாதன், அந்த போராட்டம் ஏன் நடத்தப்பட்டது என்கிற காரணத்தை மறைத்துள்ளார்.

தமிழகத்தில் பிராமணரல்லாத இந்துக்களும், தாழ்த்தப்பட்டோரும், மதச்சிறுபான்மையினரும் 1927 ஆம் ஆண்டில் இடஒதுக்கீடு பெற்றார்கள். பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு 1947 ஆம் ஆண்டில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், உண்மையிலேயே பின்தங்கியிருந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 1989 ஆம் ஆண்டுவரை இடஒதுக்கீடு இல்லை.

உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சட்டநாதன் குழு 1970 ஆம் ஆண்டில் பரிந்துரை செய்ததது. அதனை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஏற்கவில்லை. இதே கோரிக்கையை தமிழக அரசின் அம்பாசங்கர் குழு 1985 ஆம் ஆண்டில் பரிந்துரை செய்தது. அதனை அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் ஏற்கவில்லை.

யார் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்குதான் முதலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் நியாயமான நீதிமுறை ஆகும். ஆனால், உயர்நிலையில் இருந்த பிராமணரல்லாதோருக்கு வாய்ப்பளித்து 62 ஆண்டுகள் கடந்தும், ஓரளவுக்க நல்ல நிலையில் இருந்த பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பளித்து 42 ஆண்டுகள் கடந்தும் கூட - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எந்த வாய்ப்பும் அளிக்கப்படாத நிலையே இருந்தது. இந்த தாமதம் என்பது இரண்டு தலைமுறைகளின் காலம் ஆகும்.

2. வன்னியர்கள் - தமிழக அரசியலில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற உண்மை தினமணி வைத்தியநாதனுக்குத் தெரியுமா?

1970 ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் பிற்பட்டோர் நலக்குழு அறிக்கை (சட்டநாதன் குழு) வன்னியர்களின் வஞ்சிக்கப்பட்ட நிலையை பின்வருமாறு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது:

"பெருமளவில் இருக்கும் இந்த சாதியில் உள்ள பெரும் நிலச்சுவாந்தார்களுடைய எண்ணிக்கை மிகக் குறைவே... நாட்டுப்புறங்களிலும் நகரப்புறங்களிலும் இச்சாதியை சேர்ந்த வெகுசிலர் தான் வர்த்தகத்துறையிலும் சில்லரை வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள்... கொடிய வறுமையின் காரணமாக பழைய சில தலைமுறைக் காலத்தில் இச்சாதியைச் சேர்ந்தவர்கள் பல தொழில்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் ஈடுபடாத தொழில் இல்லை என்றே கூறலாம்... கிணறு தோண்டுதல், மண் வெட்டுதல், கட்டட வேலை போன்ற கடினமான உழைப்பு தேவைப்படும் தொழில்களுக்கு இச்சாதியிலிருந்து ஆட்கள் வருகிறார்கள்.

(1970 ஆம் ஆண்டில்) குறைந்தது ஐந்து மாவட்டங்களிலாவது தனிப்பெரும் சாதியினராக இருந்த போதிலும், ஒரு இடத்திலாவது ஆதிக்கம் செலுத்தக் கூடிய நிலையை அடையவில்லை... மற்ற ஆதிக்க வகுப்புகளை அண்டி வாழும் நிலையில் இருக்கிறார்கள்... கல்வி நிலையின் எல்லா மட்டங்களிலும் வன்னியர்கள் முன்னேற்றம் மிகக் குறைவாகவே இருக்கிறது... டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும், வழக்குறைஞர்களாகவும் இருப்பவர்களுடைய எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருக்கிறது. இச்சாதியில் மேல்தட்டு நிலையில் இருப்பவர்கள் குறைவாக இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணமாகும்.

நிலப்பிரபுக்களோ, வணிகர்களோ அல்லது செல்வந்தர்களோ இச்சாதியில் வெகு சிலரே இருக்கிறார்கள். இச்சாதி எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருக்கும் காரணத்தால் ஆதிக்க நிலையை அடையக்கூடிய வகையில் இருக்கிறது என்னும் எண்ணம் சில வட்டாரங்களில் நிலவுகிறது. ஆனால், இம் மாநில அரசியலில் இவ்வகுப்பு போதிய அளவுக்கு அடியெடுத்து வைக்கவில்லை".

- இதுதான் மருத்துவர் அய்யா அவர்களின் போராட்ட காலத்திற்கு முன்னர் வன்னியர்களின் நிலைமை. இது தமிழக அரசாங்கமே அளித்துள்ள அறிக்கை.

3. நியாயமான கோரிக்கையை செவிமடுக்காமல் அலட்சியம் செய்தது சாதுர்யமான செயலா?

இரண்டு தலைமுறைகளாக ஏமாற்றப்பட்ட சமூகங்களுக்கு நீதி வேண்டும். அந்த அடிப்படையில் வன்னியர்களுக்கு விகிதாச்சார பங்கீடு வேண்டும் என்கிற நோக்கத்தில் வன்னியர் சங்கம் 1980 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அனைத்து வகுப்புகளுக்கும் அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வேண்டும். தனிப்பெரும் பெரிய சமூகமாக உள்ள வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வேண்டும் என்பது வன்னியர் சங்கத்தின் முதன்மைக் கோரிக்கை ஆகும். (தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை 18% அளவில் இருந்து 22% அளவாக மக்கள்தொகைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் என்பதும் வன்னியர் சங்கத்தின் கோரிக்கை ஆகும்)
அனைத்து சாதியினருக்கும் வகுப்புவாரி உரிமை கோரும் சாலைமறியல் போராட்ட சுவரொட்டி
தமிழக முதலமைச்சரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைப்பதற்காக ஐந்து பேர் குழுவை அமைத்தது வன்னியர் சங்கம். பலமுறை முயன்றும் அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆரை வன்னியர் சங்க பிரதிநிதிகளால் ஒரு முறைக் கூட சந்திக்க முடியவில்லை. 1985 ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகரில் ஒரு பெரும் மாநாட்டை நடத்தியது வன்னியர் சங்கம். வன்னியர் சங்கத்தின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டது.

1986 ஆம் ஆண்டில் வரிசையாக கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. 15.3.1986 ஆம் நாள் சென்னையில் 'பட்டை நாமப் போராட்டம்'; 6.5.1986 இல் ஒரு நாள் சாலைமறியல் போராட்டம்; 28.6.1986 இல், மதுராந்தகத்தில் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம்; 19.12.1986 ஆம் நாள் ஒரு நாள் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. வன்னியர் சங்கத்தின் எந்த போராட்டாத்தையும் தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாத நிலையில், 1987 செப்டம்பர் மாதத்தில், தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் ஒருவார காலத்துக்கு தொடர்சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் அறிவித்தார்கள்.

இப்படி, ஏழு ஆண்டு காலமாக, கோரிக்கைகளை கேட்கக் கூட மறுத்த செய்கைதான் "எம்.ஜி.ஆர். அரசு மிகவும் சாதுர்யமாக அந்தப் போராட்டத்தைக் கையாண்டது" என்று தினமணி வைத்தியநாதன் பாராட்டும் நிகழ்வா?

4. கொல்லப்பட்ட உயிர்கள் வைத்தயநாதன் கண்களுக்கு தெரியாதா?

தமிழக வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய போராட்டம் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிவித்த சாலைமறியல் போராட்டம் ஆகும். செப்டம்பர் 17 முதல் தொடர் சாலைமறியல் நடத்துவதாக அறிவித்த பின்பு, அதற்கு முதல் நாள் செப்டம்பர் 16-ல் சென்னையில் திமுகவின் அண்ணா அறிவாலயம் கட்டடத்தை திறக்கும் முப்பெரும் விழா மாநாட்டை நடத்துவதாக கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.

சாலை மறியல் போராட்டம்
திமுகவின் மாநாடு முடித்து செல்கிறவர்கள் தமிழ் நாட்டின் வடமாவட்டங்களை கடக்கும் நேரமும், வன்னியர் சங்கத்தின் சாலைமறியல் தொடங்கிய செப்டம்பர் 17 அதிகாலை நேரமும் ஒன்றாக இருந்ததால், சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் மீது திமுக கட்சியினர் பெரும் தாக்குதலை நடத்தினார்கள்.

ம்ஜிஆரின் காவல்துறை சாலைமறியல் செய்தவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. முதல் நாள் சாலைமறியல் போராட்டம் தொடங்கும் போதே 11 வன்னியர்களை சுட்டுக்கொன்றது தமிழக காவல்துறை. காவல்துறை தாக்கியதில் ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்களையும் சங்கத்தின் தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. பல கிராமங்களுக்குள் காவல்துறை புகுந்து சூறையாடியது.
சாலை மறியல் போராட்டம்
காவல்துறையின் வன்முறைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளவும், ஒருவார கால சாலைமறியல் போராட்டத்தை வெற்றியடைய வைக்கவும் - ஆங்காங்கே சாலைகளில் தடைகளை வன்னியர்கள் ஏற்படுத்தினர். இதனால் தமிழ்நாட்டின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. சென்னைக்கும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இடையேயான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. ஒருவார காலம் தமிழ்நாடு ஸ்தம்பித்து போனது. அதற்கு பின்னரும் இயல்புநிலை திரும்பாமல் ஒரு மாத காலத்துக்கு போக்குவரத்து தடைப்பட்டது. இந்தப் போராட்டத்தின் முடிவில் 21 வன்னியர்கள் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

5. மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் போராட்டம் தோற்கவில்லை என்பது தினமணி வைத்தியநாதனுக்கு தெரியாதா?

சாலை மறியல் போராட்டத்தால் வன்னியர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் எல்லா சமூகங்களும் தமது கோரிக்கையை எழுப்பும் வாய்ப்பினைப் பெற்றார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வகுப்புவாரி உரிமைக் கோரிக்கை மீண்டும் விவாதத்திற்கு வந்தது. அமெரிக்காவில் இருந்து சிகிச்சைப்பெற்று திரும்பியிருந்த எம்ஜிஆர் அனைத்து சமூக அமைப்புகளையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.

16.12.1988 இல் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியது வன்னியர் சங்கம். பின்னர் 13.1.1989 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியது. இத்தனை போராட்டங்களுக்கும் உயிரழ்ப்புகளுக்கும் பின்னர்  28.3.1989 இல் 'பிற்படுத்தப்பட்டோர்க்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவிகிதம் ஒதுக்கியும், மீதமுள்ள 30 சதவிகிதத்தை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கியும்' தமிழக அரசு ஆணையிட்டது (அரசாணை எண்: 242, நாள் 28.3.1989). இதன் மூலம் 108 சாதியினர் புதிதாக இடஒதுக்கீடு பெற்றனர்.
சாலை மறியலில் பொலீசாரால் கொல்லப்பட்ட தியாகிகள்
பிராமணரல்லாதோருக்கு வாய்ப்பளித்து 62 ஆண்டுகள் கடந்த பின்னர், பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பளித்து 42 ஆண்டுகள் கடந்த பின்னர், உண்மையிலேயே மிகவும் பின்தங்கியிருந்த 'மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு' மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் தியாகத்தாலும், போராட்டத்தாலும் 1989 ஆம் ஆண்டில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இவ்வாறு இரண்டு தலைமுறைகள் காலம் கடந்து வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீடும் முழுமையான இடஒதுக்கீடோ, மக்கள் தொகைக்கு ஏற்ப அளிக்கப்பட்ட விகிதாச்சார இடஒதுக்கீடோ அல்ல. இந்த அரைகுறை இடஒதுக்கீடு 'மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் தலைமையிலான வன்னியர் சங்கத்தின் பகீரத பிரயத்தனத்தால்தான் சாத்தியமாகியுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை ஆகும்.

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் தியாகத்தால் கிடைத்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டால், இன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் உரிமைப்பெற்றுள்ளார்கள். உலகின் பல பகுதிகளில் நல்ல நிலையில் வாழ்கிறார்கள். தினமணி வைத்தியநாதன் கொச்சைப்படுத்தும் அந்த 1987 சமூகநீதி போராட்டம்தான், இன்று பல ஆயிரம் குடும்பங்களை கோபுரத்தில் ஏற்றியுள்ளது.

நமது கடமை என்ன?

தமிழ்நாட்டில் மிகவும் பிறபடுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு, தேசிய அளவில் இதர பிறபடுத்தப்பட்டோருக்கு கல்வியில் இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவ உயர்கல்வியில் இடஒதுக்கீடு என்கிற வரலாற்று சாதனைகளை செய்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. அதற்கு காரணமாக இருந்தவர் மருத்துவர் இராமதாசு அய்யா. இந்த அளவுக்கு சமூகநீதிக்காக பாடுபட்ட தலைவரோ, கட்சியோ சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இல்லை.
சாலைமறியலின் போது கைது செய்யப்பட்ட மருத்துவர் இராமதாசு அய்யா
பாட்டாளி மக்கள் கட்சியை, மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களை இனிமேலும் எந்த ஒருநபரும் தவறாக வர்ணிப்பதை அனுமதிக்க முடியாது. அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டின் உண்மையான சாதிவெறி பிடித்த கோயபல்ஸ் கும்பலின் வரலாற்று சதி முறியடிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் தினமணி தலையங்கம் கண்டிக்கப்பட வேண்டும்!